Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷி ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்றழைத்த பைடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா, சீனா, ஜோ பைடன், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

16 நவம்பர் 2023, 07:47 GMT
புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் சந்தித்துப் பேசினர்.

ஒரு வருடத்திற்குப் பின் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடந்திருக்கும் இந்தச் சந்திப்பு, அமெரிக்க-சீன உறவைச் சுமூகமாக்குவதற்கான முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இந்தச் சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களுடன் பேசிய பைடன், ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்று குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

பல தடைகள் கடந்து, அமெரிக்க-சீன உறவுகளில் முன்னேற்றம் நிகழ்வதுபோல் தோன்றியபோது, அதை ஒரே வாக்கியத்தில் பைடன் தகர்த்துவிட்டதாகப் பலரும் பேசி வருகின்றனர்.

என்ன நடந்தது இந்தச் சம்பவத்தில்?

என்ன நடந்தது?

சந்திப்பு முடிந்து நடந்த செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு, பைடன் விடைபெறவிருந்த போது ஒரு நிருபர் அவரிடம் ‘இன்னும் ஷி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அழைப்பீர்களா?’ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த பைடன் “இங்கு பாருங்கள், அவர் ஒரு சர்வாதிகாரி தான். அதாவது, அவர் கம்யூனிஸ்ட் நாடான ஒரு நாட்டை வழிநடத்துகிறார். அது நம்முடைய அரசாங்கத்தின் வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது," என்றார்.

இதற்கு முன்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம், பெய்ஜிங்கில் அமெரிக்க மற்றும் சீன உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதற்கு ஒரு நாளுக்குப் பிறகு பைடன் ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்று குறிப்பிட்டிருந்தார். அது சீனத் தரப்பைக் கோபப்படுத்தியிருந்தது.

அந்த நேரத்தில், சீன அதிகாரிகள் பைடனின் கருத்து ‘மிகவும் அபத்தமானது, பொறுப்பற்றது’ என்று கூறியிருந்தனர்.

அமெரிக்கா, சீனா, ஜோ பைடன், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சந்திப்பின் ஒரு பகுதியாக பைடனும், ஜின்பிங்கும் சந்திப்பு நடந்த இடத்திலிருந்த தோட்டத்தில் ஒன்றாக நடந்தனர்

சீன மக்கள் எப்படி எதிர்வினை ஆற்றினர்?

ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்று பைடன் குறிப்பிட்டது இன்னும் சீன அரசு ஊடகங்களில் அல்லது சீன சமூக ஊடகங்களில் பரவவில்லை. ஆனால் அதில் ஆச்சரியமில்லை, ஏனெனில், சீனாவில் ஊடகங்கள் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இந்தக் கருத்தைப் பார்க்கக் கிடைத்த சீன மக்கள் சிலர் இதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.

சீனாவின் சமூக வலைதளமான ‘வெய்போ’வில் ஒருவர், "பைடன் முதுகுக்குப் பின்னால் தவறான விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். இது சரியானது இல்லை,” என்று பதிவிட்டிருக்கிறார்.

மற்றொரு பதிவர், "பைடனுக்கு என்னதான் பிரச்னை? இவ்வளவு முயற்சிக்குப் பிறகு ஏற்பட்ட முன்னேற்றம் அனைத்தும் அவரது ஒரே வாக்கியத்தால் இல்லாமல் போய்விடும்," என்று எழுதியிருக்கிறார்.

மேலும் ஒரு பயனர், ‘பைடன் ஜின்பிங்கை சீனாவின் பேரரசர் என்று சொல்லியிருந்தால் ஷி ஜின்பிங் அதை விரும்பியிருப்பார்,’ என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் கேலியாகப் பதிவிட்டிருந்தார். எக்ஸ் சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனாவில் தணிக்கை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. பீஜிங்கில் உள்ள ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் நிருபரான ஜேம்ஸ் மேகர், தனது எக்ஸ் பக்கத்தில், பைடனின் செய்தியாளர் சந்திப்பின் ப்ளூம்பெர்க் டிவியின் நேரடி ஒளிபரப்பின் இறுதிப் பகுதி சீனாவில் துண்டிக்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளார். அதில்தான் பைடன் இந்தச் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.

அமெரிக்கா, சீனா, ஜோ பைடன், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ராணுவத் தகவல்தொடர்புகளை மீண்டும் தொடங்குவதுடன், அண்மைக் காலங்களில் பதற்றத்தை ஏற்படுத்திய சில விஷயங்களிலும் இரு தரப்பும் பல ஒப்பந்தங்களை அறிவித்திருக்கின்றன

என்ன ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன?

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பைடன், இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம், அமெரிக்கா-சீனாவுக்கு இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் இருநாட்டு ராணுவங்களும் தங்கள் தொடர்புகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டதாக பைடன் கூறினார்.

மேலும், ‘நாங்கள் நேரடியான, திறந்த, தெளிவான பேச்சுவார்த்தைக்குத் திரும்பியுள்ளோம்," என்று அவர் கூறினார்.

தகவல்தொடர்பு இல்லாதது தான் ‘பிரச்னைகள் ஏற்படுவதற்குக் காரணம்’ என்று பைடன், இனிமேல் இரு அதிபர்களும் ‘தொலைபேசியில் உடனடியாகப் பேச முடியும்’ என்றும் கூறினார்.

ராணுவத் தகவல் தொடர்புகளை மீண்டும் தொடங்குவதுடன், அண்மைக் காலங்களில் பதற்றத்தை ஏற்படுத்திய சில விஷயங்களிலும் இரு தரப்பும் பல ஒப்பந்தங்களை அறிவித்திருக்கின்றன.

அமெரிக்காவிற்குள் ‘ஃபெண்டானில்’ எனும் மருந்து மீண்டும் இறக்குமதி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதில் அடங்கும். இந்த மருந்து அமெரிக்காவில் இறப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

சீனத் தரப்பு என்ன சொன்னது?

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு ராணுவத்தினருக்கும் இடையேயான தகவல் தொடர்புகள் 'சமத்துவம் மற்றும் மரியாதையின் அடிப்படையில்' மீட்டெடுக்கப்பட்டதாக சீனா கூறியது.

"பூமி இரண்டு நாடுகளும் ஒரே நேரத்தில் வெற்றிபெறும் அளவுக்குப் பெரியது, ஒரு நாட்டின் வெற்றி மற்ற நாடுகளுக்கு ஒரு வாய்ப்பாகும்," என்று ஷி ஜின்பிங் தனது தொடக்க உரையில் கூறினார். "மோதல் இரு தரப்பினருக்கும் தாங்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது," என்றார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டின் சமயத்தில் நடந்த இந்தக் கூட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு தரப்பு அதிகாரிகளும் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பைக் குறைத்துவிட்டனர்.

https://www.bbc.com/tamil/articles/c9el1gn4jdjo

  • Replies 53
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் பிளிங்கன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பாவம் பிளிங்கன் 🤣

ஒரே ஒரு முகச் சுழிப்பு. அர்த்தங்கள் ஆயிரம்,......🤣

இணைப்பிற்கு நன்றி கு.சா.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Kapithan said:

ஒரே ஒரு முகச் சுழிப்பு. அர்த்தங்கள் ஆயிரம்,......🤣

இணைப்பிற்கு நன்றி கு.சா.  

பழசு பைடன் இன்னும் நாலு வருசம் ஆட்சியிலை இருந்தால் அமெரிக்கா காலி.😂

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

பழசு பைடன் இன்னும் நாலு வருசம் ஆட்சியிலை இருந்தால் அமெரிக்கா காலி.😂

இன்னும் 11மாத‌ம் தான் இவ‌ரின் ஆட்ட‌ம் தாத்தா............காற்றுக்கு கை காட்டி ஆள் என்றால் அது பைட‌ன் தான் ஹா ஹா 😂😁🤣

இவ‌ரை இப்ப‌வே ப‌ல‌ர் கேலி செய்ய‌ தொட‌ங்கிட்டின‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒரு சர்வாதிகாரி தான். அதாவது, அவர் கம்யூனிஸ்ட் நாடான ஒரு நாட்டை வழிநடத்துகிறார். அது நம்முடைய அரசாங்கத்தின் வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது

சரியாக தானே சொல்லி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

அவர் ஒரு சர்வாதிகாரி தான். அதாவது, அவர் கம்யூனிஸ்ட் நாடான ஒரு நாட்டை வழிநடத்துகிறார். அது நம்முடைய அரசாங்கத்தின் வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது

சரியாக தானே சொல்லி இருக்கிறார்.

சீனா வெளிப்பார்வைக்கு கம்யூனிசம் என்றாலும் மேற்குலகை விட இனியில்லையென்ற ஆடம்பர நாடுதானே. நாட்டை கட்டுப்பாடாக வைத்திருந்தால் அது கம்யூனிசம் ஆகாது. 😄

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அவர் ஒரு சர்வாதிகாரி தான். அதாவது, அவர் கம்யூனிஸ்ட் நாடான ஒரு நாட்டை வழிநடத்துகிறார். அது நம்முடைய அரசாங்கத்தின் வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது

சரியாக தானே சொல்லி இருக்கிறார்.

அதுக்கேன் பிழிங்கன் முகத்தைச் சுழிக்கிறார்? 

உங்கள் கூற்றுப்படி பைடன் சரியாகத்தானே கூறியிருக்கிறார் 😀

நீங்கள் கூறுவது சரிதான், அதே போல் அமெரிக்க அதிபரும் சர்வாதிகாரிதான்.

சர்வாதிகாரி என்பது அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர் என பொருள்படும், பெரும்பாலானா நாடுகளில் உள்ள பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறைமை (Westminster system) போலில்லாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை கொண்ட ஜனநாயக நாடாக அமெரிக்கா உள்ளது.

இங்கு ஜனநாயகம் என்பது அரசினை மக்கள் தேர்ந்தெடுப்பதால் அதனை ஜனநாயகம் என கூறுகிறார்கள்.

சீனாவில், கட்சி நாட்டின் தலைவரை தீர்மானிக்கின்றது! அதனால்இரண்டு இடத்திலும் முடிவுப்பொருள் கிட்டதட்ட ஒன்றே.

இல்ங்கையிலும் அமெரிக்க முறை ஜனநாயக அமைப்பே உள்ளது (நிறைவேற்று அதிகாரம் கொண்ட).

பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்ற ஒன்றினை அவசரகால நிலை எனகூறி தமக்கு வேண்டாவதர்களை எல்லாம் காணாமல் போகும் கண்கட்டு வித்தைகளை இந்த  ஜனநாயக ஆட்சி மூலம்தான் நிகழ்த்துகிறார்கள். 

vector-magician-line-icon-circus-artist-

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

சீனா வெளிப்பார்வைக்கு கம்யூனிசம் என்றாலும் மேற்குலகை விட இனியில்லையென்ற ஆடம்பர நாடுதானே. நாட்டை கட்டுப்பாடாக வைத்திருந்தால் அது கம்யூனிசம் ஆகாது. 😄

தனி மனித சுதந்திரம் என்பது ஆடம்பரமான வாழ்வா அண்ணா??

21 minutes ago, Kapithan said:

அதுக்கேன் பிழிங்கன் முகத்தைச் சுழிக்கிறார்? 

உங்கள் கூற்றுப்படி பைடன் சரியாகத்தானே கூறியிருக்கிறார் 😀

அவர் சரியாக தான் சொல்லி இருக்கிறார். 

5 minutes ago, vasee said:

நீங்கள் கூறுவது சரிதான், அதே போல் அமெரிக்க அதிபரும் சர்வாதிகாரிதான்.

சர்வாதிகாரி என்பது அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர் என பொருள்படும், பெரும்பாலானா நாடுகளில் உள்ள பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறைமை போலில்லாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை கொண்ட ஜனநாயக நாடாக அமெரிக்கா உள்ளது.

இங்கு ஜனநாயகம் என்பது அரசினை மக்கள் தேர்ந்தெடுப்பதால் அதனை ஜனநாயகம் என கூறுகிறார்கள்.

சீனாவில், கட்சி நாட்டின் தலைவரை தீர்மானிக்கின்றது! அதனால்இரண்டு இடத்திலும் முடிவுப்பொருள் கிட்டதட்ட ஒன்றே.

இல்ங்கையிலும் அமெரிக்க முறை ஜனநாயக அமைப்பே உள்ளது (நிறைவேற்று அதிகாரம் கொண்ட).

பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்ற ஒன்றினை அவசரகால நிலை எனகூறி தமக்கு வேண்டாவதர்களை எல்லாம் காணாமல் போகும் கண்கட்டு வித்தைகளை இந்த  ஜனநாயக ஆட்சி மூலம்தான் நிகழ்த்துகிறார்கள். 

ஜனநாயகத்தின் ஓட்டைகளை தேடுகிறீர்கள்.?

அவை அனைத்தையும் பூரணமாக அனுபவித்தபடி ...

நித்திரை கொள்பவரை வேண்டுமானால் எழுப்ப முயல்வதுண்டு. 

சீனா மற்றும் அமெரிக்க தனி மனித சுதந்திரங்கள் பற்றி யாழில் எழுதும் எந்த கருத்தாளருக்கும் வகுப்பெடுக்கும் அவசியம் எவருக்கும் இல்லை வராது. நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

தனி மனித சுதந்திரம் என்பது ஆடம்பரமான வாழ்வா அண்ணா??

நான் நினைக்கிறேன் நிங்கள் கூற வரும் விடயம் ஒரு நாட்டின் நீதி துறைக்குள் வரும்,  ஆட்சிமுறைமை என்பதனடிப்படையிலேயே இவ்வாறான பதம் (ஜனநாயகம்) பாவிக்கப்படுகிறது என கருதுகிறேன்.

6 minutes ago, விசுகு said:

ஜனநாயகத்தின் ஓட்டைகளை தேடுகிறீர்கள்.?

அவை அனைத்தையும் பூரணமாக அனுபவித்தபடி ...

நித்திரை கொள்பவரை வேண்டுமானால் எழுப்ப முயல்வதுண்டு. 

சீனா மற்றும் அமெரிக்க தனி மனித சுதந்திரங்கள் பற்றி யாழில் எழுதும் எந்த கருத்தாளருக்கும் வகுப்பெடுக்கும் அவசியம் எவருக்கும் இல்லை வராது. நன்றி 

நான் நினைக்கிறேன் நீங்கள் இதனையும் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்களோ என.

அல்லது நான் தான் உங்களை தவறாக புரிந்து கொண்டேனோ என தெரியவில்லை, சற்று தெளிவாக எழுத முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

பாவம் பிளிங்கன் 🤣

பைடனின் பேச்சு மக்களுக்கு இப்படித்தான் விளங்குகிறது.😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அவர் ஒரு சர்வாதிகாரி தான். அதாவது, அவர் கம்யூனிஸ்ட் நாடான ஒரு நாட்டை வழிநடத்துகிறார். அது நம்முடைய அரசாங்கத்தின் வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது

சரியாக தானே சொல்லி இருக்கிறார்.

விசுகு இது முதலே தெரிந்தும் ஏன் சந்தித்தார்?

இந்த ஒரு சொல்லால் சீன ஜனாதிபதியை விட பைடன் தான் சர்வாதிகாரியாக தெரிகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வாதிகாரிகள் மீது அண்ணாமாருக்கு காதல் ஏற்பட்டுவிடுகின்றது ஆனால்  சர்வாதிகாரிகள் என்று அவர்களை அழைப்பது பிடிக்காது .அவர்களை காட்டுபாடன ஓழுக்கம் கொண்ட மகான்களாக பார்க்க வேண்டும் என்றால் எப்படி 😂

போகின்ற போக்கை பார்த்தால் வெளிநாடுகளில் அண்ணாமாரை சர்வாதிகாரிகள் ஷி ஜின்பிங் எர்டோகன்  மற்றும் ஹமாஸ் ரிசேட்டுக்களுடன் உலாவருவதை காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சீனா வெளிப்பார்வைக்கு கம்யூனிசம் என்றாலும் மேற்குலகை விட இனியில்லையென்ற ஆடம்பர நாடுதானே. நாட்டை கட்டுப்பாடாக வைத்திருந்தால் அது கம்யூனிசம் ஆகாது. 😄

சீன‌ன் த‌ன‌து நாட்டை அழ‌காக‌ க‌ட்டி எழுப்பி விட்டான்.............சீன‌னின் அன்டை நாடான‌ இந்தியா ஒரு முன்னேற்ற‌மும் இல்லாம‌ அதே குப்பை நாடாய் தான் இருக்கு.............சீன‌ன்
தொழில்நுட்ப‌த்தில் அதிக‌ம் வ‌ள‌ந்த‌ நாடு................ஆசியாவில் சீன‌னின் ஆதிக்க‌ம் தான் கூட‌ 
இந்தியா ஹிந்தி மொழிய‌ ப‌டி வ‌ட‌ நாட்டில் வேலை கிடைக்கும் இந்த‌ நிலையிலே தான் இந்தியா இருக்கு 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

நான் நினைக்கிறேன் நிங்கள் கூற வரும் விடயம் ஒரு நாட்டின் நீதி துறைக்குள் வரும்,  ஆட்சிமுறைமை என்பதனடிப்படையிலேயே இவ்வாறான பதம் (ஜனநாயகம்) பாவிக்கப்படுகிறது என கருதுகிறேன்.

நான் நினைக்கிறேன் நீங்கள் இதனையும் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்களோ என.

அல்லது நான் தான் உங்களை தவறாக புரிந்து கொண்டேனோ என தெரியவில்லை, சற்று தெளிவாக எழுத முடியுமா?

அமெரிக்கா  சீனா  இரண்டுக்கும். அரசியலில் நிறையவே வித்தியாசம் உண்டு”  இந்த யாழ் களத்தில் எதிர்தரப்பு உண்டு”   ஆனால்  மிகப்பெரிய ஆசிய நாட்டில்,..சீனாவில் எதிர்கட்சி இல்லை   ஒரு கட்சி ஆட்சி  இது சர்வாதிகாரமில்லையா ???  சீனாவில் இருந்து பல இலட்சம் மக்கள்  அமெரிக்காவில் குடியேறி வாழ்கிறார்கள்  காரணம் சுதந்திரம்   சீனாவில் தொடர்ந்து ஒரே கட்சி ஆட்சி தான்   அமெரிக்காவில் மாறி மாறி  கட்சிகள் ஆட்சி செய்யும் பலமான எதிர்க்கட்சி இருக்கும்   ஆட்சி நடத்துகொண்டிருக்கும்போது எதிர்கட்சி பலமடையும் வாய்ப்புகள் உண்டு”   அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர முடியும்   ஒரு ஆபிரிக்கா வம்சத்தைச் சேர்ந்த அமெரிக்கன்   இரண்டு முறை ஐனதிபதி வகித்து உள்ளார்  சீனாவில் முடியுமா???  இன்னும் நிறைய   உண்டு”   விசுகர் சொன்னபடியே  பைடன். சொன்னது உண்மை   ஒரு கட்சி ஆட்சி நடத்தும் சீனா ஐனதிபதி சர்வாதிகாரி  தான்  முடியுமானால். எதிர்கட்சி அமைய வழி விட்டு ஆட்சி நடத்தட்டும். பார்ப்போம்  ஒருபோதும் முடியாது   ரொம்ப கடினம்  இந்தியாவை விட  கேவலமான ஆட்சி தான் நடக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

சீனாவில் எதிர்கட்சி இல்லை   ஒரு கட்சி ஆட்சி  இது சர்வாதிகாரமில்லையா ???  சீனாவில் இருந்து பல இலட்சம் மக்கள்  அமெரிக்காவில் குடியேறி வாழ்கிறார்கள்  காரணம் சுதந்திரம்   சீனாவில் தொடர்ந்து ஒரே கட்சி ஆட்சி தான்

ஜனநாயக நாடுகளில் குடியேறி சகலவிதமான சுதந்திரங்களை அனுபவித்தபடி சர்வாதிகாரிகளை ஆதரித்து எழுதுவதில்   ஒரு தனி சுகம் கிடைக்கின்றது அண்ணா 😂

1 hour ago, Kandiah57 said:

ஒரு கட்சி ஆட்சி நடத்தும் சீனா ஐனதிபதி சர்வாதிகாரி  தான்  முடியுமானால். எதிர்கட்சி அமைய வழி விட்டு ஆட்சி நடத்தட்டும். பார்ப்போம்  

தான் வாழ்கின்ற வரை சீனா மக்களை தனது சர்வாதிகாரத்தின் கீழ் வைத்திருக்க திட்டமிட்டிருகிறார் சர்வாதிகாரி ஷி ஜின்பிங்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

விசுகு இது முதலே தெரிந்தும் ஏன் சந்தித்தார்?

இந்த ஒரு சொல்லால் சீன ஜனாதிபதியை விட பைடன் தான் சர்வாதிகாரியாக தெரிகிறார்.

இல்லை அண்ணா

உலகம் சுருங்கி விட்டது. எவரும் தனித்து வாழும் சூழல் இல்லாமல் போய்விட்டது.

சந்திப்பதும் பரஸ்பரம் பேசி தீர்வுகள் மற்றும் தேடல்களை செய்வதும் தவிர்க்க முடியாதவை.

ஆனால் கேள்வி சீன அரசாட்சி பற்றியது. பதில் சரியே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இல்லை அண்ணா

உலகம் சுருங்கி விட்டது. எவரும் தனித்து வாழும் சூழல் இல்லாமல் போய்விட்டது.

சந்திப்பதும் பரஸ்பரம் பேசி தீர்வுகள் மற்றும் தேடல்களை செய்வதும் தவிர்க்க முடியாதவை.

ஆனால் கேள்வி சீன அரசாட்சி பற்றியது. பதில் சரியே. 

இது ஒரு உதாரணம்.

கம்யூனிச ஆட்சியில் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது.

ஜனநாயக ஆட்சியில் ஆர்ப்பாட்டம் செய்ய போகிறியா? பணத்தைக் கட்டு,அனுமதியை எடு,பாதுகாப்பு தேவையா?முடிவில் ஏதாவது மகஜர் கொடுக்கப் போகிறியா கொண்டு வா.

வாங்கி குப்பைக்குள் போட்டுவிடுவார்கள்.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

அன்று சீனாவில் மக்கள் புல்லுத்தின்னும் கட்டத்தில் கம்யூனிசம் தேவையாக இருந்தது.

இன்று நிலமை மாறி வருகிறது.

சீனாக்காரனை கூப்பிடாமலே அவன் சர்வாதிகாரி என்று சொல்லியிருக்கலாம்.

கூப்பிட்டு கை குலுக்கி விட்டு பின் முதுகில் குற்றியது தான் பிரச்சனையே.

மற்றும்படி அவர் சர்வாதிகாரி தான்.அதில் மாற்றுக்  கருத்தில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

இது ஒரு உதாரணம்.

கம்யூனிச ஆட்சியில் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது.

ஜனநாயக ஆட்சியில் ஆர்ப்பாட்டம் செய்ய போகிறியா? பணத்தைக் கட்டு,அனுமதியை எடு,பாதுகாப்பு தேவையா?முடிவில் ஏதாவது மகஜர் கொடுக்கப் போகிறியா கொண்டு வா.

வாங்கி குப்பைக்குள் போட்டுவிடுவார்கள்.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

நீங்கள் இன்னும் இலங்கை இந்திய மனநிலையில் இருந்து வெளியே வராதது ஆச்சரியமாக இருக்கிறது. 

இங்கெல்லாம் மக்கள் கோரிக்கைகளை குப்பை தொட்டியில் போடமுடியாது. வைச்சு செய்வார்கள் அவர் நாட்டின் தலைவராக இருந்தாலும்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, விசுகு said:

தனி மனித சுதந்திரம் என்பது ஆடம்பரமான வாழ்வா அண்ணா??

அது அந்தந்த நாட்டு அரசியல் சட்டங்களை பொறுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

அது அந்தந்த நாட்டு அரசியல் சட்டங்களை பொறுத்தது.

அது தானே பதில்.

கம்யூனிசம் ஒருவித சர்வாதிகாரம் தான். சீமான் சொல்லும் அன்பான சர்வாதிகாரம் என்பதும் இது தான். அது எனக்கு பிடிக்கும். ஆனால் அதன் தத்துவம் அவர்களாலேயே மீறப்படும் போது தான் எரிச்சல் ஏற்படும். சீனாவிலோ ரசியாவிலோ இன்று கம்யூனிசம் இல்லை. ஆனால் மக்களுக்கு அல்லது அரசாட்சிக்கு மட்டுமே அவை புத்தகத்தில் உள்ளன. இவை கண்டிக்கப்பட வேண்டியவையை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

மற்றும்படி அவர் சர்வாதிகாரி தான்.அதில் மாற்றுக்  கருத்தில்லை.

ஆமாம்  உண்மை   ஆனால்  பைடன்   சீனா  ஐனதிபதியை   பயங்கரவாதி. என்று சொன்னாலும் கூட    சும்மா  கண்டித்து போட்டு மீண்டும் சந்திப்பார்கள்.  கை கொடுபபார்கள். தேனீர் அருந்தி  ஒன்றாக சாப்பிடுவார்கள்  ஒப்பந்தம் போடுவார்கள்    இவர் அங்கே போவார்”,.அவர் இங்கே வாருவார்    ஒரு வீட்டில் அண்ணா தம்பி  சண்டைப்போட்டுக்கொள்வது போல்   இதனை எல்லாம் உண்மை என்று நம்பக்கூடாது 🤣🙏😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, விசுகு said:

அது தானே பதில்.

கம்யூனிசம் ஒருவித சர்வாதிகாரம் தான். சீமான் சொல்லும் அன்பான சர்வாதிகாரம் என்பதும் இது தான். அது எனக்கு பிடிக்கும். ஆனால் அதன் தத்துவம் அவர்களாலேயே மீறப்படும் போது தான் எரிச்சல் ஏற்படும். சீனாவிலோ ரசியாவிலோ இன்று கம்யூனிசம் இல்லை. ஆனால் மக்களுக்கு அல்லது அரசாட்சிக்கு மட்டுமே அவை புத்தகத்தில் உள்ளன. இவை கண்டிக்கப்பட வேண்டியவையை. 

ஒரு மனிதனுக்கு கடமை,கணியம்,கட்டுப்பாடு எல்லாம் தானாக வருவதில்லை. அதை அரசியல் சட்டங்கள் மூலமே கொண்டுவர முடியும். அது அந்தந்த இன மக்களுக்கேற்ப வேறுபடுகின்றது.ஒரு காலத்தில் கட்டுக்கோப்பாக இருந்த ஈராக்,லிபியாவில் என்ன நடக்கின்றது?ஏன் சவூதியை குலைத்தால் கூட அங்கும் பல்லாயிரம் கட்டுக்கடங்காத பிரச்சனைகள் உருவாகலாம். பிரபல்யங்களின் சொர்க்கபுரி துபாயில் கூட ஒரு அளவிற்குத்தான் சுதந்திரம். அது போல் தான் ரஷ்யாவிலும் சீனாவிலும்.

உங்களிடம் ஒரு கேள்வி?

ரஷ்யா சர்வாதிகார /கம்யூனிச நாடென்றால் மேற்குலகு அந்த நாட்டில் ஏன் முதலீடுகள் செய்து வியாபார ஒப்பத்தங்களை வைத்திருந்தன? அதே போல் சீன அதிபர் சர்வாதிகாரி என்றால் அவர் நாட்டுடன் ஏன் இன்னும் ராஜதந்திர உறவுகளை வைத்திருக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

சீன‌னை ஓர‌ம் க‌ட்டி விட்டு இந்த‌ உல‌கை கொண்டு ந‌ட‌த்த‌ முடியாது
நாம் பாவிக்கும் போனில் கூட‌ சீன‌னின் ஏத‌வ‌து ஒரு பொருள் இருக்கும்

வாக‌ன‌த்தில் இருந்து 
போனில் இருந்து
சீனான்ட‌ பொருள் சேர்த்து தான் உருவாக்கின‌ம்............ஜ‌போன் அமெரிக்க‌ன்ட‌ த‌யாரிப்பு என்றாலும்  சீன‌ன்ட‌ பொருள் அத‌ற்க்குள் இருக்கும் தாத்தா..............

ர‌ஸ்சியா சீனாவை ஓர‌ம் க‌ட்டி விட்டு ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது.................

என்ன‌ சீனாவில் என‌க்கு பிடிக்காத‌ ஒன்று இர‌ண்டு விடைய‌ம் அங்கு அட‌க்குமுறை அதிக‌ம்..........ஒரு குடும்ப‌த்தில் ஒரு பிள்ளை தான் பெற‌லாம் 2பிள்ளை பெத்தா அர‌சாங்க‌த்துக்கு அதிக‌ ப‌ண‌ம் க‌ட்ட‌னும்................

ஒலிம்பிக் விளையாட்டில் அமெரிக்க‌னுக்கு அடுத்த‌ இட‌த்தில் சீன‌ன் தான் அதிக‌ ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுற‌து

இந்தியான்ட‌ ப‌த‌க்க‌ம் வெறும‌னை இர‌ண்டு அல்ல‌து ஜ‌ந்துக்குள்ள‌ தாத்தா........இது இந்திய‌ நாட்டுக்கு அவ‌மான‌ம்🙈................

Edited by பையன்26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.