Jump to content

தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது : மாவை, சுமந்திரனிடம் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 MAY, 2024 | 08:01 PM
image
 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்துவெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், சம்பந்தன் ஐயாவை நேரில் ஒருதடவை சந்தித்திருந்தேன். அதன்பின்னர் அவர் தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார். இந்நிலையில், அவர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சம்பந்தமாக மூன்று விடயங்களை சுட்டிக்காட்டினார்.

முதலாவதாக, நாங்கள் தொடர்ச்சியாக தமிழாகள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிற்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து வருவதோடு, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோன்று, பொதுவேட்பாளர் விவகாரம் ஒஸ்லோ உடன்பாட்டை மீறுவதாக அமையும். ஏனென்றால் ஒஸ்லோ உடன்பாட்டில் இலங்கை அரசாங்கம் சமஷ்டி அடிப்படையிலான பேச்சுக்கு தயார் என்றே கூறியுள்ளது. ஆகவே பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதன் ஊடாக அந்த ஒப்பந்தத்தினை தூக்கியெறிந்து செயற்பட முடியாது.

மூன்றாவதாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கை இணைப்புச் செய்வதாக இருந்தால் வாக்கெடுபபைச் செய்ய வேண்டும்.

எனினும் அவ்வாறு வாக்கெடுப்பைச் செய்வதாக இருந்தால் கல்லோயாத் திட்டம் உள்ளிட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். ஆகவே கிழக்கு மாகாணாத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் மீளக்குடியேற்றப்பட்டதன் பின்னரேயே வாக்கெடுப்பை நடத்த முடியும்.

அவ்விதமான சந்தர்ப்பங்களை விடுத்து பொதுவேட்பாளர் தெரிவுக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், தனது நிலைப்பாட்டினை மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/183916

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது

large.IMG_6499.jpeg.232f801f06a884128d68

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6499.jpeg.232f801f06a884128d68

சுவரில... ஐயாவின்  போட்டோ  மாட்டியாச்சா.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது – சுரேஷ்

May 19, 2024
 
 

சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது என அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றார் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அவரது அறிக்கையின் முழு விவரம் வருமாறு:-

‘கடந்த சில மாதங்களாக தமிழ்ப் பொது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தமிழ் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தமது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பெருமளவிலான தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரின் தேவையை உணர்ந்திருக்கின்றனர். இது தொடர்பாக பல்வேறுபட்ட கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளை இணைத்து இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு செயற்பாட்டுக்குழுவை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழரசுக் கட்சி ஒரு கட்சியாக முழுமையாக இணைந்து பணியாற்றுவதற்கு 19ஆம்திகதிவரை கால அவகாசம் கோரியிருந்தார்கள். வடக்கிலும் கிழக்கிலும் இருக்கக்கூடிய தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இதற்கான தமது சாதகமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழரசுக் கட்சியின் போஷகராக இருக்கக்கூடிய – மூத்த தலைவராக பேசப்படுகின்ற – சம்பந்தன் அவர்கள் பொது வேட்பாளர் ஒருவர் இப்பொழுது தேவையில்லை என்றும் உள்ளக சுயநிர்ணய உரிமை மூலம் சமஷ்டி ஆட்சிமுறையை உருவாக்குகின்ற ஒஸ்லோ
பிரகடனத்தைக் கைவிட்டுவிடக்கூடாது என்றும் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் பொதுவேட்பாளர் தெரிவை அங்கீகரிக்கக்கூடாது என்றும் கூறினார் என சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஒரு பொது வேட்பாளர் தொடர்பாக தவறான – பிழையான – அதற்கு எதிரான – கருத்துகளைக் கொண்டிருக்கக்கூடிய சுமந்திரன் சம்பந்தன் இவ்வாறான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்று சொல்வது வலுவான சந்தேகங்களை உருவாக்குகின்றது. சம்பந்தன் வயதில் முதிர்ந்த ஒரு அரசியல் தலைவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவரது வயது முதிர்ச்சி என்பது அந்த முதிர்ச்சிக்கே உரிய பல்வேறுபட்ட உளவியல், உடலியல் மாற்றங்களுக்கு உட்பட்டிருப்பதுடன் அவர் பேசுவதை யாருமே புரிந்துகொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், சம்பந்தன் பொது வேட்பாளர் தொடர்பில் பல கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்பது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

சம்பந்தன் நடமாட முடியாத சூழ்நிலையிலும், செயற்படும் திறனற்றவராகவும் இருக்கிறார் என்றும், அவர் நாடாளுமன்ற பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் சம்பந்தன் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தவர் சுமந்திரன் ஆவார். செயற்பட முடியாத – பேச்சாற்றல் குறைந்திருக்கக்கூடிய – ஒருவரின் கூற்றாக தனது தேவை கருதி அவற்றை முதன்மைப்படுத்தும் நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேவையையும் அவசியத்தையும் முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் எழுந்தமானமாக அது ஓஸ்லோ உடன்படிக்கையை கைவிட்டு விடுவதாக அமைந்துவிடும் என்று கற்பனை அடிப்படையில் கூறுவது தவறானதும் மக்களைத் தவறாக வழிநடத்துவதுமாகும். யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதினேழு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியது. இதில் ஓஸ்லோ உடன்படிக்கை குறித்து எதுவும் பேசப்படவில்லை.

பின்னர் மைத்திரிபால சிறிசேன அவர்களது அரசாங்கத்தில் நான்கு வருடங்களாக ஒரு புதிய அரசியல் சாசனம் பற்றிப் பேசப்பட்டது. அப்போதும் ஓஸ்லோ உடன்படிக்கை குறித்து பேசப்படவில்லை. ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசம் எதிர்பார்க்கும் ஜனநாயக வழியில் நின்று வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் களத்தை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாகக் கையாள வேண்டும் என்ற நோக்கில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதானது ஓஸ்லோ உடன்படிக்கைகளுக்கு விரோதமானது என்ற கருத்தை பொதுவெளியில் குறிப்பிடுவதும் அதற்கு எதிராகச் செயற்படுமாறு தமிழரசுக் கட்சியினரைக் கோருவதும் தமிழரசுக் கட்சி இது தொடர்பாக ஒரு சாதகமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது.

சுமந்திரன் அவர்கள் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் தவறானதும் பிழையானதுமான கருத்துகளை சரியான கருத்துகள்போல் பேசிவந்துள்ளார். உதாரணமாக ஐ.நா.சபையால் ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டு அந்தக்குழு ஓர்
அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளரிடம் கையளித்திருந்தது. பின்பு அந்த அறிக்கை ஐ.நா. பொதுச் செயலாளரினால் மேல் நடவடிக்கைக்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் கையளிக்கப்பட்டது. இதனையே சுமந்திரன் அவர்கள் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும், இனி உள்ளக விசாரணைகள் மூலம் தண்டனை வழங்வது மட்டுமே மீதமுள்ள நடவடிக்கை என்றும் கூறிவந்திருக்கின்றார்.

ஆனால் இன்றுவரை யுத்தக்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்வது தொடர்பாக தமிழர் தரப்பு தொடர்ந்தும் போராடி வருகின்றது. இதனைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற ஒரு பொய்யான விடயத்தையும் அவர் கூறி வந்திருக்கின்றார். ஆகவே தமிழ் மக்களைப் பிழையான பாதையில் வழிநடத்தும் கைங்கரியத்தை அவர் தொடர்ச்சியாக செய்து வருகின்றார். அதன் இன்னொரு வெளிப்பாடாகவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அவரது கருத்துகள் அமைகின்றன.

தற்போது களத்திலிருக்கக்கூடிய சிங்களத் தரப்பு வேட்பாளர்கள் யாரும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் காணி அபகரிப்புகள், சிங்கள குடியேற்றங்கள், பௌத்த சின்னங்களை நிறுவுதல், சைவஆலயங்களை இடித்து அழித்தல், மேய்ச்சல் நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுதல், தமிழ் மக்களின் பாரம்பரிய சின்னங்களை அரசுடைமை ஆக்குதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவிதமான கருத்துகளையும் கூறாமல் அதனை ஏற்றுக்கொண்ட பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்றும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையில் நாங்கள் எத்தகைய நகர்வுகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கருதுவது அபத்தமான செயற்பாடாகும்.

ஜனாதிபதி தேர்தல்களத்தில் ஒருவர் வெல்வதென்பது தமிழ் மக்களின் வாக்குகளிலும் தங்கியிருக்கின்றது. வடக்கு-கிழக்கில் இருக்கின்ற ஏறத்தாழ பன்னிரண்டு இலட்சம் வாக்குகள் என்பது ஒருவரின் வெற்றிக்கு மிகக் காத்திரமான பங்களிப்பைச் செலுத்தக்கூடியவை. இந்த நிலையில் யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் குறைந்தபட்சம் மாகாணசபைத் தேர்தலைக்கூட நடத்தாமல் கடந்த ஐந்து வருடத்திற்கும் மேலாக மாகாணசபையின் நிர்வாகமற்ற சூழலில் இந்த நாட்டில் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்றும் வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமே இருக்கின்ற தென்றும் பேசிவரும் சூழ்நிலையில் இவை எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதை முழுமையாக வெளிக்காட்டவும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு தேவை என்பதை சிங்கள அரசியல் சமூகத்திற்கும் இராஜதந்திர சமூகத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாகவும் தமிழ் வாக்குகளை தமிழர் ஒருவர் பெற்றுக்கொள்வதன் ஊடாக இதனை வெளிப்படுத்த முடியும் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு விளங்கும்.

இந்த நிலையில், தமிழ் தரப்புகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அனாவசியமான கருத்துகளை முன்வைத்து இந்த கோரிக்கைகளை முறியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதானது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை முறியடிப்பதாகவே அமையும். தமிழரசுக் கட்சி இந்த யதார்த்தங்களை உணர்ந்துகொண்டு இப்பொழுதாவது சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் என்று நம்புகின்றோம்” என்று உள்ளது.

 

https://www.ilakku.org/சம்பந்தனின்-பெயரில்-சுமந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

நாளை நாளை என்றால்

இல்லை இல்லை என்றே அர்த்தம்.

பொதுவேட்பாளர் பற்றி ஆராய்கிறோம் என்பது இது தான்.

ஐயா கதைக்க பேசவே மாட்டார்.

தனது முடிவை எப்படி சுமந்திரனிடம் சொன்னார்?

ஏன் சுமந்திரனின் காதுக்குள் மட்டும் சொன்னார்?

அப்போ யாருக்கு ஆதரவு வழங்க போகிறார்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

நாளை நாளை என்றால்

இல்லை இல்லை என்றே அர்த்தம்.

பொதுவேட்பாளர் பற்றி ஆராய்கிறோம் என்பது இது தான்.

ஐயா கதைக்க பேசவே மாட்டார்.

தனது முடிவை எப்படி சுமந்திரனிடம் சொன்னார்?

ஏன் சுமந்திரனின் காதுக்குள் மட்டும் சொன்னார்?

அப்போ யாருக்கு ஆதரவு வழங்க போகிறார்?

அந்தக் காலத்தில் பொட்டர் நடராசா என்று ஒருவர் இருந்தார். இவர் தந்தை செல்வா உரத்துப் பேச முடியாத போது அவரது பேச்சை உரத்துச் சொல்லும் வேலை பார்த்தவர்..! தந்தை ஒன்று சொல்ல இவர் வேறொன்று சொல்வார். சரித்திரம் ஒரு வட்டத்தில் பயணிக்கின்றது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

நாளை நாளை என்றால்

இல்லை இல்லை என்றே அர்த்தம்.

பொதுவேட்பாளர் பற்றி ஆராய்கிறோம் என்பது இது தான்.

ஐயா கதைக்க பேசவே மாட்டார்.

தனது முடிவை எப்படி சுமந்திரனிடம் சொன்னார்?

ஏன் சுமந்திரனின் காதுக்குள் மட்டும் சொன்னார்?

அப்போ யாருக்கு ஆதரவு வழங்க போகிறார்?

அய்யாவின்...கை நிக்கிற நிலையை நீங்கள் கவனிக்கேல்லையே

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவேட்பாளர்: இழுத்தடிக்கும் போக்கில் தமிழரசு!

59706155.jpg

நேற்றைய மத்தியகுழுக் கூட்டத்திலும் முடிவில்லை

(ஆதவன்)

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இழுத்தடிக்கும் போக்கையே இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்கின்றது. அந்தக் கட்சியின் மத்திய குழுவில் இந்த விடயம் நேற்று ஆராயப்பட்ட போதும் முடிவு எதையும் எடுக்காமல் ஒத்திவைத்துள்ளது.

அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் பொதுவெளியில் தெரிவித்திருந்தனர். குறிப்பாக கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்தார். ஆனால் பொதுவேட்பாளரை ஆதரிக்கக் கூடாது என கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் பொதுவேட்பாளர் தொடர்பில் ஆராயும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, இது தொடர்பில் மத்திய குழுவில் முடிவு எடுத்து அறிவிப்பதாக இருவாரகால அவகாசம் கோரியிருந்தார். அதற்கு அமைவாக மத்திய குழுக்கூட்டம் நேற்றுக் கூட்டப்பட்டிருந்தது. கூட்டத்தில் பொது வேட்பாளர் விடயம் ஆராயப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தலைவருமான மாவை.சோ.சேனாதிராசா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், அரசதலைவர்  சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்டோர் அதற்கு எதிராக கருத்துத் தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் கருத்துத் தெரிவித்த சிறீதரன், “சம்பந்தர் சொன்னதைப்போல ஒஸ்லோ அறிக்கையை எந்த அரசதலைவர் வேட்பாளர் ஏற்றுக்கொள்கின்றாரோ அவரை ஆதரிக்கலாம்" எனக் குறிப்பிட் டுள்ளார். அதனை பொதுவேட்பாளரை எதிர்த்ததரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனாலும் இதை உத்தியோக பூர்வமுடிவாக அறிவிக்கவில்லை. பொதுவேட்பாளர் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றே உத்தியோக பூர்வ நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டது. இதேவேளை, 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குறித்த ஒஸ்லோ அறிக்கையில், 'தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் சுயாட்சி அதிகாரம் வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அரசும் புலிகளும் ஆராய்வர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)
 

https://newuthayan.com/article/தமிழ்ப்_பொதுவேட்பாளர்_விவகாரம்:_இழுத்தடிக்கும்_போக்கில்_தமிழரசு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
45 minutes ago, கிருபன் said:

ஸ்லோ அறிக்கையில், 'தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் சுயாட்சி அதிகாரம் வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அரசும் புலிகளும் ஆராய்வர்

சவப்பெட்டிக்குள் வைத்து ஆணி அடித்துவிட்டுச் சிங்களம் அப்பப்போ அனைத்துலகைக் கடந்துபோக உச்சரிக்கும் 13ஐ அடைவோம் என்று சிங்களத் தேசியக்கொடியையும் ஆட்டிப்போட்டுப் போய்படுத்திருந்துவிட்டுக் கடை திறந்துவிட்டுக் காத்திருக்கும் கடைக்காரனைவிடக் கேவலமான மனநிலையில் 'நல்லசாமான் வாங்குங்கோ, வாங்குங்கோ' என்று ஒஸ்லோ அறிக்கையை, அதுகூட ஆராய்வர் என்ற விடயத்தை விற்று அரசியல் பிழப்பு நடாத்த முனையும் இந்தக் கூட்டத்தைத் துரத்தாவரை தமிழினம் சிறிதளவேணும் தலைநிமிர முடியாதென்பதை இந்தப் புல்லுருவிக் கூட்டம் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. தமிழினம் அனைத்துலக போக்கோடு இணைத்துச் சுயமாகச் சிந்திக்க வேண்டிய காலகட்டம்.
நன்றி

Edited by nochchi
திருத்தம்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊடகத்துறை சார்ந்தவர்கள் அனேகமாக உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளைச் செய்யும்போது, அந்த உண்மைகளின் சூட்டினால் அவர்களே தாக்கப்பட்டு அவதிப்படுவதைக் காண்கின்றோம். இதில் சாதாரண மக்களை விடவும் அதிகாரம் உள்ளவர்களால் தாக்கப்படும் போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடுவதையும் கண்டுள்ளோம். இங்கே துமிலன் அவர்களின் அறிக்கையால் உண்மைஅறிந்த காவல்துறை மன்னிப்புக் கேட்டாலும், இது தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாக, இழிவாக அந்தத்  துறையின் அதிகாரவர்க்கம் அதனை எண்ணவைத்து, துமிலன் தொடரப்போகும்  செய்திகளில் சிறு தவறு கண்டாலும் அதனை ஊதிப் பெருப்பித்து தனது சூட்டைத் தணிக்க முற்படலாம். ஆகவே துமிலன் தனது தொடரப்போகும் பணியை, மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.🙌  
    • ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று  போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்?  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.