Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

05-4.jpg?resize=750,375&ssl=1

போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!

உக்ரேனில் போர் நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அதாவது “ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெறத் தொடங்கவேண்டும்” எனவும் “நேட்டோவில் சேருவதற்கான திட்டங்களை உக்ரேன் கைவிடவேண்டும்” எனவும் அவர் தனது நிபந்தனைகளை விதித்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை ஏற்று செயல்பட்டால், உடனே போரை நிறுத்த உத்தரவிடுவதாகவும், பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாக்குறுதியளித்துள்ளார்.

உக்ரேன் – ரஷ்ய போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் பதிலடி கொடுப்பதால் போர் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.

பாதுகாப்பிற்காக நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முயன்றமையினால், அந்த நாட்டின் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாடு தாக்கப்படுமாக இருந்தால், நேட்டோ அமைப்பிலுள்ள ஏனைய நாடுகள் இராணுவ உதவி செய்ய வேண்டும் என்பதே நேட்டோ நாடுகளின் உடன்படிக்கையாகும்.

இந்நிலையிலேயே, உக்ரேனை நேட்டோவில் சேர விடாமல் தடுப்பதற்கு, ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி போர் நிறுத்தத்திற்கு இரண்டு நிபந்தனை விதித்துள்ளமை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இத்தாலியில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு மற்றும் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1387973

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

அதாவது “ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெறத் தொடங்கவேண்டும்” எனவும் “நேட்டோவில் சேருவதற்கான திட்டங்களை உக்ரேன் கைவிடவேண்டும்” எனவும் அவர் தனது நிபந்தனைகளை விதித்துள்ளார்.

இந்த அமெரிக்க சனாதிபதி லெக்சனிலை திருவாளர் டொனால்ட் ரம்ப்  வெற்றிவாகை சூடினால் செலென்ஸ்சிக்கு  மூச்செடுக்கக்கூட காத்து இருக்காது. :cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் புடின்

ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) இடையிலான போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Putin) தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது துருப்புக்களை விலக்கினால் அது நேட்டோ உறுப்புரிமைக்கான திட்டங்களைக் கைவிடத் தயாராக உள்ளது என எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க தரப்பின் வலியுறுத்தல் 

மேலும், உக்ரைன் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், தாமதமின்றி பேச்சுவார்த்தைகளை தொடங்க தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

putin-ready-for-peace

எனினும், உக்ரைனிடம் நிபந்தனைகளையோ கோரிக்கைகளையோ புட்டினால் முன்வைக்க முடியாது என்றும் அவரால் தொடங்கப்பட்ட போரை அவரே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/putin-ready-for-peace-1718437568?itm_source=parsely-detail

 
  • கருத்துக்கள உறவுகள்

போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் நிபந்தனை - யுக்ரேன் என்ன சொல்கிறது?

நிபந்தனைகள் விதிக்கும் புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
2 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

முதலில், யுக்ரேன் தனது படைகளை டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரீஷியா ஆகியவற்றிலிருந்து திரும்பப் பெற வேண்டும்.

இரண்டாவதாக, யுக்ரேன் நேட்டோவில் சேரக் கூடாது.

90 நாடுகளின் பிரதிநிதிகள் சனிக்கிழமை சுவிட்சர்லாந்தில் சந்திக்கவிருக்கும் நேரத்தில், யுக்ரேனுடன் போர் நிறுத்தம் செய்வதற்கான புதினின் நிபந்தனைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

யுக்ரேன் அமைதிக்கான பாதை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கு ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும், யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதில் பங்கேற்க உள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.  
புதினின் நிபந்தனைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதினின் நிபந்தனைகள் என்ன?

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் தலைவர்களுடனான சந்திப்பில், "யுக்ரேன் தனது படைகளை டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரீஷியா ஆகியவற்றிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தவுடன், ரஷ்ய ராணுவம் அங்கிருந்து பின்வாங்கத் தொடங்கும்," என்று புதின் கூறினார்.

இந்தப் பகுதிகளில் இருந்து யுக்ரேன் தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று புதின் வலியுறுத்தினார். இருப்பினும், இங்கு ரஷ்ய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு ஓரளவு மட்டுமே உள்ளது என்பதும் உண்மை.

நேட்டோவில் இணையும் திட்டத்தை யுக்ரேன் முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

“யுக்ரேன் அதன் நடுநிலை, அணிசேரா மற்றும் அணுசக்தி இல்லாத நிலையை மீண்டும் பெற வேண்டும். ரஷ்ய மொழி பேசுபவர்களின் உரிமைகளை யுக்ரேன் பாதுகாக்க வேண்டும். நாசிசத்தைக் கைவிட்டு ராணுவமயமாக்கலில் இருந்து பின்வாங்க வேண்டும்,” என்று புதின் கூறியுள்ளார்.

யுக்ரேன் அதன் எல்லைகள் (நிலம்) தொடர்பான புதிய யதார்த்த உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த நிபந்தனைகளைக் குறிப்பிட்டு, ரஷ்யா-யுக்ரேன் போருக்கான அமைதி ஒப்பந்தம் சர்வதேச உடன்படிக்கைகளில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் புதின் கூறினார். மேலும், ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

எல்லாம் சரியாக நடந்தால், யுக்ரேன் ராணுவம் வெளியேற பாதுகாப்பான வழியை வழங்குவதாக ரஷ்ய அதிபர் உறுதியளித்தார்.

புதினின் விதிமுறைகள் எவ்வளவு நம்பகமானவை?

செர்ஜி லாவ்ரோவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (கோப்பு படம்)

யுக்ரேன் ஏற்பாடு செய்துள்ள அமைதி மாநாட்டிற்கு ஒருநாள் முன்னதாகவே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நிபந்தனைகளை புதின் முன்வைத்துள்ளார்.

இந்த அமைதி மாநாடு சுவிட்சர்லாந்தின் பெர்கன்ஸ்டாக்கில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதி மாநாட்டில் 92 நாடுகள் மற்றும் 8 அமைப்புகளைச் சேர்ந்த 100 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், ரஷ்ய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. சீனா, பிரேசில் மற்றும் சௌதி அரேபியாவின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

இந்த மாநாட்டில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெறும். இதன் முடிவில் யுக்ரேனிய அமைதி உடன்படிக்கையின் மூன்று முக்கிய விவகாரங்களுடன் இணைக்கப்பட்ட ஒரு அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு, அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பு, மனிதாபிமானப் பிரச்னைகளுடன் இந்த மூன்று விவகாரங்களும் தொடர்புடையதாக இருக்கும். குழந்தைகள் உட்பட சிறைப்படுத்தப்பட்ட அனைத்து யுக்ரேனியர்கள் மற்றும் யுக்ரேனிய கைதிகளின் விடுதலையும் இதில் அடங்கும்.

மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் மத்தியஸ்தர்கள் மூலம் ரஷ்யாவுக்கு தெரிவிக்கப்படும். மாநாட்டின் திட்டத்தின் படி, இந்த மத்தியஸ்தர்கள் பின்னர் ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே மத்தியஸ்தம் செய்வார்கள். இதற்கு முன்னரும் இதுபோன்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

உதாரணமாக, யுக்ரேனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் வகையில் 'கிரெய்ன் காரிடார்' (Grain corridor) உருவாக்கப்பட்டது.

எவ்வாறாயினும், போரை நிறுத்துவது தொடர்பான புதினின் அறிக்கை அமைதி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

 

யுக்ரேன் அதிபர் கூறியது என்ன?

யுக்ரேன் அதிபர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புதினின் போர்நிறுத்த முன்மொழிவு ஒரு இறுதி எச்சரிக்கை போலத் தெரிகிறது என்றும், இதை நம்ப முடியாது என்றும் கூறியுள்ளார்.

போர்நிறுத்தம் தொடர்பான அவரது நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் புதின் ராணுவத் தாக்குதலை நிறுத்த மாட்டார் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

புதினின் இந்தச் செய்திகள், ஹிட்லர் கூறிய செய்திகள் போல உள்ளன என்று அவர் கூறினார்.

" 'செக்கோஸ்லோவாக்கியாவின் ஒரு பகுதியை எனக்குக் கொடுங்கள், நான் போரை முடித்துக் கொள்கிறேன்' என்று ஹிட்லர் கூறினார். அது முழுப் பொய். அதற்குப் பிறகு போலந்தின் ஒரு பகுதியை ஹிட்லர் கேட்டார். ஆனால் அதற்குப் பிறகும் கூட, ஐரோப்பா முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஹிட்லர்," எனக் கூறினார் ஜெலென்ஸ்கி.

யுக்ரேன் மற்றும் நேட்டோ நாடுகளின் நிலைப்பாடு

நேட்டோ நாடுகளின் நிலைப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (கோப்பு படம்)

இதற்கு முன்பும் புதின் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் என்பதுதான் உண்மை.

புதினின் சமீபத்திய அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. யுக்ரேன் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையிலும் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, புதினின் அறிவிப்பு வெளிவந்துள்ள தருவாவையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, "சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சிமாநாட்டிற்கு முன்பு இதுபோன்ற சமிக்ஞைகளை வழங்குவதற்குப் பின்னால் புதினுக்கு ஒரே ஒரு குறிக்கோள் உள்ளது. இந்த உச்சிமாநாட்டில் தலைவர்களையும் உலகெங்கிலும் உள்ள நாடுகளையும் பங்கேற்பதைத் தடுப்பது. உச்சிமாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக புதினின் அறிக்கைகள் வந்திருப்பது ரஷ்யா உண்மையான அமைதி நடவடிக்கைக்கு அஞ்சுகிறது என்பதைக் காட்டுகிறது."

யுக்ரேன் அதிபரின் அலுவலகத்தின் தலைமை ஆலோசகர் மிகைல் பொடோல்யோக், ரஷ்ய அதிபர் முன்வைத்த நிபந்தனைகளை 'வழக்கமானவை' என்று விவரித்தார்.

"அந்த நிபந்தனைகளின் உள்ளடக்கம், சர்வதேசச் சட்டத்தை மீறக்கூடியதாகவும், நிலைமையின் யதார்த்தத்தை மதிப்பிடுவதற்கு ரஷ்ய தலைமையின் இயலாமையை காட்டுவதாகவும் உள்ளது," என்று மிகைல் கூறியுள்ளார்.

 
நேட்டோ நாடுகளின் நிலைப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்.

மேற்கத்திய நாடுகளின் விமர்சனம்

யுக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகள் புதினின் இந்தத் திட்டத்தை விமர்சித்துள்ளன.

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில், "யுக்ரேன் மண்ணில் இருந்து யுக்ரேன் தனது படைகளை திரும்பப் பெறத் தேவையில்லை, ஆனால் ரஷ்யா தனது படைகளை யுக்ரேன் மண்ணில் இருந்து திரும்பப் பெற வேண்டும்," என்றார்.

அவர் புதினின் கோரிக்கைகளை 'அமைதி முன்மொழிவு' என்பதற்கு பதிலாக, 'அதிக ஆக்ரோஷம் மற்றும் அதிக ஆக்கிரமிப்புக்கான முன்மொழிவு' என்று குறிப்பிட்டார்.

"ரஷ்யாவின் இலக்கு யுக்ரேனைக் கட்டுப்படுத்துவதே என்பதை இது காட்டுகிறது. இந்தப் போரின் தொடக்கத்தில் இருந்தே இது ரஷ்யாவின் இலக்காகும். இது சர்வதேசச் சட்டத்தை கடுமையாக மீறுவதாகும். அதனால்தான் நேட்டோ நாடுகள் யுக்ரேனை ஆதரிக்க வேண்டும்," என்றார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், போரை நிறுத்துமாறு யுக்ரேனிடம் கேட்க முடியாத நிலையில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் ஆஸ்டின் பேசுகையில், "அமைதியை அடைய யுக்ரேன் என்ன செய்ய வேண்டும் என்று புதின் கூற முடியாது. புதின் விரும்பினால் இன்றே போரை முடித்துக் கொள்ளலாம்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c2ll2vkd9w9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images-31.jpeg?resize=275,183&ssl=1

அமொிக்கா நினைத்தாலும் புட்டின் தாக்குதலை நிறுத்தமாட்டாா் – உக்ரேனிய ஜனாதிபதி!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும் எனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியுள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் எனவும் அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை என்பதால் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஹிட்லர் செய்த அதே விடயத்தையே ரஷ்ய ஜனாதிபதி செய்வதாகவும், இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1388176

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்கான உதவிக்கான தனிக் கட்டளைப்பீடம் யேர்மனியிலுள்ள விஸ்பாடன் நகரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யேர்மனியச் செய்திகள் கூறுகின்றன. மேலே வசியவர்கள் இணைத்துள்ள காணொளியில் கூறப்படும் விடயங்களும் நிலமை மிக மோசமாகி வருவதோடு புதினின் போர்ப்புயல் மூலோபாயம் தலைகீழாகிவிடும்போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nochchi said:

உக்ரேனுக்கான உதவிக்கான தனிக் கட்டளைப்பீடம் யேர்மனியிலுள்ள விஸ்பாடன் நகரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யேர்மனியச் செய்திகள் கூறுகின்றன. மேலே வசியவர்கள் இணைத்துள்ள காணொளியில் கூறப்படும் விடயங்களும் நிலமை மிக மோசமாகி வருவதோடு புதினின் போர்ப்புயல் மூலோபாயம் தலைகீழாகிவிடும்போல் தெரிகிறது.

ஒரு பலம் மிக்க அணுவாயுத நாடு(ரஷ்யா) தோல்வியை ஏற்றுக்கொள்ளும் என நினைக்கின்றீர்களா?

ஒரு பக்க செய்திகளை கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சுது. எதிர்ப்பக்க  செய்திகளும் பகிரப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஒரு பலம் மிக்க அணுவாயுத நாடு(ரஷ்யா) தோல்வியை ஏற்றுக்கொள்ளும் என நினைக்கின்றீர்களா?

ஒரு பக்க செய்திகளை கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சுது. எதிர்ப்பக்க  செய்திகளும் பகிரப்பட வேண்டும்.

ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று  போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்? 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nochchi said:

உக்ரேனுக்கான உதவிக்கான தனிக் கட்டளைப்பீடம் யேர்மனியிலுள்ள விஸ்பாடன் நகரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யேர்மனியச் செய்திகள் கூறுகின்றன. மேலே வசியவர்கள் இணைத்துள்ள காணொளியில் கூறப்படும் விடயங்களும் நிலமை மிக மோசமாகி வருவதோடு புதினின் போர்ப்புயல் மூலோபாயம் தலைகீழாகிவிடும்போல் தெரிகிறது.

இன்னும் உந்த மேற்கின் ஊடகங்களை நம்புகிறீர்களா? 

ஆச்சரியமாய் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ஒரு பலம் மிக்க அணுவாயுத நாடு(ரஷ்யா) தோல்வியை ஏற்றுக்கொள்ளும் என நினைக்கின்றீர்களா?

ஒரு பக்க செய்திகளை கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சுது. எதிர்ப்பக்க  செய்திகளும் பகிரப்பட வேண்டும்.

 மேற்கின் அறிவிப்புக்கள் எல்லாம் உக்ரேனுக்கு எந்தப் பயனையும் கொடுக்கவில்லை  என்பது கண்கூடு. 

இனிவரும் நாட்கள் உக்ரேனுக்கு இன்னும் மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் நாட்களாக வரப்போகின்றன என ஊகிக்கிறேன். 

புடினின் போர்நிறுத்த நிபந்தனை இதற்கட்டியங்கூறலாகவே தெரிகிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kapithan said:

 மேற்கின் அறிவிப்புக்கள் எல்லாம் உக்ரேனுக்கு எந்தப் பயனையும் கொடுக்கவில்லை  என்பது கண்கூடு. 

இனிவரும் நாட்கள் உக்ரேனுக்கு இன்னும் மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் நாட்களாக வரப்போகின்றன என ஊகிக்கிறேன். 

புடினின் போர்நிறுத்த நிபந்தனை இதற்கட்டியங்கூறலாகவே தெரிகிறது. 

மேற்குலகின் உக்ரேனுக்கான எடுபிடிகளை பார்க்கும் போது உலகில் வேறெங்கும் எந்தவொரு  பிரச்சனைகளும்  இல்லை போல் தெரிகின்றது.😂

ரம்ப் மாத்தயா வாறதுக்கு முதல் எதாவது செய்து முடிச்சிடணும் எண்ட அவசரம் ஜேர்மனியின்ர முகத்திலை தெரியுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

மேற்குலகின் உக்ரேனுக்கான எடுபிடிகளை பார்க்கும் போது உலகில் வேறெங்கும் எந்தவொரு  பிரச்சனைகளும்  இல்லை போல் தெரிகின்றது.😂

ரம்ப் மாத்தயா வாறதுக்கு முதல் எதாவது செய்து முடிச்சிடணும் எண்ட அவசரம் ஜேர்மனியின்ர முகத்திலை தெரியுது. 🤣

ஜேர்மனியின்ர முகத்தில் மட்டுமல்ல, உந்த யுத்தத்திற்கு ஆதரவழித்து ஊக்குவித்த மேற்குநாடுகள் எல்லாவற்றின் முகத்திலும் அசடு வழிகிறது. அதுதான் ட்றம் வந்தாலும் உக்ரேனுக்கான ஆதரவை நிறுத்தாத வகையில் அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்கிறார்கள். 

அடுத்த 5 வருடங்களில் உலகளாவிய ரீதியில், குறிப்பாக மேற்கில் AI யினால்  ஏற்படப்போகும் மாற்றங்களை Putin-Trump எனும் இரு மனிதர்களால் கட்டுப்படுத்தப்படுமோ என்று அஞ்சுகிறார்கள். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

இன்னும் உந்த மேற்கின் ஊடகங்களை நம்புகிறீர்களா? 

ஆச்சரியமாய் இருக்கிறது. 

1.நான் இங்கே யாரையும் எந்தவொரு இடத்திலும் மேற்கினது ஊடகங்களை நம்புமாறு கோரவில்லை. யேர்மனியச் செய்தி நிறுவனத்திற் கேட்ட செய்தியின் அடிப்படையில் எழுதியுள்ளேன். 

2. மேலே வசியவர்களால் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நிராஜ் டேவிட் அவர்களது கூற்றுகள் அனைத்தும் பொய்யா? 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, nochchi said:

வசியவர்களால் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நிராஜ் டேவிட் அவர்களது கூற்றுகள் அனைத்தும் பொய்யா?

நிராஜ் டேவிட் எங்கிருந்து செய்திகளை சேகரித்தார்?

போர் முனைகளிகளில் நிற்பவர்களால் கூட ஆணித்தரமான செய்திகளை சொல்ல முடியுமா என தெரியவில்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நிராஜ் டேவிட் எங்கிருந்து செய்திகளை சேகரித்தார்?

போர் முனைகளிகளில் நிற்பவர்களால் கூட ஆணித்தரமான செய்திகளை சொல்ல முடியுமா என தெரியவில்லை.🤣

ஐயா, எங்கிருந்து சேகரிக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்படி பொய்யை எவளவுகாலத்துக்குச் சொல்லமுடியும்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பில் சீனாவின் நடவடிக்கைகளை (தீய நோக்கம்)  பற்றி  NATO தலைவர் சரியாக சொல்லி உள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்கு   பின்பு ஐரோப்பாவில் மிகப்பெரிய ஆயுத மோதலை சீனா தூண்டி கொண்டிருக்கின்றது அதே நேரத்தில் மேற்கு நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வியாபாரம் செய்து சம்பாதிக்க விரும்புகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

நிராஜ் டேவிட் எங்கிருந்து செய்திகளை சேகரித்தார்?

போர் முனைகளிகளில் நிற்பவர்களால் கூட ஆணித்தரமான செய்திகளை சொல்ல முடியுமா என தெரியவில்லை.🤣

ஒரு முறை இஸ்ரேலுக்கு போய் வந்தவர். அதற்கு பிறகு தான் தான் நததனியாகுவுக்கு அடுத்த ஆள் போல பேச்சு. அல்ஜசீராவை தவிர கள நிலவரங்களை யாரும் உண்மையாக எழுதுவதில்லை. இஸ்ரேல்  ஊடகங்களில் சில உண்மைகளை சொல்கிறது என்பதும் அவை அல்ஜசீராவுக்கு சமாந்திரமாக உள்ளதும் மேற் கூறிய கூற்றுக்கு சான்று.
மேற்கூடகங்கள் அங்கிருந்தாலும் இஸ்ரேலுக்கு  வழமையாக இஸ்ரேல் அரசுக்கு சார்பாக செய்திகளை சொல்வன.

Just now, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பில் சீனாவின் நடவடிக்கைகளை (தீய நோக்கம்)  பற்றி  NATO தலைவர் சரியாக சொல்லி உள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்கு   பின்பு ஐரோப்பாவில் மிகப்பெரிய ஆயுத மோதலை சீனா தூண்டி கொண்டிருக்கின்றது அதே நேரத்தில் மேற்கு நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வியாபாரம் செய்து சம்பாதிக்க விரும்புகிறது.

இதில் அமெரிக்கா எந்த விதத்தில் குறைவு??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

.நான் இங்கே யாரையும் எந்தவொரு இடத்திலும் மேற்கினது ஊடகங்களை நம்புமாறு கோரவில்லை. யேர்மனியச் செய்தி நிறுவனத்திற் கேட்ட செய்தியின் அடிப்படையில் எழுதியுள்ளேன். 

சரியான வழியில் செய்தி சேகரிப்பு
ரஷ்யா ,சீனா ,வட கொரியா, அல்ஜசீரா  செய்திகள் ,இலங்கையில் அரச ரேடியோ செய்தி இருக்கின்றதாம் அது மாதிரி தான் பிரசாரங்கள். நம்பிக்கை இல்லாதபடியால் நான் கேட்பது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சரியான வழியில் செய்தி சேகரிப்பு
ரஷ்யா ,சீனா ,வட கொரியா, அல்ஜசீரா  செய்திகள் ,இலங்கையில் அரச ரேடியோ செய்தி இருக்கின்றதாம் அது மாதிரி தான் பிரசாரங்கள். நம்பிக்கை இல்லாதபடியால் நான் கேட்பது இல்லை.

பொழுது போகாத போது மேற்கு ஊடகங்களை கேட்பதுண்டு. உடனே நேரெதிராக சிந்தித்தால் உண்மை நிலை புரிந்து விடும். :)

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பது தேவாரம்  இடிப்பதோ சிவன் கோவில்
வாழ தேவை மேற்குலகம்  கேட்பதோ சாத்தான்களின் உபதேசங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகம் வாழ்வது என்பதற்காக எல்லாவற்றுக்கும் தலையாட்ட வேண்டிய அவசியம் இல்லை.  ஒரு வேளை அரச பணத்தில் வேலை செய்யாமல் இருப்பவர்கள் பயப்படலாம். ஏனைய குடிமகன் போல் வாழ்பவர்கள்  நல்லது செய்தால் நல்லது எனவும் கூடாதது செய்தால் கூடாது எனவும் சொல்ல பழக வேண்டும். தொடர்ந்தும் அடிமை வாழ்வை வாழக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

1.நான் இங்கே யாரையும் எந்தவொரு இடத்திலும் மேற்கினது ஊடகங்களை நம்புமாறு கோரவில்லை. யேர்மனியச் செய்தி நிறுவனத்திற் கேட்ட செய்தியின் அடிப்படையில் எழுதியுள்ளேன். 

2. மேலே வசியவர்களால் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நிராஜ் டேவிட் அவர்களது கூற்றுகள் அனைத்தும் பொய்யா? 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

நொச்சியருக்கு 🙏

உக்ரேன் - ரஸ்ய யுத்தம் என்பது தனியே புட்டினால் தொடங்கப்பட்டு புட்டினின் தனிநபர் விருப்பு வெறுப்பால் நடாத்தப்படுகிறதென்று நம்புகிறீர்களா? 

மேற்கில் தற்போது நடைபெற்றுவரும் மாற்றங்களை உற்றுநோக்கினால் விடயங்கள் அவிழலாம். 

28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

படிப்பது தேவாரம்  இடிப்பதோ சிவன் கோவில்
வாழ தேவை மேற்குலகம்  கேட்பதோ சாத்தான்களின் உபதேசங்கள்

இதில் தேவாரம் எது?  சிவன் கோவில் எது? 

முன்னாள் தமிழ்நாட்டு IG தேவாரத்தையும் வண்ணை  சிவன் கோவிலையும் கூறுகிறீர்களோ? 

🤣

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பில் சீனாவின் நடவடிக்கைகளை (தீய நோக்கம்)  பற்றி  NATO தலைவர் சரியாக சொல்லி உள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்கு   பின்பு ஐரோப்பாவில் மிகப்பெரிய ஆயுத மோதலை சீனா தூண்டி கொண்டிருக்கின்றது அதே நேரத்தில் மேற்கு நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வியாபாரம் செய்து சம்பாதிக்க விரும்புகிறது.

மேற்கு நாடுகள் சீனாவுடனும் ரஸ்ய எண்ணையை வாங்கும் இந்தியாவுடனும் தனது வியாபரத்தை நிறுத்தலாமே? 

தற்போதும் EU ரஸ்யாவிலிருந்து எரிவாயுவைக் கொள்வனவு செய்கின்றன என்பது விளக்கம் நிறைந்தவருக்குத் தெரியாதோ? 

😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

உக்கிரேன் இரஸ்சிய போர் என்பது உண்மையில் அமெரிக்க இரஸ்சிய போர் என இந்த போர் ஆரம்பித்த காலகட்டத்திலேயே யாழ்களத்தில் கூறப்பட்டது, இந்த போரில் இரு சக்திகளிடமும் அணுவாயுத வல்லமை உண்டு.

அமெரிக்கா இரஸ்சியாவினை நசுக்க திடீர் அவசரம் காட்டுவதன் காரணமாக ஒரு சதிக்கோட்பாடு  அண்மை காலங்களில் உலவி வந்துள்ளது, அதனை புரஜெக்ட் சான்ட்மான் என அழைக்கிறார்கள் இந்த சதிக்கோட்பாட்டாளர்கள்.

இரண்டாம் உலக யுத்த முடிவின் பின்னர் பிரித்தானியாவின் ஏகபோக  உலக நாணய அந்தஸ்தினை பிரட்டன்வுட் தீர்மானத்தின் மூலம் தட்டிப்பறித்த அமெரிக்கா ஆரம்பத்தில் தங்கத்தின் பெறுமதியில் தனது நாணயபெறுமதியினை பேணிய அமெரிக்கா வியட்னாம் போரின் விளைவாக அதனை அப்போதிருந்த அமெரிக்க அதிபர் நிக்சன் தூக்கியெறிந்துவிட்டு வெறும் முகப்பெறுமதி நாணயமாக அமெரிக்க நாணயத்தினை மாற்றி அமைத்தார், ஆனால் அதனை பெறுமதியாக்குவத்ற்கு மாற்றீடாக 1974 இல் சவூதியுடன் ஒப்பந்தம் மூலம் எண்ணெய் பரிவர்த்தனைக்கு அமெரிக்க நாணயம் மட்டும் பயன்படுத்தும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.

இந்த புரஜெக்ட் சான்ட்மான் என்பது பல நாடுகள் ஒருஙிணைத்து அமெரிக்க நாணயத்தினை தமது பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்தாமல் விடுவது, சவுதியின் பெறொடொலர் கைவிடல் கூட அதன் ஒரு அங்கமென கூறுகிறார்கள்.

இதன் தாக்கம் நினைத்துப்பார்க்க முடியாத பொருளாதார பேரழிவினை அமெரிக்காவில் ஏற்படுத்துவதுடன் அதன் அதிர்வலைகள் மற்றநாடுகளில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தும் என தெரியவில்லை.

அமெரிகாவினை தளமாக கொண்டு இயங்கும் பெரிய நிறுவனங்கள் தமது பிளான் B பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும் இதனை உறுதிப்படுத்துவது போல அமெரிக்காவின் சீனாவிற்கெதிரான நிறுவனங்களின் மேலான தடை, 100% வரி விதிப்புகள், சிப் கட்டுப்பாடுகளினுடன் அதனை பயன்படுத்தும் தொழில்னுட்பதடை என பொருளாதார யுத்தத்தினை ஆரம்பித்துள்ளது, ஏனெனில் அமெரிக்காவிற்கு பிரதியீடான சீனாவினை நோக்கி நிறுவனங்களின் பார்வை திரும்பாமல் இருப்பதற்கான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இருக்கலாம்.

அமெரிக்கா தனது பலத்தினை காட்ட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது, அதற்காக அணுகுண்டினை பயன்படுத்தவும் தயங்காது, அதற்காக வருத்தப்படும் நாடாக அமெரிக்கா எப்போதும் இருந்ததில்லை.

இந்த போர் ஆரம்பித்த காலப்பகுதியில் இரஸ்சிய அதிபர் கூறிய இந்த போர் முடிவில் ஒரு புதிய உலக ஒழுங்கு ஏற்படும் என கூறியிருந்தார்.

அமெரிக்கா, புதின் கூறுவது போல இலகுவாக தனது நிலையினை இழக்க விரும்பாது; அதற்காக பேரழிவினை கூட ஏற்படுத்த தயங்காது என்பதற்கு இலங்கை, காசா போன்றவை தற்கால உதாரணம்.

என்ன ஒரு வித்தியாசம் இலங்கையில் புரெஜெக்ட் பீகனை செய்தவர்களுக்கே புரெஜெக்ட் சான்ட்மான் செய்கிறார்களா? இது எந்தளவிலற்கு உண்மை? ஏற்கனவே இரண்டு நாட்டு அதிபர்கள் இது போன்ற விசப்பரீட்சையில் இறங்கி காணாமல் போயுள்ளார்கள், யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

புரெஜெக்ட் சான்ட்மானை முறியடிக்க இரஸ்சியாவினை மோசமாக தோற்கடிக்கவேண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜப்பானில் செய்தது போல, அது மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும், எதிர்வரும் காலங்களில் அதற்கான நிகழ்வுகள் நடைபெறலாம்,

 

  • கருத்துக்கள உறவுகள்

வட கொரிய  கிம் யொங் அன்   ஒரு ஜோடி வேட்டை நாய்களை புதினுக்கு பரியசாக  வழங்கி இருக்கின்றார். புதின் அவருக்கு உல்லாச சொகுசு கார் ஒன்றை பரியசாக கொடுத்திருக்கின்றார்கள்.இது ஒரு ஒளிமயமான உலகத்தின் எதிர்காலந்திற்கு வழி அமைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.