Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

சீமான் என்றால் யார் என்றே தெரியாத ஜனம்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து உள்ளார்கள் .அதே போல் நம்ம kavi அருணாசலம் ஐய்யா  வரைந்த ai கார்ட்டூன் ஆமை சூப்பராக உள்ளது அது அவர்களின் சின்னமாக இருந்தால் இன்னும் சூப்பர் .

இந்த ஆமையை  அவர்  வரைந்ததில் உள்ள நக்கலை  நீங்கள் கவனிக்காதது  வருத்தம் தருகிறது

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20240323-175239-Chrome.jpg

Screenshot-20240323-174915-Chrome.jpg

2020க‌ளில் யாழில் எழுதினேன் வீர‌ப்ப‌ன் என் குல‌ தெய்வ‌ம் என்று.............அப்போது ஒரு க‌ள‌ உற‌வு என்னை கேவ‌ல‌ப் ப‌டுத்தினார்............இப்போது வீர‌ப்ப‌னின் ம‌க‌ளை ப‌ல‌ ஆயிர‌ம் ம‌க்க‌ள் முன் வேட்பாள‌ரா அண்ணன் சீமான் அறிவித்து இருக்கிறார்.......... வீர‌ப்ப‌ன் பெய‌ரை சொன்ன‌தும் அந்த‌ இட‌மே அதிர்ந்த‌து................வீர‌ப்ப‌னை ம‌க்க‌ள் ம‌ன‌தில் இருந்தும் அழிக்க‌ முடியாது...............................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

இந்த ஆமையை  அவர்  வரைந்ததில் உள்ள நக்கலை  நீங்கள் கவனிக்காதது  வருத்தம் தருகிறது

புரியாமல் இல்லை எங்களில் பல திறமை சாலிகள் உண்டு துரதிஷ்ட வசமாக ஒற்றுமை என்றால் என்ன ? சரியான விளக்கமின்றி எமது படிப்பு முறை தான் காரணம் .எனது தமிழுக்காக குரல் கொடுப்பவர் யார் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பேச வராது எனக்கு அவரை பிடிக்க வில்லை இல்லை என்றால் அமைதியாக இருப்பது மேல் .

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

இந்த ஆமையை  அவர்  வரைந்ததில் உள்ள நக்கலை  நீங்கள் கவனிக்காதது  வருத்தம் தருகிறது

எமது போராட்டத்தில் காணாத நக்கல் துரோகங்களையா இப்போ பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சிக்கு எந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

எமது போராட்டத்தில் காணாத நக்கல் துரோகங்களையா இப்போ பார்க்கிறோம்.

இது நம் பிறப்பில் இருந்து வருகிறது என்று நினைக்கிறேன்.

தன்னை அதிகம் நம்புபவர்களைத்தான் சாமி கூட அதிகம் சோதிக்குமாம் இல்லை??

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வாலி said:

இப்ப செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சிக்கு எந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கு?

26ம் திக‌தி தான் தெரியும் அண்ணா............மைக் சின்ன‌ம் வேண்டாம் என்று சொல்லியாச்சு
புது சின்ன‌ம் மூன்று நாளில் தெரிந்து விடும்..............இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம்..............இந்தியா ஜ‌ன‌நாய‌க‌ நாடு இல்லை ச‌ர்வாதிகார‌ நாடு...................

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பெருமாள் said:

புரியாமல் இல்லை எங்களில் பல திறமை சாலிகள் உண்டு துரதிஷ்ட வசமாக ஒற்றுமை என்றால் என்ன ? சரியான விளக்கமின்றி எமது படிப்பு முறை தான் காரணம் .எனது தமிழுக்காக குரல் கொடுப்பவர் யார் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பேச வராது எனக்கு அவரை பிடிக்க வில்லை இல்லை என்றால் அமைதியாக இருப்பது மேல் .

அது அண்ண‌ன் சீமானை கேவ‌ல‌ப் ப‌டுத்தும் வித‌மாய் வ‌ரைந்த‌ கேலிச்  சித்திர‌ம்..................க‌ட்சி சின்ன‌ம்  ப‌றி போன‌தில் இருந்து ச‌ரியான‌ க‌வ‌லை................இது ப‌க்கா அநீதி..............கூட்ட‌னி வைத்து இருந்தால் சின்ன‌மும் கொடுத்து 1000 கோடி காசும் 8 தொகுதியும் கொடுத்து இருப்பாங்க‌ள் ச‌ங்கிய‌ல்...................அண்ண‌ன் சீமானுக்கு கீழ் தாங்க‌ள் வ‌ந்து விட்டால் த‌ங்க‌ளுக்கு அவ‌மான‌ம் என்று அண்ணாம‌லை போட்ட‌ ச‌தி திட்ட‌ம் சின்ன‌ம் ப‌றிப்பு..............திமுக்காவும் பாஜாக்காவும் டீலிங் ஆனால் வெளியில் வீஜேப்பியை எதிர்ப்ப‌து போல் திமுக்காவின் ந‌டிப்பு...................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எமது போராட்டத்தில் காணாத நக்கல் துரோகங்களையா இப்போ பார்க்கிறோம்.

என‌க்கு ஜ‌யா வைக்கோ ம‌ற்றும் திருமாளவ‌னை சுத்த‌மாய் பிடிக்காது அவ‌ர்க‌ள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொட‌ர்ந்து பேச‌க் கூடிய‌வ‌ர்க‌ள்............2009தில் நம் இன‌ம் ப‌ட்ட‌ வ‌லி இன்னும் ஆற‌ வில்லை............இவ‌ர்க‌ள் இருவ‌ரும் எம் இன‌த்தை அழித்த‌ கூட்ட‌த்துட‌ன் நிக்கும் போது இவ‌ர்க‌ளை இழி ப‌டுத்த‌ எவ‌ள‌வோ இருக்கு.............இதெல்லாம் வேண்டாம் என்று தான் பேசாம‌ இருக்கிறோம்................இது வ‌ள‌ந்த‌ பெரிய‌ ம‌னித‌ர்க‌ளுக்கு தெரிய‌வில்லை...............வேட்பாள‌ர் அறிவிப்பில் த‌லைவ‌ரின் புக‌ழை பெருமையா அண்ண‌ன் சீமான் எடுத்து சொன்னார் 
இந்த‌ வேட்பாள‌ர் அறிவுப்பு கூட்ட‌த்தை கோடி க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் தொலைக் காட்சியிலும் யூடுப்பிலும் பார்த்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது...............அண்ண‌ன் சீமான் ம‌ட்டும் இல்லை என்றால் க‌ருணாநிதி புக‌ழ் பாடுவோம் என்று ஆர‌ம்பித்து இருப்பின‌ம்.............2009தில் ந‌ட‌ந்த‌ இன‌ ப‌டுகொலையை மூடி ம‌றைத்து இருப்பின‌ம்..................................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி.. நாம் தமிழர் அறிவிப்பு

24 MAR, 2024 | 10:10 AM
image

இந்திய மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார். 

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையடுத்து ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி எந்தவொரு கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து களம் காண்கிறது.

2024 மக்களை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 20 பெண்கள் மற்றும் 20 ஆண்கள் அடங்கிய  40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுவதாக அறிவித்தார். அறிவித்தபோது கூட்டத்தில் கைதட்டல்கள் மற்றும் விசில் சத்தங்கள் பறந்தன. ”ஐயா வனம் காக்க போராடினார்; இனம் காக்க நானும் என் மகளும் போராடுகிறோம்” என சீமான் தெரிவித்தார்

அப்போது பேசிய சீமான் ”தனித்து நிற்கிறோம் ! தனித்துவத்தோடு நிற்கிறோம் ! மற்றவர்தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என்று காட்டுவதை விட தனித்து நின்று உண்மையான உயரத்தைக் காட்டுவதே மேலானது.

காலையில் வாக்குப் பதிவு என்றால் இரவு சொன்னால் கூட சின்னத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் ஆற்றல் இதிறமை கொண்ட தகவல் தொழில்நுட்பப் படை பிரிவை கொண்டுள்ளேன்.என சீமான் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/179555

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2024 at 00:15, பெருமாள் said:

சீமான் என்றால் யார் என்றே தெரியாத ஜனம்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து உள்ளார்கள் .அதே போல் நம்ம kavi அருணாசலம் ஐய்யா  வரைந்த ai கார்ட்டூன் ஆமை சூப்பராக உள்ளது அது அவர்களின் சின்னமாக இருந்தால் இன்னும் சூப்பர் .

என்ன இருந்தாலும் இந்திய அரசியலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது வெகு அபூர்வம் அதை சீமான் உணராதவரை அவர் வெளியில்தான் இருப்பார் பையன்26 குறை நினைக்கவேண்டாம். 

சீமான் இந்தத் தேர்தலில்  தன் வாக்கு சத வுத்ததை அதிகப்படுத்தினால் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏன் தமிழர் கட்சியின் தலைமையில் கூட்டணி அமையாது  என்று சொல்லக்கூடாது. நாம் தமிழர்கட்சிக்கு இச்தத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைய வேண்டும் என்று திட்டமிட்டு கரும்பு விவசாய சின்னத்தை பாஜக பறித்தது. திமுக அதற்கு துணை போனது. நாம்தமிழர்கட்சியின் வாக்கு சதவுதம் குறைக்கப்பட்டு கமல் கட்சிபோல் காணமல் ஆக்க வேண்டும் என்பதே திமுக பாஜகவின் கனவு. பாஜகவுக்கு இந்தத்த்தேர்தலில் அதிமுகவைப் பின்தள்ளி 2வது இடம் தவறினினால் 3 வது இடத்தையாவது தக்க வைக்க வேண்டும் என்று செயல்படுகிறது. தனித்து நின்ற போது விஜயகாந் வைகோ போன்றவர்'களின் கட்சிகளுக்கு இருந்த செல்வாக்கு கூட்டணி செர்ந்த பின் அதிமுக திமுக என்ற பெரிய கட்சிகளால் அடியோடு அழிக்கப்பட்டது.தனித்து நின்றால் உடனே நற்றி கிடைக்காது ஆனால் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கும் மாற்றத்தை விரும்பும் மக்கள் அதனை விரும்புவார்கள். இந்த நவீ னஉலகில் நாம் தமிழர் போன்ற ஒரு கட்சி வளர்ச்சியடைவதற்கு பல காரணிகள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, புலவர் said:

ச‌ரியான‌ பார்வை ந‌ன்றி புல‌வ‌ர் அண்ணா..........

அண்ண‌ன் சீமான் கூட்ட‌னி வைச்சால் 7ச‌த‌வீத‌ வாக்கு 2016க‌ளில் இருந்த‌து போல் 1ச‌த‌வீத‌த்தில் வ‌ந்து நிக்கும்..............இந்த‌ நிலைக்கு வ‌ந்தால் பிற‌க்கு ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது...............வைக்கோ செய்த‌ த‌வ‌றை அண்ண‌ன் சீமான் ஒரு போதும் செய்ய‌ மாட்டார்................சீமான் க‌ட்சியில் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  சேருவ‌து உள‌வுத்துறை மூல‌ம் அறிந்து தான் என் ஜ‌ ஏ சோத‌னை அதிலும் ஒரு ஆதார‌மும் இல்லை............பிற‌க்கு சின்ன‌ம் ப‌றிப்பு.............ப‌ட்டிய‌ல்ல‌  இருக்கும் சின்ன‌த்தை கேட்க்க‌ சும்மா உப்பு ச‌ப்பு இல்லா மைக் சின்ன‌த்தை தேர்த‌ல் ஆனைய‌ம் ஒதுக்கின‌து...............புது சின்ன‌ம் இன்னும் 48ம‌ணித்தியால‌த்தில் தெரிந்து விடும்🙏...............

  • கருத்துக்கள உறவுகள்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌ம் 27ம் திக‌தி காலை அறிவிக்க‌ப் ப‌டுமாம்🙏🥰.............

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20240327-113956-Chrome.jpg

Screenshot-20240327-114037-Chrome.jpg

Screenshot-20240327-114016-Chrome.jpg

Screenshot-20240327-114010-Chrome.jpg

Screenshot-20240327-114104-Chrome.jpg

திரும‌ண‌ம் ஆன‌ த‌ம்ப‌திகள் க‌ட்சி சின்ன‌த்துட‌ன் நிக்கும் அழகிய‌ ப‌ட‌ம்.................க‌ட்சியில் இருக்கும் பெசிய‌ங்க‌ள்  உட‌ன‌ மூளைய‌ க‌ச‌க்கி உட‌ன‌ ந‌ல்ல‌த‌ செய்து விடுவின‌ம்.................நாம் த‌மிர் ஜ‌ரிம் மிக‌வும் ப‌லம்.............வாழ்க‌ த‌மிழ் வெல்க‌ நாம் த‌மிழ‌ர்🙏🙏🙏🥰...................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இது என் பங்குக்கு,

IMG-6203.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வான‌த்தில் இருக்கும் சூரிய‌னை பார்த்து தெரு நாய் குரைத்தால் தெரு நாய்க்கு தான் பாதிப்பு.................ம‌ற்ற‌ம் ப‌டி சூரிய‌ன் ப‌ல‌ கோடி ம‌க்க‌ளுக்கு வெளிச்ச‌ம் த‌ரும்...................

நாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் மைக் ஆங்கில‌ சொல்

த‌மிழில் அத‌ற்க்கு பெய‌ர் ஒலிவாங்கி.............

அன்னை த‌மிழ் வாயால் அம்மாவை ம‌ம்மி என்று அழைத்தாய் வெள்ளைக் கார‌ன் தான் உன‌க்கு அப்ப‌னா😜.......................  

  • கருத்துக்கள உறவுகள்

Xதளத்தில் சிலமணி நேரங்களில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் ஒலிவாங்கி சின்னம்.நாம் தமிழர் உறவுகள் புயல் வேகப் பரப்புரை

என்னால் படங்களை இணக்க முடியவில்லை.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

வான‌த்தில் இருக்கும் சூரிய‌னை பார்த்து தெரு நாய் குரைத்தால் தெரு நாய்க்கு தான் பாதிப்பு.................ம‌ற்ற‌ம் ப‌டி சூரிய‌ன் ப‌ல‌ கோடி ம‌க்க‌ளுக்கு வெளிச்ச‌ம் த‌ரும்...................

இதையும் கடந்து செல்லனும் பையா ஏதோ தங்கடை வீட்டில் சீமான் கொள்ளை அடித்தது போல் சிலர் குதிப்பது வியப்பாக உள்ளது இதை சொல்வதால் நான் சீமான் ஆதரவாளர் என்று மொட்டை அடித்து செம்புள்ளி  குத்தி கழுதையில் ஏற்றி திருவிழா கொண்டாட சிலர் வெளிக்கிடுவினம் 😀நான் யார் தமிழ் மொழிக்காக குத்த முறி கிறார்களோ அவர்களை பிடிக்காட்டியும் அவர்களை விமரிசனம் செய்வதில்லை எனும் கொள்கை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

Xதளத்தில் சிலமணி நேரங்களில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் ஒலிவாங்கி சின்னம்.தாம் தமிழர் உறவுகள் புயல் வேகப் பரப்புரை

என்னால் படங்களை இணக்க முடியவில்லை.

சின்னத்தை புடுங்கிறம் சீமானை விழுத்திறம் எண்டு கிளம்பியவர்கள் கடைசியிலை மைக் சின்னத்தை கொடுத்து தங்களுக்கு தாங்களே ஆப்பை செருகிக்கொண்டு  நடக்க முடியாமல் அல்லல் படுகினம் .சமூக வலைத்தளம் முழுதும் வெறித்தனமான பரப்புரை ஆனால் இதே வெறித்தனம் ஒட்டு கிடைப்பதில் இருந்தால் நல்லது.

இந்திய சனத்துக்கு எவ்வளவுதான் சொன்னாலும் அந்த தேர்தல் நேரத்தை ஒரு திருவிழா போலத்தான் கொண்டாடுவார்கள் அந்த தேர்தல் காலம் முழுதும் குவாட்டரும் பிரியாணியும் கொண்டாட்டமுமாய் யார் பணம் கூட கொடுத்தார்களோ யார் அவர்கள் ஆட்களோ அல்லது அவர்கள் ஆட்கள் எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கிரார்களோ அவர்களுக்குத்தான் ஒட்டு தேர்தல் திருவிழா முடிந்து மயக்கம் தெளிய நிகழ்காலம் கொடுமையானது என்று புரிந்து கொண்டவுடன் மறுபடியும் சீமானுடன் சேர்ந்து கத்துவார்கள் இந்த யதார்த்தம் சீமான் புரிந்து கொள்ளும்வரை இன்னும் பல தேர்தல்கள் காத்திருக்கவேண்டி வரும் மூன்று சீட் உறுதி என்கிறார்கள் ஆனால் அதுவும் கஷ்ட்டம் காரணம் தேர்தல் முடிந்தவுடன் சூட்டோடு சூடாக வாக்கு எண்ணிக்கை அங்கு நடைபெறுவதில்லை எல்லாம் ஆற விட்டு என்ன தொடங்குவார்கள் அதற்கு இடையில் உலகில்  மிகபெரிய ஜனநாயக நாடு என்று பீத்தி கொண்டு காப் ரேட்டுக்களின் சொல்லுக்கு அடிமையாக சில பல பேரங்களுக்கு ஒப்புகொண்டால்தான் வெற்றி .

மேல் உள்ளதெல்லாம் சீமானுக்கு ஒத்துவராத ஒன்று ஆகவே வெற்றி என்பது கேள்வி குறி அதையும் தாண்டி மூன்று அல்லது ஒரு  சீட் கிடைக்குமாக இருந்தால் சீமான் நிஜ அரசியல்வதியாகி விட்டார் என்று அர்த்தம் அதன்பின் கதை மாறும் ஆமை படம் போட்டவர்கள் கூட சிங்கத்தின் மீது சீமான் வருவது போல் படம் போட்டாலும் ஆச்சரிய பட தேவையில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, புலவர் said:

Xதளத்தில் சிலமணி நேரங்களில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் ஒலிவாங்கி சின்னம்.நாம் தமிழர் உறவுகள் புயல் வேகப் பரப்புரை

என்னால் படங்களை இணக்க முடியவில்லை.

Screenshot-20240327-132441-Chrome.jpgபுல‌வ‌ர் அண்ணா கூக்கில‌ போய் 

இப்ப‌டி எழுதுங்கோ அதில் முத‌லாவ‌தா வ‌ரும் லிங்கை கிளிக் ப‌ண்ணுங்கோ அதுக்கு பிற‌க்கு Direct link என்ற‌தை கொப்பி ப‌ண்ணி போட்டு இணையுங்கோ ப‌ட‌ம் இணைப‌டும்🙏................

  • கருத்துக்கள உறவுகள்

https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-2024-seemans-naam-tamilar-promises-symbol-less-election-594077.htmlசெய்திகள்சென்னை சின்னங்கள், வாக்கு பதிவு இயந்திரத்துக்கு தடை, இடைத்தேர்தல் ஒழிப்பு- சீமான் அதிரடி தேர்தல் வாக்குறுதி By Mathivanan Maran Published: Wednesday, March 27, 2024, 15:46 [IST] சென்னை: லோக்சபா தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில், தேர்தல்களில் சின்னங்கள் பயன்படுத்தும் முறையை ஒழிப்போம்; வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்துவோம்; இடைத் தேர்தல் முறையையும் ஒழிப்போம் என்பது உள்ளிட்ட அதிரடியான வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலுக்கான 84 பக்க தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார். மொத்தம் 32 தலைப்புகளில் இந்த தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இதுக்குத்தான் நாம் தமிழர்கிட்ட மோதினாங்களா! 22 தொகுதியில் போட்டியிட ஆளே இல்ல! கதறும் கரும்பு விவசாயி இந்த தேர்தல் அறிக்கையின் தொடக்கத்தில் பாஜகவும் காங்கிரஸும் ஒன்று என்கிற விமர்சனம் இடம் பெற்றுள்ளது. அதேபோல மாநில உரிமைகளை திமுகவும் அதிமுகவும் அடகு வைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் தேசிய இனங்களின் நலன்கள், உரிமைகள் அடிப்படையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும் என்கிறது நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை. இத்தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் 1.- மக்களால் மட்டுமே ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் 2.- ராஜ்யசபா எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவிகள் தரக் கூடாது 3.- ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் 4.- மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சாசனத்தின் 356- வது பிரிவு நீக்கம் 5.- 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு லோக்சபா தொகுதி என மறுசீரமைப்பு செய்ய வேண்டும் 6.- சின்னங்கள் இல்லாமல் எண்கள் ஒதுக்கீடு செய்து தேர்தல் நடத்த வேண்டும் 7.- வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு தடை விதித்து வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் 8.- இடைத் தேர்தல் முறையையே ஒழிக்க வேண்டும் 9.- ஊழல் செய்தவர்கள் தேர்தல் போட்டியிட தடை விதிக்க வேண்டும் 10.- ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் 11.- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை; சிறை கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை 12.- மற்றொரு அரசியல் கட்சி சின்னத்தில் போட்டியிட தடை 13.- மாநில உயர்நீதிமன்றங்களில் மண்ணின் மைந்தர்களே நீதிபதிகள் 14.- காஷ்மீருக்கான 370-வது பிரிவு சிறப்புரிமை அனைத்து தேசிய இனங்களுக்கும் வழங்க வேண்டும் 15.- கச்சத்தீவு ஒப்பந்தம் ரத்து 16.- வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்க எதிர்ப்பு 17.- சிஏஏ, என்பிஆர், என்.ஆர்.சி, பொதுசிவில் சட்டங்களுக்கு எதிர்ப்பு 18.- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-2024-seemans-naam-tamilar-promises-symbol-less-election-594077.html

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

சின்னத்தை புடுங்கிறம் சீமானை விழுத்திறம் எண்டு கிளம்பியவர்கள் கடைசியிலை மைக் சின்னத்தை கொடுத்து தங்களுக்கு தாங்களே ஆப்பை செருகிக்கொண்டு  நடக்க முடியாமல் அல்லல் படுகினம் .சமூக வலைத்தளம் முழுதும் வெறித்தனமான பரப்புரை ஆனால் இதே வெறித்தனம் ஒட்டு கிடைப்பதில் இருந்தால் நல்லது.

இந்திய சனத்துக்கு எவ்வளவுதான் சொன்னாலும் அந்த தேர்தல் நேரத்தை ஒரு திருவிழா போலத்தான் கொண்டாடுவார்கள் அந்த தேர்தல் காலம் முழுதும் குவாட்டரும் பிரியாணியும் கொண்டாட்டமுமாய் யார் பணம் கூட கொடுத்தார்களோ யார் அவர்கள் ஆட்களோ அல்லது அவர்கள் ஆட்கள் எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கிரார்களோ அவர்களுக்குத்தான் ஒட்டு தேர்தல் திருவிழா முடிந்து மயக்கம் தெளிய நிகழ்காலம் கொடுமையானது என்று புரிந்து கொண்டவுடன் மறுபடியும் சீமானுடன் சேர்ந்து கத்துவார்கள் இந்த யதார்த்தம் சீமான் புரிந்து கொள்ளும்வரை இன்னும் பல தேர்தல்கள் காத்திருக்கவேண்டி வரும் மூன்று சீட் உறுதி என்கிறார்கள் ஆனால் அதுவும் கஷ்ட்டம் காரணம் தேர்தல் முடிந்தவுடன் சூட்டோடு சூடாக வாக்கு எண்ணிக்கை அங்கு நடைபெறுவதில்லை எல்லாம் ஆற விட்டு என்ன தொடங்குவார்கள் அதற்கு இடையில் உலகில்  மிகபெரிய ஜனநாயக நாடு என்று பீத்தி கொண்டு காப் ரேட்டுக்களின் சொல்லுக்கு அடிமையாக சில பல பேரங்களுக்கு ஒப்புகொண்டால்தான் வெற்றி .

மேல் உள்ளதெல்லாம் சீமானுக்கு ஒத்துவராத ஒன்று ஆகவே வெற்றி என்பது கேள்வி குறி அதையும் தாண்டி மூன்று அல்லது ஒரு  சீட் கிடைக்குமாக இருந்தால் சீமான் நிஜ அரசியல்வதியாகி விட்டார் என்று அர்த்தம் அதன்பின் கதை மாறும் ஆமை படம் போட்டவர்கள் கூட சிங்கத்தின் மீது சீமான் வருவது போல் படம் போட்டாலும் ஆச்சரிய பட தேவையில்லை .

இந்த‌ முறை பெரும் மாற்ற‌ம் வ‌ரும் பெருமாள் அண்ணா

ச‌கோத‌ரி காளியம்மாள் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு அதே போல் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளும் வெல்ல‌ வாய்ப்பு இருக்கு 

ஏவிம் மிசினில் தேர்த‌ல் ஆனைய‌ம் என்ற‌ பெய‌ரில் இய‌ங்கும் மோடியின் ஆனைய‌ம் குள‌று ப‌டிக‌ள் செய்யாம‌ தேர்த‌ல் முடிவை தேர்த‌ல் ஆனைய‌ம் நேர்மையா அறிவித்தால் நான் ம‌கிழ்ச்சி🙏.......................... 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

வந்தால் நல்லது சொரிலன்காவில் சிங்களவர்களின் தமிழர் எதிர்ப்பு இனவாதத்தை அழிக்க முடியாதோ அதே போல் இந்தியர்களின் சில அடிப்படை குனம்களை மாற்ற முடியாது அங்கிலேயர் ஆட்சியில் வந்த கடும் பஞ்சங்கள் கூட அவர்களின் அடிப்படை குனம்களை மாற்றவில்லை  பல லடசகனக்கில் வீதிகளில்  வீடுகளில்  பினம்களாக  விழுந்து கிடந்தனர் பிணத்தை எடுத்து எரிக்க கூட ஆளில்லை அப்படியொரு கொடும் பஞ்சம் கூட அவர்கள் மனதில மாற்றத்தை கொண்டு வரவில்லை என்பதை கவனிக்கணும் .

வணக்கம்,

தாரளமாக தமிழக அரசியல் , தேர்தல்  செய்திகளை பகிருங்கள். ஆனால், அரசியல் கட்சி ஒன்றின், அது எந்தக் கட்சியாயினும், அதன் பிரச்சார காணொளிகள், படங்கள், பிரச்சார மீம்ஸ்கள் போன்றனவற்றை இணைக்காதீர்கள். யாழின் விதிகளில் இவை தொடர்பாக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

நன்றி
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அதன்பின் கதை மாறும் ஆமை படம் போட்டவர்கள் கூட சிங்கத்தின் மீது சீமான் வருவது போல் படம் போட்டாலும் ஆச்சரிய பட தேவையில்லை .

ஆகா ஆகா அருமை அருமை பெருமாள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.