Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்தக் காணொளி பல நாட்களாக உலா வந்தாலும் யாழில் யாரும் இணைத்த மாதிரி தெரியவில்லை.

யாராவது முதலே இணைத்திருந்தால் நிர்வாகம் இதை நீக்கிவிடவும்.

எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தது.

இந்த மாணவர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும்.

இங்க என்ன பேச வேண்டும்

என்ன பேசக் கூடாது

என்று சொல்லி அனுப்பியே இப்படி பேசுகிறார்கள் என்றால் முழு சுதந்திரமும் கொடுத்திருந்தால் எப்படி முழங்கியிருப்பார்கள்.

  • Like 1
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம்பெயர்ஸ்  களிடமே மாற்றம் ஏற்படாதபோது, நிலத்திலுள்ளவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்க முடியாதுதானே? 

அது ஒருபக்கம் இருக்கட்டும். இந்த மாணவர்களுக்கு அரசியல் தெரியுமா? 

இதே பாடசாலை மாணவர்கள் SL Airforce ன் உலங்கு வானூர்தி ஏறியதாக யாழ் களத்தில் மொங்கி எடுத்தார்கள்? 

எங்கோ முரண்படுகிறதே? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, Kapithan said:

இந்த மாணவர்களுக்கு அரசியல் தெரியுமா? 

தெரிந்ததை தெளிவாக உரக்க சொல்லியுள்ளார்கள்.

பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

தெரிந்ததை தெளிவாக உரக்க சொல்லியுள்ளார்கள்.

பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.

அவர்களை மட்டம் தட்டுவது எனது நோக்கம் அல்ல.

அவர்களுக்கு அரசியல் தெரியுமா?  தெரியுமென்று நான் நம்பவில்லை.

ஏனென்றால் அவர்களின் வயதைக் கடந்துதான் நான் வந்துள்ளேன். 

இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தானே நாலு தலைமுறைகளை இழந்தோம்? 

அவர்களைத் தெளிவாகச் சிந்திக்கப் பழக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். 

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

தெரிந்ததை தெளிவாக உரக்க சொல்லியுள்ளார்கள்.

பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.

மிகவும் நன்றி அய்யனே...இதுதான் உணர்வு....

3 hours ago, Kapithan said:

அவர்களை மட்டம் தட்டுவது எனது நோக்கம் அல்ல.

அவர்களுக்கு அரசியல் தெரியுமா?  தெரியுமென்று நான் நம்பவில்லை.

ஏனென்றால் அவர்களின் வயதைக் கடந்துதான் நான் வந்துள்ளேன். 

இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தானே நாலு தலைமுறைகளை இழந்தோம்? 

அவர்களைத் தெளிவாகச் சிந்திக்கப் பழக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். 

இது ஏமாற்றம்....எட்டாப் பழம் புளிக்கும்..கொதிப்பவன் கொதிக்கட்டும்...எரிப்பவன் எரிக்கட்டும்...காணாத இழ்ப்பா...நந்திபோல் குறுக்கிட்டு ..அவர்கள்  உணர்வை மழுங்கடிக்காதீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, alvayan said:

மிகவும் நன்றி அய்யனே...இதுதான் உணர்வு....

இது ஏமாற்றம்....எட்டாப் பழம் புளிக்கும்..கொதிப்பவன் கொதிக்கட்டும்...எரிப்பவன் எரிக்கட்டும்...காணாத இழ்ப்பா...நந்திபோல் குறுக்கிட்டு ..அவர்கள்  உணர்வை மழுங்கடிக்காதீர்கள்..

அது ஊரான் வீட்டுப் பிள்ளைதானே. எப்படிப்போனால்தான் உங்களுக்கு என்ன? 

@விசுகு

அதே பாடசாலை மாணவர்கள் SL Airforce ன் உலங்கு வானூர்தி ஏறியபோது எரிந்து விழுந்ததை  மறந்துவிடாதீர்கள்’. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

அது ஊரான் வீட்டுப் பிள்ளைதானே. எப்படிப்போனால்தான் உங்களுக்கு என்ன? 

ஊரான் வீட்டுப்பிள்ளையென்ற்றூ..உதாசீனம் செய்வதில்லை நாம்.. உங்களைபோல இன்னுமொரு இனத்துக்காக நின்று நியாயம் கதைப்பதில்லை நாம்...உணர்வாளர் களை வாழ்த்தி வாழ்விடுங்கல்..உங்கள் உழைப்புக்காக  அவர்களை தடுக்காதீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, alvayan said:

1) ஊரான் வீட்டுப்பிள்ளையென்ற்றூ..உதாசீனம் செய்வதில்லை நாம்..

2) உங்களைபோல இன்னுமொரு இனத்துக்காக நின்று நியாயம் கதைப்பதில்லை நாம்..

3)உணர்வாளர் களை வாழ்த்தி வாழ்விடுங்கல்..

4) உங்கள் உழைப்புக்காக  அவர்களை தடுக்காதீர்கள்..

1)  உங்கள் வீட்டுப் பிள்ளைகளை இந்த வயதில்  இப்படி உசுப்பேற்றி விடுவீர்களா? அதாவது அரசியலில் ஈடுபடுத்துவீர்களா அல்லது படிப்பில் கவனம் செலுத்த வலியுத்துவீர்களா? இதே பிளைகளைத்தானே ஹெலியில் ஏறியதற்காக குத்தி முறிந்தீர்கள்? 

2) 🥺

3) இது சிறுபிள்ளை வேளாண்மை. அவர்கள் பக்குவப்பட வேண்டும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. 

4) இது விபு களின் காசில் வயிறு வளர்ப்பவர்களின் வெற்றுக் கூச்சல். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, Kapithan said:

இது உங்கள்   விதண்டாவாதம்...பழைய ரெகார்டு மாதிரி ...கீறிய ரெகார்டு மாதிரி ..புலம்பாமல்..உங்கள்  பிழைப்புக்கு நல்ல வழியை தேடுங்கள்.. இனம் தழைக்கும்..உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்..நன்றி டொட்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளைய சமுதாயம் போதைவஸ்த்து, மது போன்ற இன்னொரென்ன கலாசார சீரழிவுகளில் ஈடுபட்டிருக்க, வரலாறு தெரியாது ஆக்கிரமிப்பாளனின் போர்க்கருவிகளில் வியந்துபோயிருக்க இன்னொரு பகுதி மாணவர்கள் அரசியலைச் சரியான முறையில் பேசுவது நம்பிக்கை தருகிறது. 

புலம்பெயர் தமிழர்களின் குழுபேதங்களும், பிரிவினைகளும், பணத்திற்காக இனம் விற்கும் துரோகங்களும், ஆக்கிரமிப்பாளனிற்கு விலைபோகும் கைங்கரியங்கள் தவறானவையே. அவை நிச்சயம் சுட்டிக்காட்டப்பட்டுத் தோலுரிக்கப்பட வேண்டும். இவ்வாறானவர்கள் தமிழனின் அபிலாஷைகள் குறித்து பேசுவதற்கு எவ்விதத்திலும் அருகதையற்றவர்கள் என்பது சரியானதே.

மேலும், சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராதென்று சேடமிழுக்கும் அப்புக்காத்துமாரின் இணக்க அரசியலால் உந்தப்பட்டு விஷம் கக்கும் நாகங்களைக் கடந்து இளைய சமுதாயம் விளிப்புணர்வு பெற எடுக்கப்படும் எந்த முயற்சியும் பாராட்டிற்குரியதே.

சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருபடி. நடக்கட்டும், வாழ்த்துக்கள் !

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

ஒருவரின் கருத்துக்கு  நேராகத் துணிச்சலுடன் பதில் கருத்தெழுதப் பழகுங்கள்.

பின்னர் , நிலத்தின்  மாணவர்களிற்கு  வாழ்த்து தெரிவிக்கலாம். 👍

3 hours ago, alvayan said:

இது உங்கள்   விதண்டாவாதம்...பழைய ரெகார்டு மாதிரி ...கீறிய ரெகார்டு மாதிரி ..புலம்பாமல்..உங்கள்  பிழைப்புக்கு நல்ல வழியை தேடுங்கள்.. இனம் தழைக்கும்..உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்..நன்றி டொட்..

நாட்டைவிட்டு தப்பியோடிவந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக  படிக்க வைத்து ஆளாக்கிய பின்னர், ஊரான் பிள்ளை ஆரம்பக் கல்வி பயிலும் காலத்திலேயே அரசியல் கதக்க வேண்டும் என முழங்குவீர்கள். 

இதுதான் விபு க்களின் பணத்தில் குளிர்காயும் ஆட்கள் செய்வது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kapithan said:

நாட்டைவிட்டு தப்பியோடிவந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக  படிக்க வைத்து ஆளாக்கிய பின்னர், ஊரான் பிள்ளை ஆரம்பக் கல்வி பயிலும் காலத்திலேயே அரசியல் கதக்க வேண்டும் என முழங்குவீர்கள். 

இதுதான் விபு க்களின் பணத்தில் குளிர்காயும் ஆட்கள் செய்வது. 

இதைத்தான் சொல்வது  வி     கதை என்றூ...பழய ரெக்கோட்டை திரிப்பி திரிப்பி பாட்வதில் வல்லவர்...பரவாயில்லை..புலம்பெடர்தவர் ஒழித்தாலும் நல்லது செய்கிறோம்...நீங்கள்    என்னவென்றால் இனத்தையே விற்று சாப்பிடுகிறியள்... இதிலை எது சிறந்தது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த காணொளியை ஓடவிட்டு ஓடவிட்டு பார்த்தேன். பெரிதாக விளங்கவில்லை. தெரிந்த விண்ணர்கள் சிலருக்கு காணொளியை பகிர்ந்து கேட்டேன்.  இலங்கை பாடசாலைகளில் பேச்சு வல்லமையை ஊக்குவிப்பதற்காக இப்படி பேச்சு போட்டிகள் நடத்தபடுவதாக சொன்னார்கள்.  இந்த இலங்கை வெய்யிலில் அவர்கள் கோட், ரை கட்டி பேசும் போதே எனக்கும் பாடசாலை சம்பந்தபட்டதாக இருக்குமோ என்று முதலில்  நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, alvayan said:

இதைத்தான் சொல்வது  வி     கதை என்றூ...பழய ரெக்கோட்டை திரிப்பி திரிப்பி பாட்வதில் வல்லவர்...பரவாயில்லை..புலம்பெடர்தவர் ஒழித்தாலும் நல்லது செய்கிறோம்...நீங்கள்    என்னவென்றால் இனத்தையே விற்று சாப்பிடுகிறியள்... இதிலை எது சிறந்தது...

அல்ப்ஸ்,

உங்கள் கிறுக்கல்களைப் பார்க்கும்போது உந்தக் காணொளியை தாங்கள் பார்க்கவில்லை எனத் தெரிகிறது. 

அந்தக் காணொளியில் கிழித்துத் தொங்கவிடுவது உந்த புலம்பெயர்ஸ் வால்களைத்தான்.

உந்தக் காணொளியை முதழிபாருங்கோ. உந்தப் பக்கமே தலை வைச்சுப் படுக்க மாட்டீர்கள். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னிக்கவும்,

தங்களை அல்வாயன் என அழைப்பதற்குப் பதிலாக அல்ப்ஸ் எனச் செல்லமாக அழைத்தேன். அது தங்களுக்கு அலர்ஜியென்றால் அல்வாயன் என்றே அன்புடன் அழைக்கிறேன். 

போதுமா? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, Kapithan said:

மன்னிக்கவும்,

தங்களை அல்வாயன் என அழைப்பதற்குப் பதிலாக அல்ப்ஸ் எனச் செல்லமாக அழைத்தேன். அது தங்களுக்கு அலர்ஜியென்றால் அல்வாயன் என்றே அன்புடன் அழைக்கிறேன். 

போதுமா? 

😏

போதுமையா...நன்றி உங்களுக்கு..

34 minutes ago, Kapithan said:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/3/2024 at 02:49, Kapithan said:

அவர்களைத் தெளிவாகச் சிந்திக்கப் பழக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். 

ஆமாம்,.ஆனால் எப்படி?? ஆரம்பத்திலே அனைவரும் அனைத்து விடயங்களையும் ... கருமங்களையும். பிழை விட்டு தான் செய்ய முடியும்,.செய்வார்கள்  

நீங்கள் நடக்க பழகிய போது விழுந்து எழும்பித் தான்  நடக்க பழகினீர்கள்     இது சாதாரணமானது 

முதல் முறை கார் ஒடும்போது  பிழைகள் விட்டு  திருந்தி.  சரியாக ஒட முடியும்  

ஆகவே இதில் எந்த பிழையுமில்லை  .....பிழை எது என்றும் கற்றுக் கொள்ள வேண்டும்   அப்புறம் சரி இயல்பாக தெரிந்து விடும் 

சிறுவர்கள் ஆரம்பத்தில் விடும் பிழைகள் பாரதூரமான விடயம் இல்லை  அவர்கள் கண்டிப்பாக பிழைகள் விட வேண்டும்  அது பிழை என்றும் தெரிந்து கொள்ளவும் வேண்டும்  

இந்த சின்ன விடயத்தை  நீங்கள் ஆராயும் விதத்திலருந்து  உங்களுடைய  விளங்கிக் கொள்ளும் அற்றலும். கற்ப்பிக்கும் வலுவும். கள உறுப்பினர்கள் அறிய முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/3/2024 at 11:42, Kapithan said:

@விசுகு

அதே பாடசாலை மாணவர்கள் SL Airforce ன் உலங்கு வானூர்தி ஏறியபோது எரிந்து விழுந்ததை  மறந்துவிடாதீர்கள்’. 

😏

அதை வாழ்த்தி எழுதி வரவேற்றிருந்தேன். நாங்க தூர நோக்கோடு தெளிவாக இருக்கிறம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, விசுகு said:

அதை வாழ்த்தி எழுதி வரவேற்றிருந்தேன். நாங்க தூர நோக்கோடு தெளிவாக இருக்கிறம். 

நீங்கள் வாழ்த்தினீர்கள் என்பது உண்மை. எத்தனை பேர் தூற்றினார்கள்? 

மாணவர்களை மாணவர்களாக இருக்க விடுவதுதான் சிறப்பு. பல்கலை புகும்போது பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்குரிய சமூகப் பொறுப்பு தானாகவே வந்துவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் புலம்பெயர்ஸ்களைத் திட்டுவதை விடுத்து

உங்கட பிரச்சனைகளைப்பற்றி முதலில் பொதுவெளியில் பேசுங்கோ. 

புலிகளது புலம்பெயர் முதலீடுகளை ஆட்டை போட்டவர்கள் மற்றும் சுரேன் செரேந்திரன் கோஸ்டியை விமர்சிப்பதைத் தவிர இவர்கள் யாரைக்குறிவைக்கிறார்கள்.

தமிழர்பகுதியில் போதைப்பாவனை விபச்சாரம் அதிகரிப்பு இவைகளைப்பற்றிபேசாது புலம்களை விமர்சனம் செய்வது அவர்களுக்கும் தாயகத்துக்கும் இடயிலான சிறிதளவான தொடர்பையும் அறவே இல்லாதொழிப்பதற்கான முயற்சி இந்துக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் யார் நகரின் முதல்தரப் பாடசாலையில் படிப்பதற்காக அரசாங்கத்தால் ஒழுங்குசெய்யப்படும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் ஏழை மாணவர்களுக்கான வாய்ப்பைத் தடிப்பறித்து அதன் வெட்டுப்புள்ளிகளை அதிகரிக்கப்பண்ணி அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பணம் படைத்தவர்களுடன் அந்த ஏழை மாணவர்களைப் போட்டிபோடப்பண்ணி அவர்களுக்கான சந்தர்ப்பங்களை மறுதலித்த ஒரு கூட்டம் யாழ் குடாநாட்டில் வாழ்கிறது அந்தக்கூட்டத்தின் அங்கத்தவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கல்லூரியில்தான் படிக்கிறார்கள்.

அதுதவிர இந்துக்கல்லூரியில் அனுமதி பெற கையூட்டுப்பெற்ற அதிபர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்ட கதை இன்னும் நினைவிலிருந்து போகவில்லை. அப்போ அங்கே கையூட்டுப்பெற்று பாடசாலை அனுமதி பெற்றவர்களும் படிக்கிறார்கள் ஏழை மாணவர்களது வாழ்வில் விளையாடி வெட்டுப்புள்ளிகளை அதிகரிக்கப்பண்ணியவர்களும் இருக்கிறார்கள்.

தவிர யாழ்ப்பாணத்தில் இப்போது ஆவாகுழு என இயங்கும் வன்முறைக்குழு சன்னா குழு எனும்பெயரில்தான் இயங்கியது அதன் வன்முறைத்தலைமை படிச்சது யாழ் இந்துக்கல்லூரியில்தான் அவனது பெயர் பிரசன்னா இப்போ சுவிஸ் நாட்டில் வாழ்கிறான் அவனது எடுபிடிகளாகத் திரிந்தவர்களில் பலர் யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பவர்கள். 

அதைப்பற்றியும் ஒருக்கால் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் பட்டிமன்றம் நடாத்தலாம்தானே.

ஏன் கடந்த பத்துவருடத்துக்கு மேலாக மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழரசுகட்சியின் தலைவராக இருக்கிறார்.

கடந்தமாதம் நடந்த தலைமைக்கான தேர்தலில் முறைகேடுகள் நடந்தன யாப்பு விதிகளின்படி இத்தேர்தல் நடைபெறவில்லை என வழக்காடினார்களே அப்போதுதான் அந்த யாப்பில் என்ன எழுதி இருக்கு எனப்பொதுவெளிக்குத் தெரிந்தது.

அதில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் இரண்டுவருடத்துக்குமேல் பதவி வகிக்க முடியாது. பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை நூத்தி அறுபதுபேர்தான் ஆனால் வாக்களித்தவர்கள் அதைவிட அதிகம். 

ஆனால் நீதிமன்றம் சென்றவர்கள் என்ன சொன்னார்கள் எனத்தெரியுமா நாம் தெரிவுசெய்த செயலாளரை ஏற்று நடைமுறைப்படுத்தினால் சிறீதரன் தலைவராக முடியும் என.

அப்படியாகில் தங்களுக்குச் சார்பாக நடந்தால் யாப்புவிதிகள் தூக்கிவீசப்படும் .

இதைபத்தியும் யாழ் இந்து பேசலாமே. ஏன் புலம்பெயர்களை நஞ்சு குடித்துச்சாகச்சொல்லுறியள்.

தமிழர் பகுதியிலிருந்து மேல்படிப்புப்படித்து வெளிநாடுகளுக்குப் புறப்படுபவர்களில் இந்த முதல் நிலைப்பாடசாலைகளில் படித்தவர்களே அதிகம் அதைப்பற்றியும் பேசலாமே காரணம் கணக்கெடுத்தல் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து வெளியேறியவர்களே அதிகமாக இருக்கும். 

அதுசரி யாழ் இந்துக்கல்லூரி எனப்பீத்திக்கொள்கிறார்களே இவர்கள் என்ன அப்பாடசாலையின் அசிரியர்கள் படிப்பித்ததுடன் போய் பரீட்சை எழுதிப் பாசாகினவயளோ யாழ்ப்பாணத்தில் மூலை முடுக்குகளில் உள்ள ரியூட்டரிக் கொட்டில் வாங்கில் தேய்க்காமலா இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/3/2024 at 09:36, ஈழப்பிரியன் said:

இந்தக் காணொளி பல நாட்களாக உலா வந்தாலும் யாழில் யாரும் இணைத்த மாதிரி தெரியவில்லை.

யாராவது முதலே இணைத்திருந்தால் நிர்வாகம் இதை நீக்கிவிடவும்.

எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தது.

இந்த மாணவர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும்.

இங்க என்ன பேச வேண்டும்

என்ன பேசக் கூடாது

என்று சொல்லி அனுப்பியே இப்படி பேசுகிறார்கள் என்றால் முழு சுதந்திரமும் கொடுத்திருந்தால் எப்படி முழங்கியிருப்பார்கள்.

March 16 வலை உலகில் நான் பதிவிட்டிருந்தேன் ...கடை விரித்தேன் கொள்வாரில்லை😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/3/2024 at 12:49, Kapithan said:

அவர்களை மட்டம் தட்டுவது எனது நோக்கம் அல்ல.

அவர்களுக்கு அரசியல் தெரியுமா?  தெரியுமென்று நான் நம்பவில்லை.

ஏனென்றால் அவர்களின் வயதைக் கடந்துதான் நான் வந்துள்ளேன். 

இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தானே நாலு தலைமுறைகளை இழந்தோம்? 

அவர்களைத் தெளிவாகச் சிந்திக்கப் பழக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். 

அவர்கள் தெளிவாக தான் இருக்கின்றனர்...அவர்களுக்கு புலம் பெயர் தமிழர்களையும் கையாள தெரிகிறது ....சிங்கள அடக்கு முறையாளர்களுடனும் வாழவும் தெரிகிறது ...

அவர்களை உசுப்பெற்றுவது அவர்களை ஆட்சி செய்யும் அரச இனவாதிகள்....
அவர்களின் தெளிவான சிந்தனைக்கு  தடை போடுவது யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்களின் மேடைப்பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மையில் இவர்களின் அறிவுத்திறன் சமகால புலம்பெயர் , உள்நாட்டு அரசியலை உணர்ந்திருக்குமானால் அதற்குப் பாராட்டுக்கள். ஆனால் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு லண்டன் மற்றும் கனடா பழைய மாணவர் ஒன்றியங்களினால் போகும் தொகையும் அவர்கள் பெறும் நன்மைகளும் கொஞ்சம் அல்ல. அப்படியிருந்தும் நன்றி சிறிதும் இன்றி புலம்பெயர் தமிழர்களின் செயல்பாடுகளை கொச்சைப்படுத்துவது நன்றாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, putthan said:

அவர்கள் தெளிவாக தான் இருக்கின்றனர்...அவர்களுக்கு புலம் பெயர் தமிழர்களையும் கையாள தெரிகிறது ....சிங்கள அடக்கு முறையாளர்களுடனும் வாழவும் தெரிகிறது ...

அவர்களை உசுப்பெற்றுவது அவர்களை ஆட்சி செய்யும் அரச இனவாதிகள்....
அவர்களின் தெளிவான சிந்தனைக்கு  தடை போடுவது யார்?

அவர்களை உசுப்பேற்றாமல் விட்டாலே போதும். அவர்கள் தங்களுடைய காலக் கடமையைச் செய்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவர்களின் மேடைப்பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மையில் இவர்களின் அறிவுத்திறன் சமகால புலம்பெயர் , உள்நாட்டு அரசியலை உணர்ந்திருக்குமானால் அதற்குப் பாராட்டுக்கள். ஆனால் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு லண்டன் மற்றும் கனடா பழைய மாணவர் ஒன்றியங்களினால் போகும் தொகையும் அவர்கள் பெறும் நன்மைகளும் கொஞ்சம் அல்ல. அப்படியிருந்தும் நன்றி சிறிதும் இன்றி புலம்பெயர் தமிழர்களின் செயல்பாடுகளை கொச்சைப்படுத்துவது நன்றாக இல்லை.

யாழ் இந்து மாணவர்கள் மட்டுமல்ல ...ஏனையவர்களும் அப்படி தான் ..ஆனால் பல தாயக மக்கள் புலம்பெயர் மக்களின் செயல்களை வரவேற்கின்றனர்..

19 hours ago, Kapithan said:

அவர்களை உசுப்பேற்றாமல் விட்டாலே போதும். அவர்கள் தங்களுடைய காலக் கடமையைச் செய்வார்கள். 

அவர்களை நாங்கள் உசுப்பேற்றவில்லை ...அவர்களாகவே தங்கள் கடமைகளை செய்கின்றனர்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.