Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 MAY, 2024 | 07:28 AM
image
 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன .

அந்தவகையில் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது.

அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/183838

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

18 MAY, 2024 | 03:30 PM
image

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு, தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் (18) பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 

அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.  

IMG-20240518-WA0329.jpg

தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் தொடர்பான நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது. 

அடுத்து, மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

பின்னர், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கணவனை இழந்த முள்ளியவளையைச் சேர்ந்த பெண்ணொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. 

அவரை தொடர்ந்து, ஏனையவர்களும் தங்கள் உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினர்.

அதன் பின்னர், தொடர்ச்சியாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என  பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நினைவேந்தலின் முக்கிய விடயம், முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றினார்.  

IMG-20240518-WA0342.jpg

IMG-20240518-WA0341.jpg

IMG-20240518-WA0337.jpg

IMG-20240518-WA0340.jpg

IMG-20240518-WA0339.jpg

IMG-20240518-WA0292.jpg

IMG-20240518-WA0338.jpg

IMG-20240518-WA0336.jpg

IMG-20240518-WA0335.jpg

IMG-20240518-WA0333.jpg

IMG-20240518-WA0334.jpg

IMG-20240518-WA0180.jpg

IMG-20240518-WA0181.jpg

IMG-20240518-WA0127.jpg

IMG-20240518-WA0303.jpg

IMG_20240518_13245277.jpg

IMG_20240518_12003149.jpg

IMG-20240518-WA0328.jpg

https://www.virakesari.lk/article/183876

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போரில் உயிரிழந்த பொதுமக்கள் அனைவருக்கும் 

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் : முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்து

18 MAY, 2024 | 04:58 PM
image
 

மிழர்கள் ஒருதேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதோடு அவர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்த இயலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு,-கிழக்கு) ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதீன முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் வாசிக்கப்பட்ட இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 

ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வுப் பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது. 

இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வுப் பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது. ஈழத்தமிழினப் படுகொலை ஒரு வரலாற்று செயன்முறையாக காலணித்துவத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.

தமிழினப்படுகொலையின் வழிவரைபடம் பேரரசுக் கட்டமைப்பின் புவிசார் அரசியல் நலன்களைத் தவிர்த்து உருவாக்கப்படவில்லை என்பது ஐயமுற தெரிகின்றது. புவிசார் அரசியல் நலன்களின் பிராந்திய தளங்களில் ஏகாதிபத்தியத்தை தக்கவைப்பதற்காக பேரரசுக் கட்டமைப்பை துணைக் குத்தகைக்கு விட்டுள்ளது.

அதனுடைய ஒரு வடிவமாகத்தான் இஸ்ரேலையும் இலங்கையையும் அவதானிக்க வேண்டும். தமிழினப்படுகொலை நடந்து 15ஆவது ஆண்டில் பலஸ்தீனப் படுகொலை அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

பலஸ்தீனப் படுகொலையை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு தமிழினப் படுகொலைக்கும்  நடைபெற்றுக்கொண்டிருக்கும் பலஸ்தீனப் படுகொலைக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமைப் பண்புகள் இருப்பதை அவதானிக்கலாம்.

ஆசியாவில் இலங்கைத் தீவினதும், குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவமும் மத்திய கிழக்கில் பலஸ்தீனத்தின் கேந்திர முக்கியத்துவமும் புவிசார் அரசியலில் கோலோச்சுவதற்கு பேரரசுக்கு மிக அவசியமானது.

பேரரசைக் கட்டமைப்பதற்கு அதன் நலன் சார்ந்த எந்த விலையையும் கொடுப்பதற்கு பேரரசு தயாராக இருப்பதை இவை கோடிட்டுக் காட்டுகின்றன.

பேரரசும் அதன் வலையமைப்பும் உற்பத்தி செய்கின்ற இராணுவத் தளபாடங்களுக்கும் பேரரசின் பொருளாதார இருப்புக்கும் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போர்க்களங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஏக பேரரசை கட்ட முயலும் நாடுகள் தான் மனித உரிமையையும் பொறுப்புக்கூறலையும் போதிக்கின்றன என்பது அபத்தம். இவை இரண்டுமே ஒவ்வாத்தன்மை கொண்டவை. இது பலஸ்தீனப் படுகொலையில் மிகத் தெளிவாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2002 பேச்சுவார்த்தை முறிவடைவதற்கு அமெரிக்கா காரணமாய் இருந்தது என்பது ஏற்கனவே ஆய்வுகள் மூலம் வெளிவந்த உண்மையாய் உள்ளது.

அதுவே இன்று காசாவில் போர் நிறுத்தத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகின்றது.

ஐ.நா. சபையும் அதன் ஏனைய அலகுகளும் சர்வதேச சமூகமும் அதன் கட்டமைப்பும் எவ்வாறு முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய மனித பேரவலத்தை தடுக்கமுடியாமல் போனதோ அதேபோல் இன்று அவர்களால் பலஸ்தீனப் படுகொலையையும் தடுக்கமுடியாமல் போனது எமக்கு ஆச்சரியத்தை தரவில்லை.

தமிழினத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி, புதுப்புது வடிவங்களை எடுத்துள்ளன. அது தமிழினத்தின் தன்னிறைவுப் பொருளாதாரத்தின் மீது, பண்பாட்டின் மீது, கல்வியின் மீது, ஈழத்தமிழினத்தின் மரபுகள் மீது, சைவத்தலங்கள் மீது, தொல்லியல் வரலாறு மீது, ஈழத்தமிழினத்தின் வரலாறு மீதானதாக இருக்கலாம்.

ஈழத்தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள உளவியல் போரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வடிவமாகவே கருத வேண்டியுள்ளது. 

உளவியல் போரின் நோக்கம், ஈழத்தமிழினம் தமிழ்த் தேசியத்தின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையைச் சிதைத்தலாகும். 

தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்கள் தான் ஈழத்தமிழினத்தின் கூட்டுப் பிரக்ஞையை விழிநிலையில் வைத்துக்கொண்டுள்ளது.

தமிழ்த் தேச நிலத்தின் மீதான போரின் பரிமாணங்களின் வடிவங்கள் எல்லாரும் அறிந்ததே. முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தமிழினம் தனது இருப்பின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது.

தமிழினத்தின் இருப்பை சவாலுக்குட்படுத்தும் அலகுகளை எதிர்த்து போராடவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்குள் தமிழினம் வலிந்து நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுக் கடமை ஒட்டுமொத்த தமிழினத்துக்கானது. யாரும் இப்பாரிய பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாத வரலாற்றுத் தேவைக்குள் நாம் இருக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால், பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல, அடக்குமுறை எதிர்ப்பின் குறியீடும் கூட. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளில் கொத்துகொத்தாக கொல்லப்பட்ட உறவுகளை நினைக்கையில் அவர்கள் சுமந்து வந்த கனவுகளையும் இலக்குகளையும் நினைத்து, குருதி உறைந்து சிவந்துபோன மண்ணிலிருந்து சபதம் எடுக்கின்றோம். எத்தடை வரினும் எமது இலக்கை அடைவோம் என்று எம் உறவுகளின் கல்லறைகள் மீது உறுதி எடுக்கின்றோம்.

அதன் அடிப்படையில்,

* நினைவுகூரல் கூட்டுரிமை சார்ந்தது மட்டுமல்ல பண்பாட்டு உரிமையும் கூட. ஆகவே இலங்கை அரசு தமிழினப் படுகொலை நினைவுகூரலைத் தடுக்க முடியாது.

* தமிழினம் தமிழினப் படுகொலைக்கான நீதியை சர்வதேச விசாரணைக்கூடாகவே கோரி வருகின்றது. அக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

* தமிழினம் ஒரு தனித்துவமான தேசத்திற்குரிய அலகுகளை தன்னகத்தே கொண்ட இனம்.

* கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கூடாக தமிழின இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. இதுவும் இன அழிப்புப் போரின் ஓர் அங்கமென நாம் கருதுகின்றோம்.

* தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்.

எம் பாசமிகு உறவுகளே, தமிழ் தேசிய விடுதலை தரும் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் பயணிக்க முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது என்று வாசித்து முடித்தார்.

https://www.virakesari.lk/article/183888

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசிய தலைவர் பிரபாகரனுக்கும், இறுதி போரில் இறந்த மாவீரர்களுக்கும் வீரவணக்கம்.
இறுதி போரில் மரணமடைந்த அனைத்து பொதுமக்களுக்கும் நினைவு வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசத்தின் விடுதலையினை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம் என்று இந்தநாளில் உறுதியெடுத்துக் கொள்வோம்.

தமிழினக்கொலையில் இலங்கை, இந்திய சர்வதேசப் பேய்களால் பலியிடப்பட்ட என் மக்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

உங்கள் தியாகங்கள் வீண்போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன்.

முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தியாகங்கள் வீண்போவதில்லை!

 

இந்நினைவேந்தலின் முக்கிய விடயம், முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றினார்.  

 

இந்தம்மா....ஊருக்குபோக.. சிங்கள பொலிசு விடுமா..?

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் நீத்த உறவுகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்😢💐🙏

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழினத்தின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தின் அதியுச்ச இனவழிப்பினுள் அகப்பட்டு ஆகுதியாகிவிட்ட மக்களையும், மண்ணிலே சாயும் இறுதிக்கணம்வரை களமாடிச்சாய்ந்துவிட்ட மாவீரர்களுக்கும்  அகமேந்திய நினைவுவணக்கம்! 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.