Jump to content

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அண்ணா நீங்கள் ஊரில் இருந்து எழுதுவதாக ஒரு பெயரில் வாருங்கோ. சொல்வதெல்லாம் பொன்னும் பொருளும் வரலாறுமாக அங்கீகரிக்கப்படும்.😅

உண்மை யொன்றை அற்புதமாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்... எனதுசந்தேகம் எப்பவோ உதித்துவிட்டது..

Edited by alvayan
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நான் நீலனுக்கு தீர்ப்பு எழுதவில்லை    நீலன் எழுதிய வரைபு தீர்வு என்பது தவறு என உறுதியாக கூறுகிறேன்   ஏடுகளில் எழுதுபவை எல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வு ஆகிவிட முடியாது   அவை அமுல்படுத்தப்பட்டிருக்கும் போது மட்டுமே தீர்வு ஆகும்    நீலன். தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை  ஒரு கிராம சபைக்கு கூட  சிறந்த அதிகாரங்களை பெற்று தரவில்லை    

தமிழர் விடுதலை கூட்டணி   தமிழ் ஈழம். தான் தீர்வு  இனி பேசி பயனில்லை’   ஆயுதம் ஏந்துவது தான் அதற்காக வழி  என்று அறிவிக்க முதல்  நீலன். தீர்வை எழுதி அமுல் செய்திருக்கலாமே ?? எங்கே போனார்?? 

ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று  போராடிக்கொண்டு இருக்கும் போது  சீமாட்டி சந்திரிக்கா  நவாலி முல்லைத்தீவு,.......என்று தமிழ் பகுதிகளில் எல்லாம் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது   தீர்வு எழுதுகிறார்   யாருக்கு??? ஆயுதமேத்திய  ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு  ...அவர்களை சிறையில் பிடித்தது அடைபட்டிருப்பவர்கள்  தீர்வு அமுல் பட்டிருக்கப்போவதில்லை  இது அரசியல்   மருத்துவம் இல்லை  தயவுசெய்து இதை வாசித்து  குழப்பமடையவேண்டாம் 

தமிழ் மக்களின் சாபக்கேடு. தமிழ் சட்டத்தரணிகள் பாராளுமன்றம் நீதிமன்றம்  இரண்டிலும் வித்தியாசம் இன்றி வழக்கு பேசியது தான் 

உங்களுடைய இந்த கொல்லப் பட்டவரின் மீது, எள்ளலுடன் குற்றத்தைச் சுமத்தி, கொலை செய்தவர்களின் மீது ஒரு மாசும் படாமல் பாதுகாக்கும் அலட்சிய "அலட்டல்" இருக்கிறதே😂? இது தான் எங்கள் தலைமுறை தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்பது நல்லதென்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எனக்கு.

இப்படியான அறிவலட்சியத்தோடும், மனிதாபிமான உணர்வும் இல்லாமல் இருக்கும் தலைமுறையின் கைகளில் தமிழர்களின் ஆட்சி கிடைக்காமல் இருப்பது தமிழர்களுக்கு நல்லது!

சுத்தமான அடுத்த தலைமுறைக்கு அது கிடைத்தால் கிடைத்து விட்டுப் போகட்டும், அவர்களை நஞ்சூட்டாமல் காத்தால் போதும்!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
12 hours ago, கிருபன் said:

நீலன் திருச்செல்வம் ஒரு சிறந்த சட்டவாளர், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற புலமை மிகுந்தவர்.  தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்படாமல் பாராளுமன்ற உறுப்பினராக 83 இலும் பின்னர் 94 இலும் இருந்தவர். அடிப்படையில் அவர் ஒரு கறுவாத் தோட்டத்து உயர்குழாத்தினர்.

அவர் செய்த நன்மை என்னவென்றால், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜீ.எல். பீரீஸுடன் சேர்ந்து ஒரு தீர்வுப்பொதியைத் தயாரித்தவர். இப்பொதி இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களுடன் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பரவலாக்கும் திட்டங்களைக் கொண்டிருந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே சென்று ஒரு தீர்வை முன்வைத்தது. ஆக, சமஸ்டி என்று எழுத்தில் சொல்லாமல் ஒரு சமஸ்டித் தீர்வை முன்வைத்தது. இந்தப் பொதியை சிங்கள கடும்போக்கினரும், விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பொதியை தயாரித்தமையால்தான் அவர் “துரோகி” என அடைமொழி கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும்படி அவர் எவரையும் காட்டிக்கொடுத்ததாக வரலாறு இல்லை. அதாவது, அவர் படுகொலை செய்யப்படுமளவிற்கு ஒரு தீமைகளும் செய்யவில்லை.

இந்தப் பொதி தயாரிக்கப்ப்பட்டு 30 வருடங்களின் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தமூடாக வந்த (13ஆவது திருத்தச்சட்டம்) நீர்த்துப்போன, அதிகாரம் இல்லாத, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு மேலாக இருக்காது.

சந்திரிக்கா காலத்து பொதியைப் பற்றி அறிய

https://noolaham.net/project/36/3532/3532.pdf

தீர்வுப்பொதி பற்றிய தகவலுக்கு நன்றி ஐயனே.

நீலன் துதி போக,

நீங்கள் பொதி தொடர்பில் எழுதியுள்ள கருத்துக்களில் சில தவறுகள் உள்ளன. 
-------------------------------------------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நீலமானின் மாயப்பொதிகள் 

மேலே கொடுக்கப்பட்டிருப்பது நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதி (அரசமைப்பு திருத்த வரைபுகள்) . இதே பொதி பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000) பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

புலிகளின் அரசியல் ஆலோசகரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களும் இப்பொதியினை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார் (1995 ஓகஸ்டில் (ஆரம்ப கட்டத்தில்) இதற்கு மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். 2000/03/13 அன்று இப்பொதி "சரியான வரைபு... ஏற்கக்கூடியது" என்றார்).

ஆனால் இது தனது மெய்யான மிளிர்வில் அப்படியே நாடாளுமன்றத்திற்கு அன்றைய காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான தீர்வுகளை எல்லாம் இழந்துதான் அலுவல்சார் சிறிலங்கா அரச முன்மொழிவாகவே 1996ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு போன போது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் வடிகட்டல்களில் - 1997ம் ஆண்டு - மிச்ச நல்லதுகளையும் இழந்து போனது.

2000ம் ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இறுதித் தீர்வுப் பொதியானது (நீலன் சாக்கொல்லப்பட்ட பின்னர் வந்தது) அரைகுறையான ஒன்றாகும் என்று அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சாடினார்.

ஆனால் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் "சமச்சீரான சமஸ்டி" நன்மை பயக்கக்கூடிய இதனது மூல வடிவம் என்றுமே தமிழரின் நிகராளிகளாக இருந்த விடுதலைப்புலிகளிடம் அலுவல்சாராக கையளிக்கப்படவில்லை. வெறும் நாளேட்டு செய்திகளாகவும் வாய்மொழி அறிவிப்புகளாகவுமே வெளியாகின. அவற்றையும் புலிகளும் தம் போக்கிற்கு அலுவல்சார் ஊடக வெளியீடுகள் மூலம் நிராகரித்தனர். ஆயினும் போர் நிறுத்தத்தை சிங்கள அரசு செய்தால் தொடர் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்பதை அப்போதே தெரிவித்துவிட்டனர்.  

(1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எந்தவொரு முன்மொழிவும்  அரசாங்கம், பிரதான சிங்கள எதிர்க்கட்சி மற்றும் புலிகள் ஆகிய மூன்று முக்கிய கன்னைகளின் அங்கீகாரத்துடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பீரிஸ் தெரிவித்தார். எனினும் சில மாதங்களுக்குப் பிறகு புலிகள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பயங்கரவாத அமைப்பாக சாற்றாணைப் படுத்தப்பட்டதால் அதனுடன் எந்தவிதமான நடவடிக்கைகளும் குற்றமென வரையறைப்படுத்தப்பட்டு விட்டதாலும் இந்தப் பொதியை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகியது.)

புலிகளால் ஏன் நிராகரிக்கப்பட்டதெனில்; குறிப்பாக இப்பொதிகளின் வரிசையில் முதல் பொதியின் அறிவிப்பு அலுவல்சாராக (official) வெளியாக முன்னரே சந்திரிக்கா மாமியை அப்போதைய சிங்கள அஸ்கிரிய பீடாதிபதி சிறி சந்தானந்த மகாநாயக்க தேரர் சந்தித்தார். அவர் இப்பொதியின் அலுவல்சார் அறிவிப்பினை வெளியிட முன்னர் விடுதலைப்புலிகளை தோற்கடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சந்திரிக்கா மாமியும் புலிகளை படைய நடவடிக்கை மூலம் "மண்டியிட" செய்த பின்னரே இத்தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்!  இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. (இத்தகவல் அவர்களின் ஊடக வெளியீட்டில் உள்ளது).

உந்தப் மூலப் பொதி நாடாளுமன்றத்தில் அதன் மிளிர்வான வடிவத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் எப்படியும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தமிழருக்கு நன்மை பயக்கக்கூடிய கூறுகளை நீக்கியிருக்கும் (1997ம் ஆண்டு செய்தது போன்றே). அதையும் தாண்டினால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளை பெற்றால்தான் மக்களிடம் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும். சிங்கள மக்களிடம் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது செல்லுபடியாகும். இதெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் விடையங்களாகும்.

மேலும், இதில் தனி இனக்குழுவான முஸ்லிம்களின் வகிபாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. தமிழரோடு ஒன்றிணைந்த தீர்வொன்றிற்கு முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (ஜெனிவா பேச்சுவார்த்தையினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்). தமக்கான தனி அலகு ஒன்றை எப்படியும் கேட்டிருப்பார்கள். அந்த விடயம் தொடர்பில் இத்தீர்வில் எதுவும் குறிக்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், எந்த நீலனின் செல்வாக்கால் அரசமைப்பு திருத்த வரைபு கொண்டுவரப்பட்டதோ அதே நீலன் உயிருடன் இருக்கையில் அவர கண்முன்னே தான் சில மாதங்களிலேயே அந்த அரசமைப்பு திருத்த வரைபு நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. பின்னர் அவர் கைலாயம் கண்டவுடன் அது குப்பையில் தூக்கியெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் உண்மையிலேயே தமிழருக்கு நன்மை செய்ய விரும்பியிருப்பின் தான் வரைந்ததை முற்றாக நிறைவேற்ற பாடாவது பட்டிருக்க வேண்டும். மாறாக அதை வைத்து சிங்களவர் ஏலுமான வழிகளில் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட மறைமுக ஆதரவு நல்கினார். 

அடுத்து, இதை வைத்து ஜி.எல். பீரிஸ் மற்றும் கதிர்காமர் ஆடிய திரு விளையாடல்கள் பற்றிப் பார்ப்போம்:

இந்தத் தீர்வுப் பொதியின் மிளிர்வான வடிவம் 1995ம் ஆண்டு வெளியானதும் கதிர்காமர் நாடு நாடாக சென்று தவறுத்தகவல் (disinformation) பரப்புரையில் ஈடுபட்டார். வெளிநாடுகளில் இருந்த தவிபு இன் வெளிநாட்டுக்கிளை அலுவலகங்களை மூட வைக்குமாறு அந்நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்: புலிகளை தடை செய்யவும் கோரிக்கை விடுத்தார். தானொரு தமிழர் என்றும் சிங்கள அரசாங்கம் தமிழரிற்கான தீர்வினைக் கொண்டுவரப் போவதாகவும் எனவே இனிமேல் புலிகள் தேவையில்லை என்றும் பரப்புரை செய்தார். தமக்கு அமைதிக்கான முறைமை ஒன்றைக் கொண்டுவர போர் வேண்டுமென்றும் புலிகளுடனான நெடுங்கால போரிற்கு தேவையான போர்த்தளவாடங்களை வழங்குமாறும் கோரிக்கைகளை விடுத்தார்.

அதே நேரம் சிங்கள ஊடகங்களும் போர் முழக்கமிட்டுக்கொண்டிருந்தன.

இவ்வாறு கதிர்காமர் ஆயுத திரட்டலிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க இங்கால் பீரிஸோ (இதை தயாரித்தவர்களில் ஒருவர்) இந்த தீர்வுப் பொதியை பின்னடிக்க வைக்கும் தந்திரங்களை முன்னெடுத்தார். இப்பொதிக்கு ஒற்றையாட்சி சிறிலங்காவிற்குள் சிறுபான்மையினரின் கட்சிகள் அரசிற்கு ஆதரவு கொடுக்க பீரிஸோ அதை ஏலுமானவரை பிற்போடச்செய்ய எத்தனித்தார். குறிப்பாக 1999ம் ஆண்டில் இவர் எதிர்க்கட்சியான ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, பொதி முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மிளிர்விழந்துவிட்ட தீர்வுப் பொதி வெளிவருவதற்கான கால அமையத்தை இவர் மேலும் நீடிக்கச் செய்தார். 

இவ்வாறாக தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க கொண்டுவரப்பட்ட இம்மாயப் பொதியை தோற்றுவித்த "கோழைத்தனமன வன்முறையாளரான"😉 (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999, எஸ்.கே. ரத்தினம்) நீலன் திருச்செல்வம் என்பவர் இறுதிவரை எந்தவொரு நன்மையையும் தமிழருக்கு பெற்றுத்தவில்லை. மாறாக பொதி மூலம் சிங்களப் படைத்துறைக்கு போர்த்தளபாடங்கள் பெற்றுக்கொடுத்தலையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தாக்காட்டுதல் மூலம் சிங்களப் படைதுறைக்கு போதிய கால அமையம் வழங்கல் என்ற அரசியலையுமே தனது காலத்தில் செய்தார். மேலும் நேரடியில்லாமல் புலிகளின் படிமத்திற்கு உலக அரங்கில் சேறு பூசுவதில் பங்காற்றினார். 

வாழ்ந்த வரை சிங்கள அரச அதிபரை காப்பாற்றும் வேலையையே செய்து வந்தார். இவரது "செல்வாக்கான" என்ற காலத்திலேயே யாழில் 800+ தமிழர்கள் காணாமல் போயும் தீவெங்கும் பல்லாயிரம் தமிழர் கொத்துக்கொத்தாக செத்தொழிந்த போதும் வாயே திறக்காத இந்த நீலமானின் சாவால் தமிழராகிய நாங்கள் ஒன்றையும் இழந்துவிடவில்லை. அதற்கு இவரது இழவு வீட்டிற்கும் தமிழர் பெருமெடுப்பில் செல்லவில்லை என்பதுவே சிறந்த சான்று.

மொத்தத்தில் திரு. லக்ஸ்மன் குணசேகர என்பவர் கூறியது போன்று "தமிழரின் கண்களில் நீலன் சிங்களவருடன் சேர்ந்த ஒரு 'உடனுழைப்பாளர்' "  (Collaborator) ஆவார் (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999) . அவர்களிடமிருந்து நல்லவன் என்ற பெயரை மட்டும் உழைத்துக்கொண்டார். உலகெங்கிலும் உடனுழைப்பாளர்கள் அவரது சொந்த இனத்தாலேயேதான் கைலாயம் அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு!

வெற்றுக் காகித சட்டங்களாதலால்தான் நீலன் அனுதாபி ஒருவரிடம் தெளிவாக கேட்டேன், "நீலன் தமிழர் அரசியலுக்கு செய்த நல்லதுகளை எழுதுமாறு", இணையத்தில் தேடிப்பார்க்கத் தெரியாததாலன்று...

பி.கு.: கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியில்லாமல் மலிவான தனிமனித தாக்குதலை செய்து கம்பு சுற்றுவோருக்கு இனிமேல் மறுமொழி தரப்படாது.

(இந்த விடையங்கள் எல்லாம் யாழ்கள நீலன் அனுதாபிகளுக்கு தெரியாது. புலி மீது சேற்றை வாரியிறைக்க நான் முந்தி நீ முந்தி என்று மட்டும் நிற்பினம். நீலமான் அனுதாபிகளே, "உடனுழைப்பாளர்" என்றால் "துரோகி" அல்ல. இருந்தாலும் சட்டிக்குள் தலையைவிட்டு வலிந்து பொருள் கொள்ளுங்கள்! )

Edited by நன்னிச் சோழன்
பிற்சேர்க்கை
  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நான் நீலனுக்கு தீர்ப்பு எழுதவில்லை    நீலன் எழுதிய வரைபு தீர்வு என்பது தவறு என உறுதியாக கூறுகிறேன்   ஏடுகளில் எழுதுபவை எல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வு ஆகிவிட முடியாது   அவை அமுல்படுத்தப்பட்டிருக்கும் போது மட்டுமே தீர்வு ஆகும்    நீலன். தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை  ஒரு கிராம சபைக்கு கூட  சிறந்த அதிகாரங்களை பெற்று தரவில்லை    

தமிழர் விடுதலை கூட்டணி   தமிழ் ஈழம். தான் தீர்வு  இனி பேசி பயனில்லை’   ஆயுதம் ஏந்துவது தான் அதற்காக வழி  என்று அறிவிக்க முதல்  நீலன். தீர்வை எழுதி அமுல் செய்திருக்கலாமே ?? எங்கே போனார்?? 

ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று  போராடிக்கொண்டு இருக்கும் போது  சீமாட்டி சந்திரிக்கா  நவாலி முல்லைத்தீவு,.......என்று தமிழ் பகுதிகளில் எல்லாம் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது   தீர்வு எழுதுகிறார்   யாருக்கு??? ஆயுதமேத்திய  ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு  ...அவர்களை சிறையில் பிடித்தது அடைபட்டிருப்பவர்கள்  தீர்வு அமுல் பட்டிருக்கப்போவதில்லை  இது அரசியல்   மருத்துவம் இல்லை  தயவுசெய்து இதை வாசித்து  குழப்பமடையவேண்டாம் 

தமிழ் மக்களின் சாபக்கேடு. தமிழ் சட்டத்தரணிகள் பாராளுமன்றம் நீதிமன்றம்  இரண்டிலும் வித்தியாசம் இன்றி வழக்கு பேசியது தான் 

நீங்கள் கூறிய விடயங்கள் நடப்பதற்கு முன்பே ஆயுதமின்றிச்  சரணடைந்த 600 இலங்கைப் பொலிசாரை ஈவிரக்கமின்றி கொலை செய்தார்களே.  1986 ல் தொடங்கிய ஊழித்தாண்டவம். எல்லாப்பாவமும் இறுதியில்  அப்பாவித்தமிழ் மக்கள் தலையில் இடியாக வந்து இறங்கியது தமிழ் மக்களின் வாழ்வில் வந்த சோகம் தான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

ஒரே விடயத்தை பத்து இடத்தில் வேறு வேறு வடிவத்தில் எழுதினால்  சூப்பர் கருத்தாளர்கள் என்று பெயர் வரும் என்று யாரோ அறிவாளிகள்  உங்களுக்கு சொல்லி போட்டார்ங்கள்  போல் உள்ளது 😀

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா, இரண்டாவது ஜட்ஜும் வந்து concurring decision எழுதியாச்சு😂! கந்தையராவது வாழ்ந்து கற்றவர்..இவரோ மடியில இருந்து கதை கேட்டு வரலாறும் சட்டமும் கற்ற "ஜட்ஜ் ஐயா"!

நான் நினைக்கிறன் இனி தமிழர் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டம், ஐடியாக்கள் யாராவது முன் வைத்தால், அவர்கள் தங்கள் சொந்தக் காசைப் போட்டாவது அதை நடைமுறைப் படுத்திப் போடோணும்!

இல்லையோ பொத்திக் கொண்டிருக்கோணும். இரண்டுக்குமிடையில மாட்டிக் கொண்டால் "kill first, explain later" என்று எங்கள் அரைகுறை ஜட்ஜ் மார் தீர்ப்பெழுதுவீனம்😎!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலனின் தீர்வு திட்டத்தில் போதாமை இருந்திருந்தால்  அதை உரிய அரசாங்களுடன் பேசி அதை சீரமைப்பது தான் நாகரீகம் அடைந்த ஒரு சமுதாயங்கள் செய்வது. அதற்காக அதனை உருவாக்கியவரை போட்டுத் தள்ளுவது காட்டுமிராண்டித்தனமானது என்பதை  இப்போது கூட புரிந்து கொள்ளும் பண்பு   இல்லைப் போல உள்ளது.    இந்த நிலையில் சிங்கள இனவாதிகளிடம் இதை எப்படி எதிர் பார்பபது? 

இவர்கள் கையில் நாடோ அதிகாரமோ  செல்லக் கூடாது  என்ற தீர்மானத்தை  உலக நாடுகளை எடுக்க வைத்தது இவ்வாறான பலவேறு பயங்கரவாதச் செயல்களே.   அவை ஒவ்வொன்றையும் இங்கு விலாவாரியாக  எழுதமுடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, island said:

நீங்கள் கூறிய விடயங்கள் நடப்பதற்கு முன்பே ஆயுதமின்றிச்  சரணடைந்த 600 இலங்கைப் பொலிசாரை ஈவிரக்கமின்றி கொலை செய்தார்களே.  1986 ல் தொடங்கிய ஊழித்தாண்டவம். எல்லாப்பாவமும் இறுதியில்  அப்பாவித்தமிழ் மக்கள் தலையில் இடியாக வந்து இறங்கியது தமிழ் மக்களின் வாழ்வில் வந்த சோகம் தான்.  

அனுதாபத்திற்குரிய விடயம் தான்  ஆனால் ஏன் சரணடைந்தார்கள்  ?? பலமிழந்தபடியாலா??   இல்லை பலத்துடன் இருந்து இருந்தால்   புலிகளை 600 அல்ல ஆயிரக்கணக்கானோரை போட்டு தள்ளி இருக்க மாட்டார்களா ??  ஆமாம் நிச்சியமாக போட்டு தள்ளியிருப்பார்கள்.  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில். இலங்கை பொலிஸார் ஒரு தமிழரை தலைகீழாக தொங்க விட்டு அடித்து மரணமடைய செய்தார்கள்   குற்றவாளிகள் அனுரதபுரத்தில் சிறையில்.ராஜாக்கள். போல் வாழ்க்கை நடத்துகிறார்கள்  

இரண்டாவது தமிழருக்கும் வட்டுக்கோட்டை பொலிசார் அடித்தார்கள் என்று அறிந்தேன். அவர் பல்கலைக்கழக மாணவன் தப்பி ஒடி விட்டார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

ஒரே விடயத்தை பத்து இடத்தில் வேறு வேறு வடிவத்தில் எழுதினால்  சூப்பர் கருத்தாளர்கள் என்று பெயர் வரும் என்று யாரோ அறிவாளிகள்  உங்களுக்கு சொல்லி போட்டார்ங்கள்  போல் உள்ளது 😀

நீங்களும்  சுமந்திரன் சுமந்திரன் என்று  ஒரு தனி நபர்  மீது உங்களுக்கு உள்ள வக்கிரத்தை  வருடக்கணக்காக இங்கு வந்து கொட்டலாம் என்றால் எமது தமிழ் இனத்தின் அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டு எமது தலைமுறையை  நிரந்தர அடிமைகளாக்க செய்த அறிவற்ற   செயல்கள் பற்றி பேசக்கூடாதா? 

6 minutes ago, Kandiah57 said:

அனுதாபத்திற்குரிய விடயம் தான்  ஆனால் ஏன் சரணடைந்தார்கள்  ?? பலமிழந்தபடியாலா??   இல்லை பலத்துடன் இருந்து இருந்தால்   புலிகளை 600 அல்ல ஆயிரக்கணக்கானோரை போட்டு தள்ளி இருக்க மாட்டார்களா ??  ஆமாம் நிச்சியமாக போட்டு தள்ளியிருப்பார்கள்.  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில். இலங்கை பொலிஸார் ஒரு தமிழரை தலைகீழாக தொங்க விட்டு அடித்து மரணமடைய செய்தார்கள்   குற்றவாளிகள் அனுரதபுரத்தில் சிறையில்.ராஜாக்கள். போல் வாழ்க்கை நடத்துகிறார்கள்  

இரண்டாவது தமிழருக்கும் வட்டுக்கோட்டை பொலிசார் அடித்தார்கள் என்று அறிந்தேன். அவர் பல்கலைக்கழக மாணவன் தப்பி ஒடி விட்டார் 

ஏன் சரண்டைந்தார்கள் என்பது இந்த திரியிலேயே உள்ளது. சென்று வாசித்துப் பாருங்கள்.  வட்டுக் கோட்டையில்  அண்மையில் நடந்த சம்பவத்துக்காக 1990 ல் அட்வான்ஸாக யாரோ வேறு உத்தியோகஸ்தர்களை கொலை செய்யப்பட்டார்கள் என்று கூறவருகின்றீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, island said:

நீங்கள் கூறிய விடயங்கள் நடப்பதற்கு முன்பே ஆயுதமின்றிச்  சரணடைந்த 600 இலங்கைப் பொலிசாரை ஈவிரக்கமின்றி கொலை செய்தார்களே.  1986 ல் தொடங்கிய ஊழித்தாண்டவம். எல்லாப்பாவமும் இறுதியில்  அப்பாவித்தமிழ் மக்கள் தலையில் இடியாக வந்து இறங்கியது தமிழ் மக்களின் வாழ்வில் வந்த சோகம் தான்.  

நேரடியாக பேசுங்கள்

உங்களுக்கு புலிகளுடன் என்ன தகராறு??

உண்மையை வையுங்கள். பேசலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நன்னிச் சோழன் said:

புலிகளின் அரசியல் ஆலோசகரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களும் இப்பொதியினை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார் (1995 ஓகஸ்டில் (ஆரம்ப கட்டத்தில்) இதற்கு மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். 2000/03/13 அன்று இப்பொதி "சரியான வரைபு... ஏற்கக்கூடியது" என்றார்).

ஆனால் இது தனது மெய்யான மிளிர்வில் அப்படியே நாடாளுமன்றத்திற்கு அன்றைய காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

நல்லது நன்னி. மிகவும் ஆழமாகவே ஆராய்ந்துள்ளீர்கள். நீலன் மிளிர்வான வரைபை உருவாக்குவதற்கு உதவினார். எனினும் நீர்த்துப்போகச் செய்தது சிங்கள அரசியல் கட்சிகளினது செயற்பாடு. பொதி தீர்வாக வந்திருக்கும் என அந்தக் காலத்திலேயே நம்பவில்லை. ஆனால் எழுத்து மூலம் ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரிக்க உதவியது கொலை செய்யவேண்டிய அளவுக்கு துரோகமான செயல் இல்லை. புலிகள் இராணுவ ரீதியில் பலமான நிலையில் இருந்த காலகட்டத்தில் தமிழ் ஈழத்திற்குக் குறைவான தீர்வு ஒன்றை அவர்களின் அனுமதி இல்லாமல் வரைய உதவியதுதான் நீலன் கொல்லப்பட்டதற்கான காரணம்.

 இன்றைய காலகட்டத்தில் “மிளிர்வான” பொதியையோ அல்லது நீர்த்துப்போன அதன் மறுவரைபுகளையோ கூட ஒரு அரசியல் பேச்சுவார்த்தைக்கு எடுத்துச் செல்லமுடியாத அரசியல் வலிமையற்ற இடத்தில்தான் தமிழர்கள் நிற்கின்றார்கள். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

இல்லையோ பொத்திக் கொண்டிருக்கோணும். இரண்டுக்குமிடையில மாட்டிக் கொண்டால் "kill first, explain later" என்று எங்கள் அரைகுறை ஜட்ஜ் மார் தீர்ப்பெழுதுவீனம்😎!

சரியாக சொன்னீர்கள் அந்த ஆயுதங்கள்  மெளனிக்கப்பட்டதால் மிச்சம் இருக்கும் தமிழ் மக்களும் தப்பித்தார்கள் என்று தமிழ் மக்களை  நினைக்க வைக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள்.  இவர்கள் தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பை எழுதினால்  kill first, explain later" என்று எழுதக் கூடிய மன நிலை படைத்தவர்களே.  இங்கு இப்படி கொலைகளுக்கு வக்காலத்து வாங்குவதை இவர்கள் வசிக்கும் நாட்டு மொழியில் அந்த நாட்டு பத்திரிகைகளுக்கு எழுத முடியுமா?  இதை ஒரு சவாலாகவே விடுக்கிறேன். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

இவர் எழுதியது  ஒருபோதும் நடைமுறையில் வந்து இருக்காது  புலிகள் போராடிக்கொண்டு இருந்த காரணத்தால்  அதிகாரங்களை கூட. எழுத முடிந்தது  நீங்கள் குறிப்பிட்டது போல் இப்போது முடியாது தான்  காரணம் போராடுவோர் இல்லை    தீர்வு திட்டங்கள் எழுதுவது  தமிழருக்கு செய்யும் நன்மைகள் இல்லை  எழுதிய தீர்வுகளை நடைமுறை படுத்தி கட்டவேண்டும். 

எழுதிய தீர்வுகளை நடை முறை படுத்துவது தான் சிக்கல் என்பதை மிகவும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் ...இது தான் இந்த நாட்டின் சாபக்கேடு ....
ஆரம்ப காலத்தில் தீர்வுகள் எழுத முதலே சிங்கள அரசியல்வாதிகள் போராட்டம் நடத்தி கிழித்தெறிந்தார்கள் ...தீர்வு திட்டங்களை கிழித்தெறிந்து சிங்கள வாக்குகளை பெற்று அரசியல் பிரமுகராக வந்தனர்...

பின்பு தீர்வு திட்டங்களை எழுதி அதை அமுல் படுத்தாமல் காலத்தை கடத்தி அரசியல் நடத்தினார்கள் ..
பிராந்திய வல்லரசினால் அறிமுகம் செய்த  அமுலில் இருக்கும் தீர்வு திட்டதை சிதைத்து அதை செயல் படுத்த விடாமல் பல தடைகள் ...போட்டு உள்ளனர் ..

இது யாவும் எமது கண் முன் நடப்பவை...

வன்முறை அரசியல் வேண்டாம் ....சந்திரிக்கா தோல்வியை தழுவியமைக்கும் காரணம் தீர்வு திட்ட யோசனைகளாக இருக்கலாம்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

நீலனின் தீர்வு திட்டத்தில் போதாமை இருந்திருந்தால்  அதை உரிய அரசாங்களுடன் பேசி அதை சீரமைப்பது தான் நாகரீகம் அடைந்த ஒரு சமுதாயங்கள் செய்வது. அதற்காக அதனை உருவாக்கியவரை போட்டுத் தள்ளுவது காட்டுமிராண்டித்தனமானது என்பதை  இப்போது கூட புரிந்து கொள்ளும் பண்பு   இல்லைப் போல உள்ளது.    இந்த நிலையில் சிங்கள இனவாதிகளிடம் இதை எப்படி எதிர் பார்பபது? 

இவர்கள் கையில் நாடோ அதிகாரமோ  செல்லக் கூடாது  என்ற தீர்மானத்தை  உலக நாடுகளை எடுக்க வைத்தது இவ்வாறான பலவேறு பயங்கரவாதச் செயல்களே.   அவை ஒவ்வொன்றையும் இங்கு விலாவாரியாக  எழுதமுடியாது. 

நீங்களும் உங்கள் போன்றோரும். 2009 பிற்பாடு  செய்திருக்கலாமே  ? ஏன் செய்யவில்லை   ?? 

போர் தொடங்க முதல் நீலன் ஏன் தீர்வு திட்டங்களை வரையவில்லை ??  காரணம் தீர்வு தருவதற்க்கு எவருமில்லை     பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்து  போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கும் போது  அவர்களை இலகுவாக சிறைப்படுத்த வைக்கப்பட்ட எலிபொறி தான்  நீலனின். தீர்வு    நீலன்  சந்திரிக்காவின். செயல் திட்டங்களை செயல்படுத்த முனைந்தார். மாறாக தமிழர்கள் சார்பாக அவர் வேலை செய்யவில்லை    ஆயுதப் போராட்டம் தான் வழி என்றவர்கள் ஆயுதப்பயிற்சியை எடுக்கவில்லை களத்தில் முன்னுக்கு நிற்கவில்லை   பதுங்கியிருந்தார்கள்   காரணம் பயம் பேச்சு ஒன்று செயல் வேறு ஒன்று  இப்படிபட்டவர்கள். எப்படி தீர்வு எழுத முடியும்?? 

போர் இவர்களின் தீர்மானங்களின்படி தான் தொடங்கியது  அதன் பின்னர் புலிகளின். அனுமதி இன்றி பேச முடியாது   காரணம் இனி பேச முடியாது ஆயதப் போராட்டம் தான் வழி என்று நீங்கள் தான் சொன்னீர்கள்  தமிழ் இளைஞர்கள் இல்லை  உங்களிடம் துணிவு இல்லாதபடியால் தான் இளைஞர்கள் போராடினார்கள். அந்த நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணி  இளைஞர்களை ஏன் ஆதரிக்கவில்லை??  சும்மா ஆவது இருந்து இருக்கலாம்  அதை விட்டு ஏன் சகுனி வேலை பார்த்தார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

நேரடியாக பேசுங்கள்

உங்களுக்கு புலிகளுடன் என்ன தகராறு??

உண்மையை வையுங்கள். பேசலாம். 

ஒரு தகராறும் இல்லை. அரசியல் வலிமையற்ற மக்கள் கூட்டமாக எமது தமிழ் மக்கள் வந்து சேர்ந்ததற்கன காரணிகளை மட்டுமே நேர்மையுடன் கூறுகிறேன். எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று எதிரி பிரச்சாரப்படுத்துகையில் அவர்களின் பிரச்சாரத்தை உலக நாடுகளை நம்ப வைக்கும் வகையிலான ஆதாரங்களைக் கொடுத்த  புலிகளின் செயல்களை மட்டுமே நான் விமர்சிக்கிறேன்.  யுத்த களத்தில் இராணுவத்துடன் போராடிய போராளிகளையோ யுத்த களத்தில் மடிந்த மாவீரர்களையோ நான் என்றுமே விமர்சிக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Cruso said:

இங்கு சிலர் போராளிகளின் தவறுகளை, விஸேடமாக புலிகளின் தவறுகளை சுட்டி காடட கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறார்கள்.

மனடையன் குழு, ஈபிடிபி, ப்ளட் போன்ற  இயக்கங்களை பற்றி எழுதினபோது எதிர்க்கருத்து இல்லை. நன்றாக பச்சை குத்தினார்கள். இப்போது நிலைமை வேறாக மாறி இருக்கிறது.

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே. 

தவறுகளை சுட்டி காட்டுவதன் ஊடாக தமிழ் மக்களுக்கு கிடைக்க போகும் நன்மை ஒன்றுமில்லை என நான் நினைக்கிறேன் ...

ஆயுதம் ஏந்தியவர்களிடம் நாம் அகிம்சையை எதிர் பார்க்க முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

ஒரு தகராறும் இல்லை. அரசியல் வலிமையற்ற மக்கள் கூட்டமாக எமது தமிழ் மக்கள் வந்து சேர்ந்ததற்கன காரணிகளை மட்டுமே நேர்மையுடன் கூறுகிறேன். எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று எதிரி பிரச்சாரப்படுத்துகையில் அவர்களின் பிரச்சாரத்தை உலக நாடுகளை நம்ப வைக்கும் வகையிலான ஆதாரங்களைக் கொடுத்த  புலிகளின் செயல்களை மட்டுமே நான் விமர்சிக்கிறேன்.  யுத்த களத்தில் இராணுவத்துடன் போராடிய போராளிகளையோ யுத்த களத்தில் மடிந்த மாவீரர்களையோ நான் என்றுமே விமர்சிக்கவில்லை. 

உதாரணமாக ஒரு செயல் சொல்லுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

நீங்களும் உங்கள் போன்றோரும். 2009 பிற்பாடு  செய்திருக்கலாமே  ? ஏன் செய்யவில்லை   ?? 

போர் தொடங்க முதல் நீலன் ஏன் தீர்வு திட்டங்களை வரையவில்லை ??  காரணம் தீர்வு தருவதற்க்கு எவருமில்லை     பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்து  போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கும் போது  அவர்களை இலகுவாக சிறைப்படுத்த வைக்கப்பட்ட எலிபொறி தான்  நீலனின். தீர்வு    நீலன்  சந்திரிக்காவின். செயல் திட்டங்களை செயல்படுத்த முனைந்தார். மாறாக தமிழர்கள் சார்பாக அவர் வேலை செய்யவில்லை    ஆயுதப் போராட்டம் தான் வழி என்றவர்கள் ஆயுதப்பயிற்சியை எடுக்கவில்லை களத்தில் முன்னுக்கு நிற்கவில்லை   பதுங்கியிருந்தார்கள்   காரணம் பயம் பேச்சு ஒன்று செயல் வேறு ஒன்று  இப்படிபட்டவர்கள். எப்படி தீர்வு எழுத முடியும்?? 

போர் இவர்களின் தீர்மானங்களின்படி தான் தொடங்கியது  அதன் பின்னர் புலிகளின். அனுமதி இன்றி பேச முடியாது   காரணம் இனி பேச முடியாது ஆயதப் போராட்டம் தான் வழி என்று நீங்கள் தான் சொன்னீர்கள்  தமிழ் இளைஞர்கள் இல்லை  உங்களிடம் துணிவு இல்லாதபடியால் தான் இளைஞர்கள் போராடினார்கள். அந்த நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணி  இளைஞர்களை ஏன் ஆதரிக்கவில்லை??  சும்மா ஆவது இருந்து இருக்கலாம்  அதை விட்டு ஏன் சகுனி வேலை பார்த்தார்கள் 

சுருக்கமான கேள்வி. தீர்வுத்திட்டத்தை தயாரித்த காரணத்தால் அவர்  கொலை செய்யப்பட்டது சரியானதா?

 ஆம் / இல்லை

ஆம் என்றால் புலிகள் மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் நியாயமானவை என்று நீங்கள் வாழும் ஜேர்மன் நாட்டு பத்திரிகையில்  எழுதி அதை ஜேர்மன் மக்களால் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியுமா?  

ஏன் ஜேர்மன் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் நாங்கள் தமிழர்கள் அல்லவா என்று விதண்டாவாமன பதில் வேண்டாம். ஏனெனில் ஒரு நாட்டை அமைப்பதென்றால் உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாமல் அதை அமைக்க முடியாது. உங்களை மட்டும் கேட்கவில்லை இங்கு கொலைகளை நியாயப்படுத்தும் ஒவ்வொருவரும் தாம் வாழும் நாட்டு மக்களை    அரசாங்கங்களை  அதனை ஏற்றுக் கொள்ள வைக்க முடியுமா?  

5 minutes ago, விசுகு said:

உதாரணமாக ஒரு செயல் சொல்லுங்கள். 

மேலே எத்தனை செயல்கள் கூறியுள்ளேன். அதை மீண்டும் கூறவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

சுருக்கமான கேள்வி. தீர்வுத்திட்டத்தை தயாரித்த காரணத்தால் அவர்  கொலை செய்யப்பட்டது சரியானதா?

 ஆம் / இல்லை

ஆம் என்றால் புலிகள் மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் நியாயமானவை என்று நீங்கள் வாழும் ஜேர்மன் நாட்டு பத்திரிகையில்  எழுதி அதை ஜேர்மன் மக்களால் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியுமா?  

ஏன் ஜேர்மன் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் நாங்கள் தமிழர்கள் அல்லவா என்று விதண்டாவாமன பதில் வேண்டாம். ஏனெனில் ஒரு நாட்டை அமைப்பதென்றால் உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாமல் அதை அமைக்க முடியாது. உங்களை மட்டும் கேட்கவில்லை இங்கு கொலைகளை நியாயப்படுத்தும் ஒவ்வொருவரும் தாம் வாழும் நாட்டு மக்களை    அரசாங்கங்களை  அதனை ஏற்றுக் கொள்ள வைக்க முடியுமா?  

மேலே எத்தனை செயல்கள் கூறியுள்ளேன். அதை மீண்டும் கூறவா? 

அதனை விடுதலைப் புலிகள் உரிமை கோரினார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, island said:

அட்வான்ஸாக யாரோ வேறு உத்தியோகஸ்தர்களை

இல்லை   இலங்கை பொலிஸார் எப்படி பட்டவர்கள் என்பதற்கு உதாரணம்  அன்று தொடங்கி இன்று வரை வளர்ச்சி அடைந்து வருகிறது  

மேலும் உங்கள் விருப்பம் போல் புலிகள் பூண்டோடு அளிக்கப்படுவிட்டார்கள்.  2009 ஆண்டுக்கு பின்னர் உங்களுக்கு பொற்காலம் தான்  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

இல்லை   இலங்கை பொலிஸார் எப்படி பட்டவர்கள் என்பதற்கு உதாரணம்  அன்று தொடங்கி இன்று வரை வளர்ச்சி அடைந்து வருகிறது  

மேலும் உங்கள் விருப்பம் போல் புலிகள் பூண்டோடு அளிக்கப்படுவிட்டார்கள்.  2009 ஆண்டுக்கு பின்னர் உங்களுக்கு பொற்காலம் தான்  

சீ நாங்க பிணத்தை புணரும் இனத்துடன் இணக்கமாக உள்ளோம். அவர்களின் எந்த செயலையும் கண்டிக்க மாட்டோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, putthan said:

வன்முறை அரசியல் வேண்டாம் ....சந்திரிக்கா தோல்வியை தழுவியமைக்கும் காரணம் தீர்வு திட்ட யோசனைகளாக இருக்கலாம்.... 

சந்திரிக்கா தோல்வியை தழுவவில்லை புத்தன். 1999 ம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.  யாழ்பாணத்தில் கூட கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார். 

1999 ல் அவரை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல முயன்று பயங்கரவாதிகள் என்ற அரசின் பிரச்சாரத்துக்கு  எம்மவர் துணை புரிந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, island said:

சுருக்கமான கேள்வி. தீர்வுத்திட்டத்தை தயாரித்த காரணத்தால் அவர்  கொலை செய்யப்பட்டது

முதலில் அவர் எழுதியது தீர்வு திட்டம் இல்லை ....பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை சிறைப்படுத்தி. ஆயுதங்களை களையும் திட்டம்  அதாவது இவர்களின் தீர்மானங்களின்படி ஆயுதமேந்தி போராட்டம் நடத்த துணிந்து பெற்றோர்களை உடன்பிறப்புகளை  விட்டுட்டு வந்தவர்களை  கொலை செய்யும் திட்டம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

அதனை விடுதலைப் புலிகள் உரிமை கோரினார்களா?

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

இந்த கேள்வியை கேட்கும் போது அனைத்து மக்களுக்கும் இப்படி சிரிப்பு வரும். நீங்களும் மனதுக்குள் சிரித்தீர்கள் அல்லவா விசுகு. 😂😂😂😂😂

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.