Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூயார்க்: ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’, ஜெஃப்ரி எப்ஸ்டீன்... உலகம் முழுவதும் பரபரப்பான பேசுபொருளாக இவை மாறியுள்ளன. யார் இந்த ஜெஃப்ரி எஸ்டீன்? அது என்ன ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற ஆவல் பலர் மத்தியிலும் பரவியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் பரபரப்பாக அடிபட்ட நபர். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் அந்த வழக்குகள் கைவிடப்பட்டன. அவர் தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் அறிந்துகொண்ட தகவல்களும் சீலிடப்பட்டு வைக்கப்பட்டன. அந்த வழக்கில் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிப்பட்டது அதற்கு ஒரு காரணம்.

ஆனால், அண்மையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண நீதிபதியான லொரட்டா ப்ரெஸ்கே ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். “இனியும் அந்த வழக்கு விசாரணையில் இடம்பெற்ற முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் தொடர்பாக ரகசியம் காக்க வேண்டிய அவசியமில்லை. ஜனவரி 1-க்குப் பின்னர் படிப்படியாக விசாரணை விவரங்களை வெளியிடலாம்” என்றார். ஏனெனில், இந்த விசாரணை விவரத்தில் பிரின்ஸ் ஆண்ட்ரூ முதல் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரை பலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளதால் ‘ஜெஃப்ரி லீக்ஸ்’ பரபரப்பாகப் பேசப்படுகிறது.

பிரச்சினையின் பின்னணி: கடந்த 2015-ஆம் ஆண்டு வர்ஜீனியா கிஃபர் என்ற அமெரிக்க பெண், பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் தொழில் இடைத்தரகருடன் சேர்ந்து கிஷ்லெய்ன் பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். தானும் அவ்வாறாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், 1999 முதல் 2022 வரை பாலுறவில் ஈடுபடும் வயதை எட்டாத தன்னை பலருடனும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார் அவர் மீதான வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோது 2019 ஆகஸ்டில் அவர் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், தற்போது இந்நாள், முன்னாள் பிரபலங்களை கலக்கம் கொள்ளச் செய்யும் வகையில் நீதிபதி உத்தரவு லீக்காகும் தகவல்களும் அமைந்துள்ளன.

எப்ஸ்டீன் - பில் கிளின்டன் தொடர்பு: நீதிமன்ற ஆவணங்களில் பில் கிளின்டன் "Doe 36" என்று ரகசிய குறியீட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளார். அந்த ரகசியக் குறியீடு 50 முறை ஆவணத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. வழக்கு தொடர்ந்த வர்ஜினியா, தான் பில் கிளின்டனை ஒரு தீவில் இரண்டு முறை பார்த்திருப்பதாகவும் அப்போது அவருடன் இளம் பெண்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார். அந்தத் தீவு எப்ஸ்டீனுக்கு சொந்தமானது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முன்னரே கிளின்டன் தரப்பு பலமுறை மறுத்துள்ளது. அது தொடர்பாக நடந்த விசாரணையில் பில் கிளின்டனின் விமானப் பயண ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. அப்போது, அவர் எப்ஸ்டீனின் விமானத்தைப் பயன்படுத்தி பாரிஸ், பாங்காக், ப்ரூனே ஆகிய இடங்களுக்குச் சென்றது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பயணங்களை அதிபர் பதவிக்காலத்துக்குப் பின்னர் கிளின்டன் மேற்கொண்டுள்ளார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி ஜொஹான ஸ்ஜோபெர்க் என்ற பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணும் கிளின்டன் சர்ச்சையை உறுதிப்படுத்தும் வகையில் சாட்சியம் கூறியுள்ளார். எப்ஸ்டீன் என்னிடம், “கிளின்டனுக்கு உங்களைப் போன்ற இளம் பெண்களையே பிடிக்கும் என்று கூறினார்” என சாட்சியம் கூறியிருக்கிறார். கிளின்டன் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையைச் சேர்ந்த 22 வயது பணிப் பெண்ணுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டதாக சர்ச்சையில் சிக்கியது நினைவுகூரத்தக்கது.

ஸ்டீபன் ஹாக்கிங் - ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு: 2015-ல் வர்ஜினியா கிஃபரின் வழக்கையடுத்து எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கிஷ்லெயின் மேக்ஸ்வெல்லுக்கு எப்ஸ்டீன் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், “ஸ்டீபன் ஹாக்கிங் பாலுறவுக்கான வயதை எட்டாத பெண்களுடன் உறவு கொண்டார் என்று வெர்ஜினியா கூறுவது பொய் என்று சொல்ல முன்வரும் அவரது நண்பர்கள், குடும்பத்தினர், தெரிந்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு பெரும் தொகையை சன்மானமாக வழங்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இளவரசர் ஆண்ட்ரூவும்.. - இந்த பாலியல் குற்றச்சாட்டு வரிசையில் இடம்பெற்றுள்ள இன்னொரு பெரும்புள்ளி இளவரசர் ஆண்ட்ரூ. ராணி எலிச்பெத்தின் மகன்களில் ஒருவரான இளவரசர் ஆண்ட்ரூ, சட்டரீதியான வயதுக்கு கீழே இருந்த அமெரிக்கப் பெண் வர்ஜீனியாவுடன் பலவந்தமாக பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என்று நீதிமன்ற ஆவணங்களில் உள்ளது.

இளவரசர் முறையற்ற வகையில் நடந்து கொண்டார் எனக் கூறும் வகையிலான இந்தக் கூற்றுகள் முற்றாக உண்மைக்கு புறம்பானவை என்று நீண்ட காலமாக பக்கிங்ஹாம் அரண்மனையும் மறுத்து வருகிறது. இருப்பினும், இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் நன்பர் ஜெஃப்ரி எப்ஸ்டைன் என்பது கவனிக்கத்தக்கது. எப்ஸ்டைனால், அவருடன் இருந்த இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு தான் நிர்பந்திக்கப்பட்டதாக வர்ஜீனியா கூறியிருக்கிறார்.

இவர்களைத் தவிர ஆல்ஃபபெட் இங்க் (Alphabet Inc) என்ற கூகுள் நிறுவனத்தின் தாய்க்கழகத்தின் இணை நிறுவருமான லாரி பேஜ் மீதும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பு பற்றி நீதிமன்ற ஆவணங்களில் இருக்கிறது. நோபல் பரிசு புகழ் லாரன்ஸ் க்ராஸ், மறைந்த பாப் கிங் மைக்கேல் ஜாக்சன், மேஜிக் கலைஞர் டேவிட் காப்பர்ஃபீல்டு, காமெடி நடிகர் கிறிஸ் டக்கர், நடிகர் கெவின் ஸ்பேசி ஆகியோரும் ஜெஃப்ரியின் வர்ஜின் தீவுகளில் நடந்த பாலியல் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

எப்ஸ்டீனின் வர்ஜின் தீவுகளில் நடந்த சிறுமிகள், இளம் பெண்களுடனான பார்ட்டி கொண்டாட்டங்களில் பில் கிளின்டன், ஸ்டீபன் ஹாக்கிங் உள்பட இத்தனை பெரும்புள்ளிகளும் ஈடுபட்டனரா என்ற வாத விவாதங்கள் இந்த ‘ஜெஃப்ரி லீக்ஸ்’ ஆவணங்களால் வலுத்துள்ளது.

Epstein Files | பில் கிளின்டன் முதல் இளவரசர் ஆண்ட்ரூ வரை - பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்! | Bill Clinton, Donald Trump, Stephen Hawking: Who Are Named In Epstein Files - hindutamil.in

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல தலைகள் உருளுகின்றது....ஜனநாயகம் எனும் பெயரில் உருட்டும் தலைகள் உடையட்டும்.

GDAHRWeW8AIM7fi?format=jpg&name=small

GDBCuVQXcAE8nwB?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

பல தலைகள் உருளுகின்றது....ஜனநாயகம் எனும் பெயரில் உருட்டும் தலைகள் உடையட்டும்.

23-649d34b2d55ef.webp

spacer.png

தமிழ்நாட்டின் திராவிட பாரம்பரியத்தில் கூட..
கருணாநிதி முதல் இன்பநிதி வரை...  இப்படியான கசமுசாக்கள் சர்வ சாதாரணமாக நடப்பதுண்டு.
திராவிட  அரசியலுக்கு அதுகும் பெருமை சேர்க்கும் விடயம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடப் புள்ளிகளுக்கு இதையெல்லாம் போட்டோ எடுத்துப் போடுகிற துணிவாவது இருக்கும்..! அது இல்லாதோர் "பொலிசு, வழக்கு" என்று வந்ததும் மனைவியைக் கூட்டிக் கொண்டு போகும் "பம்மல்" பேர்வழிகளாக அல்லவா இருக்கீனம்😎?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2024 at 20:02, பிழம்பு said:

 பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்!

இப்படியான கசமுசாக்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் செய்து பம்மினது நினைவுக்கு வருகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காமம் ,உடலுறவு என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாததும் முக்கியமானதும் கூட....
ஆனால்  வயது குறைந்தவர்களுடனும், பலாத்கார பாலியல் வைத்ததாகவும்,சம்மதம் இல்லாமலும் உடலுறவு வைத்ததாகவுமே செய்திகளின் சாரம்சம்....

இருப்பினும்...
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் அடுத்தவர் சம்மதமின்றி பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக எங்கும் செய்திகள் வரவில்லை.

கொஞ்சம் பொறுங்கள் தலைவர் ரஜனி-ரம்பா விடயம் புகைகின்றது..அதை அமுக்காமல் எரிய விட்டால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்நாட்டின் திராவிட பாரம்பரியத்தில் கூட..
கருணாநிதி முதல் இன்பநிதி வரை...  இப்படியான கசமுசாக்கள் சர்வ சாதாரணமாக நடப்பதுண்டு.
திராவிட  அரசியலுக்கு அதுகும் பெருமை சேர்க்கும் விடயம் என நினைக்கின்றேன்.

சிறித்தம்பி! திராவிட சித்து விளையாட்டுக்களில் அது முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்குப் புலப்படாத ஆடையை அணிந்த அரசனின்  நிலையில் பலர். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2024 at 14:02, பிழம்பு said:

 

நியூயார்க்: ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’, ஜெஃப்ரி எப்ஸ்டீன்... உலகம் முழுவதும் பரபரப்பான பேசுபொருளாக இவை மாறியுள்ளன. யார் இந்த ஜெஃப்ரி எஸ்டீன்? அது என்ன ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற ஆவல் பலர் மத்தியிலும் பரவியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் பரபரப்பாக அடிபட்ட நபர். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

 

 

அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டார் எனவும், அதற்கு முன்பும் தற்கொலை முயற்சி செய்யவில்லை அவர் தாக்கப்பட்டார் எனவும் தாம் சந்தேகிப்பதாக அவரது ஒரேயொரு சகோதரர் கூறுகின்ற உரையாடல் கேட்டேன். எது உண்மை எது பொய் என்று கடவுளுக்குத்தான் வெளிச்சம்.  

 

 

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவையே அதிர வைக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் பற்றி இதுவரை தெரிந்தது என்ன?

ஜெஃப்ரி எப்ஸ்டீன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2004 ஆம் ஆண்டு மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் ஜெஃப்ரி எப்ஸ்டீன்

கட்டுரை தகவல்

  • டாம் ஜியோகேகன் மற்றும் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்

  • 19 டிசம்பர் 2025, 08:30 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 68 புகைப்படங்களின் புதிய தொகுப்பு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

புகைப்படங்களில் இடம்பெறுவதால் மட்டுமே, அவர்கள் ஏதேனும் தவறு இழைத்திருப்பார்கள் என எந்த உத்தரவாதமும் இல்லை, மேலும் அதில் இடம்பெற்றுள்ளவர்களில் பலர் எப்ஸ்டீன் தொடர்பாக எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.

எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன? என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein files) என்றால் என்ன?

2008-ஆம் ஆண்டில், 14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம், எப்ஸ்டீன் தனது பாம் பீச் (Palm Beach) இல்லத்தில் தங்கள் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். ஆனால் எப்ஸ்டீன், அரசு வழக்கறிஞர்களுடன் ஒரு குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தை (plea deal) மேற்கொண்டார்.

அந்த பாம் பீச் வீடு முழுவதும் சிறுமிகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டன, மேலும் அவர் ஒரு மைனரிடம் பாலியல் சேவையை நாடியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டார். குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தின் விளைவாக அவர் கடுமையான சிறைத்தண்டனையிலிருந்து தப்பினார்.

பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, பாலியல் தொழிலுக்காகக் குறைந்த வயதுடைய சிறுமிகளைக் கொண்ட ஒரு நெட்வொர்க்கை நடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் விசாரணைக்காகக் காத்திருந்த காலகட்டத்தில் சிறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இரண்டு குற்றவியல் விசாரணைகள் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுடனான நேர்காணல்களின் எழுத்துப் பிரதிகள் மற்றும் எப்ஸ்டீனின் பல்வேறு சொத்துக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உட்பட ஒரு பெரிய ஆவணக் குவியல் திரட்டப்பட்டது.

அமெரிக்க நீதித்துறையின் 2025-ஆம் ஆண்டின் குறிப்பாணையின்படி, அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) அதன் தரவுத்தளங்கள், வன்வட்டுகள் (hard drives) மற்றும் பிற சேமிப்பகங்களில் 300 ஜிகாபைட்டிற்கும் அதிகமான தரவுகள் மற்றும் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.

இந்தக் கோப்புகளில் சில, எப்ஸ்டீனை விசாரிக்க ஃபெடரல் மட்டத்திலும் புளோரிடா மாநில மட்டத்திலும் பணியாற்றும் விசாரணை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்களை உள்ளடக்கியிருக்கலாம் என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் பிற சட்டவிரோத சிறார் துஷ்பிரயோகப் பொருட்கள் 'பெருமளவில்' இருப்பதாக நீதித்துறை கூறுகிறது.

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டும் தகவல்களைத் தடுத்து வைக்க, அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்ட சமீபத்திய சட்டம் நீதித்துறைக்கு அனுமதி அளிப்பதால், இந்தக் கோப்புகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படாது.

பாலியல் கடத்தலுக்காகச் சிறுமிகளைப் பயன்படுத்த எப்ஸ்டீனுடன் சதி செய்ததாக 2021-ஆம் ஆண்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட, அவரது பிரிட்டிஷ் கூட்டாளியும் முன்னாள் காதலியுமான கிஸ்லைன் மேக்ஸ்வெல் மீதும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருமே சிவில் வழக்குகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

எப்ஸ்டீன் தொடர்பாக ஏற்கனவே என்ன வெளியிடப்பட்டுள்ளது?

கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கட்டங்களில், இந்த வழக்குகள் தொடர்பான சில ஆவணங்கள் பொதுவெளியில் கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதம், எப்ஸ்டீன் எஸ்டேட்டுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆவணங்களை 'ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டி' வெளியிட்டது, அவை பெரும்பாலும் மின்னஞ்சல்கள் ஆகும்.

முன்னதாக செப்டம்பரில் வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பில், பிறந்தநாள் வாழ்த்து புத்தகம் ஒன்று இருந்தது; அதில் டிரம்ப் பெயரில் எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்ட ஒரு குறிப்பு இருந்தது, ஆனால் அதை எழுதியதை டிரம்ப் மறுத்துள்ளார்.

பிப்ரவரி மாதம், டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களுக்குப் பிறகு, நீதித்துறையும் எஃப்பிஐ அமைப்பும், எப்ஸ்டீன் கோப்புகளின் "முதல் கட்ட வகைப்படுத்தப்படாத கோப்புகள்" என்று விவரித்ததை வெளியிட்டன.

வலதுசாரி இன்ஃப்ளூயன்ஸர்களின் ஒரு குழு வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு வழங்கப்பட்ட 341 பக்கங்கள் ஏற்கனவே வெளிவந்திருந்த ஆவணங்கள் என்பதை அவர்கள் உணர்ந்தபோது ஏமாற்றமடைந்தனர்.

அதில் எப்ஸ்டீனின் விமானத்தின் பயணப் பதிவுகள் (flight logs) மற்றும் அவருக்குத் தெரிந்த பிரபலமான நபர்களின் பெயர்களைக் கொண்ட அவரது தொடர்பு புத்தகத்தின் திருத்தப்பட்ட பதிப்பு ஆகியவை அடங்கும்.

ஜூலை மாதத்தில், நீதித்துறை மற்றும் எஃப்பிஐ ஒரு குறிப்பாணையில் இனி கூடுதல் ஆவணங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று கூறின.

அது இப்போது மாறியுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகளில் எந்தெந்த பெயர்கள் உள்ளன?

வெளியிடப்படாத ஆவணங்களின் உள்ளடக்கங்கள் இன்னும் அறியப்படவில்லை.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியின்படி, 'மே மாதம் அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை டிரம்பிடம், அவரது பெயர் எஃப்பிஐ ஆவணங்களில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.'

'அவர் எப்ஸ்டீனுடன் நண்பராக இருந்தார், ஆனால் கோப்புகளில் பெயரிடப்படுவது தவறான செயலுக்கான ஆதாரம் அல்ல' என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டது.

வெள்ளை மாளிகைப் செய்தித் தொடர்பாளர் இந்தச் செய்தியை 'பொய்யானது' என்று விவரித்தார், இருப்பினும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், 'டிரம்பின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதை நிர்வாகம் மறுக்கவில்லை' என்று கூறினார்.

பொதுவெளியில் ஏற்கனவே உள்ள ஆவணங்கள் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய பல உயர்மட்ட நபர்களைக் குறிப்பிடுகின்றன.

அதேசமயம், பெயர்கள் இடம்பெறுவது அந்த நபர்கள் ஏதேனும் தவறு இழைத்திருப்பார்கள் என்பதைக் குறிக்கவில்லை.

2024-ஆம் ஆண்டில் நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டபோது, அரசர் மூன்றாம் சார்லஸின் சகோதரரும் முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் உட்பட பல பெயர்கள் வந்தன.

கிளிண்டன் மற்றும் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று மறுக்கின்றனர். ஜாக்சன் 2009-இல் காலமானார்.

சிறார் பாலியல் கடத்தலுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மேக்ஸ்வெல்லின் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அவை.

செப்டம்பரில் வெளியிடப்பட்ட விமானப் பயணப் பதிவுகளில் பில்லியனர் ஈலோன் மஸ்க் மற்றும் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் ஏற்கனவே எந்தத் தவறும் செய்யவில்லை என்று உறுதியாக மறுத்துள்ளார். எப்ஸ்டீன் தன்னைத் தீவுக்கு அழைத்ததாகவும் ஆனால் தான் அதை மறுத்துவிட்டதாகவும் மஸ்க் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 12 அன்று வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் எஸ்டேட்டுக்குச் சொந்தமான மின்னஞ்சல்களின் தொகுப்பில் கிளிண்டனின் முன்னாள் கருவூலச் செயலர் லாரி சம்மர்ஸ் மற்றும் டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஸ்டீவ் பானன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

சம்மர்ஸ் பின்னர் பொதுப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாகக் கூறினார், அவர் ஒரு அறிக்கையில்: "எப்ஸ்டீனுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எனது தவறான முடிவிற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

எந்தத் தவறும் செய்ததாகக் குற்றம் சாட்டப்படாத பானன், பிபிசியின் கருத்துக்கான கோரிக்கைக்குப் பதிலளிக்கவில்லை.

அந்த சமீபத்திய ஆவண வெளியீட்டிலும் டிரம்பின் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் எப்போதும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறார்.

எப்ஸ்டீன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2005 ஆம் ஆண்டில் மேக்ஸ்வெல்லுடன் எப்ஸ்டீன்

டிரம்ப்/எப்ஸ்டீன் உறவு பற்றி இதுவரை தெரியவந்தது என்ன?

டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்ததாகவும் ஒரே மாதிரியான சமூக வட்டத்தைக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

முன்பு வெளியிடப்பட்ட கோப்புகள், எப்ஸ்டீனின் தொடர்புகளின் 'கருப்பு புத்தகத்தில்' (Black book) டிரம்பின் விவரங்கள் இருந்ததைக் காட்டுகின்றன. டிரம்பின் விமானப் பதிவுகள் அவர் எப்ஸ்டீனின் விமானத்தில் பல சந்தர்ப்பங்களில் பறந்ததைக் காட்டின.

அவர்கள் 1990-களில் உயர்மட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது புகைப்படம் எடுக்கப்பட்டது, மேலும் சிஎன்என் வெளியிட்ட புகைப்படங்கள் டிரம்பிற்கும் அவரது அப்போதைய மனைவி மார்லா மேப்பிள்ஸிற்கும் நடந்த திருமணத்தில் எப்ஸ்டீன் கலந்து கொண்டதைக் காட்டுகின்றன.

2002-இல், டிரம்ப் எப்ஸ்டீனை ஒரு 'அற்புதமான மனிதர்' (Terrific guy) என்று விவரித்தார். எப்ஸ்டீன் பின்னர், "நான் 10 ஆண்டுகளாக டொனால்டின் நெருங்கிய நண்பராக இருந்தேன்" என்று குறிப்பிட்டார்.

டிரம்பின் கூற்றுப்படி, எப்ஸ்டீன் முதன்முதலில் கைது செய்யப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2000-களின் தொடக்கத்தில் அவர்கள் பிரிந்தனர். 2008-வாக்கில், தான் "அவரது ரசிகர் அல்ல" என்று டிரம்ப் கூறி வந்தார்.

அவர்களது பிரிவு எப்ஸ்டீனின் நடத்தையுடன் தொடர்புடையது என்றும், "அதிபர் அவரை ஒரு அருவருப்பானவர் (creep) என்பதால் தனது கிளப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இதற்கிடையில், வாஷிங்டன் போஸ்ட் 'அவர்களது உறவு முறிவு புளோரிடாவில் உள்ள சில ரியல் எஸ்டேட் தொடர்பான அவர்களது போட்டி காரணமாக இருக்கலாம்' என்று தெரிவித்துள்ளது.

மக்கள் எப்ஸ்டீன் வழக்குகள் மீது ஏன் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்?

எப்ஸ்டீனின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய முக்கிய உண்மைகளை அதிகாரிகள் மறைப்பதாக, டிரம்பின் 'மாகா' (MAGA) இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் நீண்டகாலமாக நம்பினர்.

அவர்களில் சிலர், அமெரிக்க சமூகத்தின் உயர்மட்டங்களில் சிறார் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு குழு (cabal) இயங்கி வருகிறது, அது அரசால் பாதுகாக்கப்படுகிறது என்ற கோட்பாட்டை நம்புகின்றனர். 'க்யூ' (Q) என்று அழைக்கப்படும் ஒரு புனைப்பெயரால் வெளியிடப்பட்ட மறைபொருளான செய்திகள் மூலம் இந்தக் கோட்பாடு பரவியது.

சில மாகா (MAGA) இன்ஃப்ளூயன்ஸர்களால் முன்வைக்கப்பட்ட சதி கோட்பாடுகளில் ஒன்றில், எப்ஸ்டீன் இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஏஜென்ட்டாக இருந்தார் என்று கூறப்பட்டது.

பொது மக்களிடமும் எப்ஸ்டீன் குறித்துப் பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன - குறிப்பாக ஏன் அவருக்குப் புளோரிடா வழக்கில் இவ்வளவு மென்மையான தண்டனை வழங்கப்பட்டது, அவரும் மேக்ஸ்வெல்லும் உண்மையில் தனியாகத்தான் செயல்பட்டார்களா, மற்றும் அவரால் சிறையில் எப்படித் தற்கொலை செய்து கொள்ள முடிந்தது என்பது போன்ற கேள்விகள்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy07284rngyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.