Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாலம் இடிந்து விழுந்து விபத்து
26 மார்ச் 2024, 08:27 GMT
புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது.

மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது.

300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது.

போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றிவருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன.

காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது

கப்பலில் இருந்த ஊழியர்களுக்கு காயம் இல்லை

கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது

சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற கன்டெய்னர் கப்பல் மோதியதை கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு உறுதிப்படுத்துகிறது.

"சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று அது கூறுகிறது.

கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று அது மேலும் கூறுகிறது.

அமெரிக்க கப்பல்

பட மூலாதாரம்,REUTERS

பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன?

இது தெளிவாக ஒரு பெரிய சம்பவமாகும். மேலும் அவசர சேவைகள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில், ஒரு பெரிய கன்டெய்னர் கப்பல் இந்த பாலத்தில் மோதியது. பின்னர் என்ந நடந்தது என்பதை காட்சிகள் கூறுகின்றன.

இந்தகப் கப்பல் உண்மையில் சிங்கப்பூரில் கொடியுடன் வந்தது என்பது தெரியவருகிறது. பெரும்பாலும் கன்டெய்னர் கப்பல்களில் வெவ்வேறு நாடுகளின் கொடிகள் உள்ளன - அதாவது, அவை அந்த நாட்டைச் சேர்ந்தவை என்று அர்த்தமல்ல. அவை எங்கிருந்து கண்காணிக்கப்படுகின்றன என்பதை இதன் பொருளாகும்.

https://www.bbc.com/tamil/articles/cgxdgqjxj14o

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது.

சபிக்கப்பட்ட நாட்டின் பெயரை இழுத்தாலே அவ்வளவுதான் பேய் பிடித்து விடும் 😃

  • கருத்துக்கள உறவுகள்

usa-750x375.webp

அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விபத்து!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் இன்று அதிகாலை படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் கப்பல் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இந்த கப்பல் இலங்கை நோக்கிச் சென்றதாகவும் டாலி என்ற கப்பல் மோதியதில் 1.6 மைல் நீளமுள்ள பாலம் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது.

இந்த நிகழ்வின் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அத்துடன் பாலம் இடிந்து வீழ்ந்ததில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்படாத போதிலும், விபத்தினால் 7 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்றும் மேலும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1375067

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Baltimore Bridge Collapse: Francis Scott bridge collapses after ship collision, 7 missing 

  • கருத்துக்கள உறவுகள்

இது இங்கு இப்பொழுது செய்திகளில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. இப்படியான பல கப்பல்களில் எங்களவர்களும் மாலுமிகளாக வேலை செய்வதுண்டு. ஆனால், இந்த துறைமுகத்தில் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியே வரும் வரை அந்த துறைமுகத்தை சேர்ந்த ஒருவரே கப்பலே கையாளுவார் என்று செய்திகளில் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

How does a cargo ship magically lose all its power? Something seems off about this.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

How does a cargo ship magically lose all its power? Something seems off about this.

கீழே உள்ள ஒரு குறிப்பை ஒருவர் எழுதியிருந்தார். இங்கு சில கடலோடிகள் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். அவர்களால் இதை உறுதிப்படுத்த முடியும்:

I heard on the radio that the ship reported to the shore that they lost propulsion control shortly after they left port and were warning they might hit the bridge. Sounds plausible since watching the video, you can see the ship lights go out then come back on shortly before the collision.

Not sure though how much time there was between the alleged reporting and the collision, or if bridge could have been shut down and evacuated in that time frame.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரசோதரன் said:

எந்தக் கப்பல் என்றால் என்ன ஒரு நாட்டுக்குள் போகும்போது குறிப்பிட்ட கடல் எல்லையில் இருந்து சிறிய படகில்வந்து எந்த துறைமுகத்துக்கான போட்கப்ரின் என அழைக்கப்படுபவரின் கட்டளைப்படி தான் கப்பல் கொண்டுபோய்க் கட்டப்படும்.

அதே மாதிரி துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டுபோய் விடுவதும் போடகப்ரனின் பொறுப்பே.

இதே கட்டளைகளைத் தான் விமான ஓட்டிகளும் பின்பற்றுகிறார்கள்.

குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் கொன்றோல்ரவரில் இருப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும்.

இந்தக் கப்பல் வர முதலே கப்பல் பற்றிய சகல தரவுகளும் அந்த துறைமுகத்துக்கு கிடைக்கும்.பெரிய கப்பல் தண்ணீர் போதாது கீழே மேலே முட்டும் என்பது துறைமுகத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்து தான் அனுபதிப்பார்கள்.

சாமானுடன் வந்த கப்பல் வெறுமையாக போனால் பல அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும்.

இப்போது அது வந்த பாலத்தை கடக்க முடியுமா என்றதை எல்லாம் துறைமுகத்தவர் கணிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் இந்திய குழு இயக்கிய கப்பல் பாலத்தில் மோத யார் காரணம்? கப்பல் நிறுவனம் தகவல்

கப்பல் விபத்து

பட மூலாதாரம்,EPA

26 மார்ச் 2024, 08:27 GMT
புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கப்பல் மோதியதில் பாலம் ஒன்று இடிந்து ஆற்றில் விழுந்தது.

ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாலம் முழுவதுமாக தண்ணீரில் விழுவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது.

மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது. 300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் ஆவர்.

போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றி வருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன.

கப்பல் மோதிய போது பாலத்தில் சென்ற வாகனங்கள் என்ன ஆயின? அந்த நேரத்தில் பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் கதி என்ன? மோதல் நிகழ்ந்த போது கப்பல் எப்படி இருந்தது? கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் என்ன கூறுகிறது? என்பது குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

Play video, "அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது", கால அளவு 1,23
01:23p0hlxvxc.jpg
காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது

கப்பலில் இருந்த ஊழியர்களுக்கு காயம் இல்லை

கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது

சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற கன்டெய்னர் கப்பல் மோதியதை கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு உறுதிப்படுத்துகிறது.

"சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று அது கூறுகிறது.

கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று அது மேலும் கூறுகிறது.

அமெரிக்க கப்பல்

பட மூலாதாரம்,REUTERS

பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன?

இது தெளிவாக ஒரு பெரிய சம்பவமாகும். மேலும் அவசர சேவைகள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில், ஒரு பெரிய கன்டெய்னர் கப்பல் இந்த பாலத்தில் மோதியது. பின்னர் என்ந நடந்தது என்பதை காட்சிகள் கூறுகின்றன.

இந்தகப் கப்பல் உண்மையில் சிங்கப்பூரில் கொடியுடன் வந்தது என்பது தெரியவருகிறது. பெரும்பாலும் கன்டெய்னர் கப்பல்களில் வெவ்வேறு நாடுகளின் கொடிகள் உள்ளன - அதாவது, அவை அந்த நாட்டைச் சேர்ந்தவை என்று அர்த்தமல்ல. அவை எங்கிருந்து கண்காணிக்கப்படுகின்றன என்பதை இதன் பொருளாகும்.

பாலம்

பட மூலாதாரம்,EPA

மேரிலேண்ட் மாநிலத்தில் அவசரநிலை

பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மேரிலேண்ட் மாநிலத்தில் அவசர நிலையை ஆளுநர் வெஸ் மூர் அறிவித்துள்ளார்.

"பைடன் நிர்வாகத்திலிருந்து மத்திய (Federal) சேவைகளை விரைவாகப் பெறுவம் வகையில் நாங்கள் ஒரு இடைநிலைக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்." என்று அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டோரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும், அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

மார்ஸ்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மார்க்ஸ் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பல்

பாலத்தில் மோதிய கப்பல் மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

கப்பல் நிறுவனமான மார்ஸ்க், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.

"பால்டிமோரில் நடந்தது பற்றி நாங்கள் திகிலடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்," என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

கப்பலில் மார்ஸ்க் பணியாளர்கள் யாரும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்து ஏற்பட்டது எப்படி?

பாலத்தில் மோதிய கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குழுமத்திற்கான தகவல்தொடர்புகளை கையாளும் அதிகாரியான பால் ஆடம்சன், "கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடன் 22 பேர் இருந்தனர்" எனத் தெரிவித்தார்.

கப்பல் குழுவைச் சேர்ந்த ஒருவரது தலையில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஆனால் காயங்கள் ஏதும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

மியாமி மற்றும் ஓக்லஹோமாவில் இருந்து, நிறுவனத்தின் அமெரிக்க குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பால்டிமோர் சென்று விசாரித்து வருகின்றனர் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் கப்பல் விபத்து

பட மூலாதாரம்,BALTIMORE FIRE STATION

நீருக்குள் மூழ்கிய வாகனங்களின் கதி என்ன?

பால்டிமோர் தீயணைப்புத் தலைவர் கூறுகையில், "எங்கள் சோனார் கருவி தண்ணீரில் வாகனங்கள் மூழ்கி இருப்பதைக் கண்டறிந்துள்ளதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்", ஆனால் எத்தனை வாகனங்கள் உள்ளன என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறார்.

பணியாளர்கள் இன்னும் கப்பலில் இருப்பதாக அவர் கூறுகிறார். "நாங்கள் கடலோர காவல்படையுடன் தொடர்பு கொண்டுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.

சில தொழிலாளர்கள் இன்னும் பாலத்தில் இருப்பதாக அவரது குழுவிடம் கூறப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பாலத்தில் பணி செய்த ஒப்பந்ததாரர்கள் என்ன ஆனார்கள்?

அமெரிக்க கடலோர காவல்படையுடன் இணைந்து மேரிலாந்தின் போக்குவரத்துச் செயலர் பால் வைடெஃபெல்ட்டும் செய்தியாளர்களுக்கு தகவல்களை வழங்கினார்.

பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அதில் பணிபுரிந்த ஒப்பந்ததாரர்கள், "கான்கிரீட் தளத்தில் சில பழுது நீக்கும் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்" என்று வைடெஃபெல்ட் கூறினார்.

தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடர்வதால் பால்டிமோர் துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்க கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தண்ணீரில் உயிர் பிழைத்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பதைத் தேடுவதே முதன்மை பணி. சம்பவ இடத்தில் மூன்று சிறிய படகுகள், 87 அடி ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன." என்றார்.

இதுவரை உயிரிழப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வைடெஃபெல்ட் கூறினார். பாலம் இடிந்து விழுந்ததற்கு என்ன காரணம் என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது என்றும் கூறினார்.

அமெரிக்காவில் கப்பல் விபத்து

பட மூலாதாரம்,BALTIMORE FIRE STATION

பாலத்தின் மோதும் முன்பே கப்பல் உந்து சக்தியை இழந்தது

அரசாங்க நிறுவனமான சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செக்யூரிட்டி ஏஜென்சி (CISA )யின் வகைப்படுத்தப்படாத மெமோ, சிங்கப்பூர் கொடியுடன் இருந்த டாலி கப்பல் "உந்து சக்தியை இழந்து" அதன் பின்னரே "பாலத்தின் துணைக் கோபுரத்தில்" மோதியதை உறுதிப்படுத்தியுள்ளது.

கப்பல் நிறுவனம் கூறுவது என்ன?

கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சிங்கப்பூர் கொடி தாங்கிய சரக்கு கப்பல் டாலி, மார்ச் 26ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு இரண்டு மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் தூண்களில் ஒன்றின் மீது மோதியது.

மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களுமே இதற்கு பொறுப்பானவர்கள். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கே, எவ்வித மாசும் ஏற்படவில்லை. சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கப்பலில் 22 பணியாளர்கள் உள்ளனர் என்றும் அனைவரும் இந்தியர்கள் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்க கப்பல் விபத்து

பட மூலாதாரம்,LSEG

படக்குறிப்பு,

கப்பல் விபத்து நிகழ்ந்த பொழுதை காட்டும் வரைபடம்

சினெர்ஜி மரைன் குழும அதிகாரி தகவல்

இதேபோல் சினெர்ஜி மரைன் குழுமத்தின் செய்தி அதிகாரி பகிர்ந்துள்ள தகவலில், "மோதல் காரணமாக பணியாளர்களில் ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது, சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பணியாளர்கள் குழுவினரிடம் ஃபெடரல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 22 பணியாளர்களில் 16 பேருடன் அவர்களின் குடும்பத்தினர் தொடர்புகொள்ள முடிந்தது.

விபத்து குறித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் குழுவினருடன் பேச முடியாத நிலை உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cgxdgqjxj14o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

US Bridge Collapse: கப்பலில் இருந்து வந்த 'May Day' குரல்; சுதாரிப்பதற்குள் தரைமட்டமான Bridge

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

எந்தக் கப்பல் என்றால் என்ன ஒரு நாட்டுக்குள் போகும்போது குறிப்பிட்ட கடல் எல்லையில் இருந்து சிறிய படகில்வந்து எந்த துறைமுகத்துக்கான போட்கப்ரின் என அழைக்கப்படுபவரின் கட்டளைப்படி தான் கப்பல் கொண்டுபோய்க் கட்டப்படும்.

அதே மாதிரி துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டுபோய் விடுவதும் போடகப்ரனின் பொறுப்பே.

இதே கட்டளைகளைத் தான் விமான ஓட்டிகளும் பின்பற்றுகிறார்கள்.

குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் கொன்றோல்ரவரில் இருப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும்.

இந்தக் கப்பல் வர முதலே கப்பல் பற்றிய சகல தரவுகளும் அந்த துறைமுகத்துக்கு கிடைக்கும்.பெரிய கப்பல் தண்ணீர் போதாது கீழே மேலே முட்டும் என்பது துறைமுகத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்து தான் அனுபதிப்பார்கள்.

சாமானுடன் வந்த கப்பல் வெறுமையாக போனால் பல அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும்.

இப்போது அது வந்த பாலத்தை கடக்க முடியுமா என்றதை எல்லாம் துறைமுகத்தவர் கணிக்க வேண்டும்.

தகவல்களுக்கு நன்றி....👍 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலம் உடைந்து வீழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

world-news-2.jpg

அமெரிக்காவின் Baltimore நகரிலுள்ள Francis Scott Key பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

2.6 கிலோமீற்றர் நீளமான இந்த பாலத்தின் தூணொன்றை சரக்கு கப்பலொன்று மோதியதையடுத்து பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது.

பாலத்துடன் மோதுவதற்கு முன்னர் அந்த கப்பலில் மின்சார கோளாறு ஏற்பட்டிருந்ததாகவும் அபாய உதவி அழைப்பை அது விடுத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Francis Scott Key பாலத்தை கப்பல் மோதிய போது, அதில் ஏராளமான வாகனங்கள் பயணித்துள்ளன.

இலங்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்த கப்பலில், துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்சார விநியோகம் முழுவதும் அற்றுப்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/297190

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களின் உடலங்களை தேடும் பணி ஆரம்பமாகி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவில் இந்திய குழு இயக்கிய கப்பல் பாலத்தில் மோத யார் காரணம்? கப்பல் நிறுவனம் தகவல்

கப்பல் விபத்து

பட மூலாதாரம்,EPA

26 மார்ச் 2024, 08:27 GMT
புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கப்பல் மோதியதில் பாலம் ஒன்று இடிந்து ஆற்றில் விழுந்தது.

ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாலம் முழுவதுமாக தண்ணீரில் விழுவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது.

மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது. 300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் ஆவர்.

போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றி வருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன.

கப்பல் மோதிய போது பாலத்தில் சென்ற வாகனங்கள் என்ன ஆயின? அந்த நேரத்தில் பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் கதி என்ன? மோதல் நிகழ்ந்த போது கப்பல் எப்படி இருந்தது? கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் என்ன கூறுகிறது? என்பது குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

Play video, "அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது", கால அளவு 1,23
 
01:23p0hlxvxc.jpg
காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது

கப்பலில் இருந்த ஊழியர்களுக்கு காயம் இல்லை

கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது

சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற கன்டெய்னர் கப்பல் மோதியதை கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு உறுதிப்படுத்துகிறது.

"சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று அது கூறுகிறது.

கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று அது மேலும் கூறுகிறது.

அமெரிக்க கப்பல்

பட மூலாதாரம்,REUTERS

பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன?

இது தெளிவாக ஒரு பெரிய சம்பவமாகும். மேலும் அவசர சேவைகள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில், ஒரு பெரிய கன்டெய்னர் கப்பல் இந்த பாலத்தில் மோதியது. பின்னர் என்ந நடந்தது என்பதை காட்சிகள் கூறுகின்றன.

இந்தகப் கப்பல் உண்மையில் சிங்கப்பூரில் கொடியுடன் வந்தது என்பது தெரியவருகிறது. பெரும்பாலும் கன்டெய்னர் கப்பல்களில் வெவ்வேறு நாடுகளின் கொடிகள் உள்ளன - அதாவது, அவை அந்த நாட்டைச் சேர்ந்தவை என்று அர்த்தமல்ல. அவை எங்கிருந்து கண்காணிக்கப்படுகின்றன என்பதை இதன் பொருளாகும்.

பாலம்

பட மூலாதாரம்,EPA

மேரிலேண்ட் மாநிலத்தில் அவசரநிலை

பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மேரிலேண்ட் மாநிலத்தில் அவசர நிலையை ஆளுநர் வெஸ் மூர் அறிவித்துள்ளார்.

"பைடன் நிர்வாகத்திலிருந்து மத்திய (Federal) சேவைகளை விரைவாகப் பெறுவம் வகையில் நாங்கள் ஒரு இடைநிலைக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்." என்று அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டோரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும், அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

மார்ஸ்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மார்க்ஸ் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பல்

பாலத்தில் மோதிய கப்பல் மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

கப்பல் நிறுவனமான மார்ஸ்க், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.

"பால்டிமோரில் நடந்தது பற்றி நாங்கள் திகிலடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்," என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

கப்பலில் மார்ஸ்க் பணியாளர்கள் யாரும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்து ஏற்பட்டது எப்படி?

பாலத்தில் மோதிய கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குழுமத்திற்கான தகவல்தொடர்புகளை கையாளும் அதிகாரியான பால் ஆடம்சன், "கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடன் 22 பேர் இருந்தனர்" எனத் தெரிவித்தார்.

கப்பல் குழுவைச் சேர்ந்த ஒருவரது தலையில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஆனால் காயங்கள் ஏதும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

மியாமி மற்றும் ஓக்லஹோமாவில் இருந்து, நிறுவனத்தின் அமெரிக்க குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பால்டிமோர் சென்று விசாரித்து வருகின்றனர் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் கப்பல் விபத்து

பட மூலாதாரம்,BALTIMORE FIRE STATION

நீருக்குள் மூழ்கிய வாகனங்களின் கதி என்ன?

பால்டிமோர் தீயணைப்புத் தலைவர் கூறுகையில், "எங்கள் சோனார் கருவி தண்ணீரில் வாகனங்கள் மூழ்கி இருப்பதைக் கண்டறிந்துள்ளதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்", ஆனால் எத்தனை வாகனங்கள் உள்ளன என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறார்.

பணியாளர்கள் இன்னும் கப்பலில் இருப்பதாக அவர் கூறுகிறார். "நாங்கள் கடலோர காவல்படையுடன் தொடர்பு கொண்டுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.

சில தொழிலாளர்கள் இன்னும் பாலத்தில் இருப்பதாக அவரது குழுவிடம் கூறப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பாலத்தில் பணி செய்த ஒப்பந்ததாரர்கள் என்ன ஆனார்கள்?

அமெரிக்க கடலோர காவல்படையுடன் இணைந்து மேரிலாந்தின் போக்குவரத்துச் செயலர் பால் வைடெஃபெல்ட்டும் செய்தியாளர்களுக்கு தகவல்களை வழங்கினார்.

பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அதில் பணிபுரிந்த ஒப்பந்ததாரர்கள், "கான்கிரீட் தளத்தில் சில பழுது நீக்கும் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்" என்று வைடெஃபெல்ட் கூறினார்.

தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடர்வதால் பால்டிமோர் துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்க கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தண்ணீரில் உயிர் பிழைத்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பதைத் தேடுவதே முதன்மை பணி. சம்பவ இடத்தில் மூன்று சிறிய படகுகள், 87 அடி ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன." என்றார்.

இதுவரை உயிரிழப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வைடெஃபெல்ட் கூறினார். பாலம் இடிந்து விழுந்ததற்கு என்ன காரணம் என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது என்றும் கூறினார்.

அமெரிக்காவில் கப்பல் விபத்து

பட மூலாதாரம்,BALTIMORE FIRE STATION

பாலத்தின் மோதும் முன்பே கப்பல் உந்து சக்தியை இழந்தது

அரசாங்க நிறுவனமான சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செக்யூரிட்டி ஏஜென்சி (CISA )யின் வகைப்படுத்தப்படாத மெமோ, சிங்கப்பூர் கொடியுடன் இருந்த டாலி கப்பல் "உந்து சக்தியை இழந்து" அதன் பின்னரே "பாலத்தின் துணைக் கோபுரத்தில்" மோதியதை உறுதிப்படுத்தியுள்ளது.

கப்பல் நிறுவனம் கூறுவது என்ன?

கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சிங்கப்பூர் கொடி தாங்கிய சரக்கு கப்பல் டாலி, மார்ச் 26ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு இரண்டு மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் தூண்களில் ஒன்றின் மீது மோதியது.

மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களுமே இதற்கு பொறுப்பானவர்கள். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கே, எவ்வித மாசும் ஏற்படவில்லை. சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கப்பலில் 22 பணியாளர்கள் உள்ளனர் என்றும் அனைவரும் இந்தியர்கள் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்க கப்பல் விபத்து

பட மூலாதாரம்,LSEG

படக்குறிப்பு,

கப்பல் விபத்து நிகழ்ந்த பொழுதை காட்டும் வரைபடம்

சினெர்ஜி மரைன் குழும அதிகாரி தகவல்

இதேபோல் சினெர்ஜி மரைன் குழுமத்தின் செய்தி அதிகாரி பகிர்ந்துள்ள தகவலில், "மோதல் காரணமாக பணியாளர்களில் ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது, சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பணியாளர்கள் குழுவினரிடம் ஃபெடரல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 22 பணியாளர்களில் 16 பேருடன் அவர்களின் குடும்பத்தினர் தொடர்புகொள்ள முடிந்தது.

விபத்து குறித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் குழுவினருடன் பேச முடியாத நிலை உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cgxdgqjxj14o

தமிழ் bbc க்குள் நிறைய மெண்டல்கள் உள்ளே புகுந்து விட்டன போல் உள்ளது ஒரே விடயத்தை எத்தனை தரம் எழுதுகிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை பார்த்த காணொளிகளில் கப்பல் பாலத்தைக் கடக்கும்போது பாலத்தில் முட்டி மோதியதாக தெரியவில்லை.

ஆனால் கடக்கும் நேரத்தில் விழக்குகள் அணைந்து மீண்டும் எரிகின்றன.

பாலத்தைக் கடந்த கப்பல் பின்நோக்கி வந்து பாலத்தின் தூண்களை இடிப்பதால்த் தான் பாலம் உடைந்து விழுவது போல உள்ளது.

நேரே போன கப்பல் எப்படி பின்நோக்கி வந்தது என்பது தெரியவில்லை.வாய்ப்பும் இல்லை.

ஒருவேளை முழு இயந்திரமும் நின்றாலே போன பக்கத்துக்கே மெதுவாக போய் நிற்கும்.

கப்பல் பின்நோக்கி வருவதாக இருந்தால் கப்பலின் பாரிய காத்தாடி 180 பாகை சுற்ற வேண்டும்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு திரும்பவும் மின்சாரம் வந்த தருணம் ஏதோ ஒரு மர்மம் நடந்துள்ளது.

முழு விசாரணைகளில் தெரியவரும்.பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

பாலத்தைக் கப்பல் கடந்ததாக ஒரு காணொளியிலும் இல்லையே? எந்த வீடியோவைச் சொல்கிறீர்கள்? கப்பலின் முன்பகுதி (bow) தூணுடன் முட்டுவதை தூரத்தில் இருந்து எடுத்த வீடியோக்கள் காட்டாது, அவற்றின் கோணம் காரணமாக அப்படி இருக்கலாம். ஆனால், பாலம் வீழ முன்னர் கப்பலின் முன்பாகம் பாலத்தின் தூணின் பின்னால் இருப்பது தெளிவாகத் தெரிகிறதே?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

நீங்கள் சொல்வது தான் சரி.

இப்போ தான் சிறிய திரையில் இருந்து பெரிய திரைக்கு போட்டுப் பார்த்தேன்.

சீவ் எஞ்சினியர் வீல் பிடித்தவர் போட்கப்ரன் தான் விடை சொல்ல வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க கப்பல் விபத்து: ஏராளமான உயிர்களை காப்பாற்றிய கடைசி நேர அழைப்பு - என்ன நடந்தது?

கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

27 மார்ச் 2024, 08:34 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

948 அடி நீள கன்டெய்னர் கப்பலான டாலியின் குழுவினர் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும்போது, மிகவும் தாமதமாகிவிட்டது.

பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர் நகரத்தின் சின்னமான பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தது.

அது நள்ளிரவு நேரம். கப்பலின் விளக்குகள் திடீரென அணைந்ததால், கப்பலில் இருந்த பணியாளர்கள் இருளில் மூழ்கினர்.

கப்பல் இறந்துவிட்டது - மின்னணு சாதனங்கள் ஏதும் இல்லை. இயந்திரம் செயலிழந்துவிட்டது. கப்பலில் இருந்தவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். நடப்பது எதையும் தடுக்க முடியவில்லை.

கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்த கப்பல் மாலுமிகள்

சிக்கலைச் சரிசெய்து மீண்டும் கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தோல்வியுற்றன. பல சோதனை முயற்சிகள் செய்யப்பட்டதால் ஏராளமான அலாரங்கள் ஒலித்தன.

கப்பலில் இருந்த ஒரு உள்ளூர் மாலுமி வெறித்தனமாக கட்டளையிட்டார். சுக்கான் துறைமுகத்திற்கு கப்பலைத் திருப்பவும், பாலத்தை நோக்கி நகர்வதைத் தடுக்க நங்கூரத்தை இறக்கவும் பணியாளர்களிடம் கூறினார்.

எமர்ஜென்சி ஜெனரேட்டர் ஆன் செய்யப்பட்டதாக நம்பப்பட்டாலும், கப்பல் அதன் என்ஜின்களின் திறனை மீண்டும் பெறவில்லை.

விமானிகள் வேறு வழியின்றி தவித்தனர். உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.30க்கு சற்று முன், அவர்கள் கடைசி நேர அவசர அழைப்பை (Mayday Call) விடுத்தனர். கப்பல் மோதப்போகிறது என்று எச்சரித்தனர்.

"ஒரு கப்பல் நெருங்கி வருகிறது, அது திசைமாற்றி கட்டுப்பாட்டை இழந்துவிட்டது," என்று மேரிலாந்து போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர் ரேடியோ டிராஃபிக்கில் சிறிது நேரத்திற்குப் பிறகு கூறுவதைக் கேட்க முடிந்தது.

பாலத்தின் மீது மோதிய கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பல உயிர்களை காப்பாற்றிய அவசர அழைப்பு

"நீங்கள் அதைக் கட்டுப்படுத்தும் வரை, நாங்கள் எல்லா போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும்." என்று அவர் கூறிக் கொண்டிருந்தார்.

மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கப்பல் குழுவினரை "ஹீரோக்கள்" என்று பாராட்டியதற்கு இந்த அவசர அழைப்புதான் காரணம். அவர்களின் விரைவான நடவடிக்கை "உயிர்களைக் காப்பாற்றியது" என்று கூறினார். ஏனெனில் அழைப்புக்கும் மோதலுக்கும் இடையிலான இரண்டு நிமிடங்களில் பாலத்தின் மீது வாகனப் போக்குவரத்தை அதிகாரிகளால் நிறுத்த முடிந்தது.

ஆனாலும், 2.4 கிமீ நீள பாலத்தின் மீது ஒரு கான்கிரீட் தூணில் டாலி கப்பல் மோதுவதை அவர்களால் நிறுத்த முடியவில்லை. படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இருண்ட, குளிர்ந்த நீரில் துண்டு துண்டாக இடிந்து விழுந்தது.

பாலத்தில் பணிபுரியும் ஒரு சாலைக் குழுவைச் சேர்ந்த 6 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேரிலேண்ட் மக்களுக்கு முக்கியமான பாலம்

ஆறு தொழிலாளர்கள் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளின் குடிமக்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிபிசி இதை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை. கருத்துக்காக தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளது.

கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள். இந்தியாதான் உலகளாவிய கடல்வழித் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கப்பலின் பணியாளர்கள் யாருக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

47 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது, ஆளுநர் மூர் உட்பட நகரத்தில் பலரை உலுக்கியது.

"நாள்தோறும் சுமார் 30,000 மேரிலேண்ட் மக்களுக்கு இது ஒரு வழக்கமான பயணப் பாதையாகும்.

"47 ஆண்டுகளுக்கும் மேலாக, இது எங்களுடன் இருந்தது." என்று ஆளுநர் மூர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

டாலி கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைவரான ஜெனிஃபர் ஹோமண்டி, புலனாய்வாளர்கள் இப்போது பயணத் தரவுப் பதிவேட்டில் இருந்து தரவை ஆய்வு செய்ய முற்படுவார்கள் என்று கூறினார்.

செவ்வாய்க் கிழமை காலை பால்டிமோரில் சூரியன் உதித்தபோது, பாலத்திற்கு அருகிலுள்ள பலதரப்பட்ட மக்கள் பாலத்தின் மீது கப்பல் மோதிய காட்சியைக் கண்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

"நான் அதை உணர்ந்தேன்... வீடு முழுவதும் அதிர்ந்தது," என்று தண்ணீருக்கு அருகில் வசிக்கும் ஜான் ஃபிளான்ஸ்பர்க் பிபிசியிடம் கூறினார்.

ஆளுநர்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

நிகழ்விடத்தில் மேரிலேண்ட் மாநில ஆளுநர் வெஸ் மூர்.

பொருளாதார சிக்கல் ஏற்படும் அபாயம்

காணாமல் போனவர்களைத் தேடுவதில் தங்கள் கவனம் உள்ளது என்று அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினாலும், இந்த சம்பவம் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் மிகவும் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றான பால்டிமோர் துறைமுகத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேரிலாந்து செனட்டர் பென் கார்டின் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீர்வழிப்பாதையை மீண்டும் திறப்பது அமெரிக்க பொருளாதாரத்திற்கு "முக்கியமானதாக" இருக்கும் என்றார்.

எஃகு மற்றும் அலுமினியம் முதல் விவசாய உபகரணங்கள் வரையிலான பொருட்களுக்கான முக்கிய பிராந்திய மையமாக இந்த துறைமுகம் உள்ளது, மேலும் இது ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா உள்ளிட்ட கார் தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேரிலாண்ட் துறைமுக நிர்வாகத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு குறைந்தது 750,000 வாகனங்களை இந்தத் துறைமுகம் கையாண்டதாகக் காட்டுகிறது.

டாலி கப்பல் இப்படி விபத்தில் சிக்குவது இது முதல் முறை அல்ல.

பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் 2016 ஆம் ஆண்டில் இந்தக் கப்பல் மற்றொரு மோதலில் ஈடுபட்டது. அந்த நேரத்தில் காயங்கள் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் இல்லை.

https://www.bbc.com/tamil/articles/c72e7v8jrrro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் இயங்குவது எப்படி? குறுகிய கால்வாய்கள், பாலங்களை கப்பல் எவ்வாறு கடக்கும்?

அமெரிக்கா கப்பல் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலத்தில், கன்டெய்னர் கப்பல் மோதிய விபத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில், ஆற்றில் மூழ்கிய ஆறு பேர் உயிரிழந்தனர்.

பாலங்கள், குறுகிய கால்வாய்களை கப்பல்கள் கடப்பது எப்படி? மின் சக்தி தீர்ந்தால் அவசர நேரத்தில் கப்பலை நிறுத்துவது சாத்தியமா?

பால்டிமோர் பால விபத்து நேரிட்டது எப்படி?

அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து, மார்ச் 26ம் தேதி இரவு இலங்கை கொழும்பு நோக்கி, 300 மீட்டர் நீளமுள்ள கன்டெய்னர் சரக்கு கப்பல் புறப்பட்டுச் சென்றது.

சற்று நேரத்திலேயே கப்பலின் மின் சக்தி திடீரென இல்லாமல் போன போது, அவசர கால ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர். ஆனாலும், கப்பலை இயக்குவதற்கு தேவையான மின் சக்தி அவர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது.

இதனால், கப்பலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. துறைமுகம் அருகேயிருந்த ஒரு பாலத்தில் கப்பல் மோதியது. பாலம் இடிந்து படாஸ்கோ ஆற்றில் விழுந்ததால் பாலத்தில் சென்ற கார்களும் ஆற்றில் மூழ்கின. ஆற்றில் தத்தளித்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆறு பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற விபத்துகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன? கப்பல்களின் இயக்கம் மற்றும் அவசர காலங்களில் என்னென்ன செய்வார்கள் என, பிபிசி தமிழிடம் முன்னாள் கப்பல் கேப்டன் மற்றும் மாலுமிகள் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

கப்பலை இயக்குவது எப்படி?

அமெரிக்கா கப்பல் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கப்பல்களை இயக்குவது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சரக்கு கப்பலின் முன்னாள் கேப்டன் குமார் மற்றும் மாலுமி மதன் பிபிசி தமிழுக்கு விளக்கம் அளித்தனர்.

‘‘கப்பல்களில் பல வகைகள் உள்ளன. நிலக்கரி, விவசாய உரங்கள் எடுத்துச் செல்லும் சரக்கு கப்பல், ஆயில் டேங்கர், கன்டெய்னர் எடுத்துச் செல்லும் கப்பல் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் குரூயிஸ் கப்பல் என பல வகைகள் உள்ளன. சரக்கு கப்பலை பொருத்தவரையில், 70 முதல் 400 மீட்டர் நீளம் அளவிற்கு உள்ளன. இதில், நீளத்தை பொறுத்து, 20 முதல் ஆயிரம் பேர் வரையில் பணியாற்றுவார்கள்.

இயக்கத்தை பொருத்தவரையில், கேப்டன் தான் கப்பலின் நேவிகேஷன் எனப்படும் கப்பலை வழிநடத்தும் பணியை செய்பவர். இவருக்கு அடுத்தபடியாக தலைமை பொறியாளர் (Chief Engineer) கப்பலின் இயந்திரங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்,’’ என்கின்றனர்.

கடலில் எங்கு எத்தனை வேகத்தில் செல்ல வேண்டும் எனவும், எங்கெல்லாம் செல்லக்கூடாது என்பதை தெரிவிக்க பிரத்யேக வரைபடம் உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

‘‘இந்திய கப்பல்களுக்கு தனியாக இந்திய வழிகாட்டி வரைபடம் (Navigation Map) உள்ளது. அதேசமயம் பிரிட்டிஷ் கப்பல்கள் உலக அளவிலான தகவல்கள் அடங்கிய வரைபடத்தை கொண்டுள்ளது.

இதில், எந்தப் பகுதியில் எத்தனை ஆழம் உள்ளது, கப்பல் தரைதட்டும் வாய்ப்பு உள்ளதா? எந்ததெந்த துறைமுகங்கள் அருகே பாலங்கள் உள்ளன, அதன் உயரம் என்ன, குறுகலான கால்வாய்கள் எவை என அனைத்து தகவல்களும் அந்த டிஜிட்டல் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதைக்கொண்டு தான் கப்பல்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல், அனைத்து கப்பல்களும், விமானங்களைப் போல அருகேயுள்ள துறைமுகங்களில் தகவல்கள் கொடுக்க வேண்டும், அவர்கள் நம்மை ஜிபிஎஸ் வாயிலாக கண்காணிப்பார்கள். அவசர காலத்தில் தகவல் கொடுத்தால் துறைமுகத்தில் இருந்து உதவி செய்வார்கள்,’’ என்று கேப்டன் குமார் கூறினார்.

அவசர காலத்தில் தகவல் தொடர்பு எப்படி சாத்தியம்?

அமெரிக்கா கப்பல் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கப்பல்களில் மின் சக்தி தீர்ந்தால் என்னவாகும்? என்ற கேள்வியை நாம் முன்வைத்தோம்.

அதற்கு பதிலளித்த அவர்கள், ‘‘கப்பல்களை பொருத்தவரையில் மின் சக்திக்காக மூன்று வசதிகள் உள்ளன. கப்பல்களில் முதன்மை எரிபொருளாக டீசல் அல்லது Heavy Fuel Oil அல்லது Low Sulfur Fuel Oil ஆகிய மூன்று வகை எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இவைதான் முதன்மை எரிபொருள்.

கப்பல்களில் இந்த முதன்மை சக்தி தீர்ந்து போனால், அவசர காலத்திற்காக ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருக்கும். மூன்றாவதாக, கப்பல் இயங்காமல் போனாலும் தகவல் பரிமாற்றத்திற்காக பேட்டரிகள் இருக்கும்.

கப்பல் இயக்கத்திற்கான உந்துவிசைக்காக Propeller எனப்படும் உந்துவிசை காற்றாடியும், திசையை மாற்றுவதற்கு Rudder என்ற கருவியும் ஜெனரேட்டர்களை வைத்து இயக்க முடியும்.

முதன்மை மின் சக்தியுடன் ஜெனரேட்டரும் செயலிழந்து போனால் நம்மால் கப்பலை கட்டுப்படுத்த முடியாது, அதன் திசையையும் மாற்ற முடியாது, பேட்டரியை வைத்து தகவல் தொடர்பை மட்டுமே பயன்படுத்த முடியும்,’’ என்றனர்.

நங்கூரத்தை கொண்டு உடனடியாக கப்பலை நிறுத்த முடியுமா?

அமெரிக்க கப்பல் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

மின் சக்தி தீர்ந்துபோனால் கப்பலை நங்கூரம் கொண்டு நிறுத்துவதும் மிகவும் கடினம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கப்பல்களின் வேகத்தை நாட் – (Knot – Nautical Mile) என்ற அளவீட்டின் மூலம் அளக்கப்படுகிறது. கப்பலின் வேகத்தை பொறுத்து தான் நங்கூரம் பயன்படும். ஒரு பெரிய சரக்கு கப்பல் 2 – 4 நாட் வேகத்தில் சென்றாலே, நங்கூரத்தை வைத்து நிறுத்துவது கடினம்.

வேகம் அதிகமாக இருக்கும் போது நங்கூரத்தை பயன்படுத்தினால் நங்கூரத்தின் சங்கிலி அறுந்து பயனற்றுப்போகும். அத்துடன், கப்பலில் நங்கூரம் பொருத்தப்பட்ட பகுதியே பெரும் சேதத்திற்குள்ளாகும். இதனால், வேகத்தை பொறுத்தே நங்கூரத்தின் மூலம் கப்பலை நிறுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறுகிய கால்வாய்கள், பாலங்களை கப்பல் எப்படி கடக்கும்?

அமெரிக்கா கப்பல் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சரக்கு போக்குவரத்து பயணத்தில் சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன பல முக்கியமான கால்வாய்கள் உலகெங்கிலும் உள்ளன.

இரண்டு முக்கியமான கடல்களை அல்லது வழித்தடங்களை இணைக்க இந்த குறுகலான கால்வாய்கள் பயன்படுகின்றன.

ஆனால் சூயஸ், பனாமா போன்ற குறுகலான கால்வாய் மற்றும் பால்டிமோர், பாம்பன் போன்ற பாலங்களை கப்பல் கடந்து செல்லும் போது குறைவான இடத்தில் அதிக துல்லியத்துடன் கப்பலை இயக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சிக்கலான பகுதிகளை கப்பல்கள் எப்படி கடக்கிறது என்பதை கப்பலில் பணிபுரியும் மாலுமியான மதன் விளக்கினார்.

கடல் நீரின் மேற்பரப்பிலிருந்து நீருக்கடியில் கப்பல் எவ்வளவு ஆழத்திற்கு உள்ளது என்பதை Draft அல்லது Draught எனவும், கடல் நீரின் மேற்பரப்பிலிருந்து கப்பல் எவ்வளவு உயரத்திற்கு உள்ளது என்பதை Air Draft என்ற அளவீடுகள் மூலம் அளக்கப்படுகிறது.

கப்பல்கள் துறைமுகத்தை அடைந்ததும், அங்குள்ள பாலங்களை அந்த கப்பல் கடக்க முடியுமா முடியாதா என்பதை Draft அளவீடுகளை வைத்து தீர்மானித்த பின் தான், பாலத்தை கடக்க அனுமதியே வழங்கப்படும். அதேபோல், கப்பலின் நீளத்தை பொறுத்து தான் குறுகிய கால்வாய்களை கடக்க அனுமதி அளிக்கப்படும்.

பாலத்தையும், குறுகலான கால்வாய் பகுதிகளையும் கடக்கும் போது, அந்தந்த துறைமுகத்தை சேர்ந்த வழிகாட்டுதல்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற பைலட் ஒருவர் நமது கப்பலில் வந்து கேப்டனுக்கு வழிகாட்டுவார். அப்போது, மிக எளிதாக பாலத்தையோ, கால்வாய்களையோ கடக்க முடியும் என்றார்.

பால்டிமோர் கப்பல் விபத்திற்கான காரணம் என்ன?

அமெரிக்கா கப்பல் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவில் கப்பல் விபத்து ஏற்பட்டதற்கான சில பொதுவான காரணங்களையும் குறிப்பிடுகிறார் சரக்கு கப்பல் கேப்டன் குமார்.

இது குறித்து பேசிய அவர், ‘‘அமெரிக்காவில் விபத்து ஏற்பட்டதற்கான முழுமையாக காரணம் இன்னமும் வெளியாகவில்லை. ஆனால், விபத்திற்கான சில சாத்தியக்கூறுகளை நாம் உணர முடிகிறது.

Air Draft அளவீட்டின் படி அந்தப் பாலத்தை கடக்க அக்கப்பல் அனுமதி பெற்று லோக்கல் பைலட் உடன் பயணித்த போது, முதன்மை மின் சக்தி இல்லாமல் போனது. அப்போது, ஜெனரேட்டரின் சக்தி இஞ்ஜினின் இயக்கத்திற்கு போதுமானதாக இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

குறிப்பிட்ட வேகத்தில் வந்த அந்தக் கப்பலின் Propeller மற்றும் Rudder கருவியை இயக்க முடியாமல், கப்பலின் திசையை மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். நங்கூரம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டோ அல்லது நங்கூரம் பயன்படாத நிலை ஏற்பட்டு தான், பாலத்தின் உயரம் குறைவான பகுதியில் கப்பல் மோதியிருக்க வேண்டும். விபத்தின் வீடியோக்களை பார்க்கும் போது, இந்த பொதுவான காரணங்களை நாம் உணர முடிகிறது. இவை விபத்திற்கான சாத்தியக்கூறுகளாக இருந்திருக்கும்,’’ என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/cw4zjjl77kno

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் தனது கட்டுப்பாட்டை இழப்பது எப்படி?

ஒரு சிறிய விளக்கம். 👇

(அறிவூட்டலுக்காக மட்டும் )

ST Explains: Baltimore bridge collapse 

What could cause large vessels to lose power? 

2024-03-26T233309Z873002646RC2ST6A71J33RTRMADP3MARYLAND-INCIDENT-BRIDGE.JPG?VersionId=DU6zx.ZVpQmJWpt5F.6W1a.VKqsJzJR_&itok=NGSbL-WF
Although the vessel had reportedly dropped its anchors, it was unable to come to a stop in time and crashed into the bridge. PHOTO: REUTERS
UPDATED
 
MAR 28, 2024, 12:51 AM
 
SINGAPORE – On March 26, a Singapore-flagged vessel, Dali, crashed into a bridge in Baltimore in the United States, after the crew lost control of the ship following its loss of propulsion.

This meant that it was no longer being propelled forward by engine power. 

Although the vessel, which was being piloted, had reportedly dropped its anchors as part of its emergency procedures, it was unable to come to a stop in time and crashed into the bridge.

This was due to the momentum from its initial course of travel, said Dr Kenneth Low, an associate professor and engineering cluster director at the Singapore Institute of Technology.

The Straits Times looks at the role of pilots as vessels manoeuvre port waters, possible reasons why the Dali lost power, and what ship crews do during such emergencies.

1. What are ship pilots, and why are they needed?

The International Maritime Organisation recommends that foreign-flagged vessels hire local qualified pilots to guide their ships in and out of ports, as well as in other areas where specialised local knowledge is required.

Ships engaged in foreign trade calling at ports in Maryland must hire a local ship handling specialist, known as a pilot, to be on board to navigate the vessel safely into port, said the Association of Maryland Pilots on its websi
Roger (not his real name), a navigational officer at a major shipping company with three years of experience in navigating a container ship, said such pilots function as “local guides” for the ship’s captain to sail through ports.

Typically, local pilots do not take over the steering of a ship, as this responsibility still falls on the captain and ship crew, added Roger.

Jon (not his real name), who was a captain with about 14 years of sailing experience at an established shipping company, said that pilots normally play advisory roles and provide “very precise” navigational instructions to captains.

Like Roger, he spoke to ST on condition of anonymity. Both are Singaporeans.

As the local pilots are familiar with the waters, they usually tell captains to travel at certain speeds at various points of the journey in and out of ports and to turn the helm – the ship’s steering wheel – at certain degrees to travel in exact directions, Jon said.

In Singapore, vessels with a gross tonnage of 300 tons and above, as well as liquefied petroleum gas (LPG), liquefied natural gas (LNG), chemical tankers and passenger vessels, must engage a local pilot in order to ensure safe navigation when entering or exiting the port.

Bridge-GIF-700px_0.gif?VersionId=rqIc95BTbZpj3B6SG2nwSC5MLeJj05U6

2. What could cause vessels to lose power temporarily? 

Roger said a vessel’s temporary loss in power is typically caused by switchboard issues or a failure in its main power generation system.

The ship captain would not be able to steer the ship by moving the helm, as it is operated by a hydraulic system that requires electricity, said Dr Low.

Ships need power to reverse the flow of travel, he explained. Due to momentum, a moving ship that loses power would need to travel for a longer distance than a powered ship before coming to a stop after anchors are put down.

There are several common causes of a vessel’s electrical power generation system failure, said Mr Chong Kee Sen, emeritus president of the Institution of Engineers, Singapore.

These include a short circuit, damage to an electric transmission line, overloading in the vessel’s electrical distribution system, and failure of mechanical parts in the electrical generation system, said Mr Chong, who specialises in major industrial development projects including marine facilities.

3. Are accidents like the Dali’s common?

It is “highly unusual” for ocean-going vessels to lose power, said Dr Low.

This is because large container liners, including the one involved in the accident in Baltimore, are considered to be some of the more advanced vessels in the world, he added. They adhere to strict design, building and maintenance standards, and are usually installed with complex equipment health monitoring systems.

He said such ships may, very rarely, experience blackouts during foul weather conditions in the deep seas, but it is very unusual for them to lose power while cruising in calm waters.

Roger said that it is “very exceptional” for a ship to lose power like this, adding that the occurrence of crashes of this severity – with multiple civilian casualties – is not common.

Jon added that an emergency generator would have normally kicked in within 45 seconds, allowing the crew to steer the vessel to a safer position in most cases.

Roger said ships also need to navigate around large structures like bridges “all the time”, even though Singapore’s port does not have such structures.

Jon concurred, saying that passing under bridges is very common worldwide, especially for ports in America and Japan.

Dr Low said no bridges are designed to withstand the direct impact of such a large container ship, and the design of the Francis Scott Key Bridge could not be considered a contributing factor in this accident. 

4. What is the standard operating procedure during such emergencies?

The standard operating procedures usually include dropping the ship’s anchors and issuing a call warning to the authorities and nearby ships, if applicable.

Jon noted that the crew appeared to have followed the emergency procedures quickly, by issuing a mayday call warning to inform the authorities of an impending crash.

However, a 300m ship like the Dali could take six to eight minutes after dropping anchor to come to a complete stop, Roger said.

5. How often do vessels undergo maintenance checks?

Both Roger and Jon said ships follow strict inspection regimes, especially Singapore-flagged ones bound by the laws of Singapore where the ship is registered.

The ship involved in the Baltimore crash had passed two foreign port state inspections in June and September 2023, according to Maritime and Port Authority of Singapore.

Jon said that vessels under international companies would go through a thorough check on a weekly or monthly basis, depending on the type of equipment. All emergency equipment would also need to be in working condition to pass safety requirements stipulated by company regulations.

https://www.straitstimes.com/singapore/transport/what-could-cause-large-vessels-to-lose-power#:~:text=These include a short circuit,development projects including marine facilities.

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலத்தில் மோதிய கப்பலை அகற்றும் பணிகள் இன்று ஆரம்பம்

world-news-4.jpg

அமெரிக்காவின் மெரிலேண்ட் மாநிலத்தின் போல்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்கொட் கீ என்ற பாலத்தில் மோதிய கப்பலை அகற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கைக்கு வரவிருந்த குறித்த கொள்கலன் கப்பல் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

படாஸ்கோ ஆற்றின் குறுக்காக நிர்மாணிக்கப்பட்டு வந்த சுமார் 3 கிலோமீற்றர் நீளமான பாலமொன்றே இதன்போது உடைந்து வீழ்ந்துள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் 27 நாட்கள் கடல் பயணமாக இலங்கைக்கு வரவிருந்த கப்பலொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

குறித்த கப்பல் விபத்துக்குள்ளாகுவதற்கு முன்னர் அதன் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக திசை மாற்று கருவி இயங்கவில்லை எனவும் 5 சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

289 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கப்பல் போல்டிமோர் துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் அதன் முழு மின்சாரத்தையும் இழந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கப்பலில் உள்ள சில கொள்கலன்கள் அகற்றப்பட்டுள்ளன.

எனினும் கப்பலை அகற்றுவதற்காக இரண்டு இயந்திரங்களின் உதவி அவசியமாக உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

Baltimore bridge collapses: All we know so far

https://thinakkural.lk/article/297627

  • கருத்துக்கள உறவுகள்

$60 மில்லியன் மீள்கட்டுமானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

$60 மில்லியன் மீள்கட்டுமானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

இலங்கையில் இருந்து இங்கு வந்த நம்மவர்கள் பலர் சிவில் பொறியியலாளர்களாகவும் இருக்கின்றனர். பெரும்பாலும் பேராதனை பல்கலையில் இருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் வேலை செய்யும் சில நிறுவனங்களுக்கு இந்த மீள்கட்டமைப்பில் வாய்ப்புகள் கிடைக்கும்.......👍  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

இலங்கையில் இருந்து இங்கு வந்த நம்மவர்கள் பலர் சிவில் பொறியியலாளர்களாகவும் இருக்கின்றனர். பெரும்பாலும் பேராதனை பல்கலையில் இருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் வேலை செய்யும் சில நிறுவனங்களுக்கு இந்த மீள்கட்டமைப்பில் வாய்ப்புகள் கிடைக்கும்.......👍  

sub sub sub sub contract ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

sub sub sub sub contract ? 

👍....

சரியாகச் சொல்கிறீர்கள். உங்களுக்கும் இந்த துறையில் அனுபவம் இருக்கின்றது போல. என் நண்பர்கள் பலர் சிவில் பொறியியலாளர்களே, அதனால் ஓரளவிற்கு அவர்களின் நடமுறைகள் தெரியும். ஒன்றோ இரண்டோ பெரிய நிறுவனங்கள் முழுத் திட்டத்தையும் எடுக்கும், பின்னர் நீங்கள் சொல்வது போல பல மட்டங்களுக்கு/நிறுவனங்களுக்கு சிறு சிறு திட்டங்களாகச் செல்லும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.