Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செல்லப்பிராணி
------------------------
நான் அங்கு போன போது அது என்னைப் பார்த்து இரவில் வந்த ஒரு திருடனைப் பார்த்து குலைப்பது போல குலைத்தது. பின்னர் அவர்கள் சில வார்த்தைகள் அதட்டிச் சொன்ன பின் தான் அது என்னை உள்ளே விட்டது. என்னை முழுவதுமாக மோப்பம் பிடித்து வைத்துக் கொண்டது. அதை நாய் என்று சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு ஒரு பெயர் இருந்தது. அதன் பெயர் சொல்லியே அதைக் குறிப்பிட வேண்டும் என்பது அங்கு ஒரு விதியாக இருந்தது.

நான் அங்கு பத்து நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அங்கு போய் அடுத்த நாளிலிருந்தே அது என்னுடன் மிகவும் நெருங்கி விட்டது. காலையில் கண் விழித்தால் அது கட்டிலின் அருகில் நிற்கும். எங்கு அமர்ந்தாலும் அது அருகே வந்து முதுகால் தேய்த்து விட்டு என் காலுடன் ஒட்டி ஒட்டி நிற்கும். தடவிக் கொடுத்தால் கிறங்கிக் கிடக்கும். இரவிலும் ஒரு தடவை கட்டிலடிக்கு வந்து நான் அங்கு தான் படுத்திருக்கின்றேன் என்று உறுதிப்படுத்தி விட்டுப்போகும். அந்த வீட்டவர்கள் மீதும் அது இதேயளவு பாசத்தை கொட்டிக் கொண்டிருந்தது.

அங்கிருந்து கிளம்பும் நாளன்று அது வீட்டு வாசலில் குறுக்காக படுத்திருந்தது. இந்த வீட்டிலிருந்து எவரையும் போக விடமாட்டேன் என்பது போல. கடும் போராட்டத்தின் பின் நான் காரில் ஏற, அதனால் ஒன்றும் முடியாமல் போக, ஓவென்று அழுதது. பிராணி ஒன்று அழுததை அன்று தான் நேரில் பார்த்தேன்.

சில மாதங்களில் பின் ஒரு நாள் அவர்கள் என்னை தொலைபேசியில் கூப்பிட்டனர். அதை அன்று கருணைக்கொலை செய்ய வேண்டி இருந்ததாகச் சொன்னர். ஒரு தீரா நோய், வேறு வழி எதுவும் இருக்கவில்லை என்றனர். அழுது தீர்த்தனர். அப்படிக்கூட என்னால் என் நினைவை தீர்க்க முடியவில்லை. 'விட்டுப் போகாதே......' என்று அழுத அதன் கண்கள் என்னை விட்டுப் போகாமல் எல்லா இடமும் கூடவே வந்து கொண்டிருந்தது.

அடுத்த வாரம். அங்கேயிருந்துது இன்னொரு அழைப்பு. இந்த தடவை வீடியோ அழைப்பு.  புதிதாக ஒரு குட்டி அங்கு நின்றது. குட்டிக்கும் அதே பெயர் தான். 'குட்டி ஓடுது, குட்டி ஒளியுது, குட்டி ஒழுங்காகச் சாப்பிடுதில்லை, குட்டிக்கு பயிற்சி கொடுக்க வேண்டும், ...............' இப்படியே பல விதமாக சொல்லி, அதன் பின்னால் ஓடி ஓடி காட்டிக் கொண்டிருந்தனர்.

செல்லப்பிராணிகளை மனிதர்கள் எப்படி தொடர்ந்தும் உயிருக்கு உயிராக நேசித்து வளர்க்கின்றார்கள் என்ற கேள்வி அன்றுடன் என்னை விட்டு போனது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

நான் அங்கு போன போது அது என்னைப் பார்த்து இரவில் வந்த ஒரு திருடனைப் பார்த்து குலைப்பது போல குலைத்தது.

நாய்களை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். அவை உடனடியாகவே கண்டு பிடித்துவிடும்.

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

அங்கிருந்து கிளம்பும் நாளன்று அது வீட்டு வாசலில் குறுக்காக படுத்திருந்தது. இந்த வீட்டிலிருந்து எவரையும் போக விடமாட்டேன் என்பது போல. கடும் போராட்டத்தின் பின் நான் காரில் ஏற, அதனால் ஒன்றும் முடியாமல் போக, ஓவென்று அழுதது. பிராணி ஒன்று அழுததை அன்று தான் நேரில் பார்த்தேன்.

இப்படித் தான் 2015இல் அவுசில் உள்ள அண்ணனின் வீட்டுக்குப் போயிருந்தேன்.எனது மனைவிக்கு அலேர்ஜி பிரச்சனை இருந்தபடியால் நாய் பூனைகளை அண்டுவதில்லை.

நாங்கள் அண்டாவிட்டாலும் அதுவாகவே வந்து நாம் தங்கிய கிடக்கும் போகும்.

பெரிதாக உறவாடவில்லை.

இருந்தாலும் நாங்கள் பயணமாகும் அன்று கட்டிலில் இரு கால்களையும் போட்டு மெதுவாக அனுங்கிக் கொண்டிருந்தது.பெட்டிகளை அடுக்கி புறப்படும் போது வெகு நேரமாக அனுங்கி அனுங்கி உருண்டு பிரண்டு கொண்டே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது தங்கையின் வீட்டில் இருக்கும் நாயுடன் இப்பொழுது நன்கு பழகி விட்டேன். வெளியே போய் வந்தால் பாய்ந்து பிடிக்கும், முன்னங்கால்காலால் தாவி பாயும். வீட்டுக்கு முன்னால் இருக்கும் மா மரத்து நிழலின் கீழ் இருவரும் விளையாடுவோம்.  மரத்தில் ஓடும் அணில், பறக்கும் வண்ணத்துபூச்சி, சிறு பறவைகள், எல்லாவற்றையும் விரட்டி பிடிக்கும்.  

நாய்களை எவ்வாறு கருணை கொலை செய்வார்கள்? இதற்கு சட்டரீதியனா முறைககள் என்ன? 
@Justin(ஜஸ்டின் ஐயா மிருக வைத்தியர் என்ற படியால் இதை பற்றி மேலதிக தகவல்களை தரவும்) 

இங்கு இலங்கையில் ஒரு சிறிய புத்தகம் வைத்துள்ளோம் அதில் பெயர் விபரங்கள் உண்டு, ஊசி போட்ட தினமும் குறிப்பிட்டு மிருக வைத்தியர் கையெழுத்து வைத்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன் என்னுடய மேலதிகாரி ஒர் பெண், 
ஒர் நாள் இவர்  தன் நாயை பற்றி கூறும்போது " I will put her sleep" என‌ ஆங்கிலத்தில் கூறினார். அதன் அர்த்தம் அப்பொழுது எனக்கு விளங்கவில்லை. நாயை கருணை கொலை செய்யப் போகிறதைதான் இப்படி கூறியிருப்பார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இப்படித் தான் 2015இல் அவுசில் உள்ள அண்ணனின் வீட்டுக்குப் போயிருந்தேன்.எனது மனைவிக்கு அலேர்ஜி பிரச்சனை இருந்தபடியால் நாய் பூனைகளை அண்டுவதில்லை.

நாங்கள் அண்டாவிட்டாலும் அதுவாகவே வந்து நாம் தங்கிய கிடக்கும் போகும்.

பெரிதாக உறவாடவில்லை.

இருந்தாலும் நாங்கள் பயணமாகும் அன்று கட்டிலில் இரு கால்களையும் போட்டு மெதுவாக அனுங்கிக் கொண்டிருந்தது.பெட்டிகளை அடுக்கி புறப்படும் போது வெகு நேரமாக அனுங்கி அனுங்கி உருண்டு பிரண்டு கொண்டே இருந்தது.

இவ்வளவு நாள் இருந்தீர்களே இன்றைக்காகிலும் ஒரே ஒரு துண்டு பிஸ்கட் உங்கள் கையால் தந்து விட்டுப் போவீர்களா என்று கேட்டிருக்கும் .......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

நாய்களை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். அவை உடனடியாகவே கண்டு பிடித்துவிடும்.

🤣..........

எழுதி விட்டு திருப்பி வாசித்துப் பார்க்கும் போதே தெரிந்தது........ இந்த இடத்தில் ஒரு குத்து விழும் என்று......🤣.

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

பல வருடங்களுக்கு முன் என்னுடய மேலதிகாரி ஒர் பெண், 
ஒர் நாள் இவர்  தன் நாயை பற்றி கூறும்போது " I will put her sleep" என‌ ஆங்கிலத்தில் கூறினார். அதன் அர்த்தம் அப்பொழுது எனக்கு விளங்கவில்லை. நாயை கருணை கொலை செய்யப் போகிறதைதான் இப்படி கூறியிருப்பார் என நினைக்கிறேன்.

இப்படித்தான், இதே வார்த்தைகளைத் தான், இங்கும் சொல்லியிருந்தனர்..........😔.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இருந்தாலும் நாங்கள் பயணமாகும் அன்று கட்டிலில் இரு கால்களையும் போட்டு மெதுவாக அனுங்கிக் கொண்டிருந்தது.பெட்டிகளை அடுக்கி புறப்படும் போது வெகு நேரமாக அனுங்கி அனுங்கி உருண்டு பிரண்டு கொண்டே இருந்தது.

4 hours ago, suvy said:

இவ்வளவு நாள் இருந்தீர்களே இன்றைக்காகிலும் ஒரே ஒரு துண்டு பிஸ்கட் உங்கள் கையால் தந்து விட்டுப் போவீர்களா என்று கேட்டிருக்கும் .......!  😂

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும், பூனைகளுக்கும் இடையில் இருக்கும் ஒரு வித்தியாசத்தை இப்படிச் சொல்வார்கள்: 

தன்னை இப்படி கவனித்துக் கொள்ளும் இந்த வீட்டு மனிதர்கள் கடவுள்கள் என்று நினைக்குமாம் அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்.

இந்த வீட்டு மனிதர்கள் தன்னை இப்படிக் கவனித்துக் கொள்வதால் தான் ஒரு கடவுள் என்று நினைத்துக் கொள்ளுமாம் அந்த வீட்டில் வளர்க்கப்படும் பூனை......🤣.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டிலும் ஒரு நாலுகால் ஜீவன் லூனா எனும் பெண் நாய் .....பதினோரு வருடங்களாக எங்க ளுடன் வாழ்கிறது . வீட்டிற்கு வருவோரை முதல் ஆளாகி வரவேற்கும். கீழ் தளத்தில் நின்றாலும்   மகனின்   கார் சத்தம்  தெருமுனையில் வரும்போது மேலே ஓடிச்சென்று   வாலை ஆட்டிக் கொண்டு நிற்கும். எந்த சாமத்தில் வந்தாலும்  . ஒரு குண்டூசி சத்தம் கேடடாலும் அலெர்ட் ஆகி விடும். தெரியாதவர்களையும்   கண்டு வாலாட்டும் தபாற்காரன் . ups காரன் என்பவர்களையும் கண்டு  வரவேற்கும் ( கள்ளன் வந்தாலும் வரவேற்கும்) பிழை செய்தால்பம்மி கொண்டு நிற்கும். பேரப்பிள்ளைகள் வாலைப்பிடித்து   இழுத்து என்ன சித்ரவதை செய்தலும்  சகித்து கொள்ளும். பேத்தி சிறுவயதில் சிலசமயம் அதைக் கட்டிபிடித்துஉறங்கி விடுவாள் ...பாவம் தற்போதுகண் தெரியாமல் போய் விட்ட்து  ஒருமாற்றுவழியும் இல்லையாம். சிலர் கருணைக் கொலைக்கு அனுப்ப சொன்னார்கள். மகன்  அடிக்காத குறை அது தன்னுடனே இருக்கட்டும் என்பான் நடக்க முடியாவிலும் தூக்கி கொண்டு மேல் தளத்துக்கு வருவான். 
  .   குளிப்பாட்டி  தனித் துவாய்   வைத்து துடைத்து விடுவான். 
வித விதமாய் ஷாம்போ  கால நகம் வெட்டிட கத்தரிகோல்   மாதாந்த வருடாந்த check up  எல்லாம்  செய்வான்.  தட்டித்தடுமாறி நடக்கிறது ஆனால் உணவு வைக்கும் இடம் தண்ணீர்வைக்கும் இடம் மல ஜலத்துக்கு "சிக்னல்" என்பன மாறவில்லை. படியில் இறங்க ஸ்டெப்ஸ் என்று சொன்னால் நிதானமாக கால்வைக்கும். வாழும் வரை வாழட்டும். நன்றி உள்ள பாசக்கார ஜீவன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

இவ்வளவு நாள் இருந்தீர்களே இன்றைக்காகிலும் ஒரே ஒரு துண்டு பிஸ்கட் உங்கள் கையால் தந்து விட்டுப் போவீர்களா என்று கேட்டிருக்கும் .......!  😂

எங்களுக்கு மீனைத் தின்றுவிட்டு முள்ளைப் போடுவதும்

இறைச்சியைத் தின்றுவிட்டு எலும்பைப் போடுவதுமே பழக்கம்.

இதனாலேயே நாங்கள் போனதுமே நாய்க்கு தனியாக சாப்பாடு இருக்கிறது எதுவுமே கொடுக்க வேண்டாம் என்று அண்ணன் சொல்லிவிட்டார்.

மனைவியும் அலோர்ஜி என்று சத்திர சிகிச்சை வரை போனபடியால் நாய் பூனை மட்டுமல்ல இலைதுளிர்காலம் என்றாலும் வெளியே போகும்போது மூக்கை மூடி கனக்க அலுவல் பார்க்க வேண்டும்.

மகனுக்கு பிள்ளைகளுக்கு நாய் விருப்பம்.

நாய் வாங்கினால் இந்தப் பக்கம் வரமாட்டேன் என்று மனைவி பயமுறுத்தி வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நாய், பூனைகளின் மயிர் கொட்டும் பிரச்சினை உள்ளதால் அவற்ரை வீட்டில் வளர்க்க விருப்பம் இல்லை. பிள்ளைகள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்கள். சம்மதிக்கவில்லை. தெரிவில் போகும் நாய்களை பார்த்து ரசிப்பதோடு எனது நாய்ப் பாசம் முடிந்துவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்களுக்கு மீனைத் தின்றுவிட்டு முள்ளைப் போடுவதும்

இறைச்சியைத் தின்றுவிட்டு எலும்பைப் போடுவதுமே பழக்கம்.

இதனாலேயே நாங்கள் போனதுமே நாய்க்கு தனியாக சாப்பாடு இருக்கிறது எதுவுமே கொடுக்க வேண்டாம் என்று அண்ணன் சொல்லிவிட்டார்.

இங்கு நாய்க்கு என்று ஸ்பெஷல் சாப்பாடு  சீரியல் மாதிரி உண்டு ( ஒவ்வொரு வயதுக்குஒவ்வொரு மாதிரி) ...அதை விட காய்ந்த ஈரல்  ஸ்நாக்  என்று வித விதமாய் உண்டு .  அவையெல்லாம். வாங்கி கொடுப்பான் என் மகன் .  தகப்பனுக்கு   விருப்பமில்லை கெஞ்சி கூத்தாடிதான்  குட்டியாக கொண்டுவந்தான். இப்பொது அவர் ஒரு நாள் பார்க்கவிடாலும் கவலைப்பட்டு போய்விடுவார் பார்க்க .மகனுக்கு தெரியாம இறைச்சி துண்டை கழுவிப்போட்டு கொடுப்பார். இவர் சாப்பிட போனால் பக்கத்தில் வந்து இருக்கும்.  மகனின் கட்டிலுக்கு பக்கத்தில் மெத்தை போன்ற ஸ்பெஷல்படுக்கையில் தான் உறக்கம்.  மகன் இருந்தால் எங்களைத் தேடாது  அவன் காலடியிலேயே .

4 minutes ago, தமிழ் சிறி said:

நாய், பூனைகளின் மயிர் கொட்டும் பிரச்சினை உள்ளதால் அவற்ரை வீட்டில் வளர்க்க விருப்பம் இல்லை. பிள்ளைகள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்கள். சம்மதிக்கவில்லை. தெரிவில் போகும் நாய்களை பார்த்து ரசிப்பதோடு எனது நாய்ப் பாசம் முடிந்துவிடும். 

வாழ்க்கையின்பாதி  மகிழ்ச்சியை  இழந்துவிடீர்கள். எவ்வ்ளவு சோர்ந்து வேலையால் வந்தாலும் அதை கட்டி தழுவ களைப்பெல்லாம் போய்  விடும். சாமத்தில் வேலையால் வர விழித்திருந்து  வாசலில்  வாலாட்டி வரவேற்கும். மன இறுக்கம் குறையும். பந்தை தூக்கிப்போட கவ்வும் லாவகமே தனி மகிழ்ச்சி. இங்கு வெள்ளைக்களின்   குழந்தைகளுக்கு காவல். ஒருத்தரும் அண்ட விடாது. பக்கத்திலே இருக்கும். பழக்குவதில் இருக்கிறது பண்பு.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

பதினோரு வருடங்களாக எங்க ளுடன் வாழ்கிறது .

12 வருடங்கள் தான் நாய்களுக்கான வாழ்க்கை என்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாய், பூனைகளின் மயிர் கொட்டும் பிரச்சினை உள்ளதால் அவற்ரை வீட்டில் வளர்க்க விருப்பம் இல்லை. பிள்ளைகள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்கள். சம்மதிக்கவில்லை. தெரிவில் போகும் நாய்களை பார்த்து ரசிப்பதோடு எனது நாய்ப் பாசம் முடிந்துவிடும். 

என் வீட்டிலும் இரு பிள்ளைகளும் தலையால் கிடங்கு, கிணறு என்று தோண்டிப் பார்த்தார்கள். மனைவி அசரவேயில்லை. 

ஆனாலும் இப்ப மூன்று வருடங்களாக ஒரு தெருப்பூனை (stray cat) அப்படியே வீட்டுடன் ஒட்டிவிட்டது. அது அதிகமான நேரங்களில் வீட்டிற்கு வெளியிலேயே சுற்றிச் சுற்றி இருக்கின்றது. விஜய்யின் 'லியோ' படம் வந்த பின், படம் பிடிக்கா விட்டாலும் இந்தப் பெயர் பிடித்திருந்தபடியால், தெருப்பூனை இப்போது லியோ ஆகிவிட்டது.

லியோ பற்றி சில கதைகள் எழுதலாம். அந்தளவிற்கு அது விசயம் வைத்திருக்கின்றது.

ஒரு நாள் எங்கள் வீட்டு முன்பக்கத்தில் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு சிறு பிராணியின் மாமிசம் இருந்தது. பின்னர் ஒரு நாளும் இப்படியே இருந்தது. விசயம் என்னவென்றால், இந்த வகை பூனைகள் அவை அண்டி வாழும் மனிதர்களுக்கு இப்படித்தான் தங்கள் நன்றியை தெரிவித்து கொள்ளுமாம். லியோ எங்களுக்கு உணவு தேடிக் கொடுக்கின்றது..........❤️.     

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரசோதரன் said:

என் வீட்டிலும் இரு பிள்ளைகளும் தலையால் கிடங்கு, கிணறு என்று தோண்டிப் பார்த்தார்கள். மனைவி அசரவேயில்லை. 

ஆனாலும் இப்ப மூன்று வருடங்களாக ஒரு தெருப்பூனை (feral cat) அப்படியே வீட்டுடன் ஒட்டிவிட்டது. அது அதிகமான நேரங்களில் வீட்டிற்கு வெளியிலேயே சுற்றிச் சுற்றி இருக்கின்றது. விஜய்யின் 'லியோ' படம் வந்த பின், படம் பிடிக்கா விட்டாலும் இந்தப் பெயர் பிடித்திருந்தபடியால், தெருப்பூனை இப்போது லியோ ஆகிவிட்டது.

லியோ பற்றி சில கதைகள் எழுதலாம். அந்தளவிற்கு அது விசயம் வைத்திருக்கின்றது.

ஒரு நாள் எங்கள் வீட்டு முன்பக்கத்தில் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு சிறு பிராணியின் மாமிசம் இருந்தது. பின்னர் ஒரு நாளும் இப்படியே இருந்தது. விசயம் என்னவென்றால், இந்த வகை பூனைகள் அவை அண்டி வாழும் மனிதர்களுக்கு இப்படித்தான் தங்கள் நன்றியை தெரிவித்து கொள்ளுமாம். லியோ எங்களுக்கு உணவு தேடிக் கொடுக்கின்றது..........❤️.     

tumblr_njolig48VO1t04x43o1_400.gif  c9ff0950-300x300.jpg  

தெருப் பூனைகள்... தங்களை அண்டி வாழும் மனிதர்களுக்கு  மாமிசத்தை அன்பளிப்பாக கொடுக்கும் பழக்கத்தை இப்போதுதான் கேள்விப் படுகின்றேன்.

எங்கள் வீட்டு பல்கனியின் கீழுள்ள நிலத்தின் சிறு  பகுதி மணல் பாங்கானது. அந்த இடத்தில் ஒரு பூனை வந்து.. அந்த மணலை கிளறி  "உச்சா" போய், மூடி  விட்டு போகும்.  அது எங்களுக்கு பெரிய இடைஞ்சலாக இருந்தது. அது கள்ளப் பூனை என்றபடியால்.... அது வரும், போகும் நேரம் எங்களுக்கு தெரியாமல் இருந்தது. அதனை எப்படி நிற்பாட்டுவது என்று அயலவரிடம் கேட்ட போது அதற்கு ஒரு மருந்து குளிசை  கடையில் விற்பதாகவும், அதனை வாங்கி மண்ணில்  தாட்டு விட்டால் அந்த மணத்திற்கு  கிட்ட வராது என்றார். அதன் படியே மருந்தை  வாங்கி மணலில் தாட்ட போது.. மூன்று மாதத்திற்கு  பூனை வரவில்லை.🙂

பிறகு மெல்ல மெல்ல வரத் தொடங்கி விட்டது.  மருந்தின் வீரியம் குறைந்தவுடன் பூனை வந்திருக்கலாம் என  நினைக்கின்றேன். மருந்தும் கொஞ்சம் விலை அதிகம் என்ற படியால்... வேறு வழியால் இதனை கட்டுப் படுத்த வேண்டும் என்று எனது தமிழ் மூளையை கசக்கிப் பிழிந்தபோது  ... அந்த மணலில் நெருக்கமான கண் உள்ள கம்பி வலையை  தாட்டுப் பார்க்கலாம் என்ற யோசனை கிடைத்தது. அப்படியே செய்து பார்த்தால்... பூனை நிரந்தரமாக,  "டாட்டா"  காட்டி விட்டுப் போய் விட்டது. 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

தெருப் பூனைகள்... தங்களை அண்டி வாழும் மனிதர்களுக்கு  மாமிசத்தை அன்பளிப்பாக கொடுக்கும் பழக்கத்தை இப்போதுதான் கேள்விப் படுகின்றேன்.

பிறகு மெல்ல மெல்ல வரத் தொடங்கி விட்டது.  மருந்தின் வீரியம் குறைந்தவுடன் பூனை வந்திருக்கலாம் என  நினைக்கின்றேன். மருந்தும் கொஞ்சம் விலை அதிகம் என்ற படியால்... வேறு வழியால் இதனை கட்டுப் படுத்த வேண்டும் என்று எனது தமிழ் மூளையை கசக்கிப் பிழிந்தபோது  ... அந்த மணலில் நெருக்கமான கண் உள்ள கம்பி வலையை மணலில் தாட்டுப் பார்க்கலாம் என்ற யோசனை கிடைத்தது. அப்படியே செய்து பார்த்தால்... பூனை நிரந்தரமாக... "டாட்டா..." காட்டி விட்டுப் போய் விட்டது. 😂

🤣.........

பிராணிகளின் பழக்கவழக்கங்களை இங்கு படிப்பிப்பார்கள் போல இருக்குது............ பல்கலையில் பல Animal Science பாடங்கள் இருக்கின்றன. மகள் அதில் எல்லா பாடங்களையும், அம்மாவை பழிவாங்கும் ஒரு நோக்கத்துடன் போல....🤣, எடுத்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

பூனை கண்ணை கண்ணை அடித்தால் ஒரு காரணம், மல்லாக்காக படுத்திருந்தால் ஒரு காரணம், மியாவ் சொன்னால் ஒரு காரணம், புல்லைக் கடித்தால் ஒரு காரணம் என்று என்னுடைய 'பூனை அறிவு' அதி வேகமாக வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது...........

ஒரு வீட்டை பூனை தன்னுடைய வீடாக நினைத்தால் அந்த வீட்டில் உச்சா, சிச்சா எதுவும் போகாதாம் என்றும் சொல்லியிருக்கின்றார்கள். சுவர் ஏறி பக்கத்து வீடுகளில் தான் அது உச்சா, சிச்சாவிற்கு போய் வருமாம் .... 😶

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

நாய், பூனைகளின் மயிர் கொட்டும் பிரச்சினை உள்ளதால் அவற்ரை வீட்டில் வளர்க்க விருப்பம் இல்லை. பிள்ளைகள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்கள். சம்மதிக்கவில்லை. தெரிவில் போகும் நாய்களை பார்த்து ரசிப்பதோடு எனது நாய்ப் பாசம் முடிந்துவிடும். 

நான் ஊரில்  இருக்கும் போது நாய் பூனை எல்லாம் வளர்த்து செல்லம் கொஞ்சியிருக்கிறேன். அதுகளின் பாசம் சொல்லிலடங்காது.
ஆனால்  இங்கிருக்கும் காலநிலைகளுக்கும் வீட்டு வசதிகளுக்கும் செல்லப்பிராணிகள் சரிப்பட்டு வராது. நினைத்தநேரம் நினைத்த இடத்திற்கு செல்ல முடியாது. தூர இடம் எங்கு போனாலும் அதையும் கூட்டிச்செல்ல வேண்டும்.கடைகளுக்குள் நாயுடன் செல்ல முடியாது. மருத்துவ செலவு அதிகம்.நாங்கள் சோறு கறியுடன் இருந்தாலும் அதற்கு  விதம் விதமான சாப்பாடுகள் வேண்டும். ஒண்டுக்கு இரண்டுக்கு வெளியில்கூட்டிக்கொண்டு போக வேண்டும். இரண்டுக்கு போனால் அதை அப்படியே விட்டு விட்டு வரமுடியாது.அதற்கென ஒரு பிளாஸ்ரிக் பையால் அள்ளி எடுத்து குப்பை வாளியில் போட வேண்டும்.
அதுவும் குளிர்காலத்தில் சொல்லமுடியாத ஒரு வெடுக்கு அடிக்கும். நானும் பிராணிகள் அன்புக்கு அடிமை தான். ஆனால் இங்கு இல்லை. 😄

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2024 at 01:09, ரசோதரன் said:

செல்லப்பிராணிகளை மனிதர்கள் எப்படி தொடர்ந்தும் உயிருக்கு உயிராக நேசித்து வளர்க்கின்றார்கள் என்ற கேள்வி அன்றுடன் என்னை விட்டு போனது.

ஒன்று போனால் இன்னொன்று! பழையதை மறந்து புதியதுடன் சந்தோஷமாக இருப்பார்கள்! இதையே மனிதர்களுக்கும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஒன்று போனால் இன்னொன்று! பழையதை மறந்து புதியதுடன் சந்தோஷமாக இருப்பார்கள்! இதையே மனிதர்களுக்கும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்!

அதுவும் எவ்வளவு விரைவாக மாறுகின்றார்கள்..........

செல்லப்பிராணிகளை தவிர்த்து வந்ததிற்கு ஒரு பெரிய காரணம் அவை போய்ச் சேர்ந்தவுடன் அந்த துக்கம் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்ற பயமுமே. ஆனால் இப்பொழுது நடைமுறை வேறு என்று தெரிந்துள்ளது.....

  • 4 weeks later...

@ரசோதரன் நீங்கள் எழுதிய இந்த கதையை / அனுபவத்தை வாசிக்க தொடங்கி, பின் வாசிக்க தேவையான கதைகள் யாழில் கனக்க இல்லை தானே ஆறுதலாக வாசிப்பம் என்று விட்டன். ஆனால் இப்ப நீங்கள் 30 ஆவது கதையில் - ஒன்றரை மாதங்களுக்குள் வந்து நிற்கின்றீர்கள்!

ஆனாலும் பாஸ் நீங்கள் ரொம்ப fast.

ஒவ்வொன்றாக வாசிக்க ஒரு வருடம் செல்லும் எனக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

@ரசோதரன் நீங்கள் எழுதிய இந்த கதையை / அனுபவத்தை வாசிக்க தொடங்கி, பின் வாசிக்க தேவையான கதைகள் யாழில் கனக்க இல்லை தானே ஆறுதலாக வாசிப்பம் என்று விட்டன். ஆனால் இப்ப நீங்கள் 30 ஆவது கதையில் - ஒன்றரை மாதங்களுக்குள் வந்து நிற்கின்றீர்கள்!

ஆனாலும் பாஸ் நீங்கள் ரொம்ப fast.

ஒவ்வொன்றாக வாசிக்க ஒரு வருடம் செல்லும் எனக்கு.

🤣..........

நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி நிழலி......... களத்தில் வரும் உங்களின் எழுத்துகளை, கருத்துகளை அநேகமாக தவறாமல் வாசித்துவிடுவேன். உங்களின் எழுத்துகளிலிருந்து உங்களின் வாசிப்பு மிக அகலமானது என்றே எனக்குத் தெரிகின்றது........👍

இந்த 'அரைப்பக்க அனுபவங்களை' சும்மா தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் களத்தில் வேறு சிலரும் சேர்ந்து கொண்டு மிக உற்சாகமாக அவற்றின் பின்னால் தங்களின் அனுபவங்களை எழுதுகின்றனர். மிக நன்றாக எழுதுகின்றனர். போகும் வரை போகட்டும் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்..........😃.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.