Jump to content

தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படை கைது செய்யும் மீனவர்களை தண்டிக்க புதிய நடைமுறை - தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?

தமிழ்நாடு - இலங்கை மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அண்மையில், ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில், இரண்டு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இலங்கை கடற்படை கைது செய்யும் தமிழ்நாடு மீனவர்களை தண்டிக்க கடைபிடிக்கப்படும் புதிய நடைமுறை இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்து பக்தர்களிடம் இருந்து பெற்ற தொகையை மீண்டும் அவர்களிடமே அளிக்க இருப்பதாக மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர்.

மறுபுறம் இலங்கை கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் நுழைவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பிரவேசத்தை தடுக்க தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர்.

'இலங்கை கடைபிடிக்கும் நடைமுறையால் மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு'

இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாகக் கைது செய்யப்படும் தமிழ்நாட்டின் மீனவர்கள் இரண்டு வார சிறையடைப்புக்கு பின் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், சிறைபிடிக்கப்படும் விசைப் படகுகள் அதன் உரிமையாளர் நேரில் சென்று நீதிமன்றத்தில் ஆஜராகினால் படகு விடுவிக்கப்படும். ஆனால், தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது என்கின்றனர் இந்திய மீனவர்கள்.

விசைப்படகை இயக்கும் மீனவருக்கு ஆறு மாதம் சிறையும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவருக்கு ஓராண்டுச் சிறையும் விதித்து இருப்பதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

“எங்களது முன்னோர்கள் மீன்பிடித்த கச்சத்தீவில் தான் நாங்கள் மீன்பிடிக்கிறோம். இந்தியக் கடல் பகுதிகளிலும் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கிறார்கள்", என்கின்றனர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள்.

 

இலங்கையில் வீணடிக்கப்படும் விசைப்படகுகள்

இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

பிபிசியிடம் பேசிய இராமேஸ்வரம் விசைப்படகு சங்கத் தலைவர் எமிரேட், "பாஜகவின் 2014ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் 135 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அதில் 25 படகுகள் மட்டுமே மீட்கப்பட்டன். மற்றவை இலங்கையிலேயே பயனற்றுப் போயின. அதேபோல் 2019 முதல் தற்போது வரை 15 நாட்டுப் படகுகள் உட்பட 151 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருக்கிறது. ஆனால் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை ஏதும் மத்திய அரசு எடுக்கவில்லை. இலங்கை அரசும் பறிமுதல் செய்யப்படும் படகுகளை நாட்டுமையாக்கி வருகிறது,” என்கிறார் .

"இது கடலை நம்பித் தொழில் செய்யும் மீனவனின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாகச் சிதைத்து விடும். தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் நல்லுறவில் இல்லாததால், மாநில அரசை பழிவாங்குவதற்காக மீனவர்கள் கைது செய்யப்படும் போது மீட்பு நடவடிக்கைகள் எடுக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி எங்களை வஞ்சிக்கிறது." என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு

இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

2017-ஆம் ஆண்டு கச்சத்தீவு திருவிழா நேரத்தில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதால் கச்சத்தீவு திருவிழாவை இராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணித்தனர்.

அதேபோல் இந்த ஆண்டும் கச்சத்தீவு திருவிழா நெருங்கி வரும் நேரத்தில் இராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இருக்கிறது இலங்கை அரசு.

"இது கச்சத்தீவுக்கு இராமேஸ்வரம் மீனவர்கள் வரக்கூடாது என்று மறைமுகமாக தாக்குவது போல இருக்கிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் கைதைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம், கருப்புக்கொடி படகில் ஏந்தி போராட்டம் செய்து வருகிறோம்," என்றார் எமிரேட்.

இது தொடர்பாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை மீனவப் பிரதிநிதிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

'படகுகளை அரசுடமையாக்குவது சேமிப்பை அழிக்கும்'

"தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்குவது மீனவர்கள் சிறுகசிறுக சேமித்த சேமிப்பை அழிக்கிறது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

இந்திய நாட்டின் பிரதமர் மோதி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதில் தலையிட்டு நமது மீனவர்களை விடுதலை செய்வதையும், படகுகள் விடுவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்", என தனது சமூக வலைதளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Facebook பதிவை கடந்து செல்ல
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Facebook பதிவின் முடிவு

10 ஆண்டு சிறை தண்டனை

இந்தியா இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு

இந்திய மீனவர்களின் போராட்டம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய யாழ் மாவட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் உபத் தலைவர் அந்தோணி பிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார், "இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களின் கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறி தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி சிறிய மீன்களையும் அள்ளிச் செல்வதால் கடல் வளங்கள் முழுவதுமாக அழிகிறது" என்றார்.

மேலும், "இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக விரித்து வைத்திருக்கும் வலைகளையும் அறுத்து செல்கின்றனர். இது ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்" என்றார்.

இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ஆறு மாத முதல் ஓராண்டு சிறை தண்டனையை இலங்கை அரசு விதிக்கிறது.

ஆனால் சிறை தண்டனையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இலங்கை பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கினால் மட்டுமே, இந்திய மீனவர்கள் இங்கு வருவது குறையும் என்று இலங்கை மீனவர் தரப்பு கோரிக்கையை முன்வைக்கிறது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் முன்பு இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது, இந்திய மீனவர்களின் வருகையை தடுக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தினர்.

கச்சத்தீவு தொடர்பாக பேசிய இலங்கை மீனவர்கள், “இந்திய மீனவர்களை விடுதலை செய்ததால் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போம் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் கூறுவது தவறானது. ஒரு தொழிலை சமய வழிப்பாட்டுடன் சேர்த்து நிபந்தனையாக விதிப்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே, இந்திய மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டும், நாங்களும் பங்கேற்போம்", என்றனர்.

 

"சட்டத் திருத்தம் தேவையில்லை"

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் வெளிநாட்டு மீனவர்களுக்கு எதிராக சட்டத்தில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், பிபிசி தமிழ் வினவியது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், 'வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நாட்டிற்குள் பிரவேசித்தால், அவர்களுக்கான தண்டனை வழங்கும் சட்டம் ஏற்கனவே இலங்கையில் அமலில் உள்ளது. அந்த சட்டத்தின் இப்போது மாற்றம் கொண்டு வரப்படாது, என்றார்.

“2018ம் ஆண்டு அந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் தடவை பிடிப்பட்டால், பிணையில் விடலாம் என்றும், இரண்டாவது, மூன்றாவது முறை மீண்டும் பிடிபடும் போது அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் சட்டம் உள்ளது. சட்டவிரோத படகுகள் எல்லாம் அரசுடமையாக்கப்படும் என்று ஏற்கெனவே சட்டம் உள்ளது.

இந்திய மீனவர்கள் தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறார்கள். ஆனால் இலங்கை கடல் வளத்தை அழிக்கின்றனர். கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றது. எங்கள் மீனவர்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும்." என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுடன் கலந்துரையாட முயற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c5166517n5no

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மீனவர்களும் சரி, இலங்கை மீனவர்களும் சரி சட்டத்தைக் கடைப் பிடிப்பதில் தான் பிரச்சினை. இதில் தமிழ் நாட்டு மீனவர்களால் எல்லை மீறல்கள் இடம் பெறுவது அதிகமாக இருப்பதன் காரணம், நீண்ட தூரம் சென்று மீன்பிடிக்கக் கூடிய சக்தி வாய்ந்த படகுகள் அவர்களிடம் இருக்கின்றன. இலங்கை மீனவர்களிடம் இத்தகைய படகுகள் குறைவு. எனவே, ஒரு பாரிய பல அசம நிலையில், இலங்கை மீனவர்களுக்கு அதிகம் பாதிப்பு, வாழ்வாதார இழப்பு.

கனடாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையே கூட வட கிழக்கு எல்லைப் பகுதியில், நீர் எல்லைகள் அவ்வளவு வரையறுக்கப் படாத பிரதேசங்களில் மீன்பிடியில் பிணக்குகள் இருக்கின்றன. ஆனால், இது grey zones எனப்படும் வரையறை செய்யப் படாத பிரதேசங்கள் சம்பந்தப் பட்டது. இலங்கை, இந்திய எல்லையில் இத்தகைய grey zones - வரையறையற்ற பகுதிகள் இருக்கின்றனவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2024 at 12:35, ஏராளன் said:

தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?

தமிழ்நாட்டு மீனவர்கள்தான் பிரச்சனை

IMG-5906.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?

களவுக்குப் போன இடத்தில பாக்கு வெத்திலை வச்சு வரவேற்கேல்லையாம்!  

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

களவுக்குப் போன இடத்தில பாக்கு வெத்திலை வச்சு வரவேற்கேல்லையாம்!  

களவு எடுக்க போனபோது  வரவேற்கவில்லை  என்ற கோவத்தில்  கச்சதீவுக்கும் வரவில்லையாம்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் போதை பொருள் கடத்தல் விவகாரம் காரணமாக  அவர்கள் கச்சதீவுக்கு வரவில்லையோ தெரியவில்லை..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

11 MAR, 2024 | 11:08 AM
image

சென்னை: தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் என்றும், இப்பிரச்சினைக்கு விரைந்து நிரந்த தீர்வுகாணவேண்டும் எனவும் மத்திய,மாநில அரசுகளுக்கு அரசியல்தலைவர்கள் வலியுறுத்தியுள் ளனர்.

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்தமீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்குபல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 69 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்து வருகிறது.

மீனவர் வாழ்வாதாரம்... தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினருடைய தாக்குதலுக்கு ஆளாவதை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய பாஜக அரசுஎந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கான உரிய தீர்வுகள் காணப்படாத வரை தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே இருக்கும்.

பாமக தலைவர் அன்புமணி: தங்களுக்கு உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைதுசெய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொண்டு, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறல் களை கட்டவிழ்த்து விடுகிறது.

இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகும். இலங்கையின் இந்த சீண்டல்களை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. 40 ஆண்டுகளாகத் தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக்கவும், மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சென்றதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல்செய்ததும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இனியும் இது போன்ற நடவடிக்கைகள் தொடரக்கூடாது. எனவே மத்திய அரசு, உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்.

ஐஜேகே பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன்: கடலில் மீன்பிடிக்கும்போது இந்தியா இலங்கை கடல்பகுதி மிக குறுகலாக இருப்பதால் எங்கே சர்வதேச கடல் எல்லை இருக்கிறது என்பதை தமிழக மீனவர்களால் மிக துல்லியமாக கணிக்கமுடிவில்லை. இதனை2 நாடுகளும் உணர வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வாக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகத்தை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/178400

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தம் நாட்டின் கடற்கொள்ளையர்களுக்கு புனர்வாழ்வு அளித்து கொள்ளையை விடுத்து வேறு தொழில்வாய்ப்புக்களை வழங்கவேண்டும்!

  • Like 1
Link to comment
Share on other sites

On 26/2/2024 at 06:35, ஏராளன் said:

விசைப்படகை இயக்கும் மீனவருக்கு ஆறு மாதம் சிறையும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவருக்கு ஓராண்டுச் சிறையும் விதித்து இருப்பதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

உங்கள் அரசியல்வாதிகள் ஒன்றும் தெரியாதது போல் நடிப்பதால் உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
சந்திரனுக்கு போகும் உங்களால் ஒரு உரிய எல்லையை போட முடியாதா?
எல்லை இல்லை என்பது வெறும் நொண்டிசாட்டு என நினைக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வடகிழக்கு கடல் ஆழம் குறைந்த பகுதி ஆக இருப்பதால் சூரிய ஒளிவெப்பம் இலகுவில் ஊடுருவி மீன்கள் பாரிய அளவில்  இனம் பெருக வழிவகுக்கின்றது . இந்த இயற்கை தந்த பாரிய கொடையை அத்து மீறலாக வந்து அள்ளிசெல்வதை என்ன பெயர் கொண்டு அழைப்பது?

முடிந்தால் அதிரம் பட்டணம் பக்கம் போய் இந்த இலுவைபடகின் மூலம் மீன் பிடிக்கட்டும் பார்கலாம் நல்ல செத்தல் மிளகாய் அரைத்து பூசி அனுப்பி விடுவார்கள்  கேரளா பக்கம் இவர்கள் படகை கண்டாலே காணும் நேரே சிறைதான் ஏன் அதே இலுவைபடகுகளை தமிழ்நாட்டு கடலுக்குள் ஒட்டி மீன்பிடிக்கட்டும் பார்கலாம் சிறு வலை மீன்பிடி ஆட்கள் பட்டா கத்தி  கம்பு பொல்லுடன் கலவரமே நடக்கும் .

இங்கு ஐரோப்பிய நாடுகளில் சிறிய குஞ்சு மீன்கள் உடன் மீன்பிடி படகுகள் கரை திரும்பினால் தண்டனை பணம் அறவிடும் நடைமுறை உண்டு .

 கிழே உள்ள கானொளியில் தமிழருக்கு உரித்தான  வடகிழக்கு மீன் வளத்தை இழுவை படகு மீனவர்களால் எப்படி சிதைகிறார்கள் என்று பாருங்கள் போரில் கூட சிறுவர்களை  விட்டு விடுவார்கள் இந்த இழுவை படகின் வலையின் மூலம் கடலின் கருவறையையே அழித்து தள்ளுகிறார்கள் .

இந்த யுடுப்பர் வியாதியால் தங்களுக்கு தாங்களே போட்டி போட்டு வடகிழக்கு  கடல் மீன்வள கொள்ளையை  ஒப்புதல் வாக்கு மூலம்  கொடுகிறார்கள் நேரமுள்ளவர்கள் இன்னும் தேடி பார்க்கலாம் .

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

உங்களால் ஒரு உரிய எல்லையை போட முடியாதா?

எல்லை போட்டால் களவு எடுக்க வருவது தெளிவாக தெரிந்து விடும். இப்படியே  இருப்பது தான் களவு எடுக்க வசதி. ஏங்களுக்கு உரிமையுள்ள இடங்களில் நாங்கள் மீன பிடிக்க விடுகின்றார்கள் இல்லை என்று சொல்லி கொண்டு தொடர்ந்து களவு எடுக்கலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

6 மார்ச்

இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா எண்ணெய் பறிமுதல் 4 போ் கைது

https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Mar/05/இலங்கைக்கு-கடத்தவிருந்த-கஞ்சா-எண்ணெய்-பறிமுதல்-4-போ்-கைது

11 மார்ச் 

இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த கஞ்சா கைப்பற்றல்!

https://king24x7.com/amp/local-news-king/seizure-of-cannabis-that-tried-to-smuggle-to-sri-lanka-330547

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.