Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம்; மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்

28 JAN, 2024 | 09:58 PM
image

தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்ற தாக்குதல் தொடர்பாக தென்னாபிரிக்காவினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடகா தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தரப்படும் என்ற கோஷங்களை சில தமிழ் தரப்புக்கள்; மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன. 

குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உயிரிப்புக்களுக்கான நீதி மற்றும் காணாமல் போனோருக்கான பரிகாரம் போன்றவற்றை சர்வதேச நீதிமன்றத்தின் மூலமே பெற்றக்கொள்ள முடியும் எனவும் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் சொல்லுகின்ற தமிழ் அரசியல் தரப்புக்கள், தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான மாயையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

தற்போது, இஸ்ரேல் விவகாரத்தில் தென்னாபிரிக்காவினால் சர்வதேச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, சர்வதேச நீதிமன்றின் சிந்தனை மற்றும் பார்வை எத்தகையது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

ஆயிரக்கணக்கான மக்களை தினமும் அழித்துக் கொண்டிருக்கிற தாக்குதல்களை நிறுத்துமாறு உலகின் அதியுச்ச நீதிமன்றக் கட்டமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச நியமங்களை மதித்து நடக்குமாறு சொல்லியிருக்கிறது.

காஸாவில் குறுகிய பிரதேசத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் என்பதோ, தாக்குதல் தொடர்ந்தால் அப்பாவி மக்களின் அழிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதோ சர்வதேச நீதிமன்றிற்கு தெரியாத சமாச்சாரங்கள் இல்லை. 

அப்படியிருந்தும் தாக்குதலை நிறுத்துமாறு தீர்ப்பில் சொல்லப்படவில்லை.

இவ்வாறான சம்பங்கள் ஊடாக, சர்வதேச கட்டமைப்புக்களின் மனோநிலையையும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் எத்தகையவை என்பதையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175018

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அதாவது எங்களது தமிழ் தலைகள் இனி கொண்டு செல்வதட்கு ஒன்றுமில்லை என்று சொல்ல வருகிறீர்கள். 😜

  • கருத்துக்கள உறவுகள்

கவுரவ குத்தியருக்கு இதிலொரு சந்தோஷய.

இவ்வளவு நாளும் சர்வதேசம் வந்தால் தானும் சிலவேளை போகவேண்டி வருமோ எண்டு ஜோஜனா ஈந்திருக்கும் ..

இனியென்ன ஏகேடி க்கு மந்திரிக்க என்ன செய்யலாம் எண்டு வியூகம் போட வாண்டியது தானே ....

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணை என்பது நடக்கப்போவதில்லை என்பது உலக அரசியலை கவனிக்கும் சாதாரண மக்களுக்கு எப்பவோ தெரிந்த விடயமே. 2009 வரை தமிழ் ஈழம் என்ற வெற்றுக் கோஷத்துடன் தமிழ் அரசியல் வலம் வந்தது. இப்போது அந்த இடத்தை சர்வதேச விசாரணை, இனக்கொலை போன்ற சொல்லாடல்கள் நிரப்பி உள்ளது அவ்வளவு தான்.  மொத்தத்தில் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள (புலம் பெயர், தாயக) உள்ள அனைவருமே சுத்து மாத்துக்கள் தான்.

உண்மையில் தமிழ் அரசியல் பரப்பில் இவ்வாறாக நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகளுடன் வலம் வரும் சுத்து மாத்துக்களின் குரல் பலமாக உள்ளவரை டக்லஸ் போன்ற அரசியல்வாதிகளின் காட்டில் மழை தான். 

உண்மையில் தமிழ் அரசியல் ஆரோக்கியமாக  தன்னை மாற்றி கொள்வதை டக்லஸ் போன்ற ஆளும் அரசை அண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சர்வதேச விசாரணை என்பது நடக்கப்போவதில்லை என்பது உலக அரசியலை கவனிக்கும் சாதாரண மக்களுக்கு எப்பவோ தெரிந்த விடயமே. 2009 வரை தமிழ் ஈழம் என்ற வெற்றுக் கோஷத்துடன் தமிழ் அரசியல் வலம் வந்தது. இப்போது அந்த இடத்தை சர்வதேச விசாரணை, இனக்கொலை போன்ற சொல்லாடல்கள் நிரப்பி உள்ளது அவ்வளவு தான்.  மொத்தத்தில் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள (புலம் பெயர், தாயக) உள்ள அனைவருமே சுத்து மாத்துக்கள் தான்.

நூறுவீதம் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற விசாரணைகளில் குற்றவாளிகள் இவ்வாறு அதிருப்தியும் மக்களை குழப்பி மேலும் நாசங்களை தொடர்வதை கண்டும் காணாமலும் இருக்க பழக்குவதும் வழமை தான்.

பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதி கோரி தமக்கான நீதி கிடைக்கும் வரை எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அது அவர்களது வலி. அதனை அவர்கள் மட்டுமே உணர்வார்கள். அதற்கு பக்கபலமாக இருப்பவர்களை கூட இவர் போன்ற குற்றவாளிகளுக்கு பைத்தியங்களாக தான் தெரியும். எல்லாவற்றையும் இழந்து போராடும் கூட்டத்தை பிழைக்க தெரியாத பைத்தியங்களாகவும் சுயநலவாதிகளை புத்திசாலிகளாக வளைந்து நெளிந்து தம்மை வளப்படுத்திய சாதனையாளர்களாகவும் போற்றுவது தானே இன்றைய உலக நிலை. 

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் கொலை செய்தவர்களிடமே நீதி கேட் குமாறு கோருகிறாரா? உள்ளக பொறிமுறை என்பது அது தானே?

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்டவர்கள் நீதி கோருவது இயல்பானது.  அது நடந்தால் அனைவருக்கும் மகிழ்சசியே.

ஆனால்,  இன்றைய உலக நலன் சார் அரசியலில் அதன்  சாத்தியப்பாடு மிக குறைவாக இருக்கின்றது என்பது அரசியல் பொது அறிவு உள்ளவர்களுக்கு தெரிந்த விடயம். இந்நிலையில் தமிழரின் அரசியல் எதிர்காலம் அந்த விடயத்தில் மட்டும் தொங்கி பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்  உண்மையில் பைத்தியக்காரக்கரர்கள்  தான். தமிழ் மக்கள் இந்த பைத்தியக்கார மாயைக்குள் சிக்க க்கூடாது.  டக்லஸ் போன்றவர்களுக்கு இப்படி பைத்தியக்காரராக  தமிழ் அரசியல்வாதிகள்  இருப்பது நன்கு பிடிக்கும். 

Edited by island
எழுத்துப் பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுள்ளவன் என்று தம்மை தாமே பீத்திக்கொள்வோர் பாதிக்கப்பட்ட மக்களை, அவர்களின் அவலங்களுக்கான நீதி தேடுதலை பைத்தியக்காரத்தனம் என்பது மிருக குணத்தை உடையது. இதனால் இந்த அரக்கர்கள் எப்போதும் தமிழர்களின் மனங்களில் தள்ளியே உள்ளனர். 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

@விசுகு  நான் என்ன கூறினேன் என்று புரியவில்லையா அல்லது புரியாதது போல் நடிக்கின்றீர்களா?

  அறிவுள்ளவன் என்று என்னை நான் பீத்திக் கொள்ள வில்லை. இன்றைய நாடுகளின் தமது நலன் சார் அரசியலில் சர்வதேச விசாரணைக்கான சாத்தியப்பாடு மிகக் குறைவானது என்பதை பொது அரசியல் அறிவுடையோர் எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்றே கூறினேன். உங்களுக்கும் அது தெரியும். 

 நடைமுறை சாத்தியம் குன்றிய ஒன்றில் எமது மக்களின் அரசியல் முழுமையாக  தங்கி இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை எனபதை புரிந்தும்,  சர்வதேச விசாரணை மூலம் தமிழர் பிரச்சனையை தீர்க்கலாம் என்று சுத்து மாத்து காட்டும்    சுயநல அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளில் மாயை அரசியலை நம்புபவர்கள் உண்மையில் பைத்தியக்காரர்கள் தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது பக்கத்தில் சிங்களம் படைத்து வைத்து காத்திருக்க தமிழர்கள் அதை தட்டி விட்டு உலகத்திடம் சென்று தேவையற்ற பயனற்ற விடயங்களை பேசுவதாக இருக்கிறது. 

உண்மையில் சிங்களத்திற்கான ஒரு சிறிய அழுத்தமாகத்தான் தமிழினம் இதை செய்கிறதே தவிர இறுதியில் சிங்களத்திடம் தான் தீர்வு என்பது ஈழத்தில் இன்று பிறக்கும் குழந்தைக்கும் தெரிந்த விஷயம் தான். 

உங்கள் போன்ற மேதாவிகள் பிழை அல்லது செய்பவர்களை பைத்தியம் என்பீர்களே தவிர உங்களால் எதையும் பிரேரிக்க முன்னுதாரணமாக செயற்பட முடியாது தெரியாது. அதற்கான எந்த முயற்சியோ செயற்பாடோ செயல்முறைகளோ உங்களிடம் இல்லை. உங்களிடம் இருந்து வரவும் போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஜதார்தத்திற்கு புறம்பாக சுயநல அரசியலை செய்துவரும் புலம் பெயர் நாட்டு மற்றும் தாயக  அரசியல்வாதிகளின்   அரசியலை பற்றியே நான் பேசினேன். அதை பேசுவதற்கு உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் உள்ளது. செயற் திட்டங்களை செய்வது தலைமைகளே தவிர தனி மனிதர்கள் அல்ல.

உங்களால்  அரசியலில்  எந்த செயற் திட்டத்தையும் செய்ய முடியாதது  போலவே எனக்கும் செய்ய முடியாது.  

தற்போதைய நிலையில் நீங்கள் விசுவாசம் வைத்திருக்கும் புலம் பெயர் மற்றும் தாயக அரசியல்வாதிகளிடமேயே எந்த செயற் திட்டமும் இல்லாது  காலத்தை வீண்டிக்கும்  போது நீங்கள் என்னிடம் செயற்  திட்டத்தை பற்றி பேசுகின்றீர்கள். 

தர்ககரீதியில் கருத்தாட முடியாத போது  கருத்தாடும் எதிர்தரப்பு மீது அபாண்டமாக பழி போட்டு  நான் சொல்லாததை சொன்னதாக பொய்யுரைத்து  விவாதம் செய்வது உங்களைப் போன்றவர்களின் வழமையான  பாணிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, island said:

மேடைப் பேச்சுக்களில் நம்பிக்கை இல்லை. செயல் வடிவம் முக்கியம். 

மற்றவரை அல்லது அமைப்புக்களை பிழை அல்லது தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று சொல்லி கை விரல் நீட்டும் போது மிகுதி நான்கு விரல்கள் எம்மை நோக்கி நாணி கோணி விழுவதை மறத்தல் அல்லது மறுத்தல் ஆகாது. டொட். 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

மேடைப் பேச்சுக்களில் நம்பிக்கை இல்லை. செயல் வடிவம் முக்கியம். 

மற்றவரை அல்லது அமைப்புக்களை பிழை அல்லது தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று சொல்லி கை விரல் நீட்டும் போது மிகுதி நான்கு விரல்கள் எம்மை நோக்கி நாணி கோணி விழுவதை மறத்தல் அல்லது மறுத்தல் ஆகாது. டொட். 

உங்களது இந்த அட்வைஸை நீங்களே கடைப்பிடிப்பதில்லை. இதே யாழ்களத்தில் எத்தனை முறை அரசியல்வாதிகளை நீங்கள் விமர்சித்திருப்பீர்கள் என்பதை கள பதிவுகளை பார்ததாலே  தெரியும். 

உங்களுக்கு  ஒவ்வாத  கருத்துக்களுக்கு ஜதார்ததமாக தர்ககரீதியில் பதில் கூற முடியாத போது எரிச்சலுடன்  ஒன்றில் எதிர்க்கருத்தாளர் மீது அபாண்டமாக பழி போடுவது அல்லது இப்படிப்பட்ட ஒரு சில மனப்பாடம் செய்யப்பட்ட வசனங்களை ஒப்புவிப்பது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

எந்த அரசியல்வாதியை விமர்சித்தேன் என்று சொன்னால் பதில் சொல்லமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

எந்த அரசியல்வாதியை விமர்சித்தேன் என்று சொன்னால் பதில் சொல்லமுடியும்.

 விசுகு,  உங்கள் பழைய அரசியல் பதிவுகளை கிண்டியெடுத்து,  நீங்கள் தாயக  அரசியல் நடவடிக்கைகளை அல்லது அரசியல்வாதிகளை விமர்சித்த பதிவுகளை தேடியெடுக்க இப்போது என்னால் முடியாது. ஒவ்வொரு பதிவாக வாசித்து அதை செய்ய நீண்ட நேரம் எடுக்கும். 

 ஆனால், யாழ் இணையத்தில் பல கள உறவுகள் தாயக அரசியல்வாதிகளின்  அரசியலை  விமர்சித்த துள்ளபோதும் அந்தப்  பதிவுகளில் எனது பதிவுகளை தவிர வேறு பதிவுகளில் வந்து  அவ்வாறு விமர்சிப்பது தவறானது என்று நீங்கள்  கூறவில்லை.  ஏன் தாயக அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்ககையை விமர்சித்து அவதூறு புரிந்த  பதிவுகளில் கூட நீங்கள் அது தவறு என்று கூறவில்லை.  

நிற்க,  தாயக அரசியலை விமர்சிப்பது தவறான செயல் அல்ல.  தமிழ் பொதுமக்கள்  அனைவருக்கும் அந்த உரிமை உள்ளது. அதன் பிரகாரமே இங்கு கள உறவுகள் அதை செய்கிறார்கள்.  அது உலகம் முழுவதும் ஜனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். பொது வாழ்வில் இவ்வாறான விமர்சனங்கள் தேவை. தாயகத்தில்  மக்களின் அரசியலை தீர்மானித்த/ நடைமுறையில் தீர்மானம் எடுக்கும் அனைவரையுமே விமர்சிக்கும் உரிமை பொது மக்களுக்கு உண்டு. இதில் விதிவிலக்கு எவருக்கும் இல்லை. 

விமர்சனம் என்பது அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை மட்டுமேயன்றி அவர்களது தனிப்பட்ட வாழ்வைப்பற்றதல்ல.   

தாயக/ புலம் பெயர் அரசியலை விமர்சிப்பது தவறு என்று நீங்கள் முடிவெடுத்து அதை எதிர்காலத்தில் செயற்படுத்தினால் அதை செய்யும் முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. அதில் எவரும் தலையிட  முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2024 at 03:45, ஏராளன் said:

மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே போல சிறிலங்கா அரசுடன் பேசுவதும் அர்த்தமற்றது என்பது தமிழ் மக்களின் அனுபவரீதியான வெளிப்பாடு....

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, island said:

 விசுகு,  உங்கள் பழைய அரசியல் பதிவுகளை கிண்டியெடுத்து,  நீங்கள் தாயக  அரசியல் நடவடிக்கைகளை அல்லது அரசியல்வாதிகளை விமர்சித்த பதிவுகளை தேடியெடுக்க இப்போது என்னால் முடியாது. ஒவ்வொரு பதிவாக வாசித்து அதை செய்ய நீண்ட நேரம் எடுக்கும். 

 ஆனால், யாழ் இணையத்தில் பல கள உறவுகள் தாயக அரசியல்வாதிகளின்  அரசியலை  விமர்சித்த துள்ளபோதும் அந்தப்  பதிவுகளில் எனது பதிவுகளை தவிர வேறு பதிவுகளில் வந்து  அவ்வாறு விமர்சிப்பது தவறானது என்று நீங்கள்  கூறவில்லை.  ஏன் தாயக அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்ககையை விமர்சித்து அவதூறு புரிந்த  பதிவுகளில் கூட நீங்கள் அது தவறு என்று கூறவில்லை.  

நிற்க,  தாயக அரசியலை விமர்சிப்பது தவறான செயல் அல்ல.  தமிழ் பொதுமக்கள்  அனைவருக்கும் அந்த உரிமை உள்ளது. அதன் பிரகாரமே இங்கு கள உறவுகள் அதை செய்கிறார்கள்.  அது உலகம் முழுவதும் ஜனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். பொது வாழ்வில் இவ்வாறான விமர்சனங்கள் தேவை. தாயகத்தில்  மக்களின் அரசியலை தீர்மானித்த/ நடைமுறையில் தீர்மானம் எடுக்கும் அனைவரையுமே விமர்சிக்கும் உரிமை பொது மக்களுக்கு உண்டு. இதில் விதிவிலக்கு எவருக்கும் இல்லை. 

விமர்சனம் என்பது அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை மட்டுமேயன்றி அவர்களது தனிப்பட்ட வாழ்வைப்பற்றதல்ல.   

தாயக/ புலம் பெயர் அரசியலை விமர்சிப்பது தவறு என்று நீங்கள் முடிவெடுத்து அதை எதிர்காலத்தில் செயற்படுத்தினால் அதை செய்யும் முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. அதில் எவரும் தலையிட  முடியாது. 

உங்களது இந்த அட்வைஸை நீங்களே கடைப்பிடிப்பதில்லை. இதே யாழ்களத்தில் எத்தனை முறை அரசியல்வாதிகளை நீங்கள் விமர்சித்திருப்பீர்கள் என்பதை கள பதிவுகளை பார்ததாலே தெரியும். 

உங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களுக்கு ஜதார்ததமாக தர்ககரீதியில் பதில் கூற முடியாத போது எரிச்சலுடன் ஒன்றில் எதிர்க்கருத்தாளர் மீது அபாண்டமாக பழி போடுவது அல்லது இப்படிப்பட்ட ஒரு சில மனப்பாடம் செய்யப்பட்ட வசனங்களை ஒப்புவிப்பது. 😂

என் கருத்துக்களை வாசிக்கவில்லை என்றால் 

இத்தனையும் பொய்யான புனைதல் தானே.?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

நிச்சயமாக இல்லை. உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் தேடியெடுத்தால் உண்மை  தெரியும். உங்கள் மனச்சாட்சிக்கும் அது தெரியும்.  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நீதித்துறையின் சீரழிவே சர்வதேச நீதிமன்றத்தினை நாட மக்கள் விரும்புகிறார்கள், மக்கள் அனைத்தினையும் சகித்து வாழவேண்டும் என கூறுவதன்மூலம் கொஞ்ச நஞ்சமுள்ள சாதாரண மனிதர்களின் உரிமைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு காட்டு இராஜ்ஜியம் செய்ய அமைச்சர் விரும்புகிறார்.

இதனை எப்படி பகிரங்கமாக கூறுகிறார்கள்? எதிர்காலத்தில்  மக்கள் சிந்திப்பதனை நிறுத்திவிடவேண்டும் என விரும்புகிறார்கள்.

ஆரம்ப பாடசாலை தமிழ் புத்தகத்தில் பக்தூர் எனும் கதை உள்ளது ரவீந்திரனாத் தாகூர் காதாசிரியர் என கருதுகிறேன்) ஒர் ஒநாய் ஒரு செல்வந்தர் வீட்டில் வசிக்கும் நாயின் செல்வசெழிப்பை பார்த்து தானும் அங்கு வாழ விரும்பும், அந்த நாயும் தன்னை எவ்வாறு அந்த வீட்டினர் கவனித்து கொள்கிறார் என கூறிகொண்டு வீடுவரை வந்துவிடும், ஓநாய் நாயின் கழுத்தில் ஒரு பட்டி காணப்பட அது என்ன என வினவ தன்னை கட்டிப்போட பயன்படுத்தும் பட்டி என நாய் கூற  ஓநாயிற்கு புரிந்தது  நாயின் நிலை.

தொடர்ந்து நியாத்திற்காக போராடமல் விட்டால் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் ஆபத்தாக முடிந்துவிடும்.

நீதியினை இலங்கையில் கோருவது மாயை என இலங்கை அமைச்சர் தன் வாயாலேயே கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, island said:

நிச்சயமாக இல்லை. உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் தேடியெடுத்தால் உண்மை  தெரியும். உங்கள் மனச்சாட்சிக்கும் அது தெரியும்.  

நான் ஒன்றை கேட்டேன். உங்களிடம் இல்லை. எதுக்கு சும்மா எதுகை மோனை விளையாட்டு,?

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே. 

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் நீதிமன்றம் அல்லது சர்வதேச நீதிமன்றம்   நடத்தப்படும். வழக்குகள் வெல்வது    தோற்பது  சாதாரணமாக நிகழும் நிகழ்வுகள்  இதனை வைத்து  வழக்குகள்  போடாதே  என்று கூறுவது அதுவும் ஒரு அமைச்சர் கூறுவது  கேலிகூத்தாகும். 

இந்த அமைச்சர்  விருப்பம் என்ன??? சர்வதேச நீதிமன்றத்தில் தமிழருக்கு சார்பாக வழக்கு தோற்க வேண்டும் என்பது தானே??  வெல்ல வேண்டும் என்பது இவருடைய விருப்பம் இல்லையே !   எனவே  சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அமைச்சர் விருப்பம் நிறைவேறும்   அதை ஏன் எதிர்க்க வேண்டும் ??  இங்கே முகத்திரை கிழிச்சது அமைச்சருக்கு தான்  சர்வதேச நீதிமன்றத்துக்கு அல்ல  

வழக்கு தோற்க்கும். என்று எந்தவொரு வழக்கினையும். போடமால் விடுவதில்லை   எனவேதான் தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்தை  தெரிவு செய்வது கோருவது சரியானது ஆகும்  நாங்கள் எங்கள் பக்கத்து நியாயத்தை  எடுத்து உரைக்க வேண்டும்  தீர்ப்பை நீதிமன்றம் தான் வழங்க வேண்டும்  நாங்கள் தீர்ப்பை வழங்குவது கூடாது   தீர்ப்பு எப்படியுமிருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நீதியினை இலங்கையில் கோருவது மாயை என இலங்கை அமைச்சர் தன் வாயாலேயே கூறுகிறார்.

மேலே ஏராளன் தந்த செய்தியில் இப்படி தான் உள்ளது.

👇

தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கடந்த காலத்தில் இலங்கை ஸ்கொட்லன்ட் யார்டின் உதவியினை நாடியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

போராடினோம்  தோற்றோம்.   கவலைப்பட்டோம்.  அதேபோன்று சர்வதேச நீதிமன்றத்தில் நம்பிக்கை வைத்து வழக்கு தாக்கல் செய்வோம்’’  வெல்லும் அல்லது தோற்க்கும்  அமைச்சர் ஏன் வழக்கு வேண்டாம் என்கிறார்?? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.