Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3  07 DEC, 2023 | 02:40 PM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

நல்லிணக்க செயல்முறைகள்  மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன்  சுரேன் சுரேந்திரன் குழுவினர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

அத்துடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின்  மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், சிவில் சமூகத்தினைரையும் சந்திக்க உள்ளனர். இதன் பிரகாரம் தேசிய சமாதான பேரவையுடனான சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை வடக்குக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளனர்.

புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் பின்னர் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை, இலங்கையின் உள்ளக அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்கும் இலக்கினை ஜனாதிபதி ரணில் துரிதப்படுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் அதற்கானதொரு அலுவலகத்தை ஜனாதிபதி ரணில் ஸ்தாபித்துள்ளார். அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கையின் மூத்த இராஜதந்திரிகளின் ஒருவரான வீ.கிருஸ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அலுவலகத்தின் ஊடாகவே உலக தமிழர் பேரவை அரசாங்கத்தை அணுகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/171189

  • Replies 131
  • Views 11.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எனது கருத்து, 1. இந்த பிரகடனம் பற்றி எனக்கு இந்த திரி வரும் வரை தெரியவில்லை.  எனக்கு மட்டும் இல்லை புலவர் உட்பட பலருக்கு தெரியவில்லை. இது எமது பிழையா? அல்லது இப்படி ஒன்றை தனியே தமிழ் காடியனில் மட

  • குமாரசாமி
    குமாரசாமி

    எழுதுங்கள். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் வந்தால் அது ஒட்டுமொத்த பிரச்சனையாகாது.   ஒரு சில பல இடங்களில்  நீங்களும் நானும் முரண்பட்டாலும் உங்கள் எழுத்தின் வாசகன் நான்.

  • ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா இரு

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா இருந்தால் நல்லதுதான்.  எப்படியோ அவர்கள் நம்பிக்கை வீண் போகாமல் இருந்தால் சரிதான். நல்லதையே சிந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Cruso said:

ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது.

சிங்களத்தின் நோக்கம் அதொன்று தான். 

  • கருத்துக்கள உறவுகள்

எஞ்ஜோய்...உங்களுடைய மார்கழி விடுமுறையை....ஆமா இவைக்கு யாரு உத்தியோகபூர்வ அந்தஸ்த்து கொடுத்தது....கோட்டவின் நேரம்..பாதிரி ஒருவர்போய் படு கிடையாய் கிடந்துவிட்டு வந்தாரே...அவருக்கு என்ன நடந்தது..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அத்துடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின்  மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், சிவில் சமூகத்தினைரையும் சந்திக்க உள்ளனர். இதன் பிரகாரம் தேசிய சமாதான பேரவையுடனான சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை வடக்குக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளனர்.

இவர் மகிந்த அரசுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியவர் அல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nunavilan said:

இவர் மகிந்த அரசுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியவர் அல்லவா??

இப்பவும் மகிந்த அரசு தான்.

ஆள்தான் வேற.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா இருந்தால் நல்லதுதான்.  எப்படியோ அவர்கள் நம்பிக்கை வீண் போகாமல் இருந்தால் சரிதான். நல்லதையே சிந்திப்போம்.

2 hours ago, alvayan said:

எஞ்ஜோய்...உங்களுடைய மார்கழி விடுமுறையை....ஆமா இவைக்கு யாரு உத்தியோகபூர்வ அந்தஸ்த்து கொடுத்தது....கோட்டவின் நேரம்..பாதிரி ஒருவர்போய் படு கிடையாய் கிடந்துவிட்டு வந்தாரே...அவருக்கு என்ன நடந்தது..

1) பேச்சுவார்த்தை நடத்துவது நன்மையானதா அல்லது தீமையானதா?

2) பேச்சுவார்த்தை நன்மையானது என்றால் யார், யாருடன் பேசலாம்? 

3) பிரித்தானியாவில் இருந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்களுக்கு மேற்குலகின் அனுசரணை இன்றி பேச்சுவார்த்தை நடாத்த முடியுமா? 

4) பேச்சுவார்த்தை தீங்கானது என்றால், அங்குள்ள தமிழர்களுக்கு பயன்படுவகையில் உதவ  எங்களுக்கு உள்ள மாற்று வழி என்ன? 

(இந்தக் கேள்விகள் உங்களுடன் முரண்படுவதற்காக அல்ல. )

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு புள்ளியில் எல்லா தரப்பினரும் சந்திக்கத்தானே வேணும். அது சரி இலங்கை ஜனாதிபதியுடன் உலகையே ஆளும் இந்த யாழ் கருத்துக்களத்தினர் ஒரு சந்திப்பை மேற்கொண்டால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

1) பேச்சுவார்த்தை நடத்துவது நன்மையானதா அல்லது தீமையானதா?

2) பேச்சுவார்த்தை நன்மையானது என்றால் யார், யாருடன் பேசலாம்? 

3) பிரித்தானியாவில் இருந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்களுக்கு மேற்குலகின் அனுசரணை இன்றி பேச்சுவார்த்தை நடாத்த முடியுமா? 

4) பேச்சுவார்த்தை தீங்கானது என்றால், அங்குள்ள தமிழர்களுக்கு பயன்படுவகையில் உதவ  எங்களுக்கு உள்ள மாற்று வழி என்ன? 

(இந்தக் கேள்விகள் உங்களுடன் முரண்படுவதற்காக அல்ல. )

பேச்சு வார்த்தை விற்பனைக்கான பொருளல்லவே....அதில் இதய சுத்தியும் ...ஆக்கபூர்வமன செயல்பாடும் வேண்டும்...இதனை விட பேசப்போகிற்வர்...தமிழரால் விடும்பப் படுபவராக இருக்கவேண்டும்...லண்டனில் இருக்கும் தழரின் எழுச்சியை இவரால் கட்டுப் படுத்தமுடியுமா...பெயர் மட்டும் இருந்தால் போதாது...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

1) பேச்சு வார்த்தை விற்பனைக்கான பொருளல்லவே....

2) அதில் இதய சுத்தியும் ...ஆக்கபூர்வமன செயல்பாடும் வேண்டும்...

இதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?

3) இதனை விட பேசப்போகிற்வர்... தமிழரால் விடும்பப் படுபவராக இருக்கவேண்டும்...⁉️

சுரேந்திரனை தமிழர் விரும்பவில்லையா? 

4) லண்டனில் இருக்கும் தழரின் எழுச்சியை இவரால் கட்டுப் படுத்தமுடியுமா?

ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?  எழுச்சி கொள்வதற்கான தேவை தற்போது  ஏன் வந்தது?  இலங்கைத் தமிழர்தான் இறுதியில்  எழுச்சி கொள்வதா என்று தீர்மானிக்க வேண்டும். நாம் அவர்களுக்கு துணையாக மட்டுமே இருக்க முடியும்.

5) பெயர் மட்டும் இருந்தால் போதாது...

சுரேன் சுரேந்திரன் அல்லது உலக தமிழர் பேரவை என்கிற பெயரில் என்ன பிரச்சனை? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

உங்கடை ஆள்தானே...பிரச்சினை இல்லை..அதுவும் ஒன்றுக்குள்ளை ஒன்று..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

அது சரி இலங்கை ஜனாதிபதியுடன் உலகையே ஆளும் இந்த யாழ் கருத்துக்களத்தினர் ஒரு சந்திப்பை மேற்கொண்டால் என்ன?

நாங்க ரெடி

நீங்க ரெடியான்னு கேட்டு சொல்லுங்க.

நாளைக்கே எமது தூதராக @goshan_che யை அனுப்பி வைக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

நாங்க ரெடி

நீங்க ரெடியான்னு கேட்டு சொல்லுங்க.

நாளைக்கே எமது தூதராக @goshan_che யை அனுப்பி வைக்கிறோம்.

அனுமான் இலங்கைக்கி போய் செய்த வேலை மாரித்தான் முடியும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அனுமான் இலங்கைக்கி போய் செய்த வேலை மாரித்தான் முடியும்🤣

இருந்தாலும் சுரேனைவிட திறமாகத் தான் இருக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வார்த்தையில் என்ன பேசப் போகின்றார்கள்என்பது வெளிப்படையாக்கப் படவேண்டும்.  அதற்கு அரசாங்கமும் பேசப்போகின்றவர்களும் ஒரு கூட்டறிக்கையை வெளிவிடுவது சிறப்பு.   அதில்  முதலாவதாக இலங்கையில் முதலீடுசெய்யப் போகும் தமிழர்களுக்கு என்ன அரசியல் சார்ந்த உரிமைகள் வழங்கப்படும், அதற்காக வழங்கப்படவுள்ள மாநில சுயாட்சி அமைப்பு எப்படியமையும்? அதிலுள்ள சட்டரீதியான சுதந்திரங்களென்ன என்பனபோன்ற விபரங்கள் அடக்கப்பட வேண்டும்.  அதில் தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகள் உள்ளடக்கப்பட்டால் அதனை தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இரண்டாம் கட்டத்தை நோக்கி நகரலாம்.  ஆரம்பத்திலேயே பேய்க்காட்டும் தன்மை இருக்குமாயின் வந்து போன செலவைத் தரவேண்டுமென்ற முன்நிபந்தனையுடன் சிங்கள அரசுக்கு குட் பை சொல்ல வழிவகைகள் இருக்க வேண்டும்.  எதற்கும் விஸாவையும் றிட்டர்ண் ரிக்கற்றையும் முன்கூட்டியே வாங்கிக்கொள்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

உங்கடை ஆள்தானே...பிரச்சினை இல்லை..அதுவும் ஒன்றுக்குள்ளை ஒன்று..

ஊரில் மதில் மேலிருந்து விசிலடித்துப் பட்டம் சூட்டும்  கூட்டத்தில் தாங்கள் ஒருவர் இல்லை என்பது என் நம்பிக்கை. 

மேலும் தாங்கள் மேலும்கொஞ்சம்  ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும்  என்பது என் விருப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

ஊரில் மதில் மேலிருந்து விசிலடித்துப் பட்டம் சூட்டும்  கூட்டத்தில் தாங்கள் ஒருவர் இல்லை என்பது என் நம்பிக்கை. 

மேலும் தாங்கள் மேலும்கொஞ்சம்  ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும்  என்பது என் விருப்பம். 

நான் எழுதின விடையத்தை ஆழமாக ...ஆக்கபூர்வமாக வாசித்திருந்தால் மதிலில் ஏறிப்பார்க்க வேண்டி வந்திராது...நுனிப்புல் மேய்ந்துவிட்டு...ஜம்பாவான் வேசம் போடவேண்டாமே

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

நான் எழுதின விடையத்தை ஆழமாக ...ஆக்கபூர்வமாக வாசித்திருந்தால் மதிலில் ஏறிப்பார்க்க வேண்டி வந்திராது...நுனிப்புல் மேய்ந்துவிட்டு...ஜம்பாவான் வேசம் போடவேண்டாமே

மீண்டும் வாசித்து மூளையைக் கசக்கிப் பார்க்கிறேன். 

(கசக்கிறதுக்கு மூளை என்ன கஞ்சாவோ என்று  கேட்க வேண்டாம். 😁)

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தால் தானே கசக்குப்படும்..முயற்சி பண்ணவும்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அனுமான் இலங்கைக்கி போய் செய்த வேலை மாரித்தான் முடியும்🤣

அதாவது இலங்கை தீவில் நெருப்பை பற்ற வைத்துவிடுவீர்கள் என்று சொல்லுகிறீர்கள். அப்படி எல்லாம் நடக்காது. அதுக்கு முதலே உங்களை சிங்களவன் மடக்கி விடுவான். உங்களுக்கு இங்கு ராஜமரியாதையுடன் கூடிய வரவேட்பை வைத்து தங்கள் காரியத்தை சாதித்து விடுவார்கள். பின்னர் யால் களத்தில் என்ன நடக்குமென்று தெரியும்தானே.😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இருந்தால் தானே கசக்குப்படும்..முயற்சி பண்ணவும்..

கஞ்சாவை நான் பாவிப்பதில்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

கஞ்சாவை நான் பாவிப்பதில்ல. 

நல்லா அனுபவிச்ச படியால்தான்...அதன் சுவையை யாழ் களாத்திலும் அறிமுகம் செய்யிறியள்  போலகிடக்கு...என் ஜாய் சாமி....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

நல்லா அனுபவிச்ச படியால்தான்...அதன் சுவையை யாழ் களாத்திலும் அறிமுகம் செய்யிறியள்  போலகிடக்கு...என் ஜாய் சாமி....

அது கிடக்கட்டும் ஒரு பக்கம், 

""உங்கடை ஆள்தானே...பிரச்சினை இல்லை..அதுவும் ஒன்றுக்குள்ளை ஒன்று..""

இதன் அர்த்தம் what  what ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அது கிடக்கட்டும் ஒரு பக்கம், 

""உங்கடை ஆள்தானே...பிரச்சினை இல்லை..அதுவும் ஒன்றுக்குள்ளை ஒன்று..""

இதன் அர்த்தம் what  what ?

பழையகால் ரியூப்லைட்டையா நீங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

பழையகால் ரியூப்லைட்டையா நீங்கள்..

ஆமாஞ்சாமி,

பழைய அல்ல, அதரப் பழசு 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.