Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                 அக்காவின் அக்கறை 

 

அன்பாய் என்னை அருகிலிருத்தி 

வலிக்காமல் தலைவாரி 

வகிடெடுத்த பின்னாலே 

சித்திரமாய் திலகமிட்டுடுவாள் 

 

தந்தையே தடியெடுத்திடினும் 

தானோடி வந்து தாவியெடுத்தென்னை 

தன்னோடணைத்து தான் அடிவாங்கி

என்துயர் போக்கிடுவாள் 

 

முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி 

எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் 

பின் எல்லோரையும் தள்ளி விட்டு 

எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் 

 

கபடி விளையாடுகையில் 

கிளிபோலப் பறந்து பறந்து 

காலாலே கலங்கடித்து 

காளையரையும் விரட்டிடுவாள் 

 

எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் 

எப்போதும் சண்டையும் சச்சரவும் 

கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட 

கோலிகுண்டால் எறிந்து கொண்டு  பின்னாலே ஓடுவாள் 

 

முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து 

முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில் 

முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து 

தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள் 

 

அக்காளும் முன்போல் இல்லை 

குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு 

தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று 

தளராமல் அடிக்கின்றார் அக்காளை 

 

அன்று என்னைப் பொத்திக் காத்தவளை 

அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை 

குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது 

வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள் 

 

படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி 

தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் 

உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் 

என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை 

 

விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை

அணைத்தெடுக்கையில்  அருகே வருகின்றான் முகுந்தனும் 

இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல 

அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......!

 

ஆக்கம் சுவி ......!

யாழ் அகவை 26 க்காக ........!  

 

  • Like 15
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்காவும் ஒரு அம்மாதான், அக்கா இருப்பவர்கள் 2 அம்மாவின் அன்பில் வளர்ந்திருப்பார்கள், நான் அதை அனுபவித்தேன், நன்றி சுவி பகிர்வுக்கு

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது சுய ஆக்கத்தைப் கவிதையாகப் பதிவிட்ட சுவி அண்ணாவுக்கு வாழ்த்துகள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2024 at 19:04, suvy said:

அன்று என்னைப் பொத்திக் காத்தவளை 

அக்கா, தம்பிக்கு இன்னும் ஒரு அம்மா

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இல்லை ஆனாலும் ஊர் முழுக்க சொந்தங்கள்  ஆக்கம் தொடங்கியாச்சு வாழ்த்துக்கள் சுவி அண்ணை 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அக்கா இல்லை ஆனாலும் ஊர் முழுக்க சொந்தங்கள்  ஆக்கம் தொடங்கியாச்சு வாழ்த்துக்கள் சுவி அண்ணை 

என்னப்பா எங்க? ஆளைக் காணல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

என்னப்பா எங்க? ஆளைக் காணல?

இலங்கையில இருக்கிறதே பெரிய விசயம்பா 

நீங்களாவது நினைவில் வைத்திருப்பதில் சந்தோசம் யாழ் இணையத்தில்🙄🙄🤩

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில இருக்கிறதே பெரிய விசயம்பா 

நீங்களாவது நினைவில் வைத்திருப்பதில் சந்தோசம் யாழ் இணையத்தில்🙄🙄🤩

நாங்களும் " காணவில்லை" பகுதியில் தேடினோமே   ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

நாங்களும் " காணவில்லை" பகுதியில் தேடினோமே   ?

ஓ மிக்க நன்றி உங்கள் தேடலுக்கு அக்கா  
நான் அதைப் பார்க்கவில்லை மன்னிக்கவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2024 at 19:04, suvy said:

படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி 

தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் 

உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் 

என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை

கவிதை அருமை   வாழ்த்துக்கள் சுவி அண்ணை   ஆனால் இப்படி ஒரு மாமி.  தவம் இருந்து தேடினாலும். கிடையாது 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2024 at 18:04, suvy said:

விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு

 பெம்பிளைப் பிள்ளையைப் பெத்து விட்டு விக்கித்து நிக்காமல் இருக்கத்தான் முந்தி பொத்திப்பொத்தி வளக்கிறவையாக்கும்! 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2024 at 20:09, ஈழப்பிரியன் said:

மொத்தத்தில் அக்கா ஒரு தளபதி.

 

On 4/2/2024 at 12:16, உடையார் said:

அக்காவும் ஒரு அம்மாதான், அக்கா இருப்பவர்கள் 2 அம்மாவின் அன்பில் வளர்ந்திருப்பார்கள், நான் அதை அனுபவித்தேன், நன்றி சுவி பகிர்வுக்கு

 

On 4/2/2024 at 12:30, ஏராளன் said:

முதலாவது சுய ஆக்கத்தைப் கவிதையாகப் பதிவிட்ட சுவி அண்ணாவுக்கு வாழ்த்துகள்.

தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி........!   😁

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய் Minnambalam Login1Nov 08, 2024 11:58AM நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தலைவர் விஜய் இன்று (நவம்பர் 😎 பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டிற்கு முன்பு வரை விஜய்யை ஆதரித்து சீமான் பேசி வந்தார். மாநாட்டின் போது திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரண்டு கண்கள் என்று விஜய் பேசியதற்கு சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து “சீமான் அவரது இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் அதை தங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை” என தவெக நிர்வாகி சம்பத் குமார் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் தவெக தலைவர் விஜய் “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக சீமான் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் இணையத்தில் காரசாரமான கருத்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், சீமானுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.   https://minnambalam.com/political-news/tvk-vijay-wishes-seeman-on-his-birthday/
    • அஞ்சு வயசுப் பொடியள் மாதிரி மைக்கைப் பிடிச்சுக்கொண்டு சுத்துறவையை வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும் கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் எனக்கு எரிச்சல்வரும்😆
    • சுமந்திரன் கண்ட பகல் கனவு! November 7, 2024   — அழகு குணசீலன் — பொதுத்தேர்தல் களநிலவரங்களின்படி ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் எதிரணியின் ஆதரவு தேவைப்படும் என்பது வெளிச்சமாகிறது. இதற்கு சிங்கள, சோனக தரப்பில் இருந்து ஆதரவைப்பெறுவதற்கு அவர்  முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக தமிழ்தரப்பின் தமிழ்த்தேசிய, இணக்க அரசியல் பலவீனத்தை பயன்படுத்தி ஆதரவைப் பெறுவது இலகுவானது என்று கருதி இருக்கக்கூடும். அதேவேளை ஒரு தரப்பில் மட்டும் தங்கியிருக்காமல் இரண்டு தரப்புக்களுக்கும் நம்பிக்கையை கொடுத்து வீடு இல்லையென்றால் வீணை என்ற நிலையில் தான் அநுரவின் நகர்வுகள் அமைந்திருக்கின்றன.     தன்னை வந்து சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரனுடனும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் ஜனாதிபதி என்ன பேசினார் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் தெற்கில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தான் வடக்கு தமிழ்தலைவர்களுடன் பேசுகிறேன், தொடர்பில் இருக்கிறேன் என்று ஜனாதிபதி அநுரகுமார பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சை அல்லது ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து படம் எடுத்துக்கொண்ட போது இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றத்தை தமிழ் அரசியல் வாதிகள் அரைகுறையாக விளங்கிக்கொண்டு அல்லது தங்கள் விருப்பத்திற்கு அதற்கு அர்த்தம் கற்பித்து பூனையை ஆனையாக்கி  தங்களை அமைச்சராக கனவு கண்டிருக்கிறார்கள் என்றே கொள்ளவேண்டி உள்ளது.  அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறோம் என்று இவர்கள் சொன்னதன் அர்த்தம் அநுரவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது.  இதுவும் ஆதரவுக்கு சாராயத்தவறணை கேட்டதுபோல் அமைச்சர் பதவி கேட்டல்.  இது ஊழலா? இல்லையா? என்.பி.பி.யிடம் தான் கேட்கவேண்டும். சுமந்திரன், டக்ளஸை அநுர நம்புவதற்கு வெறுமனே பாராளுமன்ற இடைவேளை இலைக்கஞ்சி  மற்றும் தனிப்பட்ட சந்திப்பும் -உரையாடலும் மட்டும் காரணமல்ல. அதற்கும் மேலாக காரணங்கள் உண்டு. என்.பி.பி.யின் அல்லது ஜே.வி.பி.யின் ஈழப்போர் குறித்த நிலைப்பாட்டிற்கும்,  இவர்கள் இருவரின் நிலைப்பாட்டிற்கும், அநுரகுமார திசாநாயக்கவின் நிலைப்பாட்டிற்கும் முக்கிய அம்சங்களில் வேறுபாடு இல்லை. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை சுமந்திரனும், டக்ளசும் பயங்கரவாதப்போராட்டம் என்பவர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்பவர்கள். இறுதியுத்தத்தில் நடந்தது இனவழிப்பு அல்ல என்பவர்கள். சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவையற்றது அல்லது அதை சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பவர்கள். இதன் மூலம் மறைமுகமாக இராணுவம் தண்டிக்கப்படாத உள்ளக பொறிமுறைக்கு ஆதரவு வழங்குபவர்கள். ஒட்டு மொத்தத்தில் அநுரகுமாரவின் கடந்த காலத்தை  மறைக்க அவர் இனவாதியல்ல என்றும் வெள்ளையடிப்பவர்கள்.  மறு பக்கத்தில் அமைச்சரவையில் ஒரு தமிழரையாவது வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலில் ஜனாதிபதிக்கு உள்ளது. அண்மைக்காலமாக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சுமந்திரன் அமைச்சர் பதவி பற்றி வெளிப்படையாக பிரஸ்தாபிக்கிறார். அமைச்சர் பதவியையிட்டு பரிசீலிக்க தயாராக இருப்பதாக பல தடவைகள் அறிவித்துள்ளார். அது பற்றி ஊடகவியலாளர்கள் கேட்கும் போது புளகாங்கிதம் அடைகிறார். ஜே.வி.பி. யாழ்.மாவட்ட அமைப்பாளர் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை அழைத்து வந்து யாழில் ஊடகச்சந்திப்பு நடாத்தி  இவர்களின் பிரச்சார யுக்தியை மறுத்திருந்தபோதும் சுமந்திரன் அமைச்சர் பதவி குறித்து தொடர்ந்தும் பேசி வந்தார். சிலவேளை அது தனக்கல்ல டக்ளஸ்க்கு என்று நினைத்தார் போலும். இதனால் தான் அமைச்சராவதை நியாயப்படுத்தும் வகையில் சில நகர்வுகளை  தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தார். தேர்தலின் பின்னர் இது குறித்து மக்கள் அறிந்திருந்தார்கள் என்றும் தமிழரசுக்குக்கிடைத்த தேர்தல் வெற்றி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான தமிழ்மக்களின் அங்கீகாரம் என்றும் சுமந்திரன் அறிவிக்கக்காத்திருந்தார். இதே பாணியில் தான் சுமந்திரன் சம்பந்தரை பதவி விலக கோரியபோதும்  திருகோணமலை மக்கள் எனது முதுமையை அறிந்துதான் தனக்கு வாக்களித்ததாகவும் அது மக்களின் அங்கீகாரம் என்றும் கூறி சம்பந்தர் பதவிவிலக மறுத்திருந்தார்.  அண்மையில்  ஒரு கூட்டத்தில் செல்லையா குமாரசூரியர், கதிர்காமர் ஆகியோருடன் மு.திருச்செல்வத்தை ஒப்பிட்டு சுமந்திரன் பேசியிருந்ததும் மற்றொரு காய்நகர்வு. இதன் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படாத, நியமிக்கப்பட்ட கடந்தகால தமிழ் அமைச்சர்கள் போன்று தான் செயற்பட மாட்டேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட திருச்செல்வம் போல் செயற்படுவேன் என்பதாகும். தேவை ஏற்பட்டால் அமைச்சர் பதவியை திருச்செல்வம் போன்று இராஜினாமாச் செய்வேன் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார். நல்லையா, கே.டபிள்யு.தேவநாயகம், செ.இராசதுரை ஆகியோரை சுமந்திரன் பெயர் குறிப்பிடாதற்கும், ஏன்? டக்ளஸ் தேவானந்தாவை பெயர் குறிப்பிடாததற்கும் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று தனது நிலைப்பாட்டிற்கு நியாயம் கற்பிக்க முயற்சித்ததே காரணம். 1965 இல் இருந்த அரசியல் சூழ்நிலை வேறு இன்றைய அரசியல் சூழ்நிலை வேறு. அன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்திலே தமிழரசுக்கட்சி தொடர்ச்சியாக கொழும்பு அரசியலில் தோல்வியடைந்து வந்துள்ளது. அந்த  தோல்வியின் இடத்திற்கு தமிழரசை கொண்டு வந்து சேர்த்திருப்பவர் சுமந்திரன். இன்றைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமானது. திருகோணமலையை புனிதநகராக பிரகடனம் செய்வதிலும், திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதிலும்  திருச்செல்வம் தோற்றுப் போனார்.  திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அல்ல இந்து பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்ற ஜீ.ஜீ. பொன்னம்பலத்திடம் தமிழரசு தோற்றுப்போனது.  கிழக்கு மாகாணத்தில் முதல் பல்கலைக்கழகம் அமைந்துவிடும் என்பதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட வைக்கோற்பட்டறை நாய் அரசியல் இது.  அது மட்டுமா ? மன்னம்பிட்டி பாலம்வரை இருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லையை தீர்க்கதரிசனமற்ற அரசியலால் பொலனறுவை மாவட்டத்திற்கு பிரித்துக் கொடுத்தவர்  அன்றைய  உள்ளூராட்சி அமைச்சராக இருந்த  சுமந்திரன் முன் உதாரணம் காட்டும் இந்த திருச்செல்வம். இந்த நிலையில் சுமந்திரனின் அமைச்சர்பதவி “ஆதரவு” கருத்துக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் தீவிர தமிழ்த்தேசிய பிரிவினரிடம் இருந்து எதிர்ப்பு குரல் எழும்பியது. சுமந்திரனின் சகா சாணக்கியனும் அமைச்சர் பதவி பற்றி மட்டக்களப்பு சந்திப்புக்களில் பேசி வந்தார். இந்த நிலையில் சிறிதரன் தரப்பும், மட்டக்களப்பில் சிறிநேசன், அரியநேத்திரன் ஆகியோரும் அமைச்சர் பதவி “பரிசீலிப்புக்கு” எதிராக கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.  “அமைச்சர் பதவிக்காக தமிழரசுக்கட்சியை தந்தை செல்வா உருவாக்கவில்லை. அமைச்சு பதவிக்காக எனில் தமிழரசுக்கு எவரும் வாக்களிக்கத் தேவையில்லை” என்று சுமந்திரன், சாணக்கியன் தலையில் ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியம்.   மறுபக்கத்தில் முல்லைத்தீவு பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அபயசேகரவும் அரசாங்கத்தின் திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.”  வேறு எந்த கட்சியில் இருந்தும் அமைச்சர்களை நியமிக்க மாட்டோம். இருபத்தைந்து அமைச்சர்களும் என்.பி.பி. உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று  அறிவித்தார். அப்போது தான் சுமந்திரன்”ஞானம்” பெற்றவராக பரிசீலிப்பது என்றுதான் கூறினேன் என்றும், அது அமைச்சர் பதவியை ஏற்பதாகாது, அதைக்கட்சியே தீர்மானிக்கும் என்றும்   வழமையான சுத்துமாத்து அப்புக்காத்துதன வாதத்தை முன் வைத்து மறுதலித்துள்ளார். கட்சியே தானாக இருக்கையில் கட்சி எப்படி தீர்மானிப்பது. சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பாக யாழ், கொழும்பு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டு இருந்தன. வாரத்திற்கு இருமுறை முன்னாள் அமைச்சர் உதய கம்பவெல  சுமந்திரனுக்கு வெளிநாட்டு அல்லது நிதி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், சமஷ்டி தீர்வு வழங்கப்படபோகிறது என்றெல்லாம் இனவாத தொனியில் கருத்துக்களை வெளியிட்டுவந்தார். அவற்றை எல்லாம் கேட்டும், படித்தும் வந்த சுமந்திரன் கடந்த ஒரு மாதகாலமாக எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. அல்லது “பரிசீலனை” க்கு வியாக்கியானமும் கொடுக்கவில்லை. அவர் கனவுலகில் அமைச்சராகவே பவனிவந்தார்.  பிரதமர் ஹரிணி அபயசேகர வடக்கு தமிழ்மக்களை ஏமாற்று பேர்வழிகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். அதற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு எம்.பி.யை என்.பி.பி.க்கு வழங்கி நன்றி செலுத்தினாலும் தகும். இல்லாவிட்டாலும் என்.பி.பி.யின் தேசிய பட்டியல் ஊடாக இராமலிங்கம் சந்திரசேகர் புதிய அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமைச்சர் கனவு என்றால் …..,  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை  குறித்த இரகசியம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. உண்மையில் அநுரகுமார திசாநாயக்க ஆட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்பவில்லை என்று புகலிட ஜே.வி.பி.வட்டாரங்களில் கசிகிறது.  அதற்காகத்தான் பிரச்சாரங்களின்போது 113 அல்லது 120  பற்றி அவர்கள் பேசுகிகிறார்களாம். இந்த இலக்கில் தமிழரசு,ஈ.பி.டி.பி. போன்ற பலவீனமான கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கொண்டு நடாத்த முடியும் என்று நம்புவதாக தெரிகிறது.  மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகார பகிர்வு, புதிய அரசியலமைப்பு போன்றவற்றை தட்டிக்கழிப்பது கஷ்டம் என்று உள்ளுக்குள் கதையடிபடுகிறது.  இன்னொரு புறத்தில் வாக்குறுதியளித்தபடி  நிறைவேற்று அதிகார முறையை. ஒழிக்கவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இவற்றை தவிர்ப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் இருப்பதே மேல் என்றும், இதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பிராந்திய, சர்வதேச அழுத்தத்தை எதிர்க்கட்சிகளின் தலையில் கட்டிவிடலாம் என்ற வியூகம் வகுக்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைக்கிறது. இந்த அரசியல் வியுகத்திலேயே தென்னிலங்கையில் பலமான எதிர்த்தரப்பை தவிர்த்து பலவீனமான, நிபந்தனைகளை விதிக்க முடியாத அல்லது  அழுத்தம் தரும் சக்தியற்ற சிறுபான்மை கட்சிகளின் குறைந்த அளவான உறுப்பினர்களின் ஆதரவுடன் சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சியை நகர்த்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த அரசியலுக்கு  ஆதரவளிக்க வடக்கில் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி நடக்கிறது. சந்தர்ப்பத்திற்கு  ஏற்ப தந்திரோபாயங்களை வகுத்து பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கொள்வதும்  ஒரு மாற்றம் தானே….? இதுதான் சுமந்திரனின்  தேர்தல் விளம்பரம் சொல்லும் அடையாளம்மாறாத மாற்றம்……! ஆனால் போகிறபோக்கில்  தமிழின அடையாளமே  அழியப்போகிறது….!   https://arangamnews.com/?p=11415
    • ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார். அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏவை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார். சபாநாயகரும் குர்ஷித்தை அவரது இருக்கையில் சென்று அமர அறிவுறுத்தினார். என்றாலும் தொடர்ந்து அவர் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா, குர்ஷித்தை காப்பாற்ற முயன்றார். இதனிடையே, மக்கள் மாநாடு கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏகள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அந்தத் தீர்மானத்தில், "மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ஐ இயற்றியதையும், அரசியலமைப்புக்கு விரோதமாக ஒருதலைபட்சமாக சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்யப்பட்டதையும் இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தினையும் பறித்தது. இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கிய அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த பேரவை, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை அதன் அசல் தன்மையுடன் எந்த விதமான மாற்றமுமின்றி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் படி ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களை திரும்பப்பெறவும் கோருகிறது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம், அரசியல் சுயாட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனைத்து சிறப்பு வசதிகள் மற்றும் உத்தரவாதங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக புனிதத்தை மதிக்குமாறு மத்திய அரசினை நாங்கள் வலியுறுத்துகிறோம்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198117
    • பதிவு செய்யப்படாத ஆடம்பர காரினை 2020 முதல் லொகான் ரத்வத்தை பயன்படுத்தியுள்ளார் - விசாரணைகளின் மூலம் உண்மை வெளியானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான்ரத்வத்தை சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பரகாரினை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. லொகான் ரத்வத்தையின் மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொகான் ரத்வத்தை விசாரணையை குழப்ப முயன்றார் என பொலிஸ் சட்டப்பிரிவின் தலைவர் பிரதிபொலிஸ்மாஅதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல வீடியோக்கள் ஆவணங்கள் ரத்வத்தை அந்த காரை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அந்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத  வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்ட்டார். https://www.virakesari.lk/article/198166
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.