Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சீமான் கைது எப்போது?

SelvamJul 13, 2024 09:20AM
GRipZX_XoAAr_11.jpeg

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர்.

நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது… நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து மேடையில் முதல் வரிசையில் சீமான் அமர்ந்திருக்க, கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஒரு கூட்டத்தில் பேசினார்.

அப்போது, திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன மறைந்த கலைஞர் பற்றி ஹனீஃபா பாடிய பிரபலமான பாடலை தழுவி கலைஞரை மிகக் கடுமையாக விமர்சித்து வார்த்தைகளை மாற்றி பாடினார்.

1278270-768x421.jpg

அது மட்டுமல்ல அமைச்சர் உதயநிதியை புகழ்ந்து தற்போது திமுக மேடைகளில் பாடப்படும் பாடலையும் கேலி செய்து வரிகளை மாற்றி பாடினார். இவற்றை ரசித்து கைதட்டினார் சீமான்.

இந்த நிலையில், சாட்டை துரைமுருகனின் பேச்சு பதிவுகள் உளவுத்துறை மூலம் மேல் இடத்திற்கு சென்றன. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முடியும் வரை காத்திருந்த போலீஸ், தேர்தல் முடிந்ததும் குற்றாலத்தில் தங்கி இருந்த துரைமுருகனை சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது.

ஜூலை 11ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சாட்டை துரைமுருகனை இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என்று கீழமை நீதிபதி விடுவித்துவிட்டார்.

சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட அதே நேரம் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “கருணாநிதி என்றைக்கும் தமிழின துரோகி தான். உங்க ஆட்சிங்கறதுனால உங்க அப்பாவை புனிதப்படுத்தி விடுவீர்களா? அதே பாட்டை நானும் இப்போது பாடுகிறேன். என் மீது கை வைத்து பார் பார்ப்போம்” என்று சவால் விட்டு பிரச்சார மேடையில் சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை செய்தியாளர்கள் முன் பாடினார் சீமான்.

இந்நிலையில், ” திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்த சீமான், தலைவர் கலைஞரையே மிகவும் கொச்சைப்படுத்தி விட்டார். இனியும் நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று திமுகவின் பல மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை வற்புறுத்தி இருக்கிறார்கள்.

இந்த சூழலில் தான் ஜூலை 12ஆம் தேதி அமைச்சர் கீதாஜீவன் பத்திரிகையாளர்களை சந்தித்து சீமானை கடுமையாக விமர்சித்தார்.

சீமான் சட்டம் ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும்… ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு உரிய பொறுப்புணர்வு அவருக்கு இல்லை என்றும் அவரது மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார் அமைச்சர் கீதா ஜீவன்.

சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் சீமான் செயல்படுகிறார் என்று ஒரு அமைச்சரே சொல்லும்போது அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்று திமுகவினரே கேள்வி எழுப்புகிறார்கள்.

1278385-768x445.jpg

இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் நாம் பேசிய போது, “2009, 2010 காலகட்டத்தில் தமிழகத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அப்போது இலங்கையின் இறுதிப்போர் நடந்த நிலையில்… திமுகவையும் திமுக அரசையும் எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன.

அப்போது நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் இருந்தது. தமிழ் உணர்வாளராக மட்டுமே அறியப்பட்டிருந்தார் சீமான்.

ஒரு கட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் சீமானை கைது செய்து சிறையில் அடைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அதிகாரிகள், ‘அவரை கைது செய்து சிறையில் அடைத்தால் அவருக்கு அது அரசியல் ஆதாயமாகிவிடும்’ என்று முதலமைச்சர் கலைஞரிடம் தெரிவித்தார்கள்.

1_q63qrhlgFtyz_JR3JtkTyg.jpg

ஆனால் கலைஞரோ அப்போது வீரியமாக போராடிக் கொண்டிருந்த வைகோவின் பலத்தை குறைப்பதற்கு சீமான் பயன்படுவார் என்று கணக்கு போட்டு… ‘சின்ன பையனா இருந்தா என்ன கைது பண்ணுங்க’
என்று சீமானை பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அதன்படியே சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஆறு மாத காலம் வேலூர் மத்திய சிறையில் இருந்த சீமான் விடுதலையாகி வெளியே வந்த பிறகு தமிழ் தேசிய அரசியலில் வைகோவின் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்தார். அது அன்று கலைஞர் போட்ட அரசியல் கணக்கு.

seeman23445-1523543392.webp

இதேபோல கடந்த 2023 வருட இறுதியில் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து புகார்களை சென்னைக்கு வந்து எழுப்பினார். இதன் அடிப்படையில் வளசரவாக்கம் காவல் நிலையம் சீமானுக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரித்தது. அப்போதும் சீமானை கைது செய்யக்கூடிய ஒரு சூழல் உருவானது.

ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், ‘என் அப்பா செய்த தப்பை நான் செய்ய மாட்டேன். அவரை அப்போது கைது செய்திருக்காவிட்டால் அரசியலில் இப்படி வந்திருக்க மாட்டார். இப்போது அவரை கைது செய்தால் மீண்டும் அது அவருக்கு அரசியல் ஆதாயம் ஆகிவிடும்’ என கைது நடவடிக்கையை தவிர்த்தார் ஸ்டாலின்.

ஆனால் இன்று… மறைந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் கலைஞருக்கு எதிராக மிக கடுமையான வார்த்தைகளால் சீமான் அவரை இழிவு படுத்துகிறார். சீமானை கைது செய்து ஆக வேண்டும் என்று முதலமைச்சருக்கு அழுத்தங்கள் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன.

தற்போது சீமானை கைது செய்தால் அது எதிர்க்கட்சிகளை ஒருமுகப்படுத்தும் அரசியல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்ததாக ஆகிவிடுமோ என்ற கருத்தும் ஒரு பக்கம் இருக்கிறது. என்றாலும் இறுதி முடிவு முதலமைச்சர் கையில் தான் உள்ளது” என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.

Screenshot-2024-07-13-103751.jpg

நேற்று அமைச்சர் கீதா ஜீவனின் பேட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், “சண்டாளன் என்ற வார்த்தையை கருணாநிதியே பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். என்னை அச்சுறுத்துவதற்காக இப்படி செய்கிறார்கள். முழுமையான பதிலை நாளை சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

இன்று ஜூலை 13ஆம் தேதி பகல் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் சீமான். இதில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் சீமானை கைது செய்வதற்கு பல முகாந்திரங்கள் இருக்கிற நிலையில்… அவரை இன்னமும் பேச விட்டு பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதே திமுக நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது.
 

https://minnambalam.com/political-news/when-will-ntk-seeman-arrest/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தேப்ப‌ன் 2009 ம‌ற்றும் 2010க‌ளில் கைது செய்து வ‌ள‌த்து விட்ட‌வ‌ர்.....................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் சீமான் மீது த‌க‌ப்ப‌ன் செய்த‌ த‌ப்பை செய்ய‌ மாட்டார்...................சீமான் இன்று ந‌ட‌ந்த‌ ஊட‌க‌ ச‌ந்திப்பில் சொல்லி விட்டார் முடிந்தால் சிறைக்குள் பிடிச்சு போட‌ட்டும் தான் ஜாலியா புத்த‌க‌ங்க‌ள் ப‌டிச்சிட்டு வெளியில் வ‌ந்தும் இன்னும் ந‌ல்லா வைச்சு செய்வேன் என்று ஹா ஹா

 

திராவிட‌ கூட்ட‌ம் சும்மா கூவி போட்டு கிட‌க்க‌ தான் லாய்க்கு

 

 

மாரிதாஸ் என்ற‌ ந‌ப‌ர் பீஜேப்பிய‌ சேர்ந்த‌வ‌ர் ஊழ‌லின் த‌ந்தை க‌ருணாநிதி என்று க‌ண்ட‌ மேனிக்கு க‌ருணாநிதிய‌ க‌ழுவி ஊத்தினார்............................அவ‌ர்க‌ள் மீது ச‌ட்ட‌ம் பாயாது டெல்லியில் இருப்ப‌து மாரிதாஸ்சின் அர‌சு தானே அந்த‌ ப‌ய‌த்தில் மாரிதாஸ்ச‌ ஒன்றும் ப‌ண்ண‌ முடியாது😁.................................................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு திரைப்படத்தில் வடிவேலு நடித்த நிகைச்சுவை காட்சி வரும். ரீ கடையில் உட்கார்நிருக்கும் ஒருவரிடம் ஒரு சின்ன பையன் வந்து  அந்த நபரின் அப்பன் ஆத்தா எல்லோரையும் படு மோசமாக வாய்ககு வந்தபடி ஆபாசமாக  திட்டுவான். அந்த நபர் அதை கணக்கெடுக்க மாட்டார். அதை கண்ட வடிவேலு என்னப்பா இப்படி சகட்டு மேனிக்கு குடும்பத்தை இழுத்து  ஆபாசமாக திட்டுகிறானே சும்மா இருக்கிறீர்களே என்று கேட்டவாறு அந்த பையனை துரத்தி செல்ல அவன் அப்படியே போக்கு காட்டி வடிவேலுவை அழைத்து சென்று கிட்னியை எடுக்கும்  கூட்டத்திடம் மாட்டிவிட்டு அதற்கான கூலியை அந்த கும்பலிடம் வாங்கி கொண்டு சென்றுவிடுவான். பாவம் துரத்தி சென்ற வடிவேலு. இப்போது அந்த சின்ன பையன் கதா பாத்திரம் தான் சீமான்.  மாபியா கூட்டதின் அடியாளாக செயற்படும் சின்ன பையனை கண்ணுக்காம விடுவது தான் புத்திசாலித்தனம். 

Posted

 

திராவிட, பி ஜேபி , சீமான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும்

 

6 hours ago, கிருபன் said:

சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட அதே நேரம் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “கருணாநிதி என்றைக்கும் தமிழின துரோகி தான். உங்க ஆட்சிங்கறதுனால உங்க அப்பாவை புனிதப்படுத்தி விடுவீர்களா? அதே பாட்டை நானும் இப்போது பாடுகிறேன். என் மீது கை வைத்து பார் பார்ப்போம்” என்று சவால் விட்டு பிரச்சார மேடையில் சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை செய்தியாளர்கள் முன் பாடினார் சீமான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கருணாநிதி திட்டாத திட்டுக்களா..?! ஜெயலிலதா.. வை கோ போன்றவர்களை திடாத திட்டா. ஏதோ கருணாநிதி யோக்கியவான் போலவும்....

அண்மையில் ஸ்ராலின் கூட எரிதடி மாலா.. பா(f)னைப் போடு என்று ஒட்டுமொத்த தமிழகப் பெண்களையும் எள்ளி நகையாடியது கூட கைதுக்குரிய அம்சம் தானே.  இது குறித்து தி மு க மகளிர் அணி மூச்சும் விடவில்லை.

அண்மைய நாடாளுமன்ற.. மற்றும்.. இடைத்தேர்தல் பணநாயக வெற்றிக்கு பின்.. தி மு க கும்பல் கொஞ்சம் ஓவராத்தான் ஆடுது. 

Edited by nedukkalapoovan
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மத்தியில் பாஜக அரசு இருக்கும்வரை செந்தமிழன் சீமான் அண்ணாவை எதுவும் செய்யேலாது! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
49 minutes ago, வாலி said:

மத்தியில் பாஜக அரசு இருக்கும்வரை செந்தமிழன் சீமான் அண்ணாவை எதுவும் செய்யேலாது! 

ம‌த்தியில் இருக்கும் அர‌சு தான்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வேட்பாள‌ர்க‌ளிட‌ம்  என் ஜ‌ ஏ சோத‌னை விட்ட‌வை

 

க‌ட்சி சின்ன‌த்தை முட‌க்கின‌வை

 

இதை எல்லாம் ஏன் ம‌த்திய‌ அர‌சு செய்யுது..........................

Edited by வீரப் பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள திமுக உறுப்பினர்கள் ஒருவரையும் காணோமே? 

YYYYyyyyyy,...🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர்.

வாலைப் பிடித்ததற்கே மூஞ்சி உடைபட்டுப் போய் இருக்கினம்.

அப்புறம் எப்படி தலையை?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

'சண்டாளர்' என்பவர் யார்? அந்த வார்த்தையின் பின்னணி என்ன தெரியுமா?

சண்டாளர் யார்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 16 ஜூலை 2024

'சண்டாளர்' என்ற வார்த்தையை வசைச் சொல்லாகவும் கேலிச் சொல்லாகவும் பயன்படுத்துவது குறித்து தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் நலத்துறை கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த வார்த்தையின் பின்னணி என்ன?

'சண்டாளர்' சர்ச்சை

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியை 'சண்டாளர்' என்ற சொல்லைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ஒரு பாடலை பாடி, இழிவுபடுத்தியதால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்குப் பிறகு, இதுபோன்ற சொற்களை பயன்படுத்துவோர் மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் எச்சரித்திருக்கிறது.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாடல் உருவான பின்னணி

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் டால்மியா சிமென்ட் ஆலை நிறுவப்பட்ட பிறகு, அந்தப் பகுதியின் பெயர் 'டால்மியாபுரம்' என மாற்றப்பட்டது. இந்தப் பெயர் மாற்றத்தை எதிர்த்து 1953ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி மு. கருணாநிதி தலைமையில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்தப் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதற்குப் பிறகு, 1970களின் துவக்கத்தில் மு. கருணாநிதி குறித்து 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்ற பாடல் எழுதப்பட்டு, நாகூர் ஹனீஃபாவால் பாடப்பட்டது. தி.மு.கவின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் அனைத்திலும் இந்தப் பாடல் ஒலித்துவந்தது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக, அந்தப் பாட்டின் மெட்டிலேயே, மு. கருணாநிதியை வசைபாடும் வகையில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டது. அந்தப் பாடல் அ.தி.மு.கவினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்தப் பாடலில் 'சண்டாளர்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

'சண்டாளர்' என்பவர் யார்?

பட மூலாதாரம்,SAATTAIDURAI/X

சாட்டை துரைமுருகன் கைதும் கட்சிகள் கருத்தும்

இந்தப் பாடலைத்தான் விக்கிரவாண்டி தேர்தல் பிரசார மேடையில் பாடினார் சாட்டை துரைமுருகன். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை நீதிமன்றக் காவலில் அனுப்பாமல் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நானும் அதே வார்த்தையைச் சொல்கிறேன். முடிந்தால் அரசு கைதுசெய்யட்டும். அந்தப் பாடலை எழுதியது வேறு யாரோ.. அவர்கள் எழுதியதைத்தான் நாங்கள் பாடினோம்" என்று குறிப்பிட்டார்.

இதற்கு அமைச்சர் கீதாஜீவன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் எச்சரிக்கை

இந்த நிலையில்தான் இது தொடர்பாக ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.

அந்த எச்சரிக்கையில், "பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன்படி, பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இந்தியாவிலும் சண்டாளர் என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48ஆம் இடத்தில் இருக்கிறது.

அண்மைக் காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொதுவெளியில் சமூக ஊடங்களில் அழுத்தமாக பேசப்படுவதைக் காண முடிகிறது. எனவே இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 1989ன் கீழ் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரைக்கிறது" என்று கூறப்பட்டிருக்கிறது.

 
'சண்டாளர்' என்பவர் யார்?

பட மூலாதாரம்,TNDIPR

சண்டாளர்கள் யார்?

தமிழ்நாட்டின் பட்டியல் பிரிவினரில் 48வது சாதியாக சண்டாளர் என்ற சாதி பட்டியலிடப்பட்டிருக்கிறது. 1971ஆம் ஆண்டின் இந்திய சென்சஸ் ஆவணத்தில் தமிழ்நாட்டின் பட்டியலினத்தினர் குறித்த இனவியல் குறிப்புகளில் "தர்ம சாஸ்திரங்களின்படி சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தையே சண்டாளர் என அழைக்கப்படும் என்றும் அவர்கள் கிராமங்களுக்கு வெளியில் வசிக்க வேண்டும். மரண தண்டனைகளை நிறைவேற்றுவது இவர்களது வேலை" என்று கூறுவதாக சுட்டிக்காட்டுகிறது.

பொதுவாக சடலங்களை எரிப்பது இவர்களது பணியாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்தியா முழுவதுமே சில இடங்களில் இந்த சாதியினர் வசிக்கிறார்கள். பொதுவாக, இந்துக்களில் பிற சாதியினர் இவர்களை தீண்டத்தகாத சாதியினராக கருதுகிறார்கள். மேற்குவங்கத்தில் இந்த சாதியினர் தற்போது நாமசூத்திரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இப்போது அங்கே ஒருவரை சண்டாளர் என அழைப்பது இழிவுபடுத்துவதற்காகவே அழைக்கப்படுவதாக கருதப்படுகிறது.

"சீமான் இயக்கிய படத்தில் சண்டாளன் என்ற வார்த்தை"

"சமீப காலங்களில் சாதி பெயர்களைச் சொல்லி ஒருவரை கேலி செய்வது, இழிவுபடுத்துவது போன்றவை அதிகரித்துவருகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் சர்வசாதாரணமாக சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். பொதுவெளியில் யாராக இருந்தாலும் சாதிப் பெயர்களைச் சொல்லி கேலியாகவோ, இழிவாகவோ பேசுவது ஏற்க முடியாத ஒன்று. அதனால்தான் அத்தகைய அறிக்கை வெளியிடப்பட்டது" என்கிறார் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உறுப்பினரான குமாரதேவன்.

சண்டாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக கண்டனம் எழுவது இது முதல் முறையல்ல. 2006ஆம் ஆண்டுவாக்கிலேயே அப்போது இயக்குநராக இருந்த சீமான் தனது திரைப்படத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியது குறித்து அவரிடம் சுட்டிக்காட்டியதாக சொல்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.

"சீமான் இயக்கி 2006ஆம் ஆண்டில் வெளிவந்த 'தம்பி' படத்தில் வடிவேலுவின் பாத்திரம் உட்பட பல பாத்திரங்கள் இந்த வார்த்தையை சகஜமாக பயன்படுத்துவார்கள். அந்தப் படத்தைப் பார்த்த போது எனக்கு மிக வருத்தமாக இருந்தது. அந்தத் தருணத்தில் நான் 'தலித் முரசு' ஆசிரியர் குழுவில் இருந்தேன். நான் சீமானை தொலைபேசியில் அழைத்து அந்த வார்த்தையை இப்படிப் பயன்படுத்துவது தவறு என்று சொன்னேன். இதைக் கேட்ட அவர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, எனக்கு ஒரு கடிதத்தையும் எழுதினார். அந்த சமயத்தில் மு. கருணாநிதி கூட ஒரு கண்டன அறிக்கையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். ஒரு கட்சிப் பத்திரிகையிலும் இந்த வார்த்தை இடம்பெற்றிருந்தது.

 
'சண்டாளர்' என்பவர் யார்?
படக்குறிப்பு,அழகிய பெரியவன், எழுத்தாளர்

"யாரையும் இழிவாகப் பார்ப்பது சரியானதல்ல"

இதையெல்லாம் சேர்த்து, சண்டாளர் என்ற வார்த்தையை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டு தலித் முரசுவில் ஒரு தலையங்கம் புனித பாண்டியனால் எழுதப்பட்டது.

யார் சண்டாளர்கள் என மனு ஸ்மிருதி வரையறுக்கிறது. அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்றால் அந்த மனநிலையில் இருந்துதானே பயன்படுத்துகிறோம் என்று அர்த்தம்? அந்த சாதியினர் இங்கே வசிக்கிறார்களா, இல்லையா என்பது பிரச்னையே இல்லை. ஒரு சாதிப் பெயரை இழிவுபடுத்துவதற்காக பயன்படுத்துவது ஏற்கத்தக்கதே அல்ல. அதுவும் ஒரு இயக்கம் நடத்துபவர்கள் இதனை செய்யக்கூடாது" என்கிறார் அழகிய பெரியவன்.

முன்பு பேசினார்கள், பாடினார்கள் அதனால் இப்போது அதைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறோம் என்பது ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிடும் அழகிய பெரியவன், யாரையும் இழிவாகப் பார்ப்பது சரியானதல்ல என்கிறார்.

நாம் தமிழர் கட்சி கருத்து

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, இந்த வார்த்தையை யாரையும் இழிவுபடுத்துவதற்காகச் சொல்லவில்லை என்கிறார்கள். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் முன்பே இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான பாக்கியராசன்.

"யாரையும் இழிவுபடுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. இது எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தையாகத்தான் இருந்தது. அந்தப் பாடலும்கூட அந்த அர்த்தத்தில் பாடப்படவில்லை. கருணாநிதியை விமர்சிக்கும் வகையில் பாடுவதற்காக விளையாட்டாகத்தான் சொல்லப்பட்டது. ஆனால், அந்தப் பாடல் காரணமாக, இப்படி ஒரு அறிக்கை வெளிவந்திருப்பது மகிழ்ச்சிதான். அவர்கள் இதை முன்பே செய்திருக்கலாம்" என்கிறார் பாக்கியராசன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இலங்கையில் சண்டாளர் என்று ஒரு சாதிப் பிரிவினர் இல்லை என நினைக்கிறேன். 

சண்டாளர், சண்டாளப் பாவி என்று வயதானவர்கள் திட்டுவதைக் கேட்டிருக்கிறேன். 

இங்கே பிரச்சனைக்குள்ளான பாடலிலும் சண்டாளன் என்பது சாதி அடிப்படையில் பாவிக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குரியது. 

 

Edited by Kapithan
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திமுகவும் அதன் தோழமைக்கட்சியான திராவிடர்கழகமும் பார்ப்பான் என்று சொல்லுவது சரிஎன்றீல் உது எப்படித்தவறாகும்.சண்டாளர் என்ற சொல் அயோக்கியர் என்ற கருத்திலேயே ஈழம் உட்பட தமிழர் வாழும் இடங்களில் புழக்கத்தில் உள்ளது.வேங்கை வயலில் மலத்தைக் கலந்தவனைக் பிடிக்காத தமிழக அரசை கண்டிக்காத திருமா வகையறாக்கள் ஸ்டாலனுக்கு துதி பாடுவதற்காக இப்படிச் சாதிச்சங்ககங்களை கொம்பு சீவி விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, புலவர் said:

திமுகவும் அதன் தோழமைக்கட்சியான திராவிடர்கழகமும் பார்ப்பான் என்று சொல்லுவது சரிஎன்றீல் உது எப்படித்தவறாகும்.சண்டாளர் என்ற சொல் அயோக்கியர் என்ற கருத்திலேயே ஈழம் உட்பட தமிழர் வாழும் இடங்களில் புழக்கத்தில் உள்ளது.வேங்கை வயலில் மலத்தைக் கலந்தவனைக் பிடிக்காத தமிழக அரசை கண்டிக்காத திருமா வகையறாக்கள் ஸ்டாலனுக்கு துதி பாடுவதற்காக இப்படிச் சாதிச்சங்ககங்களை கொம்பு சீவி விடுகிறார்கள்.

அண்மையில் தமிழகத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட பகுஜன் சமசமாஜக் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ரோங்கின் கொலையின் பின்னணியில் திருமாவளவனின் கையிருப்பதாகவும் கதை அடிபடுகிறது.  

Edited by Kapithan
  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.