Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியாவின் திட்டம் என்ற வீடியோவில் செய்தியாளர் சொல்கின்றார் அந்த கட்சி தலைவர் சீனாவை மிகவும் எதிர்த்தாக அது உண்மையா

இவர்கள் சீனாவை ஒரு நாளும் எதிர்த்தது இல்லை. இந்தியாவைதான் எதிர்த்தார்கள். கடந்த வரம் கூட ஜேவிபி ராமலிங்கம் சந்திரசேகர் கிளிநொச்சியில் சீன வழங்கிய உதவிய உணவு பொருட்களை வழங்கும் போது சீன அரசியல் கட்சியுடன் தங்களுக்கு சிறந்த உறவு இருப்பதாக கூறினார்.

சில வேளைகளில் இந்தியர்கள் அப்படி கூறி ஆறுதல் பட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு பண பலமாக இருப்பது சீன என்பது ஊர் அறிந்த உண்மை

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இருக்கலாம்.   மேலே நுணாவிலானும் புரட்சிகர தமிழ்தேசியனும் தந்த வீடியோ தயாரித்தவர்கள்  அவர் தான் வரபோகிறது போல் பயமுறுத்துகிறார்கள்.

பொதுவாக ஜேவிபி நடத்தும் கூட்ட்ங்களில் பெருமளவான மக்கள் கூடடத்தை காணலாம் .  கடந்த காலங்களில் நிறையவே அப்படி நடந்து இருந்தது. அனாலும் கடந்த தேர்தலில் கூட அவர்களால் அதனை வாக்குகளாக மாற்றிக்கொள்ள முடியவில்லை. இருந்த பாராளுமன்ற எண்ணிக்கையும் குறைந்ததே ஒழிய கூடவில்லை.

அவர்களுக்கு 3 % வாக்குகள்தான் கிடைத்தது. எனவே இப்போது அவர்கள் ஒரேயடியாக 50 % இட்கு மேல் வாக்கு பெறுவார்கள் என்ற கருது கணிப்பு சரியாக இருக்க முடியாது.

அவர்களது கடந்த கால நடவடிக்கைகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ராணுவ குடும்பங்கள், அவர்களால் பாதிக்கப்படட மக்கள் என நிறைய எதிர் வோட்டுக்களாக காணப்படுகின்றன. நிச்சயமாக இம்முறை அவர்கள் கூடுதல் வாக்குகள் பெறுவார்கள் என்பது உண்மை. ஆனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லை என்பதை நிச்சயமாக கூறலாம்.

ராஜபக்சேக்களால் இனி முடியாது என்பதை அறிந்து கொண்ட சீன இவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதட்கு பெருமளவு பணத்தை செலவு செய்கின்றது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
31 minutes ago, Cruso said:

இவர்களைத் தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சீனா அல்ல,.......

AUS 

ஆச்சரியமாய் இருக்கலாம், ஆனாலும் அதுதான் உண்மை. 

@Cruso

 சித்தாந்த ரீதியாக அ அவர்கள் சோசலிசம் , பொதுவுடமைக் கொள்கையில் இருந்து விலகி பலநாளாகிவிட்டது. ..😀

சீனா ஒருபோதும் சிங்களத்துடன் சண்டையிடவில்லை, அவர்கள் மீது படையெடுக்கவில்லை, ஆதலால் அவர்களுக்கு சீனாவும், அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் ஒன்றுதான். எதிரி இந்தியா மட்டும்தான். இந்தியாவின் போடுதடியாக ஈழத்தமிழர் இருப்பதால் எங்கள் மீது சிங்களத்திற்கு எப்போதும் ஒரு பயம். 

இந்தியா அவர்களின் காலில் விழுவதற்குக் காரணம் அவர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பதுதான். ஆனாலும் இன்னும் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் JVP ஒருபோதும் பதவிக்கு வரப்போவதில்லை. 

நாம்தான்(அரசியல் தலைகள்) இந்தியாவின் சீலையில் தொங்கிக்கொண்டிருக்கிறோம்.  இந்தியாவிற்கு ஈழத்தமிழர் ஒரு பொருட்டே அல்ல. அவர்களுக்கு இலங்கையில் தனது பாதுகாப்புக்கு குந்தகமான எதுவும் நிலைகொள்ளக் கூடாது என்பது மட்டுமே குறிக்கோள். அதற்காக நாம் அவர்களுக்கு ஒரு போடுதடி அவ்வளவே. 

இந்திராகாந்தி இறந்துபோன விடயம் இன்னும் எமதாட்களுக்குட்த் தெரியவில்லை என்பது கவலையளிக்கும் விடயம். 

Edited by Kapithan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kapithan said:

இவர்களைத் தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சீனா அல்ல,.......

AUS 

ஆச்சரியமாய் இருக்கலாம், ஆனாலும் அதுதான் உண்மை. 

@Cruso

சீனா ஒருபோதும் சிங்களத்துடன் சண்டையிடவில்லை, அவர்கள் மீது படையெடுக்கவில்லை,..😀

உண்மை என்றால் எப்படி உண்மை? இவர்கள் பொதுவாக ஆங்கிலம் பேசும் நாடுகளுடன் தொடர்பு வைத்து கொள்ளுவதில்லை. இது ஒரு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 😗

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Cruso said:

உண்மை என்றால் எப்படி உண்மை? இவர்கள் பொதுவாக ஆங்கிலம் பேசும் நாடுகளுடன் தொடர்பு வைத்து கொள்ளுவதில்லை. இது ஒரு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 😗

கொஞ்சம் ஆழமாக நோண்டுங்கள். இது ஒன்றும் தங்கமலை இரகசியம் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Kapithan said:

இந்திராகாந்தி இறந்துபோன விடயம் இன்னும் எமதாட்களுக்குட்த் தெரியவில்லை என்பது கவலையளிக்கும் விடயம். 

இந்திரா காந்தி இந்திய பிரதமர் இலங்கை தமிழர்களின் மீது அக்கறை கொண்டவர் என்பது உங்களது நம்பிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இந்திரா காந்தி இந்திய பிரதமர் இலங்கை தமிழர்களின் மீது அக்கறை கொண்டவர் என்பது உங்களது நம்பிக்கை

அவர் இந்திய நலனில் அக்கறை கொண்டவர். ஆனால் எம்மவர்களுக்கு இந்திராகாந்தி இறந்ததே இன்னும் தெரியாது . 

🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

அவர் இந்திய நலனில் அக்கறை கொண்டவர். ஆனால் எம்மவர்களுக்கு இந்திராகாந்தி இறந்ததே இன்னும் தெரியாது . 

🤣

இதென்ன புது கதை. இந்திய பிரதமர் இந்தியாவில் அக்கறை கொள்ளாமல் இலங்கையிலா அக்கறை கொள்வார்?

அது சரி இந்திரா காந்தி உயிரோடு இருக்கிறாராமா? நான் இறந்து விடடார் என்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மகிந்த கும்பல்.. ரணில் கும்பல்.. (சஜித் யை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதினமில்லை..) க்கு மாற்றீடாக ஜே வி பி  வந்தால்.. என்ன என்று சிந்திக்கும் நிலை இலங்கை மக்களிடம் பரவலாக காண முடிகிறது. அந்த வகையில்.. ஹிந்தியா.. இவரை அழைச்சிருக்கலாம். 

Edited by nedukkalapoovan
Posted

புதுடில்லியில் அநுரகுமார: சாட்சிக்காரன் காலில் இந்தியா | உலக நகர்வுகள் | ஆய்வாளர் வேல்தர்மா

Posted

அனுரகுமார இந்திய உறவு! எதனால் இந்த அதிரடி மாற்றம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேரளா கைத்தொழில் அமைச்சர் ராஜீவை சந்தித்த அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர்

Published By: VISHNU

image
 
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கான  விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்துகொள்கின்ற இந்திய விஜயத்தின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் இன்றாகும்.

405066914_1425875148283465_5720067930784

இந்தியாவின் கமியூனிஸ்ட் கட்சியை (CPIM-Kerala) முதன்மையாகக்கொண்ட இடதுசாரிக் கூட்டமைப்பினால் அதிகாரம் வகிக்கப்படுகின்ற கேரளா மாநிலத்திலேயே இன்று அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள்.  மூன்று கோடியே ஐம்பது இலட்சத்திற்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட கேரளா மாநிலம் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் வேகமான முன்னேற்றமடைந்துள்ளது.  குறிப்பாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதியுயர் இடத்தை கேரளா உரித்தாக்கிக் கொண்டுள்ளது. 

405075302_311148761490324_81477248635866

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (09) முற்பகல்வேளையில் கேரளா தலைநகரமான திருவனந்தபுரத்தில்  மாநில அரசாங்கத்தின் கைத்தொழில்கள் மற்றும் சட்டம் பற்றிய அமைச்சர் ராஜீவை சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.  அமைச்சர் ராஜீவ் இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு அங்கத்தவராக விளங்குவதோடு கட்சியின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரைப்போன்றே ஒரு சட்டத்துறை பட்டதாரியுமாவார்.   

அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (Vikram Sarabhai Space Centre)  அவதானிப்புச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றனர். அந்த நிறுவனத்தின் பணிப்பாளருடன் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டதோடு  இந்திய விண்வெளி நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் தகவல்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.  விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின்  பிரதானமான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக அமைவதோடு அது இந்தியாவின் செய்மதி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அவசியமான ரொக்கெட்டுகளையும் விண்வெளிக் கலங்களையும் உற்பத்திசெய்து வருகின்றது. அதேவேளையில் தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவினர்  அதன் கட்டுப்பாட்டு நிலையத்தையும் விண்வெளி அரும்பொருட் காட்சியகத்தையும்  பார்வையிடுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொண்டனர்.  

அதன் பின்னர் மேற்படி குழுவினர் இந்தியத் தகவல் தொழில்நுட்ப துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற முதலாவதும் மிகப்பெரியதுமான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களிலொன்றான திருவனந்தபுரத்தின் Technopark இலும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தருடன் நிறுவனம் சம்பந்தமான  விசேட தகவல்கள் பற்றியும் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டனர்.   

இந்த  Technopark  1990 இல் கேரளா மாநில முதலமைச்சர்  ஈ. கே. நாயனாரின் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அது 800 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பினைக் கொண்டுள்ளதோடு கட்டிடத்தின் பரப்பளவு 10.6 மில்லியன் என குறிப்பிடப்படுகின்றது. அதற்குள் 480 கம்பெனிகள் இயங்கிவருவதோடு 70,000 பேருக்கு மேற்பட்ட தொழில்வாண்மையாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள்.  இது கேரள மாநில ஆட்சியின் கீழேயே நிருவகிக்கப்பட்டு வருகின்றது.      

அடுத்ததாக இந்த பிரதிநிதிகள் குழு   G Tech  நிறுவனத்தின் பிரதம செயலாளரால் முன்வைக்கப்பட்ட  தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான சமர்ப்பணத்தில்  பங்கேற்றதோடு கேரளா பல்கலைக்கழகத்தில் அவதானிப்புச் சுற்றுப்பயணத்திலும் இணைந்து கொண்டார்கள்.  அதனைத்தொடர்ந்து திருவனந்தபுரம் தலைநகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள கரையோர Kovalam இன் Vellar கைப்பணிகள் கிராமத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு உருவாகியது.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் 10 ஆந் திகதி இலங்கை திரும்ப உள்ளனர்.

கேரளா கைத்தொழில் அமைச்சர் ராஜீவை சந்தித்த அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பிழம்பு said:

பாராளுமன்ற சிவப்பு சித்தாந்திகள் ....டும் டும் பூசிய சாயம் வெளுத்து போச்சு டும் டும்...இப்படி ஒரு கதை சின்ன வயசில் படிச்ச ஞாபகம்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா இவர்களுக்கு பாடம் எடுக்கினம் போல ....மத்திய மாநில அரசியல் பற்றி.....

உந்த சிவப்பு கச்சைகாரர் சொல்லுவினம் உலகம் பூராவும் மார்க்சிச கனவு நிஜமாக வேணும் என்றால் கம்னிசம் சகல நாடுகளிலும் வரவேண்டும் என்று ...அந்த வகையில் அணுரா தென்னிந்தியாவை சீனா சார்பாக உளவு பார்க்க போகிண்ரார் போல...

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.