Jump to content

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

சுமந்திரன் என்ற தனி நபர் சுமந்திரன்  அதை தடுத்துவிட்டார் 

அவர் தனி நபர் அல்ல தமிழரின் பிரதிநிதி.  தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

இதுக்கும் ஆதாரங்கள் வேண்டுமா??

நான் கேட்டது அனைத்துலக நீதி மன்றத்தினால்( International criminal court, Haag)  இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் விசாரிக்கப்பட எடுத்துக் கொள்ள உடன்பட்டதற்கான ஆதாரம். அல்லது யுத்தக குற்றங்களை ICC க்கு எடுத்து செல்ல  ஶ்ரீலங்கா அரசுக்கெதிராக வழக்கு தொடர உடன்பட்ட  நாட்டின் உத்தியோகபூர்வ அறிக்கை அதனை சுமந்திரன் தடுத்ததற்கான  ஆதாரம்.  இதை உறுதிப்படுத்தும் சர்வதேச ஊடகங்களின் செய்தி. (தமிழ் ஊடகங்கள் அல்ல) 

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nedukkalapoovan

சுமந்திரனின் இறுதி இலக்கு அமைச்சர் பதவி. அதற்காக அவர் படிப்படியா உழைச்சுக் கிட்டு தான் இருக்கார். புலி நீக்கவாதி தமிழ் தேசிய நீக்கவாதி மாவீரர் நீக்கவாதி மிதவாதி சிங்கள பெ

island

இவர்கள் பேசும் வெத்து வெட்டு தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க ஒரு வில்லன் தேவை.  அந்த வில்லனாக கட்டமைக்கப்பட்டவரே இந்த சுமந்திரன்.  இவர் இல்லை என்றால் தமிழருக்கு விடுதலை  கிடைத்துவிடும் என்பது போன்ற மாயைய

Justin

முதலே நான் குறிப்பிட்டது போல, கேள்விகளுக்குப் பதில் வராது. ஏன்? இவர்கள் சுமந்திரன் மீது சாட்டும் குற்றங்களின் தோற்றுவாய் ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு வந்தவையல்ல, வேறு தோற்றுவாய்கள், வெளியே சொல்ல தயங்கும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

யுத்தக்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நீதிமன்றத்தை நோக்கி வழக்கு தொடுக்க மேற்குநாடுகள் முன்வந்த போது சுமந்திரன் என்ற தனி நபர் அதை தடுத்துவிட்டார் என்பதற்கான நம்பகமான எந்த செய்தியையும் சர்வதேச ஊடகங்களில் நான் காணவில்லை.  அப்படியான நம்பகரமான அனைத்துலக ஊடகச் செய்தி இருந்தால் இணைத்தால் நானும் அதை வாசிக்கலாம்.

தடுத்து நிறுத்தியதாக நான் எழுதவில்லையே? தவணை கேட்டார் என்பதை மட்டுமே எழுதினேன். சமத்து சுமந்திரனார் தவணை கேட்டது பொய்யா?

மற்றும் படி சுமந்திரன் அவர்கள் தனி நபரா இல்லையேல் மக்கள் பிரதிநிதியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

தடுத்து நிறுத்தியதாக நான் எழுதவில்லையே? தவணை கேட்டார் என்பதை மட்டுமே எழுதினேன். சமத்து சுமந்திரனார் தவணை கேட்டது பொய்யா?

மற்றும் படி சுமந்திரன் அவர்கள் தனி நபரா இல்லையேல் மக்கள் பிரதிநிதியா?

சரி உங்கள் கூற்றுப்படி தவணை வழங்கப்பட்டதாயின்

1. அனைத்துலக நீதி மன்றில் ஶ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தக்குற்றங்களை  விசாரிக்க முற்படுகையில் சுமந்திரன்  தவணை கேட்டிருந்தால் அடுத்த தவணை எப்போது வழக்கப்பட்டு அது முன்னெடுக்கப்பட்டது? 

2. அதில் ஆஜராகிய சட்டத்தரணி யார்?

3. இது தொடர்பாக ICC இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிக்கையிடப்பட்டதா?   அந்த ICC இணையத்தள  அறிக்கை இணைப்பை இங்கு இணைக்க முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இதை உறுதிப்படுத்தும் சர்வதேச ஊடகங்களின் செய்தி. (தமிழ் ஊடகங்கள் அல்ல) 

அப்ப கிளிக்கி மொழியில் சொன்னால் நம்புவீர்களா ?😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, island said:

சரி உங்கள் கூற்றுப்படி தவணை வழங்கப்பட்டதாயின்

1. அனைத்துலக நீதி மன்றில் ஶ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தக்குற்றங்களை  விசாரிக்க முற்படுகையில் சுமந்திரன்  தவணை கேட்டிருந்தால் அடுத்த தவணை எப்போது வழக்கப்பட்டு அது முன்னெடுக்கப்பட்டது? 

2. அதில் ஆஜராகிய சட்டத்தரணி யார்?

3. இது தொடர்பாக ICC இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிக்கையிடப்பட்டதா?   அந்த ICC இணையத்தள  அறிக்கை இணைப்பை இங்கு இணைக்க முடியுமா? 

நீங்கள் 2௦௦8 லிருந்து யாழ் கள உறுப்பினராக இருகிரியல் மேல் உள்ள மூன்று கேள்வியும் இங்கு யாழில் பலமுறை வந்து போயிட்டுது விளங்கங்களும் சக உறுப்பினர் களால் கொடுக்கபட்டுள்ளது உங்களுக்கு மறதி நோய் இருப்பதாக நான் நம்பவில்லை சுமத்திரன் திரிகளில் எதாவது ஒரு திரியிலாகினும் சுமத்திரன்  வல்லவன் அறிவாளி நிறுவணும் எனும் உங்கள்  ஆசை நிறைவேற போவது கிடையாது ஏனென்றால் சுமத்திரன் தமிழர்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை செய்தது எல்லாம் துரோகமும் குழப்பமும் வஞ்சகமும் தான் அநேக தூதுவர்களின் உடனான சந்திப்பு இவர் மட்டுமே சென்று சந்திப்பை மேற்கொள்வார் காரணம் தமிழர்களுக்கு எதிரான பேச்சுக்கள் வெளியில் தெரிந்து விடகூடாது எனும் காரணம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சரி  மறதி நோய் எனக்கு இருக்கு என்று நினைத்துக்கொண்டு நான்கேட்ட இணைப்பை இணைத்து விடுங்கோ. 

  • Haha 1

🤣😂 அனைத்துலக  நீதிமன்றிற்கு இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் போய், தவணையும் கொடுக்கப் பட்டு, எல்லாம் யாழில் பதியப் பட்டிருக்கிறது என்கிறீர்களா?

இது எனக்கு மட்டுமல்ல, பல வாசகர்களுக்கு நியூஸ்😎! எப்ப இதெல்லாம் நடந்தது பெருமாள்? எந்த நாடு கொண்டு போனது மனுவை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

நான் கேட்டது அனைத்துலக நீதி மன்றத்தினால்( International criminal court, Haag)  இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் விசாரிக்கப்பட எடுத்துக் கொள்ள உடன்பட்டதற்கான ஆதாரம். அல்லது யுத்தக குற்றங்களை ICC க்கு எடுத்து செல்ல  ஶ்ரீலங்கா அரசுக்கெதிராக வழக்கு தொடர உடன்பட்ட  நாட்டின் உத்தியோகபூர்வ அறிக்கை அதனை சுமந்திரன் தடுத்ததற்கான  ஆதாரம்.  இதை உறுதிப்படுத்தும் சர்வதேச ஊடகங்களின் செய்தி. (தமிழ் ஊடகங்கள் அல்ல) 

எந்த பதிலிலும் நேர்மையில்லை. கேட்ட கேள்விக்கு இன்னொரு கேள்வி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

எந்த பதிலிலும் நேர்மையில்லை. கேட்ட கேள்விக்கு இன்னொரு கேள்வி. 

அவர் நேராகக் கேட்டார், நீங்கள் தான் அவர் "சுமந்திரன் தனி ஆளாக தடுப்பது சாத்தியமா?" என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்வியை "சுமந்திரன் தனி ஆளா?" என்று திசை மாற்றியிருக்கிறீர்கள்.

இதைத் தவிர்த்து, பதில்களை வைத்தால் உண்மையில் சுமந்திரனை தாயக வாக்காளர்கள் தூக்கியெறிய வேண்டுமா என்ற கேள்விக்கு அவசியமான தரவுகளை இங்கே பகிர வாய்ப்புகள் வருமே? அதைச் செய்யாமல் ஏன், மடைமாற்றல், சொற்சிலம்பம், யூ ரியூப் மீம் என்றி அலைய வேண்டியிருக்கிறது சுமந்திரன் எதிர்ப்பாளர்களுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த தமிழ் இணைய செய்தியே உண்மையா என்பதை சர்வதேச ஊடகம் மூலம் உறுதிப்படுத்தமுடியுமா?

இலங்கை ஜனாதிபதியின் இருபுறமும் இருப்பவர்களின் மேல் சட்டை ஓரளவிற்கு ஒத்து போவது போல உள்ளது, இலங்கை ஜனாதிபதியின் பிரத்தியேக பாதுகாப்பு ஊழியர்களின் படத்தினை மாற்றி அமைத்திருக்கிறார்களா என சந்தேகம் வருகிறது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

அவர் நேராகக் கேட்டார், நீங்கள் தான் அவர் "சுமந்திரன் தனி ஆளாக தடுப்பது சாத்தியமா?" என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்வியை "சுமந்திரன் தனி ஆளா?" என்று திசை மாற்றியிருக்கிறீர்கள்.

இதைத் தவிர்த்து, பதில்களை வைத்தால் உண்மையில் சுமந்திரனை தாயக வாக்காளர்கள் தூக்கியெறிய வேண்டுமா என்ற கேள்விக்கு அவசியமான தரவுகளை இங்கே பகிர வாய்ப்புகள் வருமே? அதைச் செய்யாமல் ஏன், மடைமாற்றல், சொற்சிலம்பம், யூ ரியூப் மீம் என்றி அலைய வேண்டியிருக்கிறது சுமந்திரன் எதிர்ப்பாளர்களுக்கு?

முதலில் அவரின் கருத்தை மீண்டும் படியுங்கள். அல்லது அவரை பதிலளிக்க விடுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சரி  மறதி நோய் எனக்கு இருக்கு என்று நினைத்துக்கொண்டு நான்கேட்ட இணைப்பை இணைத்து விடுங்கோ. 

1 hour ago, Justin said:

🤣😂 அனைத்துலக  நீதிமன்றிற்கு இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் போய், தவணையும் கொடுக்கப் பட்டு, எல்லாம் யாழில் பதியப் பட்டிருக்கிறது என்கிறீர்களா?

இது எனக்கு மட்டுமல்ல, பல வாசகர்களுக்கு நியூஸ்😎! எப்ப இதெல்லாம் நடந்தது பெருமாள்? எந்த நாடு கொண்டு போனது மனுவை?

வாழைபழம் உரித்து தட்டில் வைத்து இருக்கு அவரவர் தேவைக்கு ஏற்றபடி நன்றி மீரா .

சர்வதேச விசாரணை நடந்து முடிந்து விட்டதாக கூறி தமிழ் மக்களை திசைதிருப்ப முயல்கிறார்-சுமந்திரன் மீது விக்கி குற்றச்சாட்டு

போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்கான ஒரு சர்வதேச, சுயாதீன தீர்மானம் வெளிவந்தால் அது சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் இடையே ஒரு குடிமக்களிடையிலான வாக்கெடுப்பை நடத்த வேண்டிய ஒரு கடப்பாட்டை உருவாக்கிவிடும் என்றே சுமந்திரன் பயப்பிடுகிறார். இதற்காகவே, நடக்காத சர்வதேச விசாரணையை, நடந்து முடிந்து விட்டதாக கூறி, தமிழ் மக்களை திசைதிருப்ப முயல்கிறார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது .

போர்க்குற்ற விசாரணை முடிந்து விட்டதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் கருத்து தவறானது என்பதை சுட்டிக்காட்டி, தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சுமந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களைத் தடம் மாற்றவும் ஏமாற்றவும் கருத்துக்கள் வெளியிடுகின்றார்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில்,

இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் திரு. சுமந்திரன் அவர்கள்.

இலங்கை சம்பந்தமான விசேட சர்வதேச குற்றவியல் மன்றமொன்றைக் கோராமலும் அல்லது இலங்கையைசர்வதேச குற்றவியல் மன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும், ஐக்கிய நாடுகளாலும் மற்றையோராலும் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை வைத்து ஊடக அறிக்கைகளின் படி திரு.சுமந்திரன் அவர்கள் சர்வதேச விசாரணையானது முடிவடைந்துவிட்டது என்று தமிழர்களை நம்பவைக்கப் பார்க்கின்றார்.

இது தவறானது. இலங்கை அரசினாலும் இலங்கையின் படையணியினராலும் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்கள் சம்பந்தமான நீதி நியாயத்தை மேற்படி அறிக்கைகள் பெற்றுக் கொடுக்கவில்லை.

இவ்வறிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்களை ஆவணப்படுத்தி உள்ளன. ஆனால் இவ்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவர்கள் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கைகளும் இது காறும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கைகளை சர்வதேச விசாரணையின் முடிவுகளே என்று திரு.சுமந்திரன் அவர்கள் சித்திரிக்கப்பார்க்கின்றார். இவ்வாறான செயலால் திரு.சுமந்திரன் அவர்கள் தமிழ் மக்களைத் தடம் மாற்ற முயன்றிருக்கின்றார். தமிழ் மக்கள நீதியைப் பெற வேண்டுமானால் மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையிலோ இலங்கைக்கான ஒரு விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு மன்றம் முன்னிலையிலோ பாரப்படுத்தப்பட்டு நீதிபாற்பட்ட விசாரணைக்குள்ளாக்கி தண்டிக்கப்பட வேண்டும்.<br />
தமிழ் மக்கள் கூடிய மதிப்புடனும் தொழில்சார் மாண்புடனும் கையாளப்பட வேண்டும்.

திரு.சுமந்திரன் அவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது அவற்றின் ஒரே குறிக்கோள் தமிழ் மக்களைத் தடம்புரளச் செய்வதும் ஏமாற்றுவதுமேயாகும் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

உண்மை இதோ! – நடந்தவற்றைக் கூறி தரவுகளைச் சேகரித்திருந்தன ஐக்கிய நாடுகளின் இரு அறிக்கைகளும். எனினும் அம் முயற்சி முடிவடையவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதியப்படவில்லை. தாம் குறிப்பிடும் குற்றங்களைப் புரிந்தமைக்கு யார் பொறுப்பு என்று கூறி தமது பரிந்துரைகளைப் பதியவில்லை. இறுதியாக, நீதியைப் பெறத் தாம் எடுக்கும் முயற்சிகள் ஒரு செயல்பாட்டின் முதல்ப்படியே என்று குறித்த அறிக்கைகளே ஏற்றுக் கொண்டுள்ளன.

குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் உண்மையில் கூறும் சில விடயங்கள் பின்வருமாறு –

1. டாருஸ்மான் அறிக்கை எனப்படும் “இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமான செயலாளர் நாயகத்தின் நிபுணத்துவக்குழாமின்” 2011ம் ஆண்டிற்கான அறிக்கையின் 1ஆ பரிந்துரையின் ஒரு பகுதி பின்வருமாறு –

“செயலாளர் நாயகமானவர் உடனே ஒரு சுயாதீனமான சர்வதேச பொறிமுறையைச் செயற்படுத்த வேண்டும். அதன் ஆணைக்குட்பட்டு பின்வரும் ஒருங்கியல்பான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.

i. குற்றம்சாட்டப்பெற்ற உரித்துமீறல்களை எந்தளவுக்கு இலங்கை அரசாங்கமானது உண்மையாக விசாரிக்கின்றது என்பது உள்ளடங்கலாக உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை இலங்கை அரசு எப்படி வழிநடத்துகின்றது என்பது பற்றி கண்காணித்து மதிப்பிட்டு காலத்துக்குக் காலம் செயலாளர் நாயகத்திற்கு தமது கண்டுபிடிப்புக்களைத் தெரியப்படுத்த வேண்டும்.

ii. குற்றஞ்சாட்டப்பட்ட உரித்துமீறல்கள் சம்பந்தமாக சுயாதீனமாக விசாரித்தறிவது. அதன் போது நம்பத்தகுந்த மற்றும் நற்பலன் அளிக்கின்ற உள்ளக விசாரணைகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.”

2. பெட்ரீ அறிக்கை எனப்படும் 2012ம் ஆண்டின் “இலங்கையில் நடந்த ஐக்கிய நாடுகள் செயற்பாடுகளின் செயலாளர் நாயகத்தின் உள்ளக மதிப்பீட்டுக் குழாமின்” அறிக்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பல பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதன் செயல் நோக்கம் ஐக்கிய நாடுகள் தான் செய்த தவறுகளை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ளுவதேயாகும். பெட்ரீ அறிக்கையின் 82ஆவது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது –

“நடைபெற்ற நிகழ்வுகளைக் கணிப்பதும் அவை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் இலங்கையில் எடுத்த நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதும் குழாமின் ஆணைக்கு அப்பாற்பட்டன. எனினும் ஒன்று தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. அதாவது நடைபெற்ற கொடூரமான உரிமை மீறல்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காமல் அத்துடன் இலங்கையின் பல்வேறு இனங்களின் அபிலாஷைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வினைப் பெறாமல் நிரந்தர சமாதானமும் ஸ்தீரத்தன்மையும் உதயமாகா.

போருக்குப் பின்னரான மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான பொறுப்பினை ஐக்கிய நாடுகள் இலங்கையில் முடிவுறுத்த இவ்வாறான அடிப்படை எதிர்பார்ப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே பொறுப்புக்கூறலுக்கான நிபுணர்கள் குழாமால் வெளியிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஐக்கியநாடுகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வர வேண்டும்.”

தமிழ் மக்கள் போலிச் செய்திகளை அடையாளம் காணக்கூடியவர்கள். திரு.சுமந்திரன் அவர்கள் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் அறிக்கைகளில் கூட ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் தலைமைத்துவத்தின் கீழான முழுமையான விசாரணை நடைபெற்ற பின்னரே சர்வதேச நீதித்துறை செயற்பாடுகளை ஆயத்தப்படுத்த முடியும் என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. உள்ளக பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டா என்றும் இலங்கையின் இராணுவப் பணியாளர்களின் குற்றங்களை மதிப்பீடு செய்ய சர்வதேச நீதித்துறைச் செயற்பாடுகளே பொருத்தம் என்றும் தமிழ் மக்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவேளை எந்தவொரு ஐக்கியநாடுகளின் அலகும் சவேந்திர சில்வாவை எந்தவொரு குற்றத்துடனும் தொடர்புபடுத்தவில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் அங்கலாய்ப்புக்கு பதில் கூறும் வகையில் மர்சூகி டாருஸ்மானுடன் திரு.சுமந்திரன் அவர்கள் நடத்திக் கொண்ட கலந்துரையாடல்கள் அமைந்ததாகக் கருதலாம்.

சவேந்திர சில்வாவின் பயணத்தடையானது அவருக்குகெதிராக முதல்தோற்ற வழக்கொன்று இருப்பதை ஏற்றே விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதற்தோற்ற வழங்கானது சர்வதேச உண்மை மற்றும் நீதி சார் செயற்றிட்ட அறிக்கை மற்றும் உண்மையைக் கண்டறியும் தூதுக்குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து
பெற்றுக்கொண்ட வாக்குமூலங்கள் உள்ளடங்கலான பல விசாரணைகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதொன்று. (சில்வா சம்பந்தமான நியமனம் பற்றி மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் செயலகத்தில் இருந்து வெளிவந்த செய்தியில் “ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் சில்வாவும் அவரின் படையணியினரும் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களிலும் மனித இனத்திற்கெதிரான குற்றங்களிலும் ரூடவ்டுபட்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளன).

இன்று அவ்வாறான முதற்தோற்ற வழக்குகள் விசாரணைக்காக முன்னிறுத்தப்பட வேண்டும்.

ஆகவே திரு.சுமந்திரன் அவர்களின் செவ்விகள் நீதி ரீதியான செயற்பாடுகளில் சான்றாக அமையக்கூடும். ஆனால் அவரின் செவ்வி அறிக்கைகள் சட்ட வலுக்கொண்ட விசாரணையாகா. அவரின் செவ்விகள் பொறுப்புக்கூறலையோ நீதியையோ நிலைநாட்டவில்லை. இதை இன்னமும் விளக்குவதாக இருந்தால் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகளின் வாக்கு மூலங்கள்
முக்கியமாகத் தேவையெனினும் ருவண்டா, கம்போடியா மற்றும் முன்னைய யூகோஸ்லாவியா போன்றவற்றிற்கான சர்வதேச தீர்ப்பு மன்றம் போன்ற ஒன்றின் முன்னிலையிலேயே மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க உரித்துண்டு.

இலங்கையின் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாக அதிகம் எதுவும் செய்ய முடியாது என்று தமிழ் மக்களுக்குக் கூறவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தனிக்கின்றது.

அவர்களின் இந்த மனப்பாங்கு அக்கட்சியினரின் கையாலாகாத தனத்தையே எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஒரு சர்வதேச, சுயாதீன பொறுப்புக் கூறல் பொறிமுறையை அமைக்க முன்வருவதற்கான அக்கட்சியின் தயக்கத்தையும் அதற்கான தலைமைத்துவத்தை ஏற்பதற்கிருக்கும்
தடுமாற்றத்தையுமே இது எடுத்துக்காட்டுகின்றது.

திரு.சுமந்திரன் உண்மையில் பயப்பிடுவது எதற்காக என்று பார்த்தால் போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்கான ஒரு சர்வதேச, சுயாதீன தீர்மானம் வெளிவந்தால் அது சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் இடையே ஒரு குடிமக்களிடையிலான
வாக்கெடுப்பை நடத்த வேண்டிய ஒரு கடப்பாட்டை உருவாக்கிவிடும் என்பதே.

வடக்கு கிழக்கில் மனித இனப்படுகொலை நடைபெற்றமை பற்றி 2009ன் பின்னர் வடக்கு மாகாணசபையில் ஒரு பிரேரணையை ஏற்றுக்கொள்ள வைத்த துணிச்சல் மிக்க முதலாவது அரசியல் தலைவர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள், அவர் தமிழ் மக்களிடையே அவர்களின் அரசியல் ரீதியான முடிவைப்பெற தேர்தல் நடத்தப்பட
வேண்டும் என்றும் கூறியிருந்தார். நீதியரசர் விக்னேஸ்வரனும் அவருடன் சேர்ந்தவர்களும் குற்றம் புரிந்தோர் யாவரும் விசாரணையின் பின் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தையே கொண்டுள்ளார்கள்.

ஆகவே முதற்கண் சர்வதேச சமூகமானது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அலகுகள் ஊடாக சாட்சிகளின் வாக்கு மூலங்களையும் குற்றச் செயல்கள் இழைக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியத்தையும் பெற வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கை பொறுப்புக்கூறலுக்குத் தமிழ் மக்கள் ஏங்கித் தவிக்கும் அவர்களின் மனோநிலைக்கு மருந்தாகவும் தமிழ் மக்களின் வருங்காலத்திற்குரிய அபிலாஷைகளிற்கு அடிப்படையாகவும் அமைவன என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/36210

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

ஆக, சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுடைய விக்கி ஐயாவின் சுமந்திரன் மீதான குற்றச் சாட்டுகள் தான் "உங்கள் உரித்த வாழைப்பழம்"😂? (இந்த உரித்த வாழைப் பழத்தைக் கூட இன்னொருவர் உங்களுக்கு தேடித் தர வேண்டியிருக்கு, அதைப் பிறகு பார்க்கலாம்!)

இந்த அரசியல் "வாழப் பழக்" கட்டுரையில் பல வசனங்கள் ஏன் "..லாம்" என்று முடிகின்றன? இன்னும் சில இடங்களில் "..தமிழ் மக்கள் கூறியுள்ளார்கள்" என்றும் ஏன் இருக்கிறது? சுமந்திரன் இருக்கும் கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்த ஆசனங்கள் எத்தனை, தமிழ் மக்களைக் கோடி (quote) காட்டும் விக்கி ஐயாவின் கட்சிக்கு கிடைத்த ஆசனங்கள் எத்தனை😂?

எனவே, உங்களிடம் இனப்படுகொலை விசாரணை பற்றியோ, போர்க்குற்ற விசாரணை பற்றியோ சுமந்திரனின் பங்களிப்பைச் சுட்டிக் காட்ட ஒரு தகவலும் இல்லையென  மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ் வின் போன்ற ரொய்லெற் ஊடகங்கள் தாண்டி வாசிக்கவும், யோசிக்கவும் பழகினால் நீங்கள் இன்னும் வளரலாம் என நினைக்கிறேன்!

43 minutes ago, விசுகு said:

முதலில் அவரின் கருத்தை மீண்டும் படியுங்கள். அல்லது அவரை பதிலளிக்க விடுங்கள் 

சரி, அப்படியே வைத்துக் கொள்வோம்.

"மக்கள் பிரதிநிதியான" சுமந்திரன் எப்படி விசாரணையைத் தள்ளிப் போட்டார் என்று ஏதாவது தகவல் இருக்கிறதா? விக்கி ஐயாவின் அரசியல் அபிப்பிராயத்தை மேற்கோள் காட்டாமல் வேறேதாவது இருந்தால் காட்டுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

வாழைபழம் உரித்து தட்டில் வைத்து இருக்கு அவரவர் தேவைக்கு ஏற்றபடி நன்றி மீரா .

சர்வதேச விசாரணை நடந்து முடிந்து விட்டதாக கூறி தமிழ் மக்களை திசைதிருப்ப முயல்கிறார்-சுமந்திரன் மீது விக்கி குற்றச்சாட்டு

போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்கான ஒரு சர்வதேச, சுயாதீன தீர்மானம் வெளிவந்தால் அது சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் இடையே ஒரு குடிமக்களிடையிலான வாக்கெடுப்பை நடத்த வேண்டிய ஒரு கடப்பாட்டை உருவாக்கிவிடும் என்றே சுமந்திரன் பயப்பிடுகிறார். இதற்காகவே, நடக்காத சர்வதேச விசாரணையை, நடந்து முடிந்து விட்டதாக கூறி, தமிழ் மக்களை திசைதிருப்ப முயல்கிறார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது .

போர்க்குற்ற விசாரணை முடிந்து விட்டதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் கருத்து தவறானது என்பதை சுட்டிக்காட்டி, தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சுமந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களைத் தடம் மாற்றவும் ஏமாற்றவும் கருத்துக்கள் வெளியிடுகின்றார்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில்,

இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் திரு. சுமந்திரன் அவர்கள்.

இலங்கை சம்பந்தமான விசேட சர்வதேச குற்றவியல் மன்றமொன்றைக் கோராமலும் அல்லது இலங்கையைசர்வதேச குற்றவியல் மன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும், ஐக்கிய நாடுகளாலும் மற்றையோராலும் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை வைத்து ஊடக அறிக்கைகளின் படி திரு.சுமந்திரன் அவர்கள் சர்வதேச விசாரணையானது முடிவடைந்துவிட்டது என்று தமிழர்களை நம்பவைக்கப் பார்க்கின்றார்.

இது தவறானது. இலங்கை அரசினாலும் இலங்கையின் படையணியினராலும் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்கள் சம்பந்தமான நீதி நியாயத்தை மேற்படி அறிக்கைகள் பெற்றுக் கொடுக்கவில்லை.

இவ்வறிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்களை ஆவணப்படுத்தி உள்ளன. ஆனால் இவ்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவர்கள் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கைகளும் இது காறும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கைகளை சர்வதேச விசாரணையின் முடிவுகளே என்று திரு.சுமந்திரன் அவர்கள் சித்திரிக்கப்பார்க்கின்றார். இவ்வாறான செயலால் திரு.சுமந்திரன் அவர்கள் தமிழ் மக்களைத் தடம் மாற்ற முயன்றிருக்கின்றார். தமிழ் மக்கள நீதியைப் பெற வேண்டுமானால் மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையிலோ இலங்கைக்கான ஒரு விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு மன்றம் முன்னிலையிலோ பாரப்படுத்தப்பட்டு நீதிபாற்பட்ட விசாரணைக்குள்ளாக்கி தண்டிக்கப்பட வேண்டும்.<br />
தமிழ் மக்கள் கூடிய மதிப்புடனும் தொழில்சார் மாண்புடனும் கையாளப்பட வேண்டும்.

திரு.சுமந்திரன் அவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது அவற்றின் ஒரே குறிக்கோள் தமிழ் மக்களைத் தடம்புரளச் செய்வதும் ஏமாற்றுவதுமேயாகும் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

உண்மை இதோ! – நடந்தவற்றைக் கூறி தரவுகளைச் சேகரித்திருந்தன ஐக்கிய நாடுகளின் இரு அறிக்கைகளும். எனினும் அம் முயற்சி முடிவடையவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதியப்படவில்லை. தாம் குறிப்பிடும் குற்றங்களைப் புரிந்தமைக்கு யார் பொறுப்பு என்று கூறி தமது பரிந்துரைகளைப் பதியவில்லை. இறுதியாக, நீதியைப் பெறத் தாம் எடுக்கும் முயற்சிகள் ஒரு செயல்பாட்டின் முதல்ப்படியே என்று குறித்த அறிக்கைகளே ஏற்றுக் கொண்டுள்ளன.

குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் உண்மையில் கூறும் சில விடயங்கள் பின்வருமாறு –

1. டாருஸ்மான் அறிக்கை எனப்படும் “இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமான செயலாளர் நாயகத்தின் நிபுணத்துவக்குழாமின்” 2011ம் ஆண்டிற்கான அறிக்கையின் 1ஆ பரிந்துரையின் ஒரு பகுதி பின்வருமாறு –

“செயலாளர் நாயகமானவர் உடனே ஒரு சுயாதீனமான சர்வதேச பொறிமுறையைச் செயற்படுத்த வேண்டும். அதன் ஆணைக்குட்பட்டு பின்வரும் ஒருங்கியல்பான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.

i. குற்றம்சாட்டப்பெற்ற உரித்துமீறல்களை எந்தளவுக்கு இலங்கை அரசாங்கமானது உண்மையாக விசாரிக்கின்றது என்பது உள்ளடங்கலாக உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை இலங்கை அரசு எப்படி வழிநடத்துகின்றது என்பது பற்றி கண்காணித்து மதிப்பிட்டு காலத்துக்குக் காலம் செயலாளர் நாயகத்திற்கு தமது கண்டுபிடிப்புக்களைத் தெரியப்படுத்த வேண்டும்.

ii. குற்றஞ்சாட்டப்பட்ட உரித்துமீறல்கள் சம்பந்தமாக சுயாதீனமாக விசாரித்தறிவது. அதன் போது நம்பத்தகுந்த மற்றும் நற்பலன் அளிக்கின்ற உள்ளக விசாரணைகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.”

2. பெட்ரீ அறிக்கை எனப்படும் 2012ம் ஆண்டின் “இலங்கையில் நடந்த ஐக்கிய நாடுகள் செயற்பாடுகளின் செயலாளர் நாயகத்தின் உள்ளக மதிப்பீட்டுக் குழாமின்” அறிக்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பல பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதன் செயல் நோக்கம் ஐக்கிய நாடுகள் தான் செய்த தவறுகளை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ளுவதேயாகும். பெட்ரீ அறிக்கையின் 82ஆவது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது –

“நடைபெற்ற நிகழ்வுகளைக் கணிப்பதும் அவை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் இலங்கையில் எடுத்த நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதும் குழாமின் ஆணைக்கு அப்பாற்பட்டன. எனினும் ஒன்று தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. அதாவது நடைபெற்ற கொடூரமான உரிமை மீறல்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காமல் அத்துடன் இலங்கையின் பல்வேறு இனங்களின் அபிலாஷைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வினைப் பெறாமல் நிரந்தர சமாதானமும் ஸ்தீரத்தன்மையும் உதயமாகா.

போருக்குப் பின்னரான மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான பொறுப்பினை ஐக்கிய நாடுகள் இலங்கையில் முடிவுறுத்த இவ்வாறான அடிப்படை எதிர்பார்ப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே பொறுப்புக்கூறலுக்கான நிபுணர்கள் குழாமால் வெளியிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஐக்கியநாடுகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வர வேண்டும்.”

தமிழ் மக்கள் போலிச் செய்திகளை அடையாளம் காணக்கூடியவர்கள். திரு.சுமந்திரன் அவர்கள் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் அறிக்கைகளில் கூட ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் தலைமைத்துவத்தின் கீழான முழுமையான விசாரணை நடைபெற்ற பின்னரே சர்வதேச நீதித்துறை செயற்பாடுகளை ஆயத்தப்படுத்த முடியும் என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. உள்ளக பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டா என்றும் இலங்கையின் இராணுவப் பணியாளர்களின் குற்றங்களை மதிப்பீடு செய்ய சர்வதேச நீதித்துறைச் செயற்பாடுகளே பொருத்தம் என்றும் தமிழ் மக்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவேளை எந்தவொரு ஐக்கியநாடுகளின் அலகும் சவேந்திர சில்வாவை எந்தவொரு குற்றத்துடனும் தொடர்புபடுத்தவில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் அங்கலாய்ப்புக்கு பதில் கூறும் வகையில் மர்சூகி டாருஸ்மானுடன் திரு.சுமந்திரன் அவர்கள் நடத்திக் கொண்ட கலந்துரையாடல்கள் அமைந்ததாகக் கருதலாம்.

சவேந்திர சில்வாவின் பயணத்தடையானது அவருக்குகெதிராக முதல்தோற்ற வழக்கொன்று இருப்பதை ஏற்றே விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதற்தோற்ற வழங்கானது சர்வதேச உண்மை மற்றும் நீதி சார் செயற்றிட்ட அறிக்கை மற்றும் உண்மையைக் கண்டறியும் தூதுக்குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து
பெற்றுக்கொண்ட வாக்குமூலங்கள் உள்ளடங்கலான பல விசாரணைகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதொன்று. (சில்வா சம்பந்தமான நியமனம் பற்றி மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் செயலகத்தில் இருந்து வெளிவந்த செய்தியில் “ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் சில்வாவும் அவரின் படையணியினரும் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களிலும் மனித இனத்திற்கெதிரான குற்றங்களிலும் ரூடவ்டுபட்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளன).

இன்று அவ்வாறான முதற்தோற்ற வழக்குகள் விசாரணைக்காக முன்னிறுத்தப்பட வேண்டும்.

ஆகவே திரு.சுமந்திரன் அவர்களின் செவ்விகள் நீதி ரீதியான செயற்பாடுகளில் சான்றாக அமையக்கூடும். ஆனால் அவரின் செவ்வி அறிக்கைகள் சட்ட வலுக்கொண்ட விசாரணையாகா. அவரின் செவ்விகள் பொறுப்புக்கூறலையோ நீதியையோ நிலைநாட்டவில்லை. இதை இன்னமும் விளக்குவதாக இருந்தால் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகளின் வாக்கு மூலங்கள்
முக்கியமாகத் தேவையெனினும் ருவண்டா, கம்போடியா மற்றும் முன்னைய யூகோஸ்லாவியா போன்றவற்றிற்கான சர்வதேச தீர்ப்பு மன்றம் போன்ற ஒன்றின் முன்னிலையிலேயே மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க உரித்துண்டு.

இலங்கையின் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாக அதிகம் எதுவும் செய்ய முடியாது என்று தமிழ் மக்களுக்குக் கூறவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தனிக்கின்றது.

அவர்களின் இந்த மனப்பாங்கு அக்கட்சியினரின் கையாலாகாத தனத்தையே எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஒரு சர்வதேச, சுயாதீன பொறுப்புக் கூறல் பொறிமுறையை அமைக்க முன்வருவதற்கான அக்கட்சியின் தயக்கத்தையும் அதற்கான தலைமைத்துவத்தை ஏற்பதற்கிருக்கும்
தடுமாற்றத்தையுமே இது எடுத்துக்காட்டுகின்றது.

திரு.சுமந்திரன் உண்மையில் பயப்பிடுவது எதற்காக என்று பார்த்தால் போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்கான ஒரு சர்வதேச, சுயாதீன தீர்மானம் வெளிவந்தால் அது சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் இடையே ஒரு குடிமக்களிடையிலான
வாக்கெடுப்பை நடத்த வேண்டிய ஒரு கடப்பாட்டை உருவாக்கிவிடும் என்பதே.

வடக்கு கிழக்கில் மனித இனப்படுகொலை நடைபெற்றமை பற்றி 2009ன் பின்னர் வடக்கு மாகாணசபையில் ஒரு பிரேரணையை ஏற்றுக்கொள்ள வைத்த துணிச்சல் மிக்க முதலாவது அரசியல் தலைவர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள், அவர் தமிழ் மக்களிடையே அவர்களின் அரசியல் ரீதியான முடிவைப்பெற தேர்தல் நடத்தப்பட
வேண்டும் என்றும் கூறியிருந்தார். நீதியரசர் விக்னேஸ்வரனும் அவருடன் சேர்ந்தவர்களும் குற்றம் புரிந்தோர் யாவரும் விசாரணையின் பின் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தையே கொண்டுள்ளார்கள்.

ஆகவே முதற்கண் சர்வதேச சமூகமானது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அலகுகள் ஊடாக சாட்சிகளின் வாக்கு மூலங்களையும் குற்றச் செயல்கள் இழைக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியத்தையும் பெற வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கை பொறுப்புக்கூறலுக்குத் தமிழ் மக்கள் ஏங்கித் தவிக்கும் அவர்களின் மனோநிலைக்கு மருந்தாகவும் தமிழ் மக்களின் வருங்காலத்திற்குரிய அபிலாஷைகளிற்கு அடிப்படையாகவும் அமைவன என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/36210

 பெருமாள்  ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது  அந்தக் கேள்வி புரியாமல் இருந்தால் கேள்வியை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும். தப்பு தபகாக பதிலளிக்க கூடாது. 

எனது கேள்வி

International criminal court  ஶ்ரீலங்கா இல் நடந்த  யுத்தக்குற்றங்களை விசாரிக்க இணங்கியதா?

இணங்கி இருந்தால் ICC இன் இணையத்தளத்தில் அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா?  

வழக்கைத் தொடுக்க  இணங்கிய அதை  முன்னெடுத்த நாடு எது? அந்த நாட்டின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் அது பற்றிக் அறிக்கையிடப்பட்ட  அறிக்கை இணைப்பை தர முடியுமா? 

தமிழ் மக்களின் பிரதி நிதி என்ற ரீதியில்  சுமந்திரன் வழக்கை தொடுக்க முன்வந்த நாட்டுக்கோ அல்லது அனைத்துலக நீதி மன்றுக்கோ  யுத்தக் குற்றங்களை விசாரணை  செய்ய வேண்டாம் என்றோ அல்லது  தவணை வாங்கியதாகவோ வலியுறுத்தியதாக  வழக்கை தொடுக்க வந்த நாட்டினாலோ  அல்லது ICC யாலோ அறிக்கையிடப்பட்ட அறிக்கையை இங்கு இணைக்க முடியுமா? 

 குமாரசாமி குறிப்பிட்டபடி அவ்வாறு சுமந்திரன்  தவணை வாங்கியிருந்தால்  மீண்டும் அந்த  வழக்கு விசாரணைக்கு  வந்த திகதி என்ன? 

இவற்றை இணைப்பதன் மூலம் சுமந்திரனை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த முடியுமல்லவா? 

1 hour ago, விசுகு said:

முதலில் அவரின் கருத்தை மீண்டும் படியுங்கள். அல்லது அவரை பதிலளிக்க விடுங்கள் 

சுமந்திரன் மக்கள் பிரதிநிதி தான்.  அதனை சேர்தது  நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முயலலாமே! நான் ICC இணையத்தளங்களில் தேடிப்பார்தேன். அவ்வாறு எதுவும் இல்லை. அதனால் தான் உங்களை கேட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

47 minutes ago, island said:

 பெருமாள்  ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது  அந்தக் கேள்வி புரியாமல் இருந்தால் கேள்வியை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும். தப்பு தபகாக பதிலளிக்க கூடாது. 

எனது கேள்வி

International criminal court  ஶ்ரீலங்கா இல் நடந்த  யுத்தக்குற்றங்களை விசாரிக்க இணங்கியதா?

இணங்கி இருந்தால் ICC இன் இணையத்தளத்தில் அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா?  

வழக்கைத் தொடுக்க  இணங்கிய அதை  முன்னெடுத்த நாடு எது? அந்த நாட்டின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் அது பற்றிக் அறிக்கையிடப்பட்ட  அறிக்கை இணைப்பை தர முடியுமா? 

தமிழ் மக்களின் பிரதி நிதி என்ற ரீதியில்  சுமந்திரன் வழக்கை தொடுக்க முன்வந்த நாட்டுக்கோ அல்லது அனைத்துலக நீதி மன்றுக்கோ  யுத்தக் குற்றங்களை விசாரணை  செய்ய வேண்டாம் என்றோ அல்லது  தவணை வாங்கியதாகவோ வலியுறுத்தியதாக  வழக்கை தொடுக்க வந்த நாட்டினாலோ  அல்லது ICC யாலோ அறிக்கையிடப்பட்ட அறிக்கையை இங்கு இணைக்க முடியுமா? 

 குமாரசாமி குறிப்பிட்டபடி அவ்வாறு சுமந்திரன்  தவணை வாங்கியிருந்தால்  மீண்டும் அந்த  வழக்கு விசாரணைக்கு  வந்த திகதி என்ன? 

இவற்றை இணைப்பதன் மூலம் சுமந்திரனை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த முடியுமல்லவா? 

முதலே நான் குறிப்பிட்டது போல, கேள்விகளுக்குப் பதில் வராது. ஏன்? இவர்கள் சுமந்திரன் மீது சாட்டும் குற்றங்களின் தோற்றுவாய் ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு வந்தவையல்ல, வேறு தோற்றுவாய்கள், வெளியே சொல்ல தயங்கும் காரணங்கள் இருக்கின்றன. ஆனால், உங்களுக்குத் தெரிந்து கொண்டு தான் கேட்டிருக்கிறீர்கள் என அறிவேன்.

ஆனால், வாசகர்கள் அறிந்து கொள்ள:

1. சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு (ICC) இலங்கையின் குற்றங்கள் இன்னும் முறையாக முன்வைக்கப் படவில்லை. பிரதான காரணம், அப்படி மனு செய்வதற்கான 3 பொறிமுறைகளில் எதுவும் தமிழர்கள் தரப்பின் வசம் இல்லை. வேறொரு அங்கத்துவ நாட்டினூடாக மனு செய்யும் முயற்சி ஓரிரு ஆண்டுகள் முன்பு பிரிட்டனில் ஆரம்பித்தது, நிலை எனவென்று தெரியவில்லை (அந்த முயற்சியைக் கூட, மியன்மாரின் றொஹிங்கியா மக்களின் வழியைப் பின்பற்றித் தான் பிரிட்டன் தமிழர்கள் ஆரம்பித்தார்கள். அது வரைக்கும் எவரும் அக்கறையாக எப்படி ICC ஐ அணுகுவது என்று யோசித்ததாக நான் அறியவில்லை)

2. அப்படியானால் எங்கே விசாரணை நடக்கிறது? ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலில் (OHCHR) நடக்கிறது. 2014 இல் "..எதிர்கால தீர்ப்பாயமொன்றில் சமர்ப்பிப்பதற்காக ஒரு விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்" என்ற வாக்கியத்தோடு  முதல் தீர்மானம். தீர்மானத்தின் இணைப்பு கீழே:

https://www.ohchr.org/en/hr-bodies/hrc/oisl#:~:text=In its resolution A%2FHRC,violations and abuses of human

இடையில், இலங்கை அரசு இந்த தீர்மானத்தின் படி ஒழுக மாட்டேன் என்ற போது, அமெரிக்காவின் அணி, இன்னொரு தீர்மானம் மூலம் இலங்கையை தொடர்ந்து உடன் வைத்திருக்க பணியாற்றியது. அந்த அமெரிக்க நிலைப்பாட்டிற்கு சுமந்திரன் ஆதரவாக இருந்தார். இதையே "தவணை கொடுத்தார்கள்" என்று சுமந்திரன் எதிர்ப்பு அணி குத்தி முறிந்து வியாக்கியானம் செய்தன. தவணை கொடுத்திருக்கா விட்டால், சர்வதேச/ஐ.நா படைகள் வந்திறங்கி தமிழர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் என்று நினைத்தார்களோ தெரியாது😂.

தற்போது, 2021 தீர்மானத்தின் படி Sri Lanka Accountability Project (SLAP) என்ற பொறுப்புக் கூறல் திட்டம் மூலம் தகவல் சேகரிப்பு நடந்து வருகிறது. அதன் இணைப்புக் கீழே:

https://www.ohchr.org/en/hr-bodies/hrc/sri-lanka-accountability/index#:~:text=In its resolution 46%2F1,Lanka with a view to

விசயம் இவ்வளவு தான்!

"சுமந்திரன் இதைக் குழப்பினார் , விக்கி ஐயா இதை முன்னேற்றினார்!" என்பதெல்லாம் மேல் தீர்மானங்கள் பற்றி எதுவும் தெரியாதவர்கள் போடும் கூச்சல் - white noise!

Edited by Justin
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

https://www.virakesari.lk/article/74368
 
பிகு: சும் இன் பேட்டி தமிழர் சார்ந்த ஊடகங்களிலே வெளிவரும் அதே போல் சும் இற்கு  எதிராகவோ அல்லது ஆதரவாகவோ அமெரிக்க பிரித்தானிய அதிபர்கள் குரல் கொடுக்கப் போவதில்லை.

Edited by MEERA
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, island said:

 சுமந்திரன் மக்கள் பிரதிநிதி தான்.  அதனை சேர்தது  நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முயலலாமே! நான் ICC இணையத்தளங்களில் தேடிப்பார்தேன். அவ்வாறு எதுவும் இல்லை. அதனால் தான் உங்களை கேட்டேன். 

அவர் தனி நபர் என்பதற்கும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதற்குமான வித்தியாசத்தை நீங்கள் புரியாமலே தொடர்ந்து எழுதுகிறீர்கள். எனவே நேரம் பொன்னானது. டொட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

அவர் தனி நபர் என்பதற்கும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதற்குமான வித்தியாசத்தை நீங்கள் புரியாமலே தொடர்ந்து எழுதுகிறீர்கள். எனவே நேரம் பொன்னானது. டொட். 

அவர் மக்கள் பிரதிநிதி தான். மக்கள் பிரதிநிதியாக ICC  முன்னெடுத்த யுத்தக்குற்ற விசாரணையை தவணை வாங்கியதன் மூலம் தடுத்தார் என்றால் அது ICC யின் இணையத்தளத்தில் அறிக்கையிடப்பட்டிருக்கும்.  அல்லது வழக்கை தாக்கல் செய்த நாட்டின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் 

அந்த அறிக்கையின் இணைப்பை மட்டும்தான் கேட்டேன்.  அப்படி ஒன்று இருந்தால் அதை இணையுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, island said:

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை 

முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின்னர் எவர் எவர் என்ன செய்தார் சொன்னார் என்பதெல்லாம் யாழில் கொட்டிக் கிடக்கிறது. அவர் ஒரு தனி நபர் என்று பெரிய பொறுப்பொன்றை மிகவும் லாவகரமாக புதைத்து விட்டு செல்லும் கருத்தை மட்டுமே இங்கே குறிப்பிட விரும்பினேன். நன்றி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை 

முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின்னர் எவர் எவர் என்ன செய்தார் சொன்னார் என்பதெல்லாம் யாழில் கொட்டிக் கிடக்கிறது. அவர் ஒரு தனி நபர் என்று பெரிய பொறுப்பொன்றை மிகவும் லாவகரமாக புதைத்து விட்டு செல்லும் கருத்தை மட்டுமே இங்கே குறிப்பிட விரும்பினேன். நன்றி. 

எனக்கும் தெரியும் அப்படியான அறிக்கையை உங்களால் இணைக்க முடியாது என்று. இருந்தால் தானே இணைக்க. 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆதாரமா? அப்படியென்றால்  என்றால்  என்ன? என்று கேட்டும் ஆட்களுக்கு எப்படி  விளக்கம் கொடுத்தாலும் பயன் பூச்சியம்தான். 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

எனக்கும் தெரியும் அப்படியான அறிக்கையை உங்களால் இணைக்க முடியாது என்று. இருந்தால் தானே இணைக்க. 😂😂😂

1- நான் அறிக்கை சார்ந்து எதுவும் எழுதவில்லை.

2-உங்களுக்கு நன்றாக தெரிந்தது இருக்கிறது அப்படி எதுவும் இல்லை என்று. அப்படியானால் எதுக்கு இல்லாத ஒன்றிற்காக இத்தனை மணித்துளிகளை செலவிட்டு தா தா என்று கையேந்துவான்?? எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை என்ற தத்துவமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழகமான சுத்து மாத்து   நேரம் 18.4௦நடந்த விடயத்தையே மாற்றி சொல்கிறார் யார் தனி நாடு கேட்டது  இவரிடம் ?

பழையது என்றாலும் அவர் சொன்னது மறக்க கூடாது அல்லவா ?

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍....... முன் அனுபவம் தேவையில்லை என்று சில வேலைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் இங்கேயும் நினைத்து உள்ளே வருகின்றார்கள். ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சியும், திறமையும், ஆளுமையும் இருப்பவர்கள் எல்லா துறைகளிலும் அப்படியே சிறப்பாக வருவார்கள், செய்வார்கள் என்று கருதுவது முதிர்ச்சி அடையாத ஜனநாயகத்தின் ஒரு இயல்பு என்று சமீபத்தில் ஒரு இடத்தில் வாசித்திருந்தேன். அப்படியே பொருந்துகின்றது.
    • என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
    • வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று  கூற ஏன்  இப்படி கஷ்டப்பட வேண்டும்.  வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை.  https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/
    • ஈழத் தமிழர் அரசியலின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அறம் பிறழ்ந்த ஊடகவியலாளர்கள். 1961 சத்தியாகிரகத்தின் போது ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது,  யோகர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசும் போது சொன்னாராம், ஏசுவார்கள் எரிப்பார்கள் “ உண்மையை “ எழுதுங்கள், “உண்மையாய் “ எழுதுங்கள் என …. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் “உண்மையாய் “ எழுதுவதில்லை என்பதற்கு இது ஓர் மிகசிறந்த உதாரணம்.   Yoga Valavan Thiya 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.