Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் - உங்களது போட்டியில் குழு  B, Cஇல் முதலிடத்தை Australia (B1),மேற்கிந்திய தீவுகள் (C1)பெற்றாலும் சூப்பர் 8 இல் இவை B2 ,C2 என்றே அடுத்த சுற்றுக்கு தெரிவாகும்.  இந்த போட்டியில் பங்கேற்ற பலரது விடைகள் அடுத்த சுற்றில் கேள்விக்குறியாக இருக்க போகவுள்ளது. 

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கந்தப்பு said:

கந்தப்பு அண்ணை இதை தமிழில் சொன்னால் எங்களுக்கும் விளங்கும் அல்லோ
யார் எந்த அணியுடன் வெற்றி பெற்று குழு நிலையில் எந்த இடத்தில் நின்றாலும் இந்த இந்த அணி இந்த இந்த மாதிரித்தான் அடுத்த சூப்பர் 8இல் விளையாடுவினம் எண்டு முதலே முடிவெடுத்தால் நாங்கள் என்ன செய்யலாம்.

அமேரிக்கா முதல் சுற்றில்A குழு வின்    விளையாட்டுக்களில் முதல் இடத்திற்கு வந்தாலும் அவை Aகுழுவில் 2வது என்றுதான் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் அப்படித்தானே.....
அப்படியென்றால்  இவை இவை தான் எப்படி  வந்தாலும் இப்படித்தான் விளையாட வேண்டும் என முதலிலேயே தீர்மானித்து விட்டார்களா ?

31 minutes ago, கந்தப்பு said:

கிருபன் - உங்களது போட்டியில் அடுத்த சுற்றில் குழு   B இல் Australia முதலிடம் பெற்றாலும் கேள்வி 54 இல் சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 கேட்கப்பட்ட கேள்விக்கு B1 Australia என்று வராது என  போட்டி நடாத்துபவர்கள் முன்பே முடிவு செய்திருக்கிறார்கள். 

Six out of 20 teams have progressed so far to the Super Eight stage of the T20 World Cup 2024, with India (A1), Australia (B2), and Afghanistan (C1) in Group 1, and USA (A2), West Indies (C2) and South Africa (D1) in Group 2. The teams are assigned A1, B1 and so on not on the basis of where they finished in their group but according to pre-tournament designations.

Super Eights: how will the teams be grouped and seeded?

Eight teams have been allotted pre-decided seedings that they will retain for the Super Eight stage, provided they qualify. These teams, and their seedings, are:

A1 - India, A2 - Pakistan
B1 - England, B2 - Australia
C1 - New Zealand, C2 - West Indies
D1 - South Africa, D2 - Sri Lanka

The seedings for the other teams are not fixed. To understand it further, if D1 and D2 qualify from group D, and D2 top the group, D2 will not be given the D1 slot in the Super Eight stage despite topping the group. They will continue with the pre-decided fixtures in Super Eight that have been scheduled for D2.
But if, say, D3 or D4 qualify in place of, say, D1, the qualified team will replace D1 in the Super Eight.
If D3 and D4 both qualify, then the group topper will play D1's fixtures and the team that finishes second will be allotted D2's matches.
Once the eight teams are known, they will be grouped into Super Eight as follows:
Group 1: A1, B2, C1, D2
Group 2: A2, B1, C2, D1

The fixtures for the Super Eight stage, starting June 19, are already listed with the teams' seedings. No points will be carried forward from the first round to the second

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2024 at 21:41, ஈழப்பிரியன் said:

இளனி குடித்தவன் தப்பீட்டான்.

இளநீர் வெட்டித்தந்தவன் நாலாம் இடத்தில நிக்கிறான் 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

அமலாக்கத்துறையை ஏவி விடும் அரசியல் பழிவாங்கல்🤣

ரணில் ஜனாதிபதியாக வந்த மாதிரி  முதல்வர் பதவியை  எடுத்து போட்டு இப்ப ஐயோ கொல்றாங்கப்பா என்று கத்தினால் என்ன மாதிரி சட்டப் பிரச்சினையைக் கிளப்பினால் அது உங்களுக்குத்தான் ஆபத்து விட்டுப்பிடியுங்கோ!!!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

அமெரிக்கா சூப்ப‌ர்8க்கு போன‌து ஒரு வித‌த்தில் ந‌ல்ல‌ம்

அமெரிக்கா ஊட‌க‌ங்க‌ளில் இந்த‌ செய்தி க‌ண்டிப்பாய் போடுவின‌ம் அதோட‌ அமெரிக்க‌ ம‌க்க‌ளின் சிறு பார்வை த‌ன்னும் கிரிக்கேட் மீது வ‌ரும்.....................அமெரிக்காவில் வெஸ்வோல் வ‌ள‌ந்த‌ மாதிரி கிரிக்கேட்டும் வ‌ள‌ர‌னும் 

50வ‌ருட‌ம் போன‌ பிறக்கு கிரிக்கேட்டில் அமெரிக்கா தான் ஜ‌ம்பவாங்க‌ளாய் இருப்பாங்க‌ள்🙏🥰................................

2026 உலககிண்ண போட்டியில் அமெரிக்கா நேரடியாக விளையாட தகுதி பெற்றிருக்கிறது. போட்டி நடாத்தும் நாடுகள் ( இலங்கை, இந்தியா), சூப்பர் 8 க்கு தெரிவான நாடுகள் உட்பட 12 நாடுகள் (மிகுதி 3 நாடுகள் இந்தமாத கடைசியில் ஜூன் 30 இல் ICC தரவரிசை படி தெரிவு செய்யப்படும்) நேரடியாக போட்டியிடப் போகின்றன. மிகுதி 8 நாடுகளும் ஆபிரிக்கா, ஆசியா , ஐரோப்பா , பசுபிக் , அமெரிக்கா போட்டிகளின் அடிப்படையில் தெரிவாகும்

8 minutes ago, வாத்தியார் said:

கந்தப்பு அண்ணை இதை தமிழில் சொன்னால் எங்களுக்கும் விளங்கும் அல்லோ
யார் எந்த அணியுடன் வெற்றி பெற்று குழு நிலையில் எந்த இடத்தில் நின்றாலும் இந்த இந்த அணி இந்த இந்த மாதிரித்தான் அடுத்த சூப்பர் 8இல் விளையாடுவினம் எண்டு முதலே முடிவெடுத்தால் நாங்கள் என்ன செய்யலாம்.

அமேரிக்கா முதல் சுற்றில்A குழு வின்    விளையாட்டுக்களில் முதல் இடத்திற்கு வந்தாலும் அவை Aகுழுவில் 2வது என்றுதான் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் அப்படித்தானே.....
அப்படியென்றால்  இவை இவை தான் எப்படி  வந்தாலும் இப்படித்தான் விளையாட வேண்டும் என முதலிலேயே தீர்மானித்து விட்டார்களா ?

ஓம். முதலே தீர்மானித்து விட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கந்தப்பு said:

கிருபன் - உங்களது போட்டியில் குழு  B, Cஇல் முதலிடத்தை Australia (B1),மேற்கிந்திய தீவுகள் (C1)பெற்றாலும் சூப்பர் 8 இல் இவை B2 ,C2 என்றே அடுத்த சுற்றுக்கு தெரிவாகும்.  இந்த போட்டியில் பங்கேற்ற பலரது விடைகள் அடுத்த சுற்றில் கேள்விக்குறியாக இருக்க போகவுள்ளது. 

உதாரணம் கேள்வி 54.
கேள்வியில் புலவருக்கு   aus  எதிர் afG என வருகின்றது
அப்படி வரச் சந்தர்ப்பமே இல்லை என்று நினைக்கின்றேன்
அந்தக் கேள்விக்கு AUS  ஐத் தவிர யாரும் வரலாம் அந்த அணியை எதிர்த்து விளையாடப்போவது தற்சமயம் அல்லது அவர்கள் குழு நிலையில் முதலாவதாக வந்தாலும்  WI மட்டுமே AFG  இல்லை
சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கந்தப்பு said:

கிருபன் - உங்களது போட்டியில் குழு  B, Cஇல் முதலிடத்தை Australia (B1),மேற்கிந்திய தீவுகள் (C1)பெற்றாலும் சூப்பர் 8 இல் இவை B2 ,C2 என்றே அடுத்த சுற்றுக்கு தெரிவாகும்.  இந்த போட்டியில் பங்கேற்ற பலரது விடைகள் அடுத்த சுற்றில் கேள்விக்குறியாக இருக்க போகவுள்ளது. 

😶....

நீங்கள் சொல்வது சரி.......ஆனால் ஐசிசி ஏன் இப்படி செய்திருக்கின்றது?

சூப்பர் 8 குருப்புகளுக்குமான எங்களின் அணித் தெரிவுகளே தப்பாக போய் விட்டனவே....  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

உதாரணம் கேள்வி 54.
கேள்வியில் புலவருக்கு   aus  எதிர் afG என வருகின்றது
அப்படி வரச் சந்தர்ப்பமே இல்லை என்று நினைக்கின்றேன்
அந்தக் கேள்விக்கு AUS  ஐத் தவிர யாரும் வரலாம் அந்த அணியை எதிர்த்து விளையாடப்போவது தற்சமயம் அல்லது அவர்கள் குழு நிலையில் முதலாவதாக வந்தாலும்  WI மட்டுமே AFG  இல்லை
சரியா?

மேற்கிந்திய தீவுக்கும் இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்துக்கும் இடையில் நடக்கப்போகுது

2 minutes ago, ரசோதரன் said:

😶....

நீங்கள் சொல்வது சரி.......ஆனால் ஐசிசி ஏன் இப்படி செய்திருக்கின்றது?

சூப்பர் 8 குருப்புகளுக்குமான எங்களின் அணித் தெரிவுகளே தப்பாக போய் விட்டனவே....  

முன்பும் இப்படி 50 உலக்கிண்ணப்போட்டியில் சூப்பர் 6 இல் செய்தது. எந்த போட்டி என்று மறந்து விட்டேன்.  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கந்தப்பு said:

மேற்கிந்திய தீவுக்கும் இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்துக்கும் இடையில் நடக்கப்போகுது

👍...

ஐசிசியின் போட்டி விதிகளின் படி,  B1 ஆக அவுஸ்திரேலியா வரவே முடியாது, எந்தச் சந்தர்ப்பத்திலும். 

இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்து மட்டுமே வரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தெரிவில் இங்கிலாந்து குழு நிலையில் முதலாவதாக வும் WI அவர்கள் 

குழுவில் 2 இடத்திலும்  இருப்பதால் 

எனக்குப் பிரச்சனை இல்லை 

மற்றவர்களும் சரி பார்த்தால்.... ஏதாவது செய்ய முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாத்தியார் said:

என்னுடைய தெரிவில் இங்கிலாந்து குழு நிலையில் முதலாவதாக வும் WI அவர்கள் 

குழுவில் 2 இடத்திலும்  இருப்பதால் 

எனக்குப் பிரச்சனை இல்லை 

மற்றவர்களும் சரி பார்த்தால்.... ஏதாவது செய்ய முடியாதா?

வாத்தியார்கள் தப்பாக செய்தாலும், அது தப்பேயில்லாமல் போய் விடுகின்றது........🤣.

நான் இங்கிலாந்தை இரண்டாவதாகவும், மேற்கிந்திய தீவுகளை முதலாவதாகவும் தெரிந்து வைத்துள்ளேன்.......தலை கீழ்....... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

👍...

ஐசிசியின் போட்டி விதிகளின் படி,  B1 ஆக அவுஸ்திரேலியா வரவே முடியாது, எந்தச் சந்தர்ப்பத்திலும். 

இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்து மட்டுமே வரலாம். 

ஓம்.  முன்பே இப்படி தெரிவு செய்வதினால் அந்த நாட்டு ரசிகர்கள் நுழைவு சீட்டினை முன்பே வாங்கிவிடுவார்கள்.  

முக்கியமாக இந்தியாவின் போட்டிகள் பகலில் நடக்கும் . இந்தியா நேரம் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கும் . பல இந்தியர்கள் பார்ப்பார்கள் . இந்தியா தொலைக்காட்சிகளும் இதனை விரும்புவார்கள் . விளம்பரத்தினால் நல்ல வருமானம் கிடைக்கும்

போட்டி துடங்கமுதல் இந்த விதிகளை நான் வாசிப்பதுண்டு. இம்முறை நான் வாசிக்க தவறிவிட்டேன். அரை இறுதிபோட்டி மட்டும் இந்தியா தெரிவானால் எங்கு விளையாடுவார்கள் என்பதை முன்பே இங்கு பதிந்திருக்கிறேன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

கிருபன் - உங்களது போட்டியில் அடுத்த சுற்றில் குழு   B இல் Australia முதலிடம் பெற்றாலும் கேள்வி 54 இல் சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 கேட்கப்பட்ட கேள்விக்கு B1 Australia என்று வராது என  போட்டி நடாத்துபவர்கள் முன்பே முடிவு செய்திருக்கிறார்கள். 

Six out of 20 teams have progressed so far to the Super Eight stage of the T20 World Cup 2024, with India (A1), Australia (B2), and Afghanistan (C1) in Group 1, and USA (A2), West Indies (C2) and South Africa (D1) in Group 2. The teams are assigned A1, B1 and so on not on the basis of where they finished in their group but according to pre-tournament designations.

Super Eights: how will the teams be grouped and seeded?

Eight teams have been allotted pre-decided seedings that they will retain for the Super Eight stage, provided they qualify. These teams, and their seedings, are:

A1 - India, A2 - Pakistan
B1 - England, B2 - Australia
C1 - New Zealand, C2 - West Indies
D1 - South Africa, D2 - Sri Lanka

The seedings for the other teams are not fixed. To understand it further, if D1 and D2 qualify from group D, and D2 top the group, D2 will not be given the D1 slot in the Super Eight stage despite topping the group. They will continue with the pre-decided fixtures in Super Eight that have been scheduled for D2.
But if, say, D3 or D4 qualify in place of, say, D1, the qualified team will replace D1 in the Super Eight.
If D3 and D4 both qualify, then the group topper will play D1's fixtures and the team that finishes second will be allotted D2's matches.
Once the eight teams are known, they will be grouped into Super Eight as follows:
Group 1: A1, B2, C1, D2
Group 2: A2, B1, C2, D1

The fixtures for the Super Eight stage, starting June 19, are already listed with the teams' seedings. No points will be carried forward from the first round to the second

போட்டியில் சிக்கலான விதிகளைக் கொண்டு வந்தால் கொஞ்சம் கஷ்டம்! குழு B உம் குழு C உம் பிரச்சினை கொடுக்கும் போலிருக்கு. பார்ப்போம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

வாத்தியார்கள் தப்பாக செய்தாலும், அது தப்பேயில்லாமல் போய் விடுகின்றது........🤣.

நான் இங்கிலாந்தை இரண்டாவதாகவும், மேற்கிந்திய தீவுகளை முதலாவதாகவும் தெரிந்து வைத்துள்ளேன்.......தலை கீழ்....... 

உங்களைபோலதான் எனது பதிலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப் படாதே 

சகோதரா

மழை வந்தால் போட்டி இல்லாமல் போய் விடுகிறது 

அதைப் போல  இதையும் எடுத்துக் கொள்ள முடியா தா 🏏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, வாத்தியார் said:

கவலைப் படாதே 

சகோதரா

மழை வந்தால் போட்டி இல்லாமல் போய் விடுகிறது 

அதைப் போல  இதையும் எடுத்துக் கொள்ள முடியா தா 🏏

🤣........

சரி விடுங்க.......இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து அணி வீரர்களின் துயரை விடவா எம் துயர் பெரியது.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போட்டியில் சிக்கலான விதிகளைக் கொண்டு வந்தால் கொஞ்சம் கஷ்டம்! குழு B உம் குழு C உம் பிரச்சினை கொடுக்கும் போலிருக்கு. பார்ப்போம்.

இந்த‌ உல‌க‌ கோப்பையில் முற்றிலும் மாறுப‌ட்ட‌ ப‌ல‌ விதிமுறைக‌ள்

போட்டி அட்ட‌வ‌னையை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் வெளியிட்ட‌து போல் முன் கூட்டியே வெளியிட‌னும்

இந்தியா பின‌லுக்கு வ‌ந்தால் வேறு மைதான‌த்தில் விளையாட‌னும் என்று தினிப்ப‌து 

கிரிக்கேட்டுக்கு தான் அவ‌ பெய‌ர்

இந்தியா கிரிக்கேட் விதிமுறைக‌ளுக்குள் அதிக‌ம் மூக்கை நுழைப்பது ந‌ல்ல‌ம் அல்ல‌

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌ட‌ந்த‌து இதுக்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பைக‌ளில் இப்ப‌டி த‌லைசுத்தும் விதிமுறைக‌ள் இருந்த‌து இல்லை..............................

போட்டி அட்ட‌வ‌னைய‌ வெளியிட்டால் அத‌ன் ப‌டி விளையாட்டை க‌டைப்பிடிக்க‌னும்..................................பெரிய‌ப்பு கூட‌ குழ‌ம்ப‌ வேண்டாம்
நீங்க‌ள் தயாரித்த‌ கேள்வி கொத்தின் ப‌டி புள்ளிய‌ வ‌ழ‌ங்குங்கோ....................போட்டி கேள்விக்கு உற‌வுக‌ள் அளித்த‌ ப‌திலின் ப‌டி🏏.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வீரப் பையன்26 said:

போட்டி அட்ட‌வ‌னையை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் வெளியிட்ட‌து போல் முன் கூட்டியே வெளியிட‌னும்

முன்பே வெளியீட்டு இருந்தார்கள். நாங்கள் கவனிக்கவில்லை.  Cricinfo இணையத்தளத்தில் மே 27 இது பற்றி செய்தி வந்திருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா பின‌லுக்கு வ‌ந்தால் வேறு மைதான‌த்தில் விளையாட‌னும் என்று தினிப்ப‌து 

கிரிக்கேட்டுக்கு தான் அவ‌ பெய‌ர்

இது இந்தியா திணிக்கவில்லை. ஐசிசியின் வருமானம் இந்தியா இரசிகர்களில்தான் தங்கியிருக்கிறது. 2007 உலக கோப்பை மேற்கிந்தியாவில் நடைபெற்ற போது இந்தியா ( பாகிஸ்தானும்) முதல் சுற்றில் தோல்வியுற்று வெளியேறிவிட்டது. இதனால் அத்தொடரில் பெரிய வருமானம் ஐசிசிக்கு கிடைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கந்தப்பு said:

முன்பே வெளியீட்டு இருந்தார்கள். நாங்கள் கவனிக்கவில்லை.  Cricinfo இணையத்தளத்தில் மே 27 இது பற்றி செய்தி வந்திருக்கிறது. 

இதை விட cricinfo இணையத்தில் T20 World Cup Table பகுதியில் 6, 7 மாதத்துக்கு முன்பு pre tournament seeding என்று இந்த தகவல் இருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உகண்டா தனது சாதனையை தானே முறியடிக்கப் போகிறது.

நேபாளம் தென்னாபிரிகாவை வென்று எல்லோருக்கும் முட்டை தரப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று உகண்டா தனது சாதனையை தானே முறியடிக்கப் போகிறது.

நேபாளம் தென்னாபிரிகாவை வென்று எல்லோருக்கும் முட்டை தரப் போகிறது.

உகண்டாவால் முறியடிக்க முடியவில்லை....இரண்டு ஓட்டங்களை கூட அடித்து விட்டனர்...40/10.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இன்று உகண்டா தனது சாதனையை தானே முறியடிக்கப் போகிறது.

 இலங்கை அணியின் மனநிலை "நமக்கு ஒரு அடிமை வாய்ச்சிட்டான்".😁

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.