Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முப்பத்தைஞ்சு டொலர் காசு, ஒரு குடை, மற்றும் ஒரு ஹெட் அண்ட் சோல்டரை கடையில் இலவசமாக வாங்குவது எப்படி?

Featured Replies

dscf0103ds6.jpg

எனது பெர்பியூம் போத்தல் முடிந்துவிட்டது. :P பள்ளிமுடிந்த கையோடு முதல்வேலையாக பேர்பியூம் வாங்க ஒரு பெரிய மோலில் உள்ள பேர்பியூம்களை விற்கும் பெரிய கடை ஒண்டினுள் நுழைந்தேன்.

கலைஞன்:எக்ஸ்குயூஸ் மீ, இந்த ஆம்பளைகளுக்கு பேர்பியூம் விக்கிற பகுதி எங்கு இருக்கிது எண்டு சொல்லமுடியுமா?

வேலை செய்பவன்: ஒரு புளோர் மேல போகவேணும்.

இப்படியான பெரிய கடைகளில் ஒளிச்சுப்பிடிச்சு விளையாடுவது மாதிரி எஸ்கலேட்டர் (தமிழில் இதன் பெயர் 'தன்பாட்டில் நகர்கின்ற ஏணி' எண்டு நினைக்கின்றேன்) எங்கு இருக்கிது எண்டு கண்டுபிடிப்பது ஒரு கஸ்டமான வேலை. ஒருமாதிரி அதைக்கண்டு பிடிச்சு ஏறியாச்சு. வாழ்க்கையிலதான் முன்னேற்றம் வருது இல்லை, இதிலாவது மேலே போகின்றோம் எண்டு ஒரு சந்தோசம். அதுவும் சில செக்கன்களே..

எஸ்கலேட்டரால இறங்கி ஒரு மாதிரி பெர்பியூம் பகுதியை கண்டு பிடிச்சாச்சு. எண்டாலும் அதில ஒரு சின்ன சந்தேகம், இது ஆண்களின் பெர்பியூம் பகுதியா, அல்லது பெண்களின் பகுதியா எண்டு தெரியாது. பெண்கள் பகுதியில் நின்று ஒவ்வொரு பெர்பியூமாக மணந்துகொண்டு இருந்தால் பிறகு யாராவது என்னை வித்தியாசமாக நினைக்ககூடும். :lol: இதனால் ரிஸ்க் எடுக்காது நேரடியாக கவுண்டரில் நின்ற ஒருவனிடம் போய் பிரச்சனையை சொன்னேன்.

வேலைசெய்பவன்: ஓம், உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணுறன். எனக்கு பின்னால வாங்கோ.

வட்டம், வட்டமாக பெரிய கண்ணாடி மேசைகள், அலுமாரிகள்... அவற்றில் சுற்றிவர விதம்விதமாக பெர்பியூம்கள். அவன் ஒவ்வொரு வகை தயாரிப்பையும் போத்தலை திறந்து ஒரு சிறிய மட்டையில் சாம்பிளாக பேர்பியூமை அடித்து, சிறிது அதை உதறிவிட்டு தான் முதலில் மணந்துவிட்டு, பின் எனக்கு மணப்பதற்கு தந்தான். பேர்பியூம் சாம்பிளை எனக்கு முதலில் மணப்பதற்கு தராமல் இவன் ஏன் தான் முதலில் மணந்து பார்க்கிறான் எண்டு எனக்கு சரியான கோவம் வந்தது. :3d_019:

ஒவ்வொரு பேர்பியூம் பிராண்ட் ஆக தூக்கி, தூக்கிகாட்டி எனக்கு அவற்றைப்பற்றி குட்டி கதாப்பிரசங்கம் நிகழ்த்துகின்றான். இதை தான் நான்கூட விரும்பி பாவிக்கின்றேன் என்று எனக்கு சொல்லி ஒன்றன்பின் ஒன்றாக பல போத்தல்களை காட்டி தனக்கே தனது காதில் பூவை வைத்துக்கொண்டான்.

எனக்கு அவன் காட்டிய பேர்பியூம் வாசனைகள் ஒண்டும் பிடிக்கவில்லை. இதைவிட, தொடர்ந்து ஒவ்வொரு வித்தியாசம், வித்தியாசமான பேர்பியூமாக மணக்க துவங்கிய பின், சிறிது நேரத்தில் எல்லா பேர்பியூம்களுமே ஒரே மாதிரி மணப்பதுபோல் துவங்கியது. எனவே, அவனுக்கு நீ போ நானே தெரிவு செய்கின்றேன் எண்டு சொல்லி ஒரு கும்பிடு போட்டுவிட்டு எனது பாட்டில் பேர்பியூம் தேடலில் இறங்கினேன்.

dscf0104ai9.jpg

எதை வாங்குவது எண்டு தெரியவில்லை. ஒவ்வொரு மேசைகளாக சுமார் பத்து நிமிடங்கள் சுத்திக்கொண்டு இருந்தேன். திடீரென அங்கு வேலை செய்யும் பெண் ஒருத்தி வந்து உதவி ஏதாவது தேவையா எண்டு கேட்டாள். நான் வாய் திறப்பதற்குள் முன்பு எனக்கு உதவி செய்தவன் தான் ஏற்கனவே எனக்கு உதவி செய்துவிட்டேன் எண்டு தூரத்தில் நின்று கத்தினான். சரி எண்டு கேட்டுவிட்டு அவளும் பேசாமல் போய்விட்டாள்.

கடைசியில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனை மீண்டும் கூப்பிட்டேன்.

வேலை செய்பவன்: சரி, சொல்லுங்கோ, எதை வாங்கப்போறீங்கள்?

கலைஞன்: சரி, இது மணக்க கொஞ்சம் நல்லா இருக்கு. இத தாங்கோ. ;)

வேலை செய்பவன்: 75 ml போத்தல் வேணுமா? இல்லாட்டி போத்தல் 125ml வேணுமா?

கலைஞன்: 75 ml போத்தல் என்ன விலை?

வேலை செய்பவன்: $75.00

கலைஞன்: 125 ml போத்தல் என்ன விலை?

வேலை செய்பவன்: $90.00

கலைஞன்: ஆ.... அப்படியா... (தமிழரின் மூளை வேலை செய்கின்றது..) அப்ப எனக்கு 125 ml போத்தலையே தாங்கோ. [கணக்கு பார்த்ததில் பெரிய போத்தலை வாங்குவதால் $35.00 லாபம் வருவது போல் எனக்குள் பிரமை] :lol:

வேலை செய்பவன்: இது உங்களுக்கு தான்.. ஒரு குடையை தூக்கி காட்டுகின்றான்... ச்சும்மா, ச்சும்மா தாறம்..

dscf0110wp5.jpg

கலைஞன்: ஆஆஆ... அப்படியா... தங்கியூ.

வேலை செய்பவன்: அது மாத்திரம் இல்ல, இதுவும் உங்களுக்குத்தான்... ஒரு ஹெட் அண்ட் சோல்டரை தூக்கி காட்டுகின்றான்.. இதையும் ச்சும்மா, ச்சும்மா தாறம்..

dscf0111eh9.jpg

கலைஞன்: ஆ... அப்படியா... தங்கியூ.. தங்கியூ.. :P

வேலை செய்பவன்: இல்ல... பரவாயில்லை.. [வெட்கப்படுறான்..] :lol:

கலைஞன்: இவ்வளவுதானா.. வேறவும் ஒண்டும் ச்சும்மா, ச்சும்மா தற இல்லையா..

வேலை செய்பவன்: இந்த சொப்பிங் பாக் இதுவும் ச்சும்மா, ச்சும்மா தான்..

கலைஞன்: போங்கடா டேய். நானும் பிஸ்னஸ் தாண்டா படிக்கிறன். எனக்கே அல்வா தாறீங்களா டேய்.. பிரீயா ஒரு குடையும், ஒரு ஹெட் அண்ட் சோல்டரும் தந்தாப்போல நான் இந்தக்கடைக்கு திரும்பவும் வருவன் எண்டோ இல்லாட்டி இதே பேர்பியூம திரும்பவும் வாங்குவன் எண்டோ நினைக் காதையுங்கோடா டோய்..

dscf0101wf8.jpg

எல்லாத்தையும் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது ஒரு யோசனை. இவன்கள் வேறு பொருட்களை இலவசமாக தராமல் ஏன் ஒரு குடையையும், ஹெட் அண்ட் சோல்டரையும் இலவசமாக தரவேணும் எண்டு..

சிலவேளைகளில் குளிச்சுப்போட்டு பேர்பியூம் அடிக்கவேணும். சும்மா நாறல் உடம்புக்கு பேர்பியூம் அடிக்ககூடாது எண்டு பேர்பியூம் அடிப்பதற்கு முன் குளிக்கவேண்டும் என்பதை சாடைமாடையாக சொல்ல ஹெட் அண்ட் சோல்டரை பிரீயா தந்து இருப்பாங்களோ.. ?? :lol:

இதமாதிரி, பேர்பியூம் அடிச்சா குடையுக்க போகவேணும். அப்பதான் பேர்பியூம் மணம் நீண்ட நேரம் உடம்பில, உடையில நிண்டு பிடிக்கும் எண்டு சாடை மாடையாக சொல்வதற்கு குடையை பிரீயா தந்தாங்களோ? :angry:

என்ன இருந்தாலும் பிரீயா ஒரு ஹெட் அண்ட் சோல்டரும், ஒரு பெரிய குடையும் (உண்மையில் பலமான நல்ல குடை, டொலர் சொப்பில் விற்கும் சும்மா டம்மி குடை இல்லை) பேர்பியூம் போத்தலுடன் கிடைத்ததில் கலைஞனுக்கு ரொம்ப சந்தோசம்.. :P

dscf0106gx8.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு கடைசியிலை பிஸ்னஸ்காரரையும் கடிக்கவெளிக்கிட்டாச்சா???தம்பி மாப்பு கவனமடோய்ய்ய்ய்ய்ய்ய்!

  • கருத்துக்கள உறவுகள்

125 டொலருக்கு வாசனையூட்டியா? மாப்புக்குக் கலியாணக் காய்ச்சல் வந்திட்டுது.. வீட்டுப் பக்கம் யாராவது தகவல் சொல்லி உடனே ஒரு கால் கட்டப் போட ஏற்பாடு பண்ணுங்கோ.

எனக்கேதோ மாப்பு கடையிலை காசு கொடுத்து வாங்கி வந்து எழுதுவது போல் படவில்லை. கடைடயிலிருந்ததை தனது கமெராவால் சுட்டுவந்து எமக்கு காதிலை ................................................... (விருப்பப்படி நிரப்பி வாசிக்கலாம்). :P :lol: :P :lol:

Edited by Vasampu

மாப்ஸ் உங்கட வீட்ட என்ன hardwood cleaner பாவிக்கிறவை ?

  • தொடங்கியவர்

ஏன் சினேகிதி நிலம் பார்க்கிறதுக்கு அவ்வளவு ஊத்தையா இருக்கிதோ? அந்த பதார்த்தத்தின் பெயர் அம்மாவிடம் தான் கேட்கவேண்டும். ஆனா வோல்மார்ட் லெவலுக்கு மேல நாங்கள் போறதில்ல. அம்மாதான் விளக்குமாறால வீட்ட கூட்டிப்போட்டு, சாணி தெளிக்கிறவ. நான் சிலது உந்த நிலத்தில வெறும் மேலோட படுத்து இருந்து உள்ள ஊத்தை எல்லாத்தையும் எண்ட உடம்பால எக்ஸ்சசைஸ் செய்யேக்க துடைச்சும் எடுக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

மாப்ஸ்! அடுத்தமுறை நீங்கள் பக்கத்தில் இருக்கும் குடை விக்கிற பகுதிக்குப் போய் இதே போன்று அழகான, பலமான குடையொன்று வாங்கினீங்களென்டால், அதே போன்ற சென்ற் போத்தலும், ஒரு துவாயும் கூட ப்ரீயாகக் கிடைக்கலாம். எதற்கும் ட்ரை பண்ணுங்கோ. (காரணம்: சில சமயம் ஒரே ஆள்தான் இரு கடைக்கும் முதளாளியாய் இருப்பார்.) :huh::lol:

ஜெனரல்!!

என்றாலும் கெட் அன்ட் சோல்டர் மற்றும் குடையும் கிடைத்தா பிறகும் வேற என்ன இலவசமா கிடைக்கும் என்று கேட்டீங்க அங்கே தான் நம்ம ஜெனரல் நிற்கிறார்!! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனரல்!!

என்றாலும் கெட் அன்ட் சோல்டர் மற்றும் குடையும் கிடைத்தா பிறகும் வேற என்ன இலவசமா கிடைக்கும் என்று கேட்டீங்க அங்கே தான் நம்ம ஜெனரல் நிற்கிறார்!! :P

மிகச் சரியாகச் சொன்னீங்க ஜம்மு!! கலைஞன்!! "கலகலஞன்"...!! ச்ச்ச்ச்சோ.சிரிச்சேன் :huh: ..உங்கட எழுத்துக்கெண்டுஒரு தனிமுத்திரை பதிக்கிறீங்கள் கலைஞா!

இங்கு எப்பவும் மலிவு விலை விளம்பரங்கள் தானே!. அடிக்கடி வாங்கும் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை அதுக்கு 'Walmart' போதும் :lol:!

நீண்ட நாள் பாவனைக்குரிய அத்தியாவசியப்பொருட்கள் தான் தரம் தரத்துக்கேற்ற நியாய விலையில் வாங்க வேண்டும்!!

ஓ!! எக்ஸிலேற்றருக்கு!! அருமையான தமிழாக்கம் :D! !தானியங்கு ஏணி!! என்றும் சொல்லலாம் என நினைக்கிறேன் :D!!

உங்கட அம்மாதான் எங்கள் ஊர்மணம் மாறாத பெண்மணி!! 'வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் தண்ணியும் தெளிக்கிறவாவோ? !! :D

அட மாப்பு!

இதானே வேண்டாம்.

அந்தச் சேல்ஸ் பெடியனை இந்த மாப்புப் படுத்தின பாட்டை பாத்த எனக்கே காதில பூவா?

அவன் ஹெட் அன்ட சோல்டர் கொடுத்தான் எண்டு.........

என்ன நடத்தது என்று தெரியுமோ? இந்த மாப்பு அடிக்கடி தலையை வறுக்கு வறுக்கு என்று சொரிய மண்டை ஓட்டோட ஒட்டிக் கிடந்த அழுக்கு பொடுகுமாதிரி கிளம்ப அந்த சேல்ஸ் பெடியன் அதைக் கண்டு போட்டான். அதான் பாவனைத் திகதி கடந்த ஹெட் அன்ட் சோல்டரைக் கொடுத்து தலையை(?) கழுவச்சொல்லி க் குடுத்தவனுக்கு இந்தக் காலாவதியான சம்பூவை பாவிச்சா தலைமுடி உதிர்த்தி வழுக்கையாகி விடுவாரே என்ற பரிதாபத்தில் நிலவு முகம் பார்த்தாப் பரவாயில்லையே இவருடைய தலையில் சூரிய ஒளிபட்டு சிதறும் ஒளிச்சிதறல்களால் வாகன விபத்துக்கள் வரக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் குடையைக் கொடுக்க, இதை விளங்காம மாப்பு 35 ஹெட் அனட் சோல்டர், குடை என்று சந்தோசத்தில மிதக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வாங்கின பேர்பியூம் யின் திகதி காலவதியாகி விட்டது எண்டு நினைக்கிறன். அதால இலவசமும் கூடிட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
:huh: கலைஞன்,கடைக்கார பெடிக்கு 5ஐ 10 ஐ கைக்குள்ளை வைச்சாலும் 125 என்ன 100க்கே தந்திருப்பான்.
  • தொடங்கியவர்

உதுகல வாசிக்க எல்லார்க்கும் தமிழனின்ட மூள என்ன மாதிரி வேலை செய்யுது எண்டு மட்டும் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஜோக் என்று தொடங்கினீங்கள் கலைஞன். பிறகு சீரியஸ் ஆகிட்டீங்க?

அடேய் மாப்பு

சம்பூ, குடை, வாசனைத்திரவியம் எல்லாம் எல்லாம் ஒருமிக்கக் கிடைக்கிறதுக்கு ஒரு டைம் இருக்கு.

இங்க ஆத்மாக்கள் பயணப்படுகிறபோதுதான் எண்ணெய், அரப்பு, குடை, சொம்பு எண்டு கனக்க சாமானுகளை தானமா கொடுக்கிறவர்கள் (ஐ!!! ஆதிக்கு என்ன ஞானம் பிறந்திட்டுதா?)

இங்க ஆத்மாக்கள் பயணப்படுகிறபோதுதான் எண்ணெய், அரப்பு, குடை, சொம்பு எண்டு கனக்க சாமானுகளை தானமா கொடுக்கிறவர்கள் (ஐ!!! ஆதிக்கு என்ன ஞானம் பிறந்திட்டுதா?)

ஆதி ஆதமா பயணபடும் போது யாருக்கு கொடுகிறவை பக்கத்தில இருகிற ஆட்களிற்கோ அல்லது பயணிக்கும் ஆத்மாவிற்கோ!! :P

எல்லாம் ஜம்முபேபியோட சேர்ந்து ஆதிக்கும் ஞானம் பிறந்திட்டு!! :)

கலைஞன்: இவ்வளவுதானா.. வேறவும் ஒண்டும் ச்சும்மா, ச்சும்மா தற இல்லையா..

:):D:(:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.