Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.கொள்ளைக்காரி கைது

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அனலைதீவை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று, கனடாவில் குடியுரிமை பெற்று வந்து அங்கு வசித்து வந்த நிலையில், விடுமுறையை கழிக்க அனலைதீவுக்கு கடந்த வருடம் வந்து தங்கியிருந்துள்ளது.

அந்நிலையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களிடம் இருந்த வெளிநாட்டு பணம் , நகைகள் , பொருட்கள் , கடவுசீட்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தது. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் , யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு , கொள்ளையடித்துக்கொண்டு மீள படகில் ஏறி தப்பி சென்றமையை கண்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் 03 நபர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு பெண்மணி ஒருவர் பணம் கொடுத்து  தம்மை கூலிக்கு அமர்த்தி தாக்குதலை மேற்கொள்ள கோரியதன் அடிப்படையிலையே தாம் தாக்குதல் மேற்கொண்டு கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர். 

அதனடிப்படையில் குறித்த பெண் மணியை சுமார் ஒன்றரை வருடங்களாக தேடி வந்த பொலிஸார்   புதன்கிழமை (24) பெண்மணியை கைது செய்துள்ளனர். 

குறித்த பெண்மணியிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , கனடாவில் உள்ள ஐயப்பன் கோவில் தலைவரே தனக்கு பணம் அனுப்பி தாக்குதல் மேற்கொள்ள கூறியதன் அடிப்படையிலையே தான் வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் கொடுத்து தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து குறித்த பெண்ணை  வியாழக்கிழமை (25)  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார் , பெண்ணை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர் 

பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்ற மன்று , பெண்ணனை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதித்துள்ளது. 

அதேவேளை குறித்த பெண் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் , அவருக்கு எதிராக ஏற்கனவே கொலை வழக்கொன்றும் , சில மோசடி வழக்குகளும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்-கொள்ளைக்காரி-கைது/71-341068

தொடர்பான திரி:

  • கருத்துக்கள உறவுகள்

தலைங்கம் அதிருகின்ற‌து. யாழ் கொள்ளைக்காரி!!

ரிவெல்வர் ரீட்டா, பிஸ்டல் பரிமளா, கன் பயிட் காஞ்சனா, அரிவாள் சொர்ணக்கா வரிசையில், 
பேதையவள் பெயர் என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கர  மாஃபியாக்கள் போல் 3000 டொலரை கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
1) கனடா ஐயப்பன் கோவில் தலைவரிடமிருந்து கொள்ளை அடிக்கச் சொல்லி கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது.
2) கிளிநொச்சியை சேர்ந்த... ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட  பெண்மணி...  மூன்று அடியாட்களை அமர்த்துகின்றார்.
3) அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு, கொள்ளையடித்துக் கொண்டு மீள பிரத்தியேக படகில் ஏறி தப்பி சென்றுள்ளார்கள்.
4) யாழ்.கொள்ளைக்காரி... ஒன்றரை  வருடமாக  பிடிபடாமல் பொலீசுக்கு தண்ணி காட்டியுள்ளார்.

கேள்வி: 1) கனடா ஐயப்பன் கோவில் தலைவருக்கு இவர்கள் ஊருக்குப் போகும் விடயம் எப்படி தெரிந்தது. 
2) இவர்கள் ஐயப்பன்  கோவிலுக்குப் போன இடத்தில், இலங்கைக்கு செல்வதாக அவரிடம் தெரிவித்தார்களா... அல்லது வேறு ஆட்களுக்கு சொல்ல... அவர்கள் மூலம் இந்தச் செய்தி பரவி அவரின் காதுக்கு எட்டியதா? 
3) அவர் கனடாவில் வசித்துக் கொண்டு, ஒரு பெரும் பொறுப்பில் இருந்து கொண்டு... 3000 டொலருக்கு ஏன் ஆசைப் பட்டார். 

ஊரில் கொள்ளையடித்தவர்களை சிங்கள போலீஸ் எப்படி கையாளப் போகின்றது என்று தெரியவில்லை. சிலவேளை இரண்டு பக்கமும் காசை வாங்கிக் கொண்டு வழக்கை இழுத்தடித்து காலப் போக்கில் மக்கள் அந்தச் சம்பவத்தை மறந்திருக்கும் நிலையில்... எல்லோரையும் விடுதலை செய்ய சந்தர்ப்பமும் உள்ளது.

ஆனால்... முதலில் இந்த கனடா ஐயப்பன் கோவில் தலைவர் மீது கொலை முயற்சி, கொள்ளை போன்றவற்றை தூண்டியதாக கனடா பொலிசில் ஒரு முறைப்பாடு செய்து 50 வருசமாவது மறியலில் போட வேண்டும்.
ஒரு வசதியான நாட்டில் வாழ்ந்து கொண்டு... 3000 டொலருக்கு கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த எருமை ...  உலகில் வெளியில் நடமாடவே  அருகதை அற்றவன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு வசதியான நாட்டில் வாழ்ந்து கொண்டு... 3000 டொலருக்கு கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த எருமை ...  உலகில் வெளியில் நடமாடவே  அருகதை அற்றவன்.

கனடாவில் இருந்து விடுமுறையில் தாயகம் வந்து, ஏழை எளியவர்களை கொள்ளைஅடிப்பதும், சண்டித்தனம் காட்டுவதும் நிறைய நடக்கிறது. ஒன்று இரண்டு செய்திகள் வெளியே வருகிறது. சந்திர மண்டலத்திற்கு போனாலும் பரவணிக்குணம் மாறாது கண்டியளோ!  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு வசதியான நாட்டில் வாழ்ந்து கொண்டு... 3000 டொலருக்கு கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த எருமை ...  உலகில் வெளியில் நடமாடவே  அருகதை அற்றவன்.

உங்கள் கோபம் நியாயமானது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

கனடாவில் இருந்து விடுமுறையில் தாயகம் வந்து, ஏழை எளியவர்களை கொள்ளைஅடிப்பதும், சண்டித்தனம் காட்டுவதும் நிறைய நடக்கிறது. ஒன்று இரண்டு செய்திகள் வெளியே வருகிறது. சந்திர மண்டலத்திற்கு போனாலும் பரவணிக்குணம் மாறாது கண்டியளோ!  

சென்ற வருடம் கனடாவில் வசிக்கும் ஒருவர்... அங்கிருந்து 50 கிலோ போதைப் பொருளை, ஒரு  மரப் பெட்டியில் அடைத்து யாழ்ப்பாணத்துக்கு விற்க அனுப்பும் போது பிடிபட்டு விட்டது.

நன்றாக உழைத்து சம்பாதிக்கக் கூடிய நாட்டில் இருந்து கொண்டு... ஊருக்கு போதை பொருளை அனுப்பி, அந்தக் காசில்  வாழ நினைக்கின்ற கீழ்த்தரமான் மனிதர்களை கொண்டது எமது இனம். 
நினைக்கவே... அருவருப்பாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

உங்கள் கோபம் நியாயமானது. 🤣

பின்னை என்ன செய்யிறது விசுகர்.
வசிப்பது அனைத்து வசதிகளையும் கொண்ட உயர்தர நாடு.
பலரும்  மதிக்கும் கௌரவமான பதவி, அதுகும்  கோவிலில்... இப்படியான பெருமைகளை கொண்ட ஒருவன் செய்யும் வேலையா இது.  உண்மையிலேயே ஆத்திரம் வருகின்றது. இவனால்... அந்தக் கோவிலுக்கும்,   கனடாவில் வசிக்கும் மக்களுக்கும்... 3000 டொலருக்காக கொள்ளையடிக்க முயன்றவன் என்ற  கெட்ட  பெயர்.  இவனை கோவில் தலைவராக தெரிவு செய்த மக்கள் முகத்தில் சேறை அள்ளி பூசிவிட்டு நிறைகிறான் இந்தப் பர * சி. 

எங்களது மக்கள் எவ்வளவு கேவலமான முன்னுதாரணங்களை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என நினைக்க வேதனையாக உள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கனடாவில இருக்கிற ஐயப்பன் கோயில் பிரச்சனை போல கிடக்கு.....
அனலைதீவிலையும் ஒரு ஐயனார் கோயில் இருக்கு எண்டதையும் இஞ்ச உள்ள பக்த அடியார்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பயங்கர  மாஃபியாக்கள் போல் 3000 டொலரை கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
1) கனடா ஐயப்பன் கோவில் தலைவரிடமிருந்து கொள்ளை அடிக்கச் சொல்லி கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது.
2) கிளிநொச்சியை சேர்ந்த... ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட  பெண்மணி...  மூன்று அடியாட்களை அமர்த்துகின்றார்.
3) அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு, கொள்ளையடித்துக் கொண்டு மீள பிரத்தியேக படகில் ஏறி தப்பி சென்றுள்ளார்கள்.
4) யாழ்.கொள்ளைக்காரி... ஒன்றரை  வருடமாக  பிடிபடாமல் பொலீசுக்கு தண்ணி காட்டியுள்ளார்.

கேள்வி: 1) கனடா ஐயப்பன் கோவில் தலைவருக்கு இவர்கள் ஊருக்குப் போகும் விடயம் எப்படி தெரிந்தது. 
2) இவர்கள் ஐயப்பன்  கோவிலுக்குப் போன இடத்தில், இலங்கைக்கு செல்வதாக அவரிடம் தெரிவித்தார்களா... அல்லது வேறு ஆட்களுக்கு சொல்ல... அவர்கள் மூலம் இந்தச் செய்தி பரவி அவரின் காதுக்கு எட்டியதா? 
3) அவர் கனடாவில் வசித்துக் கொண்டு, ஒரு பெரும் பொறுப்பில் இருந்து கொண்டு... 3000 டொலருக்கு ஏன் ஆசைப் பட்டார். 

ஊரில் கொள்ளையடித்தவர்களை சிங்கள போலீஸ் எப்படி கையாளப் போகின்றது என்று தெரியவில்லை. சிலவேளை இரண்டு பக்கமும் காசை வாங்கிக் கொண்டு வழக்கை இழுத்தடித்து காலப் போக்கில் மக்கள் அந்தச் சம்பவத்தை மறந்திருக்கும் நிலையில்... எல்லோரையும் விடுதலை செய்ய சந்தர்ப்பமும் உள்ளது.

ஆனால்... முதலில் இந்த கனடா ஐயப்பன் கோவில் தலைவர் மீது கொலை முயற்சி, கொள்ளை போன்றவற்றை தூண்டியதாக கனடா பொலிசில் ஒரு முறைப்பாடு செய்து 50 வருசமாவது மறியலில் போட வேண்டும்.
ஒரு வசதியான நாட்டில் வாழ்ந்து கொண்டு... 3000 டொலருக்கு கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த எருமை ...  உலகில் வெளியில் நடமாடவே  அருகதை அற்றவன்.

அவர்கள் பெரும்பாலும் வெளியிலிருந்து நிர்வாக அங்கத்தவர்களை எடுப்பது அரிது..ஒரு வீட்டில் கொண்டாட்டம் என்றால் மாறி ,மாறி கோயில் உள் வீடே வரும்..அந்தக் கோயில் தெரிந்தவர் ,அறிந்தவர் என்று கொண்டாட்டம் நிரம்பி விடும் ..அதே போல் தான் எல்லாம்..பயண முகவர்களும் அதற்குள் அடக்கம் அண்ண…தற்போதைக்கு நிர்வாகத்தை மாற்றுவது மிகவும் கடினம்.புரியும் என்று நினைக்கிறேன்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சென்ற வருடம் கனடாவில் வசிக்கும் ஒருவர்... அங்கிருந்து 50 கிலோ போதைப் பொருளை, ஒரு  மரப் பெட்டியில் அடைத்து யாழ்ப்பாணத்துக்கு விற்க அனுப்பும் போது பிடிபட்டு விட்டது.

நன்றாக உழைத்து சம்பாதிக்கக் கூடிய நாட்டில் இருந்து கொண்டு... ஊருக்கு போதை பொருளை அனுப்பி, அந்தக் காசில்  வாழ நினைக்கின்ற கீழ்த்தரமான் மனிதர்களை கொண்டது எமது இனம். 
நினைக்கவே... அருவருப்பாக உள்ளது.

இந்த போதைப்பொருளை அவர் முன்னாலேயே குடும்பத்தினருக்கு பாவிக்க கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

பின்னை என்ன செய்யிறது விசுகர்.
வசிப்பது அனைத்து வசதிகளையும் கொண்ட உயர்தர நாடு.
பலரும்  மதிக்கும் கௌரவமான பதவி, அதுகும்  கோவிலில்... இப்படியான பெருமைகளை கொண்ட ஒருவன் செய்யும் வேலையா இது.  உண்மையிலேயே ஆத்திரம் வருகின்றது. இவனால்... அந்தக் கோவிலுக்கும்,   கனடாவில் வசிக்கும் மக்களுக்கும்... 3000 டொலருக்காக கொள்ளையடிக்க முயன்றவன் என்ற  கெட்ட  பெயர்.  இவனை கோவில் தலைவராக தெரிவு செய்த மக்கள் முகத்தில் சேறை அள்ளி பூசிவிட்டு நிறைகிறான் இந்தப் பர * சி. 

எங்களது மக்கள் எவ்வளவு கேவலமான முன்னுதாரணங்களை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என நினைக்க வேதனையாக உள்ளது. 

இவர்கள் புலத்தில் இருக்கும்போது செய்த தொழில் என்னவென்று ஆராய்ந்தால் புரியும், இலங்கையின் கூலிப்படைகளின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் செய்த சமூக சீர்கேடுகள். சிலது புலிகளை சாட்டி புலம்பெயர்ந்துதுகள், சிலது கூலிப்படையோடு சேர்ந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது எல்லாவற்றையும் கொள்ளையடித்து உரியவர்கள் தட்டிக்கேட்டபோது அதே கூலிப்படையின் அடக்குமுறையை பாவித்து அவர்களின் வாயை அடக்கி, பின் ஆமியால் பாதுகாப்பில்லை என்று படகில் போய் புகலிடம் பெற்றிருக்குதுகள். அந்த நாடும் பரிவிரக்கம் கொண்டு இவர்களை ஏற்று நல்வாழ்வளித்தால், அவர்களால் தம் தொழிலை விட முடிவதில்லை, அந்த நாட்டின் சுதந்திரத்தையும் வசதியையும் அனுபவித்துக்கொண்டு தமது பரவணிக்குணத்தை அரங்கேற்ற விடுமுறை என்கிற பெயரில் நாட்டுக்கு வருவதும், இங்குள்ள சமூக விரோதிகள், இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் காவல் துறை எனும் காவாலித்துறையை பயன்படுத்துவதும், தம்மை ஏதோ  பெரிய பணக்காரர் போல பந்தாகாட்டுவதும், பின்னாளில் சரண் அடைந்த நாட்டில் தாம் அனுபவிக்கும் வசதிகளை இழப்பதோடு  நம் இனத்தின் மீது அந்த நாட்டு மக்கள், அரசு காட்டும் இரக்கத்தையும் அக்கறையையும் நன்மதிப்பையும் எங்களுக்காக அவர்கள்  எழுப்பும் நீதிக்கான குரலையும்  இழக்கச்செய்யும். அதனால் கேடுகெட்ட கூட்டம் வெட்கப்படப்போவதுமில்லை, பாதிக்கப்படப்போவதுமில்லை. அதெல்லாம் உண்மையான உயிர், சொத்து,  தொழில்   உறவுகளைதொலைத்தவர்களையே சேரும்.       

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.