Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN  01 JAN, 2024 | 09:17 AM

image
 
செங்கடல் பகுதியில் சரக்குகப்பலொன்றை கைப்பற்ற முயன்ற ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள்  தாக்குதலை மேற்கொண்டு அவற்றை அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சரக்கு கப்பலொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்டவாறு ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் நான்கு படகுகள்  அந்த கப்பலை கைப்பற்ற முயன்றன கப்பலிற்கு அருகில் நெருங்கிசென்றன என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அவசர அழைப்பை செவிமடுத்த அமெரிக்க போர்க்கப்பல்களில் இருந்து ஹெலிக்கொப்டர்கள் உதவிக்கு விரைந்தன மூன்று படகுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது மூன்று படகுகள் மூழ்கடிக்கப்பட்டன அவற்றிலிருந்தவர்கள் கொல்லப்பட்டனர் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

நான்காவது படகு தப்பிச்சென்றுவிட்டது என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை தங்களின் எச்சரிக்கையை குறிப்பிட்ட வர்த்தக கப்பல் செவிமடுக்க மறுத்தது என தெரிவித்துள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களின் அமைப்பை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம்முதல் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்களைமேற்கொண்டு வருகின்றனர் -இதுவரையில் 100க்கும் மேற்பட்டஆளில்லா விமானதாக்குதல்களையும் ஏவுகணை தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/172851

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கைஅரசும் போர்க்கப்பலை செங்கடல் பகுதிக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுப்பி வைத்துள்ளது. அநேகமாக ஹுதிகளுக்கு இது பிரச்சினையை உருவாக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செங்கடலில் தொடரும் ஹவுதி தாக்குதல் – 21 ஏவுகணைகளை வீழ்த்திய அமெரிக்கா

Digital News Team

மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கட்டார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள்.

செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் “ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்” (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.

Capture-6.jpg

இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.

இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.

ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

“டெஸ்ட்ராயர்” (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

https://thinakkural.lk/article/287700

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செங்கடல் பகுதியில் கப்பல்களை நோக்கி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கடும் ஏவுகணை ஆளில்லா விமான தாக்குதல்கள்

Published By: RAJEEBAN   10 JAN, 2024 | 12:48 PM

image
 
செங்கடல் பகுதியில் கப்பல்களை நோக்கி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பெருமளவு ஏவுகணை தாக்குதல்களைமேற்கொண்டனர் எனவும் இதனை தொடர்ந்து அமெரிக்காவும் பிரிட்டனும் பல ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர்  எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழப்பு மற்றும்காயங்கள் குறித்த தகவல்களை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யேமனின் துறைமுகநகரங்களான ஹெடெய்டா மொக்கா துறைமுக நகரங்களிலேயே இந்த  தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என தனியார் பாதுகாப்பு அமைப்பான அம்பிரேய் தெரிவித்துள்ளது.

ஹெடெய்டா சம்பவத்தில் கப்பல்கள் ஏவுகணைகள்  ஆளில்லா விமான கப்பல்களை பார்ப்பதை  அறிவித்துள்ளன.

மொக்காவில் கப்பல்கள்  ஏவுகணைகள் ஏவப்படுவதையும் ஆளில்லா விமானங்கள் தாக்குவதையும் அவற்றின் பின்னால் சிறிய படகுகள் காணப்படுவதையும் ; கப்பல்கள் பார்த்துள்ளன.

குண்டுகளுடன் ஆளில்லா விமானங்களையும் குருஸ் ஏவுகணைகளையும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றையும்பயன்படுத்தி தாக்குதல்கள் இடம்பெற்றன என அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம்தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/173593

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, ஏராளன் said:

மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

“டெஸ்ட்ராயர்” (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

டெஸ்ட்ராயர்,  எப் 18 சூப்பர் ஹார்னெட் என்று கலக்கும் அமெரிக்கனுடன் , 5 இத்துப்போன சீனத்து மிக் சங்டுக்களை அதுவும் கப்பலில் ஏற்றி இறக்க முடியாத இறதல், மற்றும் இந்தியனின் பிச்சை கப்பலையும் வைத்துக்கொண்டு ஆசியாவின் பிச்சைக்காரன் போடும் போட்டி   இருக்கே வேற லெவல் 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, nunavilan said:

Iran seizes oil tanker off Oman in dispute with US

இதுதான் அரச பயங்கரவாதம். இரான் அழிக்கப்படடால் உலக அமைதி திரும்பும். 

Posted
27 minutes ago, Cruso said:

இதுதான் அரச பயங்கரவாதம். இரான் அழிக்கப்படடால் உலக அமைதி திரும்பும். 

ஈரான் போரில் ஈடுபட முன்பு உலக அமைதி இருந்ததா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nunavilan said:

ஈரான் போரில் ஈடுபட முன்பு உலக அமைதி இருந்ததா??

இரண்டாம் உலக போருக்கு பின்னர் இப்போது இருந்தது போல் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Cruso said:

இரண்டாம் உலக போருக்கு பின்னர் இப்போது இருந்தது போல் இல்லை. 

வியடனமில் ஈரான் நேபாம் குண்டுகளை மக்கள் மீது வீசிய காலத்துக்கு முன்பா பின்பா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, Cruso said:

இதுதான் அரச பயங்கரவாதம். இரான் அழிக்கப்படடால் உலக அமைதி திரும்பும். 

எப்படி? 

விளக்க முடியுமா? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Maruthankerny said:

வியடனமில் ஈரான் நேபாம் குண்டுகளை மக்கள் மீது வீசிய காலத்துக்கு முன்பா பின்பா? 

அவர்களிடம்தான் கேட்க வேண்டும் 

Just now, Kapithan said:

எப்படி? 

விளக்க முடியுமா? 

😏

ஆதாரம் விளக்கம் எல்லாம் கேட்க கூடாது 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Cruso said:

இரண்டாம் உலக போருக்கு பின்னர் இப்போது இருந்தது போல் இல்லை. 

Just now, Cruso said:

அவர்களிடம்தான் கேட்க வேண்டும் 

நீங்கள் எழுதியதை யாரிடம் கேட்க வேண்டும் ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Maruthankerny said:

நீங்கள் எழுதியதை யாரிடம் கேட்க வேண்டும் ? 

நான் ஏன் எழுதினேன் என்பதை முதலில் இருந்து பாருங்கள். இதெல்லாம் தெரியாமல் இருக்கிறீர்களே? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Cruso said:

அவர்களிடம்தான் கேட்க வேண்டும் 

ஆதாரம் விளக்கம் எல்லாம் கேட்க கூடாது 😂

U.S. Seized Iranian Oil Over Smuggling Incident That Escalated Tensions in Gulf

The apprehension of the ship, the Suez Rajan, came after a group opposed to Iran raised accusations of sanctions violations last year.

  • Share full article
  • Read in app  
 
In a low-resolution aerial photo, a large orange ship is seen alongside a smaller blue-green one. The advocacy group United Against Nuclear Iran said this satellite image shows the Virgo, left, and the M/T Suez Rajan in the South China Sea. At the time the image was taken, the Virgo reported a false location of about eight miles away. Credit...Planet Labs, via Associated Press

In a low-resolution aerial photo, a large orange ship is seen alongside a smaller blue-green one.

Charlie SavageRonen Bergman

By Charlie Savage and Ronen Bergman

Charlie Savage reported from Washington, and Ronen Bergman from Tel Aviv.

Sept. 6, 2023
Sign up for Your Places: Extreme Weather.  Get notified about extreme weather before it happens with custom alerts for places in the U.S. you choose. Get it sent to your inbox.

The United States government has seized nearly one million barrels of Iranian crude oil that it says was being smuggled to China in violation of U.S. sanctions against Iran, after it raised the threat of prosecution to get the tanker brought to American waters, newly unsealed court papers show.

The seizure of the oil from the vessel, the M/T Suez Rajan, is part of a larger and shadowy conflict with Iran. After the tanker began to steam toward the United States last spring, Iran’s Revolutionary Guards C

https://www.nytimes.com/2023/09/06/us/politics/iran-oil-sanctions-violations.html

இதைத்தான் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்பது. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kapithan said:

U.S. Seized Iranian Oil Over Smuggling Incident That Escalated Tensions in Gulf

The apprehension of the ship, the Suez Rajan, came after a group opposed to Iran raised accusations of sanctions violations last year.

  • Share full article
  •  
  •  
  • Read in app  
 
In a low-resolution aerial photo, a large orange ship is seen alongside a smaller blue-green one. The advocacy group United Against Nuclear Iran said this satellite image shows the Virgo, left, and the M/T Suez Rajan in the South China Sea. At the time the image was taken, the Virgo reported a false location of about eight miles away. Credit...Planet Labs, via Associated Press

In a low-resolution aerial photo, a large orange ship is seen alongside a smaller blue-green one.

Charlie SavageRonen Bergman

By Charlie Savage and Ronen Bergman

Charlie Savage reported from Washington, and Ronen Bergman from Tel Aviv.

Sept. 6, 2023
Sign up for Your Places: Extreme Weather.  Get notified about extreme weather before it happens with custom alerts for places in the U.S. you choose. Get it sent to your inbox.

The United States government has seized nearly one million barrels of Iranian crude oil that it says was being smuggled to China in violation of U.S. sanctions against Iran, after it raised the threat of prosecution to get the tanker brought to American waters, newly unsealed court papers show.

The seizure of the oil from the vessel, the M/T Suez Rajan, is part of a larger and shadowy conflict with Iran. After the tanker began to steam toward the United States last spring, Iran’s Revolutionary Guards C

https://www.nytimes.com/2023/09/06/us/politics/iran-oil-sanctions-violations.html

இதைத்தான் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்பது. 

🤣

எனக்கு ஆங்கிலம் தெரியாது. தயவு செய்து மொழி பெயர்த்து தரவும். கண்ணுக்கு கண் , பல்லுக்கு  பல் , காலுக்கு கால், கைக்கு கை, வேறே எதுவும் .................😂😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Cruso said:

எனக்கு ஆங்கிலம் தெரியாது. தயவு செய்து மொழி பெயர்த்து தரவும். கண்ணுக்கு கண் , பல்லுக்கு  பல் , காலுக்கு கால், கைக்கு கை, வேறே எதுவும் .................😂😜

பூனை கண்களை  மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டதாக அர்த்தம் இல்லை.

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kapithan said:

பூனை கண்களை  மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டதாக அர்த்தம் இல்லை.

😏

நான் சொல்லவில்லை. யார் சொன்னது ? 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முக்கியமான சர்வதேசக் கடற்பாதையினை முடக்கி, அப்பாதையினூடாக வரும் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியும், கடத்தியும் வந்த யெமெனின் ஹூத்திக் கிளர்ச்சிக்காரர்கள் மீது அமெரிக்காவும், இங்கிலாந்து ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல்களை  நடத்தியிருக்கின்றன.

சர்வதேச வணிகக் கப்பல்களைத் தாக்குவதன் மூலம் பாலஸ்த்தினர்களின் மரணத்திற்குப் பழிவாங்குகிறோம், இஸ்ரேலினைத் தாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு பலமுறை இப்பாதையினைப் பயன்படுத்திய சர்வதேச வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மூலமும், ஆளில்லா வானூர்திகள் மூலமும், கடற்படைப் படகுகள் மூலமும், உலங்குவானூர்திகள் மூலம் தரையிறங்கியும் ஈரானின் முழு ஆதரவு பெற்ற ஹூத்திக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். இத்தாக்குதல்களை நிறுத்துங்கள் என்று பலமுறை கேட்டுக்கொள்ளப்பட்டபோதும், "இஸ்ரேலுக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பல்களே இவ்வழியால் பயணிக்கின்றன, ஆகவே நாம் தாக்குவோம். எம்மீது அமெரிக்காவோ அல்லது வேறு யாராவதோ தாக்கினால், அவர்கள் மீது நாம் நடத்தும் தாக்குதல் அவர்கள் கனவில் கூட நினைக்க முடியாதளவிற்கு பயங்கரமானதாக இருக்கும்" என்று தமது தாக்குதல்களை நடத்திவிட்டு அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

அந்த நிலையிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. 

US and UK carry out strikes against Iran-backed Houthis in Yemen | CNN Politics

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, ரஞ்சித் said:

இஸ்ரேலை தாக்குகிறோம் எண்டு கூறிக்கொண்டு ஹூத்தி பயங்கரவாதிகள் சர்வதேச போக்குவரத்து கடடமைப்பை தாக்குவது எவ்வளவு மூடத்தனமான செய்கை. இன்று அதிகாலை அதட்கான பதில்கள் அந்த பயங்கரவாதிகளுக்கு கிடைத்தாலும் அதன் அர்த்தம் அவர்களுக்குவிளங்கி இருக்குமோ தெரியவில்லை.

அவர்கள் கூறியபடி கனவிலும் நினைத்துக்கூட முடியாத பயங்கரவாத பதில் தாக்குதல் என்னவென்று பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

houthis.jpg?resize=750,375&ssl=1

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பல நாடுகள் தாக்குதல்!

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை குறிவைத்து பல நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளன.

குறித்த தாக்குதல் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளபப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்மைக்காலமாக செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வரும் பின்னனியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1365798

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்க பிரிட்டன் தாக்குதல்

Published By: RAJEEBAN   12 JAN, 2024 | 08:26 AM

image
 
யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

செங்கடல் பகுதியில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக  அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

அமெரிக்க போர்க்கப்பல்கள் குரூஸ் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டன அமெரிக்க விமானங்கள் 12 இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொண்டன என தகவல்கள் வெளியாகின்றன.

யேமனின் தலைநகர் சனா ஹெளத்திகளின் கோட்டையான செங்கடல் நகரம் குடாய்டா ஆகியவற்றின் மீதே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சைப்பிரசில் உள்ள தளத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டனின் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

அவுஸ்திரேலியா கனடா பஹ்ரைன் நெதர்லாந்து உட்பட பல நாடுகள் ஆதரவை வழங்கியுள்ளன.

https://www.virakesari.lk/article/173743

அவர்கள் வயிற்றில் சொருகி உள்ள கத்தியை அமெரிக்கா, பிரிட்டன் கவனிக்கவில்லைபோலும். இனி அவர்களுக்கு கத்தி குத்துதான்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செங்கடல் ஊடாக பயணிக்கும் சீன ரஸ்ய கப்பல்களிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

Published By: RAJEEBAN   19 JAN, 2024 | 11:46 AM

image

செங்கடல் ஊடாக சீன, ரஸ்ய கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம் அந்த நாட்டு கப்பல்களை தாக்கப்போவதில்லை என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக சரக்கு கப்பல்களை தாக்கிவரும் நிலையிலேயே சீன ரஸ்ய கப்பல்கள் தாக்கப்படாது என்ற உத்தரவாதம் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் உட்பட சில நாடுகளுடன் தொடர்புபட்ட கப்பல்களை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்களிற்கு ஆபத்தில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா, சீனா உட்பட ஏனைய நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் பயணிப்பதால் ஆபத்து ஏதுவும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/174310

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது மீண்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் - கடும் எச்சரிக்கை

Published By: RAJEEBAN   23 JAN, 2024 | 11:02 AM

image

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்குவைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலத்தடி சேமிப்பகங்கள் அவர்களின் ஏவுகணை மற்றும் கண்காணிப்பு நிலைகள் மீது எட்டுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அவசியமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக கூட்டறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

செங்கடலில் பதற்றத்தை தணித்து  இயல்புநிலையை உருவாக்குவதே எங்களின் நோக்கம் உலகின் மிகவும் முக்கியமான நீர்நிலையில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் உயிர்களையும் சுதந்திரமாக வர்த்தகம் நடைபெறுவதையும் பாதுகாக்க நாங்கள் தயங்கமாட்டோம் என்ற எங்களின் எச்சரிக்கையை ஹெளத்தி தலைமைத்துவத்திற்கு மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றோம் என அமெரிக்காவும் பிரிட்னும் தெரிவித்துள்ளன.

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள எட்டாவது தாக்குதல் இது .பிரிட்டனுடன் இணைந்து மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுஎஸ்எஸ் ஐஸ்னோவரிலிருந்து சென்ற விமானங்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

https://www.virakesari.lk/article/174589

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
    • சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து  எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை.  பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால்  நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.