Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vat.jpg?resize=650,375&ssl=1

வற் வரி தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!

2024 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20 ஆயிரத்து 467 ரூபாவை VAT செலுத்த வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 9 ஆயிரத்து 941 ரூபாவை VAT வரியாக செலுத்தி வருகின்றது.

இதன்படி, இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய VAT வரித் தொகையானது 105 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு அரசாங்கம் எதிர்பார்க்கும் மறைமுக வரி வருமானம் 2 ஆயிரத்து 740 பில்லியன் ரூபாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1363379

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

409963221_744789267686048_18835069425691

spacer.png

408778539_744236751074633_64831968112559

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

18 வீத வரி விதிப்பதால் சுகாதாரத் துறைக்கு பாரிய நெருக்கடி -GMOA

ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வட் வரியானது சுகாதாரத் துறைக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறையில் பல பொருட்களுக்கு புதிதாக 18 வீத வரி விதிப்பது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் GMOA ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ்கள், மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களான ஊன்றுகோல், செவிப்புலன் கருவிகள் ஆகியவை ஜனவரி முதல் புதிய வரிக்கு உட்பட்டது.

“சுகாதாரத் துறையின் மீது தேவையற்ற பாரம் சுமத்துவதன் மூலம் நோயாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நன்மைகள் தொடர்பில் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. இந்நாட்டின் சுகாதாரத் துறை நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்.

“இறுதியில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், அந்த மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று GMOA தெரிவித்துள்ளது.

வரி அதிகரிப்பு காரணமாக மேலும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என டாக்டர் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/284981

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் பெற்ற நாள் முதல் இந்த நாட்டில் சிங்களம் தான் மட்டுமே வாழனும் ஆளனும் என்ற பேராசையின் விளைவு மதனமுத்தா போல் கன்றையும் கொன்று சட்டியையும் உடைத்து விட்டு கையறு நிலையில் இருக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

சுதந்திரம் பெற்ற நாள் முதல் இந்த நாட்டில் சிங்களம் தான் மட்டுமே வாழனும் ஆளனும் என்ற பேராசையின் விளைவு மதனமுத்தா போல் கன்றையும் கொன்று சட்டியையும் உடைத்து விட்டு கையறு நிலையில் இருக்கிறார்கள் .

உண்மைதான். இருந்தாலும் சிங்களவனுக்கு யுத்தத்தை நாம்தான் வென்றோம் என்று காட்டி இனவாதம் மீண்டும் தூண்டப்படுகின்றது. வெள்ளிக்கிழமை நடந்த அவர்களது மாநாட்டில் யுத்தத்தை வென்றதைத்தான் முன்னிறுத்துகிறார்கள்.

கீழ் மடட , கிராம மக்கள் இன்னும் ராஜபக்சேயை நம்புகிறார்கள். எனவே சிங்களவரின் உண்மையான நிலைப்பாடு வருகிற தேர்தலில்தான் தெரிய வரும். கடந்த மாதம் ஒரு கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. அதில் அவர்களதான் வென்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

ஆம்புலன்ஸ்கள், மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களான ஊன்றுகோல், செவிப்புலன் கருவிகள் ஆகியவை ஜனவரி முதல் புதிய வரிக்கு உட்பட்டது.

https://thinakkural.lk/article/284981

இவை medical equipment / diagnosing equipment கீழ் வருகின்றது. இவை பொதுவாக tax அடிக்கபட வேண்டும். Pharmaceutical items அடிக்கப்ப‌டாது
 
  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2023 at 07:52, தமிழ் சிறி said:

2024 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20 ஆயிரத்து 467 ரூபாவை VAT செலுத்த

ஜேர்மனியில் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடும் போது வரியை குறைக்கிறார்கள்  அல்லது வரி இல்லை  இலங்கையில் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட வரியும் கூடுமா???  பிள்ளைகள் பெறும் வீதம் மேலும் வீழ்ச்சி அடையும்    யாராவது ஊரில் போய் இருக்க விரும்புகிறீர்கள??   

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வரிகளை வசூலிப்பது நியாயமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

உண்மைதான். இருந்தாலும் சிங்களவனுக்கு யுத்தத்தை நாம்தான் வென்றோம் என்று காட்டி இனவாதம் மீண்டும் தூண்டப்படுகின்றது. வெள்ளிக்கிழமை நடந்த அவர்களது மாநாட்டில் யுத்தத்தை வென்றதைத்தான் முன்னிறுத்துகிறார்கள்.

கீழ் மடட , கிராம மக்கள் இன்னும் ராஜபக்சேயை நம்புகிறார்கள். எனவே சிங்களவரின் உண்மையான நிலைப்பாடு வருகிற தேர்தலில்தான் தெரிய வரும். கடந்த மாதம் ஒரு கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. அதில் அவர்களதான் வென்றார்கள். 

நான் முன்பு கூறியது போன்று சாதா சிங்களவர்களை முழங்காலில் நிறுத்தி, அவர்களைக் கொண்டே மகா நாயக்கர்களை விளாசாதவரை இலங்கைக்கு விடிவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kapithan said:

நான் முன்பு கூறியது போன்று சாதா சிங்களவர்களை முழங்காலில் நிறுத்தி, அவர்களைக் கொண்டே மகா நாயக்கர்களை விளாசாதவரை இலங்கைக்கு விடிவில்லை. 

நடக்கிற காரியத்தை கதையுங்கோ.  😂

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

நடக்கிற காரியத்தை கதையுங்கோ.  😂

நடக்கும் என்பார் நடக்காது,

நடாக்காதென்பார் நடந்துவிடும்,..😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நான் முன்பு கூறியது போன்று சாதா சிங்களவர்களை முழங்காலில் நிறுத்தி, அவர்களைக் கொண்டே மகா நாயக்கர்களை விளாசாதவரை இலங்கைக்கு விடிவில்லை. 

1 hour ago, தமிழ் சிறி said:

நடக்கிற காரியத்தை கதையுங்கோ.  

சிங்கள சனம் அதிசய பிறவிகள். கோத்தாவிற்கே  துண்டை காணோம் துணியை காணோம் என ஒட வைத்த சனம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

சிங்கள சனம் அதிசய பிறவிகள். கோத்தாவிற்கே  துண்டை காணோம் துணியை காணோம் என ஒட வைத்த சனம்.😁

ஆனால், ஒரு துண்டு கித்துள் கருப்பட்டியும், கொஞ்சத் தேயிலையும், ஒரு ஈரப்பலாக்காயும் இருந்தால் படுத்துவிடுவாங்கள். அதுதான்  பிரச்சனை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.