Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!

2048599323.jpg

எதிர்வரும் தைப்பொங்கலின் பின்னர் நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையிலான சரக்குக் கப்பற்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 இந்தக் கப்பற்சேவைக்கான வளநிலைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் (28)நேற்று இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து வர்த்தகப் பரிமாற்றத்துக்காக டொலரைப் பயன்படுத்தல், இந்தியாவில் இருந்து சில பொருள்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்தல், சுங்கம் சாதகமான பதிலை வழங்கினால் இந்திய ரூபாவில் வர்த்தம் செய்தல், முதலீட்டாளரின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மண்ணெண்ணெய் இறக்குமதிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தல் தமிழ் மக்கள் நெருக்கடிகள் இல்லாமல் வாழ்வதற்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வர்த்தகர் ஒருவர் இறக்குமதிக்கான கோரலை வழங்கியுள்ளார். 
கோரல்களைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடலில், யாழ். இந்தியத் துணைத்தூது வராலய அதிகாரி மனோஜ்குமார், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்டச்செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்.மாவட்ட வர்த்தகர்கள், மறவன்புலவு சச்சிதானந்தன், சிவசேனை அமைப்பினர், இந்திய, இலங்கை வங்கிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
https://newuthayan.com/article/நாகபட்டினம்_-_காங்கேசன்துறை_சரக்குக்_கப்பற்சேவை_விரைவில்!

  • கருத்துக்கள உறவுகள்

Fx_lcsdXwAEsbz3.jpg:large

101´வது  முறையாக மீண்டும் கப்பல் சேவை  பொங்கலுக்கு ஆரம்பிக்கப் போகின்றது.
சம்பந்தன் ஐயாவின் பொங்கல் தீர்வுடன் இதுகும் வருவது  சந்தோசம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

Fx_lcsdXwAEsbz3.jpg:large

101´வது  முறையாக மீண்டும் கப்பல் சேவை  பொங்கலுக்கு ஆரம்பிக்கப் போகின்றது.
சம்பந்தன் ஐயாவின் பொங்கல் தீர்வுடன் இதுகும் வருவது  சந்தோசம். 😂

அண்ணை அது தீபாவளி எல்லோ?!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

அண்ணை அது தீபாவளி எல்லோ?!

ஆரம்பத்தில்.... தீபாவளி, பொங்கல், சித்திரை புதுவருச தீர்வு என்று...
உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தவர்.
அவர் மறந்தாலும்.... நான் மறக்கவில்லை.
வேணுமெண்டால்... @goshan_cheகேட்டுப் பாருங்கோ. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆரம்பத்தில்.... தீபாவளி, பொங்கல், சித்திரை புதுவருச தீர்வு என்று...
உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தவர்.
அவர் மறந்தாலும்.... நான் மறக்கவில்லை.
வேணுமெண்டால்... @goshan_cheகேட்டுப் பாருங்கோ. 😂

என்ன லந்தா 🤣

நான் இப்ப ரணிலின் மார்ச் தீர்வுக்கு வெயிட்டிங்.

மார்ச்சில் தீர்வு, சித்திரையில் சரக்கு கப்பலில் வரும் சரக்கை அடித்து விட்டு…

சந்தோசமாக மட்டையாகி விடும் உத்தேசம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

என்ன லந்தா 🤣

நான் இப்ப ரணிலின் மார்ச் தீர்வுக்கு வெயிட்டிங்.

மார்ச்சில் தீர்வு, சித்திரையில் சரக்கு கப்பலில் வரும் சரக்கை அடித்து விட்டு…

சந்தோசமாக மட்டையாகி விடும் உத்தேசம்🤣

animiertes-flugzeug-bild-0083.gif

தீர்வு வரும் போலைதான்  கிடக்கு.
இங்கு எல்லாத்தையும்... விட்டுட்டு, ஊருக்கு குடும்பத்தோடை  One way ticket போடப் போறேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என்ன லந்தா 🤣

நான் இப்ப ரணிலின் மார்ச் தீர்வுக்கு வெயிட்டிங்.

மார்ச்சில் தீர்வு, சித்திரையில் சரக்கு கப்பலில் வரும் சரக்கை அடித்து விட்டு…

சந்தோசமாக மட்டையாகி விடும் உத்தேசம்🤣

சும்மா சரக்கை அடித்துவிட்டு குப்புற படுக்க முடியாது.

அடுத்தடுத்து தேர்தல்கள் வரும்.

வாக்குகள் கள்ளவாக்குகள் எல்லாம் போட தயாராகணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது.விரைவில் நடக்க வேணும.

  • கருத்துக்கள உறவுகள்

நாகபட்டினம் / காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவைக்கு என்ன நடந்தது.
இப்போது சரக்கு கப்பல் வரும் என்றால் மக்களும் அதில்தான் பயணிக்கவேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

நல்லது.விரைவில் நடக்க வேணும.

நீங்கள் இப்படியான திரிகளில், இப்படி எழுதத்தொடங்கி 14 வருடம் ஆகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vanangaamudi said:

நாகபட்டினம் / காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவைக்கு என்ன நடந்தது.

பயணிகள் இல்லாதமையால் வாரம் 3 நாளாக குறைந்தது. இப்போ என்ன நிலையோ தெரியாது.

என்னதான் நல்ல எண்ணம் இருந்தாலும் வர்த்தக சாத்தியப்பாடு  commercial viability இல்லாவிட்டால் இழுத்து மூடவேண்டியே வரும்.

கப்பல் போக்கு வரத்து எனில் பயணிகள்+அவர்களின் வாகனங்கள், இலகு, கனரக வாகனங்கள், சரக்கு கெண்டெயினர்கள் போன்றனவற்றை சென்னை-காங்கேசந்துறை/தலைமன்னார்-தூத்துகுடி வழியில் நடத்தினால் மட்டுமே இலாபம் வரும் என நினைக்கிறேன். 

அதற்கும் கூட, இந்திய நம்பர் பிளேட்டுடன் இலங்கையிலும், இலங்கை நம்பர் பிளேட்டுடன் இந்தியாவிலும் தற்காலிகமாக வாகனம் ஓட கூடியவர் சட்ட மாறுதலை செய்ய வேண்டும்.

இப்போதைக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து மட்டுமே சாத்தியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, கிருபன் said:

நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!

இல்லை....நான் தெரியாமல் தான் கேக்கிறன். இந்த கப்பல் ஓட வேண்டிய அவசியம் ஏன்? தினசரி போக்குவரத்துக்கு ஒரு 200 பேர் வருவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

ஆரம்பத்தில்.... தீபாவளி, பொங்கல், சித்திரை புதுவருச தீர்வு என்று...
உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தவர்.
அவர் மறந்தாலும்.... நான் மறக்கவில்லை.
வேணுமெண்டால்... @goshan_cheகேட்டுப் பாருங்கோ. 😂

உங்கன்ட வயசுக்காரங்கள்  எல்லாரிடமும் கேட்கலாம்...தமிழ்சிறி சொல்வதை நான் முற்று முழுதாக ஆமோதிக்கிறேன்

8 hours ago, குமாரசாமி said:

இல்லை....நான் தெரியாமல் தான் கேக்கிறன். இந்த கப்பல் ஓட வேண்டிய அவசியம் ஏன்? தினசரி போக்குவரத்துக்கு ஒரு 200 பேர் வருவார்களா?

ண்ணே உது சரக்கு(சாமான் கப்பல்) ....நாங்கள் பாடசாலையில் படிக்கும் பொழுது சொல்லும் சர,,,அல்ல‌

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

பயணிகள் இல்லாதமையால் வாரம் 3 நாளாக குறைந்தது. இப்போ என்ன நிலையோ தெரியாது.

என்னதான் நல்ல எண்ணம் இருந்தாலும் வர்த்தக சாத்தியப்பாடு  commercial viability இல்லாவிட்டால் இழுத்து மூடவேண்டியே வரும்.

கப்பல் போக்கு வரத்து எனில் பயணிகள்+அவர்களின் வாகனங்கள், இலகு, கனரக வாகனங்கள், சரக்கு கெண்டெயினர்கள் போன்றனவற்றை சென்னை-காங்கேசந்துறை/தலைமன்னார்-தூத்துகுடி வழியில் நடத்தினால் மட்டுமே இலாபம் வரும் என நினைக்கிறேன். 

அதற்கும் கூட, இந்திய நம்பர் பிளேட்டுடன் இலங்கையிலும், இலங்கை நம்பர் பிளேட்டுடன் இந்தியாவிலும் தற்காலிகமாக வாகனம் ஓட கூடியவர் சட்ட மாறுதலை செய்ய வேண்டும்.

இப்போதைக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து மட்டுமே சாத்தியம்.

புலம் பெயர் தமிழர்களின் பணத்தை இந்தியா,மற்றும் இலங்கை யின் பொருளாதரத்தை வளர்ச்சியடைய  செய்யும் சித்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்று...
1) கோவிலை கட்டி அதற்கு கருங்கல்,மற்றும் ஏனைய தளபாடங்களை நேரடியாக யாழில் இறக்குமதி செய்தல்
2)மக்கள் இல்லாத ஊரில் பெரிய கோவிலை கட்டுதல் 
3)தென்னிந்திய இசை கலைஞர்களை பலாலிக்கு நேரடியாக அழைத்தல் இந்திய விமான சேவை
4)மைக்,மற்றும் ஏனைய தொழில்நுட்ப சாதனங்கள்,தொழில்நுட்பவியலாளர்களை அனுப்புதல்

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது நடக்கிற காரியமாய் கதைக்கலாம்.........மிதக்கிறது, மூழ்கிறது ஒன்றும் நடக்காது......!  😴

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

ஏதாவது நடக்கிற காரியமாய் கதைக்கலாம்.........மிதக்கிறது, மூழ்கிறது ஒன்றும் நடக்காது......!  😴

கடுதாசியில் இருக்கிற 13 ஆம் திருத்த சட்டத்தையே 25 வருசமாகியும்  அமுல்படுத்த வக்கில்லை இதில‌ 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

கடுதாசியில் இருக்கிற 13 ஆம் திருத்த சட்டத்தையே 25 வருசமாகியும்  அமுல்படுத்த வக்கில்லை இதில‌ 

இப்படி எல்லாம் முழுதும் கோணலாக நினைக்கப்படாது.

பார்கேல்லையோ….13 மைனஸ்…மைனஸ்..மைனஸ் ….அட அதுதான் இமாயலப்பேய்க்காட்டல்….

மார்ச்மாதம் 2024 க்கு பின்….வழுக்கையாற்றில் பாலும் தேனும் ஓடப்போது…..

ரிக்கெட் போட ரெடியாகுங்கோ….

Raw1 என்ற டிஸ்கவுட்ன் கோர்ட்டை பாவித்தால், கனடாவில் இருந்து புக் பண்ணும் ஆக்களுக்கு 100% விலை கழிவு🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2023 at 10:36, goshan_che said:

இப்படி எல்லாம் முழுதும் கோணலாக நினைக்கப்படாது.

பார்கேல்லையோ….13 மைனஸ்…மைனஸ்..மைனஸ் ….அட அதுதான் இமாயலப்பேய்க்காட்டல்….

மார்ச்மாதம் 2024 க்கு பின்….வழுக்கையாற்றில் பாலும் தேனும் ஓடப்போது…..

ரிக்கெட் போட ரெடியாகுங்கோ….

Raw1 என்ற டிஸ்கவுட்ன் கோர்ட்டை பாவித்தால், கனடாவில் இருந்து புக் பண்ணும் ஆக்களுக்கு 100% விலை கழிவு🤣

நல்ல முடியுடன்(தலைமயிருடன்) வந்த பலர் இப்ப முடி இழந்து வழுக்கை மண்டையுடன் இருக்கினம் ...போய் வழுக்கை ஆற்றில ஒடும் பாலையும் தேனையும் தடவலாம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.