Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 APR, 2024 | 09:41 PM
image
 

யாழ். செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்டமுன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையிலேயே குறித்த பகுதியை அமைச்சர் நேரல் சென்று பார்வையிட்டுள்ளார்.

முன்பதாக குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட போது குறித்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் மழை நீர் வழிந்தோடும் வழிகள் இருப்பதால் அப்பகுதியில் மைதானங்களை அமைப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயப்பட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு கள விஜயம் சென்ற அமைச்சர் நிலைமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து காணொளி வடிவிலாள திட்டவரைபை தனக்கு தருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/181040

  • கருத்துக்கள உறவுகள்

காற்று ஒரு பிரச்சனையாக அமையாதோ?

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நியாயம் said:

காற்று ஒரு பிரச்சனையாக அமையாதோ?

கட்டுறவன் தான் அதைப் பற்றி கவலைப்படணும் பணத்தை ஒதுக்குபவன் எதுக்கு???

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடமா மைதானம் அமைக்கிறாங்கள் இன்னும் இடம் தேடி பிடிக்கவில்லை ...நல்லிணக்க அரசியல் வாதிகளுக்கே இந்த நிலை என்றால் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செம்மணி வளைவுப்பகுதி கூடுதலாய் மழைக்காலங்களிலை வெள்ளம் நிக்கிற பகுதியெல்லோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – டக்ளஸ் தேவானந்தா

news-01-12.jpg

யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை, அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைசார் அதிகாரிகளும் நேற்று(12) காலை குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ளது.

இந்நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு அந்த அதிகார சபை திட்ட முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

செம்மணிப் பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்குள்ள நிலைமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து காணொளி வடிவிலான திட்ட வரைபை தயாரிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

https://thinakkural.lk/article/298973

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

செம்மணி வளைவுப்பகுதி கூடுதலாய் மழைக்காலங்களிலை வெள்ளம் நிக்கிற பகுதியெல்லோ?

ஓம். அது சதுப்பு நிலம். கொஞ்சம் மழை பெய்தாலே  நீர் ஊற ஆரம்பித்துவிடும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஓம். அது சதுப்பு நிலம். கொஞ்சம் மழை பெய்தாலே  நீர் ஊற ஆரம்பித்துவிடும்.

 

சர்வதேச நீச்சல்  குளம் கட்டப்போயினம் எண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சர்வதேச நீச்சல்  குளம் கட்டப்போயினம் எண்டு நினைக்கிறன்.

அப்ப... அடுத்த ஒலிம்பிக் ஊரிலைதான்.

66-3.jpg?fit=810,428&ssl=1

டக்ளஸ்... ஏற்கேனவே  யாழ்.மத்திய கல்லூரியில்  ஒரு நீச்சல்குளம் கட்டினவர் தானே...
அது  இப்ப, பாசி பிடித்து நுளம்பு குடித்தனம் நடத்துது.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வாக்கு போடும் தீவகத்திற்கு.. ஏன் ஒரு திட்டமும் போகுதில்லை..??!

மண்டைதீவு.. அல்லைப்பிட்டி.. வேலணை.. அல்லது ஊர்காவற்துறை போன்ற இடங்களில் மைதானம் அமைந்தால்.. ஊரவர்களுக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும்.. உல்லாசப் பயணமும் பெருகும்.. பின்ந்தகிய பிரதேசமாகவே இருக்கும்..தீவகம் முன்னேற வாய்ப்பும் அமையும். மேலும் மைதானம் அமைவதற்கான தரைத்தோற்ற நிலைமைகளும் அங்கு அதிகம். சகதிக்குள் மைதானம் அமைக்க முனைந்து கமிசன் அடிக்க நினைப்பதிலும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2024 at 00:37, குமாரசாமி said:

செம்மணி வளைவுப்பகுதி கூடுதலாய் மழைக்காலங்களிலை வெள்ளம் நிக்கிற பகுதியெல்லோ?

ஆமாம் எனக்கு நன்கு தெரியும் .....அந்த நேரத்தில் நீச்சல் போட்டிகள் நடத்தலாம்  🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அரசியல்வாதியின் உதவியும் இல்லாமல், ஒரு தனிமனிதன்+ ஊரவர்கள் சேர்ந்து மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் கட்டி எழுப்பியுள்ள turf மைதானம்.

இப்போ இதில் சர்வதேச போட்டிகளை நடத்த இலங்கை கிரிகெட் சபையை அணுகியுள்ளார்கள்.

யாழில் இல்லாத புலம்பெயர் தனவந்தர்களா?

கொமிசன்-வாதிகளை 30 வருடமாக நம்பி கொண்டிராமல் இப்படி முயலலாம்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது.

தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது.

கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது.

https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2024 at 19:36, நியாயம் said:

காற்று ஒரு பிரச்சனையாக அமையாதோ?

இல்லை. (சுற்றிவர இருக்கைகள் அமைக்கப்படுவதால் )

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

இல்லை. (சுற்றிவர இருக்கைகள் அமைக்கப்படுவதால் )

அதே போல் Wellington Oval, WACA இரெண்டிலும் காற்று வேகமாக அடிப்பதும் - conditions இல் ஒன்றாக விளையாட்டின் அங்கமாக கருதப்படும்.

Fremantle Doctor பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது விடயத்தில்.. எங்கள் கருத்தையே சூழலியலாளரும் அரசியல்வாதியும் எங்கள் முன்னாள் ஆசிரியருமான ஐங்கரநேசனும் கொண்டிருக்கிறார். எதுக்கும் தாடியருக்கு உறைக்கச் சொல்லுங்கள். 

  

On 19/4/2024 at 15:34, பிழம்பு said:

இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப)

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.