Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனோகரா திரையரங்கில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன்.......அதில் ஒரு துளி : எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண்" மனோஹராவிலும் ,ராணியிலும்தான் வந்தது......அப்போது கலரி டிக்கட் சைக்கிளுக்கு மட்டும் என்று சொல்லி விட்டார்கள்.....நள்ளிரவில் முதல் காட்சி ஆரம்பம்.....நானும் எனது நண்பனிடமும் ஒரு சைக்கிள்தான் இருந்தது......கராஜில் இருந்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஒரு கறள் பிடித்த சைக்கிள் ஒன்று முன்சில்லு இல்லாமல் அங்கே இருந்தது.....நான் பாரில் இருந்து அதை கையில் தூக்கிப் பிடிக்க அவன் உழக்க பக்குவமாய் உள்ளே சென்று விட்டுவிட்டு சைக்கிள் டிக்கட்டை காட்டி பட டிக்கட் வாங்கிச்சென்று படம் பார்த்தோம்.....!

--- அந்த சினிமாவின் ஐந்து சந்திக்கு போகும் பக்கம் dr . சண்முகலிங்கத்தின் கிளினிக் இருந்தது......!

--- சிவன் கோவில் பக்கம் வசந்தா சலூனும், அருகில் ஒரு பேமஸான மாஸ்டர்  பீடா கடையும் இருந்தது.....அங்கு பத்து சதத்தில் இருந்து நூறு ரூபாய் வரை கூட பீட (தங்கபஸ்பம் என்பார்கள்) இருந்தது......நாங்கள் 10 சதத்துடன் சரி.....!

--- இங்கால சந்திரா தேநீர்கடை (தொழிலாளர்களுக்கு ஏற்ற மலிவு விலையில் தரமான சாப்பாடு ) இருந்தது....அதன் முன்னால் சாக்குகள் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் செட்டிமார்களின் திண்ணையுடன் கூடிய தாழ்வார வீடுகள் இருந்தன......! 

--- யாழ் ரீகல் தியேட்டரிலும் பொக்ஸ் இருக்கைகள் இருந்தன......அங்கு அநேகமாய் எல்லாப் படங்களும் 3 நாட்கள் மட்டுமே ஓடும்......அதனால் ஒரு மாதத்துக்கு ஓடும் படங்களின் அட்டவனையை முன்பே தருவார்கள்.......(விதிவிலக்காக ஜேம்ஸ் பொண்ட் மற்றும் பிரபல ஆங்கில நடிகர்களின் படங்கள் மிஞ்சிப்போனால் ஐந்து, ஆறு நாட்கள் ஓடும்)...... அப்போது ரீகலில் மட்டும்தான் சீஸுடன் சேர்ந்த உப்பு பிஸ்கட்டும், கொக்கோ கோலாவும் பிரபலம்......( அதன் தாக்கம் 50 வருடங்களுக்கு மேலாகி விட்டது  இப்போதும் நான் அதேபோல் வாங்கி வைத்து சாப்பிடுகிறேன்)......!

மலரும் நினைவுகள் எவ்வளவோ சொல்லலாம்......!  

  • Like 6
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பக்கத்தில் தள்ளு வண்டியில் ஒருவர் பீடா விற்பார்.இந்தமாதிரி இருக்கும் அதேமாதிரி றீகல் தியேட்டருக்குப் பக்கத்தில் மிக்சர் வண்டி மறக்க முடியாத அனுபவங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான தியெட்டர்களை பாதுகாக்க வேண்டும்.
கொழும்பிலும் இப்படி இருந்த நிறைய பழைய தியேட்டர்களை எல்லாம் உடைத்து அழித்து விட்டார்கள்
(கெயிட்டி, கெப்பிடல், முருகன், கிங்ஸ்லி, செல்லமஹால், மைலன், கல்பனா, ஜெஸீமா என பல)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போ இலங்கையில்... சினிமா ரிக்கற்றின் விலை விபரம் என்ன என்று யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, தமிழ் சிறி said:

இப்போ இலங்கையில்... சினிமா ரிக்கற்றின் விலை விபரம் என்ன என்று யாருக்காவது தெரியுமா?

அதெல்லாம் கவலைப்படாதீங்கோ!

டிக்கெற்றப் போடூறீங்க, லுப்தான்சாவில ஏறி சென்னை வந்து, தட்டி பிளேனீல ஏறீ பலாலீல இறங்கிறீங்க.

எவ்வளவு எண்டாலும் பலவாயில்ல, நான் ரிக்கெற் எடுத்து, மனோகராவில, பிச்சைக்காரி பார்க்க வைக்கிறன். 🤨

அட, உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு!!🤗

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

அதெல்லாம் கவலைப்படாதீங்கோ!

டிக்கெற்றப் போடூறீங்க, லுப்தான்சாவில ஏறி சென்னை வந்து, தட்டி பிளேனீல ஏறீ பலாலீல இறங்கிறீங்க.

எவ்வளவு எண்டாலும் பலவாயில்ல, நான் ரிக்கெறா எடுத்து, மனோகராவில, பிச்சைக்காரி பார்க்க வைக்கிறன். 🤨

அட, உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு!!🤗

நன்றி நாதம் அண்ணை.   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, suvy said:

அப்போது கலரி டிக்கட் சைக்கிளுக்கு மட்டும் என்று சொல்லி விட்டார்கள்.....நள்ளிரவில் முதல் காட்சி ஆரம்பம்.....நானும் எனது நண்பனிடமும் ஒரு சைக்கிள்தான் இருந்தது......கராஜில் இருந்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஒரு கறள் பிடித்த சைக்கிள் ஒன்று முன்சில்லு இல்லாமல் அங்கே இருந்தது.....நான் பாரில் இருந்து அதை கையில் தூக்கிப் பிடிக்க அவன் உழக்க பக்குவமாய் உள்ளே சென்று விட்டுவிட்டு சைக்கிள் டிக்கட்டை காட்டி பட டிக்கட் வாங்கிச்சென்று படம் பார்த்தோம்.....

ஏன் சுவி படம் முடிய முன் சில்லைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்து நஸ்டஈடு பெற்றிருக்கலாமே?

8 hours ago, colomban said:

இப்படியான தியெட்டர்களை பாதுகாக்க வேண்டும்.
கொழும்பிலும் இப்படி இருந்த நிறைய பழைய தியேட்டர்களை எல்லாம் உடைத்து அழித்து விட்டார்கள்
(கெயிட்டி, கெப்பிடல், முருகன், கிங்ஸ்லி, செல்லமஹால், மைலன், கல்பனா, ஜெஸீமா என பல)

கொழும்பில் எனது மாமா வீட்டுக்கருகில் நவா படமாளிகை இருந்தது.

மிகவும் பழமையான படமாளிகை.

கொழும்பில் வாழ்ந்த பலருக்கே இதைத் தெரியாது.

1 hour ago, Nathamuni said:

அதெல்லாம் கவலைப்படாதீங்கோ!

டிக்கெற்றப் போடூறீங்க, லுப்தான்சாவில ஏறி சென்னை வந்து, தட்டி பிளேனீல ஏறீ பலாலீல இறங்கிறீங்க.

எவ்வளவு எண்டாலும் பலவாயில்ல, நான் ரிக்கெறா எடுத்து, மனோகராவில, பிச்சைக்காரி பார்க்க வைக்கிறன். 🤨

அட, உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு!!🤗

19 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி நாதம் அண்ணை.   😂

நாதம் முதல்ல தலைவரை உங்க காங்ஸ் இல செங்கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும் என்று யாழ்கள உறவுகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, நிலாமதி said:

அப்போ  இவர்கள் ஒரிஜினல்  காங்ஸ்  இல்லையா ? புகுந்த வீடா ?   ஒரிஜினல்ஸ்  மன்னிக்கவும்.

புலம்பெயர்ந்த வீடு 😎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, suvy said:

மலரும் நினைவுகள் எவ்வளவோ சொல்லலாம்......!  

தண்ணீரை குடித்து வாழ்ந்தாலும் பழைய நினைவுகள் என்றும் சொர்க்கம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 hours ago, colomban said:

இப்படியான தியெட்டர்களை பாதுகாக்க வேண்டும்.
கொழும்பிலும் இப்படி இருந்த நிறைய பழைய தியேட்டர்களை எல்லாம் உடைத்து அழித்து விட்டார்கள்
(கெயிட்டி, கெப்பிடல், முருகன், கிங்ஸ்லி, செல்லமஹால், மைலன், கல்பனா, ஜெஸீமா என பல)

நவா, ரியோ, கொன்கோர்ட் இன்னும் இருக்கா?

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

நவா, ரியோ, கொன்கோர்ட் இன்னும் இருக்கா?

நவா இப்பொழுது இல்லை, ரியோ போனவாரம் அப்ப‌குதியால் சென்ன்றபோது கண்டேன் பாழடைந்து காணப்படுகின்றது, படம் ஓடுகின்றததோ தெரியவில்லை. இரண்டும் கொம்பனி வீதியில் உள்ளது. கொன்கோர்ட் இன்னும் இயங்கின்றது என நினக்கின்றேன். சமந்தா மிகவும் பழையது இப்போ லியோ ஒடுகின்றது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, colomban said:

நவா இப்பொழுது இல்லை, ரியோ போனவாரம் அப்ப‌குதியால் சென்ன்றபோது கண்டேன் பாழடைந்து காணப்படுகின்றது, படம் ஓடுகின்றததோ தெரியவில்லை. இரண்டும் கொம்பனி வீதியில் உள்ளது. கொன்கோர்ட் இன்னும் இயங்கின்றது என நினக்கின்றேன். சமந்தா மிகவும் பழையது இப்போ லியோ ஒடுகின்றது.

நன்றி.

கொவிட்டுக்கு முதல் பழைய வில்லியம் கிரைண்டிங் மில்லையும் உடைத்துவிட்டார்கள் என செய்தி பார்த்தேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.