Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

புலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை.

அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது..

large.IMG-20240130-WA0006.jpg.40a0574562

வல்லை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. 

அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்லை சந்தியில்..

large.20240125_130904.jpg.43ab5793d5f2c2

தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார்.

வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இராணுவ பயிற்சிக்கூடங்களும்.. தலைமையகங்களும்...  ஏக்கர் கணக்கில் காணிகள் இன்னும் இராணுவம் வசம். கடற்படை வேறு கடல் பக்கமா அபகரிச்சு நிற்குது. எல்லா இடமும் புத்தர் ஒவ்வொரு அரசமரமா குந்தி இருக்கிறார். உவங்கட விசுவாசத்தை பார்த்தால்.. புத்தரே தலை சுத்தி விழுந்துடுவார். 

ஆனால்.. செல்லடிச் சுவடுகளும்.... கன்போர்ட் எறிகணை சிதறல்களும் இல்லாத மதில்கள் இல்லை இப்பவும். புதிய அடிக்குமாடி மனைகளை மக்கள் எழுப்பி வருகினம். நல்லது தான். மக்கள் இப்போ பிடிக்க வந்த பிசாசோடு வாழப் பழகிவிட்டார்கள். 

மதியம் பசிக்கும் தானே. அப்போ.. சாப்பிட ஒரு இடம் போனம். விளம்பரத்துக்காக இல்லை. உண்மையாகவே இடமும் உணவும் இயற்கை காட்சிகளும் மனதுக்கு குளிர்ச்சியாக இருந்திச்சு. உள்ளூர் தகவலின் படி (உண்மை பொய் உறுதிப்படுத்தப்படவில்லை) புலம்பெயர் நபரின் முதலீட்டில் உருவான.. ஒரு விடுதியுடன் கூடிய உணவகம் கிடைத்தது. வெள்ளையள் அங்கும் சைக்கிளில் ஓடி ஓடி பேரம் பேசிக்கிட்டு இருப்பதைக் காண முடிக்கிறது. வெள்ளைக்காரனாவது காசை விடுறதாவது. 

large.20240125_134855.jpg.26fdf1316ebd54

உணவகத்தின் உள்.. எல்லாம் நல்லாத் தான் இருக்குது. உணவும். விலையும் பறுவாயில்லை. ஆனால் உணவகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிங்களப் படைமுகாமில் இருந்து ரபான் ப்ரித்.. நாள் முழுவதும். செவிக்கும் மனதுக்கும் எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. சிங்கள பெளத்தர்களே இல்லாத இடத்தில் எதுக்கு இந்த வேலை. மிக வரைவில்.. அந்த இடத்தில் புத்தர் நிரந்தரமாக குடியிருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம். 

20240125_134959.jpg

சரி.. என்று சற்றே நடந்து சுவர்களை நோக்கினால்..

large.20240125_140808.jpg.9feec6386baa04

வட ஹிந்திய நடிகைகளுக்கும் ஹிந்திய தலைவர்களுக்கும் முன்னிடம். மோடி ஜீ வேற இருக்கிறார்.

large.IMG-20240130-WA0011.jpg.da4f523bf4

ஈழத்தமிழர்கள் கப்பல் வரலாறும் ஒரு பக்கம் போட்டிருக்கு. தமிழன் சுழியன்.. என்றது அப்பவே தெரியும். ஆனால் வல்வை மாதிரி சுழியனாக இருப்பது கடினம் தான். 

large.IMG_20240212_083130_154.jpg.4203ca

அழகான வல்வைக்கடல். ஏனே ஆர்ப்பரிப்பதை நிறுத்திவிட்டது. அதற்கும் வீரம் வீழ்ந்துவிட்டதோ என்னவோ..??! (காட்சிக்கு ஏற்ற வசனம்.. அப்புறம் வல்வை மக்கள் தங்கள் வீரத்தைப் பற்றி கதைப்பதாக சண்டைக்கு வரக்கூடாது. உங்கள் வீரத்தை உலகறியும்.)

large.IMG_20240212_083130_076.jpg.7c7071

இந்த விடுதியின் கண்ணாடிக் கூட்டில் இருந்தான பார்வை. இங்கு சிங்களவர்களும்.. குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு வரும் இராணுவத்தின் உறவினர்கள் பெருமளவில் வந்து போகினம். உண்மையில்.. யாழ்ப்பாணம் காண ஆசையில் வரும் சிங்களவர்களும் உண்டு. அவர்களை வரவேற்பதில் தவறில்லை. நாம் தென்னிலங்கையை ரசிக்கவில்லையா..??!

large.20240125_160553.jpg.06848b41aec46f

இந்தப் பக்கம் இருந்து தான் அந்த எரிச்சலூட்டும் ரபான் பிரித் வந்தது. 

large.IMG_20240212_083130_197.jpg.5edb1c

ஒரு கடற்கரையை சோலையாக்கி வாழும் வல்வை மக்களுக்கு சலூட். இஸ்ரேலாம் இஸ்ரேல். 

வல்வையோடு நிற்காமல்.. தீவகமும் போனது..

large.20240122_090009.jpg.040ce7e44435cc

நயினை.. அம்மாளாச்சி நல்ல பெயிட் கியின்ட் எல்லாம் அடிச்சு நல்ல களையா இருக்கா. என்ன அவாவின் பக்தர்களை காவிக் கொண்டு போற படகுகளுக்கு தான் யாரும் பெயின்ட் அடிக்கிறாங்கள் இல்லை.

20240122_090902.jpg

நயினாதீவு இறங்கு துறையும் இப்ப நல்லா இருக்கு. ஆனால்.. சில அடிப்படை பழவழக்கங்களை மாத்திறது கஸ்டம். எங்கும் கச்சான் கோதும் கஞ்சலும். சிங்களவர்களும் அதே.

large.20240122_144223.jpg.95d3a3f086f9ca

நயினை நாகபூசனி அம்மன் கோவில்... தற்போது.

large.20240122_091157.jpg.a5d03d72684c8b

large.20240122_091156.jpg.1ae667e9c5a62e

அம்மனை தரிசிக்க வந்த கணவாய்.

large.20240122_085947.jpg.d2d301860893f0

நாகபூசனி அம்மனுக்கு அருகில் வந்துவிட்ட புத்தர். வெள்ளைவெளேர் என்று பரந்து காட்சி அளிக்கிறார்... சாரி காலை நீட்டி படுத்திருக்கிறார். 

20240124_175358.jpg

large.20240124_175838.jpg.b6f3192ba2b229259eeb545cb665c99a.jpg

தீவகத்தின் அழகிய சன் - செட் உடன் முடிச்சுக் கொள்ளுறம். ஆக அலட்டினால்.. வாசிக்கவும் நேரமில்லை.. மிணக்கடவும் நேரமில்லை. 

இறுதியா.. ஒன்று சொல்ல மறந்தது.. தீவகத்தில் இருந்து அராலிப்பக்கமா தனிச்சிங்களத்தில் எதையோ எழுதி வைச்சு கொப்பேகடுவ.. போய் சேர்ந்த இடத்தை சிங்களவருக்கு மட்டும் திறந்து விட்டிடுருக்கிறாங்கள். ஐயாவுக்கு சிலை வைச்சு புகழஞ்சலியோ இல்லை.. குடியேற்றமோ தெரியாது. எங்கட டமிழ் டேசியக் கட்சிகளுக்கு தமது தேசத்தில் நடப்பத்தைக் கவனிக்க நேரமில்லை. கட்சி பிரிக்கவும் கன்னை பிரிக்கவும் தான் நேரம் போதும். இதனையே சிங்களவர்கள்.. ஹிந்தியா.. சீனா.. சர்வதேசம்.. மட்டுமல்ல.. தமிழர்களில் சிலரும் விரும்பினம். தமிழன் பலமாகக் கூடாது. அதை களத்தில் நல்லாச் செய்யுறாங்கள். 

Edited by nedukkalapoovan
  • Like 8
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

AB21 வீதி யாழில் இருந்து வட்டுக்கோட்டைச் சந்தியூடாக பொன்னாலைச் சந்தியூடாக மாதகல் ➡️ சேந்தாங்குளம் ➡️ கீரிமலை ➡️ மாவிட்டபுரம் ➡️ காங்கேசன்துறை ➡️ மயிலிட்டி ➡️ பலாலி ➡️ செல்வச்சந்நிதி ➡️ வல்வெட்டித்துறை ➡️ பருத்தித்துறை வரை செல்கிறது.

AB21 வீதி பகுதி பகுதியாக புனரமைக்கப்படுகிறது. யாழில் இருந்து வட்டுக்கோட்டைச் சந்தியூடாக பொன்னாலைச் சந்திவரை தரமாக வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. வழுக்கியாற்றுப் பாலம் புனரமைக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படங்களுடன் செய்திகளும் நன்றாக இருக்கின்றன.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

கட்சி பிரிக்கவும் கன்னை பிரிக்கவும் தான் நேரம் போதும்.

பிரித்து விடுவதற்குத் தானே நிரந்தரமா துணைத் தூதரகத்தைப் போட்டு இருக்கிறார்கள்.

1 hour ago, nedukkalapoovan said:

ஆனால்.. செல்லடிச் சுவடுகளும்.... கன்போர்ட் எறிகணை சிதறல்களும் இல்லாத மதில்கள் இல்லை இப்பவும். புதிய அடிக்குமாடி மனைகளை மக்கள் எழுப்பி வருகினம். நல்லது தான். மக்கள் இப்போ பிடிக்க வந்த பிசாசோடு வாழப் பழகிவிட்டார்கள். 

@வல்வை சகாறா இன் மாளிகையைக் காணலையோ?

அதுசரி பிரித் ஏதும் பாடமாக்கலையோ?

இல்லை தம்பிக்கு ஒருக்கா கேட்டாலே பாடமாகிடும்.

அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஈழப்பிரியன் said:

பிரித்து விடுவதற்குத் தானே நிரந்தரமா துணைத் தூதரகத்தைப் போட்டு இருக்கிறார்கள்.

@வல்வை சகாறா இன் மாளிகையைக் காணலையோ?

அதுசரி பிரித் ஏதும் பாடமாக்கலையோ?

இல்லை தம்பிக்கு ஒருக்கா கேட்டாலே பாடமாகிடும்.

அதுதான்.

நிறைய மாளிகைகள் வந்துவிட்டன. அதில் எது சகாரா அக்காவினது என்று தெரியவில்லையே.

மேலும்... கொழும்பில் சும்மா பிரித் தான் ஓதுவாங்கள். அதையே தாங்க முடிவதில்லை. இது ரபான் அடிச்சு ஓதிறது. கொடுமை. கேட்கவே சகிக்கல்ல. 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nedukkalapoovan said:

புலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை.

அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது..

large.IMG-20240130-WA0006.jpg.40a0574562

வல்வை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. 

அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்வை சந்தியில்..

large.20240125_130904.jpg.43ab5793d5f2c2

தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார்.

வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இராணுவ பயிற்சிக்கூடங்களும்.. தலைமையகங்களும்...  ஏக்கர் கணக்கில் காணிகள் இன்னும் இராணுவம் வசம். கடற்படை வேறு கடல் பக்கமா அபகரிச்சு நிற்குது. எல்லா இடமும் புத்தர் ஒவ்வொரு அரசமரமா குந்தி இருக்கிறார். உவங்கட விசுவாசத்தை பார்த்தால்.. புத்தரே தலை சுத்தி விழுந்துடுவார். 

ஆனால்.. செல்லடிச் சுவடுகளும்.... கன்போர்ட் எறிகணை சிதறல்களும் இல்லாத மதில்கள் இல்லை இப்பவும். புதிய அடிக்குமாடி மனைகளை மக்கள் எழுப்பி வருகினம். நல்லது தான். மக்கள் இப்போ பிடிக்க வந்த பிசாசோடு வாழப் பழகிவிட்டார்கள். 

மதியம் பசிக்கும் தானே. அப்போ.. சாப்பிட ஒரு இடம் போனம். விளம்பரத்துக்காக இல்லை. உண்மையாகவே இடமும் உணவும் இயற்கை காட்சிகளும் மனதுக்கு குளிர்ச்சியாக இருந்திச்சு. உள்ளூர் தகவலின் படி (உண்மை பொய் உறுதிப்படுத்தப்படவில்லை) புலம்பெயர் நபரின் முதலீட்டில் உருவான.. ஒரு விடுதியுடன் கூடிய உணவகம் கிடைத்தது. வெள்ளையள் அங்கும் சைக்கிளில் ஓடி ஓடி பேரம் பேசிக்கிட்டு இருப்பதைக் காண முடிக்கிறது. வெள்ளைக்காரனாவது காசை விடுறதாவது. 

large.20240125_134855.jpg.26fdf1316ebd54

உணவகத்தின் உள்.. எல்லாம் நல்லாத் தான் இருக்குது. உணவும். விலையும் பறுவாயில்லை. ஆனால் உணவகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிங்களப் படைமுகாமில் இருந்து ரபான் ப்ரித்.. நாள் முழுவதும். செவிக்கும் மனதுக்கும் எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. சிங்கள பெளத்தர்களே இல்லாத இடத்தில் எதுக்கு இந்த வேலை. மிக வரைவில்.. அந்த இடத்தில் புத்தர் நிரந்தரமாக குடியிருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம். 

20240125_134959.jpg

சரி.. என்று சற்றே நடந்து சுவர்களை நோக்கினால்..

large.20240125_140808.jpg.9feec6386baa04

வட ஹிந்திய நடிகைகளுக்கும் ஹிந்திய தலைவர்களுக்கும் முன்னிடம். மோடி ஜீ வேற இருக்கிறார். ஈழத்தமிழர்கள் கப்பல் வரலாறும் ஒரு பக்கம் போட்டிருக்கு. தமிழன் சுழியன்.. என்றது அப்பவே தெரியும். ஆனால் வல்வை மாதிரி சுழியனாக இருப்பது கடினம் தான். 

large.IMG_20240212_083130_154.jpg.4203ca

அழகான வல்வைக்கடல். ஏனே ஆர்ப்பரிப்பதை நிறுத்திவிட்டது. அதற்கும் வீரம் வீழ்ந்துவிட்டதோ என்னவோ..??! (காட்சிக்கு ஏற்ற வசனம்.. அப்புறம் வல்வை மக்கள் தங்கள் வீரத்தைப் பற்றி கதைப்பதாக சண்டைக்கு வரக்கூடாது. உங்கள் வீரத்தை உலகறியும்.)

large.IMG_20240212_083130_076.jpg.7c7071

இந்த விடுதியின் கண்ணாடிக் கூட்டில் இருந்தான பார்வை. இங்கு சிங்களவர்களும்.. குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு வரும் இராணுவத்தின் உறவினர்கள் பெருமளவில் வந்து போகினம். உண்மையில்.. யாழ்ப்பாணம் காண ஆசையில் வரும் சிங்களவர்களும் உண்டு. அவர்களை வரவேற்பதில் தவறில்லை. நாம் தென்னிலங்கையை ரசிக்கவில்லையா..??!

large.20240125_160553.jpg.06848b41aec46f

இந்தப் பக்கம் இருந்து தான் அந்த எரிச்சலூட்டும் ரபான் பிரித் வந்தது. 

large.IMG_20240212_083130_197.jpg.5edb1c

ஒரு கடற்கரையை சோலையாக்கி வாழும் வல்வை மக்களுக்கு சலூட். இஸ்ரேலாம் இஸ்ரேல். 

வல்வையோடு நிற்காமல்.. தீவகமும் போனது..

large.IMG_20240212_083130_406.jpg.b00759

நயினை.. அம்மாளாச்சி நல்ல பெயிட் கியின்ட் எல்லாம் அடிச்சு நல்ல களையா இருக்கா. என்ன அவாவின் பக்தர்களை காவிக் கொண்டு போற படகுகளுக்கு தான் யாரும் பெயின்ட் அடிக்கிறாங்கள் இல்லை. நயினாதீவு இறங்கு துறையும் இப்ப நல்லா இருக்கு. ஆனால்.. சில அடிப்படை பழவழக்கங்களை மாத்திறது கஸ்டம். எங்கும் கச்சான் கோதும் கஞ்சலும். சிங்களவர்களும் அதே.

large.IMG_20240212_080433_522.jpg.682345

தீவகத்தின் அழகிய சன் - செட் உடன் முடிச்சுக் கொள்ளுறம். ஆக அலட்டினால்.. வாசிக்கவும் நேரமில்லை.. மிணக்கடவும் நேரமில்லை. 

இறுதியா.. ஒன்று சொல்ல மறந்தது.. தீவகத்தில் இருந்து அராலிப்பக்கமா தனிச்சிங்களத்தில் எதையோ எழுதி வைச்சு கொப்பேகடுவ.. போய் சேர்ந்த இடத்தை சிங்களவருக்கு மட்டும் திறந்து விட்டிடுருக்கிறாங்கள். ஐயாவுக்கு சிலை வைச்சு புகழஞ்சலியோ இல்லை.. குடியேற்றமோ தெரியாது. எங்கட டமிழ் டேசியக் கட்சிகளுக்கு தமது தேசத்தில் நடப்பத்தைக் கவனிக்க நேரமில்லை. கட்சி பிரிக்கவும் கன்னை பிரிக்கவும் தான் நேரம் போதும். இதனையே சிங்களவர்கள்.. ஹிந்தியா.. சீனா.. சர்வதேசம்.. மட்டுமல்ல.. தமிழர்களில் சிலரும் விரும்பினம். தமிழன் பலமாகக் கூடாது. அதை களத்தில் நல்லாச் செய்யுறாங்கள். 

அருமையான படங்களும், செய்திகளும்......👍👍

நீங்கள் சொல்லியிருப்பது வல்வை வளைவு இல்லை. அது வல்லை வளைவு என்றே நினைக்கின்றேன். வல்லைச் சந்தியும், வல்வைச் சந்தியும் வேறு வேறு.
 
வல்வையில் உதயசூரியன் கடற்கரைக்கு போகும் வழியில், தலைவரின் வீட்டிற்கு அருகாமையில், ஒரு வளைவு கடற்கரையை நோக்கி இருக்கின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
58 minutes ago, ரசோ said:

அட இந்தளவுக்கு நுணுக்கமா இருக்கா. சரி சரிப்படுத்தினால் போச்சு. நன்றி சுட்டிக்காட்டியமைக்கு.

ஆம்.. இது வடமராட்சியின் நுழைவாயிலில் இருப்பதால் வல்லை என்று வருதலே பொருந்தும். வடமராட்சியின் ஒரு பகுதிதானே வல்வை எனும் வல்வெட்டித்துறை..!

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படங்களுடன் செய்திகளும் நன்றாக இருக்கின்றன.....வாழ்துக்கள்

மேலும்... கொழும்பில் சும்மா பிரித் தான் ஓதுவாங்கள். அதையே தாங்க முடிவதில்லை. இது ரபான் அடிச்சு ஓதிறது. கொடுமை. கேட்கவே சகிக்கல்ல. 

இதைச் சொல்லுறது ..கடைசி அடியென்று...அங்கு எல்லாமே ஏலத்தில் வருகிறது...இருக்குமட்டும் என்சோய் பண்ணுவமென்று ..அடிக்கிறாங்கள்.. அதுக்குப்  பிறகு சிவபுராணம்தான் கேட்கும்....இருந்து பார்ப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, alvayan said:

கூடிய சீக்கிரம் பாங்கு சத்தம் இங்கு கேட்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, colomban said:

கூடிய சீக்கிரம் பாங்கு சத்தம் இங்கு கேட்கும்

அப்ப உங்கடை ஆட்களும் அலுவல் பாக்கினம் என்று சொல்லுறியள்....😎

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்ஸ் ஊரிக்காடு பக்கம் போயிருக்கின்றார்! ஒபரேசன் லிபரேசனுக்கு முன்னர்  வல்வை இராணுவ முகாமைச் சுற்றி இருந்த சென்றிகளுக்கு யாழ்ப்பாண நகரத்தில் இருந்த சினிமாத் தியேட்டர்களின் பெயர்களை வைத்திருந்தார்கள். ஊரிக்காட்டுப் பக்கம் லிடோ, கம்பர்மலைப் பக்கம் விண்ட்சர், பிறகு ராணி என்று இருந்தன!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/3/2024 at 04:53, colomban said:

கூடிய சீக்கிரம் பாங்கு சத்தம் இங்கு கேட்கும்

சும்மா வாயாலை துண்டு போட்டு இடம் பிடிக்க அது ஒன்றும் சுடலை கிடையாது ஏற்கனவே உங்கடை ஆட்கள் தென்னிலங்கை புற்று நோயாளர் பாவித்த பஞ்சு மெத்தையை சுத்தம் பண்ணி வடபகுதியில் புதுசு போல் விற்று நல்ல காசு பார்த்தனர் அப்படியே வல்வை பக்கமும் போக அங்கு அந்த மெத்தையின் குறிப்பிட்ட வைத்தியசாலையின் அடையாளத்தை வைத்து மாட்டுபட்டு..................................... பிறகு நடந்தது தணிக்கை .அதன் பின் உங்க ஆட்கள் அந்த பக்கமே போவதில்லையாமே .......

அந்த ஊர் வெறுமே 25௦ ஏக்கரில் தான் உள்ளது அதுக்குள்  39 பெரிய கோயில்கள் ஒரு தேவாலயமும் உள்ள இடத்தில் உங்க கனவு நிறைவேற வாய்ப்பே இல்லை ராஜா .

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, பெருமாள் said:

சும்மா வாயாலை துண்டு போட்டு இடம் பிடிக்க அது ஒன்றும் சுடலை கிடையாது ஏற்கனவே உங்கடை ஆட்கள் தென்னிலங்கை புற்று நோயாளர் பாவித்த பஞ்சு மெத்தையை சுத்தம் பண்ணி வடபகுதியில் புதுசு போல் விற்று நல்ல காசு பார்த்தனர் அப்படியே வல்வை பக்கமும் போக அங்கு அந்த மெத்தையின் குறிப்பிட்ட வைத்தியசாலையின் அடையாளத்தை வைத்து மாட்டுபட்டு..................................... பிறகு நடந்தது தணிக்கை .அதன் பின் உங்க ஆட்கள் அந்த பக்கமே போவதில்லையாமே .......

அந்த ஊர் வெறுமே 25௦ ஏக்கரில் தான் உள்ளது அதுக்குள்  39 பெரிய கோயில்கள் ஒரு தேவாலயமும் உள்ள இடத்தில் உங்க கனவு நிறைவேற வாய்ப்பே இல்லை ராஜா .

அதுவே....👍

இராணுவ முகாமுக்குள் அல்லது போலீஸ் நிலையத்திற்குள் அவர்கள் எதையும் செய்து கொள்ளலாமே தவிர, வல்வையில் வேறு எங்கும் முடியாது.  

Edited by ரசோதரன்
  • Like 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.