Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Capture-6.jpg?resize=750,375

பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!

பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க,   புதிய அரசாங்கமான தொழிலாளர் அரசாங்கம் (Labour Party) தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
 
பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
ருவாண்டா நாடு கடத்தல் திட்டமானது முன்னதாக கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
 
இந்தத் திட்டத்தை கைவிடுவதே தற்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)  அரசாங்கத்தின் முதல் முடிவுகளில் ஒன்றாக காணப்படுகின்றது.
 
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக  புலம்பெயர்பவர்கள் ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடு கடத்தப்படுவர் என்ற இந்த திட்டத்தை முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் (Boris Johnson) அறிமுகப்படுத்தினார்.
 
போரிஸ் ஜொன்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கின் (Rishi Sunak) ஆட்சிக் காலத்திலும் ருவாண்டா திட்டம் பெரும் பேசுபொருளாக இருந்தது.
 
ஆங்கில கால்வாய் வழியாக சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் வருவதை தடுக்க குறித்த திட்டம் உதவும் என ரிஷி சுனக் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், தற்போது, ஸ்டார்மரின் தொழிலாளர் அரசாங்கம் சுமார் 90,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் புகலிட விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்கத் தயாராகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
இவற்றில் சுமார் 60,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

133234753_gettyimages-2149677534.jpg?res

பிரித்தானியாவின் நாடு கடத்தல் திட்டம் இரத்து – ஆட்கடத்தல் கும்பல்கள் விளம்பரம்!

பிரித்தானியாவில், ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதால், தற்போது ஆட்கடத்தல் கும்பல்கள் புலம்பெயர்வோரிடம் விளம்பரம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற கெய்ர் ஸ்டார்மர் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை இரத்து செய்துள்ளார்.

இதனைதொடர்ந்து, சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய உதவும் ஆட்கடத்தல் கும்பல்கள், “இனி பிரித்தானியாவலிருந்து நாடு கடத்தப்படமாட்டீர்கள்” என விளம்பரம் செய்து வருவதாக தெரிய வருகின்றது.

 

அண்மையில் சமூக ஊடகமான டிக்டொக்கில் வெளியான சோமாலிய மொழி விளம்பரம் ஒன்றில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய விரும்பும் சோமாலியர்களைக் குறிவைத்து, “ருவாண்டா திட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி ஒருவர் கூட நாடு கடத்தப்படமாட்டீர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், “எங்களுடன் பயணித்தால் நீங்கள் பிரித்தானியாவில் இருக்க முடியும்” எனவும் குறித்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பாதுகாப்பாக பிரித்தானியாவுக்குள் அழைத்துச் செல்ல, 2,500 பவுண்டுகள் கட்டணம் எனவும் அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393268

  • கருத்துக்கள உறவுகள்

லேபர் தான் முன்னரும் கிழக்கு ஐரோப்பாவை பிரிட்டனுக்குள் திறந்து விட்டு 14 ஆண்டுகள் காணாமல் போனவை. மீண்டும் பழைய குருடி கதவை திறவடி கதை தான். திருந்தாத ஜென்மங்கள். ஏலவே லண்டன் மும்பை.. கராச்சி ரேஜ்சுக்கு வந்திட்டுது. எனி லண்டனிலையே ருவாண்டாவை கொண்டு வந்திடுவாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

லேபர் தான் முன்னரும் கிழக்கு ஐரோப்பாவை பிரிட்டனுக்குள் திறந்து விட்டு 14 ஆண்டுகள் காணாமல் போனவை. மீண்டும் பழைய குருடி கதவை திறவடி கதை தான். திருந்தாத ஜென்மங்கள். ஏலவே லண்டன் மும்பை.. கராச்சி ரேஜ்சுக்கு வந்திட்டுது. எனி லண்டனிலையே ருவாண்டாவை கொண்டு வந்திடுவாங்கள். 

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள்  ஓடத்தில் ஏறும். 

மும்பாயையும் கறாச்சியயும் வெள்ளை ஆண்டார்களல்லவோ. கொஞ்ச நாளுக்கு அவர்கள் ஆளட்டுமே,....😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Kapithan said:

மும்பாயையும் கறாச்சியயும் வெள்ளை ஆண்டார்களல்லவோ. கொஞ்ச நாளுக்கு அவர்கள் ஆளட்டுமே,....😁

இப்ப மட்டுமென்ன? அவர்கள் தானே ஆள்கின்றார்கள் ......இனியென்ன புதிசாய்? 🤣

Muslims protest on Whitehall against Charlie Hebdo cartoons of Prophet  Mohamed | The Independent | The Independent

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 “எங்களுடன் பயணித்தால் நீங்கள் பிரித்தானியாவில் இருக்க முடியும்” எனவும் குறித்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பாதுகாப்பாக பிரித்தானியாவுக்குள் அழைத்துச் செல்ல, 2,500 பவுண்டுகள் கட்டணம் எனவும் அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில காலத்திற்கு முன் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு வள்ளத்தில் ஏஜென்சி அனுப்பி வைத்த மாதிரி இலங்கையிலிருந்தும் வள்ளம் பிரித்தானியா நோக்கி புறப்படலாம்.

சோமாலியா விளம்பரத்தில் 2500 பவுன்ஸ் கட்டினால் காணுமாம். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, Kapithan said:

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள்  ஓடத்தில் ஏறும்.

GSlcwex-XQAAd-Fw-Z.jpg

no comment 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

GSlcwex-XQAAd-Fw-Z.jpg

no comment 

குமாரசாமி அண்ணை….  இதைப் பார்த்து @nedukkalapoovan க்கு பிரசர் ஏறப் போகுது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

இப்ப மட்டுமென்ன? அவர்கள் தானே ஆள்கின்றார்கள் ......இனியென்ன புதிசாய்? 🤣

Muslims protest on Whitehall against Charlie Hebdo cartoons of Prophet  Mohamed | The Independent | The Independent

அண்மையில் குடியரசுக் கட்சியின் உப ஜனாதிபதி வேட்பாளர்

இங்கிலாந்து ஒரு இஸ்லாமிய நாடு என்று விளித்திருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

அண்மையில் குடியரசுக் கட்சியின் உப ஜனாதிபதி வேட்பாளர்

இங்கிலாந்து ஒரு இஸ்லாமிய நாடு என்று விளித்திருந்தார்.

01-9.jpg?resize=750,375

அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா – ஜேடி வேன்ஸ்

 

அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 39 வயதுடைய ஜே.டி.வேன்ஸ் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், கூட்டமொன்றில் உரையாற்றிய ஜேடி வேன்ஸ்,

அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, முதலில் ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், உண்மையில், தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்த பிரித்தானியா தான் அணு ஆயுதம் பெறும் இஸ்லாமிய நாடு என முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக பிரித்தானியா இருந்து வரும் நிலையில் ஜேடி வேன்ஸின் இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரித்தானியாவின் துணை பிரதமர் ஏஞ்சலா ராய்னர் (Angela Rayner), இது போன்று குற்றச்சாட்டுகளை சுமத்துவது வேன்சுக்கு வழக்கம் என விமர்ச்சித்துள்ளார்.

https://athavannews.com/2024/1392693

animiertes-gefuehl-smilies-bild-0091.gif  😂  🤣 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

ஜேடி வேன்ஸ்

இவரது மனைவி ஒரு இந்தியர். இதற்குள் ஒரு இனவாத கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இவரது மனைவி ஒரு இந்தியர். இதற்குள் ஒரு இனவாத கருத்து.

இங்கே வந்ததும் கலந்ததும் தானே அதி உயர் இனவாதிகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

இவரது மனைவி ஒரு இந்தியர். இதற்குள் ஒரு இனவாத கருத்து.

இப்ப உலக அரசியல்ல இனவாதம் தானே மார்க்கெட்ல நிக்குது.. 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.