Jump to content

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் பாஜகவால் மிகக் குறுகிய காலத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கட்சியாக பாமக வந்துள்ளது. ஒரு மத்திய அமைச்சர் பதவியை மனதில் வைத்து இந்தக் கணக்கை மருத்துவர் ஐயா போட்டிருப்பார் போல........ 

ஒரு கவர்னர் பதவி கொடுப்பார்கள். அந்த வகையில் பாஜகவினர் நண்பர்களைக் கைவிடுவதில்லை. ஆனால் சாதி சனங்களிற்கு என்று ஒரு கட்சியை தொடங்கி விட்டு, கடைசிக் காலத்தில் வேறு ஏதோ ஒரு மாநிலத்தில் போய் உட்கார்ந்திருக்க முடியுமா........ இந்தக் கூட்டணி பஸ்ஸில் இருந்து இறங்கி அடுத்த கூட்டணி பஸ்ஸில் ஏற வேண்டியது தான்....... 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

island

எல்லா தலைவர்களுக்கும் அவர்களைப்பறிய எதிர்மறை விடயங்களும் உண்டு. அந்த வகையில்,  இந்த காமராஜர் தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர். இந திய தேசியத்தை தமிழர்கள் ஏற்று கோள்ள வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவத

ரசோதரன்

தமிழ்நாட்டு, அமெரிக்க அரசியல்கள் பற்றி கதைப்பது இலகுவானது, அண்ணை. நேரமும் நல்லாவே போகும். இலங்கைத் தமிழ், ஈழ அரசியல் பற்றிக் கதைப்பது நமக்கு நாமே வைக்கும் சூனியம் ஆகவும் முடியலாம். சில வேளைகளில்

ஈழப்பிரியன்

தமிழ்நாட்டு அரசியலைக் கதைப்பதும் வாளிக் கக்கூஸ் வண்டிலை தள்ளுவதும் ஒரே செயல். இருந்தும் நம்மையும் மீறி இடையிடை தள்ளுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

2016 இத்தொகுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக 63.237 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. 35.69% வாக்குவீதம் பெற்றது. அதிமுக 56,865 வாக்குகளை பெற்றது ( 31.82%).  மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட பாட்டளி மக்கள் கட்சி 41,428(23.19%) வாக்குகளை பெற்றது.  4 இடத்தினை மாக்ஸிஸ கம்னியூஸ்ட் கட்சி (5.59%) பெற்றது. 5 ஆம் இடம் மக்கள் நோட்டாவுக்கு வாக்களித்தார்கள் (0.78%) . 6 இடம் பிஜேபி( 0.72%) .  நாம் தமிழர் கட்சி இதை விட குறைவான வாக்குகளே இங்கு பெற்றிருக்கிறது. முக்கிமாக ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்த இந்த தேர்தலில் , இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. 

2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பிஜேபி இடம் பிடித்தது . மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி திமுக கூட்டணிக்கு சென்றது. திமுக 93,730 வாக்குகள் பெற்று (48.69%) வெற்றி பெற்றது. அதிமுக 84,157(43.72%) வாக்குகளை பெற்றது. நாம் தமிழர்கட்சி 8,216(4.27%) வாக்குகளை பெற்றது. 

இப்பொழுது நடைபெற்ற தேர்தலில் திமுக 1,24,053(63.22%) , பாட்டளி மக்கள் கட்சி 56,296(28.69%) , நாம் தமிழர் கட்சி 10,602(5.40%) வாக்குகளை பெற்றது. இம்முறை அதிமுக போட்டியிடவில்லை . அதிமுக ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்?  இத்தேர்தலில் பாட்டளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக பிஜேபியின் அண்ணாமலை அதிமுக, ஏடப்பாடியையும் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு பெரிய தண்டனை வழங்கியிருக்கிறார்கள். பல தொகுதியில் கட்டு பணத்தினை இழந்திருக்கிறார்கள் . உண்மையில் நாங்கள்தான் எதிர்கட்சி. திமுகவுக்கு எதிரான வாக்குகளை எங்கள் கூட்டணிக்கு வழங்குங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் . இதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க விரும்பிய அதிமுக ஆதரவாளர்கள் பலர்கோபத்தினால் திமுகாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என சில இணையத்தளங்களில் எழுதியிருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

வ‌ண‌க்க‌ம் க‌ந்த‌ப்பு அண்ணா

உண்மையில் என‌க்கு த‌மிழ் நாட்டு அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது...................அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ பிற‌க்கு தான் கூடுத‌லான‌ நேர‌த்தை த‌மிழ‌க‌ அர‌சிய‌லுக்கு ஒதுக்கினேன்

திமுக்காவின் இந்த‌ வெற்றி ஊர் உல‌க‌ம் அறிந்த‌ ஒன்று....................ஆடு மாடுக‌ளை அடைச்சு வைப்ப‌து போல் அடைச்சு வைப்ப‌து காலையில் 500ரூபாய் மாலையில் 500ரூபாய் அதோட‌ கோட்ட‌ர் கோழி பிரியாணி

தேர்த‌ல் அன்று 2000ரூபாய் காசு ம‌க்க‌ளுக்கு கொடுக்க‌ப் ப‌ட்ட‌து

இப்ப‌ கூட‌ ஒரு ஜ‌யா திமுக்கா அட்டை வைச்சு கொண்டு விப‌ர‌ம் தெரியாம‌ எல்லா உண்மையையும் சொன்னார் அதில் இருந்து தெரிவ‌து இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் தான் வெற்றிய‌ தீர்மானிக்குது

பாம‌கா ஓட்டுக்கு 500ரூபாய் அதோட‌ பாராள‌ம‌ன்ற‌ கூட்ட‌னி க‌ட்சி கொடிக‌ள் அத‌னால் அவ‌ர்க‌ளுக்கும் க‌னிச‌மான‌ ஓட்டை ம‌க்க‌ள் போட்டு இருக்கின‌ம் அந்த‌ தொகுதியில் வ‌ன்னிய‌ர்க‌ள் அதிக‌ம் வ‌சிக்கின‌ம் ஜாதி ஓட்டு பாம‌காக்கு தான்

ப‌டிச்ச‌ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ளின் ஓட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு அதிக‌ம் கிடைச்ச‌து..........................

ஆளும் அர‌சு ம‌க்க‌ளை மிராட்டினார்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்டால் மாதம் 1000ரூபாய் உங்க‌ளுக்கு கிடைக்காது என்று

ஆளும் அர‌சு ம‌க்க‌ளை இப்ப‌டி மிர‌ட்டுது என்றால் இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் கிடையாது

ப‌ண‌ம் இல்லாம‌ திமுக்காவால் தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ முடியாது.................2026திமுக்கா ஆட்சிய‌ க‌வுக்காட்டி த‌மிழ் நாடு சுடு காடு ஆவ‌து உறுதி

க‌ட்டு ம‌ர‌த்துக்கு க‌ண்ட‌ கிண்ட‌ இட‌ம் எல்லாம் சிலை வைப்பாங்க‌ள் அதிக‌ கொலைக‌ள் ந‌ட‌க்கும் க‌ள்ள‌ சாராயம் தொட்டு டாஸ்மார்க் க‌டைக‌ள் அதிக‌ம் திற‌ந்து இருக்கும்................குடிக்க‌ வைச்சே ப‌ல‌ரின் தாலிய‌ அறுத்து போடுவாங்க‌ள்......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2024 at 18:51, ரசோதரன் said:

நாதகவிற்கு கிடைத்த பத்தாயிரத்திற்கும் கொஞ்சம் அதிகமான வாக்குகளும் குறைவே, ஆனாலும் இவர்களுக்கு அந்த தொகுதியில் வாக்கு போடுவதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. 40 வீத வன்னிய மக்களும், 30 வீத பட்டியலின மக்களும் வாழும் தொகுதியில், இந்த 70 வீத மக்களில் எத்தனை பேர் நாதகவிற்கு வாக்களிப்பார்கள்? மிகுதி இருக்கும் 30 வீதத்தில் ஒரு பகுதி மட்டுமே நாதகவிற்கு வாக்களித்திருப்பார்கள்.

சீமான் கட்சி கருணாநிதியை சாதி அடிப்படையில் தாக்கி பாட்டு பாடியதாகவும் பதிலுக்கு மற்ற சாதியினர் பதிலுக்கு செய்ய குழப்பம் வரும் என்று எதிர்பார்த்து தான் அவர்கள் அப்படி செய்தார்கள் என்று தகவல் படித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
42 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் கட்சி கருணாநிதியை சாதி அடிப்படையில் தாக்கி பாட்டு பாடியதாகவும் பதிலுக்கு மற்ற சாதியினர் பதிலுக்கு செய்ய குழப்பம் வரும் என்று எதிர்பார்த்து தான் அவர்கள் அப்படி செய்தார்கள் என்று தகவல் படித்தேன்.

உற‌வே காமெடி ப‌ண்ண‌ வேண்டாம்😁

அப்ப‌டி பார்த்தால் ADMK  மேடைக‌ளில் இந்த‌ பாட்டு தொட‌ர்ந்து போட்ட‌வை அம்மையார் ஜெய‌ல‌லிதா கால‌த்தில் 

2011முத‌ல‌மைச்ச‌ர் ஆனா

 தேமுதிக்கா எதிர் க‌ட்சி

2016க‌ளில்ADMK மீண்டும் ஆட்சிய‌ பிடிச்ச‌து

அப்ப‌டி பார்த்தால் இந்த‌ பாட்டின் மூல‌ம்  ம‌க்க‌ள் ADMK  தோக்க‌டிச்சு இருக்க‌னுமே 😁

இந்த‌ தொகுதிக்கு  திமுக்கா 250 கோடி காசு செல‌வு செய்து இருக்கு...................ADMKக்கு ஓட்டு போட்ட‌வ‌ர்க‌ள் கூட‌ 2000ரூபாய் கொடுத்தால் திமுக்கா கொள்ளை கூட்ட‌த்துக்கும் ஓட்டு போடுவின‌ம்...........................

இந்த‌ பாட்டு த‌மிழ் நாட்டை தான்டி உல‌க‌ அள‌வில் போய் சேர்ந்து விட்ட‌து.........................க‌ருணாநிதி ஆபாச‌ பெண்க‌ள் வீட்டுக்கு போய் வ‌ந்து விட்டு காசு கொடுக்காம‌ ஓடி வ‌ந்த‌வ‌ர்

சோடா கொம்ப‌னில‌ இள‌ம் வ‌ய‌தில் வேலை பார்த்து விட்டு த‌ழிழ் நாட்டுக்கு ம‌ஞ்ச‌ல் துனி வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ருக்கு 

இந்த‌ன‌ ஆயிர‌ம் கோடி காசு எப்ப‌டி எங்கு இருந்து வ‌ந்த‌து..................இதுக்கு யாரும் ப‌தில் சொல்ல‌ட்டும்😉...................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் கட்சி கருணாநிதியை சாதி அடிப்படையில் தாக்கி பாட்டு பாடியதாகவும் பதிலுக்கு மற்ற சாதியினர் பதிலுக்கு செய்ய குழப்பம் வரும் என்று எதிர்பார்த்து தான் அவர்கள் அப்படி செய்தார்கள் என்று தகவல் படித்தேன்.

அப்படி இருக்காது என்று நினைக்கின்றேன். ஆனால், இந்த சவுக்குகள், சாட்டைகள், தீப்பொறிகள், கழகப் பேச்சாளர்கள் என்று எல்லோரும் மிகவும் தரம் தாழ்ந்தே மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் பேசி வருகின்றனர். எந்த தலைவரும் இதைக் கட்டுப்படுத்துவது போல தெரியவில்லை. தலைவர்களும் தரம் தாழ்ந்தே பேசுகின்றனர், போகின்றனர். எல்லோருமே.

ஒரு மலிவான சமுதாயம் மலிவானதாகவே இருக்கின்றது.

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

உற‌வே காமெடி ப‌ண்ண‌ வேண்டாம்😁

😄

வட்சப் குறுப்பில் வந்த தகவல் உறவே

5 hours ago, ரசோதரன் said:

அப்படி இருக்காது என்று நினைக்கின்றேன். ஆனால், இந்த சவுக்குகள், சாட்டைகள், தீப்பொறிகள், கழகப் பேச்சாளர்கள் என்று எல்லோரும் மிகவும் தரம் தாழ்ந்தே மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் பேசி வருகின்றனர். எந்த தலைவரும் இதைக் கட்டுப்படுத்துவது போல தெரியவில்லை. தலைவர்களும் தரம் தாழ்ந்தே பேசுகின்றனர், போகின்றனர். எல்லோருமே.

ஒரு மலிவான சமுதாயம் மலிவானதாகவே இருக்கின்றது.

நன்றி
தரம் கெட்டு கீழே சென்று கொண்டிருப்பது வருத்தம் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

😄

வட்சப் குறுப்பில் வந்த தகவல் உறவே

நன்றி
தரம் கெட்டு கீழே சென்று கொண்டிருப்பது வருத்தம் 😟

அரசியல் சாக்கடை என்றாகிப்போனால் அதில் துர்நாற்றம் வரும்தானே,.. இந்த நாற்றம் இன்று நேற்று ஆரம்பமானதல்ல என்பது மட்டும் உண்மை.

.☹️

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

அப்படி இருக்காது என்று நினைக்கின்றேன். ஆனால், இந்த சவுக்குகள், சாட்டைகள், தீப்பொறிகள், கழகப் பேச்சாளர்கள் என்று எல்லோரும் மிகவும் தரம் தாழ்ந்தே மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் பேசி வருகின்றனர். எந்த தலைவரும் இதைக் கட்டுப்படுத்துவது போல தெரியவில்லை. தலைவர்களும் தரம் தாழ்ந்தே பேசுகின்றனர், போகின்றனர். எல்லோருமே.

ஒரு மலிவான சமுதாயம் மலிவானதாகவே இருக்கின்றது.

பெரும் த‌லைவ‌ர் அர‌சிய‌ல் செய்த‌ கால‌த்தில் தான் நாக‌ரிக‌மான‌ அர‌சிய‌ல் இருந்த‌து

குள்ள‌ ந‌ரி க‌ருணாநிதி அர‌சிய‌லுக்குள் வ‌ந்த‌ பிற‌க்கு தான் ஊழ‌ல் த‌னிம‌னித‌ தாக்குத‌ல்.......................இந்திரா காந்தி அம்மையாரின் ம‌ன்டைய‌ உடைச்சு ர‌த்த‌ம் வ‌ர‌ க‌ருணாநிதி அது ம‌ன்டையில் இருந்து வ‌ந்த‌ ர‌த்த‌மா அல்ல‌து வேறு இட‌த்தில் இருந்து வ‌ந்த‌ ர‌த்த‌மா என்று ட‌வில் மீனிங்கில் அசிங்க‌மாக‌ பேசின‌ க‌போதி..........................க‌ருணாநிதி அழுக்கு பிடிச்ச‌ அர‌சிய‌ல் வாதியா இருந்து ம‌றைந்து விட்டார்..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

யார் இந்தப் போக்கை ஆரம்பித்து வைத்தார்கள் என்ற தகவல்கள் எனக்குத் தெரியாது. ஆனால் முயன்றால் இதை மெதுமெதுவாக நிற்பாட்டலாம். மற்றவர்களை நிற்பாட்டு என்று சொல்வதை விட, ஒவ்வொருவரும் தன்னளவில் மாறினாலே காலப் போக்கில் ஒரு மாற்றம் வரும்.

அரசியலுக்கு மட்டும் இல்லை, இது எல்லா பொது வெளிக்கும் பொருந்தும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

ஊழ‌ல த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் அறிமுக‌ம் செய்து வைச்ச‌து க‌ருணாநிதி

பெரும் த‌லைவ‌ரை முத‌ல் முறை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌தும் க‌ருணாநிதி

ரயில் வராத தண்டவாளத்தில் தலையை வைத்து போலி அரசியல் செய்ததும் கருணாநிதி தான்

ச‌ட்ட‌சைபைக்குள் ஜெய‌ல‌லிதாவின் உடுப்பை கிழிச்ச‌தும் திமுக்கா தான்

ஒரு இன‌ம் அழியும் போது 
ம‌ழை விட்டாலும் தூவ‌ன‌ம் விடுவ‌தில்லை என்று ந‌க்க‌ல் செய்த‌தும் இதே க‌ருணாநிதி தான்

இவ‌ங்க‌ள் செய்த‌ கொடுமைக்கு தான் 10வ‌ருட‌ம் ஆட்சியில் இல்லாம‌ கூப்பில‌ இருந்த‌வை..................2011ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் இவ‌ர்க‌ள் ப‌டு தோல்வி அடைஞ்சு எதிர் க‌ட்சி அந்தேஸ்தையும் இழ‌ந்து நின்ற‌ போது உல‌க‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌கிழ்ச்சியில் மித‌ந்த‌ன‌ர்😁🥰

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ துரோக‌த்துக்கு தான் முத‌ல‌மைச்ச‌ர் ப‌த‌வில‌ இல்லாம‌ இற‌ந்து போன‌வ‌ர் . த‌க‌ப்ப‌னை புதைக்க‌ மெரினா க‌ட‌ல் க‌ரையில் இட‌ம் த‌ர‌ சொல்லி 
ஜ‌யா ப‌ழ‌னிச்சாமியிட‌ம் க‌ருணாநிதி குடும்ப‌ம் கெஞ்சினார்க‌ள்.......................

த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் ம‌ற்ற‌ க‌ட்சியின‌ர் நாக‌ரிக‌த்துட‌ன் தான் ந‌ட‌ந்து கொள்ளுகின‌ம்....................க‌ருணாநிதி வ‌ழி வ‌ந்த‌வ‌ர்க‌ள் இந்த‌ நூற்றாண்டில் திருந்த‌ வாய்ப்பில்லை.........................அதுக்கு ப‌ல‌ எடுக்காட்டுக‌ள் இருக்கு😉........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

பெரும் த‌லைவ‌ரை முத‌ல் முறை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌தும் க‌ருணாநிதி

உறவே பெரும் த‌லைவ‌ர் என்று நீங்கள் சொல்வது  உங்களது கட்சி தலைவர் சீமானை தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

உறவே பெரும் த‌லைவ‌ர் என்று நீங்கள் சொல்வது  உங்களது கட்சி தலைவர் சீமானை தானே

பெரும் த‌லைவ‌ர் காமராஜர் ஜ‌யாவை தான் சொன்னேன் ..........

இவ‌ரை தான் பெரும் த‌லைவ‌ர் என்று த‌மிழ் நாட்டில் முத‌ல‌மைச்ச‌ரா இருந்த‌ போது ம‌க்க‌ள் தொட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் வ‌ரை அழைப்பின‌ம்..................த‌மிழின‌த்துக்கு இர‌ண்டே இர‌ண்டு த‌லைவ‌ர்க‌ள் தான்

kamarajr13.jpg

1 பெரும் த‌லைவ‌ர் காமராஜர்

2 த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் 

சீமான் அண்ணாவ‌ யாரும் த‌லைவ‌ர் என்று அழைப்ப‌தில்லையே😁.................

பெரும் த‌லைவ‌ர் நாங்க‌ள் பிற‌க்கிற‌துக்கு முத‌லே இற‌ந்து விட்டார் 75வ‌ய‌தில்☹️😥....................

இனி ஒரு த‌லைவ‌ன் இப்போதைக்கு த‌மிழ் இன‌த்துக்கு கிடைக்க‌ வாய்ப்பில்லை....................கொண்ட‌ கொள்கையில் உறுதியா நின்ற‌ த‌லைவ‌ரையும் 2009ம் ஆண்டு இழ‌ந்து விட்டோம் இன்னொரு பிர‌பாக‌ர‌ன் உருவாக‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் மிக‌ குறைவு☹️

வாழ்க‌ பெரும் த‌லைவ‌ர்  புக‌ழ்🙏🙏🙏🥰

வாழ்க‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்🙏🙏🙏🥰.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

1 பெரும் த‌லைவ‌ர் காமராஜர்

நீங்கள் யாரை பெரும் தலைவர் என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பதை தெரியபடுத்தியதற்கு நன்றி. இவர்   இந்திய பாரத  ஒருமைபாட்டில் உறுதியான பற்று கொண்ட ஒருவர் என்பது அறிந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

உறவே பெரும் த‌லைவ‌ர் என்று நீங்கள் சொல்வது  உங்களது கட்சி தலைவர் சீமானை தானே

பெரும் த‌லைவ‌ர் இருந்த‌ கால‌த்தில் த‌மிழ் நாட்டில் ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ பாட‌சாலைக‌ளை க‌ட்டி பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைச்ச‌வ‌ர்

ப‌ல‌ குள‌ங்க‌ள் க‌ட்டி த‌மிழ் நாட்டை சொர்க்க‌ பூமியா வைச்சு இருந்த‌வ‌ர்..................இப்ப‌ த‌மிழ் நாட்டு குள‌ங்க‌ளில் க‌ழிவு நீர் ஓடுது

பெரும் த‌லைவ‌ர் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைச்சார் 

திருட்டு ர‌யில் க‌ருணாநிதி டாஸ்மார்க் திற‌ந்து குடிக்க‌ வைச்சார்..............க‌ருணாநிதியின் வாழ்க்கை வ‌ர‌லாற்று புத்த‌க‌த்தில் இதையும் எழுத‌னும்😡....................... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் யாரை பெரும் தலைவர் என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பதை தெரியபடுத்தியதற்கு நன்றி. இவர்   இந்திய பாரத  ஒருமைபாட்டில் உறுதியான பற்று கொண்ட ஒருவர் என்பது அறிந்துள்ளேன்.

ஓம் ஆனால் பெரும் த‌லைவ‌ர் பெரிசா ப‌டிக்க‌ வில்லை உற‌வே............ஜ‌யா செய்த‌ த‌வ‌று ஹிந்தி தினிப்பின் போது ஹிந்திய‌ எதிர்த்து இருக்க‌னும்..............இது த‌மிழ் நாடு எங்க‌ட‌ பிள்ளைக‌ளுக்கு த‌மிழும் ஆங்கில‌மும் போதும் என்று சொல்லி இருந்தால்

திருட்டு திராவிட‌ம் உருவாகி இருந்தாலும் கால‌ போக்கில் காணாம‌ போய் இருக்கும்

ஜ‌யா அப்துல் க‌லாம் ம‌ற்றும் பெரும் த‌லைவ‌ருக்கு இந்திய‌ நாட்டு ப‌ற்று அவ‌ர்க‌ளின் ர‌த்த‌தில் ஊரிய‌ ஒன்று.....................திராவிட‌ பிரிவினை வாதிக‌ள் இல்லாம‌ இருந்து இருந்தா

த‌மிழீழ‌ காற்றை இந்திரா காந்தி அம்மையார் கால‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் த‌மிழீழ‌ காற்றை ம‌ன‌ நின்ம‌தியோடு சுவாசிச்சு இருப்புன‌ம்

திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ கூட்ட‌ம் தானே அடைந்தால் திராவிட‌ நாடு இல்லையேன் சுடு காடு என்று கோச‌ம் போட்ட‌வை

க‌ட‌சியில் ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாம‌ வ‌ட‌ நாட்டானிட‌ம் ம‌ண்டியிட்டு வாழுகின‌ம்.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் யாரை பெரும் தலைவர் என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பதை தெரியபடுத்தியதற்கு நன்றி. இவர்   இந்திய பாரத  ஒருமைபாட்டில் உறுதியான பற்று கொண்ட ஒருவர் என்பது அறிந்துள்ளேன்.

எல்லா தலைவர்களுக்கும் அவர்களைப்பறிய எதிர்மறை விடயங்களும் உண்டு. அந்த வகையில்,  இந்த காமராஜர் தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர். இந திய தேசியத்தை தமிழர்கள் ஏற்று கோள்ள வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர். சென்னை மாகாணம் என று இருத்ததை “தமிழ்நாடு என்று மாற்றறுவதை பிடிவாதமாக மறுத்தவர். அதற்காக இவரது ஆட்சிக்காலத்தில் உண்ணாவிரதம் இருந்தவரை சாக விட்டவர். மொழிவாரி மாநில பிரிப்பில் பல தமிழ் நிலபரப்புகளை கேரளாவுக்கும் கரநாடகத்துக்கும் தாரை வார்த்தவர்.  தனவு வாழ் நாள் முழுவதும் தமிழ் தேசியத்தை எதிர்தத காமராஜரை பெருந் தலைவர் என சீமான் கூறுவது தனது சுயநல அரசியலுக்காகவே.  தமிழ் நாட்டின் வரலாற்றை  சரியாக படித்தால் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைத்து தலைவர்களுமே தமிழ் நாட்டுக்கு பல சிறந்த திட்டங்களையும் பல நன்மைகளையும் செய்தே உள்ளனர். 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[ இந்த காமராஜர் தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர். இந திய தேசியத்தை தமிழர்கள் ஏற்று கோள்ள வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர். சென்னை மாகாணம் என று இருத்ததை “தமிழ்நாடு என்று மாற்றறுவதை பிடிவாதமாக மறுத்தவர். அதற்காக இவரது ஆட்சிக்காலத்தில் உண்ணாவிரதம் இருந்தவரை சாக விட்டவர். மொழிவாரி மாநில பிரிப்பில் பல தமிழ் நிலபரப்புகளை கேரளாவுக்கும் கரநாடகத்துக்கும் தாரை வார்த்தவர். ]

முரண்பாண்டின் மொத்த உருவம் சீமான். அவர் தான் அப்படி என்றால் தொண்டர்களும் அப்படியே ஏற்று கொண்டுவிட்டனர். எனககு சந்தேகம் இருந்தது இவர்கள் பெரும் தலைவர் என்று சீமானை சொல்கின்றார்களா அல்லது சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரை வைத்த அண்ணாவை தான் சொல்கின்றார்களோ!  ஆனால் அப்படி எல்லாம் இல்லை தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதை  பிடிவாதமாக மறுத்த காமராசர் தான் பெரும் தலைவர்.

3 hours ago, island said:

தனவு வாழ் நாள் முழுவதும் தமிழ் தேசியத்தை எதிர்தத காமராஜரை பெருந் தலைவர் என சீமான் கூறுவது தனது சுயநல அரசியலுக்காகவே.  

புலி தலைவரை பயன்படுத்துவது போன்று.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வீரப் பையன்26 said:

க‌ருணாநிதி டாஸ்மார்க் திற‌ந்து குடிக்க‌ வைச்சார்.........

பையன் தவறான தகவல். டாஸ்மார்க் மது உற்பத்தி நிறுவனம் திறந்தது எம். ஜி. ஆர் ஆட்சி காலத்தில்.  அதனை தனியாரின் சில்லறை விற்பனை நிலையங்களூடாக டாஸ்மார்க் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மதுவை விற்க ஏற்பாடு செய்தார். பின்னர் அரசு சார்பில் டாஸ்மார்க் கடைகளை திறந்தது ஜெயலலிதா அம்மையார் காலத்தில். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவற்றை மூடாமல் தொடர்சியாக கொண்டு நடத்தினார். 

TASMAC (Tamil Nadu State Marketing Corporation) began its operations in 1983. It was established by the Government of Tamil Nadu to regulate and manage the distribution and sale of alcohol in the state.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, island said:

எல்லா தலைவர்களுக்கும் அவர்களைப்பறிய எதிர்மறை விடயங்களும் உண்டு. அந்த வகையில்,  இந்த காமராஜர் தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர். இந திய தேசியத்தை தமிழர்கள் ஏற்று கோள்ள வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர். சென்னை மாகாணம் என று இருத்ததை “தமிழ்நாடு என்று மாற்றறுவதை பிடிவாதமாக மறுத்தவர். அதற்காக இவரது ஆட்சிக்காலத்தில் உண்ணாவிரதம் இருந்தவரை சாக விட்டவர். மொழிவாரி மாநில பிரிப்பில் பல தமிழ் நிலபரப்புகளை கேரளாவுக்கும் கரநாடகத்துக்கும் தாரை வார்த்தவர்.  தனவு வாழ் நாள் முழுவதும் தமிழ் தேசியத்தை எதிர்தத காமராஜரை பெருந் தலைவர் என சீமான் கூறுவது தனது சுயநல அரசியலுக்காகவே.  தமிழ் நாட்டின் வரலாற்றை  சரியாக படித்தால் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைத்து தலைவர்களுமே தமிழ் நாட்டுக்கு பல சிறந்த திட்டங்களையும் பல நன்மைகளையும் செய்தே உள்ளனர். 

❤️............

நல்ல ஒரு கருத்து.

சமீபத்தில், 'கீற்று' இதழில் என்று நினைக்கின்றேன், காமராஜர் அவர்களுக்கு எதிராக ஒரு கட்டுரை வந்திருந்தது. அவர்கள் தீவிர இடதுசாரிகள், எழுத்திலும் கொஞ்சம் தீவிரம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். 

நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். வேறு எவரும் காமராஜரை சொந்தம் கொண்டாடக் கூடாது, அவர் காங்கிரஸின் சொத்து என்றார்..........🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டு அரசியலைக் கதைப்பதும்

வாளிக் கக்கூஸ் வண்டிலை தள்ளுவதும்

ஒரே செயல்.

இருந்தும் நம்மையும் மீறி இடையிடை தள்ளுகிறோம்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழ்நாட்டு அரசியலைக் கதைப்பதும்

வாளிக் கக்கூஸ் வண்டிலை தள்ளுவதும்

ஒரே செயல்.

இருந்தும் நம்மையும் மீறி இடையிடை தள்ளுகிறோம்.

உண்மை தான் 2009க்கு பிற‌க்கு தான் யாழில் த‌மிழ‌க‌ அழுக்கு பிடிச்ச‌ அர‌சிய‌ல் அதிக‌ம் விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து.......................அதுக்கு முத‌ல் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை யாரும் பெரிசா எட்டியும் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம்................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழ்நாட்டு அரசியலைக் கதைப்பதும்

வாளிக் கக்கூஸ் வண்டிலை தள்ளுவதும்

ஒரே செயல்.

இருந்தும் நம்மையும் மீறி இடையிடை தள்ளுகிறோம்.

தமிழ்நாட்டு, அமெரிக்க அரசியல்கள் பற்றி கதைப்பது இலகுவானது, அண்ணை. நேரமும் நல்லாவே போகும்.

இலங்கைத் தமிழ், ஈழ அரசியல் பற்றிக் கதைப்பது நமக்கு நாமே வைக்கும் சூனியம் ஆகவும் முடியலாம். சில வேளைகளில் இங்கு போட்டுத் தாக்குதாக்கென்று தாக்கிவிடுவார்கள். 'இது உனக்குத் தேவையா.....' என்று எங்களை நாங்களே பின்னர் நொந்து கேட்பதை விட, பல இடங்களில் முன்னரே உசாராக இருப்பதும் தேவையாக இருக்கின்றது............🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

எல்லா தலைவர்களுக்கும் அவர்களைப்பறிய எதிர்மறை விடயங்களும் உண்டு. அந்த வகையில்,  இந்த காமராஜர் தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர். இந திய தேசியத்தை தமிழர்கள் ஏற்று கோள்ள வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர். சென்னை மாகாணம் என று இருத்ததை “தமிழ்நாடு என்று மாற்றறுவதை பிடிவாதமாக மறுத்தவர். அதற்காக இவரது ஆட்சிக்காலத்தில் உண்ணாவிரதம் இருந்தவரை சாக விட்டவர். மொழிவாரி மாநில பிரிப்பில் பல தமிழ் நிலபரப்புகளை கேரளாவுக்கும் கரநாடகத்துக்கும் தாரை வார்த்தவர்.  தனவு வாழ் நாள் முழுவதும் தமிழ் தேசியத்தை எதிர்தத காமராஜரை பெருந் தலைவர் என சீமான் கூறுவது தனது சுயநல அரசியலுக்காகவே.  தமிழ் நாட்டின் வரலாற்றை  சரியாக படித்தால் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைத்து தலைவர்களுமே தமிழ் நாட்டுக்கு பல சிறந்த திட்டங்களையும் பல நன்மைகளையும் செய்தே உள்ளனர். 

நான் நீங்க‌ள் எழுத‌ முத‌ல் மேல‌ எழுதி இருந்தேன் . பெரும் த‌லைவ‌ர் இந்திய‌த்துக்கு அதிக‌ முக்கிய‌ம் கொடுப்ப‌ர் இந்திய‌ நாட்டு ப‌ற்று பெரும் த‌லைவ‌ரின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று🙏🙏🙏

க‌ருணாநிதிய‌ விட‌ பெரும் த‌லைவ‌ர் ந‌ல்ல‌ ம‌னித‌ர்.....................பெரும் த‌லைவ‌ர் தனக்கென்று என்னத்த சேர்த்து வைச்ச‌வ‌ர் வெறும‌ன‌ 100ரூபாய் காசும் ப‌ழைய‌ வேட்டியும் சேட்டும்

க‌ருணாநிதி ம‌றைந்த‌ போது க‌ருணாநிதி குடும்ப‌ சொத்து எவ‌ள‌வு அண்ணா.....................எதை எழுதினாலும் ஞாய‌த்தோட‌ எழுத‌னும்

பெரும் த‌லைவ‌ரை ப‌ற்றி எழுத‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ வ‌ரிக‌ள் இருக்கு🙏🥰......................

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்).  1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)  ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)ஆம் 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)  இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )  இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம்  20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)  ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) -தமிழரசு கட்சி(3) 28) வன்னி - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ( 1) 29) மட்டக்களப்பு - தமிழரசு கட்சி(2) 30)திருமலை- ஐக்கிய மக்கள் சக்தி(3) 31)அம்பாறை - தேசிய மக்கள் சக்தி( 3)  32)நுவரெலியா - ஐக்கிய மக்கள் சக்தி( 4) 33)அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி (5) 34)கொழும்பு - தேசிய மக்கள் சக்தி(11) 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் - தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி - தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசு கட்சி 42) மன்னர் - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு - தமிழரசு கட்சி 44) வவுனியா -  தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு -  தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு - தமிழரசு கட்சி 47) திருகோணமலை  - ஐக்கிய மக்கள் சக்தி 48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி   49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி  51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 5 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 1 54)தமிழரசு கட்சி - 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு - 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) - 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) -  5 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 115 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 20  
    • திலீபன் - அருந்ததி தம்பதியினர்க்கு இனிய திருமண வாழ்த்துகள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.   
    • வெற்றி பெற வாழ்த்துகள் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.