Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

28 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி ஜஸ்ரின்.

கடந்த 10 வருடமாக வீட்டில் தேநீருடன் ஒன்று சில வேளை பாதி பேரிச்சம்பழத்துடன் குடிக்கிறேன்.

இதிலும் அதே சீனி இருக்கிறதா?

அல்லது என்னை நானே ஏமாற்றுகிறேனா?

ஒரு பேரிடம் பழம் ஏறத்தாள 10 கிராம் = ஏறத்தாள 25 கிலோகலோரிகள்.

ஒரு கட்டிச் சீனி 5 கிராம் = 20 கிலோகலோரிகள்

Glycemic index இரண்டுக்குமே 100. அதாவது சீனி எந்த வேகத்தில் கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் சேருமோ அதே வேகத்தில் பேரீச்சம்பழ இனிப்பும் இரத்தத்தில் ஏறும். 

இரண்டிற்கும் வித்தியாசம், பேரீச்சம் பழத்தில் சிறிது நார்ப்பொருளும் விற்றமின்களும் உள்ளன.

என்னைப் பொறுத்தவரை ஒரு சீனிக் கட்டியுடனோ அல்லது ஒரு முழு பேரீச்சம்பழத்துடனோ தேனீரை நண்றாக ச் சுவைத்துக் குடித்துவிட்டு 5 நிமிடங்கள் மெதுவாக நடந்தால் எல்லாம் சமனிலையாகும்.

  • Replies 62
  • Views 5.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    சர்க்கரை - இனிப்பு, பாகற்காய் - கைப்பு. ஆகவே நீரிழிவு நோய்க்குப் பாகற்காய் நிவாரணம் என்று ஒரு புரளி உள்ளது. பாகற்காயில் சர்க்கரை நோயை எதிர்க்கும் ஆற்ற்றல் இல்லையாம். அது ஏனைய மரக்கறி வகைகள் போலவே நார்

  • வெள்ளைச் சீனிக்குப் பதிலாக கருப்பட்டியோ , தேனோ தேவையானளவு எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். அதில் சீனி இல்லை, கலோரி குறைவென்றெல்லாம் சொல்லவில்லை . எனவே அவர் சொல்வது சரி. ஆனால், நீரிழிவு இருக்கும் ஒரு

  • குமாரசாமி
    குமாரசாமி

    தமிழ்க்கடையளிலை விக்கிதோ? கேட்டதாலை குமாரசாமிக்கு சுகர் வருத்தம் இருக்கெண்டு நினைக்கப்படாது சிறித்தம்பி 😂

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

என்னைப் பொறுத்தவரை ஒரு சீனிக் கட்டியுடனோ அல்லது ஒரு முழு பேரீச்சம்பழத்துடனோ தேனீரை நண்றாக ச் சுவைத்துக் குடித்துவிட்டு 5 நிமிடங்கள் மெதுவாக நடந்தால் எல்லாம் சமனிலையாகும்.

காலநிலை நன்றாக இருந்தால் தினந்தோறும் ஏறத்தாள 3 மைல்கள் நடக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பே சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்.
சக்கரையும் இனிப்பு பனம் கட்டியும் இனிப்பு  சீனியும் இனிப்பு. எல்லாம் ஒன்று தான். ஆரோக்கியமற்ற வாழ்க்கை,  உடலுக்கு வேலை கொடுக்காமையினால் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கும் நோய். கோவைக்காயால் எப்படி நிறுத்த முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, இணையவன் said:

ஒரு பேரிடம் பழம் ஏறத்தாள 10 கிராம் = ஏறத்தாள 25 கிலோகலோரிகள்.

ஒரு கட்டிச் சீனி 5 கிராம் = 20 கிலோகலோரிகள்

Glycemic index இரண்டுக்குமே 100. அதாவது சீனி எந்த வேகத்தில் கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் சேருமோ அதே வேகத்தில் பேரீச்சம்பழ இனிப்பும் இரத்தத்தில் ஏறும். 

இரண்டிற்கும் வித்தியாசம், பேரீச்சம் பழத்தில் சிறிது நார்ப்பொருளும் விற்றமின்களும் உள்ளன.

என்னைப் பொறுத்தவரை ஒரு சீனிக் கட்டியுடனோ அல்லது ஒரு முழு பேரீச்சம்பழத்துடனோ தேனீரை நண்றாக ச் சுவைத்துக் குடித்துவிட்டு 5 நிமிடங்கள் மெதுவாக நடந்தால் எல்லாம் சமனிலையாகும்.

ஆம். இதைத் தான் நானும் அறிந்தேன். உலர்த்தப் பட்ட பேரீச்சம் பழம் (இது தான் அமெரிக்கக் கடைகளில் கிடைக்குமென நினைக்கிறேன்) அதிக சீனியும், குறைந்த நார்த்தன்மையும் கொண்டிருக்குமாம். உலராத பழம் அதிக நார், நீர்த்தன்மை கொண்டிருப்பதால் அதன் Glycemic Index குறைவாக இருக்கும் என்கிறார்கள்.

எனவே, பாதி / ஒரு பேரீச்சை தேனீரோடு எடுத்துக் கொள்வது பெரிய பிரச்சினையில்லை.

14 hours ago, ஈழப்பிரியன் said:

காலநிலை நன்றாக இருந்தால் தினந்தோறும் ஏறத்தாள 3 மைல்கள் நடக்கிறேன்.

14 hours ago, ஈழப்பிரியன் said:

காலநிலை நன்றாக இருந்தால் தினந்தோறும் ஏறத்தாள 3 மைல்கள் நடக்கிறேன்.

காலநிலை நல்லா இல்லாட்டிக் கூட, வீட்டுக்குள் நன்கு நடக்கலாம். அதைத் தான் நான் செய்கின்றேன் இந்த குளிர் காலத்தில் Basement இல் அல்லாவிடின் Hall லுக்குள் நடக்கின்றேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7 கிலோ மீற்றர்.

@Justin

Hard liquor இனை கைவிட்டு இப்ப white wine இனை அருந்துகின்றேன். White wine இல் சீனி அதிகமா? (எனக்கு ரெட் வைன் ஒத்துக் கொள்வதில்லை... 'பின்விளைவுகள்' கடுமையாக இருக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஆம். இதைத் தான் நானும் அறிந்தேன். உலர்த்தப் பட்ட பேரீச்சம் பழம் (இது தான் அமெரிக்கக் கடைகளில் கிடைக்குமென நினைக்கிறேன்) அதிக சீனியும், குறைந்த நார்த்தன்மையும் கொண்டிருக்குமாம். உலராத பழம் அதிக நார், நீர்த்தன்மை கொண்டிருப்பதால் அதன் Glycemic Index குறைவாக இருக்கும் என்கிறார்கள்.

எனவே, பாதி / ஒரு பேரீச்சை தேனீரோடு எடுத்துக் கொள்வது பெரிய பிரச்சினையில்லை.

தகவலுக்கு நன்றி.

51 minutes ago, நிழலி said:

காலநிலை நல்லா இல்லாட்டிக் கூட, வீட்டுக்குள் நன்கு நடக்கலாம். அதைத் தான் நான் செய்கின்றேன் இந்த குளிர் காலத்தில் Basement இல் அல்லாவிடின் Hall லுக்குள் நடக்கின்றேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7 கிலோ மீற்றர்.

எமது வீட்டு பேஸ்மன்ரில் மெசின் உள்ளது.இருந்தாலும் வெளிளே நடப்பது போல வராது.

ஒரு மைல் நடந்தவுடனே நிற்பாட்டி விடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நிழலி said:

காலநிலை நல்லா இல்லாட்டிக் கூட, வீட்டுக்குள் நன்கு நடக்கலாம். அதைத் தான் நான் செய்கின்றேன் இந்த குளிர் காலத்தில் Basement இல் அல்லாவிடின் Hall லுக்குள் நடக்கின்றேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7 கிலோ மீற்றர்.

@Justin

Hard liquor இனை கைவிட்டு இப்ப white wine இனை அருந்துகின்றேன். White wine இல் சீனி அதிகமா? (எனக்கு ரெட் வைன் ஒத்துக் கொள்வதில்லை... 'பின்விளைவுகள்' கடுமையாக இருக்கும்)

நிழலி, செறிந்த அல்கஹோலைக்  குறைத்திருப்பது நல்ல விடயம்.

ஒரு சாதாரண பிராண்ட் வைன் ஒரு serving இல் (இது 5 அவுன்ஸ்) 1 முதல் 2 கிராம் சீனி இருக்கும் (ஒப்பீட்டிற்கு அண்ணளவாக அரைத்தேக்கரண்டிக்கும் குறைவான சீனி). இதுவே sweet wine என்ற வகையானால் இந்த சீனியின் அளவு 4 மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், நீங்கள் sweet wine அருந்த மாட்டீர்களென ஊகிக்கிறேன்.

நீரிழிவு இருக்கும் என் நண்பர்கள் சிலர் "வொட்காவில் சீனி இல்லை, எனவே பருகலாம்" என புல் கட்டுக் கட்டுவர். உண்மையில், அல்கஹோலில் நேரடியாக சீனி இல்லா விட்டாலும், இரத்தத்தில் அல்ககோல் அதிகரித்தால், இரத்த குழூக்கோஸ் எரிக்கப் படாமல் சும்மா இரத்தத்தில் சுற்றித் திரியும். எனவே, குறைந்த அல்கஹோல் செறிவுடைய பானங்கள் பாதுகாப்பானவை என்று விளக்க முயல்வேன். "இவனோட கதைச்சால் வெறி இறங்கிடும்" என்று விலகி ஓடி விடுவர்😂.

35 minutes ago, Justin said:

விளக்கத்துக்கு மிக்க நன்றி ஜஸ்ரின்.  Sweet wine இனை நான் இதுவரைக்கும் ஒரு முறை கூட குடித்தது இல்லை.

எம்மில் சிலர் Cognac brandy யில் சீனி இல்லை என்று நம்பி அதிகம் குடிப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, இணையவன் said:

ஒரு பேரிடம் பழம் ஏறத்தாள 10 கிராம் = ஏறத்தாள 25 கிலோகலோரிகள்.

ஒரு கட்டிச் சீனி 5 கிராம் = 20 கிலோகலோரிகள்

Glycemic index இரண்டுக்குமே 100. அதாவது சீனி எந்த வேகத்தில் கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் சேருமோ அதே வேகத்தில் பேரீச்சம்பழ இனிப்பும் இரத்தத்தில் ஏறும். 

இரண்டிற்கும் வித்தியாசம், பேரீச்சம் பழத்தில் சிறிது நார்ப்பொருளும் விற்றமின்களும் உள்ளன.

என்னைப் பொறுத்தவரை ஒரு சீனிக் கட்டியுடனோ அல்லது ஒரு முழு பேரீச்சம்பழத்துடனோ தேனீரை நண்றாக ச் சுவைத்துக் குடித்துவிட்டு 5 நிமிடங்கள் மெதுவாக நடந்தால் எல்லாம் சமனிலையாகும்.

ஒரு பேரிடம் பழம் ஏறத்தாள 10 கிராம் = ஏறத்தாள 25 கலோரி

1 hour ago, நிழலி said:

எம்மில் சிலர் Cognac brandy யில் சீனி இல்லை என்று நம்பி அதிகம் குடிப்பினம்.

Cognac போன்ற மதுபானங்களில் சீனி மிக மிகக் குறைவாக உள்ளது. ஆனால் ஏராளமான கலோரிகள் உண்டு.  இந்தக் கலோரிகளை பிரெஞ்சில் வெறுமையான கலோரிகள் என்று சொல்வார்கள். இவற்றை உடலில் சேமிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. உடலால் உடனடியாகப் பாவிக்கப்பட வேண்டியவை. தேவைக்கதிகமான கலோரிகள் உடலில் ஏறியதும், ஜஸ்ரின் குறிப்பிட்டதுபோல் உடலுக்குச் சக்தியை வழங்க வேண்டிய இரத்தத்தில் உள்ள சீனி சும்மா சுற்றித் திரிந்து எரிக்கப்படாமல் சீனி அளவைக் கூட்டும். 

5 சென்ரிலீற்றர் Cognac இல் 100 கிலோ கலோரிகள் உள்ளன. இது 5 கட்டிச் சீனிக்குச் (25 கிராம்) சமன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிப்பு உணவுகளும் மா சத்து உணவுகளும்  மது பானங்களும் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்தானதுதான். காரணம்  இன்றைய காலத்தில் நாம் உண்ணும் உணவிற்கேற்ப எந்தவொரு வேலையுமே செய்வதில்லை. வீட்டுக்குள் இருந்து கையை காலை ஆட்டினாலும் பிரயோசனமில்லை. நல்ல காற்றுடன் காலாற நடந்து திரிய வேண்டும்.பல நோய்களுக்கு எமது வாழ்க்கை முறை மாறியதே முக்கிய காரணம். இங்கே கருத்தெழுதியவர்கள் எல்லாம் எப்போது தொடக்கம் பசுமதிச்சோறு சாப்பிட ஆரம்பித்தீர்கள் என சொல்லுங்கள் பார்க்கலாம். 30 வருடங்களுக்கு முன்னர் யாரெல்லாம் தினசரி அல்லது வார வாரம் மது அருந்தினீர்கள்? தினசரி மூன்று வேளையும் மாமிசம் சம்பந்தப்பட்ட உணவுகளை யாரெல்லாம் சாப்பிட்டீர்கள்? இனிப்பு வகைகள் சார்ந்த உணவுகளையெல்லாம் ஊரில் இருக்கும் போது தினசரி சாப்பிட்டோமா? எரித்த வதக்கிய வறுத்த  எண்ணை சாப்பாடுகளை தினசரி சாப்பிட்டோமா? கூடிய பட்சம் எல்லாம் அவியல் சாப்பாடுகள் தானே. அந்தக்காலத்தில் எல்லாம் கலோரி அளவு பார்த்தா சாப்பிட்டார்கள்?  ஆசிய நாடுகளில் மூன்று வேளையும் தேங்காய் சம்பந்தப்பட்ட உணவுகள் தானே.

மக்களே! அன்றில்லாத நோய்கள் இன்று ஏன் வருகின்றதென சிந்தியுங்கள். சுகமாக வாழலாம்.

வைத்தியர்கள் கடவுள் என்ற காலம் போய் வியாபாரிகளாக மாறிய காலம் இது. உன் உடம்பிற்கு நீயே வைத்தியன்.  இது நான் பட்ட அனுபவம்.

ஏறினால் கார் இறங்கினால் காபெட் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வைத்தியர்களிடம் சென்றால் அவர்களும் மருந்துகளை தாராளமாக எழுதி தருவார்கள்.

இங்கே நான் வைத்தியத்தை குறை கூறவில்லை. மாறாக வைத்தியத்தின் வியாபார நோக்கையே நொந்து கொள்கிறேன்.

6 hours ago, ஈழப்பிரியன் said:

எமது வீட்டு பேஸ்மன்ரில் மெசின் உள்ளது.இருந்தாலும் வெளிளே நடப்பது போல வராது.

நூறுவீதம் உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நிழலி said:

Hard liquor இனை கைவிட்டு இப்ப white wine இனை அருந்துகின்றேன். White wine இல் சீனி அதிகமா? (எனக்கு ரெட் வைன் ஒத்துக் கொள்வதில்லை... 'பின்விளைவுகள்' கடுமையாக இருக்கும்)

எனக்கு முதல் மாரடைப்பு வந்ததே  வெள்ளை வைன் அடிக்க தொடங்கிய போதுதான்.நான் வழமையாக சிவப்பு வைன் அருந்துபவன். பிரசரும் சுகரும் கூட வெள்ளை வைன் அடியும் என  ஒரு பழைய காய் ஆலோசனை தந்தார்.வைத்தியரிடம் வெள்ளை வைன் பற்றி ஆலோசனை கேட்க அவரும் தலையாட்டினார். விளைவு  இரண்டு குளிசை மேலதிகமாக.......

நிழலியாரே!  மாலை 6 மணிக்கு பின் மதுபானமோ அல்லது கொழுப்பு சார்ந்த சாப்பிடாமல் ஒரு மாதம் இருந்து பாருங்கள். சொர்க்க வாசல் தெரியும். காலை மாலை வயிறார எதையும் ஆசை தீர சாப்பிட்டு விட்டு மாலையில் தண்ணீர் மட்டும் குடியுங்கள் சொர்க்கத்தின் வாசலே திறக்கும். இதுவும் என் சொந்த அனுபவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, இணையவன் said:

Cognac போன்ற மதுபானங்களில் சீனி மிக மிகக் குறைவாக உள்ளது. ஆனால் ஏராளமான கலோரிகள் உண்டு.  இந்தக் கலோரிகளை பிரெஞ்சில் வெறுமையான கலோரிகள் என்று சொல்வார்கள். இவற்றை உடலில் சேமிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. உடலால் உடனடியாகப் பாவிக்கப்பட வேண்டியவை. தேவைக்கதிகமான கலோரிகள் உடலில் ஏறியதும், ஜஸ்ரின் குறிப்பிட்டதுபோல் உடலுக்குச் சக்தியை வழங்க வேண்டிய இரத்தத்தில் உள்ள சீனி சும்மா சுற்றித் திரிந்து எரிக்கப்படாமல் சீனி அளவைக் கூட்டும். 

5 சென்ரிலீற்றர் Cognac இல் 100 கிலோ கலோரிகள் உள்ளன. இது 5 கட்டிச் சீனிக்குச் (25 கிராம்) சமன்.

எம்மவர்கள்  கணக்கு பார்க்காமல் நடைமுறையுடன் சாப்பிட்டு தேகாரோக்கியமாக வாழ்ந்தார்கள். இன்றையவர்கள் கலோரி கணக்கு பார்த்து சாப்பிட்டு மருந்து மாத்திரைகளுடன் வாழ்கின்றார்கள். 😛

13 hours ago, குமாரசாமி said:

எனக்கு முதல் மாரடைப்பு வந்ததே  வெள்ளை வைன் அடிக்க தொடங்கிய போதுதான்.

பேரீச்சம் பழம் சுகருக்கு சொன்ன சாமான் என்று சொல்லும்போதே நினைத்தேன், நீங்கள் கூட வேலை செய்யும் நண்பர்கள் சொல்வதைத்தான் ஒப்புவிக்கிறீர்கள் என்று.
வெள்ளை சிவப்பு வைன்களில் சீனி இல்லை. 100 கிராம் சிவப்பு வைனில் 0.6 கிராமும் வெள்ளையில் 1கிராமும் உண்டு.

கலோரி அளவில் வெள்ளை வைனை விட சிவப்பில் சற்று அதிகமாக உள்ளது (ஜஸ்ரின் குறிப்பிட்ட sweet wine வேற). உங்கள் வைத்தியர் தலையாட்டியது மிகச் சரி.
வெள்ளை வைன் அருந்தியதால்தான் மாரடைப்பு வந்தது என்று முடிவெடுப்பதற்கு நீங்கள் ஒன்றும் பகுத்தாய்வாளர் இல்லை. சிவப்பு வைன் பாவித்திருந்தால் சில வேளை முன்னதாகவே மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். 

இன்றைய அறிவியல் வளர்ந்த காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று தெரிந்து கொள்வது தவறல்ல. கடைகளில் விற்கும் உணவுப் பொருட்களில் எத்தனை கலோரி, சீனி, கொழுப்பு உண்டென்று குறிக்கப்படுவது கட்டாயம். ஏனென்றால் நாமாகவே இன்னென்ன உணவில் சீனி உண்டு இல்லை என்று முடிவெடுக்க முடியாது. நாம் தெரியாமலே இத்தனை நாள் சாப்பிடும் உணவில் கலோரிகள் ஏதாளமாக இருக்கலாம். 
அரைகுறை அறிவோடு எனக்கு நானே வைத்தியன் என்ற முடிவை நான் எப்போதும் எடுக்க மாட்டேன். வைத்தியரின் ஆலோசனையைப் பிரதானமாகவும் எனது தேடலை மேலதிகமாகவும் கொண்டே எனது உணவு, மருந்து பாவனைகள் இருக்கும். 

இறுதியாக, 
இது இலங்கையில் சராசரி ஆயுட்காலம் 60 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை.

stat-sl.png

60 ஆம் ஆண்டுக்கு முன் வைன் குடிக்கவில்லை, சீனி, பசுமதி, இனிப்பு, இறைச்சி உண்ணவில்லை, சதாரண வருத்தத்துக்கு மாத்திரைகள் எடுக்கவில்லை, அமெரிக்கன் மருந்து விற்பதற்காகப் புதிய நோய்களை உருவாக்கிப் பரப்பவில்லை, வைத்தியர் வியாபாரியாக இருக்கவில்லை…
ஆனாலும் அன்றைய மக்கள் ஏன் ஆரோக்கியமாகவும் இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை?

இவ்வளவு அறிவுரை கூறும் உங்களிடமே இதற்கான பதிலையும் எதிர்பார்க்கிறேன் (வழக்கம்போல், எழுதினால் வெட்டுவீர்கள் என்று நழுவ வேண்டாம்). 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

60 ஆம் ஆண்டுக்கு முன் வைன் குடிக்கவில்லை, சீனி, பசுமதி, இனிப்பு, இறைச்சி உண்ணவில்லை, சதாரண வருத்தத்துக்கு மாத்திரைகள் எடுக்கவில்லை, அமெரிக்கன் மருந்து விற்பதற்காகப் புதிய நோய்களை உருவாக்கிப் பரப்பவில்லை, வைத்தியர் வியாபாரியாக இருக்கவில்லை…
ஆனாலும் அன்றைய மக்கள் ஏன் ஆரோக்கியமாகவும் இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை?

இது உலக ரீதியில் குறைவாகவே இருந்துள்ளதென எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இது உலக ரீதியில் குறைவாகவே இருந்துள்ளதென எண்ணுகிறேன்.

அது தான் இணையவனின் கருத்தும்: இவையெல்லாம் குறைவாக இருந்தும் இலங்கையுட்பட்ட உலக நாடுகளில் ஆயுட்காலம் குறைவாகத் தான் இருந்திருக்கிறது. இப்போது மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்டதால், பழங்காலத்தில் கண்டறியப் படாத நோய்களெல்லாம் இப்போது கண்டறியப் படுகின்றன, பெயர்கள் இருக்கின்றன, அனேகமான நோய்களுக்கு தடுப்பு முறைகளும், வந்த பின்னர் உயிர் போகாமல் காக்கும் மருந்துகளும் இருக்கின்றன. இதை வெறுமனே பணம் பார்ப்பதற்காக மருத்துவ உலகம் செய்யும் சதி என்று சொல்வது தலைகீழாக நின்று உலகத்தைப் பார்க்கும் ஒருவரது கருத்தாகத் தான் எனக்குத் தெரிகிறது.

இத்தகைய தலைகீழ் பார்வை கொண்டோரின் இன்னொரு இயல்பு: தெருவோரம் வளரும் பச்சைப் பசேலாக இருக்கும் ஒரு களையைப் பிடுங்கி வந்து "இதைச் சாப்பிட்டால் இன்ன நோய் அண்டாது, இன்ன நோய் குணமாகும்" என்று யாராவது சும்மா சொன்னால் உடனே அதை நம்பி விடுகிறார்கள். நூற்றுக் கணக்கான ஆய்வறிக்கைகளின் பின், நவீன மருத்துவம் ஒரு மருந்தை "இந்தக் குறிப்பிட்ட நோய்க்கு மட்டும் பாவிக்கலாம்" என்று சந்தையில் விட்டால் "ஐயகோ பணம் பார்க்கும் பிசினஸ்" என்று ஓலமிடுவார்கள்.

தலைகீழ் உலகம் அவர்களுடையது!  

16 hours ago, குமாரசாமி said:

எனக்கு முதல் மாரடைப்பு வந்ததே  வெள்ளை வைன் அடிக்க தொடங்கிய போதுதான்.நான் வழமையாக சிவப்பு வைன் அருந்துபவன். பிரசரும் சுகரும் கூட வெள்ளை வைன் அடியும் என  ஒரு பழைய காய் ஆலோசனை தந்தார்.வைத்தியரிடம் வெள்ளை வைன் பற்றி ஆலோசனை கேட்க அவரும் தலையாட்டினார். விளைவு  இரண்டு குளிசை மேலதிகமாக.......

நிழலியாரே!  மாலை 6 மணிக்கு பின் மதுபானமோ அல்லது கொழுப்பு சார்ந்த சாப்பிடாமல் ஒரு மாதம் இருந்து பாருங்கள். சொர்க்க வாசல் தெரியும். காலை மாலை வயிறார எதையும் ஆசை தீர சாப்பிட்டு விட்டு மாலையில் தண்ணீர் மட்டும் குடியுங்கள் சொர்க்கத்தின் வாசலே திறக்கும். இதுவும் என் சொந்த அனுபவம்.

உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் அனுவப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அண்ணா.

நான் அறிந்தவரையில் விஞ்ஞான ரீதியில் வைட் வைன்னால் (White Wine)மாரடைப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் இல்லை. காரணம், அதில் கொழுப்பு இல்லை (நல்ல கொழுப்பும் இல்லை, கெட்ட கொழுப்பும் இல்லை), உப்பு இல்லை, மற்றும் துரித உணவில் கலக்கப்படும் விடயங்களும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2024 at 16:47, நிழலி said:

White wine இல் சீனி அதிகமா?

உலர் வகைப்படுத்தப் பட்ட (dry classified wine) வைனில் லீற்றருக்கு 3 கிராம் சீனி இருப்பதாகச் சொல்கிறார்கள். Hard liquorஐ விட்டது போல் இதையும் விடலாமே😜

21 minutes ago, Kavi arunasalam said:

உலர் வகைப்படுத்தப் பட்ட (dry classified wine) வைனில் லீற்றருக்கு 3 கிராம் சீனி இருப்பதாகச் சொல்கிறார்கள். Hard liquorஐ விட்டது போல் இதையும் விடலாமே😜

Alcohol லை முற்றாக கை விடுவதை விட ஆயுளில் சில வருடங்களை விடலாம் 😁

எனக்கு இன்னும் sugar அளவு குருதியில் கூடவில்லை. நீரிழிவும் இல்லை. ஆகவே 1 லீட்டருக்கு 3 g சீனி இப்போதைக்கு ஓகே என நம்புகிறேன்.  ஒரே நாளில் ஒரே அடியாக குடிப்பதில்லை.

காலையில் ஒரு தேக்கரண்டி சீனி போட்டு பால்தேத்தண்ணி குடிக்காவிடின் அந்த நாள் ஆரம்பமாகவே மாட்டுது எனக்கு. நாளொன்றுக்கு ஒரே ஒரு (பால்)தேத்தண்ணி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சீனியின் அளவு பற்றி மதுபானத்தில் கூட எச்சரிக்கையாக கவனமாக உள்ளனரே😄

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2024 at 19:12, nunavilan said:

ஒரு பேரிடம் பழம் ஏறத்தாள 10 கிராம் = ஏறத்தாள 25 கலோரி

இந்த பழத்தில் உள்ள இனிப்பைவிட  உலர்த்தும் போது மேலதிமாக சீனி சேர்த்து இன்னும் இனிப்பாக்குகிறார்கள் என்று சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய மக்கள் ஏன் ஆரோக்கியமாகவும் இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை? ]

ஒரு கால இயந்திரம் ஒன்றை மேற்குலநாடுகளில் ஒன்று கண்டு பிடித்து விட்டாதா வைத்துக் கொள்வோம் 😂  அன்றைய மக்கள் நோய்கள் இல்லாமல்  நீண்ட காலம் ஆரோக்கியமாக  வாழ்ந்த முற்காலத்திற்கு இந்த இயந்திரத்தில் பயணித்து அங்கே சென்று நிரந்தரமாக வாழ முடியும்  விரும்பியவர்கள் வரவும் என்று அழைப்பு விடுத்தால் நோய்களை உண்டாக்கி மருந்து தந்து பணம் உழைக்கும் கள்ளநாடுகளை விட்டு முன்பு இருந்த முற்காலம்  தான் பொற்காலம் என்பவர்கள் கூட அங்கே  செல்லமாட்டார்கள்.

இதுவும் ரஷ்யா சீனா  ஈரான்  நல்லவை,  மேற்குலகநாடுகள் கள்ளர்கள் பொய்யர்கள் ஏகாதிபத்தியம் என்பது மாதிரியே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, இணையவன் said:

பேரீச்சம் பழம் சுகருக்கு சொன்ன சாமான் என்று சொல்லும்போதே நினைத்தேன், நீங்கள் கூட வேலை செய்யும் நண்பர்கள் சொல்வதைத்தான் ஒப்புவிக்கிறீர்கள் என்று.

நீங்கள்  எல்லாவற்றையும் தலைகீழாக விளங்கிக்கொண்டு கருத்து எழுதுபவர் என்று எனக்கு பலகாலமாகவே தெரியும். நான் பேரீச்சம் பழம் சுகருக்கு சொன்ன சாமான் என சொன்னதின் அர்த்தம்  பேரிச்சம்பழம் சாப்பிட்டால்  சுகர் வெகு விரைவாக உடம்பில் ஏறும் என்ற அர்த்தத்தில் சொன்னேன்.பேரீச்சம் பழம் நல்லது தான்.ஆனால் சுகர் வருத்தம் இல்லாதவர்களுக்கு....

நான் நண்பர்கள் சொல்வதை இங்கு ஒப்பிக்கவில்லை. சொந்த அனுபவங்கள்.

10 hours ago, இணையவன் said:

வெள்ளை சிவப்பு வைன்களில் சீனி இல்லை. 100 கிராம் சிவப்பு வைனில் 0.6 கிராமும் வெள்ளையில் 1கிராமும் உண்டு.

உந்த கிராம் கணக்கெல்லாம் எனக்கு தேவையில்லை. நோர்மலாகவே மதுபானங்கள் குடித்தால் சுகர் வருத்தம் வரக்கூடும். அது அவரவர் உடம்பு வாசியை பொறுத்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, இணையவன் said:

கலோரி அளவில் வெள்ளை வைனை விட சிவப்பில் சற்று அதிகமாக உள்ளது (ஜஸ்ரின் குறிப்பிட்ட sweet wine வேற). உங்கள் வைத்தியர் தலையாட்டியது மிகச் சரி.

உங்களுக்கு ஜஸ்ரின் சொல்வதெல்லாம் சரியென்றால் அதை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்.அவர் தரும் ஆதாரங்கள் உட்பட..... எது சரி எது பிழை என முடிவெடுப்பது நான் உட்பட அவர் எழுதியதை வாசிப்பவர்களும்....

திருப்பியும் சொல்கிறேன் எந்த மது பானத்திலும் சுகர் பிரஷர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு, டொட் :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, இணையவன் said:

வெள்ளை வைன் அருந்தியதால்தான் மாரடைப்பு வந்தது என்று முடிவெடுப்பதற்கு நீங்கள் ஒன்றும் பகுத்தாய்வாளர் இல்லை.

நான் பகுத்தறிவாளனும் இல்லை அதே போல் உங்கள் அபிமான ஜஸ்ரின் எனக்கு வைத்தியரும் இல்லை நான் அவர் அபிமானியும் இல்லை அதற்குரிய அவசியமுமில்லை.அவர் ஆராய்ச்சியாளருமில்லை எல்லாவற்றையும் நம்புவதற்கு...

எனக்கு வந்த வருத்தத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அந்த நேரத்தில் உயிருக்காக போராடியது நானும் என் மனைவி மக்களும். அதற்கான காரணத்தை நானும் அறிந்திருந்தேன். என் மனைவி பிள்ளைகளும் அறிந்திருந்தார்கள். அவசர சேவை வைத்தியர்களும் காரணத்தை கூறினார்கள். ஆனால் உறுதிப்படுதவில்லை. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாரடைப்பு வந்ததிற்கான காரணத்தை கூறினார்கள். சுகர் வருத்தம் இல்லாத எனக்கு சுகர் கூடித்தான் மாரடைப்பு வந்தது. இதற்கு எழுத்து மூலமான ஆதார்ம் உண்டு. இப்போதும் எனக்கு சுகர் வருத்தமுத்திரை அடிக்கப்படவில்லை என்பது தனி ரகம். ஆனால் இனி வரலாம். ஏனெனில் நான் பாவிக்கும் மாத்திரைகள் அப்படி...

10 hours ago, இணையவன் said:

இன்றைய அறிவியல் வளர்ந்த காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று தெரிந்து கொள்வது தவறல்ல. கடைகளில் விற்கும் உணவுப் பொருட்களில் எத்தனை கலோரி, சீனி, கொழுப்பு உண்டென்று குறிக்கப்படுவது கட்டாயம். ஏனென்றால் நாமாகவே இன்னென்ன உணவில் சீனி உண்டு இல்லை என்று முடிவெடுக்க முடியாது. நாம் தெரியாமலே இத்தனை நாள் சாப்பிடும் உணவில் கலோரிகள் ஏதாளமாக இருக்கலாம். 

எதையுமே அளவோடு  நேர காலத்திற்கு சாப்பிட்டால் கலோரி வாய்ப்பாடு தேவையில்லை. இறுக்க களிசான் போட்டுக்கொண்டு கண்டபடி ஓடவும் தேவையில்லை..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.