Jump to content

மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?

மசாலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனுடன், அதன் கொள்முதல் மற்றும் விற்பனையை நிறுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, எம்.டி.எச்-இன் மெட்ராஸ் கறிப் பொடி, சாம்பார் மசாலா பொடி, மற்றும் கறிமசாலா பொடி ஆகியவற்றில் 'எத்திலீன் ஆக்சைடு' எனும் பூச்சிக்கொல்லி இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு மையம், இந்த மசாலா பொருட்களின் விற்பனையை நிறுத்தியதற்கான காரணத்தை விளக்குகையில், “புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் எத்திலீன் ஆக்சைட் வேதிப்பொருளை குரூப் 1 கார்சினோஜென் என்ற பிரிவில் வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

கார்சினோஜென்கள் என்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் பொருட்கள்.

மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள்.

சிங்கப்பூரில் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவுக்கு தடை

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மையம் மூன்று சிறிய கடைகளில் இருந்து மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஹாங்காங்கில் உணவில் எத்திலீன் ஆக்சைடு போன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதத்துடன் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில் எத்திலீன் ஆக்சைடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு அந்நாட்டு உணவு நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் இந்த மசாலாப் பொருட்களின் இறக்குமதியாளரான முத்தையா & சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்த தயாரிப்பை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என சிங்கப்பூர் உணவு நிறுவனம் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன் முடிவுக்கு ஆதரவாக, சிங்கப்பூரின் உணவு நிறுவனம், ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட அதே அறிவுறுத்தல்களை மேற்கோளிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், எம்டிஎச் நிறுவனத்தின் மூன்று மசாலாக்கள் மற்றும் எவரெஸ்டின் மீன் கறி மசாலா ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் கூறுகளைக் கொண்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எவரெஸ்ட் நிறுவனம் சொன்னது என்ன?

சிறிய அளவிலான எத்திலீன் ஆக்சைடினால் உடனடி ஆபத்து இல்லை என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் நீண்டகால பயன்பாட்டுடன், இத்தகைய இரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

செய்தி இணையதளமான வியானுக்கு (Wion) அளித்த பதிலில், தாங்கள் ஐம்பது வருடங்கள் பழமையான மற்றும் புகழ்பெற்ற ஒரு பிராண்ட் என்று எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.

"எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பு தரங்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம்.

எங்கள் தயாரிப்புகளுக்கு இந்திய ஸ்பைஸ் போர்டு (Indian Spice Board) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) உட்பட அனைத்து ஏஜென்சிகளிடமிருந்தும் ஒப்புதல் முத்திரை உள்ளது.

ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் முன், எங்கள் தயாரிப்புகள் இந்திய ஸ்பைஸ் போர்டு மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தற்போது அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாட்டு குழு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்யும்” என எவரெஸ்ட் நிறுவனம் கூறியது.

மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன?

எத்திலீன் ஆக்சைடு நிறமற்ற மற்றும் எரியக்கூடிய ஒரு வாயு. இது பொதுவாக விவசாயம், சுகாதாரம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களில் புகைபோக்கிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் கருத்தடை மருந்துகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

எத்திலீன் ஆக்சைடு நுண்ணுயிர் மாசுபாட்டை அகற்றவும் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மசாலா மற்றும் பிற உலர் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவுகளை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் எத்திலீன் ஆக்சைடு பயன்படுகிறது.

இருப்பினும், பல சுகாதார நிறுவனங்கள் இதை புற்றுநோய்க்கான காரணிகளின் (கார்சினோஜென்கள்) பிரிவில் வைத்துள்ளன. கார்சினோஜென்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை.

எத்திலீன் ஆக்சைட்டின் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பல நாடுகளின் உணவு கட்டுப்பாட்டாளர்கள் உணவுப் பொருட்களில் அதன் பயன்பாடு குறித்து கடுமையான விதிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நாடுகளில் எத்திலீன் ஆக்சைட்டின் அளவைக் கண்டறிய கடுமையான சட்டங்கள் உள்ளன.

அமெரிக்காவிலும் எழும் மசாலா பற்றிய கேள்விகள்

இந்திய மசாலாப் பொருட்கள் வெளிநாட்டு விதிமுறைகளில் சிக்கியதற்கு உதாரணமாக இதற்கு முன்பும் சில வழக்குகள் உள்ளன. 2023ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் எவரெஸ்டின் சாம்பார் மசாலா மற்றும் கரம் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது.

இந்த மசாலாக்கள் சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டவை என்று கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைச்சுற்றல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும்.

சமீபத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள குழந்தை உணவு விற்பனை நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்புகளில் அதிகப்படியான சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த தயாரிப்புகளில் உலகின் மிகப்பெரிய குழந்தை தானிய பிராண்டான செரிலாக்கும் (Cerelac) அடங்கும். குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பது நல்லதல்ல.

சுவிஸ் நிறுவனமான பப்ளிக் ஐ இந்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சர்வதேச குழந்தை உணவு நடவடிக்கை நெட்வொர்க்குடன் இணைத்து கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புகளை ஒரு பெல்ஜிய ஆய்வகத்தில் சோதனை செய்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cd1d2gxelglo

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

24-66224c1f2bdb2.webp

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீட்டில் தயாரித்து பாவிப்பதே மசாலாக்கள் எனப்படும் வாசனைப் பொருட்கள் தரமாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

MDH & EVERESTஎன்கிற இந்திய மிளகாய்த்தூள்,சரக்குத்தூள், மீன்கறி மசாலா,சாம்பார் மசாலா இப்படி பலதரப்பட்ட பொதிகளிலும் புற்று நோயை தூண்டக் கூடியதாக உள்ளதாக கூறி கொங்கொங் சிங்கப்பூரில் தடை செய்துள்ளனர்.

உங்கள் வீடுகளிலும் இந்த பெயர்கள் கொண்ட பொதிகள் இருந்தால் அவதானமாக செயற்படுங்கள்.

காணொளியைப் பாருங்கள் முடிவெடுங்கள்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி மிளகாய்த்தூள் சரக்குத் தூள் எல்லாம் பொருட்களை தனித்தனியாக வாங்கி வீட்டிலேயே செய்ய வேணும் போல கிடக்கு.......!   😴

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/4/2024 at 13:58, பெருமாள் said:

இந்த தயாரிப்புகளை ஒரு பெல்ஜிய ஆய்வகத்தில் சோதனை செய்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வக அறிக்கையை பார்த்தால் சிங்கள ஏற்றுமதி இறக்குமதி இலகுவாக முடங்கும் நெட்டோ  சோடா குடிக்கணும் என்றால் சொறிலங்காவுக்குத்தான் போகணும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

இனி மிளகாய்த்தூள் சரக்குத் தூள் எல்லாம் பொருட்களை தனித்தனியாக வாங்கி வீட்டிலேயே செய்ய வேணும் போல கிடக்கு.......!   😴

நாங்கள் எமக்கு தேவையானவற்றை சேர்த்து கொடுத்தால் அரைத்து தர பல இடங்கள் உள்ளது.

கடைகளில் விற்கும் தூள் சரக்கு தூள் வகைகள் வாங்கி நீண்ட காலமாகி விட்டது.அவற்றில் கவனமாக இருங்கள்-

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@ஏராளன் @suvy @குமாரசாமி

எந்த நாட்டு செத்தல் மிளகாய்,  மல்லி , சீரகம் உபயோகிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, MEERA said:

@ஏராளன் @suvy @குமாரசாமி

எந்த நாட்டு செத்தல் மிளகாய்,  மல்லி , சீரகம் உபயோகிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறீர்கள்?

ஐயா!  ஏதோ புது நியூஸ் சொல்லப்போறார் போல கிடக்கு....🧐

எதுக்கும் நாமள்  ஜேர்மன் மல்லி செத்தல் மிளகாய் சீரகம் எண்டு சொல்லி விடை பெற வேண்டியது தான்....😂

Vadivelu Runing GIF - Vadivelu Runing Tamil - Discover & Share GIFs

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

ஐயா!  ஏதோ புது நியூஸ் சொல்லப்போறார் போல கிடக்கு....🧐

எதுக்கும் நாமள்  ஜேர்மன் மல்லி செத்தல் மிளகாய் சீரகம் எண்டு சொல்லி விடை பெற வேண்டியது தான்....😂

Vadivelu Runing GIF - Vadivelu Runing Tamil - Discover & Share GIFs

கோசானின் புண்ணியத்தால் எம்மவர்களின் இறக்குமதி வியாபாரம் தொடர்பாக ஆராய வெளிக்கிட்டு இப்ப பல விடயங்கள் தெரிய வந்துள்ளது.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, MEERA said:

கோசானின் புண்ணியத்தால் எம்மவர்களின் இறக்குமதி வியாபாரம் தொடர்பாக ஆராய வெளிக்கிட்டு இப்ப பல விடயங்கள் தெரிய வந்துள்ளது.

தெரிந்ததை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, MEERA said:

@ஏராளன் @suvy @குமாரசாமி

எந்த நாட்டு செத்தல் மிளகாய்,  மல்லி , சீரகம் உபயோகிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறீர்கள்?

அண்ணை நம்ம அயலகத்தான் தானே இங்க விற்கப்படுவது? கொஞ்சமாக உள்ளூர் உற்பத்தியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, MEERA said:

கோசானின் புண்ணியத்தால் எம்மவர்களின் இறக்குமதி வியாபாரம் தொடர்பாக ஆராய வெளிக்கிட்டு இப்ப பல விடயங்கள் தெரிய வந்துள்ளது.

நீங்கள் அறிந்தவற்றை கொஞ்சம் எங்களுக்கும் அறியத் தருவதுதானே ......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இங்கு மற்றைய நாடுகள் தடைசெய்ய காரணம் விவசாயத்தின் போது உபயோகிக்கப்படும் மிதமிஞ்சிய பூச்சிக் கொல்லிகள்.

2022 இல் Eu இந்த எத்திலின் சோதனையை குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு கட்டாயாமாக்கினார்கள். மார்ச் மாதத்திலிருந்து U.K. கட்டாயாமாக்கி உள்ளது.

தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் செத்தல் அரிசி மல்லி சீரகம்  உட்பட பலவற்றிற்கு Pesticide சோதனை செய்யப்பட வேண்டும்.

அதேபோல்  இந்தியாவிலிருந்து சிறீலங்கா சென்று  Product of Sri Lanka என்று U.K. வரும் செத்தல் மிளகாய் ( மிளகாய் தூள் உட்பட)  இனி Aflatoxins அளவு பரிசோதனை செய்யப்படும்.

மேலதிக விபரங்கள்

https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/1/made

https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/2/made

Edited by MEERA
  • Like 2
  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, MEERA said:

அப்ப  இனி புத்தரை தூக்கிக்கொண்டு தமிழ் பக்கம் வந்தால் சொறிலங்கன் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் ஆப்பு கொடுக்கலாம் அல்லது இங்கு ஓவரா ஜெய வாவோ சவுண்டு வந்தாலும் நன்றி மீரா .

இனி நெட்டோ  சோடாவும் அஜினமோட்டோ கட்டா சம்பலும்  சொறிலங்கா போய்த்தான் சாப்பிடலாம் .

@goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, MEERA said:

என் inspiration ஆல் இப்படி பல தரவுகளை ஆராய்ந்தமை அதை நான் உட்பட பலருக்கு அறியதந்தமைக்கு நன்றி. என் கட்டுரை வேறு எந்த பலனை தராவிடிலும் - இது ஒன்றே போதும்.

1 hour ago, பெருமாள் said:

அப்ப  இனி புத்தரை தூக்கிக்கொண்டு தமிழ் பக்கம் வந்தால் சொறிலங்கன் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் ஆப்பு கொடுக்கலாம் அல்லது இங்கு ஓவரா ஜெய வாவோ சவுண்டு வந்தாலும் நன்றி மீரா .

இனி நெட்டோ  சோடாவும் அஜினமோட்டோ கட்டா சம்பலும்  சொறிலங்கா போய்த்தான் சாப்பிடலாம் .

@goshan_che

நான் எப்பவுமே இவற்றை அங்குதான் போய் சாப்பிடுவது. 

தவிரவும் கோப்பித்தூள், மிளகாய்தூள், எல்லாம் அங்கே இருந்து நேரடியாக அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும்.

என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும்.

இப்படியான கான்சர் ஊக்கிகள் மட்டும் அல்ல, புலம்பெயர் கடைகளில் ஒரு ஆட்டு கறியை வாங்கி அதை சுடு தண்ணியில் கழுவி பாருங்கள் - சிவப்பாய் கலரிங்கும், எண்ணையும் ஓடும்.

உறைப்பை கூட்ட, உப்பு கூட்ட சொல்லும், உப்பு கூட உபாதைகள் கூடும்.

திறமான வழி பண்டைய தமிழர், இன்றைய சிங்களவர் வழி - உறைப்புக்கு மிளகு பாவித்தல்.

@பெருமாள் # எரியுதடி மாலா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

அப்ப  இனி புத்தரை தூக்கிக்கொண்டு தமிழ் பக்கம் வந்தால் சொறிலங்கன் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் ஆப்பு கொடுக்கலாம் அல்லது இங்கு ஓவரா ஜெய வாவோ சவுண்டு வந்தாலும் நன்றி மீரா .

இனி நெட்டோ  சோடாவும் அஜினமோட்டோ கட்டா சம்பலும்  சொறிலங்கா போய்த்தான் சாப்பிடலாம் .

@goshan_che

ஏற்கனவே Necto உட்பட பல Elephant House பானங்கள் இங்கு U.K. தான் Diluting ( சரியான சொல்லா ???). Sugar Levy பிரச்சனையால் .

https://www.gov.uk/guidance/check-if-your-drink-is-liable-for-the-soft-drinks-industry-levy#:~:text=You'll pay%3A,8g or more per 100ml

@goshan_che சிறீலங்காவில் இருந்து உங்களுக்கு நேரடியாகவரும் மிளகாய் தூள் மற்றும் கோப்பி தூள் என்பவற்றில் Aflatoxin மற்றும் Pesticide residues என்பவற்றின் நிலை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

என்னைப் பொறுத்தவரை இங்கு கடைகளில் விற்கும் பொருட்களை வாங்குவதே பாதுகாப்பானதாக இருக்கும் ( 100%  அல்ல).

இறக்குமதியாளர்கள் Port Health மற்றும் Trading Standard இன் நடவடிக்கைகளினால் சரியான முறையில் செயற்படுவார்கள்.

U.K. வரும் எல்லா கொள்கலன்களும் திறக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதில்லை. ஆனாலும் பரிசோதித்தால் என்ன நடக்கும் என்பதையிட்டு இறக்குமதியாளர்கள் பயப்படுவார்கள்.

Edited by MEERA
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

நான் எப்பவுமே இவற்றை அங்குதான் போய் சாப்பிடுவது. 

தவிரவும் கோப்பித்தூள், மிளகாய்தூள், எல்லாம் அங்கே இருந்து நேரடியாக அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன்.

இந்தியாவில் இருந்து தானே சகல சாமான்களும் வருகின்றன?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, MEERA said:

@goshan_che சிறீலங்காவில் இருந்து உங்களுக்கு நேரடியாகவரும் மிளகாய் தூள் மற்றும் கோப்பி தூள் என்பவற்றில் Aflatoxin மற்றும் Pesticide residues என்பவற்றின் நிலை என்ன?

1. தூள்/கோப்பி - அங்கே வியாபாரிகளிடம் வாங்கும் மூலப்பொருட்களை வைத்தே இடிப்பது. ஆகவே பயிர் விளைவிக்கும் போது பாவிக்கப்படும் கெமிக்கல் பாதிப்பு இருக்கவே செய்யும்.

இந்த முறை போகும் போது பார்க்க நினைத்து முடியாமல் போன விடயம் ஒர்கானிக் தோட்டங்கள். இவை இப்போ கொஞ்சம் கொஞ்சமாக அங்கே வரத்தொடங்கி விட்டன. 

ஓர்கானிக் தோட்டங்களில் மிளகாய் எடுக்க முடியுமாய் இருக்கும். மல்லி, கோப்பி இப்படி எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

எனது மகனுக்கு முடிந்தளவு மிளகாய் உறைப்பை பழக்காமல் தவிர்கிறேன்.

ஒரு காலத்தில் உறைப்பு சாப்பிடுவதை ஏதோ வீர சாகசம் போல நானும் கதைத்து திரிந்தவனே.

ஆனால் இந்த பழக்கத்தால் தேவையில்லாமல் குப்பைகளை உண்கிறோம் என்பது காலம் செல்லவே உறைத்தது (pun intended 🤣).

தவிரவும் மிளகாய் என்பதே தென்னமரிக்காவில் இருந்து எமக்கு போத்துகேயர் அறிமுகம் செய்ததுதானே. அதில் ஒரு “தமிழேண்டா” பெருமையும் இல்லை.

16 minutes ago, MEERA said:

என்னைப் பொறுத்தவரை இங்கு கடைகளில் விற்கும் பொருட்களை வாங்குவதே பாதுகாப்பானதாக இருக்கும் ( 100%  அல்ல).

இறக்குமதியாளர்கள் Port Health மற்றும் Trading Standard இன் நடவடிக்கைகளினால் சரியான முறையில் செயற்படுவார்கள்.

U.K. வரும் எல்லா கொள்கலன்களும் திறக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதில்லை. ஆனாலும் பரிசோதித்தால் என்ன நடக்கும் என்பதையிட்டு இறக்குமதியாளர்கள் பயப்படுவார்கள்.

யோசிக்க வேண்டிய கோணம்தான்.

4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவில் இருந்து தானே சகல சாமான்களும் வருகின்றன?

நாங்கள் ஊரில் இருந்து எடுப்பிக்கலாம் அண்ணை. 1kg வுக்கு சுமைக்கூலி 1000 ரூபா.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_che உங்களுக்கு ஊரிலிருந்து வரும் பொருட்கள் Food Grade bags இல் பொதி செய்யப்பட்டனவா? நிச்சயமாக இல்லை. இவை கூட நோய்களுக்கான காரணியாக அமையலாம்.

மேலும் சிறீலங்காவில் ஓர்கானிக் பயிர்ச் செய்கை என்றால்  இரசாயனக் கிருமிநாசினிகள் பாவனையற்று விவசாயம் செய்தால் போதும் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் மாட்டு எரு பயன்படுத்தப்பட்டால் மாட்டின் உணவு கூட ஓர்கானிக் ஆக இருத்தல் வேண்டும். அதேபோல் தாவரக் கழிவுகள் பயன்படுத்தப்படும் போது அந்த தாவரங்கள் ஓர்கானிக் முறையில் வளந்திருக்க வேண்டும்.

இது ஓர் சங்கிலித் தொடர்….

100% ஓர்கானிக் உங்களுக்கு பாரிய விவசாயத்தில்  கிடைக்காது.

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

1. தூள்/கோப்பி - அங்கே வியாபாரிகளிடம் வாங்கும் மூலப்பொருட்களை வைத்தே இடிப்பது. ஆகவே பயிர் விளைவிக்கும் போது பாவிக்கப்படும் கெமிக்கல் பாதிப்பு இருக்கவே செய்யும்.

இந்த முறை போகும் போது பார்க்க நினைத்து முடியாமல் போன விடயம் ஒர்கானிக் தோட்டங்கள். இவை இப்போ கொஞ்சம் கொஞ்சமாக அங்கே வரத்தொடங்கி விட்டன. 

ஓர்கானிக் தோட்டங்களில் மிளகாய் எடுக்க முடியுமாய் இருக்கும். மல்லி, கோப்பி இப்படி எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

எனது மகனுக்கு முடிந்தளவு மிளகாய் உறைப்பை பழக்காமல் தவிர்கிறேன்.

ஒரு காலத்தில் உறைப்பு சாப்பிடுவதை ஏதோ வீர சாகசம் போல நானும் கதைத்து திரிந்தவனே.

ஆனால் இந்த பழக்கத்தால் தேவையில்லாமல் குப்பைகளை உண்கிறோம் என்பது காலம் செல்லவே உறைத்தது (pun intended 🤣).

தவிரவும் மிளகாய் என்பதே தென்னமரிக்காவில் இருந்து எமக்கு போத்துகேயர் அறிமுகம் செய்ததுதானே. அதில் ஒரு “தமிழேண்டா” பெருமையும் இல்லை.

4 hours ago, goshan_che said:

புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும்.

என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும்.

இப்படியான கான்சர் ஊக்கிகள் மட்டும் அல்ல, புலம்பெயர் கடைகளில் ஒரு ஆட்டு கறியை வாங்கி அதை சுடு தண்ணியில் கழுவி பாருங்கள் - சிவப்பாய் கலரிங்கும், எண்ணையும் ஓடும்.

உறைப்பை கூட்ட, உப்பு கூட்ட சொல்லும், உப்பு கூட உபாதைகள் கூடும்.

திறமான வழி பண்டைய தமிழர், இன்றைய சிங்களவர் வழி - உறைப்புக்கு மிளகு பாவித்தல்.

இத வாசிக்க  வாசிக்க எனக்கு அந்த தம்பியின்ரை நினைப்புத்தான் வருது. அந்த தம்பியும் உப்புடித்தான் அச்சு தவறாமல் உதே மாதிரி எழுதும். யாழ்களத்தில எங்கையெண்டாலும் மிளகாய்த்தூள்  பிரச்சனை எண்டால் முதல் ஆளாய் வந்து நிக்கும் அந்த தம்பி...🤣

Good morning vadivelu gif good morning vadivelu friends discover share gifs  – Artofit

இப்ப எங்க நிக்குதோ.......என்ன செய்யுதோ...சாப்பிட்டுதோ....என்னமோ?  ஒரு நேரம் சும்மா இருக்காது அந்த தம்பி....குறு குறுவெண்டு ஏதாவது எழுதி/கிறுக்கிக்கொண்டே இருக்கும்...😂

  • Haha 2
Posted
4 hours ago, goshan_che said:

புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும்.

என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும்.

இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன்.

என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது.

நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, MEERA said:

@goshan_che உங்களுக்கு ஊரிலிருந்து வரும் பொருட்கள் Food Grade bags இல் பொதி செய்யப்பட்டனவா? நிச்சயமாக இல்லை. இவை கூட நோய்களுக்கான காரணியாக அமையலாம்.

மேலும் சிறீலங்காவில் ஓர்கானிக் பயிர்ச் செய்கை என்றால்  இரசாயனக் கிருமிநாசினிகள் பாவனையற்று விவசாயம் செய்தால் போதும் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் மாட்டு எரு பயன்படுத்தப்பட்டால் மாட்டின் உணவு கூட ஓர்கானிக் ஆக இருத்தல் வேண்டும். அதேபோல் தாவரக் கழிவுகள் பயன்படுத்தப்படும் போது அந்த தாவரங்கள் ஓர்கானிக் முறையில் வளந்திருக்க வேண்டும்.

இது ஓர் சங்கிலித் தொடர்….

100% ஓர்கானிக் உங்களுக்கு பாரிய விவசாயத்தில்  கிடைக்காது.

நீங்கள் சொல்வதில் முழுவது உடன்பட்டாலும்,  என்னை பொறுத்தவரை முடிந்தளவு processed food, preservatives, கலரிங், இவற்றை தவிர்த்து உண்ண கூடியதே இயலுமானதென நினைக்கிறேன்.

இந்த உணவு சங்கிலியின் ஒவ்வொரு படியாக ஆராய்ந்து உண்ணுவது சாத்தியமில்லை.

பிரிதானியாவின் நதிகள் அனைத்திலும் மிக மோசமாக மனித கழிவு மட்டும் அல்ல, நாம் எடுக்கும் மருந்துகளும் கலக்கிறன.

நதி நீரில் மனிதர் பாவித்த மீதி anti depressant, class A drugs கலப்பதால் - மீன்களின் இனப்பெருக்க நடவடிக்கைகளும், பாலின அடையாளம்களும் மாறி வருவதாக அண்மையில் ஒரு ரெடியோ நிகழ்ச்சியில் கேட்டேன்.

இதில் வரும் நீரை பயன்படுத்தி வளரும் புல்லைத்தான் ஓர்கானிக் பால் தரும் மாடுகள் உண்கிறன. 

எல்லாம் ஒரு பலன்ஸ்தான்.

1 hour ago, குமாரசாமி said:

இத வாசிக்க  வாசிக்க எனக்கு அந்த தம்பியின்ரை நினைப்புத்தான் வருது. அந்த தம்பியும் உப்புடித்தான் அச்சு தவறாமல் உதே மாதிரி எழுதும். யாழ்களத்தில எங்கையெண்டாலும் மிளகாய்த்தூள்  பிரச்சனை எண்டால் முதல் ஆளாய் வந்து நிக்கும் அந்த தம்பி...🤣

Good morning vadivelu gif good morning vadivelu friends discover share gifs  – Artofit

இப்ப எங்க நிக்குதோ.......என்ன செய்யுதோ...சாப்பிட்டுதோ....என்னமோ?  ஒரு நேரம் சும்மா இருக்காது அந்த தம்பி....குறு குறுவெண்டு ஏதாவது எழுதி/கிறுக்கிக்கொண்டே இருக்கும்...😂

மின்னுவதெல்லாம் பொன்னல்ல. அந்த தம்பி பொன், இது கவரிங்🤣.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல முன்னுதாரணமான முடிவு. ரனிலின் கடந்த கால கணக்கு வழக்குகளையும் ஒருக்கால் சரி பார்க்க அநுர அரசு முயல வேண்டும்.
    • உங்களுக்கு இந்த தரவினை பெறக்கூடியதாக இருக்கிறதா? உங்களுக்கு இந்த  தரவினை பெறுவதற்கு இந்த இணைய கணக்கு தேவை என கூறுகிறது.
    • பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர்! 10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல சபையில்  ஏகமனதாக  தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412204
    • நன்றி உங்கள் கருத்திற்கு, அன்னிய செலாவணிக்கட்டுப்பாடுள்ள நாடுகள், வரி ஏய்ப்பு போன்ற காரணங்களினால் இந்த கவாலா மற்ற நாடுகளில் பிரபலம், இலங்கையில் அன்னிய செலாவணி பிரச்சினை ஏற்பட்டதன் பின்னரே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது (கட்டுப்பாடுகள் இருக்கிறதா என தெரியாது) என கருதுகிறேன். பெரும்பாலும் இந்த கவாலா arbitrage ஆக பயன்படுத்துவார்கள். நாட்டின் பொருளாதார கொள்கையினால் நாணய பரிமாற்றம் சரியான விகிதத்தில் இருப்பதில்லை, இதனையே கவாலா முகவர்கள் உப்யோகித்து பணம் பார்க்கிறார்கள், அதனால் பெரும்பாலும்  காவாலா காசு அன்னிய செலாவணியாகவே நாட்டிற்குள் வலம் வரும் . https://www.investopedia.com/ask/answers/forex/forex-arbritrage.asp அன்னிய செலாவணி கட்டுப்பாடு உள்ள நாடுகளில் கூட நாட்டிற்குள் அன்னிய செலாவணியாக வராவிட்டாலும் வெளிநாட்டிலிருந்து அனுப்படும் காசினால் உள்நாட்டு பொருளாதாரத்தினை வளப்படுத்தும் மற்ற நாடுகளை பற்றித்தெரியவில்லை, இங்கு அவுஸில் தமிழ் கடையில் காசு அனுப்பும் போது பற்றுச்சீட்டு கொடுப்பார்கள் அதில் எந்த நிறுவனத்தின் மூலம் அனுப்புகிறார்கள் என்பது இருக்கும் (நான் முன்பு அனுப்பிய கடை மணிகிராம் மூலம், தற்போது ஒரு 6 -7 வருடமாக நேரடியாகவே மணிகிராம் அல்லது வெஸ்ரன் யூனியன் மூலம் இணையத்தினூடாக அனுப்புவதுண்டு). ஆண்டொன்றிற்கு 5.4 பில்லியன் வெறும் பெரும்பான்மை இனத்தவர்கள், இஸ்லாமியர்களாலும் அனுப்பப்பட முடியுமா? நான் அறிந்த பெரும்பான்மை இனத்தவர்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பணம் அனுப்புவதில்லை, ஆனால் விசேட  தினங்களிற்கு வாழ்த்து அட்டை அனுப்புகிறார்கள் (இது நகைசுவைக்காக கூறவில்லை, அது அவர்களின் இயல்பு). உங்கள் கருத்தும் சரியானதே (எனது கருத்து தவறாக இருக்கலாம்), தொடர்ந்து எழுதுங்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.