Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்

விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!

(ஆதவன்)

கடந்த காலங்களில் வாக்களிக்க தவறியமையால் பல பிழையான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். கோத்தாபய போன்ற கடந்த கால அரச தலைவர்களால் நாடு சோமாலியாவாக மாறியது. -இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வந்திருந்த அரசதலைவர் ரணில் விக்கிரமங்க பொதுமக்களுக்கு காணி உறுதிகளை வழங்கியிருந்தார். அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தேர்தலில் தோற்றபோதும், அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றார். இன்று அநுரகுமார திஸாநாயக்க, சஜித் எனப் பலர் தேர்தலில் போட்டியிட வருகின்றார்கள். அன்று நாட் டைப் பொறுப்பெடுக்கும் வாய்ப்பு இருந்த போது அனைவரும் பின்வாங்கினர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பெடுத்தார். அடுத்த தேர்தலே எனது அரசியல் பயணத்தின் இறுதி தேர்தலாகும். அதன் பின்னர் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் - என்றார். (ச)

பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம் (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு வாக்களித்தாலும் எந்த மாற்றமும் வரப் போவது இல்லை என்ற உணர்வில் தான் இன்று மக்கள் பெரும்பாலும் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. 'எல்லாரும் ஒன்று தான்........' என்று சலித்துக் கொள்கின்றனர் மக்கள். ஓரளவேனும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு கட்சியோ அல்லது ஒரு தலைவரோ இருக்கின்றார்கள் என்றால், மக்களே முன் வந்து வாக்களிப்பார்கள். முன்னர் மக்கள் அதிகளவில் வாக்களித்திருக்கின்றார்கள் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சலிப்பினால் வாக்களிக்காமல் விட்ட சந்தர்ப்பங்கள் பற்றி இங்கே குறிப்பிடப் படவில்லையென நினைக்கிறேன். 2005 இல் மகிந்த வெல்வதற்கு, ரணில் மீதான கோபத்தினால் வாக்களிக்க வேண்டாமென புலிகள் கேட்டுக் கொண்டது தான் காரணம்.

தற்போது, தமிழ் பொது வேட்பாளரை ஊக்குவிக்கும் தரப்புகள் எல்லாம், மிகக் கவனமாக இந்த 2005 தேர்தல் விளைவை மௌனத்துடன்   கடந்து செல்வதைக் கவனிக்கலாம் - Cherry-picking😂!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

அவர் நிச்சயமாக 2005ம் ஆண்டு நடந்தவைகளை மனதில் வைத்தே சொல்லியிருக்கின்றார்.

ஆனால் இன்று மக்கள் எவர் சொல்லியும் ஒரு அணியாக கேட்கும் நிலையில் இல்லை. அப்படியான ஒரு வலுவான தலைமை தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலேயெ இல்லை என்றே தெரிகின்றது. முஸ்லிம் மக்கள் ஒரு அணியாகத் திரளக்கூடும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழ் மக்கள் தம் நலன் வேண்டி  மாறி மாறித்தான் வாக்களித்து வந்துள்ளார்கள். தனியே ஒரே பெரும்பான்மை இன கட்சிக்கு வாக்களித்த வரலாறு இன்றுவரை இல்லை. அந்த கட்சிக்கு வாக்களித்தால் ஏதாவது பலன் உண்டா அல்லது இந்த கட்சிக்கு வாக்களித்தால் பலன்கள் வருமா என சிந்தித்துத்தான் வாக்களித்து வந்துள்ளார்கள்.

அப்படியிருந்தும் தமிழினத்திற்கு கிடைத்த பரிசு இரத்தக்களரி மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6519.jpeg.783816b6ce7bdca43807

  • கருத்துக்கள உறவுகள்

சரி, பேசலாம்.

2005 இல் வன்னியில் ரணிலுக்கு வாக்களிக்கவேண்டாம் என்று இயக்கம் கேட்டது உண்மைதானே? இதனை எவரும் மறுக்கவில்லையே? பிறகேன் இந்த Cherry picking கேலிகள்

ரணிலிலிருந்தே ஆரம்பிக்கலாம்,

2002 மாசியில் ரணில் அரசாங்கம் புலிகளுடனான பேச்சுக்களை ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? தமிழர்களுக்குத் தீர்வொன்றினை வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று இங்கு எவராவது உண்மையாகவே நம்புகிறீர்களா? போர்க்களத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்விகள், கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதல், அதனால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் என்பவற்றைத் தவிர இலங்கை அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தைகளுக்குப் போகவேண்டிய தேவை இருந்ததா

சரி, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தாயிற்று. பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்பொழுது, 2004 இல் பங்குனியில் கருணாவை புலிகள் இயக்கத்திடமிருந்து பிரித்தெடுத்து புலிகளைப் பலவீனமாக்கியது யார்? பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து, நியாயமான தீர்வெதனையும் முன்வைக்காது, சர்வதேச வலைப்பின்னலுக்குள் புலிகளைச் சிக்கவைத்து, படிப்படியாக பேச்சுக்களில் புலிகளை வேண்டாத தரப்பாக ஓரங்கட்டியது யார்? ரணில் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவிருந்த மிலிந்த மொரகொடை மற்றும் நவீன் திசாநாயக்கா ஆகியோர் அக்காலத்தில் வெளிப்படையாகவே கூறிய விடயங்களை எவராவது கவனித்தீர்களா? புலிகளைப் பலவீனப்படுத்தி அழிப்பதற்காகவே கருணாவைப் பிரித்தெடுத்து, புலிகளை சர்வதேச வலைப்பின்னலுக்குல் வீழ்த்தி அமுக்கினோம், மகிந்த தானே புலிகளை அழித்தேன் என்று மார்தட்டலாம், ஆனால் புலிகளை நாம் பலவீனமாக்கி ஒடுக்கியிருக்கவிட்டால், மகிந்தவால் யுத்தத்தில் வெற்றிகொண்டிருக்க முடியாது என்று கூறினார்களேரணில், மிலிந்த மொரகொட, ரொகான் குணரட்ண, பீரிஸ், ரோகித்த போகொல்லாகம என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் புலிகளைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தைக் காலத்திலிருந்தே ஈடுபடவில்லையா? அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் , ஜப்பான், உதவி வழங்கும் நாடுகள் என்று அனைத்துமே புலிகளுக்கெதிராக ஐக்கியதேசியக் கட்சியினால் திருப்பிவிடப்படவில்லையா

அப்படியான நிலையில் 2005 இல் தம்மை வஞ்சித்த ரணிலை தேர்தலில் தோற்கடிக்க புலிகள் எடுத்த முடிவு எந்தவிதத்தில் தவறானதாக இருக்க  முடியும்?

நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் நடைபெறப்போகின்றன எனும் செய்திகள் முதன்முதலில் வெளிவந்தபோதே 1993 இல் நோர்வே தலைமையில், அமெரிக்காவின் அனுசரணையுடன், பாலஸ்த்தீனத்திற்கும், இஸ்ரேலிற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றியும் அதன் முற்றான தோல்விபற்றியும் பலராலும் பிரஸ்த்தாபிக்கப்பட்டதே? அவ்வொப்பந்தம் முற்றாகக் கிழித்தெறியப்பட்டு, அரபாத் இஸ்ரேலியர்களால் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்ட, இஸ்ரேல் சார்பாக சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதமரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்றுவரை பலஸ்த்தீனர்களுக்கு காஸாவிலும், ரபாவிலும் நடப்பது என்ன? இவ்வாறான ஒப்பந்தங்களை மேற்குலகு செய்வதன் காரணமே, தமது பிணாமிகளான நோர்வேஜியர்களை இறக்கி  போரிடும் மக்களை சோர்வடையச் செய்து, பலவீனப்படுத்தி, ஈற்றில் போராட்டத்தைத் தோற்கடிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

2005 தேர்தலில் மகிந்த ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சிக்கு வந்ததை இந்தியா உட்பட மேற்குலகு சற்றும் விரும்பியிருக்கவில்லையாயினும், புலிகளை அழிக்க அவனைப் பாவித்தன. பல தருணங்களில் மகிந்தவே "இந்தியாவின் யுத்தத்தையே நாம் நடத்தினோம்" என்று கூறியிருக்க மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவந்ததாலேயே நாம் அழிக்கப்பட்டோம் என்று கூறுவது எவ்விதத்தில் சரியாக இருக்கும்?

ஆட்சியில் மகிந்த இருந்தாலென்ன, ரணில் இருந்தாலென்ன, முள்ளிவாய்க்கால் நிச்சயம் நடந்தேயிருக்கும். ஏனென்றால், அது மகிந்தவின் போரல்ல, மாறாக மேற்குலகின் முற்றான அனுசரணையோடு இந்தியாவால் நடத்திமுடிக்கப்பட்ட போர். ரணில் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவோ அல்லது மேற்குலகோ முள்ளிவாய்க்கால் யுத்தத்தினை நிச்சயம் நடத்தியிருக்காது என்று இங்கு எவராலும் உறுதியாகக் கூறமுடியுமா? 

மகிந்தவைக் காட்டிலும் ரணில் நல்லவனாக எம்மில் பலருக்குத் தெரிவது எப்படி? தீவிர இனவாதியான ஜெயவர்த்தனவினால் பயிற்றுவிக்கப்பட்ட ரணில் எப்படி தமிழர்களைப்பொறுத்தவரை நல்லவனா மாறினான்? 2002 இல் சமாதானப் பேச்சுகளில் அவன் ஈடுபட்டான் என்பதாலா? அதனால் நாம் அடைந்த நண்மையென்ன? 

1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து இனவாதியான ஜெயாரின் அரசில் முக்கிய அமைச்சராக இருந்து வந்தவன். தமிழர்களுக்கெதிரான பல இனவாதச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டவன். யாழ் நூலக எரிப்பில் காமிணி, சிறில் மத்தியூவோடு   களமிறங்கியவன். ஜெயாரின் அரசாங்கத்தில் இருந்த தீவிர இனவாதிகளான காமிணி, லலித் போன்றோருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவன். 1988 - 1989 ஆகிய காலப்பகுதியில் தெற்கில் சிங்கள இளைஞர்களைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தான் என்கிற வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் பட்டலந்தை ஆணைக்குழுவால் இவன் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. 1994 இல் சந்திரிக்கா தமிழர்களுக்கு நாடு கொடுக்கப்போகிறாள் என்று பாராளுமன்ற‌த்திலேயே தீர்வுப்பொதியினை எரித்து தனது இனவெறியைக் காட்டியவன். 2015 இல் தமிழர்களின் தயவில் நல்லிணக்க அரசாங்கம் என்று ஒன்றை அமைத்துக்கொண்டு, தமிழர்களுக்கு 100 நாட்களில் தீர்வு தருவேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தான், ஆனால் நான்கு வருடகால ஆட்சியில் அவனால் செய்யப்பட்டவை என்று எதுவுமே இல்லை. இன்றும் ஆட்சியில் இருக்கிறான். தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக எதனையும் தருவேன் என்று இதுவரை சொல்லவுமில்லை, இனிமேலும் அப்படித்தான். இவனது ஆட்சியிலேயே முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கான பொலீஸ், இராணுவத்தினது அடாவடித்தனங்களும், அட்டூழியங்களும் நடக்கின்றன. 

ஆக, இவனை 2005 இல் தோற்கடித்தமைக்காகவே தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இவனிருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்துதான் இருக்கும். ஏனென்றால், அதற்கான புறச்சூழலை உருவாக்கி, புலிகளைப் பலவீனப்படுத்தியது இவனே. ரணில் அமைத்துக்கொடுத்த கொலைக்களத்தில் மகிந்த சுதந்திரமாக தமிழர்களைக் கொன்று முடித்தான். 

இல்லை, ரணில் மிகவும் நல்லவன், அவனிருந்தால் தமிழர்கள் அழிக்கப்பட்டிருக்கவே மாட்டார்கள் என்றால், 2009 இற்கு முன்னதாக, இவன் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் கொல்லப்படவே இல்லையா? 

உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதற்கு குற்றஞ்சுமத்த ஒருவர், இருக்கவே இருக்கிறார்கள் புலிகள். ஆகவே, அவர்கள் மீது இலகுவாகப் பழியினைப் போட்டுவிட்டு உங்கள் கடமை முடிந்ததாக நீங்கள் ஆறுதல்ப் பட்டுக்கொள்ளலாம். உங்களுக்காகப் புலிகள் போராடும்வரை அவர்கள் தேவையானவர்கள், இன்று போராட்டம் முற்றுப்பெற்று விட்டதால் அவர்கள் குற்றவாளிகள். நன்றாக இருக்கிறது உங்களின் வாதம்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2024 at 21:40, ரஞ்சித் said:

உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதற்கு குற்றஞ்சுமத்த ஒருவர், இருக்கவே இருக்கிறார்கள் புலிகள்.

இதனைத்தான் அதிகம் உணர்வதுண்டு. 2009ற்குப் பின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள், புலிகளை வெறுப்பவர்கள், கல்வியாளர்கள் etc etc என பலர் கூறினார்கள். 15 வருடங்களாகவா தவறுகளில் இருந்து பாடம் படிக்கிறார்கள். சரி போகட்டும்  ஏதாவது நன்மை நடந்ததா? ..இன்னமும் பிளவுபட்டுக்கொண்டு  அல்லவா போகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2024 at 07:40, ரஞ்சித் said:

2005 இல் மகிந்த இல்லாமல் ரணில் வந்திருந்தால் புலிகள் தொடர்ந்து பலவீனப் பட்டிருப்பர் என நினைக்கிறேன். கருணாவைப் பிரித்து புலிகளைப் பலவீனப் படுத்தியதன் பின்னர் இது தொடர்ந்திருக்கும். இதனோடு, மேற்கின் அழுத்தமும் சேர்ந்து  புலிகளும் அரசும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் இருந்திருக்க ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். இதன் முடிவு, முள்ளி வாய்க்காலாக இருந்திருக்காது என்பது என் கருத்து.

இதற்கு என்ன பதில் உங்களிடமிருந்து வரும் என கொஞ்சம் ஊகிக்க முடிகிறது: புலிகள் பலவீனமாகியிருந்தால் அதன் பிறகு தமிழர்களை தீர்வில்லாமலே ஆக்கிரமித்திருப்பர் என்பீர்கள். இப்போது இருக்கும் நிலையும் அப்படித் தான்.

ஒரே வித்தியாசம்: பத்தாயிரக் கணக்கான தமிழ் சிவிலியன்களையும், புலிகளின் தலைமையையும்  பலி கொடுத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். ரணில் வென்றிருந்தால், அப்படிப் பலி கொடுக்காமல் இந்தப் புள்ளிக்கு வந்திருப்போம்.

இந்த இரண்டாவது தெரிவு எனக்கு சிறந்ததாகத் தெரிகிறது. நான் "சிங்ஹல தெமிழனாக" இருப்பதால் இருக்கலாம்😎. உங்களுக்கு அப்படித் தோன்றாதென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, P.S.பிரபா said:

இதனைத்தான் அதிகம் உணர்வதுண்டு. 2009ற்குப் பின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள், புலிகளை வெறுப்பவர்கள், கல்வியாளர்கள் etc etc என பலர் கூறினார்கள். 15 வருடங்களாகவா தவறுகளில் இருந்து பாடம் படிக்கிறார்கள். சரி போகட்டும்  ஏதாவது நன்மை நடந்ததா? ..இன்னமும் பிளவுபட்டுக்கொண்டு  அல்லவா போகிறோம். 

இந்தப் பிளவுக்கு என்ன காரணம் என்று எப்பவாவது யோசித்திருக்கிறீர்களா?

யாழ் களத்தை மட்டும் ஒரு சாம்பிளாக எடுத்துப் பாருங்கள்: புலிகள் மீதான விமர்சனம், தற்போது  இருக்கும் "புலி வால்கள்" என நான் அழைக்கும் தீவிர தேசியர்கள் மீதான விமர்சனம் ஆகியவை சுயம்புவாக யாழில் உருவாகின்றனவா அல்லது ஒரு கருத்திற்குப் பதில் சொல்லும் போது உருவாகின்றனவா?

என் அவதானிப்பு, சில தவறுகள், முட்டாள் தனமான knee-jerk முடிவுகள் என்பவற்றை தவிர்த்து விட்டு ஆய்வுகளை (நிலாந்தன் செய்திருப்பது போல) பிரச்சார நோக்கிற்காக முன் வைக்கும் போது, அந்த தவறுகளை மீண்டும் பேச வேண்டியேற்படுகிறது. இதன் பிறகு வந்து, "ஏன் இன்னும் இதையே பேசுகிறீர்கள்?" என்று மூக்கால் அழுவதில் என்ன பயன்?

மேலே, ரஞ்சித் எழுதியிருக்கும் உதாரணமே இதைச் சுட்டிக் காட்டுகிறதே? 2005 புலிகளின் ரணில் மீதான கோபத்தின் வெளிப்பாடு, மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டு வந்து மக்களையும் அழித்து, புலிகளையும் அழித்தது. இதில் இருந்து இலங்கையில் கூட elections have consequences என்ற பாடத்தைக் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல ரணில் மீதான கோபத்தைத் தான் இந்த தேர்தலிலும் காட்ட நிற்கிறார்கள். எனவே, பேச வேண்டியிருக்கிறது.

இதைச் சுட்டிக் காட்டுவோர்  "ரணிலை மீட்பராகப் பார்க்கின்றனர்" என்ற அர்த்தம் தொனிக்க எழுதுவதும், "சிங்ஹல தெமிழர்" என்பதும் தமிழர்களை தமிழ் தேசியத்தின் பக்கம் இழுத்து ஒற்றுமையைக் கூட்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்😂?

குறுகத் தறித்த தமிழ் தேசியத்தை வைத்துக் கொண்டு புலத்தில் மட்டும் தான் நாம் கொடி கட்டிக் கொண்டாடலாம். நிலத்தில் நிலைமை வேறாக இருக்கும். ஏற்கனவே வேறாகி விட்டது என்பதே என் அவதானிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

இப்பொழுது பிளவு ஏன் வந்தது? சுயநலமிக்க தமிழ் அரசியல்வாதிகளால்தான் என்பது என் அவதானிப்பு. அதனால்தான் இவர்கள் கூறுவதை நம்பக்கூடாது என நினைக்கிறேன்/எழுதுகிறேன். 

ஒவ்வொரு தேர்தலும் ஒரு பாடத்தைத்தான் வழங்கி வருகிறது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள்தான் இன்னமும் தெளியவில்லை, பாடத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் இல்லை சுயநலத்தைத் தவிர. அவ்வளவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இதற்கு என்ன பதில் உங்களிடமிருந்து வரும் என கொஞ்சம் ஊகிக்க முடிகிறது: புலிகள் பலவீனமாகியிருந்தால் அதன் பிறகு தமிழர்களை தீர்வில்லாமலே ஆக்கிரமித்திருப்பர் என்பீர்கள். இப்போது இருக்கும் நிலையும் அப்படித் தான்

இதில் எனக்கு முரண்பாடு உண்டு. தமிழ் மக்களினதும் அவர்களின் பிள்ளைகளினது  தியாகத்தாலும்,  தமிழ் மக்களினது பங்களிப்பால் கிடைத்த ஆயுத பலத்தாலும்,   புலி வீரர்களது  போர் திறமையாலும்,    புலிகள் இயக்கம் அடைந்த பேரம் பேசும் உயர் வலுவை உபயோகித்து அன்றைய நிலையில் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து  இன்று கனவில் கூட நினைக்க முடியாத ஒரு அரசியல் தீர்வை உருவாக்கி சர்வதேச நீடுகளின் ஒத்துளைப்புடன் அதை அமுல் செய்ய புலிகளின் அரசியல் பிரிவை பலமுடையதாக்க செய்யும் வல்லமையை அன்று கொண்டிருந்தது. மேற்கு நாடுகளும் அதையே விரும்பி பேச்சுவார்தைக்கு திரும்புமாறு புலிகளை கேட்டுக்கொண்டேயிருந்தனர்.  புலிகள் அதை புறக்கணித்து  மீண்டும் யுத்ததிற்கு செல்ல முடிவெடுத்ததன் பலனே  முள்ளிவாய்கால் பேரழிவு.  ஆகவே,  அன்று ரணிலை ஜனாதிபதியாக்கி அவருடன் பேசியிருப்பதன் மூலம் புலிகள் பலவீனமாக்கப்பட்டிருக்க மாட்டார்கள். மாறாக,  அரசியல் ரீதியில் பலப்பட்டிருப்பார்கள். இன்று மூக்கால் அழும் நிலையும் வந்திருக்காது என்பது எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

இருக்கலாம். உங்களுடையது கொஞ்சம் நம்பிக்கையான optimistic பார்வை. ஆனால், நானும், நீங்களும் சொல்லும் நிலைகள், மனித உயிர் இழப்பைக் கழித்து விட்டுப் பார்த்தால் நல்ல தெரிவுகள் தான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

சீட்டு விளையாட்டில், கையில் இருக்கும் சீட்டுகளை வைத்துக் கொண்டு தான் விளையாட முடியும் (you play with the cards you are dealt with), இல்லாததை வைத்துக் கொண்டு கனவு காண முடியாது. இதே நிலையில் இப்போது நிற்கிறோம் என நினைக்கிறேன்: ரணில், சஜித், பொன்சேகா, அனுர இவர்களில் நிலத்தில் இருக்கும் மக்களுக்கு குறைந்த பாதகம் செய்வோரை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். இந்த யதார்த்தத்தை சொல்வோர் அனைவரும் இவர்களில் ஒருவரின் இரகசிய ஆதரவாளராக பிரச்சாரம் செய்கிறார் என்ற குற்றச் சாட்டு, பதில் இல்லாமல் போகும் போது போய் முடங்கும் மூலையாகத் தான் எனக்குத் தெரிகிறது.  

9 minutes ago, island said:

இதில் எனக்கு முரண்பாடு உண்டு. தமிழ் மக்களினதும் அவர்களின் பிள்ளைகளினது  தியாகத்தாலும்,  தமிழ் மக்களினது பங்களிப்பால் கிடைத்த ஆயுத பலத்தாலும்,   புலி வீரர்களது  போர் திறமையாலும்,    புலிகள் இயக்கம் அடைந்த பேரம் பேசும் உயர் வலுவை உபயோகித்து அன்றைய நிலையில் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து  இன்று கனவில் கூட நினைக்க முடியாத ஒரு அரசியல் தீர்வை உருவாக்கி சர்வதேச நீடுகளின் ஒத்துளைப்புடன் அதை அமுல் செய்ய புலிகளின் அரசியல் பிரிவை பலமுடையதாக்க செய்யும் வல்லமையை அன்று கொண்டிருந்தது. மேற்கு நாடுகளும் அதையே விரும்பி பேச்சுவார்தைக்கு திரும்புமாறு புலிகளை கேட்டுக்கொண்டேயிருந்தனர். 

இதில் நான் சற்று முரண்படுகின்றேன்.

சர்வதேசத்தின் அழுத்தத்தில் இவ்வாறு ஒரு தீர்வை ரணில் வழங்க முன்வந்திருந்தாலும், தென்னிலங்கையின் இனவாத சக்திகள் மகிந்தவின் பின்னாலும் விமல் வீரசிங்க போன்றவர்களின் பின்னாலும் அணி திரண்டு, எதிர்த்து தீர்வை கைவிட வைத்து இருக்கும். அரகலய அன்றே உருவாகி இருக்கும். கடும் இனவாத அரகலயவாக அது இருந்திருக்கும். 

அவ்வாறு நடந்து இருப்பின், சமாதானத்துக்கான அவா தமிழர்களிடம் மட்டுமே உள்ளது, சிங்களத்திடம் இல்லை என தெளிவாக காட்டி தமிழர்களின் அரசியல் பலம் அதிகரித்து இருக்கும். 

இப்படியான ஒரு நிலையை ஏற்படுத்தவே அன்ரன் பாலசிங்கம் அண்ணா தன்னளவில் முயன்றார் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

நீங்கள் கூறியபடி நடந்திருந்தாலும் அது எமக்கு சாதகமாகவே அமைந்திருக்கும்.  எமது அரசியல் பலமும் போராட்ட நியாயமும் உலகில் அங்கீகாரத்தை பெறுவதற்கான பாதையில் முன்னோக்கி நகர்திருப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, P.S.பிரபா said:

இப்பொழுது பிளவு ஏன் வந்தது? சுயநலமிக்க தமிழ் அரசியல்வாதிகளால்தான் என்பது என் அவதானிப்பு. அதனால்தான் இவர்கள் கூறுவதை நம்பக்கூடாது என நினைக்கிறேன்/எழுதுகிறேன். 

ஒவ்வொரு தேர்தலும் ஒரு பாடத்தைத்தான் வழங்கி வருகிறது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள்தான் இன்னமும் தெளியவில்லை, பாடத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் இல்லை சுயநலத்தைத் தவிர. அவ்வளவுதான். 

இதில் எனக்கு உடன்பாடு பூரணமாக இல்லை.

வெளிநாட்டுச் சக்திகளுக்கும், அமைப்புகளுக்கும் ஒரே முகமாக எம்மைப் பிரதிநிதுத்துவம் செய்யாமல் பிரிந்து நிற்பது தான் தமிழ் அரசியல் தலைவர்களின் பிரதான தவறு. இதை வெளிநாட்டு அதிகாரிகளே நேரடியாகச் சொன்ன பிறகும் திருந்தாமல் இருப்பது மன்னிக்க இயலாத எருமை மாட்டுக் குணம், இதை மக்கள் தங்கள் வாக்குகளால் திருத்த வேண்டுமென நினைக்கிறேன்.

ஆனால், தமிழ் மக்களிடையே பிளவின் தோற்றுவாய் அரசியல் தலைமைகளிடமிருந்து  ஆரம்பிக்கவில்லை.

கடந்த காலத்தின் சில இருண்ட கூறுகளைக் கூட இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டுமென்ற கடும் போக்கு நிலையும், அது சில இடங்களில் மறைமுகமான/சொல் வன்முறையாக வெளிப்படுவதும் தான் பிளவின் காரணம் என நினைக்கிறேன் . உதாரணமாக, நீலனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ஒருவர் யாழில் நக்கல், நையாண்டியும், சில சமயம் கடும் சொல்லும் கேட்காமல் கடந்து போக முடியாது! ஏன்? நியாயமில்லாத செயல்களைக் கூட எங்கள் legacy என்ற பெயரில் வெள்ளைப் பெயின்ற் அடித்து காவித் திரிய வேண்டுமென்ற மனப்பாங்கு. அந்த மனப்பாங்கினால் தான் தற்போது இருக்கும், ஒரு கல்லைத் தானும் யாருக்கும் எறியாமல் இருக்கும் அரசியல் வாதிகளையும் கூட சிங்களவரின் அதிரடிப் படை காவல் காக்க வேண்டிய நிலை. இப்படியான மெலிதாக மறைக்கப் பட்ட (thinly-veiled) வன்முறை நிலைப்பாடுகளை ஊக்குவிப்போருடன் என்னைப் பொறுத்த வரை சேர்ந்து நிற்க முடியாது.

என்னைப் போல பலர் இருக்கிறார்கள். தமிழர்களில் பெரும்பான்மையானோர் தற்போது மௌனமான பெரும்பான்மையினராக (silent majority) மாறி விட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான சிந்தனைகள் அதிலிருந்து பிறக்கும் வித்தியாசமான கருத்துகள், நன்றி கருத்தாளர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

பூனைகள் இல்லா உலகில் எலிகளுக்கு கொண்டாட்டம்…..

தமிழர்களின் விடிவில் உங்களின் வகிபாகம் யாது ???

வெறுமனே யாழில் பொங்கி விட்டு செல்வதால் ஒன்றும் ஆவதற்கில்லை…

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

மேற்கின் அழுத்தமும் சேர்ந்து  புலிகளும் அரசும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் இருந்திருக்க ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம்

பேசுவதற்கும், எழுதுவதற்கும் இது நன்றாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக பேச்சுக்கள் முறிந்திருக்கும். தமிழரின் பிரச்சினைக்கான தீர்வைத் தேடி சரித்திர காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து ஒன்றில் தானே விலகியோ அல்லது புலிகள் விலகுவதற்கான சூழ்நிலையினையோ அரசுகள் செய்தே வந்திருக்கின்றன. 2002 பேச்சுக்கள் மட்டும் விதிவிலக்காக இருந்திருக்கும் என்று எப்படி உங்களால் நம்ப முடிந்தது? அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கு தமிழருக்கான தீர்வொன்று கொடுக்கப்படவேண்டும் என்று உண்மையிலேயே நோக்கம் இருந்ததா? அப்படியானால், 80 களின் ஆரம்பத்திலிருந்தே புலிகளை அழிப்பதற்கான இராணுவ உதவைகளை அது ஏன் தொடர்ச்சியாக இலங்கைக்குச் செய்து வந்தது? 2002 முதல் 2004 வரையான பேச்சுவார்த்தைக் காலத்தில்க் கூட அமெரிக்கா இலங்கையுடன் குறைந்தது இரண்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்து, அதனூடாக பயிற்சிகள், ஆயுதங்கள், போர்க்கப்பல்களுக்கான புதிய பீரங்கிகள், நீண்டதூர வேவு விமானங்கள் என்று ஏன் வழங்கியது? இவை யுத்தத்தில் எவ்வாறான விளைவினை ஏற்படுத்தியிருந்தன? 

அடுத்தது, பொதுமக்களினதும், தலைமை உட்பட புலிகளின் இழப்பும். யுத்தத்தினை நடத்தியது இந்தியா, மேற்கின் அனுசரணையுடன். அப்படியிருக்க, ஆட்சியில் இருப்பது ரணிலா , மகிந்தவா என்பது ஒரு பொருட்டல்லவே? மகிந்தவிற்கு யுத்தத்தில் வெல்வதற்கு இருந்த அதே விருப்பே ரணிலுக்கும் இருக்கின்றது. ஆனால், இந்த விருப்பு மட்டுமே அன்று போதவில்லை. இந்தியாவின் உதவியும், அதன் விருப்பும் தேவைப்பட்டது. மகிந்த ஆட்சியில் இருந்தான், இந்தியா அவனை மகிந்தவென்று பார்க்கவில்லை, இலங்கையில் ஆட்சியிலிருக்கும் ஒருவன் என்றே பார்த்தது. மீதி, இந்தியாவின் போர். ரணில் ஆட்சியில் இருந்திருந்தால், இந்தியா வாலைச் சுருட்டி வைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை.

தமிழ் மக்களினதும், புலிகளினதும் இழப்பை நான் நியாயப்படுத்தவில்லை. அவர்களின் இழப்பினாலேயே இன்றுவரை எதையாவது செய்யவேண்டும் என்கிற எண்ணமும், கவலையும் இருக்கிறது. சிங்களவர்களில் நல்லவர்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள் என்றும் நான் நம்பவில்லை, குறிப்பாக அரசியல்வாதிகளில். தமிழர் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதே அவர்களின் மொத்த அரசியல். இதில் ரணில் நல்லவன், மகிந்த கெட்டவன் என்கிற வித்தியாசம் எனக்குத் தெரிவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

குறுகத் தறித்த தமிழ் தேசியத்தை வைத்துக் கொண்டு புலத்தில் மட்டும் தான் நாம் கொடி கட்டிக் கொண்டாடலாம். நிலத்தில் நிலைமை வேறாக இருக்கும். ஏற்கனவே வேறாகி விட்டது என்பதே என் அவதானிப்பு.

உங்கள் அவதானிப்பிற்கும் நிலத்தில் இருக்கும் நிலைமைக்கும் நிச்சயமாக வேறுபாடு இருக்கிறது. ஏனென்றால், அந்த வேறுபாட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பது இன்றும் அங்கிருக்கும் பூரண சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்பு ஒன்றினுள் வாழும் இனம் நிச்சயம் அதற்கெதிரான உணர்வுகளைக் கொண்டேயிருக்கும். நீங்கள் கூறும் அதே அமைதியான பெரும்பான்மை. மக்கள் தமது மனங்களில் இருக்கும் உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்தியே வருகின்றனர். 

இன்றிருக்கும் அரசியல்க் கட்சிகளுக்கு அவர்கள் வழங்கும் அல்லது வழங்க மறுக்கும் வாக்குகள் ஏமாற்றத்தினாலும், விரக்தியினாலும் வருபவை. உங்கள் வசதிக்காக இதனைத் தேசியத்தோடு முடிச்சுப் போட்டுப் பார்க்கிறீர்கள். ஒருவருக்கு எறியக் கல்லைக்கூட எடுக்காத மெந்தலைவர்களுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு ஏன் கொடுக்கவேண்டி வருகிறது என்று யோசித்தீர்களா? அதுவும் பொதுமக்களிடையே வலம்வரும்போது? இதற்கும் தேசியத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒரு அரசியல்வாதி தனது இனத்தின் நலன்களை முன்னிறுத்தாமல், அந்த நலன்களுக்கு பாதகம் விளைவிக்கக கூடிய செயற்பாடுகளிலும், இனத்தின் கோரிக்கைகளை நலிவாக்கும் செயற்பாடுகளிலும் இறங்கினால் மக்கள் அதற்கு எவ்வாறான எதிர்வினையினை ஆற்றவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?  

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

ரணில், சஜித், பொன்சேகா, அனுர இவர்களில் நிலத்தில் இருக்கும் மக்களுக்கு குறைந்த பாதகம் செய்வோரை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும்.

இவர்களில் எவரையும் தெரிவுசெய்யவோ அல்லது தெரிவுசெய்யாது விடவோ எமக்கிருக்கும் தேவையென்ன? ஒருவரை விட மற்றையவர் தீமைகளைக் குறைத்தே செய்வார் என்பதற்காக அவருக்கு வாக்களிக்கலாம் என்றால், 2005 இல் ரணில் சர்வதேச வலைப்பின்னலுக்குள் தம்மை வீழ்த்திவிட்டதால் முன்னர் அறிந்திராத மகிந்த வரட்டும் பார்க்கலாம் என்று புலிகள் எண்ணியதை ஏன் நீங்கள் தவறென்கிறீர்கள்? 

இத்தேர்தலினைத் தமிழர்கள் தமது ஒற்றுமையினைக் காட்ட, தமது கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான மக்கள் ஆணையாக இதனை மாற்ற வேண்டும். இத்தேர்தலால் எவர் ஆட்சிக்கு வருவார், எவர் தோற்பார் என்கிற கவலை எமக்குத் தேவையில்லை. ஏனென்றால், எப்படியும் ஒரு சிங்களவரே ஆட்சிக்கு வரவிருக்கிறார். சிங்கள மயமாக்கலும், பெளத்த மயமாக்கலும் இப்போது நடப்பது போலவே தொடர்ந்தும் நடக்கவிருக்கிறது. ஆனால், நாம் அவர்களைத் தெரிவுசெய்வதில் பங்கெடுக்கப்போவதில்லை. 

1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் பாராளுமன்றத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டுமென்பதற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்கவில்லை. மாறாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மக்கள் ஆணை கோரியே தேர்தலில் வாக்குக் கேட்டார்கள். இப்போது நடக்கவேண்டியதும் அதுவே. 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினார்கள், அதனால்த்தான் முள்ளிவாய்க்கால் நடந்தது என்று கூறுபவர்கள் சற்று பின்னோக்கிச் சென்று பார்ப்பது நல்லது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிங்களத் தலைவர்களுக்கும் தமிழர் தரப்பிற்கும் இடையே , தந்தை செல்வா காலத்திலிருந்து, அமிர்தலிங்கம், பிரபாகரன் வரையான காலம் வரை செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் எத்தனை? அவற்றுள் எத்தனை சிங்களத் தலைவர்களால் இதுவரையில் நிறைவேற்றப்பட்டுள்ளன? எத்தனை பேச்சுவார்த்தைகள் சிங்களத் தரப்பால் வேண்டுமென்றே முடக்கப்பட்டு தமிழர் தரப்பு வேறு வழியின்றி வெளியேறும் நிலையினை அடைந்திருந்தன? தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாஷைகளுக்கும் சிங்களம் தரமுடியும் என்று பேச்சளவில் கூறிய அதிகபட்ச அதிகார அலகிற்கும் இடையில் இருந்த வேறுபாடுகள் என்ன? இக்கேளவிகளுக்கான உண்மையான பதில் உங்கள் எவரிடமாவது இருக்கின்றதா? இருந்தால், தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் சிங்களவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை இங்கே பட்டியலிடுங்கள், நான் எனது கருத்துக்களை முற்றாக மீளப்பெற்றுக்கொள்கிறேன். 

தமிழரின் அரசியல் அபிலாஷைகளை தீர்த்துவைக்கும் தீர்வுகள் முன்வைக்கப்பட்டு, புலிகள் அதனை தூக்கியெறிந்துவிட்டு வந்தார்கள் என்று கூறுபவர்கள் அவற்றை இங்கே தயவுசெய்து பதியுங்கள். நான் எனது கருத்துக்களை முற்றாக மீளப்பெற்றுக்கொள்கிறேன். 

18 hours ago, Justin said:

வெளிநாட்டுச் சக்திகளுக்கும், அமைப்புகளுக்கும் ஒரே முகமாக எம்மைப் பிரதிநிதுத்துவம் செய்யாமல் பிரிந்து நிற்பது தான் தமிழ் அரசியல் தலைவர்களின் பிரதான தவறு. இதை வெளிநாட்டு அதிகாரிகளே நேரடியாகச் சொன்ன பிறகும் திருந்தாமல் இருப்பது மன்னிக்க இயலாத எருமை மாட்டுக் குணம், இதை மக்கள் தங்கள் வாக்குகளால் திருத்த வேண்டுமென நினைக்கிறேன்.

நிச்சயம் செய்யப்பட வேண்டிய விடயம். ஆனால், தமது சொந்த இலாபங்களுக்காக இதனை அவர்கள் செய்யப்போவதில்லை. ஆனால், இவர்களைத் திருத்தப்போய், திலீபன் போன்ற துணைராணுவக் குழுக்களின் உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பி, தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்களுக்கு நாமே துணைபோவதாகிவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

ஆனால், தமிழ் மக்களிடையே பிளவின் தோற்றுவாய் அரசியல் தலைமைகளிடமிருந்து  ஆரம்பிக்கவில்லை.

இது சரியான தகவலா? எனென்னெறால், 1944 இல் ஜி ஜி பொன்னம்பலத்தால் உருவாக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்தபோது 1949 ஆம் ஆண்டு செல்வநாயகம் தலைமையிலான குழுவினர் பிரிந்து சென்று சமஷ்ட்டிக் கட்சியை ஆரம்பித்தனர். பின்னர் 1977 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாகும்போது இக்கட்சிகள் ஒன்றுசேர்ந்தது வேறு கதை. 

1960 ஆம் ஆண்டுவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றுவந்த நல்லையா 1960 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இணைந்தே போட்டியிட்டார். 

1977 வரை தமிழரசுக் கட்சியிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலும் நின்று தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்ற செல்லையா இராஜதுரை 1979 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவினார். 

1970 இலிருந்து 1975 வரையான காலப்பகுதியில் தமிழர் விடுதலை முன்னணி எனும் ஒருமித்த தமிழ்க் கட்சிகளுடன் இணைந்துகொண்ட தொண்டைமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 1975 இல் தனி ஈழம் நோக்கிய தமிழ்க் கட்சிகளின் முனைப்பினால் அதிலிருந்து விலகி தனியே அரசியல் நடத்திவருகிறது. 

ஆக, தமிழ் அரசியல்க் கட்சிகளுக்கிடையிலான பிளவும், சேர்க்கையும் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆயுதப் போராட்டமே மக்களை அரசியல் ரீதியாகப் பிரித்தது எனும் வாதம் சரியானது அல்ல. 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

கடந்த காலத்தின் சில இருண்ட கூறுகளைக் கூட இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டுமென்ற கடும் போக்கு நிலையும், அது சில இடங்களில் மறைமுகமான/சொல் வன்முறையாக வெளிப்படுவதும் தான் பிளவின் காரணம் என நினைக்கிறேன்

அதுவல்ல காரணம், மாறாக புலிகளால் செய்யப்பட்ட படுகொலைகளை விமர்சிக்கிறோம் என்கிற போர்வையில் இன்னமும் அதுகுறித்துத் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பதுதான். 
அமிர், யோகேஸ்வரன், நீலன், ரஜிணி (இது புலிகளாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்), செல்வி என்று நீண்ட பட்டியலே இருக்கின்றது. இப்படுகொலைகளை எவர் தலைகீழாக நின்றாலும் நியாயப்படுத்த முடியாது, அப்படிச் செய்வதிலும் அர்த்தமில்லை. இப்படுகொலைகளால் ஏற்பட்டிருக்கும் குற்றவுணர்வே தேசியம் சார்ந்து நிற்போரை இதுகுறித்து மெளனிக்க வைக்கிறது. எனென்றால், இவை தவறு என்பது அவர்களுக்குத் தெரியும். இவர்களின் மரணங்களை மலினப்படுத்துவது தவறுதான். ஆனால், இக்கொலைகளை எம்மை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் பேரினவாதம் தனது பிரச்சாரத்திற்காகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியே வருகிறது. தமிழ்ப் புத்திஜீவிகளையும், மிதவாத அரசியல்வாதிகளையும் புலிகள் கொல்கிறார்கள், ஆகவே அவர்களின் போராட்டம் பயங்கரவாதம், அதுகுறித்து உலகம் கரிசணை கொல்லத் தேவையில்லை என்று கூறுகிறது. இதற்குச் சமாந்தரமாகவே தமிழர்களில் ஜனநாயகவாதிகள் என்று தம்மை அழைப்போரும் இப்படுகொலைகளை விமர்சனம் செய்கிறார்கள். சிலவேளைகளில் சிங்கள அரசின் பிரச்சாரங்களுக்கு இந்த தமிழ் ஜனநாயவாதிகளும் அவ்வப்போது உதவியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு மனிதவுரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மனோரஞ்சன் போன்ற தமிழ்ப் புத்தி ஜீவிகள். 

புலிகள் விட்ட தவறுகளை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால், எத்தனை காலத்திற்குச் செய்வதாக உத்தேசம்? புலிகள் போன்றதொரு ஆயுத அமைப்பு இனிமேல் உருவாகப்போவதில்லை என்கிற நிலை உறுதியாகிவிட்டபின்னரும், அவர்களின் தவறுகளிலிருந்து நாம் படித்துக்கொள்ளப்போகும் பாடங்கள் எமக்கு எந்தவிதத்தில் உதவப்போகின்றது?

புலிகளை தொடர்ச்சியாக விமர்சிப்பதாலேயே அதற்கான எதிர்வினையினை ஆற்றவேண்டியிருக்கிறது.  ஏனென்றால், தாம் இருக்கும்வரை தமிழ் மக்களின் விடுதலையினை மட்டுமே மூச்சாகக் கொண்டு அவர்கள் போரிட்டார்கள். அதற்காகவே மடிந்தார்கள். அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகள் அவர்களின் தியாகங்களாக இருக்கட்டும், அவர்கள் விட்ட தவறுகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால் எமக்குக் கிடைக்கப்போவது ஏதுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

இப்படியான மெலிதாக மறைக்கப் பட்ட (thinly-veiled) வன்முறை நிலைப்பாடுகளை ஊக்குவிப்போருடன் என்னைப் பொறுத்த வரை சேர்ந்து நிற்க முடியாது.

சுமந்திரனை ஒரு மென்மையான அகிம்சாவாதியாக, ஜனநாயக அரசியல்வாதியாக நீங்கள் கருதலாம். அவரது நிலைப்பாடு குறித்து உங்களுக்கு ஆளமான நம்பிக்கையும், உற்சாகமும் இருக்கலாம். அவரது அரசியலினூடாக தமிழர்கள் தமது அபிலாஷைகளை அடைந்துவிடமுடியும் என்று நீங்களை உண்மையிலேயே நம்பலாம். அது உங்களது நிலைப்பாடு. எவரும் கேள்விகேட்க முடியாது. 

அவ்வாறே, சுமந்திரனை விமர்சிப்போரும், அவரது அரசியலுடன் முரண்படுவோரும் அதற்கான காரணங்களை வைத்திருப்பார்கள்.

தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதியான சுமந்திரன், அதே தமிழ் மக்களிடையே போவதற்கு விசேட அதிரடிப்படை எதற்காகக் காவலுக்கு வரவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தாமே தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பிய ஒருவரைத் தாக்குவதற்கான தேவை ஏன் தமிழர்களுக்கு வரவேண்டும்? சுமந்திரனுடன் கூடவே தெரிவுசெய்யப்பட்ட ஏனைய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் தமது மக்களைப் பார்க்கச் செல்லும்போது விசேட அதிரடிப்படையினருடன் தான் செல்கிறார்களா? இல்லையென்றால், அது ஏன்? 

சுமந்திரனுக்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்ட வன்முறையினைக் கையாளும் தமிழர்களுக்கு நீங்கள் ஆதரவளிக்கத் தேவையில்லை. அதனை அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.