Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை

1269747.jpg ஜூலியான் அசாஞ்ச்

வாஷிங்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, தனது விடுதலைக்கு ஈடாக ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்ச் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார். அவர் இந்த வார இறுதியில் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அங்கே அவர் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திய குற்றங்களை ஒப்புக் கொள்கிறார்.

யார் இந்த அசாஞ்ச்? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜுலியன் அசாஞ்ச் கடந்த 2006-ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், இராக் போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.

இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சை கைது செய்ய கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலீஸார், ஜூலியன் அசாஞ்சை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்ச் மீது அந்த நாட்டு அரசு சுமத்தி உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது.

ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.

அவர் பிரிட்டனில் இருந்து கிளம்பியதையும் வரும் புதன்கிழமை அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதையும் விக்கிலீக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் விக்கிலீஸ்ட் எக்ஸ் சமூகவலைதளத்தில், “ஜூலியன் அசாஞ்சே விடுதலையானார். 1901 நாட்களுக்குப் பின்னர், ஜூன் 24 காலை பெல்மார்ஷ் அதிகபட்ச பாதுகாப்புச் சிறையிலிருந்து அவர் வெளியேறினார். இதுஉலகளாவிய பிரச்சாரத்தின் விளைவு.

https://www.hindutamil.in/news/world/1269747-julian-assange-freed-from-uk-prison-after-he-strikes-plea-deal-with-us-1.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிணை – சிறையிலிருந்து வெளியேறினார்.

Published By: RAJEEBAN

25 JUN, 2024 | 08:11 AM
image
 

 

விக்கிலிக்ஸ் ஸ்தாபகர்களில் ஒருவரான அசஞ்சேயிற்கு பிணைவழங்கப்பட்டுள்ளது அவர் லண்டனின் பெல்மார்ச் உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் அவர் ஸ்டான்செட் விமானநிலையத்தில் விமானத்தில் ஏறும் படங்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு பசுபிக்கில் உள்ள மரியனா தீவில் உள்ள சமஸ்டிநீதிமன்றில் அசஞ்சே நீதிமன்றத்தில் ஆஜராவார் .அவர் தேசபாதுகாப்புதகவலை சட்டவிரோதமாக பெறுவதற்கும் பரப்புவதற்கும்சதி செய்த உளவுத்துறை குற்றச்சாட்டில் குற்றத்தை  ஏற்றுக்கொள்வார் என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் பின்னர் அவர் தனது நாடான அவுஸ்திரேலியா திரும்புவார்.

https://www.virakesari.lk/article/186896

  • கருத்துக்கள உறவுகள்

Julian-Assange.jpg?resize=750,375&ssl=1

விடுதலையானார் ஜூலியன் அசாஞ்சே!

விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange)  5 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியச் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை காரணமாக, விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர்  ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்க நீதித்துறை 18 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

அதன்படி, அவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு லண்டனில் உள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பெல்மார்ஷ் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1389508

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானது எப்படி?

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்ச் விடுதலையானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க நீதித்துறையிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, ஜூலியன் அசாஞ்ச் இனியும் சிறையில் இருக்க மாட்டார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், பெர்ண்ட் டெபுஸ்மேன்
  • பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டு, அதுதொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, அவர் விடுதலையாகி பிரிட்டனிலிருந்து வெளியேறியதாக, விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேசிய ஆவணங்களை பெற்று, அதனை வெளியிட சதி செய்ததாக 52 வயதான அசாஞ்சே மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்கள் தொடர்பாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக பல ஆண்டுகளாக அமெரிக்கா வாதாடியது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரிட்டன் சிறையில் இருந்த அசாஞ்ச், அங்கிருந்து அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடி வந்தார்.

பிபிசி-யின் அமெரிக்க கூட்டாளியான சி.பி.எஸ் ஊடகம், அசாஞ்ச் அமெரிக்க காவலில் இனியும் இருக்க மாட்டார் என்று கூறியுள்ளது.

நீதித்துறை அளித்துள்ள கடிதத்தின்படி, அசாஞ்ச் ஆஸ்திரேலியா திரும்புவார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பெல்மார்ஷ் சிறையின் சிறிய அறையில் 1,901 நாட்கள் கழித்தநிலையில், திங்கட்கிழமை அங்கிருந்து அவர் வெளியேறியதாக, எக்ஸ் சமூக ஊடகத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“அவர் பின்னர் மதியத்தில் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டு அங்கிருந்து பிரிட்டனுக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா திரும்புவார்,” என விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோவில், நீல நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ள ஜூலியன் அசாஞ்ச், விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் காரில் சென்றார்.

இந்த வீடியோவை பிபிசி-யால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

 
விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்ச் விடுதலையானது எப்படி?

பட மூலாதாரம்,REUTERS

ஆஸ்திரேலியா கூறியது என்ன?

அசாஞ்ச்-இன் ஆதரவாளர்களுக்கு எக்ஸ் சமூக ஊடகத்தில் நன்றி தெரிவித்துள்ள அவருடைய மனைவி ஸ்டெல்லா அசாஞ்சே, “இது நனவாக பல ஆண்டுகளாக அணிதிரண்டவர்களுக்கு நன்றி,” என தெரிவித்துள்ளார்.

தன் குற்றங்களை ஒப்புகொள்வதாக ஜூலியன் செய்துகொண்ட ஒப்பந்தம், ஜூன் 26, புதன் கிழமையன்று வடக்கு மரியானா தீவுகளில் உள்ள நீதிமன்றத்தில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைதூர பசிபிக் தீவான வடக்கு மரியானா, ஹவாய் அல்லது வட அமெரிக்காவில் (Continental US) உள்ள கூட்டாட்சி நீதிமன்றங்களை விட ஆஸ்திரேலியாவுக்கு சிறிது அருகில் உள்ளது.

ஆஸ்திரேலியா அரசின் செய்தித்தொடர்பாளர், “இந்த வழக்கு நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்கப்பட்டதாக,” கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

சி.பி.எஸ் ஊடகம் அசாஞ்ச்சின் வழக்கறிஞர் ரிச்சர்ட் மில்லரை தொடர்புகொண்ட போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள அவருடைய வழக்கறிஞரையும் பிபிசி தொடர்புகொண்டது.

ஜூலியன் அசாஞ்ச் மற்றும் அவருடைய வழக்கறிஞர்கள், அவருக்கு எதிரான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர்.

அசாஞ்ச்-க்கு எதிரான விசாரணையைக் கைவிடுமாறு ஆஸ்திரேலியாவின் கோரிக்கையைத் தான் பரிசீலித்துவருவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.

அதற்கு அடுத்த மாதமே, தான் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக புதிதாக அசாஞ்ச் மேல்முறையீடு செய்யலாம் என, பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, தன் மீதான விசாரணை எப்படி நடைபெறும் மற்றும் தன்னுடைய பேச்சு சுதந்திரம் மீறப்படுமா என்பது குறித்து அமெரிக்கா அளித்துள்ள உத்தரவாதங்களை அவர் சவால் விடுக்க அனுமதித்தது.

இந்த உத்தரவையடுத்து, அசாஞ்ச்-இன் மனைவி ஸ்டெல்லா, செய்தியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பேசும்போதும் பைடன் நிர்வாகம் “இந்த அவமானகரமான விசாரணையிலிருந்து ஒதுங்கி நிற்க வேண்டும்,” என்று கூறினார்.

 
விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்ச் விடுதலையானது எப்படி?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஸ்டெல்லா அசாஞ்சே

மற்ற குற்றச்சாட்டுகள்

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நடைபெற்ற போர்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ராணுவ ஆவணங்கள் மற்றும் ராஜதந்திர செய்திகளை வெளியிட்டதற்காக, உளவுச் சட்டத்தின் கீழ் 18 வழக்குகளில் அசாஞ்ச்-ஐ விசாரிக்கவே அமெரிக்க வழக்கறிஞர்கள் முதலில் விரும்பினர்.

சுமார் ஒரு கோடி ஆவணங்களை வெளியிட்டதாக 2006-இல் அசாஞ்ச் நிறுவிய விக்கி லீக்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து பின்னர், “அமெரிக்க வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள் மீது பெரியளவில் நடைபெற்ற சமரசம்,” என அமெரிக்க அரசு கூறியது.

கடந்த 2010-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் ராய்ட்டர் செய்தி முகமையின் நிருபர்கள் இரண்டு பேர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இராக் மக்கள் பாக்தாத்தில் கொல்லப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது.

அசாஞ்ச்சின் அதிகம் அறியப்பட்ட கூட்டாளியான அமெரிக்க ராணுவ உளவு ஆய்வாளரான செல்ஸீ மேன்னிங்-க்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இதையடுத்து 2017-இல் அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா அவருடைய தண்டனையை குறைத்தார்.

அசாஞ்ச் மீது சுவீடனில் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்குகளும் உள்ளன, அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

சுவீடனில் உள்ள இந்த வழக்கு தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப வழிவகுக்கும் என்பதால், லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தஞ்சம் புகுந்தார்.

புகார் அளிக்கப்பட்டதிலிருந்து அதிக காலமானதாகக் கூறி, 2019-ஆம் ஆண்டில் அந்த வழக்கை ஸ்வீடன் நீதித்துறை கைவிட்டது. ஆனால், ஜூலியன் அசாஞ்ச்-ஐ லண்டன் அதிகாரிகள் காவலில் எடுத்தனர். அவர் நீதிமன்றத்தில் சரணடையாததால் சுவீடனுக்கு நாடு கடத்தப்பட்டார்.

நீண்ட கால சட்டப் போராட்டமாக இருந்தாலும், அவர் பொதுவெளியில் மிக அரிதாகவே காணப்பட்டார். பல ஆண்டுகளாக அவருடைய உடல்நிலை மோசமானதாகவும் சிறையில் 2021-ஆம் ஆண்டில் அவருக்கு லேசான பக்கவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

  • கருத்துக்கள உறவுகள்

அசஞ்சேயின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களிற்கு நன்றி - ஸ்டெல்லா அசஞ்சே

Published By: RAJEEBAN   25 JUN, 2024 | 12:27 PM

image

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்களில் ஒருவரான  ஜூலியன் அசஞ்சேயின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களிற்கு அவரின் மனைவி ஸ்டெல்லா நன்றியை தெரிவித்துள்ளார்.

உங்கள் பேராதரவு குறித்து நாங்கள் எவ்வளவு நன்றியுடையவர்களாக உள்ளோம் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பல வருடங்களாக அவரின் விடுதலைக்காக நீங்கள் அணிதிரண்டிருக்கின்றீர்கள் இதனை சாத்தியமாக்கியிருக்கின்றீர்கள் என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் பிறந்த சட்டத்தரணியான ஸ்டெல்லா 2015 முதல் அசஞ்சேயுடன் உறவில் உள்ளார்.

ஸ்டெல்லா அசஞ்சேயின் சட்டகுழுவில் இணைந்தவேளை இருவரும் முதலில் சந்தித்தனர். அசஞ்சே சிறையில் இருந்தவேளை இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இதேவேளை தனது மகனின் மிக நீண்டகால சட்டபோராட்டம் முடிவிற்கு வருவது குறித்து ஜூலியன் அசஞ்சேயின் தாயார் கிறிஸ்டின் அசஞ்சே நன்றியை தெரிவித்துள்ளார்.

எனது மகனின் சோதனைகள் இறுதியாக முடிவிற்கு வந்தது குறித்து நான் நன்றியுடையவளாகயிருக்கின்றேன். இது அமைதியான இராஜதந்திர முயற்சிகளின் ஆற்றலையும் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பலர் எனது மகனின் சூழ்நிலையை தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரல்களை முன்னிறுத்த பயன்படுத்தியுள்ளனர். எனவே ஜூலியனின் நலனிற்கு முதலிடம் கொடுத்த கண்ணிற்கு தெரியாத கடின உழைப்பாளிகளிற்கு நான் நன்றி உடையவனாகயுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகனிற்காக பரப்புரை செய்தமைக்காக அசஞ்சேயின் தந்தை ஜோன்சிப்டன் அவுஸ்திரேலிய  அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/186923

  • கருத்துக்கள உறவுகள்

அசாஞ், குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பேரத்தின் படியே (plea bargain) வெளியே வருவது, உண்மையான ஊடகவியலாளர் / பத்திரிகை சுதந்திரத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டு உள்ளது.
 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய திரும்புகின்றார் ஜூலியன் அசஞ்சே

Published By: RAJEEBAN

26 JUN, 2024 | 02:07 PM
image
 

 விக்கிலீக்ஸ் ஸதாபகர்களில் ஒருவரான ஜூலியன் அசஞ்சே நாடு திரும்பவுள்ளமை குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது குடும்பத்தினருடன் இணைவதற்காக அவர் அவுஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருக்கின்றார் என்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது நடவடிக்கைகள் பற்றிபல கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அவரது விவகாரம் நீண்டநாட்கள் நீடித்துள்ளது என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து தடுத்துவைப்பதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என நான் தொடர்ச்சியாக தெரிவித்துவந்துள்ளேன்இநாங்கள் பதவியேற்ற பின்னர்  கடந்த இரண்டு வருடங்களாக எங்கள் அரசாங்கம் இந்த விடயத்திற்கு தீர்வை காண்பதற்காக பல மட்டங்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.உரிய வழிமுறைகள் அனைத்தையும் பயன்படுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்கிலீக்ஸ் நிறுவுனர்Julian Assange  அமெரிக்க நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை அவர் ஆஸ்திரேலியா திரும்புகின்றார். இதனையடுத்து இன்றிரவு கன்பராவில் விசேட ஊடக சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தன்னை விடுதலை செய்வதாக அமெரிக்கா உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது இராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை துரடயைn யுளளயபெந ஒப்புக்கொண்டார்.

இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜூலியன் அசஞ்சே Julian Assange  இன்று அமெரிக்கா புறப்பட்டார்.

அமெரிக்காவின் பசுபிக் தீவுகள் பிராந்தியமான சைபன் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் ஜூலியன் அசஞ்சே Julian Assange மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணிநேரம் நடைபெற்றது.

இதன்போது அமரிக்காவை உளவு பார்த்தது இராணுவ ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்டவற்றை நீதிபதியின்முன் ஒப்புக்கொண்ட அசாஞ்சே அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே பேசுவதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தான் செய்தது எப்படி குற்றமாகும் என்று வாதிட்டார்.

விசாரணையின் இறுதியில் ஜூலியன் அசஞ்சே Julian Assange குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஏற்கனவே லண்டன் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்ததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

https://www.virakesari.lk/article/187020

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Kadancha said:

அசாஞ், குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பேரத்தின் படியே (plea bargain) வெளியே வருவது, உண்மையான ஊடகவியலாளர் / பத்திரிகை சுதந்திரத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டு உள்ளது.
 

இவர் விடுதலைக்கான உண்மையான காரணம் சந்தையில் மலிய வெளிவரும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகமெலாம் அறிந்த உண்மை அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஈராக்கில் என்ன செய்தது என்பது. அதற்காக ஜூலியன் அசாஞ்செயை சிறை வைப்பதாலோ அல்லது அவரை நிர்பந்தித்து செய்யாத குற்றத்தை ஒப்புவிக்க வைத்து விடுதலை செய்வதாலோ அமெரிக்கா செய்தவை ஒன்றும் செய்யவில்லை என்றாகாது. அது தொடர்ந்து தனது நலனுக்காக பல நாடுகளை பகடை காயாக பயன்படுத்திக்கொண்டே வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

449172807_871532615011712_10100223060335

 

449173904_871579631673677_22153732176141

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க.. மேற்குலகின் சுதந்திரங்கள் இந்தளவு தான். அவர்களின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றினால்.. சிறை தான். அதுவும் பெண் வன்முறை குற்றம் உட்பட. இவர் மீது சோடிக்கப்பட்ட குற்றங்கள் எவை என்பதை எண்ணிப்பாருங்கள். புரியும் இவங்கட மக்களுக்கான சுதந்திரத்தின் தார்ப்பரியம். 

  • கருத்துக்கள உறவுகள்

 

WIKILEAKS ஜுலியன் அசாஞ் கைது

 

பல வருடங்களுக்கு முன்பு.....

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக சுதந்திரத்தில் அமெரிக்கா 55 ஆவது இடத்தில் உள்ளதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு கூறுகிறது.

https://rsf.org/en/index

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.