Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வீட்டுக்கு சோலார் மின்சாரம் | Solar Power for House

சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? அதன் நன்மை தீமைகளைப் பற்றி கள உறவுகள் தாங்கள் அறிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
எங்களுடைய வீட்டிலும் தம்பியின் தீவிர முயற்சியில் சோலார் பனல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? அதன் நன்மை தீமைகளைப் பற்றி கள உறவுகள் தாங்கள் அறிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
எங்களுடைய வீட்டிலும் தம்பியின் தீவிர முயற்சியில் சோலார் பனல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் பெரும்பாலானோர் இந்த சூரிய மின்சக்க்தியினை பாவிக்கிறார்கள், இந்த  மின் தகடுகளின் ஆயுள்காலம் சராசரியாக 15 ஆண்டுகள்,நேரோட்டமின் சக்தியினை ஆடலோட்டம் மின்சக்தியாக மாற்றும் மின் மாற்றியின் ஆயுள் காலம் கிட்டதட்ட 10 வருடங்கள்.

தனிப்பட்ட முறையில் நானும் பயன்படுத்துகிறேன், மிகவும் உபயோகமானது.

2007 இல் ஆட்சிக்கு வந்த இடது சாரி அரசு ஆட்சிக்கு வந்த போது பல சலுகைகளை வழ்ங்கி ஆதரித்தமையால் பலர் இந்த மின் சக்தியினை நாடியிருந்தார்கள், அந்த மின் தகடுகள் காலாவதியாகும் நிலையில் அவற்றினை மீழ்சுத்திகரிப்பு செய்வது கடினமான பணியாக இருப்பதால் அவற்றினை இலத்திரனியல் குப்பையாக (அதில் அலுமினிய உலோகமும் உள்ளது) வேறு நாடுகளூக்கு அனுப்புகிறார்கள்), எனது இந்தியாவில் இருக்கும் உறவினர் ஒருவர் அதனை இறக்குமதி செய்து அங்குள்ள மக்களின் தலையில் கட்டி விடுகிறார் இரண்டாம் உபயோக மலிவான மின் தகடாக.

இந்த மாதிர்யானவர்கள் தொடர்பாக விழிப்பாக இருங்கள், உங்கள்காணொளியினை பின்னர் பார்க்கிறேன்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

சோலார் பனல்கள்

உங்கள் சோலர் பனல்கள் பயன் பெறட்டும்.

மின்சார கட்டணங்கள் இனிமேல் குறைய சாத்தியமில்லை.

கோடை அனல் காரணமாக இன்னும் பிரச்சனைகள் வரலாம்.

அதைவிட தேர்தல்கள் முடிய கட்டணங்கள் மேன்மேலும் அதிகரிக்கலாம்.

17 minutes ago, vasee said:

இலத்திரனியல் குப்பையாக (அதில் அலுமினிய உலோகமும் உள்ளது) வேறு நாடுகளூக்கு அனுப்புகிறார்கள்)

உலக நாட்டு குப்பைகளைப் போடத் தானே இலங்கை போன்ற நாடுகள் உள்ளன.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

உலக நாட்டு குப்பைகளைப் போடத் தானே இலங்கை போன்ற நாடுகள் உள்ளன.

எனது உறவினர் இந்தியாவில் உள்ளார், இலங்கையிலும் இவ்வாறு குப்பைகளை மக்களின் தலையில் கட்டிவிடலாம் என்பதாலால் குறிப்பிட்டேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

மின்சார கட்டணங்கள் இனிமேல் குறைய சாத்தியமில்லை.

ஜேர்மனியில் எங்கு பார்த்தாலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாடிகள் சுற்றிக்கொண்டிருப்பதை காணலாம். அத விட வெட்ட வெளியெங்கும் சோலார் தகடுகள் காட்சியளிக்கும். இருந்தாலும் மின்சார கட்டணம் குறைவதற்கு பதிலாக 5 மடங்கு விலை கூடியிருக்கின்றது.
உலகத்திலேயே மிக பாதுகாப்பான அணுமின்சார நிலையங்களை மூடி விட்டு உலக சூழல் சுற்றாடல் சுகாதாரம் என மக்களை வாட்டி எடுக்கின்றார்கள்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

உலகத்திலேயே மிக பாதுகாப்பான அணுமின்சார நிலையங்களை மூடி விட்டு உலக சூழல் சுற்றாடல் சுகாதாரம் என மக்களை வாட்டி எடுக்கின்றார்கள்.

அண்ணை தடித்த எழுத்து இது உண்மையா?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

அண்ணை தடித்த எழுத்து இது உண்மையா?!

ஒரு சில வருடங்களுக்கு முன் அணுமின் நிலையங்களை இழுத்து மூடும்போது பத்திரிகையில் வந்த செய்தி அது.
மற்றும் படி யாமறியோம் பராபரமே 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

அண்ணை தடித்த எழுத்து இது உண்மையா?!

அவர் பல விடயங்களை அறியாமல் தானே வலுவான கருத்துக்களை வைத்திருக்கிறார்😂?

மேலே சூரிய மின் தகடுகளின் அலுமினியம் கழிவாகச் சேர்வதையே பெரிய விடயமாகச் சுட்டிக் காட்டுகிறார்கள் (அலுமினியம் போன்ற உலோகங்கள் எண்ணற்ற தடவைகள் மீள் சுழற்சி செய்யக் கூடியவை என்பதையும் மறந்து விட்டார்கள்). 

 அணு சக்தி மின் நிலையத்தில் பயன்படுத்திய யுரேனியம் கழிவை அலுமினியத்தின் இடத்தில் வைத்துப் பாருங்கள். அதை மீள் சுழற்சி செய்யப் பெரிய வழிகள் இல்லை. எங்காவது பூமியின் அடியில் புதைத்துத் தான் வைக்க வேண்டும். இந்த ஆழப் புதை குழிகளை அமைக்க பெரும் செலவாகும் என்பதால், சில நாடுகளில் நிலத்தின் மேலேயே வைத்திருக்கிறார்கள். ஒரு பாரிய இயற்கை அனர்த்தம் வந்தால், இந்த யுரேனியம் கழிவு சூழலில் கலந்து பெரும் அனர்த்தங்களை விளைவிக்கும். 

இதை விட மிகக் குறைவான வாய்ப்புள்ள ஒரு ஆபத்து, அணு உலையை குளிர்விக்கும் தண்ணீர் சூழலில் கலக்கும் ஆபத்து. பிரான்சில் நடந்திருக்கிறது. 

இன்னொரு அணு உலை தொடர்பான பேராபத்து ஜப்பானில் பூகம்பத்தினால் நடந்தே விட்டது. Fukushima நகரில் அணு உலையும், அதன் குளிர்விக்கும் பொறிமுறையும் சுனாமியால் சேதமாகி இன்னும் 50 ஆண்டுகளுக்கு சுத்தமாக்கும் வேலைகள் செய்ய வேண்டிய நிலை. 

இந்த ஆபத்துக்கள் எல்லாம் கணக்கிலெடுத்துத் தான், அணு உலை மின்சாரத்தை நாடுகள் குறைக்க முயல்கின்றன.  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்திற்கு எதிராக அவ்வூர் மக்கள் அதன் ஆபத்து கருதியே அவ்வளவு போராடினார்கள். உதயகுமார் என்னும் ஒரு பேராசிரியர் என்று ஞாபகம். அமெரிக்காவில் பல்கலை ஒன்றில் இருந்தார். அவர் தமிழ்நாடு திரும்பி, இந்தப் போராட்டத்தில் முன்னால் நின்றார். அந்த அணு உலையில் விபத்து ஏதும் ஏற்பட்டால், இலங்கையின் கடற்கரை பக்கம் கூட பாதிக்கப்படும்.

ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்தின் தாக்கம், 38 வருடங்களின் பின், இன்றும் வீரியம் குறையாமலேயே இருக்கின்றது. ரஷ்யா - உக்ரேன் போரிலும் அந்த இடத்தை தொடாமல் விட்டே வைத்திருக்கின்றார்கள். அங்கிருக்கும் சில விலங்குகள் மிக அதிகமான கதிர் வீச்சுக்கு எப்படி இயல்பாகி வாழ்கின்றன என்ற விவரணம் இங்கு போன வாரம் ஒரு தொலைக்காட்சியில் போனது. கூடங்குளத்திலும் ரஷ்யாவின் இதே தொழில்நுட்பமே என்று சொன்னார்கள்.

சூரிய ஒளி மின்கலங்கள் இங்கு இப்பொழுது கூரை ஓடுகளின் வடிவிலும் வந்துவிட்டன. என் அயலவர் ஒருவர் அதைப் போட்டிருக்கின்றார். இங்கு இந்த வருடம் சரியான மழை. சூரிய மின்கல ஓடுகள் போட்ட பின், அவரின் வீட்டில் மழை நீர் ஒழுகத் தொடங்கி, இப்பொழுது திருத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்றிரவில் இருந்து திரும்பவும் நல்ல மழை.........😌

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரசோதரன் said:

செர்னோபில் அணு உலை விபத்து சகல வழிகளிலும் தனித்துவமானது. உலையின் உள்ளே அழுத்தம் அதிகரித்து வெடிப்பு ஏற்பட்டது, யுரேனிய குச்சிகளை மூடி மேலே இருந்த கொங்கிரீட் சிம்னி தூளாகியது. ஓர் வால்வு சரியாக வேலை செய்யாமையால் ஏற்பட்டது.

இதோ போன்ற ஒரு நிலை 1979 இல் பென்சில்வேனியாவின் 3-Mile Island என்ற இடத்தில் இருந்த அமெரிக்க அணு உலையிலும் ஏற்பட இருந்து, சரியான தொழில் நுட்ப வழிகாட்டல் இருந்தமையால் பேரனர்த்தம் தவிர்க்கப் பட்டது.

பகிடி என்னவென்றால், செர்னோபில் அணு உலை வெடித்து மத்திய ஐரோப்பா வரை காற்றில் கதிர் வீச்சு மூலகங்கள் அதிகரித்ததை ஏனைய நாடுகள் கண்டு கொண்டன. சோவியத் அரசோ, தொழிலாளர் தின பேரணியை செர்னோபிலில் மக்களை வைத்து கட்டாயமாக நடத்தி முடித்த பின்னர் தான் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. 

  • Thanks 1
  • Sad 1
Posted

ஆபத்துமிக்க அணு உலைக் கழிவுகள்: அதிர்ச்சியளிக்கும் கிரீன்பீஸ் ரிப்போர்ட்

153089.jpg
 
அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நச்சுத்தன்மையுடன் இருக்கக்கூடிய  எரிபொருள்களை வெளியேற்ற முடியாமல் பல நாடுகளும் விழித்துவரும் நிலையில் அணுசக்திக் கழிவின் பெருக்கம் உலகம் முழுவதும் பெருகிவருவதாக கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தொடங்கப்பட்ட கிரீன்பீஸ் அமைப்பு தற்போது நெதர்லாந்திலிருந்து இந்தியா உள்ளிட்ட உலகின் பல பெரிய நாடுகளிலும் ஒரு முக்கியமான அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்பாக இயங்கி வருகிறது.

கிரீன்பீஸ் அமைப்பு நேற்று ஒரு விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டு சுற்றுச்சூழல் சார்ந்த ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:

ஏழு நாடுகளில் மட்டும்தான் அணுசக்தி நிலையத்தின் அருகிலேயே மக்களுக்கு கெடுதல் நேராத வகையில் முறையான கழிவு சேமிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இந்த ஆலைகளில் முழுமையடையாத பல தேவைகளால்  தீ ஆபத்து, கதிரியக்க வாயுக்கள் வெடிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, கொள்கலன்களின் தோல்வி, பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதிகரிக்கும் செலவுகள் என பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன.

26137569

"இந்த அணு சக்தி மின் நிலையங்கள் உள்நாட்டுப் பயன்பாடுகளுக்கென்றே தொடங்கி 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியுள்ளது. இதன் கடும் ஆபத்து விளைவுகளை ஏற்படுத்தும் இதன் கதிரியக்க கழிவுகளை அப்புறப்படுத்துவதை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு ஏதோ ஒரு நாட்டை மட்டும் குற்றம் சாட்ட முடியாது'' என்கிறார் கிரீன்பீஸ் ஜெர்மனியைச் சேர்ந்த அணுசக்தி நிபுணர் ஷாவுன் புர்ணி

குறிப்பாக, அணு சக்தி மின் உலைகளிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்கள் பூமிக்கடியில் சேகரிக்கப்படுகின்றன. நீண்ட கால சேமிப்பு தொழில்நுட்பம் போன்றவை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அதில் பல பிரச்சினைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, கிட்டத்தட்ட 14 நாடுகளிலிருந்து விநியோகிக்கப்பட்ட உயர்தர கதிரியக்கச் செலவுக்கான எரிபொருள் சுமார் 2,50,000 டன்கள் உலகளாவிய அளவில் கையிருப்பு உள்ளது.

இந்த எரிபொருள் சேகரிக்கப்படும் பெரும்பாலான உறைவிப்பான் தளங்கள் குளிரூட்டும் குளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இப்படி இரண்டாவது முறை சேகரிப்பதில் உள்ள குறைபாடுகளால் குளிர் இழக்கும் ஒரு பெரும்பாதிப்பைப் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அணுசக்தியை மீண்டும் மீண்டும் சேமித்து வைப்பதினால் ஏற்படும் சிக்கல்கள் இவை.

ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணு சக்தி ஆலை 2011-ல் ஏற்பட்ட சுனாமியில் பகுதியளவு பெரும் சேதத்துக்குள்ளானது. எனினும் இதில் இருந்த எரிபொருள் குளங்களின் அதிக வெப்பம் அபாயகரமானதாக இல்லை என்று தெளிவுபடுத்தியது.

அணு சக்தி வல்லுநர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட 100 பக்க ஆய்வறிக்கை, பிரான்சில் மிகப்பெரிய ஏற்படும் கழிவுப்பொருட்களை நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகள் அகற்றப்பட்டு விட்டன. பிரான்ஸ் அணுமின் நிலையம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள இரண்டாவது மிகப்பெரிய அணுசக்தி மின்நிலையம் ஆகும்.

அதேநேரம் "பிரான்ஸில் அணுசக்திக் கழிவுகளை நீண்டகாலப் பாதுகாப்பாக அகற்றுவதற்கான நம்பகமான தீர்வு எதுவுமில்லை" என்று அறிக்கை கூறியுள்ளது.

பிரெஞ்சு மேற்பார்வை அதிகாரிகள் குழு ஒன்று லா ஹேக் தளத்தில் நார்மண்டியில் ஆய்வு செய்தது. அங்குள்ள பெரிய குளிரூட்டும் குளங்களின் தன்மையைப் பற்றிய கவலையை அக்குழு தெரிவித்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, "லா ஹேக்கில் உள்ள குளங்கள் 2030 ஆம் ஆண்டு வரை எந்தவித ஆபத்தும் இல்லை" என்று தளத்தை நிர்வகிக்கும் எரிசக்தி நிறுவனமான ஓரானா, ஓர் அறிக்கையில் தெரிவித்தது. அமெரிக்காவில், ''பில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் பத்தாண்டு கால திட்டமிடல்கள் புவியியல் கழிவுகள் அகற்றும் தளத்தை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் இதில் கூறப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள யூக்கா மலையின் பூமிக்கடியிலான அணுசக்தி கழிவு சேமிக்கும் வசதியைக் கட்டமைக்கும் பணி பல பத்தாண்டுகளாக நடந்தது. ஆனால் கடைசியில் 2010-ல் ஒபாமா நிர்வாகத்தில் அது ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் 70 சதவீதம் செலவிடப்பட்ட எரிபொருளானது பலவீனமான குளிர்ந்த குளங்களில்தான் உள்ளது. இதற்கு முதன்முதலாக இருந்த நோக்கம் பின்னர் பல மடங்கு அதிகரித்தது.

யுரேனியம் சுரங்கத்திலிருந்து உருவாகும் அணு சக்திக் கழிவு என்பது ஒரு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினை ஆகும்.

உலக அளவிலான யுரேனியம் ஆலைச் சரக்குகள், சேமித்து வைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கசியும் மணல் கழிவுப் பொருட்கள் மட்டுமே 2011 வரை இரண்டு பில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் உள்ளடங்கிய மற்ற நாடுகள் பெல்ஜியம், ஜப்பான், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகியவை ஆகும்.

https://www.hindutamil.in/news/world/153089-.html

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுருக்கமாக எழுதுவதால் சில புரிந்துணர்வு சிக்கல் ஏற்படுகிறது என்பதனை ஜஸ்ரின் கருத்தின் மூலம் உணர்கிறேன், சூரிய மின் தகடு மீழ்சுத்திகரிப்பில் கண்ணாடியும் அலுமினியமும் முற்றாக சுத்திகரிக்க முடியும் அதில் அலுமினியம் பொருளாதார ரீதியில் சாதகமானது அதனடிப்படையில் கருத்து வைக்கப்பட்டது.

லீட், கட்மியம் போன்ற சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தும் மூலகங்களும் அதில் அடங்கியுள்ளது.

சூரிய மின் தகடுகளுக்கு 15 வருட உத்தரவாதம் வழங்குகிறார்கள் அதன் பின்னர் அதன் செயற்பாடு குறைவடையத்தொடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, vasee said:

ஈயம், சூரிய மின் தகட்டிலிருந்து மட்டுமல்ல, printed circuit board-PCB உடைய எல்லா சாதனங்களிலும் இருக்கும் ஒரு ஆரோகியத்திற்குக் கேடான உலோகம். அதனால் தான் e-waste என்பதை தனியாக நகரங்கள் சேகரிக்கின்றன. இந்த e-waste இல் இருந்து ஈயத்தை பிரித்தெடுக்கும் முறைகள் இருக்கின்றன. மேற்கு நாடுகளில் செய்கிறார்கள். கீழைத்தேய நாடுகள் பின்பற்றும் வழிகள் இருக்கின்றன, ஆனாலும் செய்ய மாட்டார்கள். அது அவர்களின் பிரச்சினை.

ஆகவே, பசுமைத் தொழில் நுட்பத்தினால் கிடைக்கும் நன்மைகளோடு ஒப்பிடுகையில் e-waste ஒரு பெரிய மறைக்காரணி அல்ல.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, Justin said:

நன்றி ஜஸ்ரின் உங்கள் கருத்திற்கு,

ஏராளன், இன்னும் உங்கள் காணொளியினை பார்க்கவில்லை ஆனாலும் சூரிய மின் தகடு பொருத்துதல் தொடர்பான சில சொந்த அனுபவங்களை பகிற்கிறேன்.

தற்போது உள்ள ஒரு தகடு கிட்டதட்ட 390W வலுவை கொண்டது, எனது வீட்டில் பொருத்தும் காலத்தில் 190W ஆக இருந்ததாக நினைவுள்ளது.

11 தகடுகள் 2.1KW மின் வலுவினை கொண்டதாக பொருத்தப்பட்டது ஆரம்பத்தில் நாளொன்றிற்கு 12KW சக்தியினை பிறப்பித்தது, இலங்கை போன்று பூமத்திய ரேகையில் அவுஸ்ரேலியா இல்லை, அதனால் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப அதன் வலுப்பிறப்பிக்கும் சக்தி வேறுபடும்.

நாளொன்றிற்கு உங்கள் சூரிய மின் த்கடுகள் அதனை விட சராசரியாக 4 மடங்கு மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் என கூறுகிறார்கள் ஆனால் நடைமுறையில் அது சற்று கூடுதலாக இருக்கும். 

ஆண்டொன்றிற்கு 0.5% -0.8% அதன் மின் உற்பத்திதிறன் குறைவடைவதாக கூறுகிறார்கள்.

inverter 10 ஆண்டு காப்புறுதியும் சூரிய மின் தகடு 15 ஆண்டு காப்புறுதியும் வழங்குகிறார்கள், எனது inverter காலாவதியாகிவிட்டது ஆனாலும் தொடர்ந்து இயங்கிறது, உறவினர் ஒருவரது inverter சில வருடங்களிலேயே பழுதாகிவிட்டதாக கூறினார்.

இரண்டாம் தர மிந்தகடுகள் 15 ஆண்டுகளின் பின்னர் 80% இயங்குதிறனுடன் காணப்படும் அது அடுத்த 10 வருடங்கள் வரை இயங்கும் ஆனால் உத்தரவாதம் இல்லை.

அதனால் இரண்டாந்தர மின் தகடு இலாபமா என்பதனை பார்த்து வாங்கலாம் ஆனால் அது உத்தரவாதம் இல்லை.

எனது சூரிய மின் தகட்டினை இன்வேட்டர் செயலிழக்கும் வரை (10 வருட உத்தரவாதம், தற்போது 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது) அதனது செயற்பாட்டு காலமான 25 வருடங்கள் வரை உபயோகிக்க உத்தேசித்துள்ளேன், காரணம் சுற்று சூழல் ஆர்வத்தினால் அல்ல அதனை மாற்றீடு செய்வதால் இலாபம் ஏற்படாமல் மேலதிக பணவிரயம், ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை மாற்றீடு செய்கிறார்கள் அதன் இயங்குநிலையிலேயே.

அவஸ்ரேலியாவிலிருந்து வரும் இரண்டாம் தர சூரிய மின் தகடுகளின் அதிக பட்ச உபயோகிக்கப்பட்ட காலம் 17 வருடங்கள், ஆனால் பெரும்பாலான சூரிய மின் தகடுகள் அந்த காலத்தினை விட குறைவாக இருப்பதற்கே வாய்ப்புள்ளது.

இங்கு விக்ரோரியா மானிலத்தில் மட்டும் சூரிய மின் தகடு மீழ் சுத்திகரிப்பு தடை செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் தனியார் பணம் பெற்று பழைய மின் தகடுகளை எடுத்து செல்வார்கள், இலங்கையில் அவ்வாறான பிரச்சினை வராது என கருதுகிறேன்.

இங்கு ஒரு அலகு மின்சாரம் 0.42 சதத்திற்கு வழங்குகிறார்கள், நாளொன்ற்றிற்கு சேவைக்கட்டணமாக 0.98 சதம் பெறிகிறார்கள் உங்களது மேலதிக சூரிய மின்சாரம், மின்சார சபை மின்சாரத்திற்கு செல்லும் அதற்கு மின் அலகொன்றிற்கு 0.05 சதம் வழங்குகிறார்கள்.

மின்சாரம் தடைப்பட்டால் சூரிய மின் தகட்டின் மூலம் வரும் மின்சாரம் உடனடியாக நின்றுவிடும், காரணம் அது திருத்த வேலைகளில் ஈடுபடும் மின்சார சபை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, சூரிய மின் தகட்டுடன் பற்றரி பொருத்தினால் மின் தடைப்பட்டாலும் மின்சார வழங்கலை தொடர்ந்து பெறலாம் மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதில் சேமிக்கப்படும்.

புதிய சூரிய மின் தகடும் இன்வேட்டரும் பொருத்தும் செலவை இங்குள்ள மின் கட்டணத்தினடிப்படயில் அந்த செலவினை இரண்டு ஆண்டுகளிலேயே உங்களுக்கு வழங்கிவிடும் இந்த சூரிய மின் தகடுகள், பற்றரி இணைப்பு (10 வருட உத்தரவாதம் 80% செயற்திறன்) இலாபம் இல்லை, இந்த தரவு அவுஸ்ரேலிய மின்சார கட்டணத்தினடிப்படையில் (சிலர் மின்சார கார் வைத்திருப்பவர்கள் இலாபகரமானது என கூறுகிறார்கள் அதன் உண்மைத்தன்மை தெரியாது).

இலங்கை மின் கட்டணத்திற்கு இந்த மின் தகடு பொருத்துவது இலாபமா என்பதனை நீங்கள் கணிக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் நீங்கள் மின் திருத்த வேலையில் ஈடுபடும்போது பிரதான ஆழியின் இணைப்பை துண்டிப்பதுடன் சூரிய மின் தகட்டின் பிரதான ஆழியின் (சுவிட்ச்) இணைப்பையும் துண்டிக்கவேண்டும்.

Edited by vasee
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏராளன் உங்களுக்க எவளவு செலவு ஆனது மற்றும் யார் முலம் செய்தீர்கள் என்ற விபரம் தர முடியுமா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, சுவைப்பிரியன் said:

ஏராளன் உங்களுக்க எவளவு செலவு ஆனது மற்றும் யார் முலம் செய்தீர்கள் என்ற விபரம் தர முடியுமா.

முழு விபரமும் தம்பியிடம் கேட்டு எழுதுகிறேன் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

உங்கள் தகவல்களுக்கு நன்றி அண்ணா.
காணொளி சோலார் சம்பந்தமான அடிப்படைத் தகவல்களைக் கொண்டுள்ளது.

இங்கு மேலதிகமாக சோலார் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சாரசபை வாங்குகிறது. தற்போது வாங்கும் மின்சாரத்திற்கு அலகிற்கு 37ரூபா நிலையான கட்டணமாக வழங்குகிறது, மாறுகின்ற கட்டணமாக 57ரூபாவை வழங்குகிறது.
எனது கேள்வி நிலையானதற்கா மாறுகின்ற கட்டணத்திற்கா ஒப்பந்தம் செய்வது நீண்டகால நன்மை தரும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/4/2024 at 09:31, சுவைப்பிரியன் said:

ஏராளன் உங்களுக்க எவளவு செலவு ஆனது மற்றும் யார் முலம் செய்தீர்கள் என்ற விபரம் தர முடியுமா.

அண்ணை எங்களுடைய வீட்டில் சோலார் பொருத்திய நிறுவனம் கிறீன் சண்பவர் எனர்ஜி https://greensunpowerenergy.com/contact/ . JA பனல், 550 Watts. 10Kw மொத்தமாக 20 பனல்கள் பொருத்தவேண்டுமாம். ட்ரான்ஸ்போமருக்கு கிட்டவாக(100-300மீற்றர்களுக்குள்) பொருத்தும் இடம்(வீடு) இருந்தால் கூடுதல் Kw பொருத்த மின்சாரசபை அனுமதிப்பார்கள். 5Kw மேல் எடுப்பதென்றால் 3பேஸ் இணைப்பு எடுக்கவேண்டும். 

10Kw சோலார் பொருத்த ஏறத்தாழ 20லட்ச ரூபா தேவைப்படும். பற்றி பக்கப் செய்வதென்றால் கூடுதல் செலவாகும். ஹைபிரிட் இன்வேட்டர் பொருத்துவதற்கும் கூடுதல் செலவாகும்.

30/40Kw பொருத்தும் போது சராசரிச் செலவு குறைவு.

இது தான் நான் கேட்டுத் தெரிந்து கொண்ட விபரங்கள். மேலே இணையப் பக்கத்தில் தொடர்பிலக்கம் உள்ளது, மேலதிக விபரங்களை கேட்கலாம்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஏராளன் said:

இந்த நிறுவனத்தின் சூரிய மின் தகடுகள் இங்கும் பொருத்துகிறார்கள், நல்ல தரமான சூரிய மின் தகடு, அவுஸ்ரேலியாவினை விட இலங்கையில் உள்ள சூரிய மின் தகடு பொருத்துனர்கள் புதிய சூரிய மின் தகடுகளை பொருத்துகிறார்கள், ஆனாலும் விலை கிட்டதட்ட ஒரே அளவில் உள்ளது. (தற்போதும் அதிக பட்சமாக 400W வினத்திறன் கொண்ட மின் தகடுகளே இங்குள்ள நிறுவனங்கள் பொருத்துகிறார்கள் என கருதுகிறேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்), இங்கு பெரும்பாலும் இந்தியர்கள் இந்த வகை நிறுவனங்களை பெரும்பாலும் நடத்துகிறார்கள்.

  • Like 1
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Solar மூலம் நம்பவே முடியாத மாத வருமானம் | 40 KW System

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் சரி.ஆனால் மின்சார சபையிடம் அனுமதி எடுப்பது என்பது கல்லில் நார் உரிப்பதை விட சிரமம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி.ஆனால் மின்சார சபையிடம் அனுமதி எடுப்பது என்பது கல்லில் நார் உரிப்பதை விட சிரமம்.

உண்மைதான் அண்ணை.

  • மின்சார சபையின் அனுமதி கிடைக்க வீட்டிற்கும் ட்ரான்ஸ்போமருக்கும் இடையிலான தூரம் பிரதான பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.
  • அடுத்தது ட்ரான்ஸ்போமரின் கொள்ளளவு/ஏற்றுக்கொள்ளும் அளவு.(நிறையப்பேர் எடுத்திருந்தால் இடமில்லை என்று சொல்வார்கள்)
  • அனுமதி தருபவரை நேரில் சந்திப்பதென்றால் கடவுளைக் காண்பது போலவாம்!
  • சில நிறுவனங்கள் ஓய்வுபெற்ற எந்திரிகளை பணிக்கமர்த்தி மிக இலகுவாக அனுமதிகளைப் பெற்றுக்கொடுக்கின்றன.
  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோலார் நீண்டகாலம் பாவிக்காதா?! 🤭| Rj Chandru Report

Posted

சூரிய ஆற்றலின் நன்மை தீமைகள்

சூரியன் பூமிக்கு ஒரு மணி நேரம் அளிக்கும் ஆற்றல் ஒரு வருடத்திற்கான உலகளாவிய ஆற்றல் தேவையை பூர்த்தி செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சந்தேகத்திற்கு இடமின்றி, சூரியன் ஒரு சக்திவாய்ந்த ஆற்றல் மூலமாகும், மேலும் இந்த ஆற்றலின் ஒரு பகுதியை நம்மால் சேகரிக்க முடியாவிட்டாலும், சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் இந்த சக்தியைப் பயன்படுத்துவது கிரகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

இது விலை உயர்ந்தது அல்லது திறமையற்றது என்று பரவலாக விமர்சிக்கப்பட்டாலும், சூரிய ஆற்றல் இப்போது மிகவும் நன்மை பயக்கும் - சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, தனியார் பொருளாதாரத்திற்கும்.

நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?

படத்தை-1

கிடைக்கக்கூடிய சோலார் பேனல் மானியங்கள் மற்றும் சந்தையில் பெருகிய முறையில் போட்டி விலைகள் காரணமாக, சூரிய ஆற்றல் அதிக குடும்பங்களுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. தொழில்நுட்பம் கடந்த ஆண்டுகளில் வெகுவாக மேம்படுத்தப்பட்டு, சூரிய மின்கல சேமிப்பு அமைப்புகளால் நிரப்பப்பட்டு, சூரிய சக்தியை தூய்மையான ஆற்றலின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக மாற்றுகிறது.

இருப்பினும், நீங்கள் பகுப்பாய்வு செய்யத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் மூலத்தைப் பொருட்படுத்தாமல் எப்போதும் குறைபாடுகள் உள்ளன. சூரிய ஆற்றலின் முக்கிய நன்மைகள் மற்றும் தீமைகள் முக்கியமாக பின்வரும் புள்ளிகளில் பிரதிபலிக்கின்றன:

சூரிய ஆற்றலின் நன்மைகள்

படத்தை-2

1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம்
சோலார் பேனல்களின் அனைத்து நன்மைகளிலும், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஆற்றல் உண்மையிலேயே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தப்படலாம் மற்றும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும். மற்ற சில ஆற்றல் ஆதாரங்களைப் போலல்லாமல், சூரிய சக்தியை நம்மால் இயக்க முடியாது.
சூரியன் இருக்கும் வரை சூரிய சக்தியை அணுக முடியும், எனவே விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சூரியன் இறக்கப் போகும் போது குறைந்தது 5 பில்லியன் ஆண்டுகளுக்கு சூரிய ஒளி நமக்குக் கிடைக்கும்.

2. மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கிறது
உங்கள் சூரிய குடும்பம் உருவாக்கிய மின்சாரம் மூலம் உங்கள் ஆற்றல் தேவைகளில் சிலவற்றை நீங்கள் பூர்த்தி செய்வதால், உங்கள் ஆற்றல் கட்டணம் குறையும். உங்கள் பில்லில் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பது சூரியக் குடும்பத்தின் அளவு மற்றும் உங்கள் மின்சாரம் அல்லது வெப்பப் பயன்பாட்டைப் பொறுத்தது.
எடுத்துக்காட்டாக, நீங்கள் வணிகரீதியான சோலார் பேனல்களைப் பயன்படுத்தும் வணிகமாக இருந்தால், இந்த சுவிட்ச் பெரிய பலன்களைப் பெறலாம், ஏனெனில் பெரிய சிஸ்டம் அளவு உங்கள் ஆற்றல் பில்களின் பெரிய பகுதிகளை உள்ளடக்கும்.
மேலும், நீங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிப்பது மட்டுமின்றி, ஸ்மார்ட் ஏற்றுமதி உத்தரவாதம் (SEG) மூலம் மின்கட்டணத்திற்கு மீண்டும் ஏற்றுமதி செய்யும் உபரி ஆற்றலுக்கான கட்டணங்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நீங்கள் பயன்படுத்துவதை விட அதிக மின்சாரத்தை நீங்கள் உற்பத்தி செய்தால் (உங்கள் சோலார் பேனல் அமைப்பு கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு).

3. பல்வேறு பயன்பாடுகள்
சூரிய சக்தியை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். நீங்கள் மின்சாரம் (ஒளிமின்னழுத்தம்) அல்லது வெப்பம் (சூரிய வெப்ப) உருவாக்க முடியும். சூரிய ஆற்றலை ஆற்றல் கிரிட் அணுக முடியாத பகுதிகளில் மின்சாரம் தயாரிக்கவும், குறைந்த சுத்தமான நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் தண்ணீரை வடிகட்டவும் மற்றும் விண்வெளியில் செயற்கைக்கோள்களை இயக்கவும் பயன்படுத்தலாம்.
கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களிலும் சூரிய சக்தியை ஒருங்கிணைக்க முடியும். நீண்ட காலத்திற்கு முன்பு ஷார்ப் வெளிப்படையான சூரிய ஆற்றல் ஜன்னல்களை அறிமுகப்படுத்தியது.

4. குறைந்த பராமரிப்பு செலவுகள்
சூரிய ஆற்றல் அமைப்புகளுக்கு பொதுவாக அதிக பராமரிப்பு தேவையில்லை. நீங்கள் அவற்றை ஒப்பீட்டளவில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், எனவே வருடத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்வது வேலையைச் செய்யும். சந்தேகம் இருந்தால், நீங்கள் எப்பொழுதும் பிரத்யேக துப்புரவு நிறுவனங்களை நம்பலாம், அவை சுமார் £25-£35 வரை இந்தச் சேவையை வழங்குகின்றன.
மிகவும் நம்பகமான சோலார் பேனல் உற்பத்தியாளர்கள் 20-25 ஆண்டுகள் உத்தரவாதத்தை வழங்குகிறார்கள்.
மேலும், நகரும் பாகங்கள் இல்லாததால், தேய்மானம் இல்லை. இன்வெர்ட்டர் பொதுவாக 5-10 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட வேண்டிய ஒரே பகுதியாகும், ஏனெனில் இது சூரிய சக்தியை மின்சாரம் மற்றும் வெப்பமாக மாற்றுவதற்கு (சோலார் பி.வி. வெர்சஸ் சோலார் தெர்மல்) தொடர்ந்து வேலை செய்கிறது. இன்வெர்ட்டரைத் தவிர, உங்கள் சூரிய சக்தி அமைப்பு அதிகபட்ச செயல்திறனில் இயங்குவதை உறுதிசெய்ய கேபிள்களுக்கும் பராமரிப்பு தேவைப்படுகிறது.
எனவே, சோலார் சிஸ்டத்தின் ஆரம்ப செலவை உள்ளடக்கிய பிறகு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு மிகக் குறைந்த செலவை எதிர்பார்க்கலாம்.

5. தொழில்நுட்ப வளர்ச்சி
சூரிய சக்தி துறையில் தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருகிறது மற்றும் எதிர்காலத்தில் மேம்பாடுகள் தீவிரமடையும். குவாண்டம் இயற்பியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் உள்ள கண்டுபிடிப்புகள் சோலார் பேனல்களின் செயல்திறனை அதிகரிக்கலாம் மற்றும் சூரிய சக்தி அமைப்புகளின் மின் உள்ளீட்டை இரட்டிப்பாக அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கலாம்.

சூரிய ஆற்றலின் தீமைகள்

படத்தை-3

1. செலவு
ஒரு சோலார் சிஸ்டத்தை வாங்குவதற்கான ஆரம்ப செலவு மிகவும் அதிகமாக உள்ளது. சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர், பேட்டரிகள், வயரிங் மற்றும் நிறுவலுக்கு பணம் செலுத்துவது இதில் அடங்கும். ஆயினும்கூட, சூரிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, எனவே எதிர்காலத்தில் விலைகள் குறையும் என்று கருதுவது பாதுகாப்பானது.

2. வானிலை சார்ந்தது
மேகமூட்டம் மற்றும் மழை நாட்களில் சூரிய சக்தியை இன்னும் சேகரிக்க முடியும் என்றாலும், சூரிய குடும்பத்தின் செயல்திறன் குறைகிறது. சோலார் பேனல்கள் சூரிய சக்தியை திறம்பட சேகரிக்க சூரிய ஒளியை சார்ந்துள்ளது. எனவே, சில மேகமூட்டமான, மழை நாட்கள் ஆற்றல் அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இரவில் சூரிய சக்தியை சேகரிக்க முடியாது என்பதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மறுபுறம், இரவில் அல்லது குளிர்காலத்தில் வேலை செய்ய உங்கள் நீர் சூடாக்கும் தீர்வு தேவைப்பட்டால், வெப்ப இயக்கவியல் பேனல்கள் கருத்தில் கொள்ள ஒரு மாற்றாகும்.

3. சூரிய ஆற்றல் சேமிப்பு விலை அதிகம்
சூரிய சக்தியை இப்போதே பயன்படுத்த வேண்டும், அல்லது பெரிய பேட்டரிகளில் சேமிக்கலாம். ஆஃப்-தி-கிரிட் சோலார் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் இந்த பேட்டரிகள், பகலில் சார்ஜ் செய்யப்படலாம், இதனால் ஆற்றல் இரவில் பயன்படுத்தப்படுகிறது. நாள் முழுவதும் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கு இது ஒரு நல்ல தீர்வாகும், ஆனால் இது மிகவும் விலை உயர்ந்தது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பகலில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதும், இரவில் கிரிட்டில் இருந்து ஆற்றலை எடுத்துக்கொள்வதும் சிறந்ததாகும் (உங்கள் கணினி கட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும்). அதிர்ஷ்டவசமாக உங்கள் ஆற்றல் தேவை பொதுவாக பகலில் அதிகமாக இருக்கும், எனவே நீங்கள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி பெரும்பாலானவற்றைச் சந்திக்கலாம்.

4. நிறைய இடத்தைப் பயன்படுத்துகிறது
நீங்கள் எவ்வளவு அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய விரும்புகிறீர்களோ, அவ்வளவு சூரிய ஒளியை நீங்கள் சேகரிக்க விரும்புவதால், உங்களுக்கு அதிகமான சோலார் பேனல்கள் தேவைப்படும். சோலார் PV பேனல்களுக்கு நிறைய இடம் தேவைப்படுகிறது மற்றும் சில கூரைகள் நீங்கள் வைத்திருக்க விரும்பும் சோலார் பேனல்களின் எண்ணிக்கையைப் பொருத்தும் அளவுக்கு பெரியதாக இல்லை.
உங்கள் முற்றத்தில் சில பேனல்களை நிறுவுவது ஒரு மாற்றாகும், ஆனால் அவை சூரிய ஒளியை அணுக வேண்டும். நீங்கள் விரும்பிய அனைத்து பேனல்களுக்கும் இடம் இல்லை என்றால், உங்கள் ஆற்றல் தேவைகளில் சிலவற்றை இன்னும் பூர்த்தி செய்ய சிலவற்றை நிறுவுவதைத் தேர்வுசெய்யலாம்.

5. மாசுபாட்டுடன் தொடர்புடையது
மற்ற ஆற்றல் ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது சூரிய ஆற்றல் அமைப்புகளுடன் தொடர்புடைய மாசுபாடு மிகவும் குறைவாக இருந்தாலும், சூரிய ஆற்றல் மாசுபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றத்துடன் சூரிய மண்டலங்களின் போக்குவரத்து மற்றும் நிறுவல் தொடர்புடையது.

சூரிய ஒளிமின்னழுத்த அமைப்புகளின் உற்பத்தி செயல்முறையின் போது சில நச்சு பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை சுற்றுச்சூழலை மறைமுகமாக பாதிக்கலாம்.

ஆயினும்கூட, சூரிய ஆற்றல் மற்ற மாற்று எரிசக்தி ஆதாரங்களை விட மிகக் குறைவாகவே மாசுபடுத்துகிறது.

https://tamil.hyliess.com/தொழில்-அறிவு/சூரிய-ஆற்றலின்-நன்மை-தீமைகள்

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.