Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

கொழும்பு அளுத்கடை பகுதியிலுள்ள உணவு ஒன்றிற்கு வருகை தந்திருந்த வெளிநாட்டவர் அச்சுறுத்தப்படுவதைப் போன்ற காணொளி நேற்யைதினம் சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து உணவகத்தின் உரிமையாளர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கையில் ஏதாவது பிரச்சனை என்றால் முதல்வேலை காணொளியாக எடுத்துடணும்.

ஒவ்வொரு தடவை இலங்கை போகும்போதும் யாராவது தெரியாதவர்கள் வந்து கதைக்க தொடங்கினால் உடனேயே காணொளி எடுத்துப் போடு என்று மனைவிக்கு சொல்லி வைத்துள்ளேன்.

இதுவரை எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

  • Replies 138
  • Views 10.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து,

  • நிழலி
    நிழலி

    நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும்

  • ஏராளன்
    ஏராளன்

    இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் ஏதாவது பிரச்சனை என்றால் முதல்வேலை காணொளியாக எடுத்துடணும்.

ஒவ்வொரு தடவை இலங்கை போகும்போதும் யாராவது தெரியாதவர்கள் வந்து கதைக்க தொடங்கினால் உடனேயே காணொளி எடுத்துப் போடு என்று மனைவிக்கு சொல்லி வைத்துள்ளேன்.

இதுவரை எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

முன்பை விட, இப்போ ஏமாற்றுபவர்கள்  இன்னும் அதிகமாகி உள்ளதாக பலர் சொல்கிறார்கள்.

On 15/4/2024 at 19:29, ooravan said:

நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும் இருந்தும், வேறு எதனை எதிர்பார்க்கப் போகின்றீர்கள்" என்றே.

இதனால் என்ன பயன்? போர்க் குற்ற விசாரணை எல்லாம் நடக்குமா? எனக் கேட்டால், கண்டிப்பாக இல்லை.

ஆனால், ஆகக் குறைந்தது ஒரு சிலருக்காவது, இலங்கை எனும் சொர்க்க புரியில், ஒரு இனப்படுகொலை யுத்தம் இடம்பெற்றதா என கேள்விகளாவது மனசில் எழும்.

8 minutes ago, தமிழ் சிறி said:

முன்பை விட, இப்போ ஏமாற்றுபவர்கள்  இன்னும் அதிகமாகி உள்ளதாக பலர் சொல்கிறார்கள்.

நீங்கள் யாழ்ப்பாணம் போனால், வெளி நாட்டில் இருந்து வந்தவர் என்று அவர்கள் புரிந்து கொண்டால், முச்சக்கர சாரதியில் இருந்து தின்னவேலி சந்தையில் காய்கறி விற்பவர் வரைக்கும் நன்றாக ஏமாற்றுவார். கேள்வி கேட்டால், போருக்கு பயந்து ஓடிப் போனவர் தானே என்றும் சிலர் நக்கலடிப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

அது.

இது நியாயமான, தேவையான, வினத்திறனான செயல்.

ஈழத்தமிழர், சொற்பமாக ஏனைய தமிழர் மட்டும் வாசிக்கும் தளத்தில் வந்து சிங்களவன் மோடன், இலங்கையில் ஒரே களவு என எழுதுவது ஒரு பயனையும் தராது.

19 hours ago, பெருமாள் said:

இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய

எல்லாம் மங்கி, கடைசியில் பார்வையும்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நீங்கள் யாழ்ப்பாணம் போனால், வெளி நாட்டில் இருந்து வந்தவர் என்று அவர்கள் புரிந்து கொண்டால், முச்சக்கர சாரதியில் இருந்து தின்னவேலி சந்தையில் காய்கறி விற்பவர் வரைக்கும் நன்றாக ஏமாற்றுவார். கேள்வி கேட்டால், போருக்கு பயந்து ஓடிப் போனவர் தானே என்றும் சிலர் நக்கலடிப்பர்.

பாஞ்ச்  அண்ணை சென்ற மாதம் யாழ்ப்பாணம் போய் வந்தவர்.
அவர் சொன்னார்... கடையில் பொருட்கள் வாங்க நின்றால், சிலர் வந்து குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கித் தரும்படி கையை பிடித்து கெஞ்சுவார்களாம். பார்க்க பெரும் பரிதாபமாக இருக்குமாம். அவர்களில் இருவகை உண்டாம்.  சிலர்  வறுமையில்  வேறு வழி  இல்லாமல் கேட்பவர்கள். மற்றவர்கள் வாங்கிக் கொடுத்த பொருளை கொண்டு போய் வேறு இடங்களில் பாதி விலைக்கு விற்று விட்டு அந்தக் காசில் போதை ஏற்றுவார்கள்  என்றார். இதனால்... யாருக்கு கொடுப்பது, யாரை  தவிர்ப்பது என்று அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார். அதனால்.... உண்மையான வறியவர்களும்  பாதிக்கப் படுகின்றார்களாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

நானும் நீங்களும் இலங்கையில் இருந்து வந்தவர்கள். சுத்துமாத்து சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். எனக்கோ உங்களுக்கோ அது பெரிய விடயமல்ல.

ஆனால் இந்த நிகழ்வை வெளியிட்டவர் வேறொரு நாட்டை சேர்ந்தவர்.அதுவும் அவர் ஒரு யுரியூப்பாளர். அவர் வெளியிட்ட காணொளி அவர் தம் நாடுகளுக்கும்  அதன் தொடர்புடையவர்கள் வரைக்கும் சென்று நாறடிக்கும். அவர் தன் மீதி பணத்தையும் மீள கொடுத்து தனக்குத்தானே பெருமை சேர்த்தாரே தவிர......முதல் சொன்ன நாறடிப்பு என்றுமே மீள பெறப்பட மாட்டாது.

ஓம் இது அவர்களின் சுற்றுலாத்துறைக்கே ஒரு நாறடிப்புத்தான். 

எப்போ? இதை நிழலி சொல்லுமாப்போல் ஈழத்தமிழர் அல்லாதோர் முன் கொண்டு செல்லும்போது.

இலங்கை உண்மையிலே கொலைகளமாக இருந்த போதே சுற்றுலா போன வெள்ளைகள் பல கோடி.

எனவே இப்படி செய்வது பெரிய தாக்கத்தை தராவிடினும் - ஒரு செய்தியையாவது சொல்லும்.

ஆனால் இப்படியா சுத்துமாத்தோடு வாழ்ந்து வளர்ந்த எமக்கே இதை வைத்து பிம்பம் எழுப்ப முனைவது பேதமை.

இதெல்லாம் சப்பை மேட்டர்.

2024 நல்லூர் சீசனுக்கு போகும் வெளிநாட்டு தமிழர் அளவு நான் சொல்வதை உறுதி செய்யும்.

5 hours ago, satan said:

மறந்து போயிருக்கும் எப்படி நம்மவர் சொந்த நாட்டுக்குள்ளேயே விரட்டப்பட்டனரென.

விரட்டப்பட்டதை வடக்கில் இருந்து பார்த்தவர்களுக்கு மறந்தாலும், விரட்டப்பட்டவர்களுக்கு மறக்காது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

நாடே கொந்தளிக்கும், எரியும், ரத்த ஆறு ஓடும்  தமிழர் உரிமை பெற்றால் இலங்கையில்.. எப்படி எல்லாம் முழுப்பூசணிக்காயை மறைக்க பாடுபடுகிறார்கள்!

தமிழர் உரிமை பெற்றால் ரத்த ஆறு ஓடும் என்பதை நான் எங்கே மறுத்தேன்?

நான் சொல்லாத ஒன்றை சொல்லி ஏன் பூசணிக்காயை என் தலையில் கட்டுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

முன்பை விட, இப்போ ஏமாற்றுபவர்கள்  இன்னும் அதிகமாகி உள்ளதாக பலர் சொல்கிறார்கள்.

வெளிநாட்டுகாரரை எப்படித் தான் மணந்து பிடிக்கிறார்களோ தெரியாது.

ஆனாலும் கண்டு பிடித்து விடுகிறார்கள்.

நான் சொல்வது

ஒரு செல்போன் வைத்திருந்தால் வெளிநாட்டுக்காரன்

இரண்டு போன் வைத்திருந்தால் உள்நாட்டுக்காரன்.

19 minutes ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்

சிறி பாஞ்ச் எப்படி இருக்கிறார்?

ஏன் யாழைவிட்டு ஒதுங்கி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்  அண்ணை சென்ற மாதம் யாழ்ப்பாணம் போய் வந்தவர்.
அவர் சொன்னார்... கடையில் பொருட்கள் வாங்க நின்றால், சிலர் வந்து குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கித் தரும்படி கையை பிடித்து கெஞ்சுவார்களாம். பார்க்க பெரும் பரிதாபமாக இருக்குமாம். அவர்களில் இருவகை உண்டாம்.  சிலர்  வறுமையில்  வேறு வழி  இல்லாமல் கேட்பவர்கள். மற்றவர்கள் வாங்கிக் கொடுத்த பொருளை கொண்டு போய் வேறு இடங்களில் பாதி விலைக்கு விற்று விட்டு அந்தக் காசில் போதை ஏற்றுவார்கள் என்று என்றார். இதனால்... யாருக்கு கொடுப்பது, யாரை  தவிர்ப்பது என்று அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார். அதனால்.... உண்மையான வறியவர்களும்  பாதிக்கப் படுகின்றார்களாம்.

@goshan_che 

உம் போய்வந்தார்.அப்படி எதுவும் எழுதலையே?

ஒருவேளை காரைவிட்டு இறங்கலையோ?

சும்மா பகிடிக்கு,தடி பொல்லுகளோடு வந்திடாதேங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி பாஞ்ச் எப்படி இருக்கிறார்?

ஏன் யாழைவிட்டு ஒதுங்கி இருக்கிறார்.

பாஞ்ச்... பேரப் பிள்ளையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்... பேரப் பிள்ளையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.

ஏன் யாழைவிட்டு ஒதுங்கியுள்ளார்?

40 minutes ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்  அண்ணை சென்ற மாதம் யாழ்ப்பாணம் போய் வந்தவர்.
அவர் சொன்னார்...

யாழ்ப்பாணம் போய் வந்தவரை அப்படியே கொஞ்சம் யாழ் பக்கமும் வரச் சொல்லுங்கள். யாழ்ப்பாணத்தை விட யாழ் கொஞ்சம் கிட்ட என்று சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

நீங்கள் இலங்கையில் இருந்து இதை எழுதியிருந்தால் அதற்கு வரவேற்பு  அதிகமாக இருந்திருக்கும்.

ரைட்டு,

சாத்ஸ் கொச்சிக்காயை கடித்தே விட்டார்🤣.

பிகு

1. ஒரு மனிதன் ஒரு நாட்டுக்கு போய் தன் பார்வையில் எழுதிய ஒரு பயணகட்டுரைக்கு (அதில் சொல்லப்பட்டவை கொஸ்பெல் உண்மைகள் என நான் சொல்லவில்லை, நான் கண்டதன் அடிப்படையில் என் கருத்துக்கள் மட்டுமே) - ஒரு மாதமாக சம்பந்தமே இல்லாத பல திரிகளில் குய்யோ….முறையோ என கதறி திரியும், உங்களையும் உங்கள் சகாக்களை நினைக்க பரிதாபமாகவே உள்ளது. 

2. சேவல் கூவாமல் விட்டாலும் பொழுது விடியும். நீங்கள் யாழில் எப்படி கதறினாலும் இலங்கையில் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கும் - நான் கண்டு வந்து எழுதியது - இப்போ இலங்கையில் உள்ள நிலைமை என நான் காண்பதை.

யாழில் எழுதும் பல இலங்கை வாசிகள் உளர். எவரும் நான் சொன்னதை மறுக்கவில்லை. நான் எழுதுவது பிழை என்றால் என்னை திருத்துங்கள் என நானே சொன்ன பின்னும். சிலர் வரவேற்று கருத்திட்டுள்ளனர்.

எதிர்மறையாக எழுதியோர் பலர் 20+ வருடங்களா இலங்கை போகாதோர்.

@MEERA @nedukkalapoovan சில கேள்விகளை எழுப்பினர் பதில் கூறினேன். அவர்கள் நிலை இலங்கையில் அப்படி ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதாக படுகிறது. இருக்கட்டும். என்னது போலவே அவர்கள் அனுபவத்தையும் மறுக்கும் தகுதி எனக்கில்லையே.

3. இலங்கை “சொர்க்காபுரி” என எங்கும் நான் எழுதவில்லை. இலங்கை சொர்க்கம் எண்டால் நான் ஏன் இந்த குளிருக்குள் கிடந்து மாரடிக்கப்போகிறேன். 

“நிலமை எதிர்பார்த்தளவு மோசமில்லை” என்பதற்கும் “நாடு சொர்க்கம்” என்பதற்கும் உள்ள வேறுபாடு புரியாத அளவுக்கு மூளை சிலருக்கு சக்கு பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது.

பிகு:பிகு:

மேலே “சொர்கம்யா” என எழுதியது நையாண்டி. கூடவே எலி பிடிக்க சீஸ் தூவது போல், இப்படி எழுதினால் யாருக்கு அதிகம் பத்தும் என ஒரு பரிசோதனையும்.

காங்கிராட்ஸ் - போட்டியின் வெற்றியாளர் நீங்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் யாழைவிட்டு ஒதுங்கியுள்ளார்?

இருதய அறுவைச் சிகிச்சையின் பின்... முன்பு போல் எழுத முடியவில்லை என்று சொன்னார்.
இடைக்கிடை யாழை மேலோட்டமாக  பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

3 minutes ago, நிழலி said:

யாழ்ப்பாணம் போய் வந்தவரை அப்படியே கொஞ்சம் யாழ் பக்கமும் வரச் சொல்லுங்கள். யாழ்ப்பாணத்தை விட யாழ் கொஞ்சம் கிட்ட என்று சொல்லவும்.

 நீங்களும், ஈழப்பிரியனும்  விசாரித்ததாக சொல்கின்றேன் நிழலி. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

@goshan_che 

உம் போய்வந்தார்.அப்படி எதுவும் எழுதலையே?

ஒருவேளை காரைவிட்டு இறங்கலையோ?

சும்மா பகிடிக்கு,தடி பொல்லுகளோடு வந்திடாதேங்கோ.

காரா? ஹெலிகொப்டர் அண்ணை. ஹெலிகொப்டர்🤣.

உண்மையில் இப்படி யாரும் என் கையை பிடித்து கடைகளில் கெஞ்சவில்லை. அதுவும் யாழில் - பஸ் நிலையத்தில் யாசகர்கள் கொஞ்சம் அலுப்புத்தந்தார்கள்.  

யாழ்பாண கடைகாரர்கள் - window shopping செய்பவர்களையே விரட்டுவார்கள். அவ்வளவு இறுக்கமானவர்கள். தமது கடையில் நிற்கும் கஸ்டமரை இப்படி அலுப்பு கொடுக்க விடுவார்களா?

சில சமயம் முதிர்ந்த வெளிநாட்டு மனிதர் என்பதால் எல்லாரும் சேர்ந்து பாஞ்ச் ஐயாவை மொய்த்தார்களோ என்னமோ?

அதே போல் நான் இந்த அனுபவத்தை பெறாமைக்கும் வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது வேட்டி கட்டுவது என நினைக்கிறேன். 

23 minutes ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்... பேரப் பிள்ளையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.

என் அன்பையும் சொல்லவும்.

45 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டுகாரரை எப்படித் தான் மணந்து பிடிக்கிறார்களோ தெரியாது.

மணந்துதான்…..

Oil of Olay, Gucci, Tom Ford, DKNY, Versace, Armani, CK, Tommy……

வெளிநாட்டு வாசம் என்று ஒரு விசயம் நிச்சயம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

என் அன்பையும் சொல்லவும்.

நன்றி. நிச்சயமாக பாஞ்ச் அண்ணைக்கு சொல்லி விடுகின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி. நிச்சயமாக பாஞ்ச் அண்ணைக்கு சொல்லி விடுகின்றேன். 🙂

நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டுகாரரை எப்படித் தான் மணந்து பிடிக்கிறார்களோ தெரியாது.

ஆனாலும் கண்டு பிடித்து விடுகிறார்கள்.

இதை பாஞ் செய்ததாக எழுதவில்லை, ஆனால் இலங்கையில் இறங்கியதும் நடை உடை பாவனையில் உள்ளூர் காரர் போல மாறி "ஜோதியில்" கலந்து விடா விட்டால் இது போன்ற பிரச்சினைகள் வரலாம்.

பல வருடங்கள் முன்பு நானும் என் ஐரோப்பாவில் வசிக்கும் அண்ணரும் ஊர் போனோம். அவர் கடைக்கு மீன் வாங்கப் போனால் ஒரு கிராமத்திற்கே தேவையான கடலுணவுகளை தலையில் கட்டி அனுப்பி விடுவார்கள் மீன் வியாபாரிகள்😂. உடைகளை அவர் மாற்றிக் கொள்ளவேயில்லை, அது தான் காட்டிக் கொடுத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்  அண்ணை சென்ற மாதம் யாழ்ப்பாணம் போய் வந்தவர்.
அவர் சொன்னார்... கடையில் பொருட்கள் வாங்க நின்றால், சிலர் வந்து குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கித் தரும்படி கையை பிடித்து கெஞ்சுவார்களாம். பார்க்க பெரும் பரிதாபமாக இருக்குமாம். அவர்களில் இருவகை உண்டாம்.  சிலர்  வறுமையில்  வேறு வழி  இல்லாமல் கேட்பவர்கள். மற்றவர்கள் வாங்கிக் கொடுத்த பொருளை கொண்டு போய் வேறு இடங்களில் பாதி விலைக்கு விற்று விட்டு அந்தக் காசில் போதை ஏற்றுவார்கள் என்று என்றார். இதனால்... யாருக்கு கொடுப்பது, யாரை  தவிர்ப்பது என்று அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார். அதனால்.... உண்மையான வறியவர்களும்  பாதிக்கப் படுகின்றார்களாம்.

பஞ் அண்ணா சொன்ன‌து முற்றிலும் உண்மை
இதை விட‌ ப‌ல‌வித‌மாய் யோசிச்சு காசு அடிக்கும் கூட்ட‌ம் இருக்கின‌ம் / அப்ப‌டியான‌ கூட்ட‌ம் க‌ஸ்ர‌ம் என்று சொல்லி க‌ஞ்சா வேண்டுவ‌துக்கு ப‌ல‌ பொய்க‌ளை அவுட்டு விடுங்க‌ள் ந‌ம்ம‌ல‌ மாதிரி ஏமாளியில் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ பார்கேட்டில் இருப்ப‌தை எடுத்து கொடுத்து விடுவோம் பாவ‌ம் பார்த்து.......................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

நக்கலாக இல்லை….தகவலுக்காகவே கேட்கிறேன். 

நீங்கள் கடைசியாக ஊர் போனது எப்போ?

நீங்கள் விபரிக்கும் உதாரணம் தமிழ்நாட்டுக்கு 100% சரி.

ஆனால் சென்னைக்கும், யாழுக்கும்கொ/ழும்புக்கும் பாரிய வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடு இன்றும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

————-—————

—————

போதை 

சுற்றுலா வரும் புலம்பெயர் தமிழரிடம், யாழில் யாசகர் காசு வாங்கி கஞ்சா அடிக்கிறார்கள் என்பது எந்தளவு தூரம் உண்மை என தெரியவில்லை.

நீங்கள் இங்கே இருந்து அனுப்பும் பணம் அங்கே உங்கள் இளவயது உறவினர்களால் தப்பாக பயன்படுத்தபடக்கூடும்.

கஞ்சா பாவனை மாணவர், பல்கலை, வேலை செய்யும் இள வயதினர் மத்தியில்தான் அதிகம் என கேள்விப்பட்டேன்.

யாசகம் கேட்பவர்கள் மிக பெரும்பாலோனோர் 40+ தனி ஆண்/பெண்கள்.

நம்மிடம் யாசகம் கேட்பதால் அவர்களை சகட்டு மேனிக்கு கஞ்சா கேசில் பிடித்து போட கூடாது.

அதே போல் யாழ் மக்களும், ஏனைய இலங்கை வாசிகளும் அறுதி பெரும்பான்மையானோர் நாணயமானோரே. திரி எல்லாரும் கொள்ளைகாரர் என்ற ரீதியில் போக தலைபடுவதாக தெரிகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தளவு யாழில் இம்முறை எடுத்து வரும் தின்பண்டங்களை உற்பத்தியாளர்களிடமே வாங்கினேன். வெளிநாட்டுக்கு, எனக்கு என சொல்லியே வாங்கினேன். ஒருவர் கூட ஏய்க்கவில்லை.

அதுவும் அந்த எள்ளுபாகு வித்த அம்மா, “சாப்பிட்டு பாருங்கோ, சாப்பிட்டு பாருங்கோ” என எனக்கும் ஆட்டோ ஓட்டியவருக்கும் சேர்த்து ஒரு பக்கெட்டையே இனாமாக தந்து விட்டார்.

நான் வங்கியதோ வெறும் 10 பக்கெட். இதில் இவர் இனி எங்கே இலாபம் பார்பது?(11க்கு விலை கொடுத்தேன்).

போர் பலதை பறித்து கொண்டாலும் என் மக்களின் என் மக்களின் தன்மானத்தை, நாணயத்தை பறிக்கவில்லை என்பதுதான் உண்மை.

எல்லா சமூகத்திலும் கறுபாடுகள் உண்டே. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன.

இதை இங்கே தூக்கி பிடிக்கும் புலம்பெயர் சமூகம் மட்டும் என்ன திறமா?

இலண்டன் கடைகளில் விலை அடிக்காமல், நான் போனால் ஒரு விலையும், என் இளவயது மகன் போனால் கூடிய விலையும் பல தரம் அடித்துள்ளார்கள்.

எனது திரியில் கூட பதிந்தேன், எப்படி 80ரூபாய்க்கு ஊரில் மஞ்சள் கடலை வாங்கி அதை இங்கே 500 ரூபாய்க்கு விற்கிறார்கள் என.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

நக்கலாக இல்லை….தகவலுக்காகவே கேட்கிறேன். 

நீங்கள் கடைசியாக ஊர் போனது எப்போ?

நீங்கள் விபரிக்கும் உதாரணம் தமிழ்நாட்டுக்கு 100% சரி.

ஆனால் சென்னைக்கும், யாழுக்கும்கொ/ழும்புக்கும் பாரிய வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடு இன்றும் உள்ளது.

அது இல‌ங்கைக்கும் பொருந்தும்
ச‌கோ
த‌மிழ் நாட்டில் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை வைத்து காசு ச‌ம்பாதிக்கும் கும்ப‌ல்க‌ள் இருக்கின‌ம்.....................உங்க‌ளை மாதிரி வ‌ருட‌த்துக்கு இல‌ங்கைக்கு என்னால் இர‌ண்டு த‌ட‌வை போக‌ முடியாது போக‌ வேண்டிய‌ அவ‌சிய‌மும்  என‌க்கு இல்லை  ச‌கோ....................அண்மையில் என்ற‌ த‌ம்பி இர‌ண்டு முறை ஊர் போய் வ‌ந்தான் அவ‌ன் சொன்ன‌தையும் ப‌ஞ் அண்ணா த‌மிழ் சிறி அண்ணாக்கு சொன்ன‌தும் கிட்ட‌ த‌ட்ட‌ ச‌ரி என்று ப‌டுது......................அதை வைச்சு தான் எழுதினேன்

அந்த‌ இட‌த்தில் நான் நின்று இருந்தால் கூட‌ க‌ஸ்ர‌ம் என்று நினைத்து கேட்க்குதுக‌ள் என்று என்ர‌ பேசில் இருக்கும் காசை தூக்கி குடுத்து இருப்பேன் க‌ருனை ம‌ன‌சு உள்ள‌துக‌ள் அதுக‌ள் சொல்லுவ‌து உண்மை என்று உத‌வ‌த்தான் பாப்பின‌ம்

2004 இல‌ங்கையில் வ‌வுனியா ர‌வுனில் நிக்கும் போது சின்ன‌ப் பெடிய‌ன் சாப்பாட்டுக்கு காசு இல்லை என்று சொல்ல‌ உட‌ன‌ பாவ‌ம் க‌ஸ்ர‌ம் என்று காசை கொடுத்தேன் அந்த‌ சிறுவ‌ன் வ‌றுமையில் கேட்டான‌ அல்ல‌து அந்த‌ சிறுவ‌னை யாரும் இய‌க்கினமா என்று  தெரியாதுஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம்  

நான் டென்மார்க் வ‌ந்த‌ பிற‌க்கு இல‌ங்கை போன‌து 2004 ம‌ற்றும் 2019

2005க‌ளில் ஆட்டோவில் என்ர‌ ம‌ச்சானை ஏற்றி போன‌   சிங்க‌ள‌  க‌ள்ள‌ன்  ஆட்டோவை அவ‌ங்க‌ட‌ ப‌க்க‌ம் விட்டுட்டு ம‌ச்சானுக்கு அடிச்சு போட்டு அவ‌ன் வைச்சு இருந்த‌ காசை எல்லாம் ப‌றித்து விட்டு அவ‌னை த‌னிய‌ விட்டுட்டு த‌ப்பி ஓடின‌வ‌ங்க‌ள்..........................

சும்மா ஒரு உழுந்து வ‌டையையும் தேனீரும் கொடுத்து விட்டு 1000ரூபாய் கேட்க்கிறான் என்றால் அந்த‌ சிங்க‌ள‌வ‌ன் எப்ப‌டி ப‌ட்ட‌ மோச‌டிக் கார‌னாய் இருப்பான்😡  அதே தெருவில் போன‌  சிங்க‌ள பெண்ண‌ அந்த‌ வெள்ளைய‌ன் கேக்கிறார் இந்த‌ வ‌டை என்ன‌ விலை என்று கேட்க்க‌ அது சொல்லுது 150ரூபாக்கு உள்ள‌ தான் இருக்கும் என்று..................த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ காணொளி அனுப்ப‌ முத‌லே இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌லே அந்த‌ காணொளிய‌ யூருப் அல்ல‌து ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன்...................................................
 
இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இன்று நேற்று ந‌ட‌க்க‌ வில்லை

சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்...................இதை ப‌ற்றி யாழில் ஏன் இப்ப‌ விவாதிக்கின‌ம் என்று தெரிய‌ல‌😏..................................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இன்று நேற்று ந‌ட‌க்க‌ வில்லை

சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்...................இதை ப‌ற்றி யாழில் ஏன் இப்ப‌ விவாதிக்கின‌ம் என்று தெரிய‌ல‌😏..................................

பதிலுக்கு நன்றி. 

இது பழைய மேட்டரா? 

சிறிதரன் எம்பி ட மச்சாண்ட தானே பதிவு? அவர்ட பொட்டுகேட்ட மறைக்க பழைய செய்தியை எல்லாம் மீள் சுழற்சி செய்யினம் போல?

————

என்ன @பெருமாள் நித்திரைபாயால எழும்பி “இலங்கை பற்றிய மோசமான செய்திகள்” என கூகிள் பண்ணி, அவற்றை இங்கே வெட்டி ஒட்டி போட்டுத்தான் - பல்லு தீட்டுறனியள் தெரியும்.

ஆனால் இப்படி அதர பழைய நியூசையுமா, ரிசைக்கிள் பண்ணுவீங்க?

(நீங்கள் சுமந்திரனை எதிர்ப்பது, சிறிததரனுக்கு ஆதரவாகவா? சந்தேகம் மட்டுமே.).

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2024 at 19:54, பெருமாள் said:

அண்மையில், சைவ உணவகம் ஒன்றுக்குச் சென்ற ஜேர்மனிய பிரஜைக்கு ஒரு வடை 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த செய்தியில் ஆரம்பம் முதலே என்னை யோசிக்க வைத்த விடயம் இது.

அந்த வீடியோ வாட்சப்பில் உள்ளது. தோற்றத்தை பார்த்தால் சைவக் கடைதான் சந்தேகமே இல்லை

பரிமாறும் பெண்ணை பார்த்தால் சிங்களவராக தெரிகிறது.

ஒரு ஆளும், உரிமையாளரும் சேர்ந்து ஏமாற்றுகிறனர். இருவரை பார்த்து இனம் அறிய கடினமாக இருக்கிறது. ஆனால் ஏமாற்று ஆள் தன்னை பெளத்தர் என்கிறார்.

ஆனால் சைவக்கடை சிங்களவர் நடத்தி நான் கேள்விபட்டதில்லை.

வேறு யாரும் கேள்விபட்டதுண்டா? @நிழலி @விசுகு @colomban

பெருமாள் பிள்ளையார் பிடித்தால், அது குரங்காகியே தீரும் என்பது விதி.

இங்கேயும் கள்ளர்கள் இருவரும் அல்லது ஒருவராவது தமிழர் என முடியப்போது போல இருக்கே ?

அப்புறம்….

# அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் என்றாகிவிடும்.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.