Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடகொரியா

பட மூலாதாரம்,REUTERS

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கோவிட் பெருந்தொற்றின்போது வடகொரியா, சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடியது. அதன்பின் சில மாதங்களுக்கு வர்த்தக நோக்கங்களுக்காக அது திறக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எல்லை மீண்டும் மூடப்படுகிறது.

ஏன்? என்ன நடக்கிறது வடகொரியாவில்?

சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடுவதற்கு கோவிட்-19 நேரத்தை வட கொரியா பயன்படுத்தியது.

வடகொரியாவில் மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் வடகொரியா இடையே மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனுடன் சீனாவுடனான வடகொரியாவின் வர்த்தகமும் குறைந்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், வட கொரியாவை தனிமைப்படுத்துவதையும், அங்கு அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியையும் முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சமீப காலமாக, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், எல்லை பாதுகாப்பை கடுமையாக அமல்படுத்தி வருகிறார். எல்லையில் மக்கள் நடமாட்டத்தை நிறுத்த கோவிட்-19 காலகட்டத்தைப் பயன்படுத்தினார்.

இருப்பினும், சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க சில மாதங்களுக்கு முன்பு இது மீண்டும் திறக்கப்பட்டது.

சீனா- வட கொரியா

பட மூலாதாரம்,REUTERS

482கி.மீ நீளமுள்ள புதிய வேலி

இது சம்பந்தமாக, 'புல்லட்டை விட வலிமையான பயங்கரவாத உணர்வு: வட கொரியாவின் மூடல் 2018-2023' என்ற அறிக்கையில், கோவிட் -19 தொற்றுநோயின் போது மக்களிடம் அதிகப்படியான மற்றும் தேவையற்ற கண்டிப்பு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள், சீனாவுடனான எல்லையில் 482கி.மீ. நீளத்துக்கு வடகொரிய அதிகாரிகள் வேலி அமைப்பதைக் காட்டுகின்றன.

இது தவிர, ஏற்கனவே நிறுவப்பட்ட 260கி.மீ. நீளமுள்ள வேலி மேலும் நீட்டிக்கப்படுகிறது.

எல்லையில் வேலி அமைக்கும் பணியுடன், மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், மக்களை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்ல எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது.

எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. காவலர் பணியிடங்களின் எண்ணிக்கை 38-இல் இருந்து 650 ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் மீது அடக்குமுறையை ஏவிய வடகொரியா

கிம் ஜாங் உன் இத்தகைய கொள்கைகளை நிறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த கொரியா ஆராய்ச்சியாளர் லினா யுன் கூறுகிறார்.

மக்களை ஒடுக்கும் அவர்களின் நடவடிக்கைகளால், வடகொரியா மிகப்பெரிய சிறைச்சாலையாக மாறியுள்ளது என்று அவர் கூறுகிறார்.

வடகொரியாவில் இருந்து தப்பி ஓடிய பெண்ணுக்கு அங்கு வசிக்கும் அவரது உறவினர் தொலைபேசியில் அரிசி மற்றும் கோதுமையை வெளியில் இருந்து நாட்டிற்கு கொண்டு வர முடியாது என தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் வசிக்கும் அவரது உறவினர் பெண், “இப்போது ஒரு எறும்பு கூட எல்லையை கடக்க முடியாது,” என்றார்.

இதுபோன்ற கண்டிப்பால் வடகொரியாவை விட்டு வெளியேறும் மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்ப முடியாமல் தவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் வடகொரியா மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

வட கொரியாவை விட்டு வெளியேறிய மற்றொரு நபர் 2022-இன் இறுதியில் தனது நாட்டில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களைக் குறித்துப் பேசினார். உலகின் பல பகுதிகளில் கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டம் இது.

அந்த நபர், "கோவிட் நோயை விட மக்கள் பசியால் இறப்பதற்கு அதிகம் பயப்படுகிறார்கள் என்று எனது குடும்ப உறுப்பினர்கள் சொன்னார்கள்," என்றார்.

மக்கள் எப்படி இருக்கிறார்கள்?

வட கொரியா சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வடகொரியாவின் மிகக் கண்டிப்பான நடைமுறையால், தென்கொரியாவிடம் இருந்து பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவில் வசிக்கும் தங்கள் உறவினர்களை தென்கொரியா மக்கள் சந்திக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோவிட்-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, பத்து தரகர்களில் ஒருவர் மட்டுமே வெளியில் இருந்து பணம் அனுப்ப முடியும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மதிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், 2017-ஆம் ஆண்டு வடகொரியாவின் அணுசக்தித் திட்டத்திற்குப் பிறகு விதிக்கப்பட்ட ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான மக்களின் உரிமைகளைப் பறித்ததால் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. மக்கள் உணவு, சுகாதார வசதிகள் கூட இல்லாமல் தவித்தனர்.

"இது பெண்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக சம்பாதித்தனர், ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக, சந்தையில் அவர்களின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன," என்று அறிக்கை கூறுகிறது.

வட கொரியாவில் தொடர்புகளைக் கொண்ட முன்னாள் தொழிலதிபர் ஒருவர், தனது உறவினர்கள் நண்டுகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைச் சாப்பிட்டு வாழ வேண்டும் என்றும், சீனாவுடனான முறைசாரா வர்த்தகம் காரணமாக உயிர்வாழ முடிந்தது என்றும் கூறினார்.

ஆனால் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வணிகமும் மூடப்பட்டது. இதன் காரணமாக, இந்த தொழிலதிபர் தனது பொருட்களை வடகொரியாவில் மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டியிருந்தது.

சீனாவில் வடகொரிய மக்கள் சுரண்டப்படுகிறார்களா?

வட கொரியா- சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவில் பணிபுரியும் வடகொரியர்கள் பணம் கிடைக்காததால் வன்முறையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் செய்தி வெளியானது.

ஆயுத உற்பத்திக்காக வடகொரிய அரசுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு.

வட கொரிய மக்கள் தங்களது எதிர்ப்புகளை ஒருபோதும் வெளிப்படையாக அறிவிப்பதில்லை, ஏனெனில், அரசாங்கம் அதன் குடிமக்களை இறுக்கமாகக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பொது மறுப்பு மரண தண்டனைக்குரியது.

வன்முறைச் செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வெளிநாட்டில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வட கொரியர்களின் நல்வாழ்வு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

சீனாவில் பணிபுரிந்த வட கொரிய தொழிலாளி ஒருவரிடம் பிபிசி பேசியது, அவர் போராட்டம் நடத்தியவர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c517xj7krxxo

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டுக்கும் இந்த அடக்குமுறையாளனுக்கும் எம்மவர்களிடம் ஆதரவு இருக்கிறது 😪

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இந்த நாட்டுக்கும் இந்த அடக்குமுறையாளனுக்கும் எம்மவர்களிடம் ஆதரவு இருக்கிறது 😪

மேற்கு நாடுகளின் அரசும் அதன் மக்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் (தற்போது இஸ்ரேலுக்கும் 🤣)  எதன் அடிப்படையில் ஆதரவளிக்கிறார்களோ அப்படியே வட கொரியாவுக்கும் ஆதரவளிக்க முன்னிற்பதில் வியப்பில்லையே  😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மேற்கு நாடுகளின் அரசும் அதன் மக்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் (தற்போது இஸ்ரேலுக்கும் 🤣)  எதன் அடிப்படையில் ஆதரவளிக்கிறார்களோ அப்படியே வட கொரியாவுக்கும் ஆதரவளிக்க முன்னிற்பதில் வியப்பில்லையே  😁

தவறான புரிதல்

மேற்கு நாடுகளின் ஆதரவு என்பது நாடு என்ற வகையில் மட்டுமே அன்றி அங்கு நடக்கும் அராஜகங்களை கண்டிக்க தவறுவதில்லை. ஆனால் எம்மவர்???

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு

பலஸ்தீனத்தில் நடக்கும் அராஜகங்களை எந்த மேற்கு நாடு தட்டிக் கேட்கிறது.

ஒரு பக்கம் காசாவில் போர்

அடுத்த பக்கம் சும்மா கிடந்த மேற்குக் கரையில் 3500 வீடுகள் கட்டுவதற்கு யுதருக்கு பிரித்து கொடுக்கிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தவறான புரிதல்

மேற்கு நாடுகளின் ஆதரவு என்பது நாடு என்ற வகையில் மட்டுமே அன்றி அங்கு நடக்கும் அராஜகங்களை கண்டிக்க தவறுவதில்லை. ஆனால் எம்மவர்???

இஸ்ரேலைக் கண்டிப்பது போலவா? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

விசுகு

பலஸ்தீனத்தில் நடக்கும் அராஜகங்களை எந்த மேற்கு நாடு தட்டிக் கேட்கிறது.

ஒரு பக்கம் காசாவில் போர்

அடுத்த பக்கம் சும்மா கிடந்த மேற்குக் கரையில் 3500 வீடுகள் கட்டுவதற்கு யுதருக்கு பிரித்து கொடுக்கிறார்களாம்.

அது வந்து அண்ணா பலஸ்தீன தலைவர்களின் முட்டாள்தனம். எவ்வளவோ கொடுத்தார்கள் கூப்பிட்டு பேசினார்கள். பாலஸ்தீனர்கள் ஏற்க மறுத்து அழிகிறார்கள் யாம் என்ன பண்ணும்???😷

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

அது வந்து அண்ணா பலஸ்தீன தலைவர்களின் முட்டாள்தனம். எவ்வளவோ கொடுத்தார்கள் கூப்பிட்டு பேசினார்கள். பாலஸ்தீனர்கள் ஏற்க மறுத்து அழிகிறார்கள் யாம் என்ன பண்ணும்???😷

இதையே மற்றவர்கள் புலிகளுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கே!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

இதையே மற்றவர்கள் புலிகளுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கே!!

உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொண்டே  ஆக வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இதையே மற்றவர்கள் புலிகளுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கே!!

உலகத்திலை நடக்கிற  பிரச்சனையள் எல்லாம்  சுத்தி சுத்தி சுப்பரரை கொல்லைக்கை நிக்கிற மாதிரியே இருக்கும் 😂

உங்களுக்கு  தனிநாட்டை தவிர மற்ற எல்லாம் தரலாம் எண்டு சிங்களவன் சொன்னவன் தானே எண்டொரு மாயை எங்கட சனத்திட்டையும் இருக்கு.....😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

இதையே மற்றவர்கள் புலிகளுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கே!!

1

2 hours ago, Kapithan said:

உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொண்டே  ஆக வேண்டும். 

2

1 hour ago, குமாரசாமி said:

உலகத்திலை நடக்கிற  பிரச்சனையள் எல்லாம்  சுத்தி சுத்தி சுப்பரரை கொல்லைக்கை நிக்கிற மாதிரியே இருக்கும் 😂

உங்களுக்கு  தனிநாட்டை தவிர மற்ற எல்லாம் தரலாம் எண்டு சிங்களவன் சொன்னவன் தானே எண்டொரு மாயை எங்கட சனத்திட்டையும் இருக்கு.....😎

3

இன்னும் எதிர்பார்க்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

1

2

3

இன்னும் எதிர்பார்க்கிறேன் 

கேள்விகளுக்கு பதில் இல்லாவிட்டால் இப்படித்தான் எழுதவேண்டியிருக்கும்!
பாலஸ்தீன மக்கள்மட்டும் அடிமைவாழ்க்கை வாழவேண்டும் ஆனால் நாங்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

இதையே மற்றவர்கள் புலிகளுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கே!!

பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை பலநாடுகள் ஏற்றுகொண்டன இன்றுவரை அமெரிக்காகூட அதை ஏற்றுக்கொள்கிறது.

புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது சுயாட்சியுடன் கூடிய தமிழர் தாயகபகுதி என்பதையாவது எவராவது ஏற்றுக்கொண்டார்களா?  அமெரிக்கா உட்பட்ட மேற்குலகமும் சிங்கள அரசும் அழுத்தம் முதலில் கொடுத்தது புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென்பது.

ஆயுதங்களை கீழே போட்டிருந்தால் பேச்சுவார்த்தை என்ற ஒரு மேடைக்கே புலிகளை அழைத்திருப்பார்களா? கண்டிப்பாக தமிழர்கள் என்ற பெயரில் டக்ளசையும், கூட்டணிகாரர்களையும்தான் கொண்டுபோய் உலகின் முன் தமிழர் தரப்பு என்று நிறுத்தியிருக்கும் சிங்களம்.

புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் தீர்வு என்று அடிக்கடி சிங்கள தேசம் சர்வதேசத்துக்கு சொல்லிக்கொண்டிருந்தது, இன்று புலிகளே இல்லை என்ன தீர்வு இதுவரை தமிழருக்கு  வந்து சேர்ந்திருக்கிறது?

சமகால நிலமைகளை கண்கூடே பார்த்துவிட்டு புலிகளையும் பாலஸ்தீனத்தையும் எந்த வகையில் ஒப்பிடலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, valavan said:

4

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Eppothum Thamizhan said:

இதையே மற்றவர்கள் புலிகளுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கே!!

புலிகள் எல்லாவற்றையும் தட்டி விட்டார்கள் மக்களையும் அழித்து தாமும் அழிந்தார்கள் என்று இங்கே எழுதப்பட்ட போது மயக்கத்தில் இருந்தீர்களா??

உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொண்டே  ஆக வேண்டும். 

இவர் என்ன சொல்ல வருகிறார் என்றாவது புரிகிறதா??

11 hours ago, Kapithan said:

உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொண்டே  ஆக வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, valavan said:

பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை பலநாடுகள் ஏற்றுகொண்டன இன்றுவரை அமெரிக்காகூட அதை ஏற்றுக்கொள்கிறது.

பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை ஏற்றுக்கொண்ட நாடுகள் ஏன் ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, valavan said:

புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது சுயாட்சியுடன் கூடிய தமிழர் தாயகபகுதி என்பதையாவது எவராவது ஏற்றுக்கொண்டார்களா?  அமெரிக்கா உட்பட்ட மேற்குலகமும் சிங்கள அரசும் அழுத்தம் முதலில் கொடுத்தது புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென்பது.

 அமெரிக்காவும் மேற்குலகும் பாலஸ்தீனத்திற்கு  இல்லை....யசீர் அரபாத்திற்கு காட்டிய இணக்கப்பாடுகள் ஏன் ஈழவிடுதலை கோரியவர்களுக்கு காட்டப்படவில்ல?

யசீர் அரபாத் ஒரு சர்வதேச பயங்கரவாதி. தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேச அழிவு மற்றும் கடத்தல்களில் ஈடுபடவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, valavan said:

ஆயுதங்களை கீழே போட்டிருந்தால் பேச்சுவார்த்தை என்ற ஒரு மேடைக்கே புலிகளை அழைத்திருப்பார்களா? கண்டிப்பாக தமிழர்கள் என்ற பெயரில் டக்ளசையும், கூட்டணிகாரர்களையும்தான் கொண்டுபோய் உலகின் முன் தமிழர் தரப்பு என்று நிறுத்தியிருக்கும் சிங்களம்.

அது உண்மைதான்.  நீங்கள் சொன்ன விடயங்கள் தான்  இன்று நடந்து கொண்டிருக்கின்றது. அந்த ஆயுத முனை நடைமுறைகள்   இல்லாததின் விளைவுகளை எம் மண்ணில் கூட கண்ணெதிரே  பார்க்கக்கூடியதாகவே உள்ளது.

எந்த இனம் மண் சார்ந்தவர்களுக்கு எந்த ஆயுதத்தை தூக்க வேண்டுமோ  அதை தூக்கியே ஆகவேண்டும். சட்டம் ஒரு ஆயுதம்  இல்லையேல் பிரம்பு இன்னொரு ஆயுதம்.

7 hours ago, valavan said:

புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் தீர்வு என்று அடிக்கடி சிங்கள தேசம் சர்வதேசத்துக்கு சொல்லிக்கொண்டிருந்தது, இன்று புலிகளே இல்லை என்ன தீர்வு இதுவரை தமிழருக்கு  வந்து சேர்ந்திருக்கிறது?

உவங்கள் சண்டை பிடிக்காமல் இருந்திருந்தால் எங்கடை பிரச்சனையும் உவ்வளவு அழிவுகளும் வந்திருக்காது எண்டு சொல்லுற ஜாம்பவான்கள்  இன்றும் வீதிவலம் வந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, valavan said:

சமகால நிலமைகளை கண்கூடே பார்த்துவிட்டு புலிகளையும் பாலஸ்தீனத்தையும் எந்த வகையில் ஒப்பிடலாம்?

 சம பலம் முக்கியம் என்பதை ஹமாஸ் இயக்கம் உணருகின்றது போல் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை ஏற்றுக்கொண்ட நாடுகள் ஏன் ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை? 

பொருளாதார ரீதியாகவோ அல்லது பிராந்திய ரீதியாகவோ முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுக்கே சர்வதேசம் முன்னுரிமை கொடுக்கிறது,

தமக்கு முக்கியத்துவம் இல்லாத நாடுகளில் பல ஆயிரக்கணக்கில் செத்து கிடந்தாலும் முக்கியத்துவம் தராத உலகம் , தமது ஆளுமை அல்லது பின்புலம் கொண்ட நாடுகளுக்கு ஒன்றென்றால் நேச நாடுகள் என்று சொல்லி படை திரட்டி முட்டி மோத வருகிறது.

எமது நிலையும் அதுதான் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளத்தை ரில்லியன் டொலர் கணக்கில் எடுக்க முடியும் நிலை என்ற ஒன்று வந்தால் சிங்களம் அதனை தம்முடன் பகிர்ந்து கொள்ள மறுத்தால்  இலங்கை தமிழருக்கு ஒரு பிரச்சனையென்றால் அதனை ஒரு போர் பிரகடனமாகவே மேற்குலகம் எடுக்கும்.

பாலஸ்தீன பிரச்சனை என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, இஸ்ரேல் என்பது மேற்குலகின் முற்றுமுழுதான ஆசீர்வாதம் பெற்ற பிரதேசம், பாலஸ்தீனம் என்பது தனி ஒரு பிராந்தியமல்ல, முற்றுமுழுதாக அரபுநாடுகளின் அனுதாபம் பெற்ற பிரதேசம், அரபு நாடுகளென்பது  அமெரிக்காவின் மறைமுக ஆளுகைக்கு உட்பட்ட வலயம், எப்படி முக்கியத்துவம் தராமல் இருப்பார்கள்?

எமது போராட்டமும் பிராந்தியமும் எந்த வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறது? அகதிகளாய் எம்மவர்கள் தஞ்சம் கோருவதால் மட்டுமே  ஓரளவாவது உற்று நோக்குகிறார்கள், இல்லையென்றால் அதுவும் இல்லை.

பாலஸ்தீனத்திற்கு கொஞ்சமும் குறையாத படுகொலைகள் கொங்கோவிலும்,கம்போடியாவிலும்,உகண்டாவிலும், சோமாலியாவிலும் அரங்கேறியது அரங்கேறுகிறது எவர் கண்டு கொண்டார்கள்? 

இழவு வீடென்றாலும்  வசதியுள்ளவன்  செத்தால் வரிசை கட்டி ஓடி வரும் சமூகம், இல்லாதவன் செத்தால் அனாதை பிணமாகவே விட்டுவிடும், அது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2024 at 16:31, valavan said:

பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை பலநாடுகள் ஏற்றுகொண்டன இன்றுவரை அமெரிக்காகூட அதை ஏற்றுக்கொள்கிறது.

பாலஸ்தீனத்தில் தன்னாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியுமா? இன்றும் காசாவையும் West bank ஐயும் திறந்தவெளி சிறைச்சாலைகளாக தானே இஸ்ரேல் வைத்திருக்கிறது. அவர்களும் அடிமை வாழ்க்கைதானே வாழ்கிறார்கள்! அதற்காகத்தானே போராட்டமும் தொடங்கியது!! அதைத்தான் எமது போராட்டத்துடன் ஒப்பிட்டு எழுதினேன். 

நான் எழுதியது விசுகரின் " கூப்பிட்டு பேசினார்கள். பாலஸ்தீனர்கள் ஏற்க மறுத்து அழிகிறார்கள் யாம் என்ன பண்ணும்???" என்ற கருத்துக்கான பதில் மட்டுமே! முழுமையாக வாசித்துவிட்டு பதில் எழுதவும்!!

18 hours ago, விசுகு said:

புலிகள் எல்லாவற்றையும் தட்டி விட்டார்கள் மக்களையும் அழித்து தாமும் அழிந்தார்கள் என்று இங்கே எழுதப்பட்ட போது மயக்கத்தில் இருந்தீர்களா??

உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொண்டே  ஆக வேண்டும். 

இவர் என்ன சொல்ல வருகிறார் என்றாவது புரிகிறதா??

அவர் சொல்லவருவது நன்றாகவே புரிகிறது! அவர் யார் எப்படிப்பட்ட கருத்துக்களை எழுதுகிறார் என்று யாழில் எல்லோருக்கும் தெரியும் அதனால் அவரின் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள தேவையுமில்லை!

இதைவிட எத்தனையோபேர் புலிகளின் போராட்டமே பிழையானது என்று எழுதும்போது பதில் எழுதி நிர்வாகத்திடம் வெட்டு வாங்கியது நானே! அப்போதெல்லாம் நீங்கள் மௌனியாக கோமாவில்தானே இருந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

அவர் சொல்லவருவது நன்றாகவே புரிகிறது! அவர் யார் எப்படிப்பட்ட கருத்துக்களை எழுதுகிறார் என்று யாழில் எல்லோருக்கும் தெரியும் அதனால் அவரின் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள தேவையுமில்லை!

இதைவிட எத்தனையோபேர் புலிகளின் போராட்டமே பிழையானது என்று எழுதும்போது பதில் எழுதி நிர்வாகத்திடம் வெட்டு வாங்கியது நானே! அப்போதெல்லாம் நீங்கள் மௌனியாக கோமாவில்தானே இருந்தீர்கள்?

இது ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் எழுதின‌ க‌ருத்து நண்பா..............தமிழீழ‌ம் என்ற‌ நாடு கேடு கெட்ட‌ இந்தியாக்கு ப‌க்க‌த்தில் இருக்காம‌ தூர‌ தேச‌த்தில் இருந்து இருந்தா த‌மிழீழ‌ காற்றை நாம் சுவாசித்து இருப்போம்............ஹ‌மாஸ் த‌னி நாட்டு போரை தொட‌ங்கி வைச்சாலும் ஈரான் ர‌ஸ்சியா தென் ஆபிரிக்கா  ம‌ற்றும் சில‌ நாடுக‌ள் த‌னி ப‌ல‌ஸ்தீன‌ நாட்டை ஆத‌ரிக்கினம்

ஹமாஸ்சுக்கு துணையா கிஸ்புல்லா  ப‌ல‌ம் மிக்க‌ போராளிக் குழு ஹ‌வூதிஸ் ப‌க்க‌ பலமாய் நிக்கினம்.............2009ம் ஆண்டு எம் இனம் அழியும் போது அதே சொந்த‌ இன‌ம் த‌மிழ் நாட்டில் இருந்து வேடிக்கை பார்த்த‌து....................எங்கையோ இருக்கும் தென் ஆபிரிக்கா ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் நின்ற‌து போல் அருகில் இருக்கும் த‌மிழ் நாடு எங்க‌ளின் இன‌ அழிப்பை ச‌ர்வ‌தேச‌ ம‌த்தியில் எடுத்து செல்ல வில்லை................மொள்ளமாரி முடிச்சவிக்கி கூட்ட‌ம் த‌மிழ் நாட்டை ஆளும் போது உண்மையை வெளி உல‌கிற்க்கு அவ‌ர்க‌ளால் கொண்டு வ‌ர‌ முடியாது.................செய்த‌ ஊழ‌லுக்கு ப‌ய‌ந்து ஒரு இன‌த்தையே பலிகாடாக்கின‌துகள்.................. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

நான் எழுதியது விசுகரின் " கூப்பிட்டு பேசினார்கள். பாலஸ்தீனர்கள் ஏற்க மறுத்து அழிகிறார்கள் யாம் என்ன பண்ணும்???" என்ற கருத்துக்கான பதில் மட்டுமே! முழுமையாக வாசித்துவிட்டு பதில் எழுதவும்!!

சம அளவிலான பிரச்சனைகளாக இருந்தாலும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுவதில் புலிகளின் போராட்டத்தையும் பாலஸ்தீனர்களின் போராட்டத்தயும் ஒரே தராசில் வைத்து பார்க்கும் புலி வெறுப்பாளர்களுக்கான  பதிலாகவே உங்களின் கருத்தை எடுகோளாக்கினேன்,

மற்றும்படி அது உங்களின் மீதான விமர்சனம் அல்ல.

பெரும்பாலும் எவருடனும் கருத்து மோதலில் ஈடுபடுவதில்லை, பொத்தாம் பொதுவாக மனசில் பட்டதை சொல்வதுதான் வழமை,

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாலஸ்தீனர்களுக்கு கிடைக்கின்ற ஆதரவு பிரமாண்டமாக உள்ளது ஒரு பக்கம் வெளிநாட்டு ஈழதமிழர்கள், இலங்கை சிங்களவர்கள் மறுபக்கம்இலங்கை இந்திய பாக்கிஸ்தான் முஸ்லிம்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அநீதி இழைக்கப் பட்டவர்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் நிப்ப‌வ‌ன் தான் உண்மையான‌ புர‌ட்சியாள‌னின் வ‌ர‌லாற்றை தெரிந்து வைத்து இருப்பான்..............அது ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநீதியாய் இருந்தாலும் ச‌ரி உல‌கில் எந்த‌ நாடாய் இருந்தாலும் ச‌ரி என் போன்றோர் அவ‌ர்க‌ள் ப‌க்க‌ம் தான்...............

Et-Wv-GSQVEAEYxd8.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.