Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது.

இதற்கு கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு மற்றும் அதன் தாக்கங்களை ஒப்புக் கொண்டு இன்று (27) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

நிதி மற்றும் பிற நிதி சொத்துக்கள்

இந்நிலையில், பட்டியலிடப்பட்ட பிற நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் விடுதலைப் புலிகளும் தொடர்ந்து நிதித் தடைகளை எதிர்கொள்வதையே இந்த புதுப்பித்தல் அர்த்தப்படுத்துகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு | Ban On The Ltte Continues

இந்த தடைகளில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள நிதி மற்றும் பிற நிதி சொத்துக்கள் அல்லது பொருளாதார ஆதாரங்கள் முடக்கம் ஆகியவை உள்ளடங்கும்.

மேலும், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதாரங்களை வழங்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பெருமாள்

முதலில் எண்ணத்துக்கு சண்டை தொடங்கியது ? இரண்டாவ்து அப்படி தமிழர் சிங்களவர்கள் சண்டை தொடங்கியதால் யாருக்கு லாபம் ? கடைசியில் புலி கள் மீது தடை போட்டு லாபம் அடைந்தவர்கள் யார் ? மேல் உள்ள

nedukkalapoovan

கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வன்முறையும் புலிகளால் பதிவாகாத நிலையில்.. ஐரோப்பிய ஒன்றிய சாணக்கியவான்கள் இன்னும் தடை போடினம் என்றால்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைந்தெடுத்த காடைத்தனம் அப்பட்டமாகவே  தெரிகிறது. இத

பெருமாள்

நீங்களும் சாதாரண சிங்களவர்கள் சிந்திப்பது போலவே தேவையற்ற பயங்களை உருவாக்கி வைத்து உள்ளீர்கள் தடை நீங்கினால் உடனே திரும்பவும் ஆள் சேர்த்து சண்டை சிங்கள ஆமியுடன் நடக்கும் என்பதெல்லாம் தேவயற்ற பயம் இனி ச

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்

28 JUL, 2024 | 10:12 AM
image

(நா.தனுஜா)

ஐரோப்பிய ஒன்றியத்தினால் அடுத்த 6 மாத காலத்துக்கென புதுப்பிக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் உள்ளடங்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதத்தை ஒழித்தல் எனும் கொள்கையின் பிரகாரம் ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய வெள்ளிக்கிழமை (26) ஐரோப்பிய ஒன்றியப் பேரவையில் தடைசெய்யப்பட்ட நபர்கள், அமைப்புக்கள் மற்றும் சொத்துக்கள் பதொடர்பான ட்டியல் அடுத்த 6 மாதகாலத்துக்கு நடைமுறையாகும் விதத்தில் புதுப்பிக்கப்பட்டது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் உள்ளடங்கியுள்ளது. 

https://www.virakesari.lk/article/189573

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டீவங்களுக்கு ...தலைவர்  பற்றி ஏதாவது தகவல் தெரியுமோ....6 மாதத்துக்கு ஒருக்கால் தடை போடுகிறாங்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, alvayan said:

டீவங்களுக்கு ...தலைவர்  பற்றி ஏதாவது தகவல் தெரியுமோ....6 மாதத்துக்கு ஒருக்கால் தடை போடுகிறாங்கள் ?

நம்ம சனம் புலிகளை மறந்தாலும் அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நேரம் ஒதுக்கி அவர்களை ஆராய்கிறார்கள். பைத்தியம் என்பர் எம்மவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உக்ரேன் போரில் மேலைதேய சார்பானவர்கள் என்று யாராவது எடுத்து சொல்லுங்கப்பா....😎

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எம்ம‌வ‌ர்க‌ள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக‌ போர் செய்த‌ கால‌த்தில் ஏதும் தீங்கு செய்தார்க‌ளா...................... லக்சுமன் கதிர்காமர உள் நாட்டில் வைச்சு தானே கொன்ற‌வை

அதுக்கும் இந்த‌ த‌டைக்கும் ஏதும் ச‌ம்ம‌ந்த‌ம் இருக்கா............................

2005 த‌டை போட்ட‌வை 

என‌க்கென்ன‌மோ இந்த‌ த‌டை விடைய‌த்தில் க‌ட‌ந்த‌ கால‌ புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ள் மீது தான் ச‌ந்தேக‌மாய் இருக்கு.....................புலிக‌ள் அழிக்க‌ப் ப‌ட்டு ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு 15வ‌ருட‌ம் ஆகி விட்ட‌ நிலையில் இந்த‌ த‌டை தேவை இல்லா த‌டை...........................எல்லாம் ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம் அவ‌ரிட‌மே விட்டு விடுகிறேன்............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

நம்ம சனம் புலிகளை மறந்தாலும் அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நேரம் ஒதுக்கி அவர்களை ஆராய்கிறார்கள். பைத்தியம் என்பர் எம்மவர்.

இதைத்தான்  ignorance என்று சொல்வது.

விபு தாங்கள் இருப்பதாக மாவீரர் தினத்திற்கு அறிக்கை விடுகிறார்கள். அதுவும் ஒரு அமைப்பாக அல்ல, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நின்று நாம்தான் உண்மையான விபுக்கள் என்று போட்டி வேறு. அதற்குள் துவாரகா சர்ச்சை வேறு. 

இது மட்டுமா,..சனநாயக வழியில், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை திட்டித் தீர்க்கிறோம். ஆயுதப் போராட்ட வழிமுறையை போற்றிப் புகழ்கிறோம். வன்முறையை நிராகரிப்பவர்களை துரோகிகள் என்கிறோம். இவை எல்லாவற்றையும் செய்துகொண்டே விடுதலைப் புலிகளைத் தடை செய்வோரை பைத்தியங்கள் என்று தூற்றுகிறீர்கள். 

இது உங்களுக்கே கேலிக்குரியதாகத் தெரியவில்லையா? 

1 hour ago, வீரப் பையன்26 said:

எம்ம‌வ‌ர்க‌ள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக‌ போர் செய்த‌ கால‌த்தில் ஏதும் தீங்கு செய்தார்க‌ளா...................... லக்சுமன் கதிர்காமர உள் நாட்டில் வைச்சு தானே கொன்ற‌வை. 

ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரைக் கொல்வது எத்துணை பாரதூரமானது என்று தங்களுக்கு இன்னும் புரியவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Kapithan said:

இதைத்தான்  ignorance என்று சொல்வது.

விபு தாங்கள் இருப்பதாக மாவீரர் தினத்திற்கு அறிக்கை விடுகிறார்கள். அதுவும் ஒரு அமைப்பாக அல்ல, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நின்று நாம்தான் உண்மையான விபுக்கள் என்று போட்டி வேறு. அதற்குள் துவாரகா சர்ச்சை வேறு. 

இது மட்டுமா,..சனநாயக வழியில், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை திட்டித் தீர்க்கிறோம். ஆயுதப் போராட்ட வழிமுறையை போற்றிப் புகழ்கிறோம். வன்முறையை நிராகரிப்பவர்களை துரோகிகள் என்கிறோம். இவை எல்லாவற்றையும் செய்துகொண்டே விடுதலைப் புலிகளைத் தடை செய்வோரை பைத்தியங்கள் என்று தூற்றுகிறீர்கள். 

இது உங்களுக்கே கேலிக்குரியதாகத் தெரியவில்லையா? 

ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரைக் கொல்வது எத்துணை பாரதூரமானது என்று தங்களுக்கு இன்னும் புரியவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

அவ‌ரை போட்டதில் என‌க்கு ம‌கிழ்ச்சி🤣😁😂.....................த‌ன்னை த‌மிழ‌ன் என்று சொல்லி சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு ச‌ர்வ‌தேச‌ ம‌ட்டில் ந‌ல்ல‌ பெய‌ர் வேண்டி கொடுத்த‌வ‌ன்.....................அப்ப‌டி பார்த்தால் எங்க‌ட‌ அர‌சிய‌ல்துரை பெருப்பாள‌ர்க‌ளை 2009ச‌ர‌ன் அடைய‌ வ‌ந்த‌ போது அவ‌ர்க‌ளை சுட்டு விட்டு உட‌லை எரித்தவ‌ங்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌ம்

அதுக்கு ச‌ர்வ‌தேச‌ம் ஏதும் குர‌ல் கொடுத்திச்சா பேச்சு வார்த்தையில் ஈடு ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ச‌ர‌ன் அடைய‌ வ‌ரும் போது நீங்க‌ள் எப்ப‌டி அவைய‌ சுட‌லாம் என்னு....................அண்ணா நீங்க‌ள் அர‌சிய‌ல் பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை என‌க்கு.....................ச‌ர்வ‌தேச‌ம் ந‌டு நிலையா செய‌ல் ப‌ட‌ வில்லை என்ப‌து உங்க‌ளுக்கு தெரியாது புரியாது😒.................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Kapithan said:

என்கிறோம்

10 minutes ago, Kapithan said:

என்கிறோம்

என்கிறீர்கள் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்????

இது உங்களுக்கே கேலிக்குரியதாகத் தெரியவில்லையா? 🤔

இரவின்றிப் பகல் இல்லை, பகலின்றி இரவில்லை இது இயற்கை, இதற்குள்தான் மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் வாழ்வார்கள். சேற்றை மிதிக்காது நாற்றை நட்டு நெல் எடுக்க முடியாது.🙏

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, வீரப் பையன்26 said:

1) அவ‌ரை போட்டதில் என‌க்கு ம‌கிழ்ச்சி🤣😁😂.....................த‌ன்னை த‌மிழ‌ன் என்று சொல்லி சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு ச‌ர்வ‌தேச‌ ம‌ட்டில் ந‌ல்ல‌ பெய‌ர் வேண்டி கொடுத்த‌வ‌ன்.....................அப்ப‌டி பார்த்தால் எங்க‌ட‌ அர‌சிய‌ல்துரை பெருப்பாள‌ர்க‌ளை 2009ச‌ர‌ன் அடைய‌ வ‌ந்த‌ போது அவ‌ர்க‌ளை சுட்டு விட்டு உட‌லை எரித்தவ‌ங்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌ம்

அதுக்கு ச‌ர்வ‌தேச‌ம் ஏதும் குர‌ல் கொடுத்திச்சா பேச்சு வார்த்தையில் ஈடு ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ச‌ர‌ன் அடைய‌ வ‌ரும் போது நீங்க‌ள் எப்ப‌டி அவைய‌ சுட‌லாம் என்னு....................அண்ணா நீங்க‌ள் அர‌சிய‌ல் பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை என‌க்கு.....................ச‌ர்வ‌தேச‌ம் ந‌டு நிலையா செய‌ல் ப‌ட‌ வில்லை என்ப‌து உங்க‌ளுக்கு தெரியாது புரியாது😒.................................................

நாம் Anton Balasingam அவர்களின் ஆலோசனையையே  கேட்காத ஆட்கள். 

இதில் உங்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க எனக்கென்ன பைத்தியமா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
32 minutes ago, Kapithan said:

நாம் Anton Balasingam அவர்களின் ஆலோசனையையே  கேட்காத ஆட்கள். 

இதில் உங்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க எனக்கென்ன பைத்தியமா? 😁

அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யாவின் அர‌சிய‌ல் புரித‌ல் உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும்....................அந்த‌ புரித‌ல் வ‌ன்னி த‌லைமைக்கு பெரிதாக‌ இல்லை என்று ப‌ல‌ர் பின்னைய‌ கால‌ங்க‌ளில் உண‌ர்ந்த‌வை..................1994ச‌ந்திரிக்காவுட‌ன் பேச்சு வார்த்தையில் ஏமாற்றினார்க‌ள்

2002 ஒப்ப‌த்த‌த்தின் போது சிங்க‌ள‌ம் உண்மையும் நேர்மையுமா பேச்சு வார்த்தையில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை..................வ‌ன்னி த‌ல‌மை அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யாவுக்கு முழு சுத‌ந்திர‌ம் கொடுத்து அவ‌ரை அவ‌ரின் பாட்டில் விட்டு இருந்தால் ஜ‌யா சாதிச்சு காட்டி இருப்பார்..................ஜ‌யாவுக்கும் க‌ட‌சி கால‌ க‌ட்ட‌த்தில் உட‌ல் நிலையும் ஏலாது அதுவும் சிங்க‌ள‌வ‌னுக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து.....................ஜ‌யா 2001க்கு பிற‌க்கான‌ அர‌சிய‌லை ஊர்ந்து க‌வ‌ணித்து முன்னெடுத்தார்................................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

நாம் Anton Balasingam அவர்களின்

“தானாடாவிட்டலும் தன் சதையாடும்”

 Anton Balasingam அர்களை உங்கள் எழுத்துத் தூற்றினாலும் அதனை உங்கள் உள்ளம் ஏற்கவில்லை. அவர்களிடம் உள்ள உங்கள் மதிப்பு மரியாதைக்கு நன்றி!.🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
48 minutes ago, Paanch said:

“தானாடாவிட்டலும் தன் சதையாடும்”

 Anton Balasingam அர்களை உங்கள் எழுத்துத் தூற்றினாலும் அதனை உங்கள் உள்ளம் ஏற்கவில்லை. அவர்களிடம் உள்ள உங்கள் மதிப்பு மரியாதைக்கு நன்றி!.🤪

எதை வைத்து Anton Balasingam  அவர்களைத்  தூற்றுகிறேன் என்று கூறுகிறீர்கள்? 

போராடப் புறப்பட்டவர்களையோ அல்லது அவர்களது தியாகங்களையோ நான் கொச்சைப்படுத்துவதில்லை. 

அதற்காக தவறுகளை கண்டும் காணாதிருக்க முடியாது. 

(தாங்கள் எங்கே தொடுகிறீர்கள் என்பது எனக்குப் புரியாமலில்லை 🤣)

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வன்முறையும் புலிகளால் பதிவாகாத நிலையில்.. ஐரோப்பிய ஒன்றிய சாணக்கியவான்கள் இன்னும் தடை போடினம் என்றால்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைந்தெடுத்த காடைத்தனம் அப்பட்டமாகவே  தெரிகிறது. இதில் புலிகளின் சொத்து முடக்கமே முக்கிய குறிக்கோள். அதையும் பறிச்சு உக்ரைனுக்கு படைப்பாங்கள் ஆக்கும்.

கவனிக்கவும் ரஷ்சியாவில் ரஷ்சிய பிராந்தியங்களில் புலிகளுக்கு தடை இல்லை. புலிகள் தப்பானவர்களை நண்பர்கள் என்று நம்பியதன் விளைவும் தான் 2009 மே பேரழிவு கூட்டு இன அழிப்புக்கு முக்கிய காரணம். 

ஏலவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என்ற சிவில் தொண்டு அமைப்பு மீதான தடையும் தொடருது.

ஆக மொத்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம்.. ஒரு கொஞ்சம் கூட சனநாயகத்தன்மை அற்று.. தமிழ் மக்கள் மீதான எந்தக் கருசணையும் அன்று தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. 

இதில தமிழர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடாவடித்தனமான உக்ரைன் போர் ஆதரவுக்கு ஒத்தூதுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஹிந்தியாவை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம்.. எனி அமெரிக்கா.. பிரிட்டனுன்னு தடை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இவங்கள் எல்லாம் கள்ள மெளனம் காக்கிறாங்கள். இணைத்தலைமை என்று வந்து புலிகளை உளவு பார்த்தவை எல்லாம் இப்ப கப் சிப். 

Edited by nedukkalapoovan
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@alvayan@விசுகு@குமாரசாமி@வீரப்  பையன்26 @Paanch@nedukkalapoovan

1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும்.

2) எடுப்பதால் எங்களுக்கு  என்ன பயன்?

3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன?

4) விபுக்கள் என்ன செய்வார்கள்? 

(விதண்டாவாதத்திற்குக்  கேட்கவில்லை)

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

@alvayan@விசுகு@குமாரசாமி@வீரப்  பையன்26 @Paanch@nedukkalapoovan

1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும்.

2) எடுப்பதால் எங்களுக்கு  என்ன பயன்?

3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன?

4) விபுக்கள் என்ன செய்வார்கள்? 

(விதண்டாவாதத்திற்குக்  கேட்கவில்லை)

முதலில் எண்ணத்துக்கு சண்டை தொடங்கியது ?

இரண்டாவ்து அப்படி தமிழர் சிங்களவர்கள் சண்டை தொடங்கியதால் யாருக்கு லாபம் ?

கடைசியில் புலி கள் மீது தடை போட்டு லாபம் அடைந்தவர்கள் யார் ?

மேல் உள்ள கேள்விகளுக்கு பதிலை ஆராயுங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை வரும் .

மேலும் சிங்களவருக்கு உள்ள உரிமையுடன் பூர்வீக குடிகளான தமிழர்கள் நாங்களும் வாழனும் என்று கேட்டது தப்பா ?

அதெல்லாம் கிடையாது அடிமை போல் இருங்கள் என்று கூறியது யார் ?

முதலில் சிங்களவர்களுக்கு  நல்ல படிப்பை கொடுங்க அந்த தீவு திருந்தும் எங்களுக்கு வகுப்பெடுத்து ஒன்றும் நடக்காது  .

நேற்று சனிக்கிழமை பிரைவேட் ஜெட் ல் கனடாவில் இருந்து வந்து லண்டனில் சாமத்திய வீடு கொண்டாடி விட்டு பின்னேரமே அவர்களின் உறவினர் கூட்டம் அதே பிரைவேட் நான்கு விமானம்களில் பறக்கின்றனர் புலம்பெயர் என்கோ  போயிட்டினம் .

சிங்களம் இன்னும் பாண் விலை இறங்குமா என்று பார்த்து கொண்டு இருக்கினம் .

ஆரம்பத்தில் எங்களை சம உரிமையுடன் நிம்மதியா இருக்க விடுங்க என்றுதானே கேட்டோம் ?

இன்னிக்கு பாணுக்கும் பணிசுக்கும் அடி பட வேண்டி யாரல் வந்தது எல்லாம் உங்கடை மோட்டு சிங்கள  அரசியல்வாதிகளால் வந்தது அதை சிங்களம் உணராது காரணம் எங்களில் உள்ள கோடரி காம்புகள் அவங்களை உசுபேத்தி கொண்டு இருப்பினம் .

  • Like 3
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

@alvayan@விசுகு@குமாரசாமி@வீரப்  பையன்26 @Paanch@nedukkalapoovan

1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும்.

2) எடுப்பதால் எங்களுக்கு  என்ன பயன்?

3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன?

4) விபுக்கள் என்ன செய்வார்கள்? 

(விதண்டாவாதத்திற்குக்  கேட்கவில்லை)

நான் மோட்டார் வண்டி ஓட்டப் பழகியபோது…. ஓட்டப்பழக்கிய ஆசான் சொன்ன முதல் வார்த்தை… நீ வண்டியை எங்குஓட்டி மோதினாலும் எனக்குக் கவலை இல்லை, ஆனால் மல வண்டியுடன் மட்டும் மோதிவிடாதே. நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாது. நன்றி🙏.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kapithan said:

@alvayan@விசுகு@குமாரசாமி@வீரப்  பையன்26 @Paanch@nedukkalapoovan

1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும்.

2) எடுப்பதால் எங்களுக்கு  என்ன பயன்?

3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன?

4) விபுக்கள் என்ன செய்வார்கள்? 

(விதண்டாவாதத்திற்குக்  கேட்கவில்லை)

போனவர்களை போற்றுவது போன்று பாசாங்கு செய்தபடி இருப்பவர்களை நசுக்குவது தான் உங்கள் அரசியல் .......

எங்களை இங்கே நீங்கள் இழுத்து விட்டிருப்பதே எங்களுக்குள் முரண்பாடுகளை தீமூட்டவே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, Paanch said:

நான் மோட்டார் வண்டி ஓட்டப் பழகியபோது…. ஓட்டப்பழக்கிய ஆசான் சொன்ன முதல் வார்த்தை… நீ வண்டியை எங்குஓட்டி மோதினாலும் எனக்குக் கவலை இல்லை, ஆனால் மல வண்டியுடன் மட்டும் மோதிவிடாதே. நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாது. நன்றி🙏.

  உங்களிடம் பதில் இல்லை.  🥺

4 hours ago, விசுகு said:

போனவர்களை போற்றுவது போன்று பாசாங்கு செய்தபடி இருப்பவர்களை நசுக்குவது தான் உங்கள் அரசியல் .......

எங்களை இங்கே நீங்கள் இழுத்து விட்டிருப்பதே எங்களுக்குள் முரண்பாடுகளை தீமூட்டவே. 

ஆக உங்களிடமும் பதில் இல்லை  🥺

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பெருமாள் said:

முதலில் எண்ணத்துக்கு சண்டை தொடங்கியது ?

இரண்டாவ்து அப்படி தமிழர் சிங்களவர்கள் சண்டை தொடங்கியதால் யாருக்கு லாபம் ?

கடைசியில் புலி கள் மீது தடை போட்டு லாபம் அடைந்தவர்கள் யார் ?

மேல் உள்ள கேள்விகளுக்கு பதிலை ஆராயுங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை வரும் .

மேலும் சிங்களவருக்கு உள்ள உரிமையுடன் பூர்வீக குடிகளான தமிழர்கள் நாங்களும் வாழனும் என்று கேட்டது தப்பா ?

அதெல்லாம் கிடையாது அடிமை போல் இருங்கள் என்று கூறியது யார் ?

முதலில் சிங்களவர்களுக்கு  நல்ல படிப்பை கொடுங்க அந்த தீவு திருந்தும் எங்களுக்கு வகுப்பெடுத்து ஒன்றும் நடக்காது  .

நேற்று சனிக்கிழமை பிரைவேட் ஜெட் ல் கனடாவில் இருந்து வந்து லண்டனில் சாமத்திய வீடு கொண்டாடி விட்டு பின்னேரமே அவர்களின் உறவினர் கூட்டம் அதே பிரைவேட் நான்கு விமானம்களில் பறக்கின்றனர் புலம்பெயர் என்கோ  போயிட்டினம் .

சிங்களம் இன்னும் பாண் விலை இறங்குமா என்று பார்த்து கொண்டு இருக்கினம் .

ஆரம்பத்தில் எங்களை சம உரிமையுடன் நிம்மதியா இருக்க விடுங்க என்றுதானே கேட்டோம் ?

இன்னிக்கு பாணுக்கும் பணிசுக்கும் அடி பட வேண்டி யாரல் வந்தது எல்லாம் உங்கடை மோட்டு சிங்கள  அரசியல்வாதிகளால் வந்தது அதை சிங்களம் உணராது காரணம் எங்களில் உள்ள கோடரி காம்புகள் அவங்களை உசுபேத்தி கொண்டு இருப்பினம் .

1) விடுதைப் புலிகள் மீதான தடையை நீக்கினால் அடுத்து என்ன? என்கிற கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை. 

தடை நீக்கத்தின் பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக எவருமே சிந்திக்கவில்லை என்பதுதான் இங்கே மற்றயவர்களது எழுத்துக்கள் மூலமும் தெரிய வருகிறது. 

விசுகரும் பாஞ்ச்சும் காற்றில் வாள் வீசுவதற்குத்தான் பொருத்தமானவர்கள். அதற்கப்பால் அவர்களால்  சிந்திக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, Kapithan said:

1) விடுதைப் புலிகள் மீதான தடையை நீக்கினால் அடுத்து என்ன? என்கிற கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை. 

நீங்களும் சாதாரண சிங்களவர்கள் சிந்திப்பது போலவே தேவையற்ற பயங்களை உருவாக்கி வைத்து உள்ளீர்கள் தடை நீங்கினால் உடனே திரும்பவும் ஆள் சேர்த்து சண்டை சிங்கள ஆமியுடன் நடக்கும் என்பதெல்லாம் தேவயற்ற பயம் இனி சண்டை என்பதே இருக்காது . அதே நேரம் இந்த தடையை காட்டி முக்கியமாய் சிங்களவர்களுக்கு ஆதரவு போல் நடித்து பல நாடுகள் இலங்கையின் வளம்களை சிங்களவர் தமிழர் கண்ணுக்கு முன்னே கொள்ளை அடிக்கிறார்கள் பல வளம்கள் சுரண்டபடுகிறது முக்கியமாய் இந்திய அரசின் சுரண்டல் கள் எல்லாவற்றையும் விட மோசமானது உலகத்தில் காலாவதியாகிய மருந்துகளின் பயன்பாடு தெரிந்தே இறக்குமதி செய்கிறார்கள் இன்னும்நிறைய சொல்லலாம் .

முதலில் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்கள் நிம்மதியான வாழ்வையும் சிங்களவருக்கு நிகரான உரிமைகளுடன் வாழ விடுங்க பார்ப்பம் அதன் பின் யாரும் பிரிவினை என்பது நினைத்தும் பார்க்க மாட்டார்கள் இதுதான் உண்மையான விடயம் அப்படி சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழ வெளிகிட்டால் பக்கத்தில் இருக்கும் இந்திய பரதேசி கூட்டத்துக்கு நித்திரை போயிடும் .

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பெருமாள் said:

பெருசு,. 

தடையை நீக்கிய பின்னர் என்ன செய்யப்போகிறோம் ? 

யாருடமாவது பதிலிருக்கிறதா? 

LTTE ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்குமா?

அல்லது

ஜனனாயக வழியில் போராடுமா? 

அல்லது 

தனிநாட்டுக்கோரிக்கையைக் கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைக்குமா?,....

அல்லது 

தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்குமா? 

இப்படிப் பல கேள்விகள் உண்டு. அதற்கு விடை தெரியாமல் தடையை நீக்கும்படி கூறுவதால் பயன் உண்டா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kapithan said:

தடையை நீக்காமல் விடுவதன் பலாபலன்கள் ஏதாவது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, குமாரசாமி said:

தடையை நீக்காமல் விடுவதன் பலாபலன்கள் ஏதாவது?

LTTE + தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பது எங்கள் நிலைப்பாடு. தடை நீக்கத்தால் எங்கள் வேணவா நியாயமானது என்று அர்த்தப்படுத்தலாம். 

LTTE என்பது வன்முறையை பிரயோகித்து தனது அரசியல் இலக்கை அடைய முற்பட்ட ஒரு அமைப்பு என்பதுதான் தடைகளிற்கான அடிப்படை.  

அந்த தடையை நீக்குவதற்கு எங்கள் வாதம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, Kapithan said:

பெருசு,. 

தடையை நீக்கிய பின்னர் என்ன செய்யப்போகிறோம் ? 

யாருடமாவது பதிலிருக்கிறதா? 

LTTE ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்குமா?

அல்லது

ஜனனாயக வழியில் போராடுமா? 

பேராண்டி நேரடியா பதில் வேணுமென்றால் ஆயுத போராட்டம் என்பது  இனி கனவுதான் .

ltte ஆரம்பிக்காது அவர்கள் என்ன நினைத்து [போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த எல்லையுடன் நிறுத்தி கொண்டு விட்டார்கள் இதற்க்கு பலநூறு கரும்புலிகள் தெற்கில் இருந்தும் அமைதி ஆகின்றோம் என்ற ஒரு அறிவிப்பின் பின் கடந்த 15 வருடத்தில் ஒரு வெடிசத்தம் அவர்களிடம் இருந்து வரவில்லை .

ஆனால் பக்கதில் இருக்கும் இந்தியா திரும்பவும் ஆயுத போராட்டத்துக்கு சிலவேளை வேலன் சுவாமிகள் போன்ற முழு பயித்தியம் கள் தலைமை தாங்கி போராடுவினம் .

ஜனநாயக வழிதான் இனி வேற வழியே கிடையாது .

எல்லாம் சரி உங்களிடம் ஒரே ஒரு கேள்வி இந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ltte குண்டு வைத்தார்களா ?

என்ன இழவுக்கு அவர்கள் இல்லாமல் போன பின்பும் தடையை வைத்து இருக்கிறார்கள் ?

சிங்கள அரசியல் வாதிகள் ஒரு பக்கம் என்றால் வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஒருபக்கம் இரண்டு தரப்பும் உணர்ச்சி அரசியல் பல்லுக்கு பல்லு கத்திக்கு கத்தி என்று விசர் கூத்து ஆடி கடைசியில் இரண்டு தரப்புமே அழிந்து போய் இருக்கிறம் கண்ணுக்கு முன்னே பல நாடுகளின் சுரண்டல் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடக்கிறதை தடுக்க முடியாமல் இருக்கிற இளைய சந்ததி அது சிங்களவர் தமிழர் என்று பார்க்காமல் கனடா அவுஸ் போன்ற நாடுகளுக்கு பறந்து தப்பி கொள்கின்றனர் .

இனியாவது சிங்கள அரசியல் விசருகள் தமில் எதிர்ப்பு இனவாதம் கக்குவதை நிறுத்தி தங்கடை கூட்டதுக்கு உண்மையான நிலையை சொல்லி அரசியல் செய்வார்களா ?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.