Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்க உத்தியோகம்-ஓசியில் இருப்பதற்கு அவங்களுக்கு சம்பளம், இது காணாதெண்டு சம்பளம் கூட்டோனும் எண்டு போராட்டம் வேற..அந்த ரெயில்வே டிபார்ட்மெண்ட்ல வேலைசெய்யிறவங்கட சம்பளம் பாத்தனியே 2 லச்சம் தம்பி.....

 

வைத்தியசாலையில் ஒரு நாள்  நிறைகுடிவெறியில் ஒரு குடிமகன் வந்திருந்தார் வாயில் தூசண வார்த்தைகளைக்கொட்டிக்கொண்டுவந்தவர் தனது கோபத்தை அங்கே பணிபுரிந்துகொண்டிருக்கும் வைத்தியர்கள் மீதும் தாதிகள் மீதும் காட்டினார். டேய்  நாங்கள் குடுக்கிற டக்ஸ் காசிலதானே சம்பளம் வாங்கிறியள் இப்ப இந்த காயம் மாறோனும் இல்லையெண்டால் டீம் இறங்கும்......

சரி விடயத்திற்கு வருவோம்

FmN-9-JX0BUqsdD.jpg

 

 

இலங்கையில் வரியை 15% இல் இருந்து 18% இற்கு அடுத்தவருடத்தில் இருந்து அதிகரிக்கப்போகின்றார்கள் அதாவது இன்னும் 1 மாதம்தான் இருக்கின்றது. இதனால் பெற்றோல் விலையுடன் அனைத்துப்பொருட்களின் விலையும் ஒரு சுற்று அதிகரிக்கப்போகின்றது. மிடில் கிளாஸில் இருந்து ஒரு படி கீழே இறங்கிய அனைவரும் மீண்டும் ஒரு படி கீழே இறங்கப்போகின்றோம். சாதாரணமாக SL grade இல் இருப்பவர்களைத்தவிர அவளவு இலகுவாக சம்பளம் யாருக்கும் 1 இலட்சங்களை தாண்டுவது அரிது, வேண்டுமானால் பிரைவேட்டாக உழைக்கவேண்டியிருக்கும். 95% ஆன அரச உத்தியோகத்தர்களுக்கு நிச்சயம் லோன் இருக்கும் வீட்டுக்காகவோ அல்லது வாகனத்துக்கோ ஏதாவது ஒரு தேவைக்காக லோன் எடுத்திருப்பார்கள், எனவே அது போக மிகுதிதான் சம்பளம் அதுவும் இப்போது வரியையும் கழித்தால் இன்னும் குறையத்தான் போகின்றது ஆனால் ஒட்டுமொத்த சம்பளம் அதிகரிக்கப்போவதில்லை.

Image_richmans_tax.jpg

 

 

வைத்தியசாலையில் குடிபோதையில் கூறிவரின் கருத்து ஒருவகையில் சரிதான் அவர் சாராயம் வாங்க கொடுத்த பணத்தில் இருக்கும் டக்ஸில் இருக்கும் ஒரு பகுதியில் இருந்தும் கூட அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது, ஆனால் இலங்கையில் எந்த ஒரு அரச உத்தியோகத்தருக்கும் சாராயம்வாங்கும்போது, அரிசி, பருப்பு, சீனி என்ற எந்த பொருட்களுக்கும் வரிச்சலுகை வழங்கப்படுவதில்லை, அதாவது சாதாரணமக்கள் கொடுக்கும் அதே வரிப்பணத்தை அரச உத்தியோகத்தர்கள் கட்டுகிறார்கள் அதோடு அதைவிட கூடுதலாக சம்பளத்திலும் வரி அறவிடப்படுகின்றது.

 

சுருக்கமாக விரும்பியோ விரும்பாமலோ வரிகட்டவேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பவர்கள் அரச ஊழியர்கள்தான். நாட்டில் ஏற்படும் திடீர் பொருளாதாரச்சிக்கல்களுக்காக மாதாந்த வேதனத்தை 2 மாதங்கள் தள்ளிப்போடவும் அரசாங்கத்தால் முடியும் ஆனால் இப்படி எதுவும் தனியார் துறைக்கு நடக்கப்போவதில்லை. இப்படி வேறு எந்த நாட்டிலும் நடக்காதுதான் ஆனாலும் இப்படியான சூழ் நிலைக்கு நமது நாடு என்றோ தள்ளப்பட்டுவிட்டது.

இதுதொடர்ந்தால் அரசவேலையைவிட்டுவிட்டு வேறுதொழிலுக்கு செல்வதைதவிர பலருக்குவேறுதெரிவு இருக்கப்போவதில்லை.

ஒரு லட்சம் என்பது இப்போது ஒன்றும் அவளவு பெரிய சம்பளமேயல்ல  என்பதால் அரசு 120000க்கு மேல் சம்பளம் எடுக்கும் அனைவருக்கும் வரியை அமல்படுத்தியிருக்கின்றது.

ஒரு முடிவெட்டும் நபரை எடுத்துக்கொள்வோம்

முடிவெட்டுவதற்கு ஒருவருக்கு 500 ரூபாய், ஒரு நாளில் குறைந்தது 10 பேர் வெட்டுகிறார்கள் என வைத்துக்கொண்டாலும் மாதத்திற்கு 150 000 ரூபாய்களை அவர் உழைக்கத்தான் போகின்றார் ஆனால் அவர் இதற்கு எந்த வரியையும் கட்டப்போவதில்லை ஆனால் சமுர்த்திப்பதிவும் அதற்கான கொடுப்பனவையும் அவரால் பெறமுடியும்.

வீதியோரத்தில் பகோடா, மிக்ஸர் விற்கும் தள்ளிவண்டிவைத்திருப்பவராலும் அண்ணளவாக இதே சம்பளத்தைப்பெறமுடியும் (  தெரிந்தவர்கள் இருவர் இருக்கின்றார்கள் )

sd1.jpg

 

 

ஓரு ஆட்டோ ஒட்டுனராலும் அவரது ஓட்டத்தைப்பொறுத்து இவை சாத்தியம்தான். இப்போதாவது Pick Me யாழ் வந்ததால் தப்பித்தோம் 2018 இல் யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டரில் இருக்கும் என் ஊருக்கு வருவதற்கு 2000 ரூபாய் கொடுத்தேன் அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பஸ் ரிக்கட் 1300 ரூபாய் ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து என் ஊருக்கு 2000 ரூபா

இவர்களையெல்லாம் விடுங்கள் மன்னிப்போம் கஸ்ரப்பட்டால்தான் பணம்கிடைக்கும், 2019 இல் இறந்த என் தந்தையின் கிரியைகளைசெய்வதற்காக கீரிமலை சென்றிருந்தேன் அங்கே கொடுக்கவேண்டிய பணம் 10 000 ரூபாய், அரை மணித்தியாலத்திற்கு ஒருவர் என்றவாறு கிரியைகள் நடக்கும் எப்படியும் குறைந்தது 20 நபர்களை போட்டுக்கொள்வோம் ( உண்மையில் மிக அதிகம்) ஒரு நாளில் 2 லட்சம் கிடைக்கும் மாதத்திற்கு 60 லட்சம் ஆனாலும் அங்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் என்று சமுர்த்திப்பதிவு இருப்பதாக கேள்வி... இங்கும் வரி கட்டப்படுவதில்லை. இதேபோன்று 3 மாடி வீடுகளை கட்டிவாழும் கோயில் பூசாரிகள், சர்ச் பாதிரிகள் என்று ஒரு பெரிய கூட்டத்திற்கே படியளப்பதற்கும் அரச ஊழியர்களே பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களை வென்றவர்கள் நமது அரசியல்வாதி சகாக்காள்....

 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வரி உண்மையில் எமது நாட்டைவிட மிக அதிகம்தான்

income tax

 

 

ஆனால் அதிகமான வரி மக்களை அவளவாகப்பாதிக்காது காரணம் அங்கே எந்தத்தொழிலாக இருந்தாலும் மணித்தியாலத்திற்கு 20 அல்லது 22 டாலர்கள் வழங்கவேண்டும் போன்ற சட்டங்கள் இருக்கின்றன. இதனால் எந்த ஒரு மனிதனதும் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்வதற்கான பணத்தை அனைவராலும் உழைத்துக்கொள்ளலாம், அதோடு வயோதிபத்தில் பண உதவி போன்று பல திட்டங்கள் இருக்கின்றன இவற்றினால் கட்டப்பட்ட வரி மீண்டும் ஏதாவது ஒருவிதத்தில் கிடைக்கும் துரதிஸ்டவசமாக இலங்கை நிலை நான் சொல்லித்தெரியவெண்டியதில்லை.

 

அனைவரது பணப்பரிவர்த்தனையையும் கவனிபதற்காக இலங்கை அரசு TIN -tax identification no என்ற சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது, இதை அரசு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தாலும் உலக வங்கியின் நிபந்தனைகளின்பேரில் இப்போது இது கடுமையாக்கப்பட இருக்கின்றது.

TIN%20registration%20(process%20flow).png

 

 

வங்கியில் வைப்பிலிடப்படும் பணம்கூட கண்காணிக்கப்படும். அந்தப்பணம் எங்கிருந்துவந்தது என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவேண்டும் அதற்கான வரிப்பணமும் அறவிடப்படும். காணி,வீடு, கார் என எது வாங்கினாலும் எந்த source இல் இருந்து பணம் கிடைத்தது என்பதில் கேள்விகள் ஆரம்பிக்கப்பட்டு டக்ஸில் சகலதும் முடிவடையும். இதை இன்னும் திறம்பட செய்யவேண்டுமானால் இந்தியாவில்  Gpay பயன்படுத்துவதைப்போல் இங்கேயும் பயன்படுத்தினால் சலூன் முதற்கொண்டு சைக்கிள்கடை வரை அனைத்துமே இலகுவில் கண்காணிக்கப்படும்.

 

எதிர்காலத்தில் இந்த TIN இலக்கம் இல்லாமல் ஒரு வங்கிக்கணக்குக்கூட திறக்கமுடியாமல்போகலாம். இந்தியாவில் இருக்கும் ஆதார் காட் போல் இங்கேயும் அனைத்தும்வரலாம்.

TIN இலக்கத்தை ஒன்லைனிலும் பெற்ருக்கொள்ளமுடியும். இங்கே கிளிக் செய்து படிவத்தை பூர்த்திசெய்துகொள்ளுங்கள்.

இந்தக்கட்டுரை தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் இருக்கும் கொமண்டுங்கள் பார்ப்போம்.

https://www.manithanfacts.com/2023/12/tin no tax srilanka.html

  • கருத்துக்கள உறவுகள்

venkkayam நன்றி இணைப்புக்கு .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

“” டேய்  நாங்கள் குடுக்கிற டக்ஸ் காசிலதானே சம்பளம் வாங்கிறியள் இப்ப இந்த காயம் மாறோனும் இல்லையெண்டால் டீம் இறங்கும்......””

இப்படியொரு சம்பவம் நடந்தது   என்பது கட்டுரையாளரின் புனைவு. 

இலங்கையில் பொது மக்களுக்கு வரி தொடர்பான அடிப்படை விளக்கம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, venkkayam said:

வங்கியில் வைப்பிலிடப்படும் பணம்கூட கண்காணிக்கப்படும். அந்தப்பணம் எங்கிருந்துவந்தது என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவேண்டும் அதற்கான வரிப்பணமும் அறவிடப்படும்.

இலங்கையில் முன்பு வங்கியில் வைத்திருக்கும் பணத்தின் வட்டிக்கு வரி கிடையாதாம் 😎இப்போது தான் அறிமுகபடுத்தியுள்ளதாக சொன்னார்கள்.

2012 ல் வந்த ஒரு  சீனியர் எப்படி புதிய உறுப்பினர்🙄

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் முன்பு வங்கியில் வைத்திருக்கும் பணத்தின் வட்டிக்கு வரி கிடையாதாம் 😎இப்போது தான் அறிமுகபடுத்தியுள்ளதாக சொன்னார்கள்.

 

யார் சொன்னது? அந்த நாள் முதல் 5 % வரை WHT (வித் ஹோல்ட்டிங் டக்ஸ்) பிடித்து வைத்திருக்கிறார்கள். இதைத்தான் இப்போது பத்து தொடக்கம் பதினைந்து என அதிகரிக்க திடடமிடுகிறார்கள். எங்கே எல்லாம் கொள்ளை அடிக்கலாமா அங்கெ எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

2012 ல் வந்த ஒரு  சீனியர் எப்படி புதிய உறுப்பினர்🙄

ஒரு மாதம் நீங்க கருத்தெழுதாமல் விட்டால் நீங்களும் புதிய உறுப்பினருக்கு தள்ளப்படுவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Cruso said:

யார் சொன்னது?

இலங்கையில் முன்பு வேலை பார்த்த பெரியவர்கள் சிலர் சொன்னார்கள்.

 

20 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு மாதம் நீங்க கருத்தெழுதாமல் விட்டால் நீங்களும் புதிய உறுப்பினருக்கு தள்ளப்படுவீர்கள்.

ஓம்.😄
இவரை இப்போதான் முதல் தடவையாக பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் முன்பு வேலை பார்த்த பெரியவர்கள் சிலர் சொன்னார்கள்.

 

அது சரியாக இருக்கலாம். என் என்றால் அந்த நாட்களில் சம்பளம் ஐயாயிரம், பத்தாயிரம்தான். இருந்தாலும் அதட்குள் திருப்தியாக வாழலாம். அப்போதெல்லாம் அந்த வரி பிடிப்புகள் இருக்கவில்லை. 

இப்போது அப்படி இல்லை. சம்பளம் லட்ச்ச கணக்கில் எடுத்தாலும் ஒன்றுக்கும் உதவாது. ஆனால் அதட்கு வரி வட்டி என்று சூறையாடி விடுவார்கள். அது கடந்த சில காலங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

வங்கிக் கணக்குக்கே Tax No 😩 | Sri Lanka 🇱🇰 New Tax 18% | Rj Chandru Report

 

 

 

இது பதிவு செய்தலுக்கான இ - சேவையின் பழக்கத்தினைப் பெறுவதற்கு ஆரம்பிக்க வேண்டிய இடமாகும்.

இந்த செயல்முறை மேலோட்டாமானது, மனித அல்லது இணையத்தள மூலமான வேறுபட்ட செயல்முறைகளினை நிறைவேற்றுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகின்றது.

விரிவான துரித வழிகாட்டுதல்கள் இலத்திரனியல் சேவைப் பக்கங்கள் அனைத்திற்குமான வழிகாட்டுதல்களை வழங்கும். நீங்கள் ஏற்கனவே செயல்முறைக்குப் பழக்கப்பட்டிருந்து இ-சேவைகளினைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருப்பின், இந்த தெரிவினை தெரிவு செய்க.

http://www.ird.gov.lk/ta/eservices/sitepages/registration.aspx?menuid=180101

Edited by ஏராளன்
வரித்தளம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2023 at 12:38, venkkayam said:

 

 

வணக்கம் சகோதரம்,சகோதரி

உங்களை தமிழில் எப்படி அழைப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

 

வணக்கம் சகோதரம்,சகோதரி

உங்களை தமிழில் எப்படி அழைப்பது?

வெங்காயம்  பிழை என்றால் மன்னியுங்கள் 🙏🙏🙏😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

வெங்காயம்  பிழை என்றால் மன்னியுங்கள் 🙏🙏🙏😂

இதுவே அவரது வாயால் சொன்னால் பிரச்சனையே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2023 at 21:14, ஈழப்பிரியன் said:

இதுவே அவரது வாயால் சொன்னால் பிரச்சனையே இல்லை.

எதுக்கு அவர் சொல்ல வேண்டும்? அதுதான் மிக தெளிவாக வெங்காயம் எண்டு எழுதி இருக்கிறாரே. இலங்கை மக்கள்வெங்காயத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். 😜

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2023 at 19:57, Cruso said:

யார் சொன்னது? அந்த நாள் முதல் 5 % வரை WHT (வித் ஹோல்ட்டிங் டக்ஸ்) பிடித்து வைத்திருக்கிறார்கள். இதைத்தான் இப்போது பத்து தொடக்கம் பதினைந்து என அதிகரிக்க திடடமிடுகிறார்கள். எங்கே எல்லாம் கொள்ளை அடிக்கலாமா அங்கெ எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள். 

வட்டிக்குத்தான் வரி என நினைக்கிறேன்? 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

வட்டிக்குத்தான் வரி என நினைக்கிறேன்? 

இல்லை. சம்பளத்தில் PAYE (Pay As You Earn) Tax கழிக்கப்பட்டிருந்தால் வேறு வரி இல்லை. அப்படி இல்லாவிட்ட்தால் WHT (With Holding Tax) கழிப்பார்கள். நீங்கள் வங்கியில் வைப்பு செய்திருந்தால் மட்டும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். இப்போதைக்கு 5 % WHT என்று வட்டியில் கழிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா மக்கள் முதலில் வருமான வரிக்கும் பெறுமதி சேர் வரிக்கும் இடையேயான வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

மேலும் அரச உத்தியோகத்தர்கள் இதுவரை அனுபவித்த அனுபவிக்கின்ற சலுகைகளை கட்டுரையாளர் மறைத்து விடுகிறார். 

மிக்சர் பகோடா விற்பவர்கள் மழையோ புயலோ என்று வீட்டில் இருந்தால் வருமானம் வராது ஆனால் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் மொத்தமாக வரும். சம்பளத்துடன்  அரச மற்றும் வருடாந்த விடுமுறைகள் வேறு உள்ளன.

முடிதிருத்துனர் அதிகமாக வருமானம் பெறுகிறார்கள் என்றால் நீங்களும் முடி திருத்துனர் ஆகலாமே? உங்கள் சாதியம் அதற்கு வழி விடாது?

எந்த அபிவிருத்தி அடைந்த நாட்டில் எல்லாத்  தொழிலுக்கும் $20 $22 கொடுக்கிறார்கள்?

இங்கு பிரித்தானியாவில் அடிப்படைச் சம்பளம் தற்போது  £ 10.42 அண்ணளவாக $ 13.20. 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஊழியர்கள் முதற் கொண்டு அரசியல் வாதிகள் வரை நாட்டை படு மோசமான நிலைக்கு கொண்டு சென்று விட்டு இன்று முதலைக் கண்ணீர் விட்டு பிரயோசனம் இல்லை.

சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுகை பகுதியில் Departure / Embarkment Card இற்கு பதிலாக Arrival Card இனை பயன்படுத்த வேண்டிய கேவலமான நிலை. Embarkment card முடிந்து விட்டது புதியவை அச்சிட காகிதம் இல்லை என்றார் immigration officer.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த நாட்டிலையும் அரச எண்டு வந்தாலே  எல்லாரும்  பச்சை கள்ளர்கள்.சட்டங்களை மற்றாக்களுக்கு பாவிப்பார்கள். ஆனால் தங்களுக்கு மட்டும்.......🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆம். வருமான வரியை Income Tax (நேர் வரி) நுகர்வோர் தலையில் கட்ட முடியாது, ஆன VAT ஐ நுகர்வோர் தலையில் (நேரில் வரி) கட்டலாம்.

எந்த ஒரு வ‌ருமானமும் பின்வரும் நான்கு வ‌ழிகளில் பெறப்படுகின்றது
1. தொழில் மூல‌ வருமானம் (Employment Incme)
2. வியாபர வருமானம் (Business Income)
3. முதலீட்டு வருமானம் (Capital Gain) 
4. ஏனைய வருமானம் (Others) 

தனியொரு நபர்,  வேலையும் செய்து கொண்டு, வியாபாரம் , முதலீடு போன்றவற்றையும் மேற்கொண்டு வருமானம் உழைக்கலாம். அதற்கேற்ப வருமான மூலதாரத்தை அடிப்ப‌டையாக கொண்டு வரி அறவிடப்படும்.
இதன்போது, Tax Free Allowances, Relief, என்பனவும் கழிக்கபட வேண்டும்.

(to arrive at taxable income)

 

VAT உள்ளும் ,  Standard Rated, Zero Rated, exempted என வகையுண்டு அவயும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
 
இந்த குடிகாரருக்கு alcohol and tobacco tax rate என்ன வென்று தெரியுமா? (40%)

 Advance Personal Income Tax பிடிக்கப்படுகின்றது. பின்பு இவை tax credit காட்டப்படும்
 WHT உம் சில வற்றிற்க்கு இவ்வ்வாறே.

Edited by colomban
"tax credit" - added

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.