Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU   05 JAN, 2024 | 03:18 PM

image
 
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

அதேபோல் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய  வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  

அதேபோல், மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமென அனைத்து மாகாணங்களினதும் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

யாழ். மாவட்ட தொழில் வல்லுனர்களுடன் யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

சகல துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுனர்கள் இதனில் கலந்துகொண்டிருந்ததோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்கள் வழங்கிய யோசனைகள் மற்றும் அவர்களின் கேள்விகளுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கியதுடன, அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.    

2024 -2025 இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வருடங்களாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அதற்காக கொள்கை ரீதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் மூலோபாய மாற்றங்கள் குறித்தும் அறிவுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து. 2020 ஆம் ஆண்டில் கொவிட் தொற்று காரணமாக மேலும் சரிவடைந்தது. அந்த நிலை 2022 இல் மேலும் மோசமாக மாறியிருந்ததோடு, 7% மறைப்பெறுமானத்தை விடவும் வீழ்ச்சியடைந்தது.

அந்த நெருக்கடியான காலத்தை கடந்து 2023 ஆம் ஆண்டில் ஓளரவு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் இயலுமை எமக்கு கிட்டியது.  2023 ஆம் ஆண்டில் முதல் இரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாக காணப்பட்ட போதிலும் அடுத்த இரு காலாண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக நான்காம் காலாண்டியில் முன்னேற்றகரமான வளர்ச்சியை காண முடிந்தது.  

அந்த அடிப்படையில் ,இவ்வருடத்தில் 3% பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்ப்பதோடு,  2025 ஆம் ஆண்டில் 5% ஆக பொருளாதார வளர்ச்சியை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம்.  

இவ்வாறு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். இவ்விரு வருடங்களும் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் வருடங்களாகும்.  இன்று நாம் நாட்டின் பொருளாதார முறைமையை மாற்றியுள்ளோம். இன்று நாம் பணம் அச்சிடுவதில்லை. அச்சிடும் பட்சத்தில் ரூபாயின் பெறுமதி குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும். அதேபோல் வங்கிகளிடத்திலிருந்து கடன் பெறுவதும் இல்லை. எமது அரச வங்கிக் கட்டமைப்புக்களும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளன.  

அதனால் கடன் மற்றும் பணம் அச்சிடும் செயற்பாடுகளை விடுத்தே நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அதனாலேயே கடன் வழங்குநர்களிடத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்நாட்டின் பொருளாதாரத்தை போதிய அளவு பலப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.  

அதனால் நாம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். நாம் இவ்வருடத்தில் 12% மொத்த தேசிய உற்பத்தியை பெற்றுக்கொள்ள வேண்டும்.  இறுதியில் 15% ஆக அதனை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

அதனாலேயே இவ்வருடத்தில் வற் வரியை அதிகரிக்க நேரிட்டது.  போதியளவு வருமானம் உள்ள பொருளாதாரம் ஒன்று எமக்கு அவசியம். அதேபோல் நாம் வரவு செலவு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எமது தேவைகளுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

எமது வருமானத்தில் அதிக தொகையை கடன் வட்டியாக செலுத்த நேர்ந்துள்ளமையே பெரும் பிரச்சினையாகும். அந்த பிழையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் அரசாங்கம் தங்களது இயலுமைக்கு மிஞ்சிய செலவுகளை செய்துள்ளது. இவ்வாறான தவறுகளை சரிசெய்து நாம் முன்னேற வேண்டும். எனவே எமக்கு புதிய பொருளாதாரம் தேவை. நாம் திட்டமிட்ட அடிப்படையில் நாட்டில் அந்தப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகின்றோம்.

இது ஒரு தொழில் வாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரம். மேலும் அது நமக்கு அந்நியச் செலாவணியை மேலதிகமாகக் கொடுக்கும், அதிக வருமானத்தைத் தரும் பொருளாதாரமாக இருக்க வேண்டும். அதன்போது ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் பொருளாதாரம் தொர்பில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

வடக்கு மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியும். மேலும், வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். வட. மாகாணத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து வளங்களும் இங்கு உள்ளன. வடக்கின் அபிவிருத்திக்கு மட்டுமன்றி முழு நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிக்க முடியும்.

அதற்கு போதுமான அதிகாரப்பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. அந்த செயற்பாடுகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்துள்ள அதிகாரங்களே போதுமானது என நினைக்கின்றோம். கொழும்பில் இருந்து பணம் வரும் வரை காத்திருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாம் ஜப்பான் தொடர்பில் கவனம் செலுத்தினால், ஜப்பான் சமஷ்டி ஆட்சியுள்ள ஒரு நாடு அல்ல. ஆனால் அதன் அனைத்து மாகாணங்களும் அபிவிருத்தி அடைந்துள்ளன. அதேபோன்று, கொரியா, ஐக்கிய இராச்சியம், ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் அந்த வளர்ச்சியை எட்டியுள்ளன. அப்படியானால் ஏன் ஒரு நாடாக எமக்குரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது?

அதிகாரப் பகிர்வு பற்றி கதைப்பதுபோன்று, அந்த அதிகாரங்களை தமது மாகாணங்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். நாம் அரசியல் ரீதியாக அதிகாரப்பகிர்வு பற்றி பேசுகிறோம். சட்டத்தால் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் வழங்கலாம். ஆனால் உங்களின் மாகாணத்தை அபிவிருத்தி செய்ய போதிய பணம் இல்லை என்றால் அதன் பெறுமதி என்ன என்று நாம் கண்டறிய வேண்டும்.

அதிகாரப் பகிர்வு குறித்து நாம் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் இன்றைய நிலவரப்படி மேல் மாகாணத்தால் மாத்திரமே தனது சொந்த செலவை செய்ய முடிகிறது. அதன்படி, எனைய அனைத்து மாகாணங்களும் மேல் மாகாணத்துடன் இணைகின்றன. எனவே, தமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய, தங்கள் சொந்த மாகாணங்களுக்குள் வலுவாக இருக்க வேண்டும்.

உங்கள் மாகாணத்தில் ஒரு வெளிநாட்டு மொழிப் பாடசாலையை நிறுவ விரும்பினால், அதற்கு அரசாங்கம் ஏன் பணம் வழங்க வேண்டும்? அதற்கான கேள்வி மற்றும் தேவை இருந்தால், நீங்கள் அதை எளிதாக ஆரம்பிக்க முடியும். மாணவர்கள் கல்வியைத் தொடர தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்குகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கல்வி இப்படித்தான் செயல்படுகிறது. இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர் செய்யத்தான் என்னால் முடியும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற “Zee Tamil” சரி கம ப   “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய கில்மிஷா உதயசீலன் சிறுமி தனது குடும்பத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

14  வயதான கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் என்பதோடு, இலங்கை சிறுமியொருவர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றி வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கில்மிஷா உதயசீலன் சிறுமி நாட்டுக்கு தேடித்தந்த புகழுக்காக அவருக்கு  வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவரது கல்வி செயற்பாடுகள் மற்றும் இசை வாழ்விலும் வெற்றிபெற  ஆசிகளை தெரிவித்தார்.

இதன்போது கில்மிஷா ஜனாதிபதி முன்னிலையில் பாடல் ஒன்றையும் பாடினார்.

01__3_.jpg

01__2_.jpg

01__4_.jpg

01__5_.jpg

01__7_.jpg

01__6_.jpg

01__9_.jpg

01__8_.jpg

01__10_.jpg

01__12_.jpg

01__11_.jpg

01__13_.jpg

001.jpg

https://www.virakesari.lk/article/173201

Posted
3 minutes ago, ஏராளன் said:

கேட்டுக்கொள்கின்றேன்.

நாம் ஜப்பான் தொடர்பில் கவனம் செலுத்தினால், ஜப்பான் சமஷ்டி ஆட்சியுள்ள ஒரு நாடு அல்ல. ஆனால் அதன் அனைத்து மாகாணங்களும் அபிவிருத்தி அடைந்துள்ளன. அதேபோன்று, கொரியா, ஐக்கிய இராச்சியம், ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் அந்த வளர்ச்சியை எட்டியுள்ளன. அப்படியானால் ஏன் ஒரு நாடாக எமக்குரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது?

அங்கு இனங்களுக்கான பாரிய பிரச்சனை உள்ளதா ?

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிநாட்டுக் காசு  வேண்டும். அம்புட்டுதே. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

நாம் ஜப்பான் தொடர்பில் கவனம் செலுத்தினால், ஜப்பான் சமஷ்டி ஆட்சியுள்ள ஒரு நாடு அல்ல. ஆனால் அதன் அனைத்து மாகாணங்களும் அபிவிருத்தி அடைந்துள்ளன. அதேபோன்று, கொரியா, ஐக்கிய இராச்சியம், ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் அந்த வளர்ச்சியை எட்டியுள்ளன. அப்படியானால் ஏன் ஒரு நாடாக எமக்குரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது?

ஐயா என்ன சொல்லுகிறார்?

அரசியல் தீர்வு தேவை இல்லை என்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3 பிரதான கல்வி கேந்திர நிலையங்களில் ஒன்றாக வடக்கு உருவாக்கப்படும் - ஜனாதிபதி

05 JAN, 2024 | 07:21 PM
image

ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டு பொருளாதாரத்தின் எஞ்சின் ஆக இயங்குகிறது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களையும் அதனுடன் இணைத்துக்கொண்டு 05  பிரதான எஞ்சின்களுடன் இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05)  நடைபெற் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வி,சுகாதாரம், மீள்குடியமர்த்தல்,  காணி, மின்சாரம்,குடிநீர்,  சுற்றுலா, வனவன பாதுகாப்பு, மீன்பிடித் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு,  சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனாதிபதி அவ்விடத்திலேயே அறிவித்தார். 

கொழும்பு, கண்டி, வடக்கு இந்நாட்டின் மூன்று பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், 

"எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு எஞ்சின் மாத்திரமே உள்ளது.  அதற்கு  50% பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்தே பெறப்படுகிறது. மற்றை மாகாணங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார பங்களிப்பு மந்தமான நிலையிலேயே உள்ளது.  நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்கு எஞ்சின்களின் எண்ணிக்கையையை அதிகரிக்க வேண்டும். அதற்காக மற்றைய மாகாணங்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும். அதற்காக சில மாகாணங்கள் அறியப்பட்டுள்ளன.  வடக்கு,மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவான பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக மேம்படுத்தப்பட வேண்டும். 

தற்போது நிதி பலமும் இருப்பதால் இடைநிறுப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். அதேபோல் வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தொடர்வதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறவுள்ளன. 

மேலும் வட.மாகாணத்திடமிருந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. வட. மாகாணத்திலிருந்து காற்று மற்றும் வெப்ப நிலை காரணமாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தயாரிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.  வட. மாகாணத்தில் தயாரிக்கூடிய மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு பார்க்கும் போது எஞ்சிய தொகையை இந்தியாவுக்கு விற்பனை செய்து பணம் பெறக்கூடிய நிலையும் உள்ளது. அதற்கான பேச்சுவார்தைகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

வட.மாகாணத்தின் விவசாயிகள் திறமையும் செயற்திறனும் கொண்டவர். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வட.மாகாணத்தின் விவசாய நிலங்களை முகாமைத்துவம் செய்வதன் வாயிலாக ஏற்றுமதி விவசாய தொழிற்துறையை பலப்படுத்தலாம் " என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன  

நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதாளத்தில் விழுந்து கிடந்த போது நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியமை சிறப்புக்குரியதாகும். 

ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது சமயல் எரிவாயு இருக்கவில்லை, எரிபொருள் இருக்கவில்லை. மின் துண்டிப்பு தொடர்ச்சியாக நீடித்தது. வெளிநாட்டு கையிருப்பு முற்றாக தீர்ந்துப்போயிருந்தது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தினார். அதனால் இன்று வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளது.    வட. மாகாணத்தின் வீதிக் கட்டமைப்புக்களை பலப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அதேபோல் போக்குவரத்து செயற்பாடுகளை பலப்படுத்தி சுற்றுலா வலயமாக மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படு வருகின்றன.

வட. மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்

கடந்த முறை உயர்தரத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை யாழ்ப்பாணம் பெற்றுக்கொண்டது.  க.பொ.த. சாதாரண தர பரீட்சையிலும் சிறப்பான பெறுபேறுகள் கிடைத்திருந்தன. மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.   

வட. மகாண கல்வி அபிவிருத்திக்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாமாக முன்வந்து செயற்திறனுடன் பணியாற்றி வருகின்றனர்.  அது தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியும். சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்திகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல்,  விவசாய அபிவிருத்தி திட்டங்கள் பலவும் தற்போதும் ஆரம்பிக்கபட்டுள்ளன. குறிப்பாக இதுவரையில் பயிர்செய்யப்படாத நிலங்களில் பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  அது தொடர்பிலான தலையீடுகளை மேற்கொண்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.   

இப்பிரதேச விவசாயிகளின் அறுவடைகளை கொண்டுச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.  

இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த முறை எமது பிரதேசத்திற்கு விஜயம் செய்த போதும் இங்குள்ள தேவைகளை ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இம்முறையும் ஜனாதிபதியை வரவேற்று நன்றி கூறுகின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான காணிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை விவசாயத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், யானை வேலி பராமரிப்பு மற்றும் மீன்பிடி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினறுமான குலசிங்கம் திலீபன்

வவுனியா மாவட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பான அறிவிப்பு முதன்முறையாக வனவள திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

அதற்காக ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். வவுனியா மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆலோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அதற்கு தேவையான மேய்ச்சல் நிலங்களை விடுவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,

ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வரவு செலவுத்திட்ட கூட்டத்தொடரின் போது மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. அவர்களில் இருவரை நீங்கள் விடுவித்துள்ளீர்கள். அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம்

ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.  வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட சுமார் 12 அரசியல் கைதிகள் இன்னமும் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க அல்லது பிணையில் விடுவிக்க விசேட அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

யுத்தம் நிறைவடைந்தாலும் வவுனியாவில் அபிவிருத்திப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றார்.

காணி விடுவிப்புப் பணிகளை நீங்கள் நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளதால், அதற்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

மேலும், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் அபிவிருத்திப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். நோஹரதலிங்கம், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, சமூக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத் சந்திர மற்றும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/173235

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா என்ன சொல்லுகிறார்?

அரசியல் தீர்வு தேவை இல்லை என்கிறாரா?

அதாவது வெளி  நாட்டு முதலீட்டுகளை எதிர்பார்க்கிறார். நீங்கள் முதலீடுகளை செய்தால் வடமாகாணம் மேல் மாகாணத்தை போல அபிவிருத்தி அடைந்து விடும், இலங்கைக்கும் டொலர்கள் வந்த மாதிரி இருக்கும் என்று சொல்லாமல் சொல்லுகிறார்.

அதாவது 13  ஆவது திருத்தும் இப்போதும் அமுலில் இருக்கிறது எனவே நீங்கள் வேறு எதுவும் கேட்க வேண்டாம். நீங்கள் உங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும்.

ஆனால் எல்லா நடைமுறைகளையும் பின்பற்றுவதட்கு கொழும்பு சென்று நாயாய் பேயாய் அலையை வேண்டுமென்று இந்த நாட்டின் தலைவருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்குது.

பாவம் ரணில். தேர்தல் நெருங்க நெருங்க என்னவோவெல்லாம் பேசுகிறார்.  

8 hours ago, ஏராளன் said:

இங்குள்ளவர்கள் எல்லோருமே ஜனாதிபதியை புகழ்வதை பார்க்கும்போது தமிழர் பிரச்சினை எல்லாமே தீர்ந்து விடடதை போல இருக்கின்றது. இனி என்ன தமிழர்களுக்கு கொண்டாட்டம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ஏராளன் said:

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது.

என்னது.... வடக்கிற்கு பதின்மூன்றாம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டு விட்டதா? எப்போ? அதை நமக்கு சொல்லவேயில்லை நம்ம அரசியல்வாதிங்க.

12 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா என்ன சொல்லுகிறார்?

அரசியல் தீர்வு தேவை இல்லை என்கிறாரா?

ஐயாவுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் வீற்றிருப்பவர்களை பார்த்த பின்புமா உங்களுக்கு அந்த சந்தேகம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரணில் 13 வது திருத்தத்தத்தின் அதிகாரங்களைப் பயன் படுத்தச் சொல்லுகிறார். எங்கட தமிழ் எம்பிமார்  13 வது திருத்தத்தை அமுல்படுத்தச் சொல்லி  இந்தியாவுக்கு கடிதம் எழுதுகினம். எனக்கு ஒன்றுமே புரிவில்லை. ரணில் இனப்ரிரச்சினை என்ற  ஒரு விடயம் இருப்பதையே கவனத்தில் எடுக்காமல் இருப்பது பொருளாதாரப் பிரச்சினைதான் அதை தீர்ப்பதற்காக வடக்கு கிழக்கை ம காற்றாலைளை அமைப்பதற்காக இந்தியாவிற்கு விற்பதற்கு  பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் நாடகமாடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

5 வருடங்களுக்குள் வட மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி செல்லும்

ranil-1.jpg

ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி  வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் நேற்று (05) நடைபெற்ற  வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டு பொருளாதாரத்தின் எஞ்சின் ஆக இயங்குகிறது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களையும் அதனுடன் இணைத்துக்கொண்டு 05 பிரதான எஞ்சின்களுடன் இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும்  வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வி,சுகாதாரம், மீள்குடியமர்த்தல், காணி, மின்சாரம்,குடிநீர், சுற்றுலா, வனவன பாதுகாப்பு, மீன்பிடித் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு, சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனாதிபதி இதன்போது அறிவித்தார்.

கொழும்பு, கண்டி, வடக்கு இந்நாட்டின் மூன்று பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக உருவாக்கப்படும்.

எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு எஞ்சின் மாத்திரமே உள்ளது. அதற்கு 50% பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்தே பெறப்படுகிறது. மற்றை மாகாணங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார பங்களிப்பு மந்தமான நிலையிலேயே உள்ளது. நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்கு எஞ்சின்களின் எண்ணிக்கையையை அதிகரிக்க வேண்டும். அதற்காக மற்றைய மாகாணங்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும். அதற்காக சில மாகாணங்கள் அறியப்பட்டுள்ளன. வடக்கு,மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவான பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக மேம்படுத்தப்பட வேண்டும்.

தற்போது நிதி பலமும் இருப்பதால் இடைநிறுப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். அதேபோல் வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தொடர்வதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறவுள்ளன.

மேலும் வட.மாகாணத்திடமிருந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. வட. மாகாணத்திலிருந்து காற்று மற்றும் வெப்ப நிலை காரணமாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தயாரிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வட. மாகாணத்தில் தயாரிக்கூடிய மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு பார்க்கும் போது எஞ்சிய தொகையை இந்தியாவுக்கு விற்பனை செய்து பணம் பெறக்கூடிய நிலையும் உள்ளது. அதற்கான பேச்சுவார்தைகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வட.மாகாணத்தின் விவசாயிகள் திறமையும் செயற்திறனும் கொண்டவர். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வட.மாகாணத்தின் விவசாய நிலங்களை முகாமைத்துவம் செய்வதன் வாயிலாக ஏற்றுமதி விவசாய தொழிற்துறையை பலப்படுத்தலாம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/287204

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடமாகணத்திலுள்ள தேசிய பாடசாலைளுக்கு இப்ப புலம் பெயர் அமைப்புக்கள் தான் பெப்பர் ,பென்சிலுக்கு பணம் வழங்குகின்றனர் .....ஆகவே வெகுவிரைவில் கேட்பார்கள் வடமாகாணத்தில் சிறிலங்கா தேசிய இராணுவத்தை பராமரிக்க புலம்பெயர் அமைப்புக்கள் பணம் வழங்க வேண்டும் என்று....

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.