Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Popular Post

photo-thumb-10404.jpgsun.thumb.gif.552c4ab473c8142d50970d1385 photo-thumb-4862.jpg

குமாரசாமி அண்ணையுடன்...  தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.

சென்ற  மாதமளவில் @குமாரசாமி  அண்ணை, நான் வசிக்கும்  இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு  நானும் தாராளமாக animiertes-gefuehl-smilies-bild-0233.gif வாருங்கள்  சந்திப்போம்  என்று கூறி இருந்தேன்.

அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம்  தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில் 🚗  30 நிமிடத்தில் செல்லக் கூடிய தொலைவில்தான் இருந்தது நல்லதாக போய் விட்டது. 

அவர்... நேற்று வந்து, இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு நாளை காலை புறப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தமையால்...  காலம் குறுகிய நேரம் என்பதாலும், எப்படியும் இன்று சந்திப்பது என்று முடிவெடுத்து... அதை அந்த சுப நிகழ்வு நடக்கும் இடத்திலேயே செய்யலாம் உங்கள் விருப்பம் என்ன என கேட்ட போது, அவரும் அதனை தாராளமாக செய்யலாம் என சொன்னார்.  

குமாரசாமி அண்ணை வசிப்பது ஜேர்மனியின் ஒரு தொங்கலில் என்றால்... நாம் வசிப்பது மற்ற தொங்கல். இடையில் 550 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் வசிக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் மீண்டும் எப்போ கிடைக்கும் என தெரியாது என்ற படியால்... இருவரும் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தோம்.  🙂

இனி... எமது வீட்டிற்கு  அண்மையில் வசிக்கும் @Paanch அண்ணையுடன் தொடர்பு கொண்டு, குமாரசாமி அண்ணையை சந்திக்க இன்று மதியம் நேரம் இருக்குமா என கேட்ட போது... அவரும் முழு உற்சாகத்துடன் தானும் வருவதாக தெரிவித்தார்🥰. பின்... @Kavi arunasalam  த்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் இன்று  குடும்பத்துடன்   ஐரோப்பிய  உல்லாசப் பயணம் செய்ய புறப்பட்டுக் கொண்டு இருப்பதால்.. கலந்து கொள்ள  முடியாமைக்கு தனது கவலையை தெரிவித்து இருந்தார்.

தொடரும்.... ✍️

Edited by தமிழ் சிறி

  • Replies 256
  • Views 18.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில்  சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு  நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்ல

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணையுடன்...  தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.

@ரசோதரன்

 னின் பயணக் கட்டுரையில் உள்ள தலைப்பு போல

நீங்களும் படமில்லாத சந்திப்பு என்றல்லவா போட வேண்டும்.

27 minutes ago, தமிழ் சிறி said:

அதை அந்த சுப நிகழ்வு நடக்கும் இடத்திலேயே செய்யலாம் உங்கள் விருப்பம் என்ன என கேட்ட போது, அவரும் அதனை தாராளாமாக செய்யலாம் என சொன்னார்.

ஆகா வேட்டி சால்வையுடன் போய் கொண்டாட்ட இடத்திலேயே அவர்கள் செலவில் சந்திப்பை முடித்து விட்டீர்களோ?

பாஞ்ச் அவர்கள் யாழை விட்டு முற்றாக ஒதுங்கியது மனவருத்தமாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

@ரசோதரன்

 னின் பயணக் கட்டுரையில் உள்ள தலைப்பு போல

நீங்களும் படமில்லாத சந்திப்பு என்றல்லவா போட வேண்டும்.

படம் எடுத்தால்.... ஆயுள் குறைந்து விடும் என்று படம் எடுக்கவில்லை ஈழப்பிரியன். (லொள்) animiertes-gefuehl-smilies-bild-0048.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா வேட்டி சால்வையுடன் போய் கொண்டாட்ட இடத்திலேயே அவர்கள் செலவில் சந்திப்பை முடித்து விட்டீர்களோ?

அவர்களை போகும் வழியில்... வீட்டிற்கு வந்து உணவு அருந்திவிட்டு செல்லும் படிதான் கேட்டிருந்தேன். ஆனால்  அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால், நேற்று மதியம் தாண்டித்தான்  அங்கிருந்து புறப்பட்டு இரவு இங்கு விடுதிக்கு  வந்து சேர்ந்ததால்.... என்னால் அவர்களை வீட்டிற்கு கூப்பிட முடியாமல் போய் விட்டது. 🙂

அத்துடன் நாளை காலை அவர்கள் புறப்படுவதால்... சந்திப்பை தவற விட்டுவிடுவமோ என்ற அச்சத்தால் இன்றே அந்த நிகழ்வில்.... பட்டு வேட்டி சால்வையுடன் மங்களகரமாக நின்ற குமாரசாமி அண்ணாவை சந்தித்தோம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

பாஞ்ச் அவர்கள் யாழை விட்டு முற்றாக ஒதுங்கியது மனவருத்தமாக உள்ளது.

ஈழப்பிரியன்... பாஞ்ச் அண்ணை தனது இருதய  அறுவைச் சிகிச்சையின் பின் சிறிது காலம் ஓய்வு எடுத்து இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது உடல் நலம் சற்று தேறி உள்ள நிலையில்... யாழ். களத்திற்குள் வர பல முறை முயற்சி எடுத்தும், உள் நுழைய முடியவில்லை என்று கூறினார். தான் வழமையாக பாவிக்கும் கடவுச் சொல்லையே பாவித்தும் ஏதோ தடங்கல் காட்டுகின்றது என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ சிறியண்ணை, தொடர்கிறேன்.

40 minutes ago, தமிழ் சிறி said:

யாழ். களத்திற்குள் வர பல முறை முயற்சி எடுத்தும், உள் நுழைய முடியவில்லை என்று கூறினார். தான் வழமையாக பாவிக்கும் கடவுச் சொல்லையே பாவித்தும் ஏதோ தடங்கல் காட்டுகின்றது என்றார்.

என்ன பிழை வருகிறது என்று சரியாகச் சொன்னால் சரி செய்யலாம். 

கடவுச் சொல்லைக் கீழுள்ள இணைப்பில் 'Forgot your password?' என்பதை அழுத்தி அவரது ஈமெயில் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

https://yarl.com/forum3/login/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

என்ன பிழை வருகிறது என்று சரியாகச் சொன்னால் சரி செய்யலாம். 

கடவுச் சொல்லைக் கீழுள்ள இணைப்பில் 'Forgot your password?' என்பதை அழுத்தி அவரது ஈமெயில் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

https://yarl.com/forum3/login/

நன்றி இணையவன். இதனை பாஞ்ச் அண்ணைக்கு தெரிவித்து விடுகின்றேன்.  🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில்  சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு  நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்லை. தமிழ் ஆட்களின் நேரத்தைப் பற்றி 😂 நான் நன்கு அறிந்து இருந்ததால்.... பத்தரை மணிக்கே, பாஞ்ச் அண்ணைக்கு தொலை பேசி எடுக்க,  அவர் தனது மகளுடன்  எனக்கு  முன்னால் தாங்கள் வந்து விட்டோம் என்று  காரில் கைகாட்டிய படி கடந்து சென்றார். 🙂

நான் அவர்களின் நேரம் தவறாமையை தவறாக எடை போட்டு விட்டேனே என்று மனதிற்குள் சங்கடப் பட்டுக் கொண்டு... பாஞ்ச் அண்ணையும் நானும் ஒரு காரில் குமாரசாமி அண்ணையை சந்திக்க அதிவேக நெடுஞ்சாலையில் பழைய தமிழ்ப் பாடல்களை கேட்டுக் கொண்டு பயணித்தோம். எனக்கு வாகனம் ஓடுவதை விட.... அருகில் இருந்து பயணிப்பதுதான் பிடித்தமானது என்பதால்... வாகனம் ஓடும் பொறுப்பை பாஞ்ச் அண்ணையிடமே கொடுத்து விட்டேன்.  

நாங்கள் எதிர்பார்த்த நேரம் 11 மணிக்கு, மண்டபத்திற்கு சென்று வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்றால்.... தவில், நாதஸ்வர கச்சேரி இசை நடந்து கொண்டிருந்தது. குமாரசாமி அண்ணையை... முன், பின் கண்டிராததால் அவரை எப்படி கண்டு பிடிப்பது என்ற யோசனையுடன் நானும், பாஞ்ச் அண்ணையும் போற, வாற ஆக்களைப் பார்த்து... இவர் குமாரசாமியாக இருப்பாரோ... animiertes-gefuehl-smilies-bild-0229.gif அவர் குமாரசாமியாக இருப்பாரோ என்று  புன்முறுவல் பூத்துக் கொண்டு இருந்தோம். 😂 🤣

குமாரசாமியார் சுழியன்animiertes-gefuehl-smilies-bild-0091.gif. எங்களுக்குத்தான்... குமாரசாமியாரை தெரியாதே தவிர, அவருக்கு எங்களை நன்றாக தெரிந்தே இருந்தது🙂. பட்டு  வேட்டி சால்வையுடன்... தமிழ்ப் பழமாக எங்கள் முன் ஒருவர் சிரித்துக் கொண்டு வந்து கதைக்கும் போதும் பாஞ்ச் அண்ணை குமாரசாமியை தேடுகின்றோம், அவர் எங்கு இருக்கின்றார்  என்று சொல்ல முடியுமா என்று கேட்க, வந்தவர் வாங்கோ... இந்த மேசையில் இருந்து கதைப்போம் என்று, அவரும் பிடி கொடுக்காமல் எம்மை அழைத்துச் சென்றார். குமாரசாமியாரின் குரல் எனக்கு பரிச்சயமானது என்பதால்... இவர்தான், நாம் தேடிய ஆள் என்று கண்டு பிடித்து...  கட்டிப் பிடித்து... animiertes-gefuehl-smilies-bild-0001.gif கொஞ்சிய கையுடன் பொறுங்கோ என்று... கோப்பியும், தட்டு நிறைய பலகாரமும் கொண்டு வந்து தந்தார்.

அந்த சுப நிகழ்விற்கு குமாரசாமி அண்ணையை நாம் தேடிப் போய் இருந்தாலும்.... பாஞ்ச் அண்ணை முன்பு ஜேர்மன் விளையாட்டுக் கழகத் தலைவராக இருந்த போது... சிறுவர்களாக விளையாடிய பலர் இளைஞர்களாக  பாஞ்ச் அண்ணையிடம் வந்து தமது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். என்னுடன் முன்பு வேலை செய்த பலரையும் அந்த நிகழ்வில் 25 வருடங்களுக்கு பின்பு கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. 🙂

யாழ். களத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனித் திறமையை பற்றி நாம் நிறைய கதைத்தோம். சிலரின் அபரிதமான ஆற்றல்கள் உண்மையிலேயே வியக்க வைத்தது. அந்த வகையில்... யாழ்.களத்தின் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் போற்றுதலுக்கு உரிய திறமைசாலிகள் என்பதை நாம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது சிறப்பு. 👍

முதல் முறை சந்தித்த சந்திப்பு என்ற போதும்... உடன் பிறந்த சகோதரன் ஒருவரை கண்ட மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடித்தது. இப்படியான நல் உள்ளங்களுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த யாழ்.களத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிய நினைவுகளுடன் விடை பெற்றோம்.  ❤️

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

👍.....

இங்கு வந்த இந்த சில நாட்களிலேயே எனக்கும் நீங்கள் கடைசி இரண்டு பந்திகளிலும் எழுதியிருப்பது போலவே தோன்றுகின்றது........🙏.

4 hours ago, ஈழப்பிரியன் said:

@ரசோதரன்

 னின் பயணக் கட்டுரையில் உள்ள தலைப்பு போல

நீங்களும் படமில்லாத சந்திப்பு என்றல்லவா போட வேண்டும்.

🤣..........

'படமில்லாத .......' என்பதை ஒரு 'ட்ரேட் மார்க்' ஆக பதிவு செய்யும் திட்டம் எனக்குள்ளது. ஆகவே அதை பாவிப்பவர்கள் இப்பவே பாவித்துக் கொள்ளவும். பின்னர் என்றால் இளையராஜா அவர்கள் போல வக்கீல் நோட்டீஸ் ஒன்றை நான் அனுப்பினாலும், நீங்கள் ஆச்சரியமும், கோபமும் படக்கூடாது........🤣

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

படம் எடுத்தால்.... ஆயுள் குறைந்து விடும் என்று படம் எடுக்கவில்லை ஈழப்பிரியன். (லொள்) animiertes-gefuehl-smilies-bild-0048.gif

ஆமா ஆமா அது தான் தலைப்பிலேயே போட்டால் மக்கள் படங்களை எதிர்பார்க்க மாட்டார்கள் அல்லவா!

3 hours ago, தமிழ் சிறி said:

தான் வழமையாக பாவிக்கும் கடவுச் சொல்லையே பாவித்தும் ஏதோ தடங்கல் காட்டுகின்றது என்றார்.

கடவுச் சொல்லை எத்தனை தடவை வேணுமென்றாலும் மாற்றலாமே?

இதில் என்ன சங்கடம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமியார் சுழியன்animiertes-gefuehl-smilies-bild-0091.gif. எங்களுக்குத்தான்... குமாரசாமியாரை தெரியாதே தவிர, அவருக்கு எங்களை நன்றாக தெரிந்தே இருந்தது

அங்குள்ளவர்களில் ஒரு கிழவனை பிடித்தால் போச்சு.

2 hours ago, தமிழ் சிறி said:

இனிய நினைவுகளுடன் விடை பெற்றோம்.  ❤️

வீட்டாருக்கு பலகாரப் பை ஒன்றும் தரலையோ கிழவன்.

44 minutes ago, ரசோதரன் said:

படமில்லாத .......' என்பதை ஒரு 'ட்ரேட் மார்க்' ஆக பதிவு செய்யும் திட்டம் எனக்குள்ளது. ஆகவே அதை பாவிப்பவர்கள் இப்பவே பாவித்துக் கொள்ளவும். பின்னர் என்றால் இளையராஜா அவர்கள் போல வக்கீல் நோட்டீஸ் ஒன்றை நான் அனுப்பினாலும், நீங்கள் ஆச்சரியமும், கோபமும் படக்கூடாது.....

இப்ப தான் தெரியுது

இந்த இளையராஜாக்களை உருவாக்குவது நாங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனித் திறமையை பற்றி நாம் நிறைய கதைத்தோம். சிலரின் அபரிதமான ஆற்றல்கள் உண்மையிலேயே வியக்க வைத்தது. அந்த வகையில்... யாழ்.களத்தின் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் போற்றுதலுக்கு உரிய திறமைசாலிகள் என்பதை நாம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது சிறப்பு. 👍

முதல் முறை சந்தித்த சந்திப்பு என்ற போதும்... உடன் பிறந்த சகோதரன் ஒருவரை கண்ட மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடித்தது. இப்படியான நல் உள்ளங்களுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த யாழ்.களத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிய நினைவுகளுடன் விடை பெற்றோம்.  ❤️

1 hour ago, ரசோதரன் said:

👍.....

இங்கு வந்த இந்த சில நாட்களிலேயே எனக்கும் நீங்கள் கடைசி இரண்டு பந்திகளிலும் எழுதியிருப்பது போலவே தோன்றுகின்றது........🙏

எங்கள் உரையாடலில்… உங்களின் திறமையை பற்றியும் கதைத்தோம்.
அதிலும்… யாழ். அகவை 26, சுய ஆக்கம் பகுதியில் நீங்கள் பல்வேறு கருப் பொருளில், பல ஆக்கங்களை  எழுதிய உங்கள் ஆற்றலைப் பார்த்து வியந்தோம். 🤝👍🏽

அந்தத் திறமைக்கு… எமது பாராட்டுக்கள் ரசோதரன். 👏🏻 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆமா ஆமா அது தான் தலைப்பிலேயே போட்டால் மக்கள் படங்களை எதிர்பார்க்க மாட்டார்கள் அல்லவா!

அதில் ஒரு “தொழில் ரகசியம்” இருக்கு கண்டியளோ….. 😁
தலைப்பிலேயே….  சந்திப்பில் ஒரு படமும் இல்லை என்றால், ஒரு குருவியும்  திரிக்குள் வந்து எட்டியும் பார்க்க மாட்டார்கள் என்பதால் போடவில்லை.😂
(சும்மா தமாசு.) 🤣

1 hour ago, ஈழப்பிரியன் said:

கடவுச் சொல்லை எத்தனை தடவை வேணுமென்றாலும் மாற்றலாமே?

இதில் என்ன சங்கடம்?

நாளை பாஞ்ச் அண்ணையுடன் இதனைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கின்றேன். எப்படியும் அடுத்த சில நாட்களுக்குள், அவரை மீண்டும் யாழ். களத்தில் எழுத வைக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுளேன். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அங்குள்ளவர்களில் ஒரு கிழவனை பிடித்தால் போச்சு.

நீங்கள் வேறை… நாங்கள் எதிர் பார்த்துப் போன குமாரசாமி அண்ணைக்கும், நேரில் கண்ட தோற்றத்திற்கும் மிகவும் பாரிய வித்தியாசம். உண்மையில் அவர் மிகவும் வயது முதிர்ந்தவராக, பெரிய உடல் அமைப்புடன் இருப்பார் என்று பார்த்தால்….

குமாரசாமி அண்ணையை  இளமையான தோற்றத்தில் உடற்பயிற்சி செய்யும் உடல்வாகுடன் கண்டு ஆச்சரியம் அடைந்தோம். அதிலும் அவரின் வேற்று மொழி கலக்காத சுத்தமான தமிழ்ப் பேச்சு அற்புதம். இன்னும் கொஞ்ச நேரம் உரையாடி இருக்கலாமோ என நினைக்கும் அளவிற்கு அவர் தனது பேச்சின் மூலமும் செய்கையின் மூலமும் எம்மை கவர்ந்து இருந்தார். 🥰

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வீட்டாருக்கு பலகாரப் பை ஒன்றும் தரலையோ கிழவன்.

அதை ஏன்…. கேட்கிறீர்கள்.
குமாரசாமியார் தந்த உபசரிப்பையும், விருந்தோம்பலையும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அளவிற்கு செய்து விட்டார். ❤️
நாம் புறப்படும் போது… இரண்டு பெரிய பை நிறைய உளுந்து  🥯வடைகளையும், அதற்கு பச்சை மிளகாய் சம்பலும், பூந்தி லட்டுக்களும், 🍰“கேக்”குகளையும் 🎂  எமது வாகன தரிப்பிடத்துக்கு கொண்டு  வந்து தந்து அசத்தி விட்டார். 💓

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

தொடருங்கோ சிறியண்ணை, தொடர்கிறேன்.

ஏராளன் உங்கள் ஊக்கத்திற்கு நன்றி🙏.  நான் எழுத தவற விட்டதை…
குமாரசாமி அண்ணையும், பாஞ்ச் அண்ணையும் தொடர்ந்து எழுதுவார்கள் என நம்புகின்றேன். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........!  👍

ஆம் சுவி, எதிர் பார்த்ததை விட ஒரு மங்களகரமான இனிமையான சூழலில் இந்தச் சந்திப்பு நடை பெற்றதாலும்… சந்திப்பின் போது மூவரும் மாறி மாறி சுவராசியமான விடயங்களை பேசிக் கொண்டு இருந்ததாலும் இரண்டரை மணித்தியாலம் எப்படி போனதென்றே தெரியவில்லை. உண்மையில் மனதிற்கு மகிழ்வான சந்திப்பாக அமைந்ததில் எம் மூவருக்கும் மகிழ்ச்சியே. 🥰 

  • கருத்துக்கள உறவுகள்

வ‌வ்வ்வ்வ்வ்வ்

ந‌ல்ல‌ சந்திப்பு

அது உங்க‌ள் எழுத்தின் மூல‌ம் தெரியுது த‌மிழ்சிறி அண்ணா🙏🥰............................................................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அதை ஏன்…. கேட்கிறீர்கள்.
குமாரசாமியார் தந்த உபசரிப்பையும், விருந்தோம்பலையும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அளவிற்கு செய்து விட்டார். ❤️
நாம் புறப்படும் போது… இரண்டு பெரிய பை நிறைய உளுந்து  🥯வடைகளையும், அதற்கு பச்சை மிளகாய் சம்பலும், பூந்தி லட்டுக்களும், 🍰“கேக்”குகளையும் 🎂  எமது வாகன தரிப்பிடத்துக்கு கொண்டு  வந்து தந்து அசத்தி விட்டார். 💓

விருந்தோம்பலுக்கு தமிழனை அடிச்சுக்க ஆளே கிடையாது......!

meme-insult.gif

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சந்திப்பும், அருமையான வர்ணிப்பும். 

@குமாரசாமி அண்ணை எம் ஜி ஆர் கலரில் தக தக என பட்டு வேட்டி சால்வையில் மின்னி இருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது😎.

@Kavi arunasalam போய் இருந்தால் உங்கள் அனைவரையும் ஒரு கருத்தோவியமாக்கி இருப்பார். படம் இல்லாவிடிலும் கருத்துபடமாவது பாத்திருக்கலாம். நேரம் வாய்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........!

பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் சிங்கன்   @குமாரசாமி மகா கெட்டிக்காரன்.

உறவினர்களின் கொண்டாட்டத்திலேயே பெரிய விருந்தோம்பல் செய்தது மட்டுமல்லாமல் பொதி செய்தும் கொடுத்திருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

வ‌வ்வ்வ்வ்வ்வ்

ந‌ல்ல‌ சந்திப்பு

அது உங்க‌ள் எழுத்தின் மூல‌ம் தெரியுது த‌மிழ்சிறி அண்ணா🙏🥰............................................................

பையா.... நீங்கள், குமாரசாமி தாத்தா... தாத்தா... என்று இனி கூப்பிடாதேங்கோ. 😂
நான் நேற்றுப் பார்த்த அளவில்,  அவர் தான் உங்களை "பையன் தாத்தா" 
என்று கூப்பிட வேணும் போலுள்ளது. 🤣

6 hours ago, suvy said:

விருந்தோம்பலுக்கு தமிழனை அடிச்சுக்க ஆளே கிடையாது......!

meme-insult.gif

ஓம்... சுவி. தமிழனின் இந்த நல்ல பழக்கத்தை பல இடங்களில் நேரில் கண்டுள்ளேன். 🙂

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.