Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை

-----------
வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு
 
நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது
 
எச்சரிக்கை
நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும்
 
அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள்
உங்களின் மிச்சங்களே
 
இருட்டில் உருட்டுவதும்
 
பகலில் ஒழிவதுமாக
 
நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும்
 
தக்காளிச்செடியில் நின்றதாகவும்
அம்மணி அழுதார்
 
எலிக்கு ஏனய்யா
தக்காளி?
 
ஏக பிரதிநிதியாக
இங்கு எல்லாம் உங்களுக்காகவா?
 
முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க
 
'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று
 
தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக்
 
பின்னர்
மொத்தமாக ஒரு பில் கொடுத்தார்
 
இனிமேலும் பொறுக்க முடியாது
 
நேற்றிரவு கூரைக்குள் உங்களின் இரு குரல்கள்
ஒன்று கொஞ்சம் சிணுங்கியது
 
ம்ம் ......... 
குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கிறீர்கள் போலிருக்கு 
 
ஒரு பூனையைக் கொண்டு வந்தால்
உங்கள் கதை முடியும்
 
பின்னர் பூனையை என்ன செய்வது?
 
பகலிலும் பிராண்டுமே பூனை
 
ஒரே வழி பொறி தான்
 
உள்ளே வா
உட்கார்ந்து சாப்பிடு 
என்று கூப்பிட்டு
போட்டுத் தள்ளலாம் என்றிருக்கின்றேன்
 
இப்பவும் நீங்கள் தப்பி வாழ 
ஒரு வழியிருக்குது
 
அம்மணியின் கண்ணில் விழாதே
 
அவவின் பொருட்களை தொடாதே
 
சத்தமில்லாமல்
ஓரமாக இருந்து விட்டு போங்கள்
 
நான் பொறியை திருப்பிக் கொடுக்கின்றேன்.
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரசோதரன் said:
இப்பவும் நீங்கள் தப்பி வாழ 
ஒரு வழியிருக்குது
 
அம்மணியின் கண்ணில் விழாதே
 
அவவின் பொருட்களை தொடாதே
 
சத்தமில்லாமல்
ஓரமாக இருந்து விட்டு போங்கள்

ஐயனின் அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

நியூயோர்க் நிலகீழ் தொடரூந்து நிலையங்களுக்கு போனால் எலியா?பூனையா? என்று திகைத்து நிற்பீர்கள்.

வீட்டிலே கட்டுப்படுத்த தொடங்கினால் நியூயோர்க்கில் பெரியதொரு ஒப்பந்தமே செய்யலாம்.

கோடீஸ்வரனாக வருவதற்கு நம்மாலான உதவி.

சப் கொன்ராக் இருந்தா சொல்லுங்க பாஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி ......நீங்கள் செய்வது ஒரு தலைப்பட்ச ஒப்பந்தமாகத்தான் இருக்கும்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை வந்து பட்ட பாடு போதுமென்று ஆகி விட்டது. எலியால் அல்ல............😝

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nunavilan said:

ஒரு முறை வந்து பட்ட பாடு போதுமென்று ஆகி விட்டது. எலியால் அல்ல............😝

பதியால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரசோதரன் said:

எச்சரிக்கை

-----------
வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு
 
நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது
 
எச்சரிக்கை
நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும்
 
அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள்
உங்களின் மிச்சங்களே
 
இருட்டில் உருட்டுவதும்
 
பகலில் ஒழிவதுமாக
 
நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும்
 
தக்காளிச்செடியில் நின்றதாகவும்
அம்மணி அழுதார்
 
எலிக்கு ஏனய்யா
தக்காளி?
 
ஏக பிரதிநிதியாக
இங்கு எல்லாம் உங்களுக்காகவா?
 
முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க
 
'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று
 
தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக்
 
பின்னர்
மொத்தமாக ஒரு பில் கொடுத்தார்
 
இனிமேலும் பொறுக்க முடியாது
 
நேற்றிரவு கூரைக்குள் உங்களின் இரு குரல்கள்
ஒன்று கொஞ்சம் சிணுங்கியது
 
ம்ம் ......... 
குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கிறீர்கள் போலிருக்கு 
 
ஒரு பூனையைக் கொண்டு வந்தால்
உங்கள் கதை முடியும்
 
பின்னர் பூனையை என்ன செய்வது?
 
பகலிலும் பிராண்டுமே பூனை
 
ஒரே வழி பொறி தான்
 
உள்ளே வா
உட்கார்ந்து சாப்பிடு 
என்று கூப்பிட்டு
போட்டுத் தள்ளலாம் என்றிருக்கின்றேன்
 
இப்பவும் நீங்கள் தப்பி வாழ 
ஒரு வழியிருக்குது
 
அம்மணியின் கண்ணில் விழாதே
 
அவவின் பொருட்களை தொடாதே
 
சத்தமில்லாமல்
ஓரமாக இருந்து விட்டு போங்கள்
 
நான் பொறியை திருப்பிக் கொடுக்கின்றேன்.
இதை எழுதி பதிந்த பின் ஒரே யோசனையாக இருந்தது. இதில் ஏதாவது குறியீடு, படிமம் அப்படி இப்படி ஏதாவது இருப்பதாக ஏதேனும் சிக்கல்கள் வந்து விடுமோ என்று....
 
நான் புதிய உறுப்பினர் என்றாலும், களத்தை நீண்ட காலம் வாசித்து வருபவன். கள நிலவரம் ஓரளவு தெரியும்.
 
இது உண்மையிலேயே 'எலியும் நானும் என் பின்னே அம்மணியும்' தான். சொந்த வீட்டுப் பிரச்சனை......... 😀😀....
  • கருத்துக்கள உறவுகள்

எலியோக் என்று பேரை மாத்திடுன்க அய்யா.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க் நிலகீழ் தொடரூந்து நிலையங்களுக்கு போனால் எலியா?பூனையா? என்று திகைத்து நிற்பீர்கள்.

வீட்டிலே கட்டுப்படுத்த தொடங்கினால் நியூயோர்க்கில் பெரியதொரு ஒப்பந்தமே செய்யலாம்.

கோடீஸ்வரனாக வருவதற்கு நம்மாலான உதவி.

சப் கொன்ராக் இருந்தா சொல்லுங்க பாஸ்.

இதில் இருப்பவை எல்லாம் எலி அல்லவே? நியூ யோர்க்கில் பெருச்சாளி எனப்படும் rat தான் பிரபலம். ரயில் வண்டிக்குள் மாட்டுப் பட்டு ஓடித் திரிவது அணில் (squirrel), வாலைக் கவனியுங்கள்😂, அடர்த்தியான ரோமத்தோடு இருக்கிறது. சும்மா பல வீடியோக்களை ஒன்றாக்கி காசு பார்த்திருக்கிறார்கள், அல்லது அரசியல் வீடியோவோ தெரியாது!

எலி வீட்டுக்குள் வராமல் இருக்க இரு இலகு வழிகள்:

1. வீட்டின் ஒவ்வொரு மூலையும் சுத்தமாக, உணவுப் பருக்கைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

2. வீட்டினுள் எலி நுழையக் கூடிய ஓட்டைகள் எல்லாம் அடைக்கப் பட வேண்டும்.

இவை இரண்டும் செய்தால், எலிக்கு ஒரு வீட்டில் எந்த பிசினசும் இருக்காது😂!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

இங்கு வாசலில் நிற்பாட்டி இருக்கும் கார் மற்றும் வாகனங்களுக்குள்ளும் எலிகள் இரவில் ஏறி, முன் பக்கம் இருக்கும் இயந்திர பகுதிக்குள் பதுங்கிவிடும். குளிர்காலங்களில் எலிக்கு மிகவும் பிடித்த இடம் இதுவென்று சொல்கின்றனர், வாகனங்களின் இயந்திரப் பகுதி.
 
அப்படியே ஏன் சும்மா இங்கே இருக்கின்றோம் என்று, அங்கே போய் வரும் இயந்திரத்தின் வயர்களையும் குழாய்களையும் கடித்தும் விடும். பல நண்பர்களுக்கு இது நடந்திருக்கின்றது.
 
எலி என்றால் rat , சுண்டெலி அல்லது மூஞ்சூறு என்றால் mouse, பெருச்சாளி என்றால் opossum என்று தான் நினைத்திருந்தேன்.
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

இப்பெயர்களில்  குழப்பம் இருக்கிறது: எலி என்பது Order Rodentia என்ற குடும்பத்தைக் குறிக்கிறது. சுண்டெலி தான் நாம் காணும் மிகச் சிறிய எலி (mouse , Mus musculus). இதற்கு மூஞ்சூறு என்றும் இலங்கையில் பெயர் இருக்கிறது. ஆனால், பெருச்சாளி என்றால் rat என்று தான் நினைக்கிறேன். வெள்ளெலியை mole என்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Justin said:

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். என் கண்ணுக்கு தெரிந்த உருவங்களை வைத்தே நான் அப்படி வகை பிரித்திருந்தேன்.
 
இதை தெளிவுபடுத்த சரியான ஒரு ஆள் இருக்கின்றார். என் நண்பன் தான். மிக நீண்ட நாட்களின் முன் இங்கு மிருக வைத்தியதுறையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். நூறு நூறு வெள்ளெலிகளாக நண்பனும், நண்பனின் பேராசிரியரும் வாங்குவார்கள். ஏதோ செய்வார்கள்.
 
ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. அப்பவே நண்பனுக்கும், அவனின் பேராசிரியருக்கும் தகராறாகி, அவன் வேறு எங்கோ போய் விட்டான். இப்ப எங்கிருக்கின்றான் என்று தெரியவில்லை. அவனுக்கு நியூ யோர்க் தோதான இடமாக இருக்கும் போல............. 😀😀
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இதில் இருப்பவை எல்லாம் எலி அல்லவே? நியூ யோர்க்கில் பெருச்சாளி எனப்படும் rat தான் பிரபலம். ரயில் வண்டிக்குள் மாட்டுப் பட்டு ஓடித் திரிவது அணில் (squirrel), வாலைக் கவனியுங்கள்😂, அடர்த்தியான ரோமத்தோடு இருக்கிறது. சும்மா பல வீடியோக்களை ஒன்றாக்கி காசு பார்த்திருக்கிறார்கள், அல்லது அரசியல் வீடியோவோ தெரியாது!

எலி வீட்டுக்குள் வராமல் இருக்க இரு இலகு வழிகள்:

1. வீட்டின் ஒவ்வொரு மூலையும் சுத்தமாக, உணவுப் பருக்கைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

2. வீட்டினுள் எலி நுழையக் கூடிய ஓட்டைகள் எல்லாம் அடைக்கப் பட வேண்டும்.

இவை இரண்டும் செய்தால், எலிக்கு ஒரு வீட்டில் எந்த பிசினசும் இருக்காது😂!

நானும் பெரிய பெரிய எலிகளைப் சப்வேயில் பார்த்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் பெரிய பெரிய எலிகளைப் சப்வேயில் பார்த்துள்ளேன்.

அண்ணை எழுதுங்கள் படங்களையும் சேர்ந்து இணையுங்கள் பார்க்க வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்   அணில்  எலி  .      .....எல்லாம் ஒரே குடும்பம் தான்    அது என்ன அமெரிக்கா எலிகள்.  மிகப் பெரிய உருவமாக இருக்கிறது   ??   எலிகளின்.  தாயகம்  அமெரிக்கா தான??   அல்லது வேறு நாடு???

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரசோதரன் said:

இதை தெளிவுபடுத்த சரியான ஒரு ஆள் இருக்கின்றார். என் நண்பன் தான். மிக நீண்ட நாட்களின் முன் இங்கு மிருக வைத்தியதுறையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். நூறு நூறு வெள்ளெலிகளாக நண்பனும், நண்பனின் பேராசிரியரும் வாங்குவார்கள். ஏதோ செய்வார்கள்.

@Justin னும் மிருக வைத்தியரும் பேராசிரியருமாவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

@Justin னும் மிருக வைத்தியரும் பேராசிரியருமாவார்.

இதை நீங்கள் முதலே எனக்கு சொல்லியிருக்க வேண்டும். நான் ஒரு அளவோடு நின்றிருப்பேன்.............🤣🤣
 
@Justin பதியும் பல கருத்துகளையும், விளக்கங்களையும் வாசித்திருக்கின்றேன். மிக அதிகமாக வாசிப்பவர் என்றே நினைத்திருந்தேன், அது சரிதான்.....👍👍
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:
இதை நீங்கள் முதலே எனக்கு சொல்லியிருக்க வேண்டும். நான் ஒரு அளவோடு நின்றிருப்பேன்.............🤣🤣
 
@Justin பதியும் பல கருத்துகளையும், விளக்கங்களையும் வாசித்திருக்கின்றேன். மிக அதிகமாக வாசிப்பவர் என்றே நினைத்திருந்தேன், அது சரிதான்.....👍👍

நல்லகாலம் அளவோடு நிறுத்து விட்டீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லகாலம் அளவோடு நிறுத்து விட்டீர்கள்.

😀😀....

சிரிப்புடன் தொடங்கும் காலை. வெள்ளி என்றாலே ஒரு சந்தோசம் தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.