Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Replies 74
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

ஐயா பெரியவரே!  யாருக்கு வாக்கு போட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்.ஆனால் 70 வருடமாக நீங்கள் நினைத்த படி,கீறல் விழுந்த இசை தட்டு போல் ஒரே  சங்கீதங்களுக்கு வாக்கு செலுத்தி என்ன மாற்றத்தை கண்டீர்கள்?

குமாரசாமி,

படம் சொல்வது ஒரு பொதுமகனின் கருத்தை.

தேர்தலுக்கு வாக்குப் போட்டோம்.

இவருக்குத்தான் வாக்குகள் போடுங்கள் என்று சொன்னோம்.

தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொன்னோம்.

தமிழன் ஒருவரை (இரண்டு தடவைகள்) வேட்பாளராக நிறுத்திப் பார்த்தோம்.

மாற்றங்கள் இல்லை.

போராடிப் பார்த்தோம். வெல்ல முடியவில்லை.

பேசிப் பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை.

ஒற்றுமையாகச் செயல்பட எங்களால் முடியவில்லை. ‘ஏணியும் பாம்பும்விளையாட்டாக மீண்டும் ஆரம்பக் கட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறோம்.

ரஞ்சித் குறிப்பிடுவது போல்யாசகம் செய்து வாழ முடியாதுஎன்ற வாசகத்தை விட்டுசேர்ந்து வாழ்தல்என்ற முறையை எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இன்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இல்லை. ஒருவேளை பின்னாட்களில் ஏதாவது மாற்றங்கள் வரலாம். வழிகள் கிடைக்கலாம்.

யாருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற பொறுப்பை மதிப்புக்குரிய பொதுமகனிடமே விட்டு விடுவது நல்லது. அங்கே வாழும் அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கும்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, ரஞ்சித் said:

உங்களுக்கு ஓவியம் வரையும் திறமை இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதற்காக மற்றையவர்களின் கருத்துக்களுக்கு ஓவியம் வரைந்து பதிலளிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. முடிந்தால் எழுதுங்கள். 

ரஞ்சித், என் கருத்தைத்தான் வைத்திருக்கிறேன். படமாகவும், படத்தோடு கருத்தையும் சேர்த்து எழுதியும் இருக்கிறேன். தவிர, இது நான் வரைந்த படம் அல்ல. AI தொழில் நுட்பத்தில் உருவாக்கிய படம். படத்தில் இருப்பது நான் அல்ல. அது, பொதுமகன் ஒருவரின் குரல்.

ஓவியம் வரைந்துதான் பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லைஎன்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். பொதுவாகவே கருத்துகள் வைக்க வேண்டும் என்று எவருக்குமே கட்டாயம் இல்லை. ஆனால் கருத்துக்களத்துக்குள் நுழைந்து விட்டால் கை துருதுருக்கிறது.

ஓவியம் போட்டு கருத்து வைப்பது எனது விருப்பம். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கடந்து போய் விடுங்கள். அல்லது நான் ஒரு விடயத்தை எழுதுவேன் அதற்கு இன்னார் இன்னார்  கருத்துக்களை வைக்கக் கூடாது, முக்கியமாக படம் போட்ட கருத்துக்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது என்று எழுதி விடுங்கள். பிரச்சினை தீர்ந்து விடும். உங்களுக்கும் எனக்கும் நேரமும் மிச்சமாகும்.

Edited by Kavi arunasalam
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

ஓவியம் போட்டு கருத்து வைப்பது எனது விருப்பம். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கடந்து போய் விடுங்கள். அல்லது நான் ஒரு விடயத்தை எழுதுவேன் அதற்கு இன்னார் இன்னார்  கருத்துக்களை வைக்கக் கூடாது, முக்கியமாக படம் போட்ட கருத்துக்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது என்று எழுதி விடுங்கள். பிரச்சினை தீர்ந்து விடும். உங்களுக்கும் எனக்கும் நேரமும் மிச்சமாகும்.

கடந்து செல்கிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் முதலில் சிங்கள அரசுகளின் தயவிலேயே தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், தமிழர்களைச் சிங்கள அரசுகள் கைவிட்டு கிட்டத்தட்ட 76 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கள அரசுகளுக்கு தமிழர்களின் நலன்களைக் காப்பததைத்தவிர வேறு தலையாய கடமையே இல்லை எனும் ரேஞ்சில் எழுதுகிறீர்கள்.

தமிழர்களின் வாழ்வாதாரமும், வளமான தாயகமும், மேய்ச்சல் நிலங்களும் நீங்கள் கூறும் அதே சிங்கள அரசுகளாலேயே காவுகொள்ளப்பட்டன. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வடக்கும், வன்னியும், கிழக்கின் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளும் இலங்கை அரசினதும், இராணுவத்தினதும் பூரண பொருளாதாரத் தடைக்குள்ளேயே இருந்துவந்தன. அதற்காக, அங்கிருந்த தமிழர்கள் பட்டிணியால் இறந்துவிடவில்லை. தமது கைகளில் இருந்த வளங்களைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொண்டார்கள். வன்னியில் ஓரளவிற்கு தன்னிறைவை அவர்கள் ஒருகட்டத்தில் அடைந்திருந்தார்கள். 2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் வன்னிமீது மகிந்த இறுக்காத த‌டையினையா  இனிவரும் சிங்களத் தலைவர் இறுக்கப்போகிறார்?

சரி, அதை விடுங்கள், 2020 ‍- 2022 வரையான கொரோணாப் பகுதியில் மொத்த நாடுமே வீதிக்கு வந்தபோது வடக்கும் கிழக்கும் தம்மைத் தாமே பார்த்துக்கொண்டன. நிரந்தரமாகவே சிங்கள அரசுகளின் பொருளாதாரத் தடையினை முகம்கொடுத்துவரும் தமிழ்ச் சமூகம் தன்னை மீண்டும் சுய பொருளாதாரத்திற்கு மாற்றிக்கொள்ள அவர்களின் முன்னைய அனுபவம் கைகொடுத்தது.

80 களின் ஆரம்பத்திலிருந்தே புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவியே வருகின்றன. கிட்டத்தட்ட 40 வருடங்களாக இது தொடர்கிறது. எப்போது நிற்கும் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையே கிடைக்கும் புலம்பெயர் உதவிகளின் அள்வில் ஏற்றத்தாள்வு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை.

மலையகத் தமிழர்கள் நிச்சயமாக தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அவர்களது தலைமை நிச்சயம் அவர்களை தான் முடிவெடுக்கும் சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்கும்படி பணிக்கும். இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்குமான அரசியல் தொண்டைமானின் பிரிவிலிருந்தே வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, புதிதாக வரும் சிங்கள ஜனாதிபதி அவர்களை இக்காரணத்திற்காக வஞ்சிப்பார் என்று நினைக்கவில்லை. 

இதே போன்ற கருத்து பொருளாதாரச் சரிவின் போதும் வெளிப்பட்டது. "வடக்கு, குறிப்பாக வன்னியில், தமிழர்கள் பெரிதாகப் பாதிக்கப் படவில்லை" என்று எழுதினார்கள். கிராமப் புற சிங்கள மக்களும் நிலத்தில் இருந்து உணவைப் பெற்றுக் கொண்டது (living off the land) போல வன்னியில், யாழ் குடா சில பகுதிகளில் நிகழ்ந்தது. ஆனால் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பது மூன்று வேளை சாப்பாடு மட்டுமா? கடந்த 3 வருடங்களில் வடக்கில் இருந்து அரச வேலை இருப்போர் கூட வெளிநாடுகளுக்கு இடம் பெயரும் நிலை எப்படி ஏற்பட்டதெனக் கருதுகிறீர்கள்? சாப்பாடு கிடைக்காமலா அல்லது குடும்பத்தைத் தரமாக வைத்துப் பாதுகாக்க வழி தேடியா?

யாழில், 90/2000 களின் பொருளாதார தடையினுள் மண்ணெண்ணை லாம்பில் படித்து, பரீட்சை எழுதியோர் பலர் இங்கே இருக்கின்றனர். அது வேறு காலம். இன்று, மின்சாரம் சில மணி நேரங்கள் இல்லாமல் போனால் அவதிப் படும் நிலையில் வடக்கு மக்கள் இருக்கிறார்கள். ஏன் என்று நினைக்கிறீர்கள்? காலம் மாறி விட்டது, மக்கள் தரமான வாழ்க்கை என்று நிர்ணயிக்கும் தர எல்லை உயர்ந்து விட்டது. நீங்களோ இன்னும் 90 களிலேயே உறைந்து போய் நிற்கிறீர்கள்😂. அந்த உறை நிலையில் இருந்த படியே, தாயக மக்கள் சில அடிப்படை வசதிகளை இழந்தாலும், "சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல" வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்.

விரும்பியோ, விரும்பாமலோ இலங்கையின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் மக்கள் இலங்கையின் பொருளாதாரமும், அரசியல் சமூக நிலையும் சீரழிந்தால் பாதிக்கப் படுவர் என மிக எளிமையாகப் புரியக் கூடிய உண்மையை நான் எழுதினால், சிங்கள அரசு தமிழர்களைத் தட்டில் வைத்துத் தாங்குவதாக நான் சொல்வது போல உங்களுக்கு விளங்குகிறது! எங்கேயிருந்து எழுதுகிறீர்கள்? இதயத்தில் இருந்தா மூளையில் இருந்தா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kavi arunasalam said:

ரஞ்சித், என் கருத்தைத்தான் வைத்திருக்கிறேன். படமாகவும், படத்தோடு கருத்தையும் சேர்த்து எழுதியும் இருக்கிறேன். தவிர, இது நான் வரைந்த படம் அல்ல. AI தொழில் நுட்பத்தில் உருவாக்கிய படம். படத்தில் இருப்பது நான் அல்ல. அது, பொதுமகன் ஒருவரின் குரல்.

"ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்" என்பார்கள். ஆனால், நீங்கள் ஒரு படத்தையும் போட்டு, அந்தப் படம் என்ன சொல்கிறது என்று இன்னும் சில நூறு சொற்களையும் மெனக்கெட்டு எழுத வேண்டிய துரதிர்ஷ்டம். சில யாழ் வாசகர்களின் புரிதல் அவ்வளவு தான், விளக்க முற்பட்டால் விளக்குபவனுக்கு மூளை அழற்சி வந்து விடும்😂!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6467.jpeg.444940597daeaa205c97

ஓவியம் மூலம் ஒரு கருத்தை வைப்பது என்பது மிக மிக கடினமானது. அந்த திறமையை பாராட்டுகிறேன். கனக்க எழுத முடியாமையால் ஓரிரு சொற்களை பயன்படுத்துவதால் சில சுட்டு விடக்கூடும். 

எனக்கும் உங்கள் இந்த நிலைப்பாட்டில் உடன்பாடு உண்டு. தாயக மக்கள் பல சகாப்தமாக பல தேர்தல்களில் பலரது கணிப்புகளையும் பொய்யாக்கி தூர நோக்கோடு தமது நீண்ட நெடிய வரலாற்றின்பால் வாக்களித்து வருகிறார்கள். நன்றி. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Kavi arunasalam said:

யாருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற பொறுப்பை மதிப்புக்குரிய பொதுமகனிடமே விட்டு விடுவது நல்லது. அங்கே வாழும் அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கும்.

இயக்க காலத்திற்கு முன்னரும் பொதுமகன்கள் தான் முடிவெடுத்தார்கள்.எவ்வித காய்களும் கனியவில்லை.

13 hours ago, Kavi arunasalam said:

குமாரசாமி,

படம் சொல்வது ஒரு பொதுமகனின் கருத்தை.

தேர்தலுக்கு வாக்குப் போட்டோம்.

இவருக்குத்தான் வாக்குகள் போடுங்கள் என்று சொன்னோம்.

தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொன்னோம்.

தமிழன் ஒருவரை (இரண்டு தடவைகள்) வேட்பாளராக நிறுத்திப் பார்த்தோம்.

மாற்றங்கள் இல்லை.

போராடிப் பார்த்தோம். வெல்ல முடியவில்லை.

பேசிப் பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை.

ஒற்றுமையாகச் செயல்பட எங்களால் முடியவில்லை. ‘ஏணியும் பாம்பும்விளையாட்டாக மீண்டும் ஆரம்பக் கட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறோம்.

ரஞ்சித் குறிப்பிடுவது போல்யாசகம் செய்து வாழ முடியாதுஎன்ற வாசகத்தை விட்டுசேர்ந்து வாழ்தல்என்ற முறையை எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இன்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இல்லை. ஒருவேளை பின்னாட்களில் ஏதாவது மாற்றங்கள் வரலாம். வழிகள் கிடைக்கலாம்.

யாருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற பொறுப்பை மதிப்புக்குரிய பொதுமகனிடமே விட்டு விடுவது நல்லது. அங்கே வாழும் அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கும்.

நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால் உலக அரசியல்  நிலமைகளுக்கமைய அன்றைய முடிவுகள் சரியாக இருந்தது.அதற்காக மீண்டும் பழைய குதிரையில் ஏறி உலகவலம் வரவேண்டும் என்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விசுகு said:

ஓவியம் மூலம் ஒரு கருத்தை வைப்பது என்பது மிக மிக கடினமானது.

உண்மை தான்.

ஆனாலும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மாவீரர் குடும்பத்திலிருந்து மக்களை எண்ணி ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி எழுத

பொதுமகன் போடா போ.பொத்திக் கொண்டு உன்ரை வேலையைப் பார் என்ற மாதிரியும் எண்ணலாம்.

ஏனென்றால் கருத்துப் படங்கள் ஒவ்வொருவர் கண்ணிலும் வித்தியாசமாக படும்.

மற்றும்படி கவி அருணாசலம் வரையும் எல்லாமே நானும் ரசிப்பேன்.
 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விசுகு said:

எனக்கும் உங்கள் இந்த நிலைப்பாட்டில் உடன்பாடு உண்டு. தாயக மக்கள் பல சகாப்தமாக பல தேர்தல்களில் பலரது கணிப்புகளையும் பொய்யாக்கி தூர நோக்கோடு தமது நீண்ட நெடிய வரலாற்றின்பால் வாக்களித்து வருகிறார்கள். நன்றி. 

அவர்களது தூர நோக்குகள்  என்ன விசுகர்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான்.

ஆனாலும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மாவீரர் குடும்பத்திலிருந்து மக்களை எண்ணி ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி எழுத

பொதுமகன் போடா போ.பொத்திக் கொண்டு உன்ரை வேலையைப் பார் என்ற மாதிரியும் எண்ணலாம்.

ஏனென்றால் கருத்துப் படங்கள் ஒவ்வொருவர் கண்ணிலும் வித்தியாசமாக படும்.

மற்றும்படி கவி அருணாசலம் வரையும் எல்லாமே நானும் ரசிப்பேன்.
 
இரண்டு மாவீரர்களை கொண்ட குடும்பத்தில் இருக்கும் கவி ஜயாவுக்கு ,உங்களை என்னை விட  நிறையவே பொறுப்பும் கடமையும் உண்டு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, நந்தன் said:

இரண்டு மாவீரர்களை கொண்ட குடும்பத்தில் இருக்கும் கவி ஜயாவுக்கு ,உங்களை என்னை விட  நிறையவே பொறுப்பும் கடமையும் உண்டு

எனக்கும் தெரியும் நந்தன்.அவரது சகோதரியையும் அறிவேன்.

அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

அவர்களது தூர நோக்குகள்  என்ன விசுகர்?

கனக்க தேவை இல்லை அண்ணா 

கூட்டமைப்பே உடைந்த போதும் ஏன் நாமெல்லாம் கூட்டமைப்பை வெறுத்த போதும் இன்றுவரை அதற்கு வாக்குகள் போட்டு அதை தங்க வைத்திருக்கும் அவர்களது தூர நோக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, விசுகு said:

கனக்க தேவை இல்லை அண்ணா 

கூட்டமைப்பே உடைந்த போதும் ஏன் நாமெல்லாம் கூட்டமைப்பை வெறுத்த போதும் இன்றுவரை அதற்கு வாக்குகள் போட்டு அதை தங்க வைத்திருக்கும் அவர்களது தூர நோக்கு....

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்த உங்களின் கருத்தென்ன அண்ணை? தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அப்படி ஒருவரை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் என்றால், எதற்காக என்றும் கூறமுடியுமா? அறிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, ஈழப்பிரியன் said:

அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.

உண்மை அண்ணை,

இங்கே நான் எழுதிய கருத்திற்கு நக்கலாக படம்போட்டது போல, முன்னர் ஒரு கருத்திற்கும் என்னை, மனித அழிவை விரும்புகின்ற, மக்கள் இறப்பதை விரும்புகின்ற ("சாவின் அரசன்") அந்நியன் படத்தில் வருவது போன்ற, முகம் இல்லாத, தலை முதல் கால்வரை முகமூடியணிந்த கைகளில் கொலை வாளினை ஏந்திய ஒரு உருவத்தினைப் போட்டு கேவலப்படுத்தினார்.. 

நாம் தமிழ் மக்களைக் கொல்ல அழைத்துச் செல்ல‌வில்லை. மாறாக எதுவுமே பலனளிக்காத‌ நிலையில் எம்மால் வேறு என்ன செய்யமுடியும் எனும் கோணத்திலேயே ஆயுதப் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டேன். அதை நாகரீகமாக, "இல்லை, அதுவும் சரிவராது" என்று சொல்லியிருக்கலாம். என்னை இரத்தப்பசி கொண்டவனாகக் காட்டியிருக்கத் தேவையில்லை. 

இப்போதும் அதேபோல, "நீ சொல்றதைச் சொல்லு, சனத்துக்குத் தெரியும் என்ன செய்வதெண்டு" என்கிற ரீதியில் இன்னொரு படம். ஆகவேதான் படம்போடுவதைக் காட்டிலும் எழுதலாம் என்று கூறினேன். உடனேயே சில மேதாவிகள் வந்துவிட்டார்கள். அரைத்த மாவை அரைப்பதைப் பார்க்கச் சகிக்காமலேயே கடந்துசெல்லத் தீர்மானித்தேன்.

கருத்தெழுதுங்கள், படம் வரையுங்கள், மற்றையவனை இகழாமல் அதைச் செய்யப் பாருங்கள்.  

Edited by ரஞ்சித்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி, இங்கு சிலர் கவலைப்படுவதுபோல, தமிழ் வேட்பாளர் தமிழர்களின் வாழ்வை அதள பாதாளத்திற்கு இழுத்துச்  சென்றுவிடுவார் (இப்போது மட்டும் தமிழர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்கவேண்டாம்) என்றே வைத்துக்கொள்வோம். ஆகவே, அவர்கள் விரும்புகின்ற மேற்குலகின் நண்பனான ரனிலுக்கே வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இன்றிருக்கும் நிலையினை விட தமிழர்களின் வாழ்வு எப்படி மேம்படும்? 2002 இலிருந்து 2005 வரை ரணிலே பிரதமராக இருந்தார். 2015 இலிருந்து 2019 வரை நல்லிணக்க அரசாங்கம், (100 நாட்களில் தமிழர்களுக்குத் தீர்வு தருவேன் என்று தனது ஏஜெண்டுகளான சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு) ரணில் அவரது சகாவான மைத்திரியுடனும் ஆட்சி செய்தார். தற்போது கோட்டா தப்பியோடியபின்னர் மீண்டும் ஜனாதிபதியாகியிருக்கிறார். தமிழரின் வாழ்வு மேம்பட்டதா?

கோட்டா உருவாக்கிய தொல்பொருள்ச் சபை, வன வளத்துறை ஆகிய இரண்டும் இன்றுவரை செய்துவரும் சிங்கள பெளத்த மயமாக்கலைத் தடுக்க முடிந்ததா? இவற்றில் பலவற்றைச் செய்விப்பதே ரணில் என்று கூறப்படுகிறது. இன்றுவரை மேற்கின் செல்லப்பிள்ளையான‌ ரணில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபையின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறாரா? அரசியல்க் கைதிகளை விடுவித்தாரா? காணமாலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர்ச்சியான கண்ணீருக்கும் கோரிக்கைகளுக்கும் ரணில் வழங்கிய பதில் என்ன? "இவர்களில் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிபோய் விட்டார்கள், வேண்டுமானால் இறப்புச் சான்றிதழ் தருகிறோம்" என்பதற்கப்பால் ரணில் செய்திருப்பது என்ன?  வடக்கின் சில பகுதிகளில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து சிலவிடங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழரின் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல்த் தீர்வு குறித்த ரணிலும் முடிவு என்ன? இவை எதுவுமே இல்லாமல் அவருக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று கேட்பது ஏன்? வெறுமனே சர்வதேச நாணய் நிதியத்தை ஜே வி பியினர் திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்கிற பீதியைக் கிளப்புவோர், சர்வதேச நாணய நிதியம் ஒன்றும் இலவசமாக மக்களுக்குப் பணம் தரவில்லையென்பதையும், இப்பணம் வட்டியோடு அம்மக்களின் வயிற்றில் மேலும் மேலும் அடித்தே அறவிடப்படும் என்பதையும் ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? அப்போதுமட்டும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமும், சமூகத்தரமும் உயர்ந்துவிடுமா? இன்று ஆட்சியில் இருப்பது ரணில். அப்படியிருக்க தமிழர்கள் உட்பட பலர் வெளிநாடு போவது ஏன்? சர்வதேச நாணய நிதியம் உதவுகிறதென்றால் அவர்கள் ஏன் நாட்டில் தொடர்ந்தும் இருக்கமுடியாது? 

உண்மை என்னவென்றால், ரணில் என்ன, யார் ஆட்சியில் இருந்தாலும் நாடு பின்னோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது.

ஏனென்றால், யுத்தம் 2009 இல் முடிவடைந்த பின்னர் மகிந்தவும், கோட்டாவும் நாட்டிற்கு கொண்டுவந்து குவித்திருந்த மொத்தக் கடன் 2022 இல் 58.73 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இக்கடன் 2021 இலிருந்ததைக் காட்டிலும் 0.03 வீதத்தால் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவருடத்தில் அதன் கடன் $58,732,518,598 இலிருந்து $ 58,712,654,401 ஆகக் குறைந்திருக்கிறதாம். ஆனால், ரணிலின் அரசாங்கம் உட்பட முன்னைய அரசினது அதிகரித்த பாதுகாப்புச் செலவிங்களினால் 2020 இலிருந்து 2021 வரையான ஒருவருட காலத்தில் கடன் 3.3 வீதத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த இலட்சணத்தில் நாடு ரணிலின் ஆட்சியில் முன்னேறிப் பாய்கிறது என்று கூறுகிறார்கள். நம்புகிறோம். 

ரணில் இன்று காட்டிவரும் பொருளாதார சீர்செய்தல் என்பது வெற்றுக் கோதுதான். வெறுமனே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் இல்லாததையும், மக்களுக்கு காஸ் கிடைப்பதையும் வைத்துக்கொண்டு பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்கிறது என்று கனவு காண்பவர்கள், சர்வதேச நாணய நிதியத்தினால் அரசுக்கு வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைப் பற்றி அறிவார்களா? அப்படி அவர்கள் கூறுவது போல ரணிலின் ஆட்சியில் பொருளாதாரம் அசுர வேகத்தில் இன்று வளர்கிறதென்றால், பலர் வெளிநாடு செல்ல முண்டியடிப்பது ஏன்? ஆக, ரணில் இருந்தாலென்ன, அவரின் மச்சான் இருந்தாலென்ன, தமிழ் மக்கள் மட்டுமல்ல, எந்த மக்களினதும் வாழ்வு இப்போதைக்கு வளம்பெறப்போவதில்லை. ஆகவே ரணில் புராணம் பாடுவதை இவர்கள் நிறுத்தவேண்டும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாடு இன்றிருக்கும் நிலையில் ஜே வி பி விரும்பினாலும் எதனையும் செய்ய முடியாது. அப்படி ஜே வி பி சர்வதேச நாணய‌ நிதியத்தின் ஒப்பந்தத்தை நீக்கி வெளியேறினால், நாடு முற்றான பொருளாதார, சமூக, அரசியல் சீரழிவிற்குச் செல்லும். தென்னமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் நிகழும் சீரழிவுகளுக்கு ஒத்த நிலையை இலங்கை அடையும். ஆகவே, ரணிலின் ஆதரவாளர்கள் பிதற்றுவதுபோல அனுரவினால் இலகுவாக சர்வதேச நாணய நிதியத்தை திருப்பியனுப்ப முடியாது. அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதே அவர்களுக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதைத் தவிரவும், 2019 இல் தமிழர்களின் வாக்குகள் இல்லாமலேயே சிங்கள ஜனாதிபதியொருவர் பதவிக்கு வரலாம் என்று சிங்களவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தால்த்தான் என்ன? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான்.

ஆனாலும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மாவீரர் குடும்பத்திலிருந்து மக்களை எண்ணி ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி எழுத

On 11/5/2024 at 16:56, விசுகு said:

 கனக்க எழுத முடியாமையால் ஓரிரு சொற்களை பயன்படுத்துவதால் சில சுட்டு விடக்கூடும். 

அதற்காக தான் அண்ணா இதை எழுதினேன். நன்றி 

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

There are lies, damn lies, then there are statistics  என்பார்கள். 

பொய், கடும் பொய் அதற்கும் மேலான பொய் புள்ளி விபரப்பொய்.

இங்கே @ரஞ்சித் பொ.த.வே வை ஆதரிக்கும் தன் நிலையை நிறுவ இந்த வகையிலேயே புள்ளிவிபரத்தை பாவிக்கிறார் என படுகிறது.

1. சகல தேர்தல்களிலும் வன்னி, திருமலை, மட்டகளப்பில் இருந்த மிக கணிசமான முஸ்லிம், சிங்கள வாக்காளர் தெரிவை தமிழர் தலையில் கட்டி விடுகிறார்.

2. உண்மையில் இந்த தேர்தல்களில் எல்லாம் தனியே தமிழர் வாக்குகளால் மட்டும் நிரம்பிய ஒரே ஒரு தொகுதி என்றால் அது யாழ் மாவட்டம் மட்டுமே. இந்த அடிப்படையில் பார்த்தால் ஜே ஆர், பிரேமதாசவுக்கு போடாமல் விட்டதால் தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

3. 

On 10/5/2024 at 10:50, ரஞ்சித் said:

1994 ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டு 
ஜனாதிபதி : சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க‌
யாழ்ப்பாணம் : 96.35% (1994) & 46.65 % (1999)
வன்னி : 85.30% (1994) & 25.8% (1999)
மட்டக்களப்பு : 87.3% (1994) & 34.7% (1999)
திருகோணமலை : 71.6% (1994) & 45% (1999)
சராசரி : 85.13% (1994) & 38% (1999)

1994 தேர்தல் தனியே தீவுபகுதியில் நடந்தது என நினைக்கிறேன் (இதே வருடம்தான் டக்லஸ் 9 எம்பி சீட் எடுத்தார்?).  இங்கேயும் யாழ் மாவட்ட மக்கள் பெருவாரியாக தேர்தலை புறக்கணித்தனர், அல்லது பங்கெடுக்க விடாமல் தடுக்கப்பட்டனர்.

1999 தேர்தலும் இதே போல்தான்.

இந்த தேர்தல்களில் பதிவான வாக்காளரில் எத்தனை சதவீதம் வாக்களித்தனர் என்ற தரவை பார்த்தால் - ரஞ்சித் காட்டு புள்ளி விபரம் ஏன் நம்பிக்கை அற்றது என புரியும்.

ஜே ஆர், பிரேமா தேர்தல்கள் போல இந்த தேர்தல்களும் யாழ் மாவட்ட தமிழர் சிங்கள வேட்பாளருக்கு பெருவாரியாக வாக்கு போடாத தேர்தல்களே. ஆகவே சிங்கள வேட்பாளருக்கு போடாமல் விட்டதால்தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

4. 

On 10/5/2024 at 11:01, ரஞ்சித் said:

2005 தேர்தல்
ஜனாதிபதி : மகிந்த ராஜபக்ஷ‌ (தமிழர்கள் வன்னியில் வாக்களிக்காது விட்டமையினால் தெரிவுசெய்யப்பட்டவர்)

யாழ்ப்பாணம் : 25%
வன்னி : 20%
மட்டக்களப்பு : 18.8%
அம்பாறை : 43%
திருகோணமலை : 37%

சராசரி : 28.76%

இதே தேதலில் தமிழர்களால் ஆதரவளிக்கப்பட்ட வேட்பாளர் ரணிக்குக் கிடைத்த வாக்குகள் 
யாழ்ப்பாணம் : 70%
வன்னி : 77%
மட்டக்களப்பு : 79.5%
அம்பாறை : 55%
திருகோணமலை : 61 %

சராசரி : 68.5%

ரஞ்சித் போட்ட புள்ளி விபர குண்டுகளிலேயே பெரிய குண்டு இதுதான்.

திடீரென இங்கே கணக்கில் அம்பாறையை சேர்கிறார் (கிட்டதட்ட முழு சிங்கள/முஸ்லிம் மாவட்டம்).

அதாவது பறாவாயில்லை, புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாகவும், ஏனைய தமிழ் இடங்களில் புலிகள் சொன்னதை கேட்டு மக்கள் பெருவாரியாகவும் புறக்கணித்த தேர்தல் முடிவை - மக்கள் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைத்ததன் பயன் என பக்கேஜ் செய்கிறார் 🤣.

2005 தேர்தல் முடிவால் தமிழருக்கு ஏற்பட்ட விளைவுகள், தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கான விலை. அதை என்னதான் பக்கேஜ் செய்தாலும் மாற்ற முடியாது. இதன் படி பார்த்தாலும் தேர்தல் புறக்கணிப்பு/பொது வேட்பாளர் எமக்கு ஆப்பாகவே முடியும் என்றாகும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

5. 

On 10/5/2024 at 11:09, ரஞ்சித் said:

மகிந்தவுக்கான தமிழரின் வாக்குகள்
யாழ்ப்பாணம் : 24.7%
வன்னி : 27.3%
மட்டக்களப்பு : 26.2%
திருகோணமலை : 43%
சராசரி : 30.3%

சரத் பொன்சேகாவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 63.8%
வன்னி : 66.8%
மட்டக்களப்பு : 68.93%
திருகோணமலை : 54%
சராசரி : 63.4%

இத்தேர்தலில் இனக்கொலையாலியான சரத் பொன்சேக்காவிற்கு வக்களித்ததன் மூலம் தமிழர்கள் சொல்லிய செய்தி : சரத் பொன்சேக்காவின் கூற்றுப்படி
1. இனக்கொலையென்றும், போர்க்குற்றங்கள் என்றும் எதுவுமே நடைபெறவில்லை என்பதை எனக்கு வாக்களித்ததன் மூலம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
2. புலிகளை அழிக்க நான் தலைமையேற்று நடத்திய யுத்தத்தினை தமிழ் மக்கள் வரவேற்றிருக்கிறார்கள்

இங்கே சொல்லப்படும் பொன்சேக்காவின் கூற்றை உலகில் யாரும் நம்பவில்லை என்பதுதான் உண்மை. இதை சர்வ உலகமும் மகிந்தவை தோற்கடிக்க ஆக கூடியதை தமிழர் செய்தார்கள் என்றே பார்த்தது.

அது மட்டும் இல்லை, இங்கேயும் பதிவு செய்யப்பட்டோரில் எத்தனை % பேர் வாக்களித்தனர் என்ற புள்ளி விபரம் - உண்மை நிலையை - அதாவது தமிழர் திரளாக பொன்சேக்காவை ஆதரிக்கவில்லை என்பதை காட்டும்.

6.

On 10/5/2024 at 11:19, ரஞ்சித் said:

2015 தேர்தல்

இனக்கொலையாளியான மகிந்த ராஜபக்ஷவுக்கெதிராகவும், அதே இனக்கொலை யுத்தத்தில் அவனது பிரதமராகவும், இறுதிப்போரின் இறுதிநாட்களின்போது மகிந்த வெளிநாடு சென்றிருந்தவேளை நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பினைக் கவனித்துக்கொண்ட‌வனுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகவும் தமிழ் மக்கள் வாக்களித்த விதம்

மகிந்த ராஜபக்ஷவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 21.8%
மட்டக்களப்பு : 16.2%
திருகோணமலை : 26.6%
வன்னி : 19%
சராசரி :20.9%

மைத்திரிபால சிறிசேனவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 74.4%
மட்டக்களப்பு : 81.6%
திருகோணமலை : 71.8%
வன்னி : 78.5%
சராசரி : 76.6%

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தமிழர்கள் தெரிவுசெய்த ஜனாதிபதியான மைத்திரியும், தமிழர்கள் தெரிவுசெய்த பிரதமரான ரணிலும் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

உண்மையில் தமிழர்கள் “தெரிவு செய்த” என்ற அடை மொழிக்கு ஏற்புடைய ஒரே ஜனாதிபதி மைத்திரிதான்.

அவர் அரசியல் அபிலாசைகள் விடயத்தில் ஒன்றும் கிழிக்கவில்லை என்பது உண்மையே எனிலும், மும்மொழி கொள்கை, குடியேற்ற வேகம், விகாரை கட்டுதல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ பிரசன்னம் குறைப்பு, முள்ளிவாய்க்கால், மாவீரர் நினைவேந்தல் என பல வகைகளில் தமிழ் மக்கள், முந்திய மகிந்த, பிந்திய கோட்டா ஆட்சியோடு ஓப்பிடின், ஆசுவாசமாக இருந்த காலம் இது. ஆகவே இங்கே மைத்திரிக்கு வாக்கு போட்டது முற்றிலும் பிழை என கூற முடியாது. அத்தோடு மகிந்த எமக்கு எப்போதும் ஏற்புடையவர் அல்ல என்ற செய்திதையும் மக்கள் சொன்னார்கள். 

7.

On 10/5/2024 at 11:26, ரஞ்சித் said:

இத்தேர்தலில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவுக்கெதிராகவும்,  இன்னொரு பெயர்பெற்ற‌ சிங்கள இனவாதியான பிரேமதாசவின் மகனும், பிரேமதாசவை ஒத்த இனவாதியுமான  சஜித் பிரேமதாசவுக்குத் தமிழர்கள் வாக்களித்த விதம்

கோட்டாபய ராஜபக்ஷ‌
மட்டக்களப்பு : 12.6%
யாழ்ப்பாணம் : 6.2%
வன்னி : 12.2%
திருகோணமலை : 23.3%
சராசரி : 13.5%

சஜித் பிரேமதாச‌
மட்டக்களப்பு : 78.7%
யாழ்ப்பாணம் : 83.36%
வன்னி : 82.1%
திருகோணமலை : 72%
சராசரி : 79.04%

இது மகிந்தவை விட மோசமான அடக்குமுறையாளனான கோட்ட வை வரவிடாமல் தடுத்து, ஒப்பீட்டளவில் அராஜகம் குறைந்த சஜித்தை மக்கள் தேர்ந்த தேர்தல். ஆனால் சிங்கள வாக்காளரின் மமதை, இனவெறி முடிவை வேறாக்கி, இறுதியில் அறகளவில் வந்து நின்றது.

இங்கேயும் மக்களின் நோக்க பிழை சொல்ல முடியாது. ஆனால் சிங்கள வாக்குகள் ஒரே அணியில் திரண்டதால் நோக்கம் நிறைவேற வில்லை.

முடிவாக,

மேலே ரஞ்சித் ஒரு பக்கசார்பாக அணுகிய தரவுகளை வைத்து - இலங்கை தேர்தல்களில் இதுவரை தமிழர்கள் வாக்களித்த விதம் அவர்களுக்கு ஆப்பாக அமைந்தது என கூற முடியாது.

பொது தமிழ் வேட்பாளர் பற்றி எனக்கு கடும் எதிர் கருத்து அதிகம் இல்லை. ஆனால் புள்ளி விபரங்களை செலக்டிவாக அணுகி அதை நியாப்படுத்த கூடாது.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/5/2024 at 15:56, விசுகு said:

ஓவியம் மூலம் ஒரு கருத்தை வைப்பது என்பது மிக மிக கடினமானது. அந்த திறமையை பாராட்டுகிறேன். கனக்க எழுத முடியாமையால் ஓரிரு சொற்களை பயன்படுத்துவதால் சில சுட்டு விடக்கூடும். 

எனக்கும் உங்கள் இந்த நிலைப்பாட்டில் உடன்பாடு உண்டு. தாயக மக்கள் பல சகாப்தமாக பல தேர்தல்களில் பலரது கணிப்புகளையும் பொய்யாக்கி தூர நோக்கோடு தமது நீண்ட நெடிய வரலாற்றின்பால் வாக்களித்து வருகிறார்கள். நன்றி. 

எனது நிலைப்பாடும் இதுவே. 

உண்மையில் என் போன்றோர் பக்கம் பக்கமாக நீட்டி முழக்குவதை விட - @Kavi arunasalam ஐயா வின் ஒரு ஓவியம், பலருக்கு அதிக உறைப்பை கொடுப்பதை யாழில் பல இடங்களில் கண்டுள்ளேன்.

கருத்தோவியமும் ஒரு கருத்துத்தான்.

ஆகவே “கருத்தை எழுதுங்கள்” என்ற ரஞ்சித்தின் கோபம் அடிப்படை அற்றது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ரஞ்சித் said:

. அப்படி ஜே வி பி சர்வதேச நாணய‌ நிதியத்தின் ஒப்பந்தத்தை நீக்கி வெளியேறினால், நாடு முற்றான பொருளாதார, சமூக, அரசியல் சீரழிவிற்குச் செல்லும். தென்னமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் நிகழும் சீரழிவுகளுக்கு ஒத்த நிலையை இலங்கை அடையும்.

ஒரு கேள்வி - மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்க சஜித்துக்கு போடலாம் என நான் யாழில் எழுத, இல்லை கோட்டா வந்தால் அடக்கு முறை கூடும், அதை வைத்து நாம் தீர்வை அடைவது இலகு என எழுதியவர்களில் நீங்களும் ஒருவர் என நினைக்கிறேன்.

இதே லொஜிக் அனுரவுக்கும் பொருந்தாதா?

அவர் நாட்டை வெனிசுவேலா போலாக்கினால் - குறுகிய காலத்தில் மக்கள் துன்பப்பட்டாலும், எமக்கு தீர்வு வர இது உதவும் அல்லவா?

அப்போ தமிழர் திரளாக அனுரவுக்கு போட வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 minutes ago, goshan_che said:

There are lies, damn lies, then there are statistics  என்பார்கள். 

பொய், கடும் பொய் அதற்கும் மேலான பொய் புள்ளி விபரப்பொய்.

இங்கே @ரஞ்சித் பொ.த.வே வை ஆதரிக்கும் தன் நிலையை நிறுவ இந்த வகையிலேயே புள்ளிவிபரத்தை பாவிக்கிறார் என படுகிறது.

1. சகல தேர்தல்களிலும் வன்னி, திருமலை, மட்டகளப்பில் இருந்த மிக கணிசமான முஸ்லிம், சிங்கள வாக்காளர் தெரிவை தமிழர் தலையில் கட்டி விடுகிறார்.

2. உண்மையில் இந்த தேர்தல்களில் எல்லாம் தனியே தமிழர் வாக்குகளால் மட்டும் நிரம்பிய ஒரே ஒரு தொகுதி என்றால் அது யாழ் மாவட்டம் மட்டுமே. இந்த அடிப்படையில் பார்த்தால் ஜே ஆர், பிரேமதாசவுக்கு போடாமல் விட்டதால் தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

3. 

1994 தேர்தல் தனியே தீவுபகுதியில் நடந்தது என நினைக்கிறேன் (இதே வருடம்தான் டக்லஸ் 9 எம்பி சீட் எடுத்தார்?).  இங்கேயும் யாழ் மாவட்ட மக்கள் பெருவாரியாக தேர்தலை புறக்கணித்தனர், அல்லது பங்கெடுக்க விடாமல் தடுக்கப்பட்டனர்.

1999 தேர்தலும் இதே போல்தான்.

இந்த தேர்தல்களில் பதிவான வாக்காளரில் எத்தனை சதவீதம் வாக்களித்தனர் என்ற தரவை பார்த்தால் - ரஞ்சித் காட்டு புள்ளி விபரம் ஏன் நம்பிக்கை அற்றது என புரியும்.

ஜே ஆர், பிரேமா தேர்தல்கள் போல இந்த தேர்தல்களும் யாழ் மாவட்ட தமிழர் சிங்கள வேட்பாளருக்கு பெருவாரியாக வாக்கு போடாத தேர்தல்களே. ஆகவே சிங்கள வேட்பாளருக்கு போடாமல் விட்டதால்தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

4. 

ரஞ்சித் போட்ட புள்ளி விபர குண்டுகளிலேயே பெரிய குண்டு இதுதான்.

திடீரென இங்கே கணக்கில் அம்பாறையை சேர்கிறார் (கிட்டதட்ட முழு சிங்கள/முஸ்லிம் மாவட்டம்).

அதாவது பறாவாயில்லை, புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாகவும், ஏனைய தமிழ் இடங்களில் புலிகள் சொன்னதை கேட்டு மக்கள் பெருவாரியாகவும் புறக்கணித்த தேர்தல் முடிவை - மக்கள் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைத்ததன் பயன் என பக்கேஜ் செய்கிறார் 🤣.

2005 தேர்தல் முடிவால் தமிழருக்கு ஏற்பட்ட விளைவுகள், தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கான விலை. அதை என்னதான் பக்கேஜ் செய்தாலும் மாற்ற முடியாது. இதன் படி பார்த்தாலும் தேர்தல் புறக்கணிப்பு/பொது வேட்பாளர் எமக்கு ஆப்பாகவே முடியும் என்றாகும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

5. 

இங்கே சொல்லப்படும் பொன்சேக்காவின் கூற்றை உலகில் யாரும் நம்பவில்லை என்பதுதான் உண்மை. இதை சர்வ உலகமும் மகிந்தவை தோற்கடிக்க ஆக கூடியதை தமிழர் செய்தார்கள் என்றே பார்த்தது.

அது மட்டும் இல்லை, இங்கேயும் பதிவு செய்யப்பட்டோரில் எத்தனை % பேர் வாக்களித்தனர் என்ற புள்ளி விபரம் - உண்மை நிலையை - அதாவது தமிழர் திரளாக பொன்சேக்காவை ஆதரிக்கவில்லை என்பதை காட்டும்.

6.

உண்மையில் தமிழர்கள் “தெரிவு செய்த” என்ற அடை மொழிக்கு ஏற்புடைய ஒரே ஜனாதிபதி மைத்திரிதான்.

அவர் அரசியல் அபிலாசைகள் விடயத்தில் ஒன்றும் கிழிக்கவில்லை என்பது உண்மையே எனிலும், மும்மொழி கொள்கை, குடியேற்ற வேகம், விகாரை கட்டுதல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ பிரசன்னம் குறைப்பு, முள்ளிவாய்க்கால், மாவீரர் நினைவேந்தல் என பல வகைகளில் தமிழ் மக்கள், முந்திய மகிந்த, பிந்திய கோட்டா ஆட்சியோடு ஓப்பிடின், ஆசுவாசமாக இருந்த காலம் இது. ஆகவே இங்கே மைத்திரிக்கு வாக்கு போட்டது முற்றிலும் பிழை என கூற முடியாது. அத்தோடு மகிந்த எமக்கு எப்போதும் ஏற்புடையவர் அல்ல என்ற செய்திதையும் மக்கள் சொன்னார்கள். 

7.

இது மகிந்தவை விட மோசமான அடக்குமுறையாளனான கோட்ட வை வரவிடாமல் தடுத்து, ஒப்பீட்டளவில் அராஜகம் குறைந்த சஜித்தை மக்கள் தேர்ந்த தேர்தல். ஆனால் சிங்கள வாக்காளரின் மமதை, இனவெறி முடிவை வேறாக்கி, இறுதியில் அறகளவில் வந்து நின்றது.

இங்கேயும் மக்களின் நோக்க பிழை சொல்ல முடியாது. ஆனால் சிங்கள வாக்குகள் ஒரே அணியில் திரண்டதால் நோக்கம் நிறைவேற வில்லை.

முடிவாக,

மேலே ரஞ்சித் ஒரு பக்கசார்பாக அணுகிய தரவுகளை வைத்து - இலங்கை தேர்தல்களில் இதுவரை தமிழர்கள் வாக்களித்த விதம் அவர்களுக்கு ஆப்பாக அமைந்தது என கூற முடியாது.

பொது தமிழ் வேட்பாளர் பற்றி எனக்கு கடும் எதிர் கருத்து அதிகம் இல்லை. ஆனால் புள்ளி விபரங்களை செலக்டிவாக அணுகி அதை நியாப்படுத்த கூடாது.

தேர்ந்து தெரிந்து (Cherry-pick) எழுதும் போக்கு இங்கேயும் தென்பட்டதால் தான் மேலே கேட்டிருந்தேன் "எங்கிருந்து எழுதுகிறீர்கள்? இதயத்தில் இருந்தா மூளையில் இருந்தா?" என்று. நான் பிதற்றுகிறேன் என்று சொல்லி விட்டுக் கடந்து போய் விட்டார்.

புள்ளி விபரம் மட்டுமல்ல: IMF இனை எதிர்கால NPP அரசோ, யாரோ அவ்வளவு சுலபமாக வெளியேற்ற விட முடியாது என்றும் ஒரு குண்டைப் போட்டிருக்கிறார்.

நான் அறிந்த வரையில், IMF நேட்டோ அல்ல, உதவி கேட்கும் அரசு நிபந்தனைகளுக்கு உடன்படா விட்டால் அவர்கள் கடையைப் பூட்டிக் கொண்டு அடுத்த நாட்டைத் தேடிப் போய் விடுவர். IMF உடனான ஒப்பந்தங்களில், அனுர அணி மதில் மேல் பூனையாக இருக்கிறது. "மக்கள் ஆணைக்குட்பட்ட நிபந்தனைகளை மட்டுமே ஏற்றுக் கொள்வோம்" என்று தான் சொல்லி வருகின்றனர். ஒரு ஆய்வாளர் டெய்லி மிரரில் எழுதிய கட்டுரையில் "உதவி கேட்கும் தரப்பின் விருப்பிற்கேற்ப IMF வளைந்து கொடுப்பதை தான் வரலாற்றில் கண்டதில்லை" என உள்குத்தாக எழுதியிருந்தார்.  

Edited by Justin

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.