Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில்.

அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம்.

Advantage BJP? 

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில்.

அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம்.

Advantage BJP? 

அதிக வாக்குப்பதிவு ஆளும் கட்சிக்கு பொதுவாக ஆப்புதான். இங்கே இது மத்திய தேர்தல் என்பதால், பிஜேபி அங்கு ஆட்சி செய்வதால், யாருக்கு ஆப்பு என்று இன்னும் சரியாக சொல்ல முடியாது.  

அதிக‌ ம‌க்க‌ள் இந்த‌ தேர்த‌ல‌ புர‌க்க‌னித்து விட்டின‌ம்..................யாழில் திமுக்கா கூட்ட‌னி 39தொகுதியில் வெல்லும் என்று ந‌ம்ம‌ பெரிய‌ப்பா சொல்லி இருக்கிறார் ஹா ஹா வாய்ப்பில்லை

த‌ற்போது 72/ ச‌த‌வீத‌ வாக்கு ப‌திவாகி இருக்கு நாளை 75ஆக‌ கூட‌லாம் இறுதி முடிவு இன்னும் அறிவிக்க‌ வில்லை.........................

நாளை தெரியும் ப‌திவான‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம்.......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, நீர்வேலியான் said:

அதிக வாக்குப்பதிவு ஆளும் கட்சிக்கு பொதுவாக ஆப்புதான். இங்கே இது மத்திய தேர்தல் என்பதால், பிஜேபி அங்கு ஆட்சி செய்வதால், யாருக்கு ஆப்பு என்று இன்னும் சரியாக சொல்ல முடியாது.  

ஓம்.

இது மாநிலத்துக்கான anti incumbency factor ஆக இருக்க வாய்ப்புக்குறைவு என்றெ நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில்.

அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம்.

Advantage BJP? 

72/09 ச‌த‌வீத‌ம்🙏🥰....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பையன்26 said:

அதிக‌ ம‌க்க‌ள் இந்த‌ தேர்த‌ல‌ புர‌க்க‌னித்து விட்டின‌ம்.................

இல்லை 2019 உடன் ஒப்பிடுகையில் 2024 இல் 69%-71% ஆக கூடி உள்ளதாம். சென்னையில் 1980 க்கு பின் அதிக அளவு வாக்குபதிவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

இல்லை 2019 உடன் ஒப்பிடுகையில் 2024 இல் 69%-71% ஆக கூடி உள்ளதாம். சென்னையில் 1980 க்கு பின் அதிக அளவு வாக்குபதிவாம்.

இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பையன்26 said:

இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................

எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது.

இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான்.

2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம்.

இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது.

இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான்.

2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம்.

இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.

இவ‌ர் சொல்வ‌தை கேலுங்கோ..........................

16 minutes ago, goshan_che said:

எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது.

இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான்.

2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம்.

இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.

உத்திர‌பிர‌தேஸ்சில் 24  கோடி ம‌க்க‌ளுக்கு மேல் வ‌சிக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌வீத‌ம் / புரிய‌ல‌.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/4/2024 at 22:05, goshan_che said:

அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்……

முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.

ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே.
இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும்.

யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, புலவர் said:

ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே.
இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும்.

யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம் 

அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்...........................

யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு
ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம் 

அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................

Edited by பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, goshan_che said:

தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை.

இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது.

முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள்.

வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.

ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து.
1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, புலவர் said:

ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து.
1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.

நித‌ர்ச‌ன‌ உண்மை
ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை
சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை 
கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா
ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 minutes ago, புலவர் said:

என் வாக்கை திருடியது யார் ?

தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂

Edited by குமாரசாமி
முதல் பதிர்ந்த காணொளியில் பின்னோட்டங்கள் கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றதால் ... வேறொரு காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
26 minutes ago, புலவர் said:

நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.

இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து
அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது......................

காணொளி ஆதார‌ம் இதோ..........................................

21 minutes ago, குமாரசாமி said:

என் வாக்கை திருடியது யார் ?

தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂

இந்த‌ பெடிய‌னுக்கு மேடையில் பேசிக் கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌ள் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................

Edited by பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

இவ‌ர் சொல்வ‌தை கேலுங்கோ..........................

யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣.

ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம்.

எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும்.

1 hour ago, பையன்26 said:

உத்திர‌பிர‌தேஸ்சில் 24  கோடி ம‌க்க‌ளுக்கு மேல் வ‌சிக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌வீத‌ம் / புரிய‌ல‌.....................

தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம்.

இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09%

1 hour ago, புலவர் said:

ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே.
இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும்.

யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை.

ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன்.

பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்?

விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது.

10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, goshan_che said:

எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும்.

ஏன் அந்தக்கவலை?
தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?

Edited by குமாரசாமி
கெடுதல் எனும் சொல் இணைப்பு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, புலவர் said:

ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து.
1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.

நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது.

1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம்.

2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும்.

3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை.

4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும்.

5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது.

6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை.

7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார்.

8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை.

9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா?

உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.

9 minutes ago, குமாரசாமி said:

ஏன் அந்தக்கவலை?
தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?

இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன்.

தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது.

1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம்.

2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும்.

3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை.

4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும்.

5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது.

6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை.

7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார்.

8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை.

9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா?

உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.

இப்படிக்கு
இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 minutes ago, goshan_che said:

யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣.

ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம்.

எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும்.

தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம்.

இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09%

நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை.

ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன்.

பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்?

விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது.

10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.

வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி
தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்  
ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20 

ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில்
ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி

புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ

இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................

அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு

ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, குமாரசாமி said:

என் வாக்கை திருடியது யார் ?

தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂

உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான்.

நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣.

2 minutes ago, குமாரசாமி said:

இப்படிக்கு
இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣

நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.