Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் நம்மவர் திருமணங்கள், முறிவுகள்

Featured Replies

***********

Edited by harikalan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில என்ன தப்பு இருக்கு? ஊரில என்டா அக்கம் பக்கத்தில இருக்கிறதுவளுக்காக என்டு ஒத்துவராட்டிலும் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம்.

இங்க அது ஆரம்பகாலங்களில இருந்தாலும் இப்ப பிரிதல் என்பது வெளிநாட்டவர்களிடம் உள்ளது போல் வந்துவிட்டது. இன்னும் ஒரு 10 வருசத்தில இதெல்லாம் சர்வ சாதாரணமய்யா.....

கனடா மட்டும் என்று இல்லை எல்லா நாடுகளிளும் அதிகரித்த வண்ணம் தான் இருகிறது :) ........அன்றைய காலத்தில அது தான் ஊரில இருக்கும் போது பெண் வந்து வீட்டு வேலையை செய்ய ஆண் வந்து வேலைக்கு செல்வார் :wub: ..........ஆகவே கணவனை நம்பி இருக்க வேண்டிய சூழல் இருந்தது ஆனா புலத்தில் அப்படி இல்லை மனைவியும் கணவிற்கு நிகரா உழைக்கிறா ஆகவே தங்கி வாழவேண்டிய அவசியம் இல்லை :) ஆகவே இது தான் முதல் காரணம் பிரிவிற்கு என்று கூறலாம்!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"நல்லதோர் குடும்பம் பல்கலைகழகம் என்பது என்று இன்று அது காப்ரேசன்" :wub:

mainimage3.jpg

அதிகமாக சுவிஸில் ஏற்படும் பிரிவுகளுக்கு

மனப் பொருத்தமற்ற தன்மையும்

பொய் கனவுகளின் சிதைவுமே பிரச்சனையாக இருக்கிறது.

செக்ஸ் என்பது வெகு குறைவாகவே இருக்கிறது.

மனம் விட்டு பேசும்

பலர் வழி அதையே காண முடிகிறது.

செக்ஸை முதன்மைப் படுத்தும்

தவறான கண்ணோட்டத்தில்

பேசுவது பலர் செய்யும் பெரும் தவறு.

இங்கு நடைபெறும் பிரிவுகளுக்கு

செக்ஸ் என்பது 1% சதவீதம் கூட கிடையாது.

அப்படியானால் அடிப்படை பிரச்சனையின்

காரணிகள் என்ன?

ஆரம்ப காலத்தில் இங்கு சுவிஸுக்கு புலம் பெயர்ந்து அகதியாக வந்தவர்கள்

பெரும்பாலும் ஆண்கள்தான்.

எவருமே

இங்கு தொடர்ந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு

இருந்ததே இல்லை.

அந்த காலங்கள் கொடுமையானவை.

புதிய நாடு

புதியதொரு கலாச்சாரம்

புரியாத மொழி

நினைத்தே பார்த்திருக்காத காலநிலை

வேலை வாய்ப்பு இல்லாமை

அத்தனையும் சொல்லொணா துன்பங்கள்.

அண்மை காலம் வரை

சில மாநிலங்கள்

அகதிகளுக்கு வேலை வழங்க மறுத்தே வந்தது.

அது இன்றும் சில மாநிலங்களில் தொடரவே செய்கிறது?

இதை விட மொழி அறிவை சற்றாவது

அகதிகள் பெற வேண்டும் என்று

இந்த நாடு கொஞ்சம் கூட யோசித்தது கிடையாது.

வளர்ப்பு மிருகங்களைக்கூட

அழைத்தால் வரும்

துரத்தினால் போகும்

என்பது போல சைகை வழி

புரிந்து கொண்டு மிக வேதனையோடு

வேலை செய்து

வாழ்ந்த தமிழர்கள் ஆரம்ப சுவிஸ் தமிழர்கள்.

நீக்ரோக்களை சங்கிலிகளால் கட்டி அடிமைகளாக நடத்தியதாக சொல்வார்கள்

நம்மவர்களை கட்டாமல் அடிமைகளாக நடத்தினார்கள்.

அன்று குருவிக்கு போடும் அரிசியும்

பூனைக்கு போட்ட நெத்தலி கருவாடும்

சாப்பிட்டவர்கள் கதை கேட்டால்

இதயம் வெதும்பும்.

ஆனால் இன்று ?

எங்கு போனாலும் தமிழர் கடைகள்.

இவர்களே வியக்கும் வண்ணம் பொருளாதார ஸ்தீரம்.

இருந்தும் அன்று

இவர்கள் தன் மனைவியரை அழைத்து வந்தது

வீசா வாங்கி அல்ல.

உண்மைகளை விட பொய்களை நம்பும்

மடையர்கள் இந்த நாட்டவர்கள்.

உண்மைக்கு மதிப்பே இல்லை.

நடிப்புக்கே அதிக மதிப்பு கொடுப்பார்கள்.

எனவே

அனைத்துமே

ஏஜன்சி வழிதான்.

நீந்தினால் கரை

மூழ்கினால் சாவு

இதுதான் தமிழர் நினைத்தது.

அதையே

தம் வாழ்கை துணைகளுக்கும்

என்று நினைத்தனர் போலும்?

வெளிநாடு என்று கனவோடு

பாதை நெடுகிலும் பட்ட வேதனையிலும் விட

பழக்கமில்லாத ஒரு புதியவனோடு வாழ்வை

பகிர்ந்து கொள்வது அன்று வந்த ஒரு பெண்ணுக்கு

ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.

நமது நாட்டின் கலாச்சாரம்?

திரும்பி செல்லத் தெரியாத நிலை?

யாரிடமும் பேச முடியாமல் உள்ள மொழி பற்றாக் குறை?

இவை அன்றைய பெண்ணை கூண்டுக்குள் அடைத்தது.

அதில் குழந்தைகள் வேறு என்றால்?

அதுவே விதி என பழக்கமாகிப் போனது.

அடுத்தது

பொய்யான தகவல்கள்

தவறான எதிர்பார்ப்புகள்

இங்கிருந்து பணம் அனுப்பும் அனைவரும்

பணக்காரன் படித்தவன் என்று நினைத்து வந்தவர்கள் நிலை.

வந்ததும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

அதிகமானோர் தனது உண்மையான வயதை சொன்னதில்லை

அது போல அன்றைய நிலை ஆணின் புகைப்படம் ஒன்றைக் கூட அனுப்பியதில்லை

இவர்கள் செய்யும் தொழில் குறித்து சொன்னதில்லை

பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை பண்ணி வை என்பது போல

நடந்த நாடகங்கள்!

உண்மையான விபரங்களோடு வந்தவை விரல் விட்டு எண்ணக் கூடியவைகளே!

இது போலவே

மறுபுறம்

படத்தில் பார்த்தது போல இல்லாமல்

இவர்களை அதிர்ச்சி அடைய வைத்த பெண்களும்

வந்து சேரவேதான் செய்தார்கள்!

இங்கேதான் பிரிவு குறித்த சல சலசலப்பு தொடங்கியது.

இருந்தாலும் அவை எல்லாம்

சுவருக்குள்

முட்டி : மோதி அடங்கிப் போனது.

வீட்டுக்குள் கீரியும் பாம்புமாகவும்

வெளியே அன்பே சிவமாகவும்

காட்டிய செவாலியரை மிஞ்சியவர்கள் இவர்களில் பலர். :)

அடுத்த நிலை

ஒரு காலத்தில்

வதிவிட அனுமதி கிடைத்தவர்கள்

வதிவிட அனுமதி கிடைத்ததும்

உடனே செய்த முதல் வேலை

வங்கியில் கடன் வாங்கியது

அடுத்து பெண் ஒருத்தியை அழைத்தது. :unsure:

இலங்கைக்கு போக பயந்தவர்கள்

சுவிஸ் பிரஜைகள் போல்

மனைவியாக

காதலியாக

எவரையாவது படத்தை பார்த்து அழைத்தார்கள்.

அல்லது

போக முடிந்தவர்கள்

நாட்டுக்கு போய் திருமணம் செய்து விட்டு வந்து

வரவழைத்தார்கள்.

இப்படியானவர்கள்

செய்த அதிரடி கல்யாண புரட்சிதான்

அதிக முறிவுகளுக்கு தொடக்க உரையாக அமைந்தது.

அதிகமாக

திருமணமாகி வந்த பெண்கள்

இவர்களை விட

சற்று அதிகமாக படித்தவர்கள்.

இங்கு இருந்து போனவர்கள்

இருந்த கல்வியைக் கூட

இந் நாட்டு நிலையால் மறந்தவர்கள்.

ஒரு வித அடிமைத் தனத்தோடு வாழ்ந்தவர்கள்.

அங்கிருந்து வந்த பெண்கள்

தமிழில் கல்வி பெற்றிருந்தாலும்

உலக அறிவு கொண்டவர்கள்.

தினசரி போராட்ட வாழ்வில்

பங்கு கொண்டவர்கள்.

அல்லது அதை பார்த்தும் படித்தும் வாழ்ந்தவர்கள்.

மொழி புரியாமல் இருக்கலாம்

நிலை புரியாதவர்கள் அல்ல இவர்கள்?

பலர் கடமைக்காகவே வாழ்கிறார்கள்

சிலர் கடமை அல்ல வாழ்கை என்று நினைக்கிறார்கள்?

காட்டுக்குள் இருந்து வெளிப்பட்டாலும்

நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியேயும்

என்ன நடக்கிறது என்று தெரிந்தவர்கள்

அங்கிருந்து வருவோர்.

இங்கே பெரும்பாலாக உள்ளவர்கள்

நாட்டுக்குள் இருந்தாலும்

இங்கே என்ன நடக்கிறது என்றே

தெரியாமல் காட்டை விட மோசமாக வாழ்பவர்கள்.

மொழி அறிவு கிடைக்காத காரணத்தால்

பேச்சு வழக்கால்

வட்டத்துக்குள் மட்டுமே வாழப்பழகியவர்கள்.

இது சுவிஸ் செய்த பெரும் கொடுமை.

அதையே தம் துணைவியருக்கும் செய்வது

மற்றுமொரு பெரும் கொடுமை!!!

இவையோடு

புரிந்துணர்வு

உலக மாற்றம்

மனதின் ஏற்றத் தாழ்வு

மன ஒப்புதல் இல்லாமை

போன்ற சில காரணிகள்

பல பிரிவுகளுக்கு முக்கிய காரணமான

விதையாகி வருகிறது.....................

இவை காரணமாக

மனதுக்குள் குமுறும் சிலர்

இப்படியே வாழ்வு முழுதும்

ஒருவரோடு நரக வாழ்கை வாழ்வதை விட

தனியாகவே சந்தோசமாக வாழலாம்

எனும் மனநிலைக்கு சிலர் தள்ளப்பட்டிருக்கிறார்கள்?!

இன்னும் காரணிகள் உண்டு.

இருக்கலாம்?

இவைதான் அடிப்படை காரணிகள்.

வாழ எவருக்கும் பழக்கலாம்

வாழ்கையை எவராலும் பழக்க முடியாது.

உண்மை வலிக்கும் : அதற்காக உண்மையை உணருவதில் தப்பில்லை.

Edited by AJeevan

மணமுறிவு புலத்தில் மட்டுமல்ல தாயகத்திலும் அதிகரித்துத்தானுள்ளது. கவவன் ,மனைவியிடையேயுள்ள நம்பிக்கையின்மை , பரஸ்பர விட்டுக் கொடுப்புகள் இன்மையே இதற்கான காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் சார்! நீங்கள் மிகவும் கூர்மையாகத்தான் புலம்பெயர்ந்த மக்களின் குடும்ப வாழ்வைக் கவனித்து வந்திருக்கிறீர்கள்.

அஜீவன் அண்ணா சொன்னது அநேகமா எல்லா நாட்டுக்கும் பொருந்தும்.

நன்றி சுவி

நன்றி சினேகிதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா!ஆழமான கருத்துக்களை அமைதியாக சொல்லியிருக்கின்றீர்கள். இப்படி உளவியல் சம்பந்தமான கருத்துக்களை நிறையவே எழுதுங்கள்.இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அவசியம் தேவையானது.

Edited by குமாரசாமி

தேவையான போது நிச்சயம் எழுதுவேன்.

நன்றி குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனங்கொள்ளத்தக்கதான தலைப்பில் இத்தேடல் அமைவது நல்லது. உண்மைகளை மூடிவைத்துள்ள கவலைதரும் சூழலை நிராகரித்தால் வெறும் ஊகக் கருத்துகள்தான் பதிவாகும்.

முதலில் சம்பவங்கள் பதிவாகட்டும். எழுத்துக்காக பெயர்களை மட்டும் மாற்றிவிடலாம். இதில், சமூகக் கரிசனையுடையோர் பங்கெடுப்பது அவசியம்.

1. இவ்வகையான வழக்குகளில் வழக்காடு மன்றங்களில் மொழிபெயர்ப்பு அல்லது உதவியாளர்களாக இருந்தவர்கள் பங்கெடுக்கலாம்.

2. மணமுறிவுக்குள்ளானவர்கள் தங்களது கதையைச் சொல்லலாம்.

3. நீண்டகாலம் மணமுறிவில்லாது வாழும் குறிப்பாக 30 வருடங்களுக்கு மேல் வாழ்பவர்களது மனந்திறப்புகளையும் பதிவு செய்யலாம். (இவர்கள் பிற இனங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்!)

4. சமூகவியலாளர்களின் கருத்துகளையும் பதிவு செய்யலாம்

5. இது எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வு தொடர்பான உணர்வுபூர்வமான விடையம் ஆக இளையோரது எண்ணங்கள் மனந்திறந்த பதிவுகளாக இருக்கும்.

யாழில் எதிர்கால வாழ்வு விழிப்புணர்வு தொடர்பான கருத்தாடலின் தொகுப்பாக இது அமையட்டும்.

வீட்டுக்குள் கீரியும் பாம்புமாகவும்

வெளியே அன்பே சிவமாகவும்

காட்டிய செவாலியரை மிஞ்சியவர்கள் இவர்களில் பலர்.

அங்கிருந்து வந்த பெண்கள்

தமிழில் கல்வி பெற்றிருந்தாலும்

உலக அறிவு கொண்டவர்கள்.

மொழி புரியாமல் இருக்கலாம்

நிலை புரியாதவர்கள் அல்ல இவர்கள்?

காட்டுக்குள் இருந்து வெளிப்பட்டாலும்

நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியேயும்

என்ன நடக்கிறது என்று தெரிந்தவர்கள்

அங்கிருந்து வருவோர்.

இங்கே பெரும்பாலாக உள்ளவர்கள்

நாட்டுக்குள் இருந்தாலும்

இங்கே என்ன நடக்கிறது என்றே

தெரியாமல் காட்டை விட மோசமாக வாழ்பவர்கள்.

உண்மை வலிக்கும் : அதற்காக உண்மையை உணருவதில் தப்பில்லை.

ஆழமான ஒரு சமூகப்பிரச்சினையின் போர்வையை, அழகாக வார்த்தைகளின் கோர்வை கொண்டு களைந்திருக்கிறீர்கள்.

சிலரின் எழுத்துக்களை வாசிக்கும் போது, இதயத்தை மயிலிறகால் தடவினாற் போல் ஒரு சுகம். அதே நேரம் சிந்திக்கவும் வைத்துவிடும். வாழ்த்துக்கள்.

Edited by vettri-vel

நன்றி வெற்றி வேல்

காட்டுக்குள் இருந்து வெளிப்பட்டாலும்

நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியேயும்

என்ன நடக்கிறது என்று தெரிந்தவர்கள்

அங்கிருந்து வருவோர்.

இங்கே பெரும்பாலாக உள்ளவர்கள்

நாட்டுக்குள் இருந்தாலும்

இங்கே என்ன நடக்கிறது என்றே

தெரியாமல் காட்டை விட மோசமாக வாழ்பவர்கள்

நீங்கள் சொல்வது வேதனையான ஒரு உண்மை. பதிவுக்கு நன்றிகள்.

நன்றி சுகன்.

ஏனைய உறவுகளும்

ஆரோக்கியமான பதிவுகளை இட்டால்

வேறு நாடுகளில் உள்ள பிரச்சனைகளை தெரிந்து கொள்ளலாம்?

உண்மைகளை

எவரையும் புண்படுத்தாது அலசுவதில் தவறில்லை.

நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.