Jump to content

சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்


Recommended Posts

புகழ் Fame என்பது "இராஜ போதை" என்று சொல்வார்கள்.
அதாவது உலகில் உள்ள எந்த விதமான போதைப் பொருட்காளலும் தர முடியாத அதி உச்ச போதையினை தரக் கூடியது 'புகழ்' .
தன்னைச் சுற்றிய உலகின் போற்றுதலுக்குரியவராக இருக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் எம் அனைவரிடத்திலும் இருக்கின்றது.
அதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை தொடர்சியாக எடுத்து வருகின்றோம்.
மற்றவர்கள் எம்மை நல்லவர்கள் வல்லவர்கள் நாலும் தெரிந்தவர்கள் என்று கொண்டாட வேண்டும் என்பதற்கான சிறு முயற்சிகளையாவது நாம் செய்து கொண்டு தான் இருக்கின்றோம்.
ஆனால் இந்த புகழ் போதையில் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக செயல்படுவது, தன்னை உயர்வாக காண்பிக்கும் நோக்கில் மற்றவர்களை இழிவு செய்ய முற்படுவது தான் இன்று சிக்கல்களுக்கு காரணமாக மாறியுள்ளது.
ஏனைய போதைகளாக மதுபாவனை, போதை மருந்து பாவனை போன்றவை சுய வதைகளாக Self Torture இருக்கும் அதனை உட்கொள்கின்றவர்களுக்கு தான் அதன் நேரடிப் பாதிப்புகள் ஏற்றபடும்.
அடுத்த நிலையில் அவர்களை சார்ந்த குடும்பங்கள் பாதிக்கப்படும்.
இந்த புகழ் போதை என்பது சமூகப் பேரழிவுகளை Social Disaster ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கின்றது.
இந்த புகழ் போதை கால காலமாக மனிதர்களோடு கூடவே பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக நடைபெற்ற போர்களிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் போர்களின் பின்னணியிலும் இந்த புகழ் போதைக்கு அடிமையானவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இப்போது தோன்றியுள்ள "சமூக வலைத்தளப் புரட்சி" Social Media Revolutionஎன்பது சாதாரணமானவர்களையும் புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் வல்லமையை ஏற்படுத்தியிருக்கின்றது.
தமக்கு புகழ் வரவேண்டும் என்பதற்காக எதனையும் செய்வதற்கு தயாரான மக்கள் கூட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இது மிக ஆபத்தான திசை நோக்கி எம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.
மிகக் கவனமாக கையாளப்பட வேண்டிய பல விடயங்களுக்கும் கூட இந்த புகழ் போதையில் அடிபட்டு வலுவிழந்து போவதை நாம் அண்மை நாட்களில் அவதானிக்க முடிகின்றது.
சாவகச்சேரி மருத்துவமனையில் நிலவிய பல்வேறு குறைபாடுகளையும் வெளிப்படுத்தி அதன் மூலம் மக்கள் எழுச்சியினை ஏற்படுத்திய மருத்துவர் அர்சுனா அதனை தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட புகழை தக்க வைப்பதற்காக தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இயங்குவது அந்த மக்கள் எழுச்சியினை திசை திருப்பி தனிமனித போராட்டமாக அதனை மாற்றி விடும் அபாயத்தை தோற்றுவித்திருப்பதாக பலரும் கருதுகின்றார்கள்.
உண்மையில் சாவகச்சேரி மருத்துவமனை மட்டுமன்றி இலங்கையின் பல்வேறு துறைகளும் ஊழல்களால் நிறைந்து கிடக்கின்றது.
இலங்கையின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரே ஊழல் மோசடிக்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நாடு இலங்கை.
அதே நேரம் மருத்துவர் அர்சுனா கூறியது போல 95 சதவீதமான மருத்துவர்கள் மிகவும் அர்பணிப்போடு சேவையாற்றி வருகின்றார்கள் என்ற உண்மையினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
துரதிஸ்டவசமாக அந்த மோசமான 5 சதவீதமானவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அதிகாரங்களை தம்வசம் வைத்துள்ளார்கள்.
அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தம்மை தப்பவைப்பதற்கு அவர்கள் முயல்கின்றார்கள்.
இந்த சந்தரப்பத்தில் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் மருத்துவர்களை வெளிப்படுத்துவதற்கு மக்களின் எழுச்சி மிக மிக அவசியமானது.
மக்கள் எழுச்சியின் சிறப்பான வெளிப்பாட்டை 2022ம் ஆண்டு இதேபோன்ற ஜூலை மாதம் 9ம் திகதி இலக்கைத் தேசம் சந்தித்தது.
பெரும்பான்மை சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்பாய ராஜபக்ச என்ற இலங்கையின் பலம் பொருந்திய தலைவரை நாட்டை விட்டே ஓட வைத்த மக்கள் புரட்சியின் மகத்துவத்தை நாம் மறந்து விட முடியாது.
கோட்பாய ராஜபக்சவையே ஓட வைத்த பலம் பொருந்திய மக்கள் சக்திக்கு முன்பாக இந்த மருத்துவ ஊழல் கும்பலால் தாக்குப் பிடிக்க முடியாது.
அனால் அதனை மேற்கொள்வதற்கான மக்கள் திரட்சியும் சரியான வழிநடத்தலும் இன்று அவசிமாகின்றது.
அதனை மேற்கொள்வதற்கான சமூக அக்கறை கொண்ட தரப்புகள் முன்வரவேண்டும்.
எல்லாவாற்றையும் "அரச்சுனா ராமநாதன்" பாரத்துக் கொள்ளட்டும் நாம் அவரிகள் பதிவுகளுக்கு Like போட்டு Comment எழுதி Share பண்ணினால் வரலாற்று கடமை முடிந்து விட்டதாக எண்ணுவது தவறு.
இந்த எண்ணத்தில் இருக்கின்றவர்களின் ஆதரவை நினைத்து புழகாங்கிதம் அடைந்து மீண்டும் மீண்டும் Live video போட்டு Viral ஆவதை தவிர்த்து மக்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்ற வழிநடத்தலை வழங்க வேண்டும்.
சமூக வலைத்தள எழுச்சி என்பது மிக மிக தற்காலிகமானது அடுத்த Hot Topic / Trending வரும் வரைக்குமான வாழ்நாளை Lifespan கொண்டது.
இதற்கு அண்மையில் பல உதாரண்களை நாம் காண முடியும்.
எனவே இந்த 'சமூக ஊடகப் புரட்சியை' தாண்டி நாம் சிந்திக்க வேண்டும்.
அதேநேரம் குறிபிட்ட சில ஊழல் பேர்வழிகைள தண்டிக்கும் போர்வையில் சமூக அக்கறையுடன் தமக்கான நல்ல வசதி வாய்புகளை உதறித் தள்ளி விட்டு எமது மண்ணில் எமது மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கும் அரப்பணிப்பு மிக்க மருத்துவர்களை "சோர்வடையச்" செய்யாமால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
சமூக ஊடகங்களில் தோன்றிய அலைக்கு சமூக ஊடகங்கள் மூலமே பதில் வழங்கி தனது கடமையினை நிறைவு செய்த விடலாம் என மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் கொண்ட எதிர்பார்ப்பு மிகத் தவறானது என்பதை அவருடை பதிவில் அவருக்கு கிடைத்து வரும் பின்னூட்டங்களே சான்று.
பொறுப்பு வாய்ந்த ஒரு அதிகாரி என்ற வகையில் இந்த விடயத்தை ஊடகங்களை அழைத்து தெளிவுபடுத்தலை வழங்க வேண்டியது அவரின் கடமை.
சாவகச்சேரி மருத்துமனை நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றால் யாழ் போதன வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் அல்லது அதன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க வேண்டிய தார்மீக கடமை மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு இருக்கின்றது.
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஏனைய மருத்துவர்கள் பிரச்சினைக்குரியவரை வெளியேற்றிவிட்டு தமக்குரியவரை கொண்டு வருவதன் மூலம் தப்பித்து விட முடியாது.
தம்மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றால் அவற்றை பகிரங்கமாக அவர்கள் வெளிப்படுத்தலாம் இல்லாவிட்டால் அந்த தவறை சரி செய்வதற்கு முயற்சிக்கலாம்.
" வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல "
போகும் பொது நீங்கள் எதனையும் கொண்டு செல்லப் போவதில்லை.
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் தெய்வத்திலும் மேலாக மக்களால் போற்றப்படும் மருத்துவத் துறையை அதன் மாண்பு கெடாமல் பாதுகாத்துக் கொள்ளும் பாரிய பொறுப்பினை நீங்கள் சுமந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
இல்லாவிட்டால் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் சுமக்கப் போகும் மருத்துவ மாபியாவின் குழந்தை என்ற அவப்பெயரை தடுக்க முடியாது.
நீங்கள் உழைப்பது உங்கள் எதிர்கால சந்ததியின் நல்வாழ்விற்கு என்று நீங்கள் நம்பினால் அவர்களுக்காக நீங்கள் சேமிக்க வேண்டியது பெரும் தொகைப் பணமல்ல நல்ல பண்புகளை தான் என்பதை அதிகம் படித்த உங்களுக்கு பாமரன் புரிய வைக்க வேண்டியதில்லை.
மறுபுறம் ஒருவரை முன்னிறுத்தி 'அவரே' எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளட்டும் என்ற மனநிலையில் இருந்து எமது மக்கள் வெளியில் வர வேண்டும்.
இந்த போராட்டம் என்பது அனைவருக்குமானது என்பதை அனைவரும் கூட்டாக வெளிப்படுத்த வேண்டும்.
மருத்துவர் அர்ச்சுனா கூறிய பல விடயங்கள் மிகக் கவனமாக ஆராயப்பட வேண்டும், அதே நிலமை ஏனைய மருத்துவமனைகளில் இருந்தால் அவை குறித்தும் பேசப்பட வேண்டும்.
குற்றச்சாட்டுக்குள்ளான மருத்துவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளர்களை தமது தனியார் மருத்துவ மனைகளுக்கு அழைத்து பெரும் தொகை பணத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் முனமையான பெயர் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
அரச மருத்துவ மனைகளில் காணப்படும் வளங்களை சரியா பயன்படுத்தாமல் அதற்கு மாற்றீடாக தனியார் நிறுவனங்களை முன்னிறுத்தி அதன் மூலம் இலாபமீட்டும் செயல்பாடுகள் அனைத்தும் சரியான ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளார்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்தினால் மிகப் பெரிய மாற்றம் ஒன்றை எமது மண்ணில் நாம் ஏற்படுத்தலாம்.
'விடியும் விடியும்... என்ற நம்பிக்கை இரவினை விரட்டுமே ....
முடியாத என்றொன்று கிடையாது பூமியில்..
யாரும் செய்யாததை செய்தால் தானே சாதனை '
May be an image of grass
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நியாயம்

மருத்துவர் அர்ச்சனா கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளார் என நினைக்கின்றேன். முக்கியமாக சமூக ஊடகங்களில் எதேச்சையாக தனது கருத்துக்களை (உணர்ச்சிகளை) சாவகச்சேரி வைத்தியசாலை சம்மந்தமாக கூறியவை அவருக்கே பல சட்ட சிக்

நியாயம்

இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன்.  மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை து

Ahasthiyan

25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது.   

 

வைத்தியத் துறையில் மாபியாக்களை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா? | பத்திரிகையாளா் நிக்சன் செவ்வி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2024 at 20:54, ஈழப்பிரியன் said:

புலிக்கு பிறந்தது!

யார் இந்த வைத்தியர்?

இத்தனை துணிச்சல் இவருக்கு எங்கிருந்து வந்தது?

மருத்துவ மாபியாவுக்கு எதிராய் போராடும் அம்பு தொடுக்கும் போர்க்குணம் ஒரு தனி மனிதனுக்கு எப்படி வந்தது?

என "DR அர்ச்சுனா"வின் வேரை தேடினால் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் பிரமிக்கவைக்கின்றது!

இவரது தந்தை எங்கள் தமிழீழ காவல் துறை முதன்மை ஆய்வாளர் இராமநாதன் என்பதோடு இறுதியுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்!

அவரின் குடும்பபின்னணி,வளர்ந்த சூழ்நிலை,வளர்க்கப்பட்ட விதம் அவரது கல்லூரிக்காலம்,பல்கலைகழச் செயற்பாடுகள் என்பன இனஉணர்வு தாண்டியும் உண்மையில்  புல்லரிக்க வைக்கின்றது!

வீரமும்,அஞ்சாமையும்,போராட்டகுணமும் அவரது இரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கிறது!

இனமானமும்,மனிதநேயமும்,தேசநலனும், மக்கள் தொண்டும், அவரது இயல்பிலேயே கலந்து இருக்கிறது!!

அதுசரி,ஒரு புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?
 

What’s app இல் வந்தது.

இது தான் கடைசியாக அவருக்கு ஆப்பு வைக்க போகுது. எம்மவரே தோண்டி எடுத்து காட்டிக்கொடுத்து அழித்து முடிப்பார்கள். 😭

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது தான் கடைசியாக அவருக்கு ஆப்பு வைக்க போகுது. எம்மவரே தோண்டி எடுத்து காட்டிக்கொடுத்து அழித்து முடிப்பார்கள். 😭

உண்மை விசுகர். 
ஈழப் போராட்டத்தின் போதும் பல தகவல்களை வலிய சிங்களவனுக்கு கொடுத்து உதவியது எமது சில ஊடகங்களே. சில விடயங்களில்... தேவையற்ற விசயங்களை தொடாமல் செய்தி எழுதுவதே... தரமான ஊடகமாக இருக்க முடியும். 
இப்போ ஊடகங்கள் பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார்கள்.
சமூக அக்கறை என்பது, பெரும்பாலானவர்களிடம் அறவே இல்லை.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரிக்கு மீண்டும் வருவேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நடிகைக்காக பனை மரத்தில் ஏறிய தலைமுறை! சாவகச்சேரி விவகாரத்தை விமர்சித்த வைத்தியர்

தற்போது உருவாகும் வைத்தியர்கள் முகநூல் போராளிகளின் சகோதரர்களாகவும் நடிகையை காண பனை மரத்தில் ஏறியவர்களின் தலைமுறைகளாகவும் உள்ளனர் என வைத்தியர் செந்தூரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“இதற்கு முன்னர் கடமையாற்றிய வைத்தியர்களிடம் இருந்த பொறுப்புணர்வை தற்போதுள்ள வைத்தியர்களிடம் எதிர்பார்ப்பது தவறாகவே தோன்றுகின்றது.

சாவகச்சேரி வைத்திய அதிகாரிகள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முழுமையான ஆதராங்கள் இல்லை. சிறு சிறு தவறுகள் நடந்திருக்கலாம் எனினும் அனைத்தையும் முழுமையாக நம்புவது பிழையானதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

மூடி மறைக்கப்படுகின்றதா..? சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்

 

Edited by ஏராளன்
add full news
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

social-media.jpg?resize=750,375

ஒரு மருத்துவரும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்!

சமூக வலைத்தளங்களின் காலத்தில், யுடியுப்களின் காலத்தில் ஒருபுறம் செய்திக்கும் வதந்திக்கும் இடையிலான வித்தியாசம் சுருங்கிகொண்டே போகிறது. இன்னொருபுறம் ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ருசுப்படுத்தத் தேவையான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன, மக்கள் மயப்பட்டுள்ளன.உண்மையை உறுதிப்படுத்தத் தேவையான வாய்ப்புகள் அதிகம் மக்கள் மயப்பட் டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,வதந்தியை விட உண்மை அதிகம் ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. ஏன் ?

ஏனென்றால், சமூக வலைத்தளங்களும் யு டியுப்களும் அதிகமதிகம் பொதுப் புத்திக்கு கிட்டே வருகின்றன.பொதுப் புத்தியானது எப்பொழுதும் விஞ்ஞான பூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. எனவே பொதுப் புத்தியை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் யுடியுப்களிகளும் சமூகவலைத்தளங்களும் சுடச்சுட செய்திகளை வழங்கும்.இது பாரம்பரிய ஊடகத்துறையில் இருக்கும் தணிக்கை,சுய தணிக்கை, சமூகப் பொறுப்பு எல்லாவற்றையுமே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்து கூறும் சுதந்திரத்தை தகவல் புரட்சி வழங்கியிருக்கிறது. இதனால் இணைய இணைப்பு இருந்தால் யாரும் எதையும் கூறலாம் என்ற நிலை தோன்றுவிட்டது.தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றிக் கருத்துக்கூறும் சுதந்திரம் ஆபத்தானது. அது நிபுணர்களை சமூக வலைத்தளங்களில் இருந்தும் சமூக ஊடகங்களில் இருந்தும் வெளித்தள்ளுகின்றது.நிபுணர்களும் துறை சார்ந்த வல்லுநர்களும் சமூக வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அமைதியாக விலகிச் செல்கிறார்கள்.அந்த வெற்றிடத்தை மந்தர்கள் நிரப்புகிறார்கள்.

ஊடகங்களுக்கு குறிப்பாக சமூக வலைத்தள ஊடகங்களுக்கு சர்ச்சைகள் தேவை. அவை செய்திப் பசியோடு காத்திருக்கின்றன.அதனால் அவை சர்ச்சைகளைத் தேடித் திரிகின்றன.

இவ்வாறு சர்ச்சைகளுக்காகக் காத்திருக்கின்ற, சர்ச்சைகளை சுடச்சுட பரிமாறுகின்ற ஒரு சமூக ஊடகச் சூழலுக்குள் ஒரு மருத்துவர் நேரலையில் தோன்றினார். அவர் அவ்வாறு தோன்றியதே ஒரு சர்ச்சை. ஏனென்றால் தமிழ் சமூகத்தில் மருத்துவர்கள் தங்களுக்கு என்று பவித்திரமான ஒரு ஸ்தானத்தை எப்பொழுதும் பாதுகாத்துக் கொள்வார்கள்.அந்த பவித்திரமான ஸ்தானத்தை விட்டு வெளியே வருவது குறைவு.

விதிவிலக்காக சாவகச்சேரி ஆஸ்பத்திரியின் முன்னாள் அத்தியட்சகர் மருத்துவர் அர்ஜுனா மற்றும் கண்டாவளையில் ஒரு பெண் மருத்துவர் போன்றவர்கள் சர்ச்சைகளுக்குள் வருகிறார்கள். சமூக ஊடகங்களில் அதிகம் “வைரல்” ஆகிறார்கள்.

மருத்துவர் அர்ஜுனா ஒரு நேரலைப் பிரியர் என்று தெரிகிறது. அவர் எப்பொழுதும் நேரலையில் தோன்றுகிறார்.தன்னுடைய எல்லா விவகாரங்களையும் மக்களுக்கு நேரடியாக சமர்ப்பிக்கின்றார். அதில் ஓர் அப்பாவித்தனம் உண்டு. சாகச உணர்வு உண்டு.தன்னை கதாநாயகனாக கட்டிஎழுப்பும் ஆசையுண்டு.ஒரு மருத்துவர் அப்படி நேரலையில் தோன்றுவது தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை வித்தியாசமானது. அதனால் அர்ஜுனா வைரல் ஆனார்.

 

அர்ஜுனா ஒரு ஆஸ்பத்திரியின் அத்தியட்சகராக இருந்தவர் என்ற அடிப்படையில்,தான் வேலை செய்த சிஸ்டத்துக்குள் இருந்த குளறுபடிகளை வெளியே கொண்டு வருகிறார்.அவர் சிஸ்டத்தை அம்பலப்படுத்துகின்றார். உள் வீட்டு விஷயங்களை அவர் வெளியே கொட்டக்கொட்ட அவருக்கு ஆதரவு பெருகியது. அவருடைய முகநூல் கணக்கைத் தொடர்வோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எப்பொழுது தாண்டி விட்டது. அவரும் அதை ரசிக்கிறார். அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றார்.

அவர் ஒரு விதிவிலக்கு. தான் வேலை செய்யும் சிஸ்டத்தையே பகிரங்கமாக விமர்சித்தது, அதிலும் பேர் சொல்லி விமர்சித்தது, அதனால் வரக்கூடிய விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தொடர்ச்சியாக நேரலையில் நிற்பது, மக்களை சிஸ்டத்துக்கு எதிராகத் திரளச் செய்தது….போன்ற பல விடயங்களிலும் அவர் வழமையான மருத்துவர்களுக்குள்ள குணத்தோடு இல்லை. விதிவிலக்காகக் காணப்படுகிறார்.

அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் பாரதூரமானவை. அவர் முன்வைக்கும் விமர்சனங்களும் பாரதூரமானவை. உயிர்களோடு தொடர்புடையவை, ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை, மருத்துவத்துறை சார் பொறுப்புக் கூறலோடு தொடர்புடையவை.

அந்தக் கேள்விகள் சரியா பிழையா என்று இக்கட்டுரை ஆராயப் போவதில்லை. ஆனால் மருத்துவத் துறை சார் பொறுப்பு மிக்கவர்கள் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் இதுவரையிலும் பதில் சொல்லவில்லை.

அர்ஜூனா செய்வது சரியா பிழையா என்பதுவும் தனியாக விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அவர் ஒரு கலகத்தைத் தொடக்கி விட்டார். அந்த கலகம் மக்களைக் கவர்ந்திருக்கிறது. மக்களை வீதிக்குக் கொண்டு வந்திருக்கிறது. சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு முன் திரண்ட மக்களின் எண்ணிக்கையானது சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய மக்கள் தொகையை விடவும் அதிகமானது.

மக்கள் ஏன் அவ்வாறு திரண்டார்கள்?அர்ஜுனாவை நம்பித் திரண்டார்களா? இல்லை. மக்கள் மத்தியில் ஏற்கனவே மருத்துவத்துறை சார்ந்து பதில் சொல்லப்படாத கேள்விகள் இருந்தன. அச்சங்கள் இருந்தன. குறிப்பாக தனியார் மருத்துவத் துறை தொடர்பில் ஆழமான வெறுப்பு இருக்கின்றது. இவ்வாறு மக்களின் பொது மனோநிலையில் மண்டிக் கிடந்த கோபம், பயம், சந்தேகம், வெறுப்பு,கையாலாகத்தனம் போன்ற எல்லாவற்றினதும் பிரதிநிதியாக அர்ஜுனா தோன்றினார்.அதனால்தான் மக்கள் ஆஸ்பத்திரிக்கு முன் திரண்டார்கள்.

அர்ஜுனாவை எதிர்ப்பவர்கள்,அவருடைய தனிப்பட்ட சுபாவத்தை விமர்சிப்பவர்கள்,அவருடைய நடத்தைகளை விமர்சிப்பவர்கள், ஒரு விடயத்தை இங்கு தொகுத்துப் பார்க்க வேண்டும்.மக்கள் வெற்றிடத்தில் இருந்து திரண்டு வரவில்லை. மக்களுடைய அடி மனதில் மண்டிக்கிடந்த வெறுப்புத்தான் சந்தேகம்தான் அவ்வாறு திரளக் காரணம்.அதை சமூக ஊடகங்களும் யு டியுப்களும் பரவலாக்கின,பலப்படுத்தின.

அர்ஜுனாவின் கலகம் வெடித்தெழுந்த பின்னணியில் அது தொடர்பில் முதலில் கருத்துக் கூறாத மருத்துவர் சத்தியமூர்த்தி,சில நாட்கள் கழித்து ஒரு பதிவை முகநூலில் போட்டார்.அதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் பதில் வினை ஆற்றியிருந்தார்கள்.அதில் பெருந்தொகையானவை வெறுப்பும் எதிர்ப்பும் மிக்கவை. மருத்துவர் சத்தியமூர்த்தியை ஆதரித்து, அவரைப் பாதுகாத்து வந்த குறிப்புகள் மிகக் குறைவு. இது எதைக் காட்டுகின்றது?

மருத்துவத்துறை சார்ந்து சாதாரண மக்கள் மத்தியில் சந்தேகங்களும் பயங்களும் அதிருப்தியும் உண்டு என்பதைத்தான் அது காட்டுகின்றது. தனியார் மருத்துவத் துறையின் வளர்ச்சியும் அரச மருத்துவமனைகளில் நிகழும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் மேற்கண்ட அதிருப்திகளுக்குக் காரணமாக இருக்கலாம். சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மையை விட வதந்திகள் அதிகம் பரவுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.ஆனால் இங்கு பிரச்சனை அவையல்ல. மக்கள் மத்தியில் ஆழமான சந்தேகங்களும் கோபமும் உண்டு என்பதுதான் பிரச்சினை.அதை மருத்துவத் துறை எதிர் கொள்ள வேண்டும். அதற்கு பதில் கூற வேண்டும்.

அரச மருத்துவமனைகளை தமிழ் கிராம மக்கள் தர்மாஸ்பத்திரி என்று அழைப்பார்கள்.ஏனென்றால் அங்கே மருந்தும் சிகிச்சையும் தர்மமாக வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையில். ஆனால் மெய்யான பொருளில் அவை தர்மாஸ்பத்திரிகள் அல்ல. அங்கு வேலை செய்யும் எல்லாருக்குமே சம்பளம் வழங்கப்படுகிறது. இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன. யாரும் இலவசமாகத் தொண்டு புரியவில்லை. அது மட்டுமல்ல அங்கு இலவசமாகத் தரப்படும் மருந்தும் சிகிச்சையும் கூட மக்களிடம் சேகரித்த வரிப்பணம்தான். அதாவது மக்கள் அரசாங்கத்துக்கு கொடுத்த வரிதான் இலவச சிகிச்சையாக இலவச மருந்தாக இலவச கல்வியாக திருப்பி வழங்கப்படுகிறது. மேற்கத்திய வளர்ச்சி அடைந்த முதலாளித்துவங்களில் அது நலன்புரி அரசு என்ற வெற்றிகரமான ஒரு சிஸ்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கேயோ சாதாரண மக்கள் அதனை அரசாங்கம் தங்களுக்குச் செய்யும் தர்மமாக கருதுகிறார்கள்.

இவ்வாறு அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகளாக கருதும் ஒரு சமூகம்,தர்மாஸ்பத்திரிகள் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தர்மமாக நடக்கவில்லை என்று கருதும் பொழுதே விமர்சனங்கள் எழுதுகின்றன.இதில் தனியார் மருத்துவத் துறை தொடர்பான விமர்சனங்களும் அடங்கும்.

அர்ஜுனாவின் கலகத்தை பொதுமக்கள் ஏன் ஆதரிக்கிறார்கள்?அர்ஜுனா எழுப்பிய கேள்விகள் ஏன் பொதுமக்களை ஆஸ்பத்திரிக்கு முன் கொண்டு வந்து நிறுத்தின? இந்த விடயத்தில் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் அர்ஜுனாவின் விடயத்தை விவகாரம் ஆக்கியதில் அதிகம் பங்களிப்பு செய்ததாக ஒரு அவதானிப்பு உண்டு. ஊடகங்களில் அந்த உள்ளூராட்சி சபை உறுப்பினரும் இடைக்கிடை தோன்றினார்.அவர் போலீசாரல் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பு நூற்றுக்கணத்தில் திரண்ட மக்களை அவர் மட்டும் அழைத்துக் கொண்டு வரவில்லை. மாறாக மக்களிடம் ஏற்கனவே உள்ளுறைந்து காணப்பட்ட கேள்விகள்,சந்தேகங்கள்,கோபங்கள் என்பவற்றின் விளைவாகத்தான் மக்கள் அங்கே வந்தார்கள்.சமூக வலைத்தளங்களும் யு டியுப்களும் அதனை பரபரப்பாக சுடச்சுட வழங்கின. அதனால் மக்கள் வீதிக்கு வந்தார்கள்.

அதாவது மக்கள் அவ்வாறு திரளும் அளவுக்கு மக்கள் மத்தியில் விடை கிடைக்காத கேள்விகளும் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் சந்தேகங்களும் தனியார் மருத்துவத்துறை தொடர்பாக பயங்களும் வெறுப்பும் உண்டு என்று பொருள்.அர்ஜுனா அவ்வாறு ஏற்கனவே மக்கள் மத்தியில் பரவலாக காணப்பட்ட அதிருப்தி,வெறுப்பு,சந்தேகம் போன்றவற்றுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கினார்.

அப்படிப் பார்த்தால் அர்ஜுனா ஒரு சிறு கலகத்தைச் செய்திருக்கிறார்.ஆனால்,அந்தக் கலகத்தை ஒரு சமூக மாற்றத்துக்கான தொடக்கப் பொறியாக மாற்றத் தேவையான பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் உண்டா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அவர் அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் அமைந்திருந்தது. அதில் அவர் ஏன் அடிக்கடி நேரலையில் தோன்றினார் என்பதற்கு விடை கிடைக்கின்றது. அந்த நேர்காணல் முழுவதிலும் அவர் தன்னுடைய முதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஒரு விளையாட்டுப் பிள்ளைபோல, சாகச உணர்வு நிரம்பியவராக, ஒரு விதத்தில் பொறுப்பற்றவராக,கருத்துக்களைத் தெரிவித்தார்.சமூக ஊடகச் சூழலுக்குள் அளவுக்கு மிஞ்சி ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு கலகக்காரராகவே அவர் அதில் தோன்றினார். இந்த நேர்காணல் அவர் மீதான விமர்சனங்களை பலப்படுத்தக் கூடியது. சமூக ஊடகச் சூழலில் சிலசமயம் இன்றைய செய்தி நாளைய குப்பை. அர்ஜுனா கேட்ட கேள்விகளும் அவ்வாறு நாளைக்கு குப்பை ஆகிவிடக்கூடாது.

https://athavannews.com/2024/1392182

Link to comment
Share on other sites

சாவகச்சேரி விவகாரம் தொடர்பில் வைத்தியர் Dr Senthuran Ganesadasan

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம் சம்மந்தமாக இலங்கையில் பணியாற்றும் ஒரு மருத்துவ நண்பரிடம் வினாவிய போது மருத்துவர் அர்ச்சனா கூறுவது 100% உண்மை என தெரிவித்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு இருபது வருடங்கள் சிறை என்று மிரட்டல்! வெளிவராத மேலும் பல உண்மைகள்

கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சிற்கு நான் சென்றபோது அங்கு என்னுடைய தொலைபேசிகள் பறித்து வைத்துக்கொள்ளப்பட்டன. இவை மீண்டும் எனக்கு போராட்ட வரலாற்றையே  நினைவுப்படுத்துகின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா(Dr.Archuna) தெரிவித்தார்.

சிலநேரம் நான் இவை அனைத்தையும் பதிவு செய்கின்றேன் என அவர்கள் நினைத்திருக்கக் கூடும் என்றும் வைத்தியர் அர்ச்சுனா கூறினார்.

லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் நான் இருந்து அங்கிருக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தும் போது இருந்த சூழ்நிலைக்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார் 

மேலும், மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்வது குறித்தும்  தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் வைத்தியர் அர்ச்சுனா இதன்போது தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

மீண்டும் சாவகச்சேரிக்கு விரையும் வைத்தியர் Archchuna - மக்கள் ஆதரவு கிடைக்குமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


கேள்விகனை கேட்பவருக்கு முன் அனுபவம் போதவில்லை என்று நினைக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இலங்கை வைத்தியசாலைகளில் ஒழுக்க சீர்கேடுகள் இல்லையென்று யாராவது சொன்னால்....... தூக்கில் தான் தொங்கவேண்டும். 😂

Link to comment
Share on other sites

 

வைத்தியசாலையில் சற்றுமுன் பதற்றம் | மிரட்டிய வைத்தியர்🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனா கடும் வாக்குவாதம் - நாந்தான் இங்க வைத்தியர் - பொலிசார் கைதுசெய்ய முயற்சி

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24-668b79507049d.jpeg?resize=600,375

சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் பதற்றநிலை – ஒருவர் கைது!

யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த பதற்றத்தையடுத்து ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வைத்தியருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுக்கூடி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது.

இந்நிலையில் 08ஆம் திகதி , நீண்ட இழுபறியின் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அருச்சுனா, தான் விடுமுறையில் தான் செல்வதாகவும் மீண்டும் வருவேன் எனவும் கூறிச் சென்றார்.

வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது. அதனை அடுத்து மறுநாள் 09ஆம் திகதி வடமாகாண சுகாதார திணைக்களத்தால் , வைத்தியர் கே. ரஜீவ் புதிய பதில் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு,பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் விடுமுறையில் சென்ற தான் விடுமுறை முடிய மீண்டும் வந்துள்ளேன் என முன்னாள் பதில் அத்தியட்சகர், பதில் அத்தியட்சகருக்கு உரிய அறையில் அமர்ந்துள்ளார்.

இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால் , பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

அதேவேளை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரை வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் கூடிய வேளை பொலிஸார் மக்களை வைத்தியசாலை சுற்று வட்டாரத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

அதன் போது, நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1392271

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருச்சுனா இராமநாதன், மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில்!

adminJuly 15, 2024
 
Archuna-Dr1-1170x878.jpg

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளமையால் அங்கு குழப்பமான நிலைமை காணப்படுகிறது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் கடந்த 07ஆம் திகதி இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண வைத்தியர் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்த பதில் வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்தார்.

அந்நிலையில் வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக 07ஆம் திகதி இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் மறுநாள் 08ஆம் திகதி அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது.

அந்நிலையில் 08ஆம் திகதி, நீண்ட இழுபறியின் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அருச்சுனா, தான் விடுமுறையில் தான் செல்வதாகவும் மீண்டும் வருவேன் என கூறி சென்றார். வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது.

Archuna-Dr-2-800x600.jpg

அதனை அடுத்து மறுநாள் 09ஆம் திகதி வடமாகாண சுகாதார திணைக்களத்தால்  வைத்தியர் கே. ரஜீவ் புதிய பதில் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு,பொறுப்பேற்றுள்ளார்.

அந்நிலையில் விடுமுறையில் சென்ற தான் விடுமுறை முடிய மீண்டும் வந்துள்ளேன் என முன்னாள் பதில் அத்தியட்சகர், பதில் அத்தியட்சகருக்கு உரிய அறையில் அமர்ந்துள்ளார்.

இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால், பாதுகாப்புக்காக காவற்துறையினர் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரை வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் கூடிய வேளை காவற்துறையினர் மக்களை வைத்தியசாலை சுற்று வட்டாரத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

அதன் போது, நபர் ஒருவரையும் காவற்துறையினர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்
 

https://globaltamilnews.net/2024/205074/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, யாயினி said:

கேள்விகனை கேட்பவருக்கு முன் அனுபவம் போதவில்லை என்று நினைக்கிறேன்..

வைத்தியர் அர்ச்சுனா உளரீதியாக பாதிக்கபட்டதா மற்றவர்கள் எழுதியதை பேட்டி எடுப்பவர் படித்தாராம்.  பின்பு டொக்டரிடமே நேரில் கேட்கிறார் நீங்கள் உளரீதியாக பாதிக்கபட்டிருக்கின்றீர்களா

இந்த பேட்டி எடுத்தவர் பேட்டி எடுப்பதற்கே தகுதி இல்லாதவர்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ இள‌ம் டாக்குத்த‌ர்

எத‌ற்க்கும் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌னும்...................இந்த‌ நூற்றாண்டில் இவ‌ர் போல் நேர்மையான‌ ம‌னித‌ர்க‌ளை காண்ப‌து அரிது............................

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு கிடைக்கவுள்ள புதிய பதவி : சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

சாவகச்சேரி வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) இடம்பெற்ற இந்தப் போராட்டம் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார்.

என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்த பின்னர் முகநூலில் அவர் வெளியிட்டுள்ள நேரலையிலேயே இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். 

சுகாதார அமைச்சு கோரிக்கை 

அவர் மேலும் தெரிவிக்கையில் ''அரசாங்கமும் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் இணைந்து வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மத்திய அமைச்சின் கீழ் இல்லாத அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான 2 அல்லது 3 வருட செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு கிடைக்கவுள்ள புதிய பதவி : சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Chavakachcheri Hospital Protest Win Doctor Archuna

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களிடம் இதற்கான நிதியுதவிக்கான கோரிக்கைகளை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.

அதற்கான பொறுப்பினை நான் எடுத்துக் கொள்வேன். அத்துடன் இந்த செயற்திட்டத்திற்கான தயாரிப்பாளராக என்னை இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுகாதாரத் துறையில் மாற்றம் 

அடுத்து நான் எந்த வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டுமென கேட்டிருந்தேன். இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கின்றது.

அந்த செயற்திட்டத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாவும் எனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவேற்றப்படும். 

என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே இது வைத்தியர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல, தவறிழைக்கும் வைத்தியர்களுக்காகவும் வைத்தியசாலையை மேம்படுத்துவதற்குமான போராட்டம்.'' என தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/chavakachcheri-hospital-protest-win-doctor-archuna-1721031825

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

வைத்தியர் அர்ச்சுனா உளரீதியாக பாதிக்கபட்டதா மற்றவர்கள் எழுதியதை பேட்டி எடுப்பவர் படித்தாராம்.  பின்பு டொக்டரிடமே நேரில் கேட்கிறார் நீங்கள் உளரீதியாக பாதிக்கபட்டிருக்கின்றீர்களா

இந்த பேட்டி எடுத்தவர் பேட்டி எடுப்பதற்கே தகுதி இல்லாதவர்.

 

2 hours ago, வீரப் பையன்26 said:

இந்த‌ இள‌ம் டாக்குத்த‌ர்

எத‌ற்க்கும் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌னும்...................இந்த‌ நூற்றாண்டில் இவ‌ர் போல் நேர்மையான‌ ம‌னித‌ர்க‌ளை காண்ப‌து அரிது............................

ஆரம்பத்தில் நிறைய மதிப்பிருந்தது.. நிறைய விமர்சனங்களை பார்க்க முடிந்தது அதன் பின் மற்றவர்களோடு அவரும் ஒருவராகவே எனது மதிப்பீடு .அத்தோடு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் என்பதற்காக மற்றவர்களை தூக்கி வீசலாமா..அவதானித்தீர்களோ தெரியாது வைத்தியர் ரயீவோடு எழும்பி போய் விடு நான் வந்திட்டன் என்பது போல தான் பிகேவ்வியர்….போணில் நிறைய எழுத ஏலாமலுள்ளது.. சந்தர்ப்பம் கிடைத்தால் மறு படியும் எழுதுவன்.. நன்றி🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

போணில் நிறைய எழுத ஏலாமலுள்ளது.. சந்தர்ப்பம் கிடைத்தால் மறு படியும் எழுதுவன்.. நன்றி🙏

நேரம் கிடைக்கின்ற போது எழுதுங்கோ.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில், ஹர்த்தால் என்று அறிவித்தும் கடையை திறந்தவர்களுக்கு இயக்கத்தால் பச்ச மட்ட அடி விழுந்ததை யாம் கண்ணால் கண்டோம். அநுரவின் வெற்றி என்பது, தற்போது அநுர நினைத்தால் கூட நிறுத்த முடியாது.
    • ஒற்றையாட்சிக்கு வாக்களிப்பதென்றால்; ஏதோ ஒரு சிங்களகட்சிக்கு தானே வாக்களிப்பது? இங்கு, இன்னும் ஒரு இனமுண்டு, அவர்களுக்கும் அரசியல் அதிகாரம், கனவு, உரிமை, சுதந்திரம் உண்டு, இதுவரை அது ஏற்றுகொள்ளப்ப்டாதத்தினாலேயே இன்று அதற்கான தேவையேற்படுள்ளது எனக்காட்டுவதே பொதுவேட்பாளரின் தோற்றம். இங்க ஒற்றையாட்சி எங்கே வந்தது? எங்களையும் சமஉரிமையாய் நடந்து இல்லையில் உனக்கு எதற்கு எங்களின் வாக்கு என்பதே இங்கு உணர்த்தப்படுகிறது. ஆளாளுக்கு ஏதோ விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால், மக்களின் தேவையில், இழப்பில் உடனிருக்க, ஆறுதலளிக்க, கேட்க யாருமில்லை. தேர்தல் வந்தால்; கனைக்க வந்துவிடுவார்கள்.       
    • ஏறேறு சங்கிலி “என்னவாம்” எண்டு மனிசி கேக்க “இல்லை, மூத்தவளுக்கு நாள் வைச்சிருக்காம் எல்லாரையும் கட்டாயம் வரட்டாம் எண்டு சொல்லக் கந்தன் வந்தவன் , உன்னைக் கேட்டவன் நான் தான் நீ வேலையா இருக்கிறாய் எண்டு சொன்னான்”எண்டு சொல்லி முடிக்க முதல் , “நான் அப்பவும் சொன்னான் எங்கடை மூத்தவனுக்கு கேளுங்கோ எண்டு , நீங்க வாய் பாக்க எவனோ ஒருத்தன் தூக்கீட்டான்” எண்டு என்டை இயலாமையை மனிசி சுட்டிக்காட்ட அதைக்கவனிக்காம சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன்.  அடுத்த கிழமை மூண்டு நாள் கொண்டாட்டத்தோடு கலியாணம் சிறப்பா நடந்து முடிஞ்சுது. கட்டி முடிச்சு மூண்டு மாசத்தில முழுகாம மகள் இருக்கிறா எண்டு கந்தன் சொல்ல வீட்டில இருந்து கோழிமுட்டை கொண்டேக் குடுக்கப் போனன். போனால் கந்தன்டை மருமோன் “வாங்கோ” எண்டு சொல்லீட்டு விடியவே சீவல் வேலைக்கு வெளிக்கிட்டுப் போனான்.  திருப்பி வீட்டை வந்து மனிசிக்கு விசயம் சொல்ல “உவன் நடுவிலான் படிப்பும் இல்லை சும்மா பந்தடிச்சுக் கொண்டு திரியிறான், அவனுக்கு தொழிலைப் பழக்குங்கோ உங்களுக்கும் அடிக்கடி நாரிப் பிடிப்பு வரூது” எண்டு சொன்னதைக் கேட்டு அவனைக் கூட்டிக் கொண்டு போனன்.  எப்பிடியும் கள்ளமா எங்கயாவது ஏறி இருப்பான் எண்டு தெரிஞ்சாலும் தெரியாதது மாதிரி “ ஏறத் தெரியுமோ “ எண்டு கேக்க, “அப்பப்ப இளநி புடுங்க தென்னை ஏறினான் இதுகும் ஏறுவன்” எண்டான் நடுவிலான். “பனை அப்பிடி இல்லை இது பாத்து ஏறோனும்” எண்டு சொன்னதைக் கேக்காமல் எல்லாம் தெரியும் எண்ட மாதிரி அந்தரப்பட்டவனை சரி ஏறிப்பட்டாத்தான் தெரியும் எண்டு போட்டு ஏறி ஓலையை வெட்டு எண்டு விட்டன். சடசடவெண்டு முதல் பத்தடி ஏறினவன் பிறகு அப்பிடியே இறங்கீட்டான் . இறங்கினவன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கிட்ட வந்தான்.  ஏறிறது எண்டால் சும்மா இல்லை. ஏற முதல் இறுக்கமா கச்சையைக்கட்டி, இருந்தால் shorts ஐப்போட்டிட்டு சாரத்தை மடிச்சுக் கொடுக்குக் கட்டு கட்டோணும். உனக்கெண்டு சாமாங்கள் எல்லாம் வேணும். ஏறு பட்டி பழசு தான் வெட்டாது அதோட அடிக்கால் சிராய்ப்பு வராது, எண்டாலும் இழுத்துப் பாத்திட்டு அளவு சரி எண்டாத்தான் காலில போடோணும். தளைநாரைப் பாத்து அம்மாட்டைக் கேட்டுப் பின்னி எடுத்து வை. தொழில் இல்லாட்டியும் பாளைக் கத்தியை ஒவ்வொருநாளும் தீட்டி வைக்கோணும், தொழிலுக்கு கொண்டு போறதை வேற ஒண்டுக்கும் பாவிக்கப்படாது, பழைய கருங்காலித் தட்டுப்பொல்லு ஒண்டிருக்கு பாளையைத்தட்டக் கட்டாயம் தேவை. சுத்திச் சுத்தி தட்டோணும், அப்ப தான் நுனி நசிஞ்சு நல்லா கள்ளு வடியும் எண்டு முறை ஒவ்வொண்டாச் சொல்லத் தொடங்கினன்.   ஏற முதல் மனசுக்கு அம்மனைக் கும்பிட்டிட்டி ஏறோணும். “ஏறு பட்டி வெட்டுதா எண்டு பாத்து , இடுப்புப்பட்டியை இறுக்கிக் கொண்டு பறீக்க சாமான் எல்லாம் இருக்கா எண்டு பாத்து, ஏறேக்க பறிக்கால கீழ விழாம சரியா வைச்சிட்டுத்தான் ஏறத்தொடங்கோணும். பிரதட்டைக்குக் கால் ரெண்டையும் சேத்துக் கீழ்க்கட்டு கட்டிற மாதிரித் தான் கால்ரெண்டையும் சேத்தபடி தளைநாரைப் போடோணும். கட்டிப்பிடிச்சு ரெண்டடி ஏறீட்டுப் கொடுக்கு மாதிரி ரெண்டு காலாலேம் மரத்தைப் பிடிச்சிட்டுக் கையை உயத்தி மரத்தைச் சுத்திப் பிடிச்சபடி உடம்பை நிமித்தி எழும்ப வேணும். எழும்பீட்டு திருப்பியும் காலால மரத்தை கொடுக்குப்பிடி பிடிச்சபடி கையை இன்னும் மேல எடுத்து பிறகு மரத்தைக் ஒரு கையால கட்டிப் பிடிச்சபடி balance பண்ணிக்கொண்டு மற்றக்கையை மரத்தோட கவிட்டுப்பிடிச்சு கையைக்குத்தி கால் ரெண்டையும் சேத்தபடியே எடுத்து மேல எடுத்து வைக்க வேணும் . அப்பிடிக் காலை உயத்தேக்க உடம்பு மரத்தோட சாயாம சரிவாத்தான் இருக்கோணும் இல்லாட்டி காலை உயத்திறது கஸ்டம் . மரத்தைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு மரத்தோட சேத்துக் காலை இழுத்தாக் கை கால் நெஞ்செல்லாம் சிராயப்புத் தான் வரும்” எண்டு சொல்லப் பேசாம கேட்டுக் கொண்டு நிண்டான் இந்த முறை சரியாப் பழகோணும் எண்ட விருப்பத்தோட.  முதலில வெறும் ஏத்தம் இறக்கம் தான் பயிற்சி. ஓலை வெட்டி, நொங்கு புடுங்கி , சீவின பாளையில பானை மாத்தி இறக்கப் பழகி கடைசீல தான் சீவத் தொடங்கிறது. பிளேன் ஓடிற மாதிரித்தான் இதுகும் ஏற முதலே check list மாதிரி எல்லாம் இருக்கா எண்டு விபரமாய்ப் பாக்கோணும், ஏறீட்டு முட்டீல ஓட்டை, கத்தி மொட்டை எண்டு சொல்லக்கூடாது. “தொடக்கத்தில ஏறினாப்பிறகு பாளை வெட்டி முட்டி கட்டேக்க இடுப்புக்கயித்தைப் போட்டுக் கொண்டு நிக்கோணும், போகப்போக மட்டைக்குள்ள ஏறி நிண்டு வெட்டிலாம்”, எண்டு திருப்பித்தருப்பிச் சொல்லிக் குடுக்க இதிலேம் இவ்வளவு விசயம் இருக்கிறது அவனுக்கு விளங்கத் தொடங்கினது . “அதோட ஏறேக்க நேராப் பாக்கோணும் இல்லாட்டிப் பக்கத்து மரத்தைப் பாக்கலாம். மேல போகேக்க மேகத்தைப் பாத்தாலோ இல்லாட்டி இறங்கேக்க நிலத்தைப் பாத்தாலா சரி தலைசுத்தத் தொடங்கப் பயம் வந்திடும். ஆனால் கொஞ்ச நாளில பழகினாப் பிறகு ஏறி நிண்டபடி கீழ என்ன நடக்குது எண்டு பாக்க நல்லா இருக்கும் எண்டு சொன்னன். காத்துக்க ஏறி இறங்கேக்க பனைசாயிறதுக்கு எதிர்ப் பக்கமா ஏறு மற்றப்பக்கம் நிண்டா மரம் முறிஞ்சு விழப்போற மாதிரி இருக்கும். ஒரு நாளும் பனை ஆக்கள் ஏறேக்க விழாது. ஆளைத் தாங்கிற சத்தில்லாட்டி பனை சோடைபத்தீடும். முதலில ஓலை விழுந்து, நுனி பட்டு பிறகு தான் அடி பழுதாப் போகும் ஆனபடியா நுனி பழுதாப்போன மரங்களில ஏறிரேல்லை. அதோட ஒருநாளும் விக்கிற சாமானை வாயில வைச்சுப் பாக்காத. மரம் ஒருக்காலும் கலப்படம் செய்யாது. அது தன்டை சாறைத்தான் தாறது. சாறு கெட்டதில்லை, இனிப்பும் புளிப்பும் தண்ணிக்கு, மண்ணுக்கு, மழைக்கு எண்டு மாறும்” எண்டு கள்ளுபதேசம் செய்யக் கேட்டுக் கொண்டிருந்தான்.  ஒலை வெட்டக்கேட்டா கவனம் ஒண்டைவிட்டொரு வருசம் தான் வெட்டிறது, காண்டாவனம் நடக்கேக்க வெட்டிறேல்லை. அப்பிடி ரெண்டு வருசம் வெட்டாத மரம் எண்டால் கவனம் காவோலை வெட்டேக்க குளவி இருக்கும் எண்டு அனுபவத்தை அப்பா சொல்லக் கவனாமாக் கேட்டான் சின்னவன்.  மூண்டு மாசம் அப்பரோட போனவன் , தனக்கெண்டு மூண்டு மரம் தேடிப்பிடிச்சு தனிச்சுத் தொழில் தொடங்கினான்.  காலமைத் தொழிலுக்கு நாலு நாலரைக்குப் போறாக்களும் இருக்கினம். இரவல் காணீல பேசிக் காசு குடுத்து ஏறிப் பாளை வெட்டி நுனி கொத்தி , முட்டி கட்டி இறக்கி , எல்லா மரத்தையும் ஒரு can இல ஊத்திக் முழுசா நிரப்பிக் கொண்டு போக வழி மறிச்சுக் கேட்டவனுக்கும் முட்டீல இருக்கிறதை குடுத்திட்டு மிச்சத்தை தவறணைக்கு கொண்டு போக , அவன் சும்மா விலையைக் குறைக்க “ என்ன நேற்றைக்கு கொஞ்சம் புளிச்சிட்டு” எண்டிற புளிச்சல் கதையையும் கேட்டிட்டு , திருப்பி வந்து மனிசி விடிய கட்டித் தந்ததை விழுங்கீட்டு திருப்பி அடுத்த வளவுக்க ஏறி இறக்க பத்து மணி ஆகீடும். வெய்யில் ஏறக் கள்ளுப் புளிச்சிடும் எண்டதால மத்தியானக் கள்ளை ஆரும் கிட்ட இருக்கிற ஆக்களுக்கு வீடு வளிய போய்க்குடுத்தா கொஞ்சம் கூடக்கூறையத் தாறதோட வெறுந்தேத்தண்ணியும் கிடைக்கும். போய்ச் சாப்பிட்டிட்டுப் படுத்தாஅடுத்த இறக்கம் பின்னேரம் நாலு மணிக்குத்தான்.  “என்ன மாமா வெளீல இருந்து வந்திருக்கிறார் போல, எங்களுக்கு ஏதும் போத்திலைக் கீத்திலைக் கொண்டந்தவரே” எண்டு கேட்ட படி வாறவருக்கு ஓம் ஒரு party ஐப் போடுவம் ஆனால் , “ அவருக்கு நல்ல கூழ்வேணுமாம் அதோடரெண்டு கிடாய்ப் பங்கும் வேணுமாம், பங்கு போட்டிட்டு ரத்தவறை வறுத்து முடிய உடன் கள்ளும் வேணுமாம்” எண்ட சம்பாசணை எல்லா வீட்டையும் கேட்டிருக்கும் .   இக்கரைக்கு அக்கரைப் பச்சையாய் எங்கடை சனத்துக்கு அவை கொண்டாற போத்தில தான் நாட்டம் இருக்கும் , ஆனா அவை குடிச்சா ஒரு பனைக்கள்ளுத் தான் குடிப்பன் எண்டு தேடிக் குடிப்பினம். அவையோட ஊருக்குப் புதுசா வாறதுகள் இறக்கிறவனை ஏறவிட்டு நிமிந்து பாத்துப் வீடியோ எடுத்து ஊரெல்லாம் “எங்கள்” புகழைப் பரப்ப வெளிக்கிடுவினம் . வந்தவை இறக்கினதை குனிஞ்ச படி குடிச்சிட்டு “எண்டாலும் பழைய taste இல்லை” எண்டு ஒரு கதை விட்டு ஆனாலும் அடி மண்டி வரை குடிப்பினம். இறக்கினதை மட்டும் பாக்கிறவைக்கு ஒருநாளும் இறக்கிறவனைத் தெரியாது . நெஞ்சு மடிப்போட சேத்தா 8 packs பனங்கட்டி நிறத் தேகம், பிறப்புக்கு முதலே எழுதப்பட்ட விதியால் பிரியோசனமில்லாமல் போய் ஏறிஏறியே அழிக்கப்பட்ட கைரேகை,  காலமை குளிச்சாப்பிறகு உடம்பைத் துடைச்சிட்டுத் தலையில கட்டின துவாயத்துண்டு, எப்பவுமே மடிச்சுக்கட்டின சாரம், இடுப்பில கட்டின சாரத்தை இறுக்கிக் கொண்டிருந்த இடுப்புப் பட்டியில இயனக்கூடு, சைடில தொங்கிற தளைநார், அதோட சேந்த முட்டி , சாரத்துக்க செருகின பாளைக்கத்தி, tyre less ரியூப் மாதிரி இருக்கிற வழுவழுப்பான tyreஓட முன்னுக்கும் பின்னுக்கும் பழைய can தொங்கவிட்ட கறள் கட்டின சைக்கிளில வாறவனின்டை கள்ளு மட்டும் எங்களுக்கு இனிக்கும், ஆனாலும் இன்னும் இறக்கிறவனை மட்டும் ஏனோ இனிக்கேல்லை இன்றைக்கும்.   Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.
    • ஒரு கையில் வாங்கி, மறுபக்கத்திலுள்ள குப்பைக்கூடையில் போட்டிருப்பார், இதுதானே இருவரும் சேர்ந்து எழுதிய உடன்படிக்கைகளுக்கும் நடந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்றறிய தெரியாது, அதை தெரிந்து கொள்ள விருப்பமுமில்லை, தெரிந்து என்னதான் செய்யப்போகிறார்கள்? ஏதோ சந்தர்ப்ப சூழ் நிலையால் வந்தவரை இப்படி பிடி என்று கையில கொடுத்தால் என்ன செய்யிறது அவர்? ஒருவேளை முதல் ஓலையை வழங்கி ஆசி பெற்று அடுத்து அவர் கட்சியில் சேரப்போகிறாரோ யாராவா? அதை, அவர்களை தெரிந்தெடுத்த மக்களுக்கல்லவா தெரியப்படுத்த வேண்டும்? தமிழ் தெரியாத ஒருவருக்கு கொடுப்பதால் ஒரு பிரயோசனமுமில்லை, வெறும் பித்தலாட்டம், எல்லோரையும் ஏமாற்றும் செயல்!  இதுவரை இல்லாத புதுக்கலாச்சாரம், தேர்தல் பிரச்சார மேடையில் கோமாளிக்கூத்து.  உதுதான் முதலும் கடைசியுமான இதழோ தெரியவில்லை? அவ்வளவு கைராசி, முதற் பிரதி குப்பைக்கூடையில். சுமந்திரனை பாத்து பல்லிளிக்கும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.