Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் “டிஜே நைற்”க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் “டிஜே நைற்”க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்

adminDecember 12, 2023
 
98.jpg?fit=852%2C480&ssl=1
டிஜே நைற் என்ற பெயரில் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

டிஜே நைற் என்ற பெயரில் களியாட்ட நிகழ்வொன்று, யாழ் மாநகர சபையின் அனுமதியையும் மீறி மீளவும் நடத்தப்பட்டதாக அறிகிறோம்.
இவ்வாறாக சமூகத்தை சீரழித்து வருமானம் உழைப்பதை இவர்கள் கைவிடவேண்டும். இதற்கு எதிராக நாம் போராட வேண்டிய சூழல் வரும்.

குறித்த நிகழ்வுக்கு யாழ் மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான செயற்பாடு. இதற்கு எதிராக மாநகர சபை நடவடிக்கை எடுக்க முடியும்.அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும்.

குறித்த விடயத்தில் சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு எமது எதிர்ப்பை காட்டவேண்டும். மிகவிரைவில் இதற்கான எதிர்ப்பை பதிவு செய்வோம்- என்றார்.-
 
https://globaltamilnews.net/2023/198473/

  • கருத்துக்கள உறவுகள்

DJ-night.jpg?resize=750,375&ssl=1

யாழில் DJ-NIGHT நடைபெறக்கூடாது!

`DJ-NIGHT`  என்ற பெயரில் யாழில் இடம்பெற்றுவரும் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  டிஜே நைற் என்ற பெயரில் களியாட்ட நிகழ்வொன்று, யாழ் மாநகர சபையின் அனுமதியையும் மீறி மீளவும் நடத்தப்பட்டதாக அறிகின்றோம்.

DJ-NIGHT  என்ற பெயரில் சமூகத்தை சீரழித்து வருமானம் உழைப்பதை இவர்கள் கைவிடவேண்டும். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும். குறித்த நிகழ்வுக்கு யாழ் மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இது சட்டவிரோதமான செயற்பாடு. இதற்கு எதிராக மாநகர சபை நடவடிக்கை எடுக்க முடியும்.அனுமதியின்றி நடத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும். குறித்த விடயத்தில் சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு எமது எதிர்ப்பை காட்டவேண்டும். மிகவிரைவில் இதற்கான எதிர்ப்பை பதிவு செய்வோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

98.jpg?resize=600,338&ssl=1

https://athavannews.com/2023/1362841

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

யாழில் DJ-NIGHT நடைபெறக்கூடாது!

நல்ல விடயம். சமூகத்தை குடும்பங்களை சீரழிக்கும் நிகழ்வுகள் தான்  இவைகள். தடை செய்யப்பட வேண்டியதே.

  • கருத்துக்கள உறவுகள்

டீ ஜே நைட் என்றால் என்ன? அங்கே என்ன செய்கின்றார்கள் என்பதை ஒருக்கால் சொல்லுங்கோ பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

1970 ம் ஆண்டு காலப்பகுதியில் பொப்பிசை யாழ்பாணத்தில் பிரபலமாகியபோது இளவட்டங்கள் அதை enjoy பண்ணுவதை பொறுக்கமாட்டாத பழசுகள் அன்று பொறாமையில் அதை மப்பிசை என்று புறுபுறுத்தன. இன்று பாவம் இந்த சுகிர்தரனுக்கும் அதே நிலை. பிடிக்காமவிடில் போர்த்திக்கொண்டு படுக்க வேண்டியது தானே. 😂

மகிழ்வூட்டும் இவ்வாறான நிகழ்வுகள் உரிய அனுமதி பெற்று அதற்கான வரியை உள்ளூராட்சி மன்றங்களுக்கு செலுத்தி நடத்தப்படல் வேண்டும். குற்றச் செயல்கள் நடக்காமல்  உரிய கண்காணிப்புடன் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துவது நியாயமானது.  

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபங்களின் உள்ளே நடத்துகிற நிகழ்வுகளுக்கும் மாநகரசபை அனுமதி எடுக்க வேணுமோ? தீ அபாய ஆபத்துக்களைத் தடுக்கும் fire safety code அனுமதி போல ஏதாவதா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில்…. டிஜே நைட்டை எதிர்பவர்கள் யாருங்கிறே

80,90,2000,2010 களில்….மேற்கு நாட்டின் நகரங்களில்….

(மிகுதியை வாசர்கர் கற்பனைக்கு விடுகிறேன்🤣). 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

மண்டபங்களின் உள்ளே நடத்துகிற நிகழ்வுகளுக்கும் மாநகரசபை அனுமதி எடுக்க வேணுமோ? தீ அபாய ஆபத்துக்களைத் தடுக்கும் fire safety code அனுமதி போல ஏதாவதா?

எனக்கும் அது புரியவில்லை. ஐரோப்பாவில் ஹொட்டேல்களில் தங்கும் விருந்தினர்கள் தங்கும் ஒவ்வொரு இரவுக்கும் city tax செலுத்துவது போல. இருக்குமோ?  அப்படி என்றாலும் அனுமதி தேவையில்லை பங்கு பற்றுவோருக்கு tax payment செய்தால் போதுமானதே!  

9 minutes ago, goshan_che said:

இந்த திரியில்…. டிஜே நைட்டை எதிர்பவர்கள் யாருங்கிறே

80,90,2000,2010 களில்….மேற்கு நாட்டின் நகரங்களில்….

(மிகுதியை வாசர்கர் கற்பனைக்கு விடுகிறேன்🤣). 

இதிலை கற்பனைக்கு என்ன விடுகின்றீர்கள். Open up எல்லோரும் அன்று துடிப்புடன் ஆடி இன்று நடக்க இருக்க எழும்ப கஷ்ரப்படும் நிலையின் விரக்தி வெளிப்பாடு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் இவர் மக்களால் நிராகரிக்கபட்ட ஒருவர்.

30 minutes ago, goshan_che said:

இந்த திரியில்…. டிஜே நைட்டை எதிர்பவர்கள் யாருங்கிறே

80,90,2000,2010 களில்….மேற்கு நாட்டின் நகரங்களில்….

இப்போ மட்டும் என்ன தாங்கள் இங்கே அனுபவிக்கலாமாம்  யாழ்பாணத்து மக்களை அனுமதிக்க முடியாதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

டீ ஜே நைட் என்றால் என்ன? அங்கே என்ன செய்கின்றார்கள் என்பதை ஒருக்கால் சொல்லுங்கோ பார்க்கலாம். 

குதிரை ஓட்டுபவரை ஜாக்கி என்பது போல் இது டிஸ்க் ஜாக்கி disc jockey என்பார்கள் இந்த ஜாக்கிகள் வெகு குறிப்பிட்ட சிலர்தான் இன்னும் புகழின் உச்சத்தில் இன்னும் இருக்கிறார்கள் .கடைசியாக ஒரு  பெண் கூட உள்ளார் ஆசியா பக்கத்தில் பெயர் மறந்து விட்டது  இன்னார் ஜாக்கி என்றால் ரிக்கட் விலை எகிறும் .

சிலது சாம்பிள் கீழே .

இன்னிக்கு செவ்வாய் இரவு விரதம் மரக்கறி வீடுகளில் சவுண்டை கூட்டி கள உறவுகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் கம்பனி பொறுப்பாகாது 😀

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்போ மட்டும் என்ன தாங்கள் இங்கே அனுபவிக்கலாமாம்  யாழ்பாணத்து மக்களை அனுமதிக்க முடியாதாம்.

அதையேன் பேசுவான்? இந்தா வருட இறுதிப் பார்ட்டிகள் வருகின்றன. போக விருப்பமில்லா விட்டாலும் "Asian Uncle Dance" என்று நான் செல்லமாக அழைக்கும் டான்சுகளைப் பார்ப்பதற்காகவே போவதுண்டு. Asian Uncle Dance என்ன என்று அறிய  தமிழ் பாடசாலைப் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு வீடியோக்களைத் தேடிப் பாருங்கள், புரியும்😂!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுகளில் நடக்கும் தனிப்பட்ட  கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் அங்கு நடக்கவிருக்கும்  ரீன் ஏஜ் DJ கொண்டாட்டங்களையும்  ஒன்றாக செருகி குழப்புவதிலையே ஒரு சிலர்  குறிக்கோளாக உள்ளனர்.

அனுபவங்கள் தான் பாடங்கள். எது வேண்டும் எது வேண்டாம் என சொந்த அனுபவங்களும் பார்த்த அனுபவங்களுமே தீர்மானிக்கின்றன.

ஆட்டுறைச்சியெண்டால் இரண்டு பெக் கேட்பது போல DJ  மியூசிக் எண்டால் கஞ்சாவை சுருட்டி இரண்டு இழுவை இழுத்து விட்டால் அந்தமாதிரி இருக்கும்.அது மட்டுமல்ல வடகிழக்கு பகுதிகளில் வாலிப பருவத்தினரிடையே இப்போது நடப்பது கட்டுப்பாடற்ற போக்கு. சட்ட திட்டங்களும் ஒழுங்கில்லை. திருப்பி கேள்வி கேட்டாலே கத்திக்குத்து வாள் வெட்டு.அங்கு போதை பொருளுக்கும் பஞ்சமில்லை.

மேலை நாடுகளிலையே பார்ட்டி என்றால் அந்த ஏரியா காவல்துறையே கண்ணுக்குள் எண்ணை விட்டு அவதானித்துக்கொண்டிருக்கும்.ஆனால் அங்கு காவல்துறையே போதை பாவிப்பதை உற்சாகப்படுத்தும்

ஒரு பிரச்சனையை அமுக்க,அடக்க,மறக்க வைக்க பல விடயங்களை அறிமுகப்படுத்தலாம்.அரசும் அதை முன்னெடுத்து செய்யும். இதைத்தான் மேற்குலகம் பல இடங்களில்,நாடுகளில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது.

அவன் கிணத்துக்குள் விழ்ந்தால் நாமும் கிணத்துக்குள் விழ வேண்டும் அவசியம் யாருக்குமில்லை.

மற்றும் படி நான் இசை ,கொண்டாட்டங்களுக்கு எதிரியல்ல.:cool:

அடி தூள்...🤣

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தமிழ் பாடசாலைப் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு வீடியோக்களைத் தேடிப் பாருங்கள்

நான் ஆடினது வந்தாலும் வரக்கூடும்! வீடியோ எடுத்தவன் அடுத்தநாள் முழங்கால் எப்படி என்று வாட்ஸப்பில் வீடியோவையும் போட்டுக் கேட்டபோதுதான் நான் ஆடினதே எனக்குத் தெரியும்☺️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நியாயம் said:

டீ ஜே நைட் என்றால் என்ன? அங்கே என்ன செய்கின்றார்கள் என்பதை ஒருக்கால் சொல்லுங்கோ பார்க்கலாம். 

 எம்மவர்களின் தனிப்பட்ட கொண்டாட்ட வைபவங்களிலும் DJ நடக்கின்றது. ஆனால் அது ஒரு வித கட்டுப்பாடு அல்லது  சமூக சாரளமாக நடந்தேறும். ஆனால் வெளிப்படையான DJ கொண்டாட்டங்கள் அளவிற்கு மீறியதாக இருக்கும்..வேலியே பயிரை மேயும் நிகழ்ச்சிகளாக இருக்கும்.எல்லை மீறிய சம்பவங்கள் நடக்கும்.பாலியல் சுதந்திரம் நிரம்பி வழியும்.
நேற்று அவன் இன்று நான் நாளை நீ.....இப்படியே தொடரும்....
இங்கே யாழ்களத்தில் Dj க்கு ஆதரவானவர்கள் தங்கள்  பெண் பிள்ளைகளையும் அனுப்புவார்களாயின் என் தோல்வியை ஒப்புக்கொள்கின்றேன்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இப்போ மட்டும் என்ன தாங்கள் இங்கே அனுபவிக்கலாமாம்  யாழ்பாணத்து மக்களை அனுமதிக்க முடியாதாம்.

நல்லூர் கோவில் முன் dj ஒன்று போடுவம் வருவீங்களா ? உங்களை தலிவிரா போட்டு ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் இவர் மக்களால் நிராகரிக்கபட்ட ஒருவர்.

இப்போ மட்டும் என்ன தாங்கள் இங்கே அனுபவிக்கலாமாம்  யாழ்பாணத்து மக்களை அனுமதிக்க முடியாதாம்.

அங்கை இருக்கிற இளம் பொடியளுக்கு ஒரு புடி வெங்காய தாள் நட்டு வளர்க்க வக்கில்லை.ஒரு தோட்டம் செய்ய வக்கில்லை.நடந்து போக வக்கில்லை.மண்வெட்டி தூக்க வக்கில்லை.குளம் குட்டையளை தூர்வார வக்கில்லை.வயலுக்கு போய் உழவு செய்ய வக்கில்லை. இந்த சித்திரத்திலை கண்டவன் கிண்டவளோட உரஞ்சி உரஞ்சி தேய்க்க  DJ கேக்குதோ?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

அங்கை இருக்கிற இளம் பொடியளுக்கு ஒரு புடி வெங்காய தாள் நட்டு வளர்க்க வக்கில்லை.ஒரு தோட்டம் செய்ய வக்கில்லை.நடந்து போக வக்கில்லை.மண்வெட்டி தூக்க வக்கில்லை.குளம் குட்டையளை தூர்வார வக்கில்லை.வயலுக்கு போய் உழவு செய்ய வக்கில்லை. இந்த சித்திரத்திலை கண்டவன் கிண்டவளோட உரஞ்சி உரஞ்சி தேய்க்க  DJ கேக்குதோ?

போதாகுறைக்கு ஐஸ் போதை யார் குடுகிறார்கள் கனடா பக்கத்தில் இருந்து புலம்பெயர் நாங்கள்தானே கஞ்சாவில் பிடிபட்டவனுக்கும் வக்கீல் அரேஞ் பண்றது புலம்பெயர்  இப்ப Dj க்கு வக்காலத்து வாங்கிற ஆட்களை இந்த யாழ் களத்தில் யார் என்று பாருங்கள் உறவுகளே ?

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்க மக்களே பாருங்க…..

ஒரே போதை வஸ்து கடத்தல் புள்ளிகளால் யாழ் நிரம்பி வழியுது🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, goshan_che said:

பாருங்க மக்களே பாருங்க…..

ஒரே போதை வஸ்து கடத்தல் புள்ளிகளால் யாழ் நிரம்பி வழியுது🤣

 யாழ்ப்பாணத்திலை இராணுவம் தான் இப்ப தோட்டம் துரவு எல்லாம் செய்யுதாம்.எங்கடையள் எல்லாம் பொறின் சிந்தனையிலை தான் திரியினமாம். ஏனெண்டால் அவையள் வெள்ளைக்காரன் பரம்பரையாம்.
ஆனால் வெள்ளைக்காரன் நாட்டிலை கக்கூஸ் கழுவியும் வாழ்பவன் தான் ஈழத்தமிழன்.

காக்கைக்குத் தெரியுமா, எருதின் புண்ணைப் பற்றி....😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நல்லூர் கோவில் முன் dj ஒன்று போடுவம் வருவீங்களா ?

நான் வரவில்லை வெளிநாட்டிலே தமிழர்களின் ஆட்டம் பாட்டம் பார்ட்டிகள்  எல்லாம் குவிந்து போய் இருக்கின்றது. யாழ்பாணத்தில் உள்ளவர்கள் பாவங்கள் அவர்களையும்  enjoy பண்ண அனுமதிப்போம்.

50 minutes ago, goshan_che said:

பாருங்க மக்களே பாருங்க…..

ஒரே போதை வஸ்து கடத்தல் புள்ளிகளால் யாழ் நிரம்பி வழியுது🤣

அவர்கள் அங்கே enjoy பண்ணுவதை தடுப்பதற்காக இங்கே உள்ள கலாச்சார காவலர்கள் விமான ரிக்கற் வாங்கி யாழ்பாணம் போய் அங்கே நடைபெறுகின்ற பார்ட்டிகளுக்குள் இவர்களே போதை வஸ்தை செருகிவிடுவார்கள் போல் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் வரவில்லை வெளிநாட்டிலே தமிழர்களின் ஆட்டம் பாட்டம் பார்ட்டிகள்  எல்லாம் குவிந்து போய் இருக்கின்றது. யாழ்பாணத்தில் உள்ளவர்கள் பாவங்கள் அவர்களையும்  enjoy பண்ண அனுமதிப்போம்.

அதான் யாழை குளப்ப வேனும் உங்கடை முடிவு அதுதானே ?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

 யாழ்ப்பாணத்திலை இராணுவம் தான் இப்ப தோட்டம் துரவு எல்லாம் செய்யுதாம்.எங்கடையள் எல்லாம் பொறின் சிந்தனையிலை தான் திரியினமாம். ஏனெண்டால் அவையள் வெள்ளைக்காரன் பரம்பரையாம்.
ஆனால் வெள்ளைக்காரன் நாட்டிலை கக்கூஸ் கழுவியும் வாழ்பவன் தான் ஈழத்தமிழன்.

காக்கைக்குத் தெரியுமா, எருதின் புண்ணைப் பற்றி....😎

காலம் என்பது காட்டாறு….

அது தடுத்து நிறுத்த முடியாத மோட்டாரு….

சகல விடயங்களிலும் மேனாட்டு நடைமுறைகளை பின் பற்றி கொண்டு சிலதை மட்டும் தவிர்க்க முடியாது.

இல்லாவிட்டால் தலிபான் போல் ஒட்டு மொத்தமாக அடித்து மூட வேண்டும்.

இதெல்லாம் சென்னையில் 98 வாக்கிலேயே வந்து விட்டது. சென்னை என்ன நாசமாயா போய்விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

காலம் என்பது காட்டாறு….

அது தடுத்து நிறுத்த முடியாத மோட்டாரு….

காட்டாறு அதை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி அமைதியாக ஓட விடவேண்டும். இல்லையேல் இருப்பதையும் வாரி அள்ளிக்கொண்டு போய் விடும்.
இருந்த வெள்ளத்தை  வந்த வெள்ளம் அள்ளிக்கொண்டு போன கதையாய்.....

1 hour ago, goshan_che said:

சகல விடயங்களிலும் மேனாட்டு நடைமுறைகளை பின் பற்றி கொண்டு சிலதை மட்டும் தவிர்க்க முடியாது.

நன்று.
நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை தவிர்ப்பதுதான் ஆறறிவு படைத்த மனிதனுக்கு அழகு.

1 hour ago, goshan_che said:

இல்லாவிட்டால் தலிபான் போல் ஒட்டு மொத்தமாக அடித்து மூட வேண்டும்.

தலிபானின் நடவடிக்கைகளை  எம் இனத்துடன் ஒப்பிடுவது தவறு.தேவையான சுதந்திரத்துடன் வாழும் இனம் நம் இனம். அரசியலை தவிர்த்து.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

காட்டாறு அதை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி அமைதியாக ஓட விடவேண்டும். இல்லையேல் இருப்பதையும் வாரி அள்ளிக்கொண்டு போய் விடும்.
இருந்த வெள்ளத்தை  வந்த வெள்ளம் அள்ளிக்கொண்டு போன கதையாய்.....

நிறுத்தி கட்டிய அணைகள் உடையும் போது சுனாமி போல் அடித்து துவைக்கும் (ஓரளவுக்கு 95 இன் பின் யாழில் நடப்பது இதுதான்) .

அதன் போக்கில் ஓட விடுவதே சிறந்தது, போதிய சட்ட கட்டுப்பாடுகளுடன்.

பிகு

தலிபான் போல் இருக்காவிடின், அணைகள் உடைவதை தவிர்க்கவும் முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இதெல்லாம் சென்னையில் 98 வாக்கிலேயே வந்து விட்டது. சென்னை என்ன நாசமாயா போய்விட்டது.

சென்னை பார்ட்டிகள் என்றால் உடனே நினைவுக்கு வருவது போதைப்பொருட்கள் பாவனைதானே?
அல்லது காலம் எனும் காட்டாற்றில் போதைப்பொருளும் ஒரு அம்சம் என சொல்ல வருகின்றீர்களா?

3 minutes ago, goshan_che said:

நிறுத்தி கட்டிய அணைகள் உடையும் போது சுனாமி போல் அடித்து துவைக்கும் (ஓரளவுக்கு 95 இன் பின் யாழில் நடப்பது இதுதான்) .

அதன் போக்கில் ஓட விடுவதே சிறந்தது, போதிய சட்ட கட்டுப்பாடுகளுடன்.

பிகு

தலிபான் போல் இருக்காவிடின், அணைகள் உடைவதை தவிர்க்கவும் முடியாது.

விடுதலைப்புலிகள் ஆட்சி இன்றிருந்தால் உங்கள் காலக்காட்டாறு விளையாட்டுக்கள் நடைபெற சாத்தியம் இருந்திருக்குமா?

சுனாமிகள் அணையை உடைத்திருக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.