Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போது நடைபெறும் இசை நிகழ:ச்சிகளில் இதெல்லாம் சகஜம் என்கிறார்கள்.

முன்னர் போல் அல்லாது மது வாங்குவதற்கு இளைஞர்களின் கைகளில் போதியளவு பணமும் ஒரு காரணம்.

முன்னர் நாங்கள் வீட்டுக்காரருக்கு மட்டுமல்ல உறவினர்கள் ஊரவர்கள் என்று யாரைக் கண்டாலும் பயம்.

👍.....

அதிகமான இளைஞர்கள் ஊர் விட்டு ஊர் வந்து இப்படிச் செய்வதனால், அவர்களுக்கு தெரிந்தவர்கள், சொந்தங்கள் என்று இவ்விடங்களில் இல்லை. அதனாலேயே பயம் அல்லது தயக்கம் என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது.

ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒரு வீட்டிற்கு போய் விட்டு திரும்பி வரும் போது நன்றாக இருட்டிவிட்டது. தீருவிலில் பகுதியில் இருக்கும் தூபி வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தோம். குமரப்பா, புலேந்திரன் மற்றும் அவர்களுடன் மாவீரர்களானவர்களின் ஞாபகார்த்தமாக கட்டிய தூபி. தூபியின் அடையாளமே இன்று அங்கு இல்லை. இராணுவம் எப்போதோ அதை அழித்துவிட்டது.

அந்தப் பகுதி முழுவதும் கும்மென்ற இருட்டு. தூபி வீதியில் இருந்த எல்லா மின்விளக்குகளும் உடைக்கப்பட்டிருந்தன. திடீரென்று பார்த்தால் இருட்டில் தனியே ஒருவர் நின்றிருந்தார். கையில் புகைத்துக் கொண்டிருந்தது. மனைவி பயந்துவிட்டார். ஒரு பத்து அடிகளில் இன்னொருவர் அதே போல. பின்னர் இருவர். அந்தப் பகுதியை கடகடவென்று தாண்டிய பின்னரே கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

எஙகள் வீட்டில் இருந்தவர்கள் மிகவும் கடிந்து கொண்டனர். அந்தப் பகுதியால் இரவில் எவருமே போவதில்லை என்றனர். எப்படியான ஒரு நிலைமை.........😌    

  • Replies 107
  • Views 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    படம் இல்லாத இலங்கைப் பயணம் - இரண்டு ---------------------------------------------------------------------- கட்டுநாயக்காவில் இருந்து அப்படியே நேரே ஊர் போவது, கொழும்பிற்கு போவதில்லை என்ற

  • ரசோதரன்
    ரசோதரன்

    படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஆறு ---------------------------------------------------------------- குட்டிக் கடை என்றாலும் எங்கள் வீட்டவர்கள் அங்கும் எட்டு மணித்தியாலங்கள் செலவழிக்கும் த

  • ரசோதரன்
    ரசோதரன்

    படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஏழு - இந்திர விழா -------------------------------------------------------------------------------------- இந்திர விழா என்ற பெயரில் ஒரு விழா கோவலன், கண்ணகி வ

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

அந்தப் பகுதி முழுவதும் கும்மென்ற இருட்டு. தூபி வீதியில் இருந்த எல்லா மின்விளக்குகளும் உடைக்கப்பட்டிருந்தன. திடீரென்று பார்த்தால் இருட்டில் தனியே ஒருவர் நின்றிருந்தார். கையில் புகைத்துக் கொண்டிருந்தது. மனைவி பயந்துவிட்டார். ஒரு பத்து அடிகளில் இன்னொருவர் அதே போல. பின்னர் இருவர். அந்தப் பகுதியை கடகடவென்று தாண்டிய பின்னரே கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

முன்னர் கிராமங்களில் தெரியாத யாராவது நடமாடினால் யார் என்னவென்று உடனே கேட்பார்கள்.இப்போ எல்லா ஊர்களிலும் புதிது புதிதாக வந்து குடியேறி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரசோதரன் said:

ஊர் அம்மன் கோவிலின் 15ம் நாள் தீர்த்த திருவிழா. அம்மன் சமுத்திரத் தீர்த்தம் ஆடும் நாள். 15 நாட்கள் திருவிழாவின் கடைசி நாளான இது ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றே வரும். அன்றைய நாளை ஊரவர்கள் இந்திரா விழா என்னும் பெயரில் நெடுங்காலமாக நடத்தி வருகின்றனர்.

எனது  80களின் நினைவுகளை  மீட்டிப் பார்க்க வைக்கிறீர்கள்.

எனது நண்பன் மோகன் (ஆர்ட்ஸ்) இப்பொழுது இல்லை.  இந்திர விழாவுக்கு என்னை மோகன் அழைத்துப் போவான். அவன் மரணித்த போது நான் எழுதியதில் ஒரு பகுதி,

ஐம்பது அறுபது அடிகள் அளவில் பெரியளவிலான படங்களை வர்ணங்கள் இல்லாமல் வர்ணக் காகிதங்களை மட்டும் பாவித்து உருவாக்குவதில் வல்வெட்டித்துறையில் வல்லுனர்கள் இருந்தார்கள். வல்வெட்டித்துறை அம்மன் கோவில் திருவிழா என்றால், நகரின் சந்தியில் இருந்து ஊரிக்காடு வரை ஒரு மைலுக்கு மேல் வீதியின் இரு பக்கங்களிலும் பெரியளவிலான படங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். 'வா எங்கள் நகரத்து இந்திர விழாவை வந்து பார்' என்று மோகன் என்னைப் பல தடவைகள் அந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்காக அழைத்துப் போயிருக்கிறார். புராண, இலக்கியங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள், கண்ணன், ராதை சிருங்காரக் காட்சிகள், கடவுள்கள் வரம் தரும் காட்சிகள் என்று ஏகப்பட்ட கட் அவுட்டுக்களை வைத்திருப்பார்கள். அதில் கண்டிப்பாக மோகனின் ஒரு படைப்பு இருக்கும். மோகனின் கட்டவுட்டுக்குப் பக்கத்தில் அவரது சிறுவயது ஓவிய ஆசிரியர் பாலா அவர்களது கட்டவுட்டும் இருக்கும். இதமான கடல் காற்று உடலை வருடிக் கொண்டிருக்க முழு நிலவின் வெளிச்சத்தில் அந்தக் கட்டவுட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மனது குதூகலிக்கும். உயரமான கட்டவுட்டுக்களுக்கு முழு நிலவு ஒளி பாய்ச்ச வீதிகளின் இருபக்கங்களும் பொருத்தப்பட்டிருக்கும் ரியூப் லைற்றுக்கள் இரவைப் பகலாக்கி விட்டிருக்கும்.

பொதுவாக வல்வெட்டித்துறை திருவிழா என்றால் தங்க நகைகள் பளபளக்க தாரகைகளாக நங்கைகள் வலம் வருவார்கள். மோகன் என்னிடம் இந்த தங்கநகை விடயத்தை சொல்லி இருந்தார். தொழில் புரிவதற்கு ஆண்களுக்கு பணம் தேவைப்படுவதால் அநேகமானவர்களது தங்க நகைகள் நகரில் இருந்த மக்கள் வங்கியிலே அடகு வைக்கப்பட்டிருக்கும். திருவிழா தொடங்கும் மாதத்தில் எப்படியோ பணத்தைப் புரட்டி நகைகளை வங்கியில் இருந்து எடுத்து தங்கள் அம்மன்களுக்கு போட்டு அழகு பார்ப்பார்கள். கவனிக்க, வல்வெட்டித்துறையில் பெண்களை அம்மன் என்று விழிக்கும் பழக்கம் உண்டு. அதுபோல் ஆண்களில் அம்மான்களும் உண்டு. திருவிழா முடிந்த கையோடு நகைகள் எல்லாம் மீண்டும் பதினொரு மாத நெடுந்தூக்கத்துக்காக மக்கள் வங்கிக்குள் இருக்கும் பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் போய்ச் சேர்ந்து விடும்.

படங்கள் இல்லாத பயணக் கட்டுரை. படங்கள் மனதில் வந்து போகின்றன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kavi arunasalam said:

❤️.......

மோகன் அண்ணா அப்பொழுது ஊரில் பெரும் பிரபலம். அவர் கடைகளின்  வாசல்களில் எழுதும் பெயர்களையே நாங்கள் ரசிகர்களாகப் பார்ப்போம். அந்தப் படங்களை கட் அவுட் என்று சொல்வோம். இன்றும் அது இருக்கின்றது, இந்த தடவையும் இருந்தது. ஆனால் கட் அவுட்டுகள் முன்னர் மிகச் சிறப்பாக இருந்தன என்று மனம் சொல்கின்றது.

மோகன் அண்ணாவின் கட் அவுட் ஒவ்வொரு வருடமும் வங்கிக்கு அருகில் இருந்தது என்று நினைக்கின்றேன். பாலா மாஸ்டர் அவர்களின் கட் அவுட் அதற்கு அடுத்ததாக அரியோட்டி பள்ளிக் கூடத்திற்கு அருகில். ஒவ்வொரு கட் அவுட்டும் எவ்வளவு பெரிய முயற்சியும், பலரது உழைப்பும். இவர்கள் பெரும் கலைஞர்கள்.

'அம்மன்...' என்றே வீட்டில் இன்றும் சொல்கின்றோம்/கூப்பிடுகின்றோம், ஏழு கடல் மலை தாண்டியும் விட்டுப் போகாத ஒரு பழக்கம்........🤣.

நகை விவகாரம் உண்மையே. ஆனால் இன்று திருடர் பயம் காரணமாக கவரிங் நகையாக மாறிவிட்டது. அதையும் கழுத்து மூடும் வரை இன்றும் போடுகின்றனர்........😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

முன்னர் கிராமங்களில் தெரியாத யாராவது நடமாடினால் யார் என்னவென்று உடனே கேட்பார்கள்.இப்போ எல்லா ஊர்களிலும் புதிது புதிதாக வந்து குடியேறி விட்டார்கள்.

தெரியாத ஆக்கள் மட்டுமில்லை.....
அறிமுகமில்லாத  ஆடு,மாடு,நாய், பூனை வந்தாலே விசாரிக்க வந்துவிடுவினம். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரசோதரன் said:

எஙகள் வீட்டில் இருந்தவர்கள் மிகவும் கடிந்து கொண்டனர். அந்தப் பகுதியால் இரவில் எவருமே போவதில்லை என்றனர்.

அந்த பகுதியில் எவரும் இரவில் செல்வதில்லை ஏன் என்ற காரணத்தை யாரிடமாவது கேட்டு தெரிந்து கொண்டீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அந்த பகுதியில் எவரும் இரவில் செல்வதில்லை ஏன் என்ற காரணத்தை யாரிடமாவது கேட்டு தெரிந்து கொண்டீர்களா?

இரவில் அந்தப் பகுதியில் போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் ஒன்றாகச் சேருவார்கள் என்று சொன்னார்கள். இடைக்கிடை  போலீஸ் அங்கு போய் தேடுதல் நடத்துவார்களாம். அந்த இடத்தின் அமைப்பு, ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு வயல் வெளி, அதன் பின்னால் பனங்கூடல் என்று இதற்கு வசதியாகவே இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, ரசோதரன் said:

இரவில் அந்தப் பகுதியில் போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் ஒன்றாகச் சேருவார்கள் என்று சொன்னார்கள். இடைக்கிடை  போலீஸ் அங்கு போய் தேடுதல் நடத்துவார்களாம். அந்த இடத்தின் அமைப்பு, ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு வயல் வெளி, அதன் பின்னால் பனங்கூடல் என்று இதற்கு வசதியாகவே இருக்கின்றது. 

கள்ளு தவறணை காலம் போய் இப்ப கஞ்சா...கசிப்பு  அது இது எண்ட காலத்திலை வந்து நிக்கிது நம்ம சமுதாயம். :cool:

அப்பவே தவறணை எண்டாலே மூக்கை சுளிச்ச சமுதாயம் இப்ப கஞ்சா,கசிப்பு,அந்த குளிசை இந்த குளிசை எண்ட  விசயத்தை எப்பிடி தாங்கிக்கொள்ள போதுதோ என்ரை ஈஸ்வரா..... 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
படம் இல்லாத இலங்கைப் பயணம் - எட்டு - அவசரப் பயணம்
----------------------------------------------------------------------------------------------
இன்னும் மூன்று நாட்களே பிள்ளைகளுக்கு இருக்கின்றது என்ற நிலையில், அங்கே போகலாமா அல்லது இங்கே போகலாமா என்று எந்தக் குழப்பமும் நாங்கள் படாமல், வாகனக்காரர்களையே கேட்டு விடுவோம் என்று கேட்டோம். இந்த இரண்டு வாரங்களில் அவர்களுடன் நல்ல பழக்கம் வந்துவிட்டது. எங்களுக்கு மட்டும் இல்லாமல், வேறு சில உறவினர்களுக்கும் அவர்களை பயன்படுத்தி இருந்தோம். ஊரில் இருந்து நேரே திருகோணமலை, பின்னர் அங்கிருந்து அப்படியே கண்டி, இரவு கண்டியில் தங்கி, அடுத்த நாள் அங்கே சுற்றிப் பார்த்து விட்டு, மதிய நேரத்தின் பின் பின்னவல யானைகள் மற்றும் ஆயுர்வேத தோட்டங்கள், அதன் பின்னர் அப்படியே கொழும்பு என்று ஒரு அவசர தேர்தல் பிரச்சாரப் பயணம் போன்ற ஒன்றை அவர்கள் திட்டமிட்டுத் தந்தனர். ஆயுர்வேத தோட்டம் என்னத்துக்கு என்று கேட்டோம். வெளிநாட்டவர்கள் எல்லோரும் அங்கே போவார்கள் என்றனர். போய்........என்று இழுத்தோம். போய், நிறைய வாங்குவார்கள் என்றனர்.
 
எந்த நேரத்திற்கு பயணத்தை ஆரம்பிக்கின்றோம் என்று சொல்கின்றோமே, ஒவ்வொரு தடவையும் குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு வாகன ஓட்டுநர்கள் வந்து சேர்ந்தது ஆச்சரியம். கொழும்பில் கூட இதே ஆட்கள் சொன்ன நேரத்திற்கு வந்தார்கள். ஒரு தடவை அவர்களின் வாகனங்கள் எல்லாம் வெளியில் போய் விட்டன, ஆனாலும் இன்னொரு ஆட்களிடம் இருந்து வாகனத்தை சரியான நேரத்திற்கு எடுத்து வந்திருந்தனர்.
 
கன்னியா வெந்நீருற்றில் நீர் இன்னும் அதிகமாகச் சுட்டது. சில கிணறுகள் கொதித்தது. இது இயற்கை என்று நம்ப முடியவில்லை. முன்னரும் போய் இருக்கின்றேன், அப்பொழுது இவ்வளவு சுட்டதாக ஞாபகம் இல்லை. முன்பு இந்தப் பகுதியை சிங்களமயப் படுத்துகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இனிமேல் அந்தக் குற்றச்சாட்டுக்கு தேவை எதுவும் இல்லை. முழுவதும் செய்து விட்டார்கள். அங்கே மாற்றுவதற்கு இனி ஒன்றும் இல்லை. இராவணன் அவரின் தாயாரின் ஈமச்சடங்கிற்கு இந்தக் கிணறுகளை உண்டாக்கினார் என்று சொல்கின்றது புராணம் என்று பிள்ளைகளுக்கு சொன்னேன். இந்தப் பகுதியில் எல்லாமே இராவணன் தான் என்றும் சொன்னேன். பிள்ளைகள் சுற்று முற்றும் பார்த்தனர். கொஞ்சம் மேலே ஒரு பெரிய புத்த பகவான் கண் மூடி அமர்ந்திருந்தார்.
 
அடுத்தது கோணேஸ்வரர் கோயில். நாங்கள் அங்கே போன நேரம் இராவணன் வெட்டு முன் நின்று ஒரு யூடியூப்பர் அவரின் நிகழ்வை பதிந்து கொண்டிருந்தார். நன்றாகவே செய்தார். நான் பிள்ளைகளுக்கு கதை சொல்லாமல், அவர் சொல்வதைக் கேளுங்கள் என்றேன். ராவணன் ஒரு நாயகனா அல்லது பாதகனா என்று பிள்ளைகள் குழம்பி நின்றனர். நான் முன்னரும் அவர்களுக்கு சொல்லியிருக்கின்றேன், எங்கள் நாட்டில் அவர் ஒரு பேரரசன் என்று. காப்பியம் சொல்வது போல அவரை நாங்கள் ஒரு மோசமானவராக பார்ப்பதில்லை என்று. ஆனாலும், ராமன் ராவணனை கொன்ற நாளே தீபாவளி என்று எங்கோ புத்தகம் ஒன்றில் பிள்ளைகள் படித்து வைத்திருந்தனர். இனி முடிவு அவர்களின் கைகளில்.
 
கோணேஸ்வரர் கோவிலை விட்டு கீழே இறங்கி வரும்போது முகம் பார்த்து சாஸ்திரம் சொல்பவர்கள் நின்று கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் குடுகுடுப்பை மூலமும் இவர்கள் சாஸ்திரம் சொல்வார்கள். மிகவும் பேச்சு திறமையுள்ளவர்கள். மனிதர்களின் உளவியல் நன்கு அறிந்தவர்கள். கணவனும் மனைவியுமாக இருவர் அகப்பட்டால் மனைவியிடம் இருந்து ஆரம்பிப்பார்கள். பிள்ளைகளும் சேர்ந்து போனால், பிள்ளைகளிடம் இருந்து ஆரம்பிப்பார்கள். 'நல்லது ஒன்று நடக்கப் போகுது.......' என்று தொடங்குவார்கள். இவர்களை கம்பளக்காரர்கள் அல்லது நாயக்கர்கள் என்றும் சொல்வார்கள். ஆந்திராவிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறினர். பின்னர் இவர்களில் சிலர் இலங்கைக்கும் வந்து குடியேறினார்கள் என்று நினைக்கின்றேன்.  வீரபாண்டிய கட்ட பொம்மன் இவர்களில் ஒரு பிரிவைச் சேர்ந்தவரே. எங்களுக்கு நேரம் அதிகம் இல்லாததால், அவர்கள் சொல்லப் போகும் நடக்கப் போகின்ற அந்த நல்ல விடயம் என்னவென்று நின்று கேட்க முடியவில்லை.   
 
தேர்தல் சுற்றுப் பயணம் நிற்காமல் ஓடியது. அடுத்தது மார்பிள் பீச். வீடு இருக்கும் அமெரிக்க மேற்கு கரையில் கலிஃபோர்னியாவில் இருக்கும் கடல், பசிபிக் சமுத்திரம், எப்போதும் குளிர்ந்தே இருக்கும். கடும் கோடையில் கூட கடல் நீர் சரியான குளிராக இருக்கும். அத்தோடு பசிபிக் சமுத்திரத்தின் அலைகள் உயர்ந்தவை, விடாமல் கரையை அடித்துக் கொண்டே இருக்கும். அதிகமாக நீரில் தொங்கி நிற்கும் மணல் துகள்கள். ஆனால் நீண்ட, அழகான கடற்கரைகள். மார்பிள் பீச்சில் கடற்கரை மிகவும் சின்னது. ஆனால் கடல் நீர் சுத்தமாக, அலைகள் அற்று இருந்தது, வெதுவெதுப்பாகவும் இருந்தது. பலர் குளித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கடற்கரையில் கழட்டி விட்டிருந்த செருப்பில் ஒன்றை ஒரு நாய்க் குட்டி தூக்கிக் கொண்டு ஓடினது. அதை சிலர் கலைத்துக் கொண்டு ஓடினர். அந்த நாய்க் குட்டிக்கு வெளிநாட்டவர்களுடன் இது ஒரு விளையாட்டு போல. 
 
திருகோணமலையை இன்னும் கொஞ்சம் நேரம் சுற்றி விட்டு, கண்டி நோக்கி புறப்பட்டது வாகனம். தம்பலகாமம், தம்புள்ள, மாத்தளை, கண்டி என்று சாரதி சொன்னார். தம்புள்ள போகும் முன் வரும் இரு பக்கங்களிலும் காடு நிறைந்த வீதியில் வெளிநாட்டவர்கள் திறந்த வாகனங்களில் போய்க் கொண்டிருந்தனர். யானை மற்றும் காட்டு விலங்குகளை அவைகளின் இயற்கையான இடங்களிலேயே பார்ப்பதற்கு. வழி வழியே யானைகளும், இலங்கைக்கு பயணம் வந்தவர்களை ஏமாற்றாமல், வீதிக்கு வந்து போயின.
 
தம்புள்ள மொத்த சந்தையின் பிரமாண்டம் வியக்க வைத்தது. கண்டிக்கு போக முன் அக்குரணை நகர் வந்தது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான இடம் இது. அக்குரணை நகரின் வளர்ச்சி மிகப் பெரிதாக இருந்தது. மிகப் பெரியதொரு நகராக மாறியிருந்தது. இலங்கையில் எந்த நகரம் மாறினாலும், எவ்வளவு தான் வளர்ந்தாலும், கண்டி நகரம் மட்டும் மாறவே முடியாது. அதன் தரைத் தோற்றம் அப்படி. கண்டியில் எதையும் மாற்றவோ, புதிதாகக் கட்டவோ முடியாது. நகரப் பகுதியே பல ஏற்ற இறக்கங்களை கொண்டது. புனித நகர் என்னும் சிறப்பு வேற இந்த நகரை வளர விட மாட்டாது.
 
கண்டியில் நண்பன் வீட்டை போய்ச் சேர்ந்தோம். நண்பன் என்னை விட பல வயதுகள் குறைந்தவன். இப்பொழுது பேராதெனிய பல்கலையில் வேலை செய்கின்றான். இந்த நண்பனைப் பற்றி எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. பயணக் கட்டுரையில் இல்லாமல், தனியாக அதை எழுதவேண்டும். அங்கு நண்பனின் வீட்டில் நின்ற ஒரு பொழுதில் அவனுடன் நிறையக் கதைக்க கூடியதாக இருந்தது.
 
அடுத்த நாள் காலை. நண்பனை பல்கலைக்கு போகச் சொல்லி விட்டு, நாங்கள் தலதா மாளிகைக்கு போய் விட்டு, பின்னர் அங்கிருந்து பல்கலை போவதாக திட்டம் போட்டோம். 
 
திட்டப் பிரகாரம் மாளிகை வாசலில் இறங்கி உள்ளே போக, தலதா மாளிகையின் வாசலில் இருந்த போலீஸ்காரர்கள் நாங்கள் உள்ளே போக முடியாது என்றனர்........
 
(தொடரும்...........) 
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விவரமாய் போகின்றது......... தொடருங்கள்........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுர்வேத தோட்டம் - கூட்டிச் செல்லும் வாகனச் சாரதிக்கு நீங்கள் செலவழிக்கும் தொகையில் 10% தரகுக் கூலியாக கொடுப்பார்கள்.

“கோணேஸ்வரர் கோவிலை விட்டு கீழே இறங்கி வரும்போது முகம் பார்த்து சாஸ்திரம் சொல்பவர்கள்” 

ஒருமுறை கோணேசரை தரிசித்துவிட்டு வரும் போது “துரை நில்லு துரை உனக்கு பொண்ணு பொறக்கப் போகுது என்றார்கள்” ஆனால் இங்கு NHS ஆல் 99% மறுபடியும் கருத்தரிக்க சாத்தியமில்லை என்று கூறிய பிறகு 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ரசோ. 

மாபிள் பீச் முதல்தர கடற்கரை. ஆனால் நேவியின் கட்டுப்பாட்டில் இருப்பது நெருடலாக இருக்கும்.

நான் 2017 இல் போனபோது அதிக கடைகள் இல்லை. இப்போ நிஅலமி எப்படி? நேவியின் ரிசார்ட் தவிர வேறு ஏதும் வந்துள்ளனவா?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரசோதரன் said:

வெளிநாட்டவர்கள் எல்லோரும் அங்கே போவார்கள் என்றனர். போய்........என்று இழுத்தோம். போய், நிறைய வாங்குவார்கள் என்றனர்.

எப்படி என்ன தான் வாங்குகின்றனர் என ஏன் கேக்கவில்லை?

ஆனால் எனக்கு உங்களை கேக்க வேண்டும் போல உள்ளது.

சொல்லுங்க சார்.

15 hours ago, ரசோதரன் said:

கோணேஸ்வரர் கோவிலை விட்டு கீழே இறங்கி வரும்போது முகம் பார்த்து சாஸ்திரம் சொல்பவர்கள் நின்று கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் குடுகுடுப்பை மூலமும் இவர்கள் சாஸ்திரம் சொல்வார்கள். மிகவும் பேச்சு திறமையுள்ளவர்கள்.

அங்கேயுள்ள கடைத்தெரு முழுவதும் சிங்கள மயமாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரசோதரன் said:

ஒருவர் கடற்கரையில் கழட்டி விட்டிருந்த செருப்பில் ஒன்றை ஒரு நாய்க் குட்டி தூக்கிக் கொண்டு ஓடினது. அதை சிலர் கலைத்துக் கொண்டு ஓடினர். அந்த நாய்க் குட்டிக்கு வெளிநாட்டவர்களுடன் இது ஒரு விளையாட்டு போல. 

யாரோ பழக்கி வைத்திருக்கிறாங்களோ?

15 hours ago, ரசோதரன் said:

வாகனக்காரர்களையே கேட்டு விடுவோம் என்று கேட்டோம். இந்த இரண்டு வாரங்களில் அவர்களுடன் நல்ல பழக்கம் வந்துவிட்டது. எங்களுக்கு மட்டும் இல்லாமல், வேறு சில உறவினர்களுக்கும் அவர்களை பயன்படுத்தி இருந்தோம்.

வாகனக்காரர்களுடன் கட்டணம் பற்றி ஏதாவது கேட்டால்

முதலில் கேட்பது

உங்களுக்கு ஏசி வேணுமா? வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

பொடி வச்சு எழுதுவதில் பொடியன்{??????} கெட்டிக்காரன்தான்....சும்மா பிச்சுக்கிட்டுப் போகுது.. தொடருங்கள்...வாசிக்க ஆவலாக உள்ளது..

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

நல்ல விவரமாய் போகின்றது......... தொடருங்கள்........!  👍

🙏.....

எட்டுடன் முடியும் என்று நினைத்தேன். இப்ப ஒன்பதுடனாவது முடியுமா என்று தெரியவில்லை, எழுதத் தொடங்கினால் ஏதோ எல்லாம் வருகின்றது.......😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

ஆயுர்வேத தோட்டம் - கூட்டிச் செல்லும் வாகனச் சாரதிக்கு நீங்கள் செலவழிக்கும் தொகையில் 10% தரகுக் கூலியாக கொடுப்பார்கள்.

“கோணேஸ்வரர் கோவிலை விட்டு கீழே இறங்கி வரும்போது முகம் பார்த்து சாஸ்திரம் சொல்பவர்கள்” 

ஒருமுறை கோணேசரை தரிசித்துவிட்டு வரும் போது “துரை நில்லு துரை உனக்கு பொண்ணு பொறக்கப் போகுது என்றார்கள்” ஆனால் இங்கு NHS ஆல் 99% மறுபடியும் கருத்தரிக்க சாத்தியமில்லை என்று கூறிய பிறகு 🤣🤣

🤣......

சாஸ்திரம் சொல்லும் அவர்களிடம் சில கதைகள் தான் இருக்குது போல. சூழலுக்கு ஏற்ப உள்ளதில் பொருத்தமான ஒன்றை எடுத்து விட வேண்டும் ஆக்கும்......எங்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தவர்களுக்கு 'நீ ரோஷக்காரி தாயே.......' என்று சாஸ்திரம் ஆரம்பித்திருந்தது.

தரகுக் கூலி முறை இருக்குதோ என்ற ஒரு சந்தேகம் வேறு சில இடங்களிலும் வந்திருந்தது, குறிப்பாக லவின்ஸ் உணவகத்தில் தோசைக்கும், பூரிக்கும் 24,000 ரூபாய்கள் கொடுத்த பிறகு........😀    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தொடருங்கள் ரசோ. 

மாபிள் பீச் முதல்தர கடற்கரை. ஆனால் நேவியின் கட்டுப்பாட்டில் இருப்பது நெருடலாக இருக்கும்.

நான் 2017 இல் போனபோது அதிக கடைகள் இல்லை. இப்போ நிஅலமி எப்படி? நேவியின் ரிசார்ட் தவிர வேறு ஏதும் வந்துள்ளனவா?

இப்பொழுதும் நேவியின் கட்டுப்பாட்டில் தான், கோஷான். 

உள்ளே அவர்களின் ஒரேயொரு கடை தான். கடலையும் பொதுக் கடல், அவர்களின் தனிப்பட்ட பாவனைக்கான கடல் என்று எல்லை போட்டு வைத்திருக்கின்றனர். அந்த எல்லையையும் தாண்டிப் போய் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். ஆனால் காவல் கோபுரத்தில் இருந்தவர் எதுவும் சொல்லவில்லை, வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்.

வெளியில் இருந்த குளிக்கும் இடத்தை நல்ல சுத்தமாக வைத்திருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரசோதரன் said:

தரகுக் கூலி முறை இருக்குதோ என்ற ஒரு சந்தேகம் வேறு சில இடங்களிலும் வந்திருந்தது, குறிப்பாக லவின்ஸ் உணவகத்தில் தோசைக்கும், பூரிக்கும் 24,000 ரூபாய்கள் கொடுத்த பிறகு....

கொழும்பில் ஒரு கம்பனியில் தேயிலை வாங்கினோம்.

சாரதியும் தனக்கு கொஞ்சம் இனாமாக தருவார்கள் என்று போய் கேட்டு வாங்கிவந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படி என்ன தான் வாங்குகின்றனர் என ஏன் கேக்கவில்லை?

ஆனால் எனக்கு உங்களை கேக்க வேண்டும் போல உள்ளது.

சொல்லுங்க சார்.

அங்கேயுள்ள கடைத்தெரு முழுவதும் சிங்கள மயமாகி விட்டது.

🤣... 

அங்கே என்ன தான் வாங்கப் போகிறோம் என்பது ஒரு 'த்ரிலிங்காக' இருக்கட்டுமே என்று தான் சாரதியை நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. நாங்கள் மேற்கொண்டு எதுவும் கேட்காததே அவருக்கு ஒரு 'த்ரிலிங்காக' இருந்திருக்குமோ....

அங்கே என்ன வாங்கினோம் என்று எழுதுகின்றேன்...........

கன்னியாவில் கடைகள் முழுவதும் சிங்களம் தான், அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கதைக்கின்றார்கள். 

4 hours ago, ஈழப்பிரியன் said:

யாரோ பழக்கி வைத்திருக்கிறாங்களோ?

வாகனக்காரர்களுடன் கட்டணம் பற்றி ஏதாவது கேட்டால்

முதலில் கேட்பது

உங்களுக்கு ஏசி வேணுமா? வேண்டாமா?

அது நேவிக்காரர்களின் இடம், அவர்கள் தான் பழக்கி வைத்திருப்பார்களோ......😀.

முதல் தரம் ஏசியா, இல்லையா என்று வாகனக்காரர் கேட்டார்கள். பின்னர் கேட்கவேயில்லை.

நேற்று ஷாருக்கானை heat stroke தாக்கத்தால் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக செய்தியில் இருந்தது. இலங்கை வெக்கையில் ஏசி இல்லாமல் வாகனத்தில் போய், எங்களுக்கு அப்படி ஆகி இருந்தால், செய்தியில் சொல்லியிருக்க மாட்டார்கள்.....😀

19 minutes ago, ஈழப்பிரியன் said:

கொழும்பில் ஒரு கம்பனியில் தேயிலை வாங்கினோம்.

சாரதியும் தனக்கு கொஞ்சம் இனாமாக தருவார்கள் என்று போய் கேட்டு வாங்கிவந்தார்.

ஒரு பெரிய நெட் வேர்க்கே இருக்குது போல.........

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

நேற்று ஷாருக்கானை heat stroke தாக்கத்தால் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக செய்தியில் இருந்தது. இலங்கை வெக்கையில் ஏசி இல்லாமல் வாகனத்தில் போய், எங்களுக்கு அப்படி ஆகி இருந்தால், செய்தியில் சொல்லியிருக்க மாட்டார்கள்.....😀

பிரச்சனை ஏசி வேணுமா என்பார்கள்.

ஆமா என்றால் அது ஒழுங்காக வேலை செய்யாது.

முதல் வேலை செய்தது இப்ப என்ன பிரச்சனை என்று முன்பக்கம் 

டொமார் டொமார் என்று அடிதான்.

கொழும்பு பக்கத்து வாகனங்கள் பணக்கார வாகனங்கள் பிரச்சனை இல்லாமல் ஓடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

பொடி வச்சு எழுதுவதில் பொடியன்{??????} கெட்டிக்காரன்தான்....சும்மா பிச்சுக்கிட்டுப் போகுது.. தொடருங்கள்...வாசிக்க ஆவலாக உள்ளது..

🤣........🙏.........

பொடியன் தான், அதில் என்ன பல கேள்விக் குறிகள்........😀.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

🤣........🙏.........

பொடியன் தான், அதில் என்ன பல கேள்விக் குறிகள்........😀.

அவருக்கு உங்களைத் தெரிந்துவிட்டதோ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஏராளன் said:

அவருக்கு உங்களைத் தெரிந்துவிட்டதோ?!

🤣.......

நான் தான் சொந்தப் பெயரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்லி விட்டேனே..........பேசாமல் அந்தப் பெயரிலேயே வந்திருக்கலாம், நாம தான் அடி பிடிக்கு போகாமல் ஒதுங்குகிற டைப் ஆயிட்டுதே......😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பிரச்சனை ஏசி வேணுமா என்பார்கள்.

ஆமா என்றால் அது ஒழுங்காக வேலை செய்யாது.

முதல் வேலை செய்தது இப்ப என்ன பிரச்சனை என்று முன்பக்கம் 

டொமார் டொமார் என்று அடிதான்.

கொழும்பு பக்கத்து வாகனங்கள் பணக்கார வாகனங்கள் பிரச்சனை இல்லாமல் ஓடும்.

🤣.........

ஒரு முறை இவர்களிடம் அன்று வாகனம் இல்லாததால், கொழும்பில், வேறு ஒரு வாகனத்தை இவர்கள் அனுப்பியிருந்தனர். நீங்கள் சொல்வது போலவே அந்த வாகனம் புதியது. அதன் சாரதி அவருடைய சொந்த ஊர் முல்லைத்தீவு என்று சொன்னார். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.