Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
15 MAY, 2024 | 02:11 PM
image
 

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை  நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது. 

IMG-20240515-WA0042.jpg

இந்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு, உணர்வெழுச்சி நினைவேந்தல் நடைபெற்றது. 

IMG-20240515-WA0014.jpg

இதன்போது, பசுந்தீவு ருத்திரன் எழுதிய குமுதினி படுகொலை நினைவுகளைச் சுமந்த "உப்புக் கடலை உரசிய நினைவுகள்" என்ற கவி நூல் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் குமுதினி படகில் வெளியிடப்பட்டது. 

இந்த நூலை சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் வெளியிட்டுவைத்தார். 

தொடர்ந்து, குமுதினி படகில் இருந்து கடலில் மலர் தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. 

அத்தோடு, உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. 

IMG-20240515-WA0013.jpg

1985/05/15 அன்று இதேபோன்ற நாளில் நெடுந்தீவு கடற்பரப்பில் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் இருந்து யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி கடலில் குமுதினி படகில் மக்கள் பயணித்தபோது கடற்படையினரால் 07 மாத பெண்குழந்தை,  பெண்கள் அடங்கலாக 36 பேர் நடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

இந்த நினைவேந்தலில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை S.பத்திநாதன், மத தலைவர்கள், படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவுகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.  

IMG-20240515-WA0016.jpg

IMG-20240515-WA0026.jpg

IMG-20240515-WA0021.jpg

IMG-20240515-WA0048.jpg

IMG-20240515-WA0041.jpg

IMG-20240515-WA0031.jpg

IMG-20240515-WA0030.jpg

IMG-20240515-WA0029.jpg

IMG-20240515-WA0024.jpg

IMG-20240515-WA0024.jpg

IMG-20240515-WA0012.jpg

IMG-20240515-WA0015.jpg

IMG-20240515-WA0009.jpg

IMG-20240515-WA0011.jpg

https://www.virakesari.lk/article/183603

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, ஏராளன் said:

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை  நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

இந்த நிகழ்வுக்கு சந்திரிகாவை அழைத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணீர் அஞ்சலிகள்.

படுகொலை நடந்து மூன்று வருடங்களின் பின் அதே படகில் நெடுந்தீவு போனேன். படகின் நடுப்பகுதி முன் பின் பகுதிகளை மறைத்தபடி, நடுவில் இருக்கும் (இதன் மேலே தான் ஓட்டியின் அறை இருக்கும்) பயணிகள் அனைவரையும் பின் பகுதிக்கு அனுப்பி விட்டு, ஒருவர் ஒருவராக முன் பகுதிக்கு அழைத்து வெட்டி கொன்றார்களாம்.

எவரையும் சுடவில்லையாம். பின் பகுதியில் இருந்தோருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லையாம். கத்தும் போது அடி விழுவதாகவே நினைத்துள்ளார்கள், இல்லாவிடில் அதில் இருந்த பல நீந்த தெரிந்தோர் கடலில் குதித்து தப்ப முயன்றிருப்பார்கள் என்று ஊரவர்கள் சொன்னார்கள்.

இதை செய்தவர்கள் அப்போ 25 வயதாய் இருப்பின் இப்போ 64 வயசாளியாய் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 

இறைவனோ, இயற்கையோ இவர்களில் எவருக்குமாவது தக்க தண்டனை வழங்கி இருக்குமா? எனக்கு நம்பிக்கை இல்லை.

10 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த நிகழ்வுக்கு சந்திரிகாவை அழைத்திருக்க வேண்டும்.

ஏன் தனியே அவாவை மட்டும் ?

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படகின் இயந்திர அறைக்குள் ஒவ்வொருவராக அழைத்து கோடரிகளாலும், வாட்களாலும் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். கொல்லப்படுபவர்களின் ஓலம் வெளியே கேட்காதிருக்க, உயிருடன் இயந்திர அறைக்கு வெளியே இருந்தவர்களைத் தமது பெயர்களை உரக்கக் கத்திச் சொல்லுமாறு பணிக்கப்பட்டிருக்கிறார்கள். வெட்டிச் சாய்க்கப்பட்டவர்களிடையே உயிருடன் இருந்த இருவரை 2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில் தினக்குரல் பேட்டி கண்டிருந்தது. 

ஆழ்ந்த இரங்கல்கள்!

10 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த நிகழ்வுக்கு சந்திரிகாவை அழைத்திருக்க வேண்டும்.

செய்தது ஜெயார் அண்ணை,

நவாலி சென்பீட்டர்ஸ் படுகொலை, புதுக்குடியிருப்புப் பாடசாலைப் படுகொலை நினைவுகளை அனுஷ்ட்டிக்கேக்கை அவாவையும் கூப்பிடலாம். 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:
12 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த நிகழ்வுக்கு சந்திரிகாவை அழைத்திருக்க வேண்டும்.

செய்தது ஜெயார் அண்ணை

தகவலுக்கு நன்றி.சந்திரிகா காலத்தில நடந்தது என்று எண்ணிவிட்டேன்.

2 hours ago, goshan_che said:
12 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த நிகழ்வுக்கு சந்திரிகாவை அழைத்திருக்க வேண்டும்.

ஏன் தனியே அவாவை மட்டும்

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.