Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Graduates-e1724414688109.jpg?resize=750,

பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

மருத்துவ மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின்போது இனி கருப்பு நிற உடை அணிய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்கள் கருப்பு நிற அங்கியும், கருப்பு நிற தொப்பியும் அணிந்து பட்டங்களை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில்,பட்டமளிப்பு விழாவின்போது கருப்பு நிற உடை அணிவது ஐரோப்பிய நாடுகளில் தொடங்கிய கலாசாரம் எனவும், இந்த நடைமுறையானது ஆங்கிலேயர்களால் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இனி பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடைக்கு பதிலாக இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து கொள்ளலாம் எனவும், மருத்துவ கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழாவிற்கான உடையை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1396943

  • கருத்துக்கள உறவுகள்

அடியும் இல்லை, நுனியும் இல்லை. 

ஆதவா  🤮

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு நிறம், பட்டதாரி படிப்பின் (பட்டதாரியின் வருங்காலத்திலும்) தீவிர, கடின உழைப்பு, மற்றும் படிப்பை ஆக்கபூர்வமான, நெறிமுறை  நோக்கத்துக்கு பாவிப்பதை குறிக்கிறது. 


வேறு பல துறைகளிலும், பொதுவாக கறுப்பு நிறம் (அங்கி) குறிப்பது பரந்த  சமூகத்துக்கு ஆக்கபூர்வமான, நெறிமுறையான. நீதியான, சமபங்காளராக (கொடுப்பதிலும், எடுப்பதிலும்) இருப்பதை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து கொள்ளலாம் எனவும்,

இனி பட்டமே தேவையில்லை.....ஏன் காலனித்துவ நாடுகள் அறிமுக செய்த பட்டங்களை படிக்கிறீயல்,,,,,
இந்திய், அரேபிய காலனித்துவத்தை வரவேற்கினம் போல...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஐரோப்பிய நாடுகளில் தொடங்கிய கலாசாரம் எனவும், இந்த நடைமுறையானது ஆங்கிலேயர்களால் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அப்படியென்றால் காலனித்துவங்கள் அறிமுகபடுத்திய உடைகள் அணிந்து கல்வி கற்க செல்வதும், காலனித்துவ மொழியான ஆங்கிலத்தில் கல்வி கற்பதும் அவனது பாடதிட்டங்களை பின் தொடர்வதும், அதன்மூலம் பட்டம் பெறுவதும் அந்த பட்டங்களை வைத்து காலனித்துவநாடுகளுக்கு  மேற்படிப்புக்கு செல்வதும் அங்கு நிரந்தர குடியுரிமைபெற விண்ணப்பிப்பதும் நிரந்தரமா அங்கேயே குடியேறுவதும், குடியேறியநாடுகளிலிருந்து அந்நிய செலாவணியை அள்ளி அள்ளி சொந்தநாட்டுக்கு அனுப்புவதையும் தடை செய்ய வேண்டுமே.

மத்திய அரசு செய்யுமா?

காலனித்துவத்தின் வாசனை எந்த வடிவத்திலிருந்தாலும் மாற்றம் செய்துதானே ஆக வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய காலனி ஆதிக்கத்தால் அறிமுகபடுத்தபட்டு அவுஸ்ரேலியா, கனடா, இலங்கை ,இந்தியாவில் நடத்தபடும் காலனி ஆதிக்க நடைமுறையான  பட்டமளிப்பு விழா என்று  கருப்பு அங்கியும் தொப்பியும் வைக்கின்ற கோமளிதனம் பல ஐரோப்பிய நாடுகளில் கிடையாது. இலங்கை இந்தியாவிலும் ஒழிக்கபட வேண்டும்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் சாதி வேறுபாடின்றி அனைவரும்  கல்வி கற்கலாம் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர்களும் ஆங்கிலேயர்களே.   கல்வியை தாழ்த்தப்பட்டவர்களுகெஉ மறுத்த,  அவர்கள் அவரவர் தத்தமது குலத்தொழிலை செய்தால் போதும் என்ற இந்திய பாரம்பரியத்தை கொண்டு வருவார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக இன்னொன்றை மறந்து விட்டேன் - கருப்பு நிறம் குறிப்பது - எந்த வித பட்டதாரி பட்டமும் பட்டதாரிகளை ஏனையவர்களின்  (மற்றும் வருங்கால அறிவில், விவேகத்தில்)  இருந்து வேறுபடுத்தி அல்லது உயர்த்தி காட்டும் தகைமையை பட்டதாரி பட்டம் வழங்கவில்லை 

குறிப்பாக தொப்பி குறிப்பது - பட்டதாரிகளும் மனித அறிவு, விவேகத்தின் மட்டத்தை தாண்டவில்லை என்றதை. 

அதாவது பட்டதாரிகளின்  கற்றல்  எவ்வாறு தொடர்ந்து தமது அறிவு, விவேகத்தை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும்   கறுப்பு குறிக்கிறது 

சுருக்கமாக, கற்றது கைமண்ணளவு என்பதையே கறுப்பு  குறிக்கிறது.

மேலே சொன்னதின் கருத்து  சாரப்பட,, பட்டதாரி பட்டமளிப்பு விழாவில் இப்போதும் சில வரலாற்று பிரசித்தி பெற்ற பல்கலைக்களங்களில் சொல்லப்படுபவையும் கூட. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

அப்படியென்றால் காலனித்துவங்கள் அறிமுகபடுத்திய உடைகள் அணிந்து கல்வி கற்க செல்வதும், காலனித்துவ மொழியான ஆங்கிலத்தில் கல்வி கற்பதும் அவனது பாடதிட்டங்களை பின் தொடர்வதும், அதன்மூலம் பட்டம் பெறுவதும் அந்த பட்டங்களை வைத்து காலனித்துவநாடுகளுக்கு  மேற்படிப்புக்கு செல்வதும் அங்கு நிரந்தர குடியுரிமைபெற விண்ணப்பிப்பதும் நிரந்தரமா அங்கேயே குடியேறுவதும், குடியேறியநாடுகளிலிருந்து அந்நிய செலாவணியை அள்ளி அள்ளி சொந்தநாட்டுக்கு அனுப்புவதையும் தடை செய்ய வேண்டுமே.

மத்திய அரசு செய்யுமா?

காலனித்துவத்தின் வாசனை எந்த வடிவத்திலிருந்தாலும் மாற்றம் செய்துதானே ஆக வேண்டும்.

 

 பட்டமளிப்புக்குப் பூனூல், நாமம் மற்றும் தாமரைப்பூ அணிந்து வருமாறு மாற்றும் திட்டத்தோடு, காலனியாதிக்கமென்று கூறித் தமது இந்துத்துவா கொள்கைகளை புகுத்தும் முன்னகர்வாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது (கிந்தியாவையும் உள்ளடக்கி) நம்பிக்கைப்படி கறுப்பு குறிப்பது சனீஷ்வரன் -  நீதி, நேர்மை, சமத்துவம், விடா, தீவிர  முயற்சி, கடின உழைப்பு  போன்றவற்றின் குறியீடு.

அப்படி மாற்றுவது என்றால் தொப்பியை ஏன் மாற்றக்கூடாது?

மாற்ற முடியாது - தொப்பி சரிந்து இருப்பது - பட்டதாரிகளின் அறிவு, திறன் போன்றவை வளர்த்து கொள்ள இடம் இருக்கிறது, எத்தகைய அளவு வளர்த்து கொண்டாலும் , எனவே வளர்த்து கொண்டே இருக்கவும் வேண்டும் போன்றவற்றின் குறியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் இந்திய குற்றவியல் சட்டங்களின் பெயர்களையும், உள்ளடக்கங்ளையும் அவசரம் அவசரமாக மாற்றினார்கள். இதே காரணங்கள் தான், அதே மேற்கத்தைய சட்டங்கள் எங்களுக்கு எப்படி செல்லுபடியாகும் என்று. எங்கள் வரலாறு என்ன, நாங்கள் வந்த வழி என்ன, அப்பவே மனுஸ்மிருதி எழுதினோமே என்று ஏகப்பட்ட துணைக் காரணங்களும் உள்ளன.

புதிய சட்டங்களுக்கு பெயர்களை இந்தியில் வைத்துள்ளார்கள். பாரதிய நியாய சன்ஹிதா (இந்திய தண்டனைச் சட்டம்), பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (குற்ற விசாரணைமுறைச் சட்டம்), பாரதிய சாக்ஷிய அதிநியம்(இந்திய சாட்சிகள் சட்டம்) என்பன புதிய பெயர்கள்.  

இப்ப என்ன நடக்குது என்கிறீர்கள்............ தமிழ்நாட்டில் இவற்றைக் கிழித்து எறிந்து விட்டு, போராட்டங்கள் போய்க் கொண்டிருக்கின்றது. ஆங்கிலமே இருக்கட்டும், இந்தி தேவையில்லை என்று..........

உயர்நீதிமன்றில் வழக்கு தொடுத்து, உயர்நீதிமன்றம் இந்தப் பெயர்களுக்கு எதிராக தீர்ப்பும் வழங்கிவிட்டது.

புதிய சட்டங்களின் உள்ளடக்கமும் பிற்போக்கானவை என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

பாஜக என்பது போக்கிரி வடிவேலு போல. எந்த உருவில் வந்தாலும், அந்தக் கொண்டையை நாங்கள் உடனேயே கண்டுபிடிக்கவேண்டும்.

8 hours ago, island said:

இந்தியாவில் சாதி வேறுபாடின்றி அனைவரும்  கல்வி கற்கலாம் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர்களும் ஆங்கிலேயர்களே.   கல்வியை தாழ்த்தப்பட்டவர்களுகெஉ மறுத்த,  அவர்கள் அவரவர் தத்தமது குலத்தொழிலை செய்தால் போதும் என்ற இந்திய பாரம்பரியத்தை கொண்டு வருவார்களா? 

வந்ததே............ பாஜக இதையும் கொண்டு வர முயன்றது. அப்பொழுது காந்தியையும் துணைக்கு சேர்த்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் கவர்னர் ரவி கூட இதற்கு ஆதரவாகப் பேசியிருந்தார். எதிர்ப்பு பலமானது என்று கண்டு, இது முடியவே முடியாது என்று அப்படியே பின்வாங்கினர்...........🫣   

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

பாஜக என்பது வின்னர் வடிவேலு போல. எந்த உருவில் வந்தாலும், அந்தக் கொண்டையை நாங்கள் உடனேயே கண்டுபிடிக்கவேண்டும்.

அது போக்கிரி பாடிசோடா வடிவேலு அண்ணை.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அது போக்கிரி பாடிசோடா வடிவேலு அண்ணை.

 

நன்றி ஏராளன். அங்கே திருத்திவிட்டேன்...................👍.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.