Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்

1278961.jpg கோப்புப்படம்
 
ரோம்: கொத்தடிமைகளாக இத்தாலி நாட்டின் பண்ணைகளில் பணியாற்றி வந்த 33 இந்திய தொழிலாளர்களை விடுத்துள்ளதாக இத்தாலி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனை சனிக்கிழமை அன்று போலீஸ் தரப்பு தெரிவித்தது.

கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் 31 வயதான சத்னம் சிங் என்ற இந்திய தொழிலாளியின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் அவரை சாலையில் விட்டு சென்றனர் அவர் வேலை பார்த்து வந்த தோட்டத்தின் உரிமையாளர்கள். அதன் பின்னர் அவர் உயிரிழந்தார். இதையடுத்து இத்தாலியில் கொத்தடிமை தொழிலாளர்கள் மீதான அத்துமீறல் கவனம் பெற்றது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த தோட்டத்தின் உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த சூழலில் தெற்கு இத்தாலி பகுதியில் கொத்தடிமைகள் போல பணியாற்றும் தொழிலாளர்கள் நலன் சார்ந்த விவகாரம் கவனம் பெற்றது. இதன் பின்னணியில் இந்தியர்கள் சிலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இத்தாலியில் இந்தியர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து இத்தாலி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தான் அங்குள்ள பண்ணைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 33 இந்தியர்களை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். மேலும், அவர்களை இதில் ஈடுபடுத்திய இருவரிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடியை பறிமுதல் செய்துள்ளனர்.

அங்குள்ள பண்ணைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த புலம்பெயர் இந்திய தொழிலாளர்கள் வாரத்தில் 7 நாட்கள், நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரையில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.360 கூலியாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் செலுத்தினால் இத்தாலியில் சிறப்பான எதிர்காலம் அமைத்து தருவதாக கூறி இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த தொகையை முழுவதுமாக செலுத்தும் வரை இத்தாலியில் பணியாற்றும் அவர்களுக்கு சம்பளம் ஏதும் வழங்கப்படாது என்றும் தகவல். அவர்கள் சீசனல் வொர்க் பர்மிட்டில் அங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதோடு கூடுதலாக ரூ.13 லட்சம் செலுத்தினால் நிரந்தர வொர்க் பர்மிட் வழங்கப்படும் என்றும் இந்திய தொழிலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்புகள் மற்றும் சட்டப்பூர்வமான குடியிருப்பு சான்று கிடைப்பதற்கான ஏற்பாடு செய்து தரப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மற்ற ஐரோப்பிய நாடுகளை போலவே இத்தாலியிலும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதன் காரணமாக அங்கு சட்டத்துக்கு புறம்பாக அரசின் அனுமதி இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும். அவர்களின் பங்கு விவசாய பணியில் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார் | Italian police free 33 Indian farm workers slavery - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

Visit visa வில் கனடாவுக்கு வந்திருக்கும் நமதாட்களின் நிலையோ இன்னும் மோசம். 

மாடுமாதிரி வேலை வாங்கிவிட்டு $4/$5 கூடக் கொடுக்காமல் விடும் சம்பவங்கள் ஏராளம். 

தமிழனின் உண்மையான குணம் தற்போதுதான் காணக் கிடைக்கிறது. 

🤮

2 hours ago, Kapithan said:

Visit visa வில் கனடாவுக்கு வந்திருக்கும் நமதாட்களின் நிலையோ இன்னும் மோசம். 

மாடுமாதிரி வேலை வாங்கிவிட்டு $4/$5 கூடக் கொடுக்காமல் விடும் சம்பவங்கள் ஏராளம். 

தமிழனின் உண்மையான குணம் தற்போதுதான் காணக் கிடைக்கிறது. 

🤮

நீங்கள் ஏன் இப்படி செய்கின்ற முதலாளிகள் பற்றி தகுந்த இடத்தில் முறையிடக் கூடாது?

toll free in Ontario: 1-800-531-5551. 

மேலே உள்ள இலக்கத்துக்கு தொலைபேசியில் அழைத்துக் கூட உங்களால் முறையிட முடியும். அல்லது, CRA இன் காதிலும் போட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

Visit visa வில் கனடாவுக்கு வந்திருக்கும் நமதாட்களின் நிலையோ இன்னும் மோசம். 

மாடுமாதிரி வேலை வாங்கிவிட்டு $4/$5 கூடக் கொடுக்காமல் விடும் சம்பவங்கள் ஏராளம். 

தமிழனின் உண்மையான குணம் தற்போதுதான் காணக் கிடைக்கிறது. 

🤮

இந்த பணம்    சம்பளம்   இருப்பிடம்.  உணவுகள்   ஆடைகள்   போதுமா??    

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நீங்கள் ஏன் இப்படி செய்கின்ற முதலாளிகள் பற்றி தகுந்த இடத்தில் முறையிடக் கூடாது?

toll free in Ontario: 1-800-531-5551

மேலே உள்ள இலக்கத்துக்கு தொலைபேசியில் அழைத்துக் கூட உங்களால் முறையிட முடியும். அல்லது, CRA இன் காதிலும் போட முடியும்.

பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் Vsit visa வில் வந்தவர்கள். அகதிக் கோரிக்கையை முன்வைத்தவர்கள். அவர்களிடம் Work permit இல்லை. 

இதனைச் சாதகமாகப் பாவித்து எங்கள் ஓநாய்கள் அவர்களைச் சுரண்டுகின்றன. 

2 hours ago, Kandiah57 said:

இந்த பணம்    சம்பளம்   இருப்பிடம்.  உணவுகள்   ஆடைகள்   போதுமா??    

$5 ஒரு நேரச் சாப்பாட்டிற்கே போதாது. 

21 minutes ago, Kapithan said:

பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் Vsit visa வில் வந்தவர்கள். அகதிக் கோரிக்கையை முன்வைத்தவர்கள். அவர்களிடம் Work permit இல்லை. 

இதனைச் சாதகமாகப் பாவித்து எங்கள் ஓநாய்கள் அவர்களைச் சுரண்டுகின்றன. 

$5 ஒரு நேரச் சாப்பாட்டிற்கே போதாது. 

ஆக, இங்கு இரு தரப்புமே சட்டத்துக்கு எதிராகத்தான் செய்கின்றனர்.

விசிட் வீசாவில் வந்தால் வேலை எடுக்கலாம் என்று தவறான, சட்டத்துக்கு முரணான, நம்பிக்கையை விதைத்து இங்கே வரவழைத்த உறவினர்கள் / நண்பர்களும் இதற்கு பொறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

ஆக, இங்கு இரு தரப்புமே சட்டத்துக்கு எதிராகத்தான் செய்கின்றனர்.

விசிட் வீசாவில் வந்தால் வேலை எடுக்கலாம் என்று தவறான, சட்டத்துக்கு முரணான, நம்பிக்கையை விதைத்து இங்கே வரவழைத்த உறவினர்கள் / நண்பர்களும் இதற்கு பொறுப்பு.

விசிட் விசா முடிந்த பின்  கனடாவில் உள்ள வெளிநாட்டுகுடிமக்களின். சட்டங்களுக்கிணங்க.  வேலை அனுமதி    விசா  ஒரு வெளிநாட்டவன் என்ற அடிப்படையில்  கோர முடியாத??  எனக்கு ஒரு சமூக உதவியும் வேண்டாம்   வேலை அனுமதி மட்டுமே தந்தால்  போதும்   அத்துடன் விசா உம் தான்     கேட்கலாமா.   ??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஆக, இங்கு இரு தரப்புமே சட்டத்துக்கு எதிராகத்தான் செய்கின்றனர்.

விசிட் வீசாவில் வந்தால் வேலை எடுக்கலாம் என்று தவறான, சட்டத்துக்கு முரணான, நம்பிக்கையை விதைத்து இங்கே வரவழைத்த உறவினர்கள் / நண்பர்களும் இதற்கு பொறுப்பு.

vist visa வில் வந்து அகதிக் கோரிக்கையை முன்வைத்து work permit க்காகக்  காத்திருப்பவர்களுக்கு தங்கள் நாளாந்தச் செலவுகளைச் செய்வதற்கே அல்லாடும் நிலையில்,  சொந்த மக்களின் இரத்தத்தையே உறிஞ்சும் செயல் மிகவும் ஈனத்தனமானது. 

அப்படியான சட்டங்கள் எதுவும் இங்கே இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

ஆக, இங்கு இரு தரப்புமே சட்டத்துக்கு எதிராகத்தான் செய்கின்றனர்.

கனடாவில் மட்டுமல்ல இலண்டன், யேர்மனி எனத் தொடர் சுரண்டல்தான்.வேலைக்கான அனுமதியற்ற தற்காலிக வதிவிட அனுமதியுடையோரில் முதலாளிமார்களுக்கு ஒரே பாசம். அதனால் குறைந்த சம்பளத்துக்காவது வேலைகொடுக்கிறார்கள். அதுகூட ஒருவகையில் ஆபத்து. இங்கே அண்மையில் வீதிதிருத்தும் இடத்திலே பரிசோதனை நடாத்திப் பலரை  அழைத்துச் சென்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஆனால் அனுமதிப்பத்திரமற்ற வேலையும் தொடர்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

vist visa வில் வந்து அகதிக் கோரிக்கையை முன்வைத்து work permit க்காகக்  காத்திருப்பவர்களுக்கு தங்கள் நாளாந்தச் செலவுகளைச் செய்வதற்கே அல்லாடும் நிலையில்,  சொந்த மக்களின் இரத்தத்தையே உறிஞ்சும் செயல் மிகவும் ஈனத்தனமானது. 

இங்கு மட்டுமா யாழ் ஆஸ்பத்திரியை சுற்றி உள்ள தனியார் மருத்துவ மனை பங்குதாரர்கள் யார் சிங்களவனா ? எல்லாம் இங்கு உழைத்தது காணாது என்று அங்கு போய் கொட்டமடிக்கும் தமிழ்  பண பேய்கள் . சாவகசேரியில் வெடித்த வெடி அங்குள்ள தனியார் மருத்துவ மனை பங்குதாரர்களை அடையாளம் காட்டி உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, nochchi said:

கனடாவில் மட்டுமல்ல இலண்டன், யேர்மனி எனத் தொடர் சுரண்டல்தான்.வேலைக்கான அனுமதியற்ற தற்காலிக வதிவிட அனுமதியுடையோரில் முதலாளிமார்களுக்கு ஒரே பாசம். அதனால் குறைந்த சம்பளத்துக்காவது வேலைகொடுக்கிறார்கள். அதுகூட ஒருவகையில் ஆபத்து. இங்கே அண்மையில் வீதிதிருத்தும் இடத்திலே பரிசோதனை நடாத்திப் பலரை  அழைத்துச் சென்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஆனால் அனுமதிப்பத்திரமற்ற வேலையும் தொடர்கிறது.  

மேற்குலக நாடுகளில்  கள்ள வேலைக்கு பஞ்சமிருக்காது. ஆனால் ஒண்டு  சட்டம் ஆபிரிக்க அடிமைச் சட்டம். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

ஆக, இங்கு இரு தரப்புமே சட்டத்துக்கு எதிராகத்தான் செய்கின்றனர்.

விசிட் வீசாவில் வந்தால் வேலை எடுக்கலாம் என்று தவறான, சட்டத்துக்கு முரணான, நம்பிக்கையை விதைத்து இங்கே வரவழைத்த உறவினர்கள் / நண்பர்களும் இதற்கு பொறுப்பு.

அண்மையில் எனது உறவு. தாயகத்தில் படித்து திருமணமாகி பிள்ளைகளுடன் நல்ல உத்தியோகத்திலும் இருக்கிறார். இங்கே வரப் போகிறேன் கூப்பிட்டு விடும்படி அவரின் மனைவி இங்கே உள்ள தமையன் காரனுக்கு ஒரே தொலைபேசி அழைப்பு. அவர் வந்து என்னிடம் உதவியும் ஆலோசனையும் கேட்டார். நான் சொன்னேன் ஒன்றை மட்டும் அவருக்கு தெரியப்படுத்து. இங்கே வந்தால் விசா கிடைக்கிறது கடினம். விசா கிடைக்கும் வரை கோப்பை கழுவுதல் அல்லது தமிழ் முதலாளிகளிடம் எடுபிடி வேலை மட்டுமே. தெரிந்து கொண்டு வர விரும்பினால் சொல்லவும் என்று. இறுதியில் தான் வரவில்லை என்று சொல்லி விட்டார். 

(இங்கே வந்து ஏன் சொல்லவில்லை. நான் அங்கே எப்படி வாழ்ந்தனான். பேனை மட்டுமே பிடித்த கை என்று கனக்க ஏற்கனவே வாங்கியாச்சு,)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.