Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழில்.புளியமரங்களை நட பணிப்பு

adminDecember 12, 2023
sivapalasuntharan.jpg?fit=696%2C445&ssl=

யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஐம்பது ஆண்டுகளில் பயன்தரு புளியமரம் நாட்டியதாக வரலாறு இல்லை. தற்போது உள்ள புளியமரங்கள் எல்லாமே இயற்கையாக விதை மூலம் பரவியதே. அவையும் தற்போது வெட்டப்பட்டு கொண்டிருக்கிறது.

தற்போது நாட்டுக்கு தேவையான புளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் உதவியை கோரியுள்ளேன். எதிர்காலத்தில் புளிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும். தற்போது புளியமரத்தை நாட்டினால் பத்து பதினைந்து வருடங்களில் புளிக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கே உரித்தான பாரம்பரிய பழ மரங்கள் வெட்டப்படுகிறது. மா மரம், பலா மரம் என்பன வெட்டப்படுகிறது. இது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும்.பாரம்பரிய பழ மரங்களை பாதுகாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது -என்றார்.

https://globaltamilnews.net/2023/198492/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புளியமரம் மட்டுமன்றி இலுப்பை, வேம்பு  போன்ற எண்ணெய் வித்துள்ள மரங்களும் நடவு செய்யலாம்......பிற்காலத்தில் வருமானத்துக்கு உதவும்.......!  👍

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, suvy said:

புளியமரம் மட்டுமன்றி இலுப்பை, வேம்பு  போன்ற எண்ணெய் வித்துள்ள மரங்களும் நடவு செய்யலாம்......பிற்காலத்தில் வருமானத்துக்கு உதவும்.......!  👍

வருமானம் மட்டுமல்ல வெயிலுக்கு நிழலும் தருமண்ணை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புளிய மரம் வீடுகளுக்கு அருகில் நடக்கூடாது.அதன் ஆழமான வேர் வீட்டு சுவர்களை வெடிக்கச்செய்துவிடும். சுவியர் சொல்வது போல் பலன் தரும் மரங்களை நட்டால் வீட்டுக்கும் நல்லது.நாட்டுக்கும் நல்லது. சூழலுக்கும் நல்லது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, suvy said:

புளியமரம் மட்டுமன்றி இலுப்பை, வேம்பு  போன்ற எண்ணெய் வித்துள்ள மரங்களும் நடவு செய்யலாம்......பிற்காலத்தில் வருமானத்துக்கு உதவும்.......!  👍

அண்ணை இருக்கும் மரங்களையே சனங்கள் இரகசியமாக வெட்டி விற்கிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஏராளன் said:

அண்ணை இருக்கும் மரங்களையே சனங்கள் இரகசியமாக வெட்டி விற்கிறார்கள்!

மரங்கள் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி வெட்டுவதாயின் அரச அனுமதி வேண்டும் என சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

மரங்கள் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி வெட்டுவதாயின் அரச அனுமதி வேண்டும் என சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

சட்டங்கள் இருக்கண்ணை, சனம் களவாக வெட்டுது. பெரிய மரங்கள் வெட்டுவது எனில் கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெறப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/12/2023 at 10:18, suvy said:

புளியமரம் மட்டுமன்றி இலுப்பை, வேம்பு  போன்ற எண்ணெய் வித்துள்ள மரங்களும் நடவு செய்யலாம்......பிற்காலத்தில் வருமானத்துக்கு உதவும்.......!  👍

அண்மையில் ஒரு அன்பரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, இலுப்பெண்ணை பேசுபொருளாகிவிட, தான்  உண்டதேயில்லை என்று அவர் சொன்னார். இப்போதும் யாழில் இலுப்பெண்ணை கிடைக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, nochchi said:

அண்மையில் ஒரு அன்பரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, இலுப்பெண்ணை பேசுபொருளாகிவிட, தான்  உண்டதேயில்லை என்று அவர் சொன்னார். இப்போதும் யாழில் இலுப்பெண்ணை கிடைக்கிறதா?

அண்ணை வேப்பெண்ணை, இலுப்பெண்ணை சிறிய குப்பிகளில் விற்பனை செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஏராளன் said:

அண்ணை வேப்பெண்ணை, இலுப்பெண்ணை சிறிய குப்பிகளில் விற்பனை செய்கிறார்கள்.

தகவலுக்கு நன்றி. இலுப்பெண்ணை உணவுத்தேவைகளுக்குப் பாவிப்பதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, nochchi said:

தகவலுக்கு நன்றி. இலுப்பெண்ணை உணவுத்தேவைகளுக்குப் பாவிப்பதில்லையா?

அண்ணை நல்லெண்ணை, தேங்காயெண்ணை, மரக்கறி எண்ணைய் போன்றவை தான் பாவனை கூட.

இலுப்பெண்ணைய‍் சமையலுக்கு பயன்படுத்தலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 hours ago, ஏராளன் said:

அண்ணை நல்லெண்ணை, தேங்காயெண்ணை, மரக்கறி எண்ணைய் போன்றவை தான் பாவனை கூட.

இலுப்பெண்ணைய‍் சமையலுக்கு பயன்படுத்தலாமா?

இலுப்பைவிதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் சமையலுக்கும், அதனது கழிவாக வருவது, 'அரப்பு' இதனை உடலில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. தேசிக்காய்,சிகைக்காய் மற்றும் அரப்பையும் சேர்த்து அவித்துத் தலைக்கு வைத்து முழுகுவதோடு, அரப்பால் உடலில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. 
நன்றி

Edited by nochchi
திருத்தம்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, nochchi said:

இலுப்பைவிதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் சமையலுக்கும், அதனது கழிவாக வருவது, 'அரப்பு' இதனை உடலில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. தேசிக்காய்,சிகைக்காய் மற்றும் அரப்பையும் சேர்த்து அவித்துத் தலைக்கு வைத்து முழுகுவதோடு, அரப்பால் உடலில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. 
நன்றி

அரப்பும் எலுமிச்சம் பழமும் அவித்து சிறுவயதில் தலைக்கு குளித்திருக்கிறோம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nochchi said:

இலுப்பைவிதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் சமையலுக்கும், அதனது கழிவாக வருவது, 'அரப்பு' இதனை உடலில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. தேசிக்காய்,சிகைக்காய் மற்றும் அரப்பையும் சேர்த்து அவித்துத் தலைக்கு வைத்து முழுகுவதோடு, அரப்பால் உடலில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. 
நன்றி

1 hour ago, ஏராளன் said:

அரப்பும் எலுமிச்சம் பழமும் அவித்து சிறுவயதில் தலைக்கு குளித்திருக்கிறோம்.

சீயக்காயும் அவித்து அரைத்து தலைக்கும் உடம்புக்கும் பூசிய ஞாபகம் இன்னும் இருக்கிறது.

பிற்பாடு 35 சதத்துக்கு சிறிய சம்போ வந்தது.

அதோடு அரப்பு சீயக்காய் வழக்கம் ஒழிந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/12/2023 at 04:21, ஏராளன் said:

வருமானம் மட்டுமல்ல வெயிலுக்கு நிழலும் தருமண்ணை.

முடிந்தால் உங்கள் சக பணியாளர்களோடு ஆலோசித்து அடுத்து வரும் பணிகளில் பராமரிக்க கூடியவர்களுக்கு மரக்கன்றுகளை கூட கொடுக்கலாம்.புத்தண்ணாவும் கடந்த காலங்களில்  ஊக்குப்பாக செய்திருக்கிறார்தானே.அண்மையில் கொழும்பில் நடந்த திருமண வீடு ஒன்றில் அன்பளிப்பாக மரக்கன்றுகளை கொடுத்திருக்கிறார்கள்.முன்னாள் ஒவிபரப்பாளர் ஒருவரின் முகப் புத்தகத்தில் காணக் கூடியதாக இருந்தது.

  • Like 3
Posted
1 hour ago, யாயினி said:

யாழ்ப்பாணத்தில் திருமண வைபவத்தின் பின் தென்னங்கன்றுகள் கொடுத்தார்கள். ஏனைய மரக்கன்றுகளையும் மக்கள் கொடுத்து முன்மாதிரி ஆகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, யாயினி said:

முடிந்தால் உங்கள் சக பணியாளர்களோடு ஆலோசித்து அடுத்து வரும் பணிகளில் பராமரிக்க கூடியவர்களுக்கு மரக்கன்றுகளை கூட கொடுக்கலாம்.புத்தண்ணாவும் கடந்த காலங்களில்  ஊக்குப்பாக செய்திருக்கிறார்தானே.அண்மையில் கொழும்பில் நடந்த திருமண வீடு ஒன்றில் அன்பளிப்பாக மரக்கன்றுகளை கொடுத்திருக்கிறார்கள்.முன்னாள் ஒவிபரப்பாளர் ஒருவரின் முகப் புத்தகத்தில் காணக் கூடியதாக இருந்தது.

அக்கா Dec 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளில் தேசிமரக்கன்றுகள் வழங்க எண்ணியிருந்தோம், மழை தொடங்க முதல் வழங்குவது நல்லது என கூறியபடியால் வரும் வருடங்களில் கொடுக்க எண்ணியுள்ளோம்.

எமது மாமியின் அந்தியேட்டியின்போது தேசிக்கன்றுகளை அத்தான் வழங்கியிருந்தார்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.